மகாசிவராத்திரி முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாள் `மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. மாத சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி என வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும், விரதங்களில் சிறப்பானது மகா சிவராத்திரி விரதம்தான் சிறப்பானது என்று கூறப்படுகிறது. இந்நாளின் மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும் என்பது ஐதீகம். அந்தவகையில் இன்று மகாசிவராத்திரி கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் இன்று அலைமோதுகிறது. இரவு நேரங்களில் விழித்திருந்து சிவனை தரிசனம் செய்வதற்காக பல்வேறு இடங்களில் சிறப்பு தரிசனங்கள், ஆராதனைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Blog
-
2018-02-12-15-04-37
திருப்பதி கபிலேஸ்வரர் கோயில் பிரமோற்சவத்தின் 6வது நாளில் புலி வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் கடந்த 5ம் தேதி வருடாந்திர மகா சிவராத்திரி பிரமோற்சவம் நந்தி உருவம் வரையப்பட்ட கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் காலை, இரவு கபிலேஸ்வரரும், காமாட்சி அம்மன் தாயாரும் எழுந்தருளி நான்கு மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்நிலையில், பிரமோற்சவத்தின் 6வது நாளில் காலை புலி வாகனத்தில் சோம கந்தமூர்த்தி அலங்காரத்தில் கபிலேஸ்வரரும், காமாட்சி அம்மன் தாயாரும் எழுந்தருளி கபிலதீர்த்தம் சாலை, அன்னாராவ் சந்திப்பு, விநாயக் நகர், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயில், அலிபிரி பைபாஸ் சாலை வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தார். பின்னர் காலை 9 மணி முதல் 11 மணியளவில் சோமகந்தமூர்த்தி, காமாட்சி தாயாருக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இரவு 7 மணியளவில் கஜ வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமாக பக்தர்கள் கலந்துகொண்டு கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் சுவாமி வீதி உலாவின்போது கோலாட்டம், பஜனை மற்றும் பக்தி சங்கீர்த்தனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
-
2018-02-12-15-01-12
திருப்பதியில் இலவச தரிசனம் திருப்பதி திருமலையில், பிப்ரவரி 13 ஆம் தேதி மூத்த குடிமக்களுக்கும், பிப்ரவரி 14 ஆம் தேதி, கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கும், இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது. ஏழுமலையானை தரிசிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாட்களுக்கு, மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கு இலவச தரிசனம் வழங்கி வருகிறது. அதன்படி, வரும், பிப்ரவரி 13ல், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை, 10:00 மணிக்கு, 1,000 பேர், பகல், 2:00 மணிக்கு, 2,000 பேர், மாலை, 3:00 மணிக்கு, 1,000 பேர் என, 4,000 பேருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்களை, திருமலையில் அருங்காட்சியகம் எதிரில் உள்ள கவுன்டரில் ஆதார் அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் பிப்ரவரி 14 ஆம் தேதி காலை 9:00 மணி முதல், மதியம், 1:30 மணி வரை, 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது.
-
2018-02-12-14-36-04
மாசி மாத பூஜைக்காக பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை பிப்ரவரி 12 ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு முன்னிலையில் கோவில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பிப்ரவரி 13-ந்தேதி 17-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். 13 ஆம் தேதி முதல் சுவாமி ஐயப்பனுக்கு கணபதி ஹோமம், புஷ்பாபிஷேகம், நெய் அபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். மேலும் அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை போன்றவைகளும் நடைபெறும். அனைத்து பூஜைகளும் முடிவடைந்த பிறகு 17-ந்தேதி இரவு 10 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படும்.
-
2018-02-11-14-36-24
மகா சிவராத்திரி விழா வரும் செவ்வாய்கிழமை (பிப்ரவரி 13) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிவராத்திரி விழா, அன்று காலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து, அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கோயிலில் லட்சார்ச்சனை நடைபெறும். 12.05 மணிக்கு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 5 மணிக்கு சாயரட்சை அபிஷேகம் நடைபெறும். மாலை 5 மணி முதல் கோயிலில் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். கோயில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் மாலையில் பெண்கள், சிறுவர்கள் லட்ச தீபம் ஏற்றி வழிபடுவர். இதுதவிர, கோயிலின் பல்வேறு இடங்களில் பக்தர்கள் தீபம் ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர். கோயிலின் மூன்றாம், நான்காம் பிரகாரங்களில் பெண் பக்தர்கள் உப்பு, அரிசி மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி சிவபெருமானின் பல்வேறு உருவங்களை வரைந்து மகிழ்வர். இந்த உருவங்களைச் சுற்றி தீபம் ஏற்றியும் பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.கோயிலில் மகா சிவராத்திரி தினத்தன்று நான்கு கால அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு அருணாசலேஸ்வரருக்கு முதல் கால அபிஷேகமும், இரவு 11 மணிக்கு 2-ஆம் கால அபிஷேகமும், புதன்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு மூன்றாம் கால அபிஷேகமும், அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால அபிஷேகமும் நடைபெறும். கோயில் மூலவர் சன்னதிக்குப் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தாழம்பூவை அணிவித்து சிறப்புப் பூஜைகள், அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்படும். அதன்படி, செவ்வாய்க்கிழமை (பிப்.13) இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறும். சரியாக 12.05 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும். மகா சிவராத்திரியையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை காலை வரை கோயில் கலையரங்கில் பரதநாட்டியம், தேவாரப் பாடல்களின் இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். கோயில் ராஜகோபுரம் எதிரே திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாகஸ்வரம், தவில் இசைச் சங்கம் சார்பில் 36-ஆவது ஆண்டு இசை விழா, கலைமாமணி டி.ஆர்.பிச்சாண்டி குழுவினரின் 108 நாகஸ்வர, தவில் கச்சேரி நடைபெறுகிறது.
-
2018-02-11-12-15-28
செவ்வாய் சாந்தி பரிகாரத்தை உங்களது வீட்டிலேயே எளிமையாக செய்து செவ்வாய் பகவானின் அருளை பெறலாம். இப்பூஜைகளின் மூலம் செவ்வாய் திருமண தடையை நீக்குவது மட்டும் அல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தருகின்றார். செவ்வாய் தசை நடப்பில் இருந்து சோதனைக்கு ஆளாகி இருப்பவர்களும் இந்த பூஜையை செய்யலாம். இந்த பூஜையை செய்ய வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தேர்ந்தெடுப்பது நல்லது. சஷ்டியோடு செவ்வாய் வருவது மிக உத்தமம். செவ்வாய் அன்று நாகதோஷ வேளையில் (ராகு காலத்தில்) அல்லது செவ்வாய் ஹோரையில் பரிகார பூஜையை தொடங்குவது நல்லது. அன்று காலை குளித்து விட்டு வடக்குத் திசை பார்த்து அமரவும். உங்கள் முன்பு ஒரு மனை வைத்து மனைமேல் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து தீபம் ஏற்றவும், தீபத்திற்கு முன்பு வாழை இலை போட்டு (வாழை இலை நுனி கிழக்கு பார்த்து இருக்க வேண்டும்) இலையில் 27- அரச இலைகளை வைக்கவும். இலை மீது முழு துவரம்பருப்பு கொட்டைகளையும், தோல் நீக்காத முழு உளுந்து கொட்டைகளையும் வைத்து அதன்மேல் ஒரு சிறிய அகல் விளக்கு வைத்து தீபம் ஏற்றவும். இலை மீது வாழை பூ வைக்கவும் மற்றும் பழம், வெற்றிலை பாக்கு பூஜை பொருட்கள் வைத்து, நிவேதனமாக துவரம்பருப்பில் செய்த வடை, அல்லது துவரம் பருப்பு பொங்கல் வைக்கவும். தீபத்திற்கு தீப ஆராதனை முடித்துவிட்டு வாழை பூவை கையில் எடுத்துக் கொண்டு தீபத்தை வலமிருந்து இடமாக 9 முறையும் இடமிருந்து வலமாக 9 முறையும் பிறகு வலமிருந்து இடமாக 9 முறையும் ஆக 27 முறை வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். இப்படி செய்தால் தோஷம் நீங்கி செவ்வாய் பகவானின் அருளை பெறலாம்.
-
2018-02-10-14-20-13
வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம்.
நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.
மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம், சோர்வு போன்றவை நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும். அதை குடிக்க கூடாது.
காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டி வர பய உணர்ச்சிகள் குறையும்.
தற்கொலை எண்ணங்கள் மேலும் வாழ பிடிக்காதது போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி அணிய வேண்டியதில்லை.
வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது.
காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்.
இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும்.
வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்.
காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும்.
சமையலறையும், படுக்கையரையும் அருகருகே இருக்கும் படி அமைத்து கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.
துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும். -
12
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைகள் முடிவடைந்து கடந்த மாதம் நடை அடைக்கப்பட்டது. சபரிமலை கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில், கோவிலின் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது என்றாலும், பக்தர்களின் தரிசனத்திற்கு பின்னர் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மறுநாள் (13-ந் தேதி) காலை 4 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 17-ந் தேதி வரை தினமும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜையும், வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு தலைமையில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் 17-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
-
2
திருப்பதியில் ஆண்டு தோறும் நடக்கும் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டு 2 முறை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் ஆண்டு தோறும் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறும். இந்த ஆண்டு தெலுங்கு பஞ்சாங்கப்படி செப்டம்பர் மாதத்திலும் ஒரு பிரம்மோற்சவம் நடக்கிறது. தெலுங்கு பஞ்சாங்க வழக்கப்படி அமாவாசை முடிந்த மறுநாள் தெலுங்கு மாதப்பிறப்பு நிகழ்கிறது. அவ்வாறு அமாவாசைக்கு மறுநாள் மாதப் பிறப்பு தொடங்குவதால் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆண்டுக்கு 12 மாதங்களை காட்டிலும் கூடுதலாக 21 நாட்கள் வருகின்றன. அவ்வாறு வரும் 21 நாட்களை அதிக மாதமாக தெலுங்கு பஞ்சாங்கம் கணக்கிடுகிறது. இந்த நிலையில் 12 மாதங்களுக்கு ஒருமுறை வைகானாச ஆகம விதிப்படி திருப்பதியில் பிரம்மோற்சவம் நடத்தப் பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 12 மாதங்களை காட்டிலும் அதிக மாத நாட்கள் வருவதால் அப்போது 2 பிரம்மோற்சங்களை தேவஸ்தானம் நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பிறக்க உள்ள ஹேவிளம்பி தெலுங்குப் புத்தாண்டு அதிக நாட்களாக வருகிறது. அதனால் இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவம் மற்றும் அதிக மாத நாள் பிரம்மோற்சவம் என 2 பிரம்மோற்சவங்கள் திருப்பதியில் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
2018-02-10-12-35-10
செவ்வாயன்றும், வெள்ளியன்றும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால துர்க்கை வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ராகுவிற்கும் துர்க்கை வழிபாட்டிற்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது.ராகு கிரகத்தின் அதிதேவதை துர்க்கை, அதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு கால வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். ராகுவுக்கு உடலில்தான் விஷம் இருக்கிறதேயன்றி, வாலில் அமிர்தம் இருக்கிறது.ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் மறையும் அந்திநேரத்திற்கு முன்பு, ராகுவின் வால் பாகம் அமிர்தமாக இருக்கும்.அதாவது ஞாயிறன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் துர்க்கையை வழிபட்டால் கோரிய பிராத்தனைகள் நிறைவேறும் என்பது ஐதீகம். நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிணி தீர வேண்டுமானால், ஞாயிறு மாலை 4.30 – 6.00 ராகு கால வேளையில், துர்க்கை தனித்திருக்கும் ஆலயத்தில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்றவேண்டும். அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கிய வாறு விளக்கு இருக்க வேண்டும்.