Blog

  • Sivan Parvathy Kalyanam

    தேனி அருகே மலை மேல் அமைந்திருக்கும் சிவன் திருக்கோயிலில் அரசமரமாக காட்சிதரும் சிவனுக்கும் வேப்பமர வேப்பிலைகாரி தேவிக்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.

    தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியில் மலை மேல் பழமைவாய்ந்த சிவன் கோயில் அமைந்திருக்கிறது. இந்தத் திருக்கோயிலில் சிவன் பார்வதி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது முன்னதாக புனித கலச குண்டத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு நெய் வஸ்திரம் உள்ளிட்டவற்றை கொண்டு பூர்ணஹூதி சமர்ப்பிக்கப்பட்டு யாகம் சிறப்பாக வளர்க்கப்பட்டது.

    கோயிலில் எழுந்தருளிருக்கும் அரசமரத்தை சிவனாகவும் வேப்பமரத்தை பார்வதி ஆகவும் பாவித்து அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருக்கல்யாண வைபவம் தொடங்கியது. சிவன் பார்வதிக்கு தீபாராதனை காட்டப்பட்ட பின் திருக்கல்யாண சேவை சிறப்பாக நடைபெற்றது பின்னர் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த மூலவர் சிவலிங்கத்திற்கு தீபாராதனை காட்டப்பட்ட இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவன் பார்வதிக்கு நடைபெற்ற திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர்.

     

  • September 17 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  அசதி
    ரிஷபம் –    சினம்
    மிதுனம் –   வரவு
    கடகம் –    நட்பு
    சிம்மம் –   நலம்
    கன்னி –    நன்மை
    துலாம் –     முயற்சி
    விருச்சிகம் – வீரம்  
    தனுசு –     அன்பு  
    மகரம் –    நிறைவு
    கும்பம் –     கவலை
    மீனம் –      அமைதி
    சந்திராஷ்டமம்    – பூரட்டாதி, உத்திரட்டாதி

  • September 17 2023 calander

    செப்டம்பர் 17 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – ஆவணி 31
    சுபமுகூர்த்த நாள்
    17-செப்-2023 ஞாயிறு
    உப்பூர் விநாயகர் தேர்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 7.31 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : திரிதியை
    திதி நேரம் : துவிதியை கா 10.47
    நட்சத்திரம்: அஸ்தம் கா 10.33
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Thirupathy poojai

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றத்திற்காக வனத்துறையின் சார்பில் தயார் செய்யப்பட்ட தர்பை பாய் மற்றும் கயிறுக்கு சிறப்பு பூஜை.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது கருடாழ்வார் கொடி ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் தர்பை பாய் மற்றும் கயிறு வராக சுவாமி பக்தர்கள் ஓய்வறை அருகே உள்ள தேவஸ்தான வனத்துறை அலுவலகத்தில் இருந்து தேவஸ்தான வன அதிகாரி  சீனிவாஸ் மற்றும் ஊழியர்களால் ஊரவலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் கோவிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் பெரிய சேஷ வாகனத்தின் மீது தர்ப்பையால் செய்யப்பட்ட பாய் மற்றும் கயிறு வைக்கப்பட்டது.  இவை திங்கட்கிழமை கொடியேற்றத்தில் பயன்படுத்தப்படும்.

    பிரம்மோற்சவம் தொடக்கத்தை முன்னிட்டு கொடியேற்றம் செய்யப்படுகிறது.  கொடிமரத்தில் கருட கொடி ஏற்றபடுவதன் மூலம் முக்கோடி தேவதைகளை பிரம்மோற்சவத்திற்கு அழைக்கும் விதமாக செய்யப்படுகிறது.  ருத்விக்குகள் வேத மந்திரங்கள் பாராயணம் செய்தபடி கொடிமரத்தைச் சுற்றி தர்பை பாயை கொடி மரத்தில் தர்பை கயிறால் கட்டப்படுகிறது. இதற்காக தேவஸ்தான வனத்துறையினர் 10 நாட்களுக்கு முன்பே பணிகளை மேற்கொண்டனர்.

    சிவ தர்பை மற்றும் விஷ்ணு தர்பை என இரண்டு வகையான தர்பைகள் உள்ளன. திருமலையில் விஷ்ணு தர்பை பயன்படுத்தப்படுவதால் தேவஸ்தான வனத்துறை அதிகாரிகள் திருப்பதி மாவட்டம், ஏர்பேடு மண்டலம் செல்லூரில் இருந்து இந்த தர்பை  சேகரித்து  உலர் வெயிலில் ஒரு வாரம் காயவிட்டு முழுமையாக சுத்தம் செய்து பாய் மற்றும் கயிறாக தயாரிக்கப்படுகிறது.கொடி ஏற்றுவதற்கு 22 அடி அகலம் 7 அடியில் கொண்ட பாய் மற்றும் 200 அடி நீளமுள்ள தர்பை கயிற்றை தயார் செய்துள்ளனர். இதில் நிகழ்ச்சியில் கோயில் துணை இ.ஓ. லோகநாதம், வி.ஜி.ஓ. பாலிரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • September 16 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  பிரமை
    ரிஷபம் –    தடங்கல்
    மிதுனம் –   மகிழ்ச்சி
    கடகம் –    பயம்
    சிம்மம் –   கவலை
    கன்னி –    முயற்சி
    துலாம் –     ஈகை
    விருச்சிகம் – களிப்பு
    தனுசு –     ஆதாயம்
    மகரம் –    ஆதரவு
    கும்பம் –     எதிர்ப்பு
    மீனம் –      செலவு
    சந்திராஷ்டமம்    – சதயம், பூரட்டாதி

  • September 16 2023 Indrayanaal

    செப்டம்பர் 16 – சந்திர தரிசன நாள்
    சோபகிருது வருடம் – ஆவணி 30
    16-செப்-2023 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : துவிதியை
    திதி நேரம் : பிரதமை கா 9.32
    நட்சத்திரம் : உத்திரம் கா 8.41
    யோகம் : மரணயோகம்
    சந்திராஷ்டமம் : சதயம்,பூரட்டாதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Pillayarpatti karpaga vinayakar festival

    திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உலகப் பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு 5-ம் நாள் இன்று காலை சுவாமி வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பிள்ளையார்பட்டியில் அமைந்திருக்கும் உலகப் பிரசித்திபெற்ற ஸ்ரீகற்பக விநாயகர் கோவிலில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று கொடி மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கொடி மரத்தில்  கொடியேற்றத்துடன் சதுர்த்தி பெருவிழா கோலாகலமாக துவங்கியது.விழா துவங்கிய நாளில் இருந்து தினசரி இரவு திருநாள் மண்டபத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளளும், பகலில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.

    வழக்கம்போல் இன்று 5-ம் நாள் விழாவை முன்னிட்டு கோயில் திருநாள் மண்டபத்தில் உற்சவரான ஸ்ரீ கற்பக விநாயகரும், ஸ்ரீசண்டிகேஸ்வரரும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர தீபம், கும்ப தீபம், நட்சத்திர தீபம் காண்பித்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனை செய்து  மகா ஏழு முக கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து திருநாள் மண்டபத்திலிருந்து பக்தர்கள் ஸ்ரீகற்பக விநாயகரை தோளில் சுமந்து, இரு மாடுகள் பூட்டிய வெள்ளிக் கேடகத்தில் அமர வைத்து பின்னர்  மங்கள வாத்தியங்களுடன் கோவிலை சுற்றி நான்கு ரத வீதியில் பவனி வந்த தெய்வங்களை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து மனமுருக கற்பக விநாயகரிடம் வேண்டி வழிபட்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான 6-ம் நாள் நாளை  வெள்ளிக்கிழமை மாலை கஜமுக சூரஸம்காரமும். 9ம் நாள் வரும் திங்கட்கிழமை காலையில் திருத்தேருக்கு கற்பக விநாயகர் சுவாமி எழுந்தருளும், மாலை 4 மணியவில் திருத்தேரோட்டமும் நடைபெறும். அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.

    விழாவின் 10ம் நாள் காலையில் கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொளுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அன்று இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.

  • September 15 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  நலம்
    ரிஷபம் –    பிரீதி
    மிதுனம் –   நட்பு
    கடகம் –    வெற்றி
    சிம்மம் –   அன்பு
    கன்னி –    சுகம்  
    துலாம் –     பெருமை
    விருச்சிகம் – ஆதரவு
    தனுசு –     லாபம்
    மகரம் –    உயர்வு
    கும்பம் –     அமைதி
    மீனம் –      புகழ்
    சந்திராஷ்டமம்    – சதயம்

  • September 15 2023 Indrayanaal

    செப்டம்பர் 15 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – ஆவணி 29
    15-செப்-2023 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : பிரதமை
    திதி நேரம் : அமாவாசை கா 7.51
    நட்சத்திரம் : பூரம் கா 6.27
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : சதயம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Karuppannasamy varushabishegam

    பெரிய கருப்பண்ண சுவாமி திருக்கோவில் வருடாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நகரத்தார் குறிச்சி குன்றக்குளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பெரிய கருப்பணசுவாமிக்கு வருடாபிஷேகம் விழா மற்றும் ஸ்ரீ குபேர விநாயகர் ஸ்ரீ சின்ன கருப்பண்ண சுவாமி ஸ்ரீ சீலைக்காரி அம்மன் பிரதிஷ்டா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

    முன்னதாக யாகசாலை கணபதி ஹோமம் கோ பூஜை இரண்டாம் கால பூஜை பூரணாகுதி மகா தீபாதாரணை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க மங்கல இசை வாத்தியங்களுடன்  கடம்பரப்பாடு ஆலயம் வலம் சென்று பெரிய கருப்பணசாமிக்கு வருடாபிஷேக விழாவும் ஸ்ரீ குபேர விநாயகர் சின்ன கருப்பண்ண சுவாமி சீலக்காரி அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு  பிரதிஷ்டா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து பெரிய கருப்பு சின்ன கருப்பு சிலக்காரி அம்மன் சுவாமிகளுக்கு கும்ப நீர்  பால் தயிர் சந்தனம் இளநீர் பன்னீர் விபூதி பஞ்சாமிர்தம் மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.