Blog

  • Mesham March Monthly Prediction – Sakthi Online – 2024

    மேஷம்:

    கிரகநிலை:

    ராசியில்  குரு  –   ரண ருண ரோக  ஸ்தானத்தில் கேது –  களத்திர  ஸ்தானத்தில் சந்திரன் –  தொழில்  ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் –  லாப  ஸ்தானத்தில் சூர்யன், புதன், சனி –  அயன சயன போக  ஸ்தானத்தில் ராஹூ  என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    14-03-2024 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    13-03-2024 அன்று சூர்ய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    08-03-2024 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    02-03-2024 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை ஒரு நடுநிலைமையுடன் கையாளும் திறன் படைத்த மேஷ ராசி அன்பர்களே, நீங்கள் தீர்க்கமான எண்ணமுடையவர்கள் இந்த மாதம் பணவரவு திருப்தி தரும். ஆனால் வீண் செலவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செய்வது நல்லது. பயன் தராத முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும்.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுவது நன்மை தரும். தொழில் போட்டிகள் உண்டாகலாம். அனுசரித்து செல்வது முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோளற்ற வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உறவினர் நண்பர்களிடம் டென்ஷன் இல்லாமல் போவது நல்லது.

    பெண்கள் பயன்தராத முயற்சிகளை கைவிட்டு எந்த ஒரு வேலையையும் ஆராய்ந்து செயல்படுவது வெற்றியை தரும்.

    கலைத்துறையினர் புதிய இடங்களில் திறமையை வெளிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள். இரக்க சிந்தனை மேலோங்கும். எதிர்ப்புகள் விலகும்.

    அரசியல்துறையினருக்கு செலவு குறையும். எதிலும் அவசர முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். மன தெளிவு உண்டாகும்.

    மாணவர்களுக்கு எதிர்கால நலன் கருதி எந்த காரியத்தையும் செய்வது நன்மை தரும்.

    அஸ்வினி:

    இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.

    பரணி:

    இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம். சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

    கார்த்திகை 1ம் பாதம்:

    இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம்.  ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.

    பரிகாரம்: கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்க பிரச்சனைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 03, 04, 30, 31

    அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23, 24

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • March 01 2024 Rasipalan

    மார்ச் 01 – இன்றைய ராசிபலன்….
    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – போட்டி
    ரிஷபம்         – செலவு
    மிதுனம்     –  சிக்கல்
    கடகம்         –  லாபம்  
    சிம்மம்         –   முயற்சி
    கன்னி         –    அறிவு
    துலாம்         –     வரவு
    விருச்சிகம்     –  ஆய்வு
    தனுசு         –     கோபம்  
    மகரம்         –    வெற்றி
    கும்பம்         –      பகை  
    மீனம்         –      நன்மை
    சந்திராஷ்டமம்    –       ரேவதி

  • March 01 2024 Subamuhurthanaal

    மார்ச் 1 – சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – மாசி 18
    சுபமுகூர்த்த நாள்
    01-மார்-2024 வெள்ளி ஷாபான் 19
    சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : சஷ்டி
    திதி நேரம் : பஞ்சமி அ.கா 3.41
    நட்சத்திரம் : சுவாதி கா 10.08
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரேவதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • February 29 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – மேன்மை
    ரிஷபம்         – புகழ்
    மிதுனம்     –  போட்டி
    கடகம்         –  உயர்வு
    சிம்மம்         –   அமைதி
    கன்னி         –    பயம்
    துலாம்         –     தோல்வி  
    விருச்சிகம்     –  அசதி
    தனுசு         –     தனம்
    மகரம்         –    சலனம்  
    கும்பம்         –      ஆர்வம்
    மீனம்         –      முயற்சி
    சந்திராஷ்டமம்    –       உத்திரட்டாதி

  • February 29 2024 Indrayanaal

    பிப்ரவரி 29 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – மாசி 17
    29-பிப்-2024 வியாழன்
    கரிநாள்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : பஞ்சமி
    திதி நேரம் : சதுர்த்தி அ.கா 2.32
    நட்சத்திரம்: சித்திரை கா 8.26
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • Sangadahara chadurthi abishegam

    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பல வித திரவியங்கள் கொண்டு விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மனமுருகி போற்றி போற்றி என வேண்டி விநாயகரை வழிபட்ட பக்தர்கள்.

    தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டியில் அமைந்துள்ளது ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில், இந்த திருக்கோயிலில் இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

    முன்னதாக சித்தி விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், மஞ்சள், பழசாறு, திருநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு வண்ண மலர் மலைகளாலும் அருகம்புல் மாலைகளாலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.

     அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த சித்தி விநாயகருக்கு மகா தீபாராதனை, நட்சத்திர தீபாராதனை மற்றும் பஞ்ச கற்பூர் ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கண்டு தரிசித்து சென்றனர்.

  • February 28 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – துன்பம்
    ரிஷபம்         – லாபம்
    மிதுனம்     –  கவனம்
    கடகம்         –  ஆதரவு
    சிம்மம்         –   பெருமை  
    கன்னி         –    சுகம்
    துலாம்         –     ஓய்வு
    விருச்சிகம்     –  ஊக்கம்
    தனுசு         –     கவலை
    மகரம்         –    பணிவு
    கும்பம்         –      ஏமாற்றம்
    மீனம்         –      ஆர்வம்
    சந்திராஷ்டமம்    –       பூரட்டாதி

  • February 28 2024 Sangadaha chadurthi

    பிப்ரவரி 28 – சங்கடஹர சதுர்த்தி
    சோபகிருது வருடம் – மாசி 16
    சங்கடஹர சதுர்த்தி
    28-பிப்-2024 புதன்
    ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார்,
    கோவை கோணியம்மன் தேர்
    கரிநாள்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் : திரிதியை அ.கா 12.55
    நட்சத்திரம் : அஸ்தம் கா 6.31
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூரட்டாதி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Thiruvarur kodiyetram

    திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழா வரும் மார்ச் 21ம் தேதி நடைபெறுகிறது: இன்று கொடிஏற்றத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு…

    உலக பிரசித்திபெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்ட விழா வரும் மார்ச் 21ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி இன்று திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பெரிய கொடிமரத்தில் கொடியேற்ற உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.     

    சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், பூமியில் தோன்றிய முதல் ஊர் என அழைக்கப்படும் திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரதிருவிழா மற்றும் ஆழித்தேரோட்ட விழா தொடக்கமாக இன்று காலை ஆலயத்தின் பிரதான பிரகாரத்தில் உள்ள கொடியேற்ற உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

    முன்னதாக அதிகாலை ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வந்து மூலவர் ஸ்ரீவன்மீகநாதர் சன்னதி எதிரே வந்தப்பின் 54 அடி உயரம் கொண்ட கொடிமரத்தின் பீடத்தினை சுற்றியுள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு திரவியம், மஞ்சள், பால், சந்தனம் முதலான நறுமண திரவியப் பொருட்களைக்கொண்டு அபிஷேகங்கள் நடைப்பெற்றன. தொடர்ந்து ரிஷபம் படம் வரையப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க மேளதாள இசையுடன் பங்குனி உத்திரப் பெருவிழா துவக்கத்தை அறிவிக்கும் வகையில்  கொடிமரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது.

    பின்னர் கொடிமரந்திற்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன. இந்த திருவிழாவின் முக்கிய விழாவான வரும்  மார்ச் 21ம்  தேதி உலக புகழ்பெற்ற ஸ்ரீதியாகராஜ சுவாமி 96 அடி உயரம்கொண்ட ஆழித்தேரில் வீதிகளில் வலம் வரும் ஆழித்தேரோட்ட விழா நடைபெறுகிறது.  இதனை தொடர்ந்து மார்ச் 24ம் தேதி பங்குனி உத்திர தீர்த்தவாரியும், மார்ச் 25ம் தேதி பாத தரிசனமும் நடைபெறுகிறது.

    இன்று காலை நடைப்பெற்ற  கொடியேற்ற விழாவில் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு ஆரூரா தியாகேசா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.

     

  • vinayakar 108 sangabishegam

    மாசி மக தீர்த்தவாரிக்கு வருகை புரிந்த தீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு புதுச்சேரியில் 108 சங்காபிஷேகம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்

    புதுச்சேரியில் மாசி மக தீர்த்தவாதி கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது மகம் முடிந்து செல்லும் தீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு புதுச்சேரி புது சாரம் நடுத்தெருவிலுள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தங்கி உள்ளார்.

     இதனைடுத்து இன்று சாரம் மாசி மகம் வரவேற்பு குழு சார்பில் தீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.

     இதனை ஒட்டி இன்று காலை கணபதி ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேக விழா அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு ஒன்பது வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனையும் காட்டப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மாசி மிக வரவேற்பு குழு தலைவர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் மேலும் இன்று இரவு சுவாமி மின்விளக்கு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.