Blog

  • 2018-03-04-15-14-48

    மாதத்தின் 12 மாதங்களும் முக்கிய தினங்களில் விரதங்கள் இருக்கலாம். அதில் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த விரதங்கள் இருந்தால் பலன் கிடைக்கும் என்ற நெறிமுறை உண்டு. அதன்படி விரதம் இருப்பது நல்லது.

    விரதங்கள்-சித்திரை

    1.வளர்பிறை சப்தமிதிதி- வாழ்வில் வளம்.
    2.பௌர்ணமி-சிவன்- லட்சுமி கடாட்சம், சகல சௌக்யம்.
    3.பௌர்ணமி- சித்திரகுப்தர்-ஆயுள் பலம், புண்ணிய பலம்.
    4.சுக்கிலபட்சத்து சுக்ரவாரம் -வெள்ளி-பார்வதிதேவி -சர்க்கரை நிவேதனம் -இனியவாழ்வு அமைய.
    5.பரணி நட்சத்திரம்-பைரவமூர்த்தி -தயிர்சாதம் நிவேதனம் -எதிரி பயம் போகும். தடைகள் விலகும்.
    6.மூல நட்சத்திரம்-மகாலட்சுமி+நாராயணன் இஷ்டசித்திகள் -விஷ்னுலோகம் அடைய.
    7.சுக்லபட்ச திரிதியை-உமா-மகேஸ்வரர்-தானம் செய்தல்-சிறப்பான வாழ்க்கை,சிவலோகம் அடைய.

    விரதங்கள்-வைகாசி

    1.பௌர்ணமி-சிவன்-சிவனருள்.
    2.விருஷப-ரிஷபவாகனத்தில் இருக்கும் உமாமகேஸ்வரர்-நீண்ட ஆயுள்,பொருள்,தானியம்,கல்வி,வாகன யோகம்.
    3.விசாகம்-முருகன்-முருகன் அருள்,மழலைச் செல்வம்.

    விரதங்கள்-ஆனி

    1.வளர்பிறை சப்தமி திதி-துர்க்கந்தநாசன விரதம்-சருமநோய்கள் நீங்கும்.
    2.ரம்பா த்ரிதியை-த்ரிதியை-விரதம்,சிவன் வழிபாடு-அரம்பையர்கள் வாழ்த்து,அழகு,செல்வம் நிறைந்து வாழ.
    3.பௌர்ணமி-சிவன்-எண்ணியவை கைகூடும்

    விரதங்கள்-ஆடி

    1.வளர்பிறை சப்தமி திதி-அபய சப்தமி விரதம்-சூரிய உலகில் இடம்.
    2.பௌர்ணமி-சிவன்-பகை விலகும்-வரலட்சுமி-செல்வம்சேரவும்,மங்களங்கள் பெருகவும்.

    விரதங்கள்-ஆவணி

    1.வளர்பிறை சப்தமி திதி-சகல பாக்யம் கிட்டும்.
    2.பௌர்ணமி-சிவன்-வேண்டியவை கிட்டும்.

    விரதங்கள்-புரட்டாசி

    1.ஜேஷ்டா-சுக்லபட்ச அஷ்டமி-சிவன்,விநாயகர் பூஜை-சந்ததி சிறப்பாக வளர.
    2.மகாலட்சுமி-துவாதசிமுதல்16 நாட்கள்-லட்சுமி பூஜை-சகல நலமும் வளமும் பெற.
    3.தசாவதார-சுக்லதசமியன்று.
    4.கதளி,கௌரி-சுக்லபட்ச சதுர்த்தசி-உமாமகேஸ்வர பூஜை-இஷ்ட சித்தி.
    5.அந்தந்த-பூர்வபட்ச சதுர்தசி-விஷ்னு பூஜை-காரியம் ஈடேற.
    6.பிரதமை/நவராத்திரி பிரதமை -சுக்லபட்ச பிரதமை (அஸ்த நட்சத்திரம் கூடினால் சிறப்பு) -ஓன்பது நாள் தேவி பூஜை-தீயசக்திகாளின் தாக்கம் விலக.
    7.ஷஷ்டி-சுக்லபட்ச ஷஷ்டி-பரமேஸ்வரி பூஜை-அம்பிகையின் அருளாசி.
    8.வளர்பிறை சப்தமி திதி-அனந்தசப்தமி-கண்ணொளி பிரகாசிக்கும்.
    9.பௌர்ணமி-சிவன்-பெருட்செல்வம் பெருகும்.
    10.அமுக்தா-சுக்லபட்ச சப்தமி-உமாமகேஸ்வரர்-புத்ர,பௌத்ர விருத்தி.

  • 70

    காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்றார் என்று மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் தெரிவித்துள்ளார். காஞ்சி காமகோடி பீடத்தின் 69-வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த மாதம் 28-ந்தேதி காலையில் முக்தியடைந்தார். இந்த மாதம் 1-ந்தேதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது மடாதிபதியாக பொறுப்பு ஏற்றுள்ளார். முக்தியடைந்த ஜெயேந்திரரின் முதலாவது ஆராதனை வருகிற 13-ந்தேதி காஞ்சி சங்கரமடத்தில் வைதீக முறைப்படி நடைபெறும். இது தவிர நாடு முழுவதும் உள்ள மடத்தின் கிளைகளில் ஜெயேந்திரரின் படங்கள் வைக்கப்பட்டு தினமும் நாம சங்கீர்த்தனை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

  • 30

    பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் உலக பிரசித்திபெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு மாசி மாத பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தப் பொங்கல் வழிபாட்டில் தமிழகம் மற்றும் கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவலன் மரணத்தை தொடர்ந்து நீதி கேட்டு மதுரையை எரித்து கோவத்துடன் கொடுங்கலூர் சென்று வானுலகம் அடையுமுன் கண்ணகி வந்த இடம் தான் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஆற்றுக்கால் என்னும் பகுதி. இங்கு கேரளா மக்கள் பகவதி அம்மன் என்ற பெயரில் கண்ணகிக்கு கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். ‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படும் இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவையொட்டி பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த பொங்கல் திருவிழாவில் கலந்துகொள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வருகின்றனர். இங்கு 10 கிலோமீட்டர் சுற்றளவில் பொங்கல் வைக்கப்படும். பல லட்சம் பெண்கள் குவிந்து வழிபாடு செய்யும் இந்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் வழிபாட்டில் கடந்த 1997 ஆம் ஆண்டு பதினைந்து லட்சம் பெண்கள் மற்றும் 2009-ஆம் ஆண்டு 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டு வெளிப்பட்டது உலக சாதனையை ஏற்படுத்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. காலை 10.15 மணிக்கு கோயில் தந்திரி குழிக்காடு வாசுதேவன் பாட்டதிரிப்பாடு ஆலய ஸ்ரீகோயிலில் இருந்து தீபம் எடுத்து வந்து, முதலில் பண்டார அடுப்பில் பற்ற வைத்து, பொங்கல் வழிபாட்டை துவங்கி வைத்தார். அதன் பின் அனைத்து அடுப்புகளிலும் நெருப்பு பற்ற வைக்கப்பட்டது . திருவனத்தபுரம் நகரப்பகுதி முழுவதுமாக லட்சகணக்கான பெண்கள் பொங்கல் வழிபாடு நடத்தியதால் நகர் பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணபட்டது. மதியம் 2.15 நிவேத்திய பூஜையுடன் பொங்கல் வழிபாடு நிறைவடைந்தது.

  • 2018-03-03-12-01-03

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளே இன்று முதல் செல்பேசி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டு அங்கு இருந்த கடைகள் முழுவதும் எரிந்து நாசமானது. இதனையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக இனி கோவிலின் உள்ளே மொபைல் போன் எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோவிலில் பக்தர்களின் இடையூறு, அமைதியான தரிசனம், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக கோயிலுக்குள் செல்பேசி கொண்டு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. செல்பேசி எடுத்து வரும் பக்தர்கள் அதை பாதுகாப்பாக வைப்பதற்காக வசதி வடக்கு மற்றும் மேற்கு கோபுரவாசலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு 1 செல்பேசிக்கு 10ரூ கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

  • 2018-03-03-11-37-03

    திருப்பதி திருமலையில் ஏழுமலையானை மே, ஜூன் மாதங்களில் தரிசனம் செய்ய ஈரோட்டில் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஈரோடு, பெருந்துறை சாலை, கிளப் மெலாஞ்ச் வளாகத்தில் உள்ள ஈரோடு ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் மூலம் திருப்பதி தேவஸ்தான தரிசன அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதில், வரும் மே, ஜூன் ஆகிய 2 மாதங்களுக்கான திருப்பதி ஏழுமலையான் தரிசன அனுமதிச் சீட்டு, தங்கும் விடுதி வசதி ஆகியவற்றுக்கான முன்பதிவு செய்யும் பணி தொடங்கியது. பக்தர்கள் விடுமுறை நாள்களில் அதிக அளவில் திரள்வதால் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையொட்டி , கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்களும் இந்த முன்பதிவு தரிசன அனுமதிச் சீட்டுடன் பதிவு செய்து கொள்ளலாம்.

  • 2018-03-02-05-38-14

    பிரசித்திப்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிப்ரவரி 29 ஆம் தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 1 ஆம் தேதி அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறிய தேரில் விநாயகர் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தார். தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி – தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளினார். அரோகரா முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

  • 2018-03-01-12-23-38

    மாசிமகத்தை முன்னிட்டு கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 108 திவ்ய மங்களப் பொருள்களால் அலங்காரம் செய்யபட்டு சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. சாரங்கபாணி கோயிலில் இந்த ஆண்டு மாசிமக விழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. 108 திவ்ய மங்களப் பொருள்களால் அலங்காரம் செய்யப்பட்ட தேரை ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர். இந்தத் தேரில் சாரங்கபாணி உற்சவர் அலங்கரிக்கப்பட்டு ஏற்பட்டதோடு அவருக்கு தீபாராதனை காட்டப்பட்ட பிறகு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

  • 100

    கடலூர் மாவட்டம். பெரியகுப்பம். மற்றும் கிள்ளையில் மாசிமக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற மாசிமக திருவிழாவில் பூண்டி யாங்குப்பம், நீராழி, கம்பிளிமேடு, ஆலபாக்கம், அகரம், வழதளம்பட்டு, தோப்புகொள்ளை, கீழ் பூவாணி குப்பம், பெரிய காட்டுசாகை, உள்பட 100-க்கு மேற்பட்ட சாமிகள் டிராக்டடர் மூலம் பெரியகுப்பம் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் ஏராளமான பொதுமக்கள் பெரியகுப்பம் கடலில் புனித நீராடினார்கள். அதேபோல கிள்ளையில், மாசிமக திருவிழா சிறப்பாக நடந்நது. கிள்ளை, தைக்கால், சிங்காரகுப்பம், மாணம் பாடி, பொன்னந்திட்டு, கீழச் சாவடி உள்பட இருபதுக்கும் மேற்பட்ட சாமிகள் டிராக்டடரில் ஊர்வலமாக வந்து முழக்குதுறை கடலில் தீர்தவாரி நடந்தது. மாசிமக திருவிழாவில் – ஏராளமான பக்தர்கள் முழக்குதுறை கடலில் புனித நீராடினார்கள்.

  • 18

    உலகபுகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்ரம் 18-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்ரல் 27-ல் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழா நடைபெறும் நாட்களில் சுவாமியும், அம்மாளும் தினமும் இருவேளை மாசி வீதிகளில் உலா வரும் காட்சி நடைபெறும். சித்திரைத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 2018-02-28-15-13-50

    கும்பகோணம் மகாமககுளத்தில் மாசிமகம் தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. மாசி மகத்தை முன்னிட்டு மகாமககுளத்தில் 21 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் தீர்த்தவாரி நடைபெறும். கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக திருவிழா நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று மாசி மக தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு மாசிமக திருவிழா மகாமக திருவிழாவில் தலைமை கோவிலான ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரசித்தி பெற்ற மாசிமக தீர்த்தவாரி மார்ச் 1 ஆம் தேதி காலை நடைபெறுகிறது. இதையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் நாளை காலை 11 மணி முதல் 12 மணிக்குள் 7 சிவன் கோவில்கள், மற்றும் 5 பெருமாள் கோவில்களில் உள்ள உற்சவ சுவாமிகள் வீதியுலாவாக வந்து மகாமக குளக்கரையில் எழுந்தருளுகின்றனர். பின்னர் அஸ்திரதேவர் மூர்த்திகளுக்கு மகாமககுளத்தில் 21 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அனைத்து கோவில்களின் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதில் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமாக பக்தர்கள் வந்திருந்து மகாமக குளத்தில் புனித நீராடுவார்கள்.