Karur ther thiruvizha

கரூர், தான்தோன்றிமலையில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி கோயில் அமைந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இவ்வாண்டு திருவிழாவானது கடந்த  15-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. புரட்டாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், பெருமாள் துணைவியாருடன் எழுந்தருளினார்.

மக்கள் கோவிந்தா… கோவிந்தா… என பக்த முழக்கத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுந்தனர். திருத்தேர் 4 மாட வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. அங்கு வீற்றிருந்தவாறு தொடர்ந்து பக்தர்களுக்கு பெருமாள் சேவை சாதித்தார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி தேரோட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு மலை வீதியை சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *