Blog

  • Thiruchendur deparadhanai

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்  ஆவணிதிருவிழா 5-ம் திருநாளை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்..

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான ஆவணிதிருவிழா  கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான குடவருவாயில் தீபாராதனை இன்று மேலக் கோவிலில் வைத்து நடைபெற்றது.

    இதனையொட்டி முன்னதாக  குமரவிடங்கபெருமான் மற்றும் வள்ளி அம்பாளுக்கு  சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. குடவருவாயில் தீபாராதனையொட்டி  சுவாமி அம்பாள் தனித்தனியே தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் கோவில் பிரதான கதவு சாத்தப்பட்டது. அதேநேரத்தில் எதிர்புரம் சுவாமி ஜெயந்திநாதர்  கீழ ரதவீதி முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்ததும், எதிர் சேவைக்காக கதவு திறக்கப்பட்டது.

    பின்னர்  தொடர்ந்து  சுவாமிகும் அம்பாளுக்கும் ஜெயந்திநாதருக்கு ஒரே நேரத்தில்  தீபாராதனை  நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோசம் முழங்கினர். தொடார்ந்து சுவாமி மற்றும்  அம்பாள் தங்க மயில் வாகனத்துடன் தனித்தனி  சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில்  உலா வந்தனர்.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 13-ம் தேதி நடைபெறுகிறது..

  • Prityankara devi festival

    மகா பிரத்தியங்கிரா காளி ஜென்மாஷ்டமி தினத்தில் அவதரித்த திருநாள் என்பதால் புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான 72 அடி உயரம் கொண்ட மகா பிரித்திங்கரா காளி ஆலயத்தில் ஜென்மாஷ்டமி மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக கொண்டாடப்படும். அதன்படி ஆலய பீடாதிபதி நடத்துர் ஜனார்த்தன சுவாமிகள் மற்றும் இளைய பிடாதிபதி வரத தேசிகன் தலைமையில் காலை காலை முதல் காளிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் யாகங்கள் நடத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து நள்ளிரவு பைரவ பலி  பூஜை மற்றும் குருதி பூஜைகள் நிறைவடைந்து நள்ளிரவு சுமார் 12 மணிக்கு மேல் பிரித்தியங்கரா காளிக்கு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்படும் பட்டாசு சத்தங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் பிரித்யங்கரா காளிக்கு ஜெ! ஜெ! என பல்லாயிரக்கணக்கான மக்கள் கோஷங்கள் முழங்க சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் குழந்தைகள் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    4

    மேலும் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து அஷ்டமி தினத்தில் மாதம்தோறும் நடைபெறும் மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது இந்த பூஜைகளில் கலந்து கொள்வதால் பில்லி சூனியம் ஏவல் மற்றும் தீய சக்திகளிடமிருந்து நம்மை அம்மன் பாதுகாப்பால் என்பதும் எதிரிகளின் சூழ்ச்சி மற்றும் தடைகள் தகர்த்தெறிந்து அனைத்திலும் வெற்றி பெற்று சகல ஐஸ்வர்யங்களுடன் நோய் நொடியின்றி நீண்ட ஆயுள் கிட்டும் என்பது ஐதீகம் என்பதால் மாதம் தோறும் மற்றும் வருடத்தில் ஒரு நாள் நடைபெறும் ஜென்ம அஷ்டமி தினத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூஜை மற்றும் யாகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

  • September 09 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  மகிழ்ச்சி
    ரிஷபம் –    திறமை
    மிதுனம் –   லாபம்
    கடகம் –    உதவி
    சிம்மம் –   உயர்வு
    கன்னி –    பிரீதி
    துலாம் –     வரவு
    விருச்சிகம் – உழைப்பு
    தனுசு –     அன்பு
    மகரம் –    ஆசை
    கும்பம் –     சுகவீனம்
    மீனம் –      பொறுமை
    சந்திராஷ்டமம்    – அனுஷம், கேட்டை

  • vazhukku maram eri poojai porul

    சிவகங்கை மாவட்டம்  ஏரியூர் அருகே சென்றாய பெருமாள், திம்மராய பெருமாள் எதிர் சேவையின் போது வழுக்கை மரத்தின் மீது கட்டி வைக்கப்பட்டுள்ள பூஜை பொருட்களை இளைஞர்கள் ஒன்றிணைந்து மரம் ஏறி எடுத்து வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    ஏரியூர் அருகே ஏர்கோல் பட்டி பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த திம்மராய பெருமாள் மற்றும் பூச்சியூர் சென்றாய பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. பழைய காலம் முறைப்படி அண்ணன் சென்ராயப்பெருமாளும், தம்பி திம்மராயப்பெருமாளும் ஆண்டு தோறும் ஆவணி மாதம் திருவிழாவில் எதிர் சேவை கொண்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருவது வழக்கம்.

    இந்த நிலையில் பூச்சியூர், ஆலமரத்தூர், காட்டு மோட்டூர், ஆரல் குந்தி, ஏர்கோல்பட்டி, சித்திரப்பட்டி, நரசிம்மேடு, சின்னக்கானூர் காடு, மட்டக்கல் உள்ளிட்ட 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து நிகழ் ஆண்டிற்கான திருவிழா புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் நடத்தி வந்தனர்.

    விழாவில் சென்றாய பெருமாள், திம்மராயப் பெருமாள் சுவாமிகள் 18 கிராமத்திற்கு சென்று பால், தயிர், திருநீர், நெய், பழங்கள், பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனைகளுடன் பக்தர்களுக்கு பள்ளத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாய பெருமாள், திம்மராயப் பெருமாள் சுவாமிகள் அருள் பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான அண்ணன், தம்பி எதிர் சேவை வியாழக்கிழமை ஏர்கோல் பட்டி பகுதியில் நடைபெற்றது.

    இதில் ஊர்வலமாக எடுத்த வரப்பட்ட சென்றாயப்பெருமாள், திம்மராயப் பெருமாள் சுவாமிகள், பஞ்சபாண்டவர்களான பீமன், அர்ஜுனன், நகுலன், திரௌபதி அம்மன், சகாதேவன், போர் மன்னன், பிராமணர் உள்ளிட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயில் வளாகத்தில் எதிர் சேவைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    அப்போது பழங்கால முறைப்படி எதிர்சேவையின் போது பூஜை செய்யப்படும் பொருட்கள் கோயில் வளாகத்தில் நட்டு வைக்கப்பட்டிருந்த வழுக்க மரத்தின் மீது இருந்த நிலையில், இளைஞர்கள் ஒன்றிணைந்து 50 அடி நீளம் கொண்ட வழுக்க மரத்தின் மீது ஏறி பூஜை பொருட்களைக் கொண்டு வந்து எதிர்சேவை நிகழ்வினை பூஜை செய்து தொடங்கி வைத்தனர். இதில் 18 கிராம ஊர் முக்கியஸ்தர்கள், கோயில் நிர்வாகிகள், கட்டளைதாரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  • thiruchendur aavani festival

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழா 4-வது நாளான இன்று சுவாமி குமரவிடங்க பெருமாள் வெள்ளி யான வாகனத்திலும், வள்ளியம்மாள் வெள்ளி சரப வாகனத்திலும், எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
     
    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4-ம் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும்  வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    4-ம் திருநாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

    இரவு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளினர். தொடர்ந்து உள்மாட வீதி நான்கிலும், ரதவீதி நான்கிலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

     விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக் அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். இந்தத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 13-ம் தேதி நடைபெறுகிறது.

     

  • krishnajayanthi uriyadi

    புதுச்சேரி முத்திரையர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோவிந்தராஜா பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. உறி அடித்தும், கண்ணன், ராதை வேடமணிந்தும் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர்.

    தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் தேய்பிறையின் ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்கிறது. புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக முத்திரையர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோவிந்தராஜா பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. கோவிந்தராஜா பெருமாளுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வெண்ணெய் தாழியுடன் கிருஷ்ண பெருமாள் உட்புறபாடு நடைபெற்று கோவிலின் முன்பு எழுந்தருளினார்.

    தொடர்ந்து கிருஷ்ணனை வரவேற்கும் வகையில் பூக்கள் மற்றும் வெண்ணையால் நிரப்பட்ட உரிய அங்கிருந்த பக்தர்கள் உடைக்க கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் கிருஷ்ண ஜெயந்தி நாளில் பெண்கள், கண்ணன், ராதை வேடமிட்ட குழந்தைகளுடன் பெருமாளை வழிபட்டு சென்றனர். கோவிந்தா கோவிந்தா என பாராயணம் பாடியும் கோவிந்தராஜ பெருமாளை அப்பகுதி பொதுமக்கள் வழிபட்டு சென்றனர்.

  • September 09 2023 Indrayanaal

    செப்டம்பர் 9 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – ஆவணி 23
    09-செப்-2023 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : தசமி
    திதி நேரம் : தசமி இ 10.48
    நட்சத்திரம் : திருவாதிரை மா 6.38
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அனுஷம்,கேட்டை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • September 08 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  அன்பு
    ரிஷபம் –    கவலை
    மிதுனம் –   பரீதி  
    கடகம் –    சுகம்  
    சிம்மம் –   வெற்றி
    கன்னி –    சுகவீனம்
    துலாம் –     தீரம்
    விருச்சிகம் – எதிர்ப்பு
    தனுசு –     வரவு
    மகரம் –    ஆசை
    கும்பம் –     நலம்
    மீனம் –      நற்செயல்
    சந்திராஷ்டமம்    – விசாகம், அனுஷம்

  • September 08 2023 Indrayanaal

    செப்டம்பர் 8 – எழுத்தறிவு தினம்
    சோபகிருது வருடம் – ஆவணி 22
    08-செப்-2023 வெள்ளி
    எழுத்தறிவு தினம்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : நவமி
    திதி நேரம் : நவமி இ 9.47
    நட்சத்திரம் : மிருகசீரிசீ டம் மா 5.4
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • September 07 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  வெற்றி
    ரிஷபம் –    செலவு   
    மிதுனம் –   தெளிவு
    கடகம் –    லாபம்
    சிம்மம் –   பரிசு
    கன்னி –    பரிவு
    துலாம் –     உழைப்பு  
    விருச்சிகம் – கவனம்
    தனுசு –     நன்மை
    மகரம் –    பக்தி
    கும்பம் –     நலம்
    மீனம் –      உதவி
    சந்திராஷ்டமம்    – சுவாதி, விசாகம்