Blog

  • Pallavarayanpettai theer thiruvizha

    பல்லவராயன் பேட்டை ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய திருத்தேர் விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.

    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த பல்லவராயன் பேட்டையில் புகழ்பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆன திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது இதன் தொடர்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி இன்று காலை துவங்கியது. ஸ்ரீனிவாச பெருமாள் ராஜ அலங்காரத்தில் தாயாருடன் திருத்தேருக்கு எழுந்தருளினார் அங்கு மகாதீபாரதனை செய்யப்பட்டது தொடர்ந்து. தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பல்லவராயன் பேட்டையில் துவங்கிய தேர் வீதி உலா திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் நான்கு ரத வீதிகள் வழியே நடைபெற்றது. வீடுகள் மட்டும் வணிக நிறுவனங்களில் வாசலில் பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர் ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

  • Karur ther thiruvizha

    கரூர், தான்தோன்றிமலையில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி கோயில் அமைந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    இவ்வாண்டு திருவிழாவானது கடந்த  15-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. புரட்டாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், பெருமாள் துணைவியாருடன் எழுந்தருளினார்.

    மக்கள் கோவிந்தா… கோவிந்தா… என பக்த முழக்கத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுந்தனர். திருத்தேர் 4 மாட வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. அங்கு வீற்றிருந்தவாறு தொடர்ந்து பக்தர்களுக்கு பெருமாள் சேவை சாதித்தார்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி தேரோட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு மலை வீதியை சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

     

  • Thirupathy kalki avadharam

    திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் 8-ம்  நாளான இன்று இரவு   குதிரை வாகனத்தில் கல்கி அலங்காரத்தில் பக்தர்களின் கோவிந்தா ஆரவாரத்துடன் மலயப்பன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் சாலகட்ல பிரம்மோற்சவம் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை ஒட்டி தினந்தோறும்   பல்வேறு வாகன சேவைகள் நடைபெற்று வருகிறது

    பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று இரவு தங்கக் குதிரை வாகனத்தில்  கல்கி அலங்காரத்தில் வாளேந்திய கோலத்தில்  மலையப்பன்  நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் ஏழுமலையான் என்பதை குறிக்கும் வகையில்  மலயப்பர் கல்கி ரூபத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார். வீதிஉலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  • Thirupathy Car Festival

    திருப்பதி ஏழுமலையான்  பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது இதில் எட்டாம் நாளான இன்று காலை கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

    திருப்பதி ஏழுமலையான் கோவில் சாலகட்ல பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் தேரோட்டம் திருமலை மாட வீதிகளில் வெகு விமர்சியாக நடைபெற்றது.

    கடந்த 18ம் தேதி  திருப்பதி  ஏழுமலையான் கோயில் சாலகட்ல பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பிரமோற்சவத்தின்  முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்ட மலையப்ப சுவாமி தேர் மீது எழுந்தருளினார்.

    தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகள் தூப, தீப,நைவேத்தியம் ஆகியவற்றுக்குப் பின் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் வடம் பிடிக்க திருமலை நான்கு மாட வீதிகளில் ஏழுமலையானின் தேரோட்டம் வைபவமாக நடைபெற்றது.

    இதில் நான்கு மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தை கண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

  • September 26 2023 Rasipalan

    செப்டம்பர் 26 – 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள்…
    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  உயர்வு
    ரிஷபம் –    அசதி
    மிதுனம் –   லாபம்
    கடகம் – செலவு
    சிம்மம் –    சுகம்  
    கன்னி –    கவலை
    துலாம் –     மேன்மை
    விருச்சிகம் – வெற்றி  
    தனுசு –     நட்பு
    மகரம் –    பொறுமை
    கும்பம் –     கவனம்
    மீனம் –      தனம்
    சந்திராஷ்டமம்    – புனர்பூசம்

  • September 26 2023 Indranaal eppadi

    செப்டம்பர் 26 – இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் – புரட்டாசி 9
    26-செப்-2023 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : துவாதசி
    திதி நேரம் : துவாதசி இ 11.30
    நட்சத்திரம் : திருவோணம் கா 7.37
    யோகம் : சித்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • September 25 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  எதிர்ப்பு
    ரிஷபம் –    அசதி
    மிதுனம் –   சிக்கல்
    கடகம் – வரவு
    சிம்மம் –    சுகம்
    கன்னி –    தாமதம்  
    துலாம் –     மகிழ்ச்சி
    விருச்சிகம் – தடங்கல்
    தனுசு –     நட்பு
    மகரம் –    பயம்
    கும்பம் –     கவலை
    மீனம் –      போட்டி
    சந்திராஷ்டமம்    – திருவாதிரை

  • September 25 2023 Sarva Egadasi

    செப்டம்பர் 25 – சர்வ ஏகாதசி
    சோபகிருது வருடம் – புரட்டாசி 8
    25-செப்-2023 திங்கள்
    மதுரை தல்லாகுளம்,
    ஸ்ரீவில்லிபுத்தூர்,
    நாட்டரசன்கோட்டை பெருமாள் தேர்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : ஏகாதசி ந.இ 1.53
    நட்சத்திரம்: உத்திராடம் கா 9.12
    யோகம் : மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவாதிரை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Thirupathy soorya prabai vaganam

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான இன்று காலை உற்சவ மூர்த்தியான மலையப்பர்  சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த  18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகனத்தில் தொடங்கிய வாகன சேவை, தொடர்ந்து காலை, இரவு என இரு வேளைகளிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    7-ம் நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில்  மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நான்கு மாட வீதிகளிலும் உலா வந்த சூரிய நாராயணரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.வாகன சேவையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

  • Thirupathy Chandra prabai vaganam

    திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் 7-ம்  நாளான இன்று இரவு  சந்திர பிரபை வாகனத்தில் வெண்ணை கடைத்தெடுக்கும் நவநீதகிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களின் கோவிந்தா கோஷம் மலையெங்கும் எதிரொலிக்க சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் சாலகட்ல பிரம்மோற்சவம் கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தை ஒட்டி தினந்தோறும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி  பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாளான இன்று இரவு சந்திரபிரபை வாகனத்தின் மீது நவநீதகிருஷ்ணன்  அலங்காரத்தில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் மலையப்பன்  நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    சூரியன் அக்னி வடிவம், சந்திரன் சாந்த வடிவம் என்பதால் இரண்டும் தனது அம்சமே என்னும் விதமாக சூரியன் மற்றும் சந்திர வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. வீதிஉலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.