Blog

  • Navathirupathy garudasevai

    நவதிருப்பதி தலமான அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயிலில்  ஆவணித்திருவிழா 5ம் நாள் கருடசேவை. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், நவதிருப்பதிகளில் 8 வதும் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலம் திருக்கோளுா்.  நவக்கிரகங்களில் இது செவ்வாய் க்கு அதிபதியான தலம் . நிதியை இழந்த குபேரனுக்கு அவன் இழந்த செல்வத்தை தேடி எடுத்துக்கொண்டு, குபேரன் வணங்கும் ஜோதியாய் அருள்பாலித்த தலம்.

    இங்கு அருள்பாலித்து வரும் வைத்தமாநிதி பெருமாள் தலைக்கு மரக்கால் கொண்டு சயன திருக்கோலத்தில் காட்சி தருகின்றாா். சுவாமி இராமானுஜா் இத்தலத்தில் வாழ்வதை பெறும்பேறாக கருதிய தலம்.  குருவை போற்றுதல் தெய்வத்திற்கு சமம் என்று கண்ணினுன் சிறுத்ததாம்பு இயற்றிய ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம்.

    சிறப்புகள் வாய்ந்த இத் திருக்கோயிலின் ஆவணி பெருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றம் நடைபெற்று 12 தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றது. திருவிழாக்காலங்களில் தினமும் காலை, மாலை சுவாமி வைத்தமாநிதிப்பெருமாள் பல்வேறு வாகனங்களில் ஏழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. சிறப்பாக  ஐந்தாம் திருநாளானஇன்று  கருடசேவை  நடைபெற்றது.  இதற்காக மாலையில் சுவாமி மதுரகவிஆழ்வாா் அன்ன வாகனத்திலும்  சுவாமி வைத்தமாநிதி பெருமாள்  திருவடியாம் கருடாழ்வார் மீது சிறப்பு அலங்காரத்தில் ஏழுந்தருளினா்.

    ஆச்சார்ய கோஷ்டியின் பிரபந்த பாராயணத்துடன் குடைவாயில் தீபாராதனை நடைபெற்றது.  கோஷ்டியார் பிரபந்த பாராயணம் பாடியபடி  பெருமாள் முன்செல்ல கருடவாகன புறப்பாடு நடைபெற்றது. பக்தா்கள் பஜனை பாடல்கள் பாடி பின் சென்றனா். திரளான பக்தா்கள் கருடசேவை நிகழ்வினை தரிசனம் செய்தனா்.

  • prityankara devi chandi yagam

    அரியலூர் பிரத்தியங்கரா தேவிக்கு மகா சண்டியாகம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் பொய்யாத நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம். இவ்ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று மிளகாய் சண்டி யாகம் நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் ஆவனி மாத அமாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு  சண்டி ஹோமம் நடைபெற்றது. யாகத்தில் பக்தகர்கள் வேண்டுதலில் பேரில்  பொருட்கள் யாகத்தில் இடப்பட்டன. பின்னர் மஞ்சள் குங்குமம் திருநீறு உள்ளிட்ட மூலிகைகள் ஆரஞ்சு, ஆப்பிள், கொய்யா, திராட்சை உள்ளிட்ட பழங்கள் யாகத்தில் போடப்பட்டன.

    தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் கடலூர் திருச்சி பெரம்பலூர் சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

     

  • September 14 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  வெற்றி
    ரிஷபம் –    நட்பு
    மிதுனம் –   உயர்வு  
    கடகம் –    சுகம்
    சிம்மம் –   ஆதரவு
    கன்னி –    உயர்வு
    துலாம் –     லாபம்  
    விருச்சிகம் – அன்பு  
    தனுசு –     அமைதி
    மகரம் –    நலம்
    கும்பம் –     ஆசை
    மீனம் –      கீர்த்தி
    சந்திராஷ்டமம்    – அவிட்டம்

  • September 14 2023 Amavasai

    செப்டம்பர் 14 – அமாவாசை
    சோபகிருது வருடம் – ஆவணி 28
    அமாவாசை
    14-செப்-2023 வியாழன்
    கரிநாள்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : அமாவாசை
    திதி நேரம் : அமாவாசை முழுவதும்0.00
    நட்சத்திரம் : பூரம் முழுவதும்0.00
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அவிட்டம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • September 13 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  வரவு
    ரிஷபம் –    ஆசை
    மிதுனம் –   நலம்
    கடகம் –    நட்பு
    சிம்மம் –   அமைதி
    கன்னி –    புகழ்
    துலாம் –     அன்பு
    விருச்சிகம் – லாபம்
    தனுசு –     உயர்வு
    மகரம் –    ஆதரவு
    கும்பம் –     சுகம்
    மீனம் –      பிரீதி
    சந்திராஷ்டமம்    – திருவோணம்

  • September 13 2023 Indrayanaal

    செப்டம்பர் 13 – திருச்செந்தூர் முருகன் தேர்
    சோபகிருது வருடம் – ஆவணி 27
    சுபமுகூர்த்த நாள்
    13-செப்-2023 புதன்
    திருச்செந்தூர் முருகன் தேர்
    சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : சதுர்த்தசி அ.கா 5.59
    நட்சத்திரம் : மகம் அ.கா 4.2
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவோணம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Karur kalyana pasupatheeswarar pradhosham

    கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை பிரதோஷ நிகழ்ச்சி – மங்கல்வார பிரதோஷமான செவ்வாய்கிழமை பிரதோஷத்தினையொட்டி பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி அருள் பெற்றனர்.

    தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் மிகவும் விஷேசம் வாய்ந்தவையாகவும், மிகுந்த தொன்மை மற்றும் வரலாறு மிக்க கரூர் அருள்மிகு ஸ்ரீ ஆநிலையப்பர் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் தேய்பிறை பிரதோஷம் நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

    செவ்வாய்க்கிழமை அன்று மங்கள்வார பிரதோஷமான விஷேச பிரதோஷ நிகழ்ச்சியில், பசுபதீஸ்வரருக்கு முன்னர் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நந்தி எம்பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசன திரவியங்களால் அபிஷேகங்களும் அதனை தொடர்ந்து சோடசம்ஹார நிகழ்வும், பின்னர் பல்வேறு வண்ணமலர்களாலும், பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி எம்பருமானுக்கு வெள்ளிக்கவசங்கள் சாத்தப்பட்டு, பின்னர் கற்பூர ஆரத்தி, கோபுர ஆரத்தி, நட்சத்திர ஆரத்திகளும் அதனை தொடர்ந்து மஹா தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

  • Thirupathy cleaning

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 18 முதல் 26 வரை நடைபெறுகிறது. இதனையொட்டி  இன்று நித்ய பூஜைகளுக்கு பிறகு  கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ( கோயிலை சுத்தம் செய்யும் ) பணி நடைபெற்றது. காலை 6 மணி முதல் 11 மணி வரை பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

    வழக்கமாக ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு வருடப்பிறப்பு, ஆணிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம். அவ்வாறு இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் 18ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இன்று கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.இதில் மூலவர் கருவரையில் பட்டு துணியில் மூடிய பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்து பச்சைக் கற்பூரம், கிச்சிலிக் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள்,  திருச்சூர்ணம் உள்ளிட்ட மூலிகை கலவையை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

    இதில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி செயல் அதிகாரி தர்மா ரெட்டி, துணை செயல் அதிகாரி லோகநாதம், முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்மகிஷோர் உள்ளிட்ட அதிகாரிகள் ஊழியர்கள் பங்கேற்றனர்.

  • Nagai Sivaperuman thangameen thiruvizha

    நாகையில் தங்கமீன் விடும் திருவிழா கோலாகலம்; சிவபெருமானுக்காக, தங்கமீனை கடலில் விட்ட  மீனவர்கள்; கடலில் தாண்டவ நடனமாடி சிவனடியார்கள் பக்தி பரவசம்.

    63 நாயன்மார்களில் நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ குலத்தில் பிறந்த அதிபக்தநாயன்மார் சிவபெருமானிடம் பக்தி கொண்டு முதல் மீனை சுவாமிக்காக கடலில் விடுவது வழக்கம். இவரது பக்தியை சோதித்த சிவபெருமான் தங்க மீன் ஒன்றை வலையில் கிடைக்கும்படி செய்தார். அதிபக்தநாயனார் அம்மீனையும் சிவபெருமானுக்காக வேண்டிக்கொண்டு கடலில் விட்டார்.

    அதிபக்த நாயனாமாரின் பக்தியை கண்டு இறைவன் அவருக்கு காட்சியளித்தார். அதிபக்தநாயனாரின் தெய்வ பக்தியை மெச்சிக்கும் திருவிழா    நாகப்பட்டினம்,நம்பியார்நகரில் இன்று நடைபெற்றது. முன்னதாக புதிய ஒளி மாரியம்மன் கோவிலில் இருந்து பூஜிக்கப்பட்ட தங்கமீன் மற்றும் அதிபக்த நாயனாரின் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    அப்போது சிவனடியார்கள் பம்பை மேளம் முழங்க பத்தி பரவசத்துடன் தாண்டவ நடனமாடினர்.அதனை தொடர்ந்து  தங்கமீனுடன் படகில் நடுகடலுக்கு சென்ற மீனவர்கள்  சிவபெருமானுக்காக கடலில் தங்க மீனை விட்டு எடுத்தனர். தங்கமீன் விடும் திருவிழா சிவனடியார்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டு அதிபக்த நாயனாரை வேண்டிக்கொண்டு தாண்டவ நடனமாடினர்.

     

  • sivan temple festival

    நாமக்கல் மணப்பள்ளி சிவ ஆலயத்தில் தெய்வ திருமண விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசணம். நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் மணப்பள்ளி கிராமத்தில் உள்ள அருள்மிகு பிரகன் நாயகி உடனுறை பீமேஸ்வரர் ஆலயத்தில் இன்று தெய்வத்திருமண விழா மிக விமசர்சையாக நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், முன்னதாக காலை சிறப்பு ஹோமம் நடைபெற்றபின் மணப்பள்ளி ஸ்ரீதேவி பூதேவி சமதே வரதராஜ பெருமாள் கோவில் இருந்து பக்தர்கள் சீர் தட்டுகள் கொண்டு கோவில் முன் அமைக்பட்ட தெய்வ திருமண விழா பந்தலில் சேர்க்கப்பட்ட பின், விநாயகர் தெய்வ திருமண எம்பெருமான் திரிபுரசுந்தரர் தெய்வ திருமண அன்னை திபுரசுந்தரி அம்பாள் திருக்கல்யாண நிகழ்வுகளை வேத முறைப்படி சிவாச்சாரியார்கள் விநாயகர் வழிப்பாட்டுடன் துவங்கி ஒவ்வொரு திருமண விழா நிகழ்வுகளை மிகச்சிறப்பாக துவங்கி செய்தனர்.

    அப்போது சுவாமிகளுக்கு கங்கணம் கட்டுதல் மாலை மாற்றுதல் விழா நடைபெற்ற பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வான திருமாங்கல்யதாரண நிகழ்வு மிக விமர்சையாக நடைபெற்றது அப்போது பக்தர்கள் அண்ணாமலையானுக்கு அரோகரா அண்ணாமலையானுக்கு அரோகரா கோசமிட்டனர். பின் திரிபுரசுந்தரருக்கும் திரிபுரசுந்தரிக்கும் பல்வேறு தீப உபசரிப்புகள் காண்பிக்கபட்ட பின் மஹா தீபம் காண்பிக்கப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பீமேஸ்வரர் உழவாரப் பணிக்குழு மற்றும் மணப்பள்ளி கிராம பொதுமக்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர், வருகை புரிந்து அனைவருக்கும் அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.