Blog

  • Annamalayar koil festival

    அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள பந்தக்கால் முகூர்த்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.உலக பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

    ஊர்காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 14ம் தேதி தொடங்கி 17 நாட்கள் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும். இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலத்திலிருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள்.

    கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் வரும் நவம்பர் 26ம்தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும்.

    அண்ணாமலையார் கோவில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர், சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்காலுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து பஞ்ச முக தீப ஆராதனை செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வந்த கால் கோவில் உட்பிரகாரத்தில் சுற்றி வந்து ராஜகோபுரம் எதிரே பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

  • kalpa virutcha vaganam

    திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாளான இன்று காலையில் மலையப்ப சுவாமி கல்ப விருட்ச வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் சாலகட்ல பிரம்மோற்சவம் கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் திருமலையில் காலையும் இரவும் வாகன சேவை நடந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், சிம்ம வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மூன்றாவது நாளான நேற்று இரவு முத்துப் பந்தலில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் கோவிந்தா கோஷத்துக்கு மத்தியில் நான்கு மாடவீதிகளை வலம் வந்தார். மலையப்ப சுவாமி வீதி உலாவில் யானை, குதிரை, காளைகள் அணிவகுத்து வந்தன. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடமணிந்தும், கோலாட்டம், தப்பாட்டம் ஆடியும் வந்தார்கள். லம்பாடிகள் நடனம் ஆடியபடி வீதி உலாவில் பங்கேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து நான்காம் நாளான இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். சொர்கத்தில் தேவர்கள் கேட்கும் வரங்களை தருவது கல்ப விருட்ச மரம். அது போன்று கலியுகத்தில் தனது பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை தரக்கூடிய வகையில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தயார்களுடன் பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளில் ராஜமன்னார் அலங்காரத்தில் கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வெகு விமர்சியாக நடந்த இந்த வாகன சேவையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • aandal soodi kodutha maalai

    திருப்பதி ஏழுமலையான் கோயில் மோகினி அலங்காரத்திற்காக ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து வந்த  ஆண்டாள் சூடி கொடுத்த மாலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
     
    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 18 தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தொறும் காலை இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா  வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான நாளை காலை மோகினி அலங்காரமும், முக்கிய வாகன சேவையான கருட சேவை இரவு நடைபெறவுள்ளது. இதையொட்டி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடி கலைத்த கிளியுடன் கூடிய மாலை இன்று திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டது.

    ஆண்டாள் மாலைக்கு ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் மடத்தில் வைத்து தமிழக இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துறை  முன்னிலையில் ஜீயர்கள் தலைமையில்  சிறப்பு பூஜை செய்யப்பட்டு திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்கினர். பின்னர் ஊரவலமாக   யானைகள் அணிவகுத்து முன் செல்ல நாதஸ்வர வாத்தியங்களுக்கு மத்தியில் ஆண்டாள் மாலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையான் கோயில் அதிகாரிகளிடம்  வழங்கப்பட்டது.

    இதில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் செயல் அதிகாரி முத்துராஜா, ஸ்தலத்தார்  ரங்கராஜன், டிரஸ்ட்டி  மனோகரன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாலை நாளை காலை ஏழுமலையானுக்கும், மோகினி அலங்காரத்தில் எழுந்தருளும் மலையப்ப சுவாமி கிளியுடன் கூடிய மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

  • September 21 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  எதிர்ப்பு
    ரிஷபம் –    போட்டி    
    மிதுனம் –   நன்மை
    கடகம் –    சிக்கல்
    சிம்மம் –    புகழ்   
    கன்னி –    உயர்வு  
    துலாம் –     இன்பம்
    விருச்சிகம் – அமைதி
    தனுசு –     எதிர்ப்பு
    மகரம் –    ஊக்கம்
    கும்பம் –     சாதனை
    மீனம் –      அலைச்சல்
    சந்திராஷ்டமம்    – பரணி, கார்த்திகை

  • September 21 2023 Sasti Viradham

    செப்டம்பர் 21 – சஷ்டி விரதம்
    சோபகிருது வருடம் – புரட்டாசி 4
    21-செப்-2023 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : சப்தமி
    திதி நேரம் : சஷ்டி கா 10.52
    நட்சத்திரம்: அனுஷம் ம 1.10
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பரணி,கார்த்திகை
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • malayappa samy thiruveedhi ula

    மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை ஒட்டி மலையப்பசாமி திருவீதி உலா நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் அமைந்துள்ள தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

    இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று மலையப்பசாமி கோவில் முன் மண்டபத்தில்  எழுந்தருளும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக காலை மலையப்ப சாமி சின்னசேஷ வாகனம் ஸ்தாபன திருமஞ்சனம் அன்னபட்சி வாகனம் ஆகியவற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த நிலையில் மாலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் மலையப்ப சாமி அலங்கார கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    ஊஞ்சல் உற்சவத்தின் போது வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓதி மலையப்ப சாமியான ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வழிபட்டனர். தொடர்ந்து அண்ண பட்ஷி வாகனத்தில் எழுந்தருளி மலையப்பசாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. கோவில் முன்பு இருந்து துவங்கிய திருவீதி உலா நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் கோவிலில் முடிவுற்றது.

  • Shimma vaganathil thirupathy perumal

    திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் சிறப்பு கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது.

    பிரம்மசாத்தை ஒட்டி பல்வேறு வாகன சேவைகள் திருமலை மாட வீதிகளில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மூன்றாம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி யோக நரசிம்ம அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் வாகன மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு கற்பூர ஆரத்தி அளித்து வாகன சேவையைத் துவக்கி வைத்தனர்.

    தொடர்ந்து தேவஸ்தான ஜீயர்  சுவாமிகள் தலைமையில் கோஷ்டி பிரபந்த பாசுரங்கள்  சொல்லியபடி முன் செல்ல உயர் அதிகாரிகள் ஆங்காங்கே ஆரத்தி அளித்து சுவாமி அருள் பெற்றனர் தொடர்ந்து மாடவீதி முழுவதும் பல்வேறு கலைஞர்கள் தங்களது கலையை சுவாமிக்கு சமர்ப்பித்துச் சென்றனர்.

    மேலும் ஒரு குழுவினர் நரசிம்மர் வேடமணிந்து மாட வீதிகளில் வலம் வந்தது கண்ணுக்கு விருந்தாக அமைந்தது மாட வீதி முழுவதும் கோவிந்த நாமம் சொல்லியபடி பக்தர்கள் ஆரத்தி அளித்து மலையப்ப சுவாமியை வணங்கினர்.

  • September 20 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  ஆதாயம்
    ரிஷபம் –    கவலை   
    மிதுனம் –   சிக்கல்
    கடகம் –    சுகம்  
    சிம்மம் –    நன்மை  
    கன்னி –    லாபம்
    துலாம் –     முயற்சி
    விருச்சிகம் – பக்தி
    தனுசு –     அன்பு
    மகரம் –    அச்சம்    
    கும்பம் –     தனம்
    மீனம் –      போட்டி
    சந்திராஷ்டமம்    – அஸ்வினி, பரணி

  • anna vaganam thirupathy ezhumalayan

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில்  சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்ன பறவை பால், தண்ணீரை வேறு செய்வது போல் பக்தர்களின் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை சுவாமி தனது பக்தர்களுக்கு அருள் புரிவதாக நம்பிக்கை. சுவாமி வீதிஉலாவில் பக்தர்களின் கோலாட்டம், பஜனைகள் மற்றும் பல்வேறு வேடம் அணிந்து வந்த பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான நாளை காலை சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் விதமாக மனிதர்களிடம் உள்ள விலங்களுக்குன்டான தீய எண்ணங்களை போக்கி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

     

  • thirupathy chinna sesha vaganam

    திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் மயிலிறகை சூட்டிக்கொண்டு வேணு கோபாலன் அலங்காரத்தில் மாட வீதிகளில்  மலையப்ப சுவாமி வலம் வந்தார். மாட வீதிகளில் திரண்டு இருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி அளித்து சுவாமி தரிசனம் செய்தனர். திருமலை மாட வீதிகளில் பல்வேறு விதமான நடன கலைஞர்கள் ஆந்திரா தமிழ்நாடு கேரளா கர்நாடகா மட்டுமின்றி இதர மாநிலங்களிலிருந்து வந்து பிரம்மோற்சவத்தில் கலந்துகொண்டு தங்களது கலையை ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தனர்.