Blog

  • Mangadu temple kumbabishegam

    மாங்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உப கோவிலான வெள்ளீஸ்வரர் கோவிலும் இதே பகுதியில் அமைந்துள்ளது. தொண்டை மண்டல நவகிரக ஸ்தலங்களில் சுக்கிரன் பரிகார ஸ்தலமான இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.

    தற்போது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் பிரகாசத்தை சுற்றிலும் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கருங்கற்கள் தரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் உள்ள அனைத்து விமானங்களும் பரிவார சன்னதிகளும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய வண்ணம் தீட்டப்பட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இன்று கும்பாபிஷேக விழா செய்ய முடிவு செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இன்று அதிகாலை நான்கு கால பூஜைகளுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கலசங்களில் புனித நீரானது எடுத்து வரப்பட்டு கோயில் கோபுரத்தின் மேல் விமானத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா செய்து முடிக்கப்பட்டது. மேலும் வெள்ளீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள உப சன்னதிகளில் உள்ள கலசங்களிலும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா செய்து முடிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா முடிந்த நிலையில் அங்கிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

  • Krishna jayanthi palagaram

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தில், பல விதமான பலகாரங்களை நமது வீட்டில் செய்து வழிப்படுவது வழக்கம். அவ்வகையில் கிருஷ்ண ஜெயந்திக்கு பிரத்யேகமாக செய்யப்படும் சில பலகாரங்களை எளிமையாக செய்து சுவைத்து மகிழுங்கள்.

    அக்கார அடிசல்….

    நெய், வெல்லம் சேர்த்து செய்த அக்கார அடிசல் எனப்படும் இனிப்பு வகை பண்டிகை நாட்களில் பிரசித்தம். நெய் சொட்டச் சொட்ட செய்யப்படும் இந்த இனிப்பை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்…

    பாசுமதி அரிசி – 1 கப்

    பாசிப்பருப்பு – ½ கப்

    பால் – 750 மிலி

    வெல்லம் – 2 கப் முந்திரி,

    திராட்சை – கால் கப்

    ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன்

    நெய் – 50 கிராம்

    பச்சைக் கற்பூரம் – சிறிதளவு

    செய்முறை…

    வெல்லத்தை தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டவும். பின்னர் சுத்தமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். அரிசி, பருப்பை இரண்டு முறை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பாலை 1 கப் தண்ணீர் விட்டு காய்ச்சி பொங்கிவரும் போது அரிசியையும், பருப்பையும் போட்டு அடுப்பை சிம்மில் எரியவிடவும். நன்கு வெந்தபின் வெல்லப்பாகை ஊற்றி அதனுடன் கொஞ்சம் நெய்யை விட்டு அடி பிடிக்காமல் கிளறவும்.

    லேசாக கெட்டியான பின் அதில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறவும். கடைசியில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் பொடி தூவி நன்கு கிளறி இறக்கவும். அக்கார அடிசல் சுவையும், வாசனையும் சூப்பராக இருக்கும். சூடாக சாப்பிடலாம்.

    பால் கோவா ….
    பாலை வைத்து கொஞ்சம் வித்தியாசமாக செய்யப்படும் பால் கோவா

    தேவையான பொருட்கள்…

    மில்க் மெய்டு – 500 கி

    பால் – 150 மி.லி

    தயிர் – 125 கி

    நெய் – 100 கி

    செய்முறை…

     முதலில் மில்க் மெய்டையும், தயிரையும் ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத்தில் போட்டு கட்டி கட்டியாக இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். பின் அதோடு பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு அதனை ஒரு மரக்கரண்டியால் தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த கலவையானது முதலில் தண்ணீர் போன்று தான் இருக்கும்.

    அதனைக் கிண்ட கிண்ட சிறிது நேரம் கழித்து கெட்டியாகி விடும். அப்போது நெய்யில் பாதியை அத்துடன் ஊற்றி கிளரவும். அதை கிளர கிளர சிறிது நேரம் கழித்து பால் கோவா பதத்திற்கு வரும் முன் மீதமுள்ள நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் கிண்டவும். இப்படி கிளரும் போது பால் கோவா ஆனது நெய்யிலிருந்து பிரியும் நிலைக்கு வந்ததும், அதனை இறக்கி விடவும்.

    ரவா லட்டு….

    கிருஷ்ணருக்கு பிடித்தது மட்டுமல்ல, நமது பட்ஜெட்டிற்கு ஏற்ற பலகாரங்களில் ரவா லட்டு முக்கியமானது. செலவும் குறைவாகவும், மிகவும் எளிய முறையிலும் வீட்டில் தயாரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்…

    ரவை – ஒரு கப்

    நெய் – 4 டீ ஸ்பூன்

    சர்க்கரை – அரை கப்

    தேங்காய் துருவல் – அரை கப்

    ஏலக்காய் பொடி செய்தது – கால் ஸ்பூன்

    நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி – 10

    சூடான பசும்பால் – அரை கப்

    செய்முறை…

    அகலமான வாணலியில் நெய்யை ஊற்றி அதில் முந்திரி திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் ரவையை போட்டு நன்றாக வறுத்து அகலமான பாத்திரத்தில் கொட்டவும். ரவையில் வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல், பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும். இதில் பசும்பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும். உருண்டை பிடிக்கும் அளவுக்கு பால் ஊற்றினால் போதும். பின்னர் நமக்கு தேவையான அளவில் உருண்டை பிடித்து வைக்கலாம். சாப்பிட சுவையாக இருக்கும். செய்வதற்கும் எளிதான இனிப்பு இது.

    வெல்லம் பால் கொழுக்கட்டை

    வெல்லம், பால் சேர்த்து செய்த கொழுக்கட்டை சுவையோடு சத்தானதாகவும் இருக்கும்.

    தேவையான பொருட்கள்…

    இட்லி அரிசி – 1 கப்

    எண்ணெய் – 3 டீ ஸ்பூன்

    காய்ச்சிய பால் – 1 கப்

    வெல்லம் – 1 கப்

    ஏலக்காய் பொடி – 1/2 டீ ஸ்பூன்

    சுக்குப் பொடி – 1/2 டீ ஸ்பூன்

    அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்

    தேங்காய்த் துருவல் – ஒரு கப் வெல்லப்பாகு

    செய்முறை…

     வெல்லத்தை தட்டி பொடியாக்கவும். பொடியாக்கிய வெல்லத்தை ஒரு கப் எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். வெல்லம் தண்ணீரில் முழுமையாகக் கரைந்த பின் வடிகட்டியால் வெல்லக் கரைசலை வடிகட்டவும். பாலைக் காய்ச்சி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். கொழுக்கட்டை செய்முறை இட்லி அரிசி ஒரு கப் எடுத்து மூன்று மணி நேரத்திற்கு ஊற விடவும். ஊறிய அரிசியை நன்றாக இரண்டு, மூன்று முறை கழுவிக் கொள்ளவும்.

    அரிசியை சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு நைஸான மாவாக அரைக்கவும். கொழுக்கட்டை செய்வதற்கான மாவு, இட்லிக்கான மாவைக் காட்டிலும் சற்று கெட்டியான மாவாக இருக்க வேண்டும். எனவே அதற்கு ஏற்றவாறு மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்ந்துவிடாமல், குறைந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி, அரைத்த மாவை அதில் சேர்த்து மிதமான தணலில் வைத்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். எண்ணெய் மாவின் எல்லாப் பகுதிலும் சீராகப் பரவும் படி, கரண்டி கொண்டு நன்றாகக் கலக்கி விட்டு வதக்கவும். வதக்கிய மாவை ஆறவிட்டு ஒரே அளவிலான வடிவத்தில் உருட்டிக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதனுடன் ஏலக்காய், சுக்குப் பொடி சேர்க்கவும்.

    அடுப்பின் தணலைக் குறைத்து, கொதிக்கும் தண்ணீரில் உருட்டி வைத்த மாவு உருண்டைகளைச் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக விடவும். கொழுக்கட்டைகள் நன்றாக வெந்து வரும் நிலையில் அதனுடன் காய்ச்சிய பாலையும், வெல்லக் கரைசலையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும். அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, சிறிதளவு தண்ணீர் விட்டுக் குழைத்து மாவுக் கரைசல் தயாரிக்கவும். இந்த மாவுக் கரைசலை கடைசியாக கொழுக்கட்டைப் பாலில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். இது கொழுக்கட்டையின் பாலை திக்காக்க உதவுவதுடன், நல்ல சுவையையும் தரும். விருப்பமானால் சிறிது தேங்காய்த் துருவலை பால் கொழுக்கட்டையின் மீது தூவி பின் அடுப்பிலிருந்து இறக்கவும்.

  • Krishna jayanthi vazhipadu

    மதுராவில் தேவகி-வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை. தற்போது, அந்த இடத்திற்கு மேல் `கத்ர கேஷப்தேவ்' என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

    கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததால் கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது. கிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்து கண்ணனை வழிபட்டால் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். கோகுலத்தில் வாழ்ந்ததால், கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.

    கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.

    கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.

    கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.

    கிருஷ்ணர் ஜெயந்தியன்று சிறுவர்-சிறுமிகளை கண்ணன், ராதைகள் வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்துசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

  • September 4 2023 Rasipalan

    செப்டம்பர் 4 – இன்றைய ராசிபலன்…
    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  மகிழிச்சி
    ரிஷபம் –    செலவு
    மிதுனம் –   சுகவீனம்  
    கடகம் –    ஆதரவு
    சிம்மம் –   வெற்றி
    கன்னி –    அசதி  
    துலாம் –     அமைதி  
    விருச்சிகம் – நன்மை
    தனுசு –     ஆசை
    மகரம் –    பயம்
    கும்பம் –     பொறுமை
    மீனம் –      வரவு
    சந்திராஷ்டமம்    – உத்திரம், அஸ்தம்

  • September 04 2023 Indraya naal

    செப்டம்பர் 4 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – ஆவணி18
    04-செப்-2023 திங்கள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : பஞ்சமி
    திதி நேரம் : பஞ்சமி இ 10.38
    நட்சத்திரம் : அசுவினி ம 3.39
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • muthumaari amman maha kumbabishegam

    நெற்குன்றத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது, 1000 க்கும் மேற்ப்பட்ட  பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னை நெற்குன்றம் அருகே சிடிஎன் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியானது இன்று வெகு விமர்சியாக  நடைபெற்றது. இதில் முத்துமாரியம்மன் க்கு அனைத்து பரிவார தேவதைகளும் ஜாரனோதாரன  அஷ்டபந்தன கும்பாபிஷேகமானது நடைபெற்றது ,முன்னதாக யாக  குண்டங்கள் வளர்த்து சிறப்பு மந்திரங்கள் ஓதி பூஜை அபிஷேககங்கள் நடைபெற்றது.இதில் அந்த சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் மந்திரங்கள் ஓதி புனித நீரானது விமான கலசத்தில் ஊற்றப்பட்டு  அந்த நீர்  பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது . அதனை தங்கள் குடும்ப  நன்மைக்காக வீட்டிற்கு பாட்டில்களில் பிடித்து சென்று வீட்டில் வைப்பது ஐதீகம் அதன்படி பக்தர்கள் எடுத்து சென்றனர்.கோவிலுக்கு வந்த  பக்தர்களுக்கு அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணிக்காக கோயம்பேடு போலீசார் திரளாக பணியில்  ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • velli ambal eshwarar alaya kumbabishegam

    கரூர் மாவட்டம் ,கரூர் வட்டம் ,வெள்ளியணை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ வெள்ளி நாயகி சமேத ஸ்ரீ வெள்ளி அம்பல ஈஸ்வரர், அருள்மிகு ஸ்ரீ விநாயகர், கிழக்கு அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன் ,ஸ்ரீ தங்கம்மாள் சுவாமிகள் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்தியேக யாகசாலை அமைத்து முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி என நான்கு கால யாக வேள்வி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து யாகசாலைக்கு சிவாச்சாரியார்கள் மகா தீபாராதனை கட்டினர். அதைத் தொடர்ந்து மேல தாளங்கள் தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் நான்கு காலையாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசத்தை ஆலயத்தின் சிவாச்சாரியார் தலையில் சுமந்தவாறு கோபுர கலசம் வந்தடைந்தனர்.

    அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் தலைவர் இன்ஜினியர் ஜெயபால் பச்சைக்கொடி காட்ட, கூடியிருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாயா, நமச்சிவாயா என்ற  கோஷங்கள் எழுப்பிய நிலையில் கோபுர கலசத்திற்கு புனித தீர்த்தம் ஊற்றப்பட்டது. அதை தொடர்ந்து கோபுர காலத்திற்கு சந்தன பொட்டிட்டு , வண்ண மாலைகள் அணிவித்து , தொடர்ச்சியாக மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் மூலவரான அருள்மிகு ஸ்ரீ வெள்ளி நாயகி சமேத ஸ்ரீ வெள்ளி அம்பல ஈஸ்வரர் சுவாமிக்கு நான்கு கால யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது . அதன் தொடர்ச்சியாக கூடியிருந்த பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு, விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

     

  • ayyanar alaya kumbabishegam

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆக்கவயல் ஸ்ரீ பூர்ணா தேவி புஷ்கலாதேவி சமேத அடைக்கலம் காத்த அய்யனார் குருந்தாடி காளியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கடந்த 30 ம் தேதி புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    தொடர்ந்து கணபதி பூஜை வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தது.  31 ஆம் தேதி முதல் காலயாக பூஜைகள் தொடங்கி தொடர்ந்து ஐந்து கால பூஜைகள் முடித்து இன்று காலை ஆறாம் கால பூஜை நிறைவடைந்து, யாகசாலையில் இருந்து புனித நீர் கொண்ட கடத்தினை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்து கோயில் விமான கலசங்களில் மணிகண்டன் உள்ளிட்ட சிவாச்சாரிகள் ஆறு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கலசங்களுக்குமகா தீபாரதனை  காட்டப்பட்டது.

    இதனை தொடர்ந்து புனிதநீர் தெளிக்கப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேக விழாவை ஆக்கவயல், சூராணம், சாலை கிராம், இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • September 03 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  திறமை
    ரிஷபம் –    மறதி  
    மிதுனம் –   எதிர்ப்பு
    கடகம் –    நலம்
    சிம்மம் –   வெற்றி
    கன்னி –    தடங்கல்
    துலாம் –     ஆசை
    விருச்சிகம் – நட்பு
    தனுசு –     ஈகை
    மகரம் –    சுகவீனம்
    கும்பம் –     வரவு
    மீனம் –      எதிர்ப்பு
    சந்திராஷ்டமம்    – பூரம், உத்திரம்

  • September 03 2023 sangadahara chadurthi

    செப்டம்பர் 3 – மகா சங்கடஹர சதுர்த்தி
    சோபகிருது வருடம் – ஆவணி 17
    சங்கடஹர சதுர்த்தி
    சுபமுகூர்த்த நாள்
    03-செப்-2023 ஞாயிறு
    மகா சங்கடஹர சதுர்த்தி
    சுபமுகூர்த்த நாள்(காலை 7.31 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00 குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் : சதுர்த்தி ந.இ 12.1
    நட்சத்திரம்: ரேவதி மா 4.24
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூரம்,உத்திரம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்