vinayakar 108 sangabishegam

மாசி மக தீர்த்தவாரிக்கு வருகை புரிந்த தீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு புதுச்சேரியில் 108 சங்காபிஷேகம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்

புதுச்சேரியில் மாசி மக தீர்த்தவாதி கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது மகம் முடிந்து செல்லும் தீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு புதுச்சேரி புது சாரம் நடுத்தெருவிலுள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தங்கி உள்ளார்.

 இதனைடுத்து இன்று சாரம் மாசி மகம் வரவேற்பு குழு சார்பில் தீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.

 இதனை ஒட்டி இன்று காலை கணபதி ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேக விழா அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு ஒன்பது வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனையும் காட்டப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மாசி மிக வரவேற்பு குழு தலைவர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் மேலும் இன்று இரவு சுவாமி மின்விளக்கு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *