Sangadahara chadurthi abishegam

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பல வித திரவியங்கள் கொண்டு விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மனமுருகி போற்றி போற்றி என வேண்டி விநாயகரை வழிபட்ட பக்தர்கள்.

தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டியில் அமைந்துள்ளது ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில், இந்த திருக்கோயிலில் இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

முன்னதாக சித்தி விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், மஞ்சள், பழசாறு, திருநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு வண்ண மலர் மலைகளாலும் அருகம்புல் மாலைகளாலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.

 அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த சித்தி விநாயகருக்கு மகா தீபாராதனை, நட்சத்திர தீபாராதனை மற்றும் பஞ்ச கற்பூர் ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கண்டு தரிசித்து சென்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *