Category: கோவில்கள்

கோவில்கள்

  • கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில்

    நெல்லை மாவட்ட கோயில்கள்

    கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில்
    சிற்ப கலைக்கு சிறந்த சான்று, நெல்லை அருகிலுள்ள கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில்தான் என்பதை, அங்குள்ள சிற்பங்களை கண்டு ரசித்தவர்கள் ஏற்றுக்கொள்வர். திருநெல்வேலியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் திருச்செந்தூர் சாலையில் உள்ளது கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில். இக் கோயில் 16-ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது.

    இக் கோயிலின் தனிச் சிறப்பு அங்குள்ள சிற்பங்களே. இந்த கோயிலின் வீரப்ப நாயக்கர் மண்டபம், அரங்க மண்டபம் ஆகிய இரு மண்டபங்களிலும் சுமார் 6 அடிக்கு குறையாமல் சுமார் 30-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன.

    இந்த சிற்பங்கள் அனைத்தும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான தூண்களில்தான் உள்ளன. ஒரே தூணில் எண்ணற்ற சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    இங்குள்ள சிற்பங்களில் வீரன், அரச குமாரியை கடத்துதல், குறத்தி அரச குமாரனை கடத்துதல், அர்ச்சுனன், கர்ணன், ரதி, மன்மதன், நடன மங்கை என்று சிற்பக் கலைக்கு பெருமை சேர்க்கக் கூடிய சிலைகள் உள்ளன.

    இந்த சிலைகளில் மனிதர்களுக்கு தெரிவதுபோல எலும்பு, நரம்பு, கை, கால் மொளிகள் தெரிவது  காண்போரை பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றன. மேலும், மன்மதன் கரும்பு வில் சிற்பத்தின் மேல் பகுதியில் ஒரு ஊசியைப் போட்டால் அதை வில்லின் கீழ் பகுதியில் எடுத்து விடலாம். இந்த அளவுக்கு நுட்பமும், கலைநயமும் நிறைந்த சிலைகள் கிருஷ்ணாபுரத்தில்மட்டும் தான் உள்ளன என்று சிற்பக் கலைஞர்கள் கூறுகின்றனர்.

    கிருஷ்ணாபுரம் சிற்பங்கள், இம்மாவட்டத்துக்கு சிற்பக் கலைஞர்களால் அளிக்கப்பட்ட அருள்கொடை என்பதில் ஐயமில்லை. திருச்செந்தூர் சாலையில் பயணிக்கும் யாராக இருந்தாலும், இக் கோயிலின் சிற்பங்களை காணத் தவறுவதில்லை.

    இக் கோயிலுக்கு திருநெல்வேலியில் திருச்செந்தூர் செல்லும் அனைத்து பஸ்களும் செல்லும். ரயில் மூலம் செல்பவர்கள் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து வேறு வாகனங்கள்  மூலமாகவோ, பஸ் மூலமாகவோ கோயிலுக்குச் செல்லலாம். பக்தர்கள் தங்குவதற்கு திருநெல்வேலி, பாளையங்கோட்டைப் பகுதியில் விடுதி வசதிகள் உள்ளன. 

    கோயில் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும். அதேபோல மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 

  • தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்…. 

    274 பாடல் பெற்ற சிவாலங்களை இங்கு காணலாம்… எந்த மாவட்டத்தில் எந்த சிவன் கோயில் பாடல் பெற்றது என விவரமாக தரப்பட்டுள்ளது..

    சென்னை மாவட்டம்….
    வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், சென்னை
    பாடி, திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், சென்னை
    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில், சென்னை
    திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில், சென்னை

    கடலூர் மாவட்டம்:
    சிதம்பரம் சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், கடலூர்
    திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    சிவபுரி உச்சிநாதர் திருக்கோயில், கடலூர்
    திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோயில், கடலூர்
    ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    கானாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருக்கூடலையாற்றூர். வல்லபேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருச்சோபுரம் மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருத்தளூர் சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில், கடலூர்

    நாகப்பட்டினம் மாவட்டம்:
    ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    மகேந்திரப் பள்ளி திருமேனியழகர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    சாயாவனம் சாயாவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    பூம்புகார் பல்லவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    சீர்காழி சட்டைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் திருக்கோயில், நாகப்பட்டினம்
    கீழையூர் கடைமுடிநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருப்புன்கூர் சிவலோகநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    நீடூர் சோமநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    மேலத்திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்
    கொருக்கை வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்குரக்கா குந்தளேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவிளநகர் உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    செம்பொனார்கோவில் சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    புஞ்சை நற்றுணையப்பர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    குத்தாலம் உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    சிக்கல் நவநீதேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    வலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவாய்மூர் வாய்மூர்நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    கோடியக்காடு கோடிக்குழகர் திருக்கோயில், நாகப்பட்டினம்

    தஞ்சாவூர் மாவட்டம்:
    பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கஞ்சனூர் அக்னீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவாய்பாடி பாலுகந்தநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவிசநல்லூர் யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கொட்டையூர் கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    இன்னம்பூர் எழுத்தறிநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவிஜயமங்கை விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவையாறு ஐயாறப்பன் திருக்கோயில், தஞ்சாவூர்
    தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருக்கானூர் செம்மேனிநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கண்டியூர், பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருக்கருகாவூர் முல்லைவனநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    பாபநாசம் பாலைவனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    ஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், தஞ்சாவூர்
    பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கீழபழையாறை வடதளி சோமேசர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவலஞ்சுழி திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கும்பகோணம் நாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கும்பகோணம் சோமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவிடைமருதூர் மகாலிங்கம் திருக்கோயில், தஞ்சாவூர்
    ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருநறையூர் சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    அழகாபுத்தூர் படிக்காசுநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    சிவபுரம் சிவகுருநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    சாக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    பரிதியப்பர்கோவில் பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருச்சேறை சாரபரமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

    அரியலூர் மாவட்டம்:
    திருமழபாடி வைத்தியநாதர் திருக்கோயில், அரியலூர்
    கீழப்பழுவூர் ஆலந்துறையார் திருக்கோயில், அரியலூர்
    திருச்சிராப்பள்ளி மாவட்டம்:
    அன்பில் சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருப்பாற்றுறை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    ஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருச்சி
    உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருச்சி
    உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருச்சி தாயுமானவர் திருக்கோயில், திருச்சி
    திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருநெடுங்குளம் நெடுங்களநாதர் திருக்கோயில், திருச்சி

    கரூர் மாவட்டம்:
    அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், கரூர்
    குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், கரூர்
    கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர்
    வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், கரூர்
    திருவாரூர் மாவட்டம்:
    திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    அம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருமாகாளம் மகாகாளநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருமீயச்சூர் மேகநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    சிதலப்பதி முக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    செருகுடி சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    கருவேலி சற்குணேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் திருக்கோயில், திருவாரூர்
    நன்னிலம் மதுவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் திருக்கோயில், திருவாரூர்
    திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்கண்ணபுரம் ராமநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    கீழ்வேளூர் கேடிலியப்பர் திருக்கோயில், திருவாரூர்
    தேவூர் தேவபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்
    ஆருர் அரநெறி அசலேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர்
    விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயில், திருவாரூர்
    கரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில், திருவாரூர்
    மணக்கால்ஐயம்பேட்டை அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    குடவாசல் கோணேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    ஆண்டான்கோவில் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    அவளிவணல்லூர் சாட்சிநாதர் திருக்கோயில், திருவாரூர்
    கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    பூவனூர் சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில், திருவாரூர்
    பாமணி நாகநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் திருக்கோயில், திருவாரூர்
    கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    இடும்பாவனம் சற்குணநாதர் திருக்கோயில், திருவாரூர்
    கற்பகநாதர்குளம் கற்பகநாதர் திருக்கோயில், திருவாரூர்
    தண்டலச்சேரி நீள்நெறிநாதர் திருக்கோயில், திருவாரூர்
    கோட்டூர் கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருவண்டுதுறை வண்டுறைநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    ஓகைப்பேரையூர் ஜகதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருநெல்லிக்கா நெல்லிவனநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருநாட்டியத்தான்குடி ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருவாரூர்
    கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில், திருவாரூர்
    கச்சனம் கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவாரூர்

    மதுரை மாவட்டம்:
    மதுரை சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை
    செல்லூர், மதுரை திருவாப்புடையார் திருக்கோயில், மதுரை
    திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், மதுரை
    திருவேடகம் ஏடகநாதர் திருக்கோயில், மதுரை

    சிவகங்கை மாவட்டம்:
    பிரான்மலை கொடுங்குன்றநாதர் திருக்கோயில், சிவகங்கை
    திருப்புத்தூர் திருத்தளிநாதர் திருக்கோயில், சிவகங்கை
    திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை
    காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை

    புதுக்கோட்டை மாவட்டம்:
    திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை

    ராமநாதபுரம் மாவட்டம்:
    ராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோயில், ராமநாதபுரம்
    திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், ராமநாதபுரம்
    விருதுநகர் மாவட்டம்:
    திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில், விருதுநகர்

    திருநெல்வேலி மாவட்டம்:
    குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில், திருநெல்வேலி
    திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி

    திருப்பூர் மாவட்டம்:
    அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில், திருப்பூர்
    திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில், திருப்பூர்

    ஈரோடு மாவட்டம்:
    பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு
    கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு

    நாமக்கல் மாவட்டம்:
    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்

    விழுப்புரம் மாவட்டம்:
    நெய்வணை சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    டி. இடையாறு மருந்தீசர் திருக்கோயில், விழுப்புரம்
    திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    கிராமம் சிவலோகநாதர் திருக்கோயில், விழுப்புரம்
    பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    திருவாமத்தூர் அபிராமேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    ஒழிந்தியாம்பட்டு அரசலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    இரும்பை மகாகாளேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    கிளியனூர் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

    திருவண்ணாமலை மாவட்டம்:
    திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை
    செய்யாறு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
    திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
    குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை

    காஞ்சிபுரம் மாவட்டம்:
    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் சத்யநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    திருமாகறல் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    திருக்கச்சூர் கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில், காஞ்சிபுரம்
    திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

    வேலூர் மாவட்டம்:
    திருவல்லம் வில்வநாதேஸ்வரர் திருக்கோயில், வேலூர்
    திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், வேலூர்
    தக்கோலம் ஜலநாதீஸ்வரர் திருக்கோயில், வேலூர்

    திருவள்ளூர் மாவட்டம்:
    கூவம் திரிபுராந்தகர் திருக்கோயில், திருவள்ளூர்
    திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
    திருப்பாசூர் வாசீஸ்வரர் திருக்கோயில்,
    பூண்டி ஊன்றீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
    திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
    திருவொற்றியூர் படம்பக்கநாதர் திருக்கோயில், திருவள்ளூர்

    மற்ற மாநிலங்கள் கோயில்கள்:
    திருவஞ்சிக்குளம் மகாதேவர் திருக்கோயில், திருச்சூர்
    திருக்கோகர்ணம் மகாபலேஸ்வரர் திருக்கோயில், உத்தர் கன்னடா
    ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில், கர்நூல்
    திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி
    திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி
    தருமபுரம் யாழ்மூரிநாதர் திருக்கோயில், புதுச்சேரி
    திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், காரைக்கால்
    காளஹஸ்தி காளத்தியப்பர் திருக்கோயில், சித்தூர்
    திருவண்டார்கோயில் பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி
     

  • சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில்

    நெல்லை மாவட்ட திருக்கோயில்கள்

    சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில்
    இந்தக் கோவிலை நந்தனார் தரிசித்ததற்கு அடையாளமாக இவரது சிற்பம் கொடிமரத்திற்கு கீழேயுள்ள பீடத்தில் இருக்கிறது.இவர் இங்கிருந்து சுவாமியை வணங்கியபடி இருக்க நந்தி சற்று விலகியிருக்கிறது. கொடிமரம் அருகில் நின்று விலகிய நந்தியையும் சிவனையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம்.

    சிவதரிசனம் பெற விரும்பிய உரோமச முனிவர் அகத்தியரின் ஆலோசனைப்படி தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை இட்டார். அதில் இரண்டாவது மலர் இத்தலத்தில் கரை ஒதுங்கியது. இங்கு உரோமசர் லிங்க பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார்.

    பிற்காலத்தில் அந்த லிங்கம் ஒரு அரசமரத்தின் கீழ் இருந்தது. இப்பகுதியில் வசித்த சகோதரிகளான சிவபக்தைகள் இருவர் நெல் குத்தி அரிசி வியாபாரம் செய்து வந்தனர். தினமும் இத்தல லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கிய பின்பே தங்கள் வேலையை துவங்குவர்.

    இந்த லிங்கம் கோவிலில் இல்லாமல் மரத்தடியில் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறதே என்று ஆதங்கப்பட்டு சிவனுக்கு கோவில் கட்ட நினைத்தனர். ஆனால் அவர்களிடம் போதிய வருமானம் இல்லை.

    அவர்கள் தங்களது உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை சேர்க்க ஆரம்பித்தனர். அவர்களது பக்தியை கண்டு மகிழ்ந்த சிவன் ஒருசமயம் அடியார் வடிவில் அப்பெண்களின் வீட்டிற்கு சென்றார்.

    அவரை வரவேற்ற சகோதரிகள் உபசரித்து உணவு பரிமாறினர். அப்போது வீட்டில் விளக்கு எரியவில்லை. அதை சுட்டிக்காட்டி மங்களம் இல்லாத இவ்வீட்டில் நான் சாப்பிடமாட்டேன் என்று எழுந்தார்.

    சகோதரிகள் பதறிப்போய் அவசரத்தில் விளக்கை தேடினர். விளக்கு தென்படாததால் சமையலுக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து அதில் நெய்விட்டு விளக்கேற்றினர்.
    மகிழ்ந்த சிவனடியார் சாப்பிட்டுவிட்டு சுயரூபத்தில் காட்சி தந்தார். அதன்பின்பு அவர்களது இல்லத்தில் செல்வம் பெருகியது. அதைக் கொண்டு இங்கு கோவில் எழுப்பினர்.

    அரிசி வியாபாரம் செழிக்க இங்கு வந்து அரிசி தானம் அன்னதானம் செய்கின்றனர். மாதுளம் பழச்சாறு அபிஷேகம் செய்து அம்பாள் சன்னதி முன்பு தட்டில் அரிசியை பரப்பி அதன் மத்தியில் உடைத்த தேங்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றுகின்றனர்.

    சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

    நெல்லையிலிருந்து அரை மணி நேர பயணம். போக்குவரத்து வசதிகள் ஏராளம் உண்டு.
     

  • அம்பை காசிபநாதர் கோயில்

    அம்பை காசிபநாதர் கோயில்

    திருநெல்வேலி-பாபநாசம் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட புனுகு சபாபதியின் நடனக்காட்சி, திருவாட்சி, வசந்த மண்டபத் தூண் சிற்பங்கள், பள்ளியறை மணியடி மண்டபத் தூண் சிற்பங்கள், ஆறுமுகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்திருக்கும் சிற்பம், மரக்கதவில் திருவிளையாடற் புராணக் காட்சிகள் ஆகியவை மிகவும் எழில் வாய்ந்தவை. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

    இறைவனுக்கும், அம்மனுக்கும் தனித்தனி கருவறைகள் அமைந்துள்ளன.. இறைவன் சதுரமான கருவறையில் லிங்க வடிவில் உள்ளார். அர்த்தமண்டம், முகமண்டபம் மற்றும் மகா மண்டபம் அமைந்துள்ளது. முகமண்டபத்தூண்கள் உருளைத்தூண்களாக அமைந்துள்ளன. முகமண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் மேடை போன்ற அமைப்பு உள்ளது. இது அமர்ந்து வேலை செய்பவர்களுக்காக இருக்கலாம். 

    மகாமண்டபத்தில் உள்ள தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. சுற்றுப்பிரகாரம், நந்தவனம் அமைந்துள்ளது. கோயில் மிகப்பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது. இறைவனது கருவறை விமானம் திராவிட பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. தாங்குதள உறுப்புகள் அனைத்தும் அமைந்துள்ளன. கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. கோட்டங்களில் சிற்பங்கள் இடம் பெறவில்லை. இது பாண்டிய நாட்டின் முறைமையாகும்.

    நெல்லையிலிருந்து இங்கு வந்துசெல்ல நல்ல போக்குவரத்து வசதிகள் உள்ளன.

  • அம்பை காசிநாதர் திருக்கோயில்

    நெல்லை மாவட்ட கோயில்கள்

    அம்பை காசிநாதர் திருக்கோயில்

    தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிற திருக்கோயில் இது. கிழக்கு மற்றும் தெற்குத் திசைகளில் நுழைவாயில்கள். கிழக்குத் திசையில் நுழைவாயிலில் இருக்கும் பிரமாண்ட கதவில் அழகிய சிற்பங்கள் தரிசிக்கக் கிடைக்கின்றன. 

    அன்னபூரணி, புன்னைமர கிருஷ்ணன், மகாவிஷ்ணு, சபாபதி, உக்ர நரசிம்மர், பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் என்று ஏராளமான சிற்பங்கள் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் காட்சி தருகிறது.

    தெற்கு நுழைவாயில் அருகே தாமிரபரணி, பிரவாகம் எடுத்து ஓடுகிறது. இங்குதான் மொட்டைக் கோபுரம் அமைந்துள்ளது. கல் வேலைப்பாடுகளுடன் கூடிய பிரமாண்டமான ஆலயம். தூண்கள் நிறைந்த மண்டபங்கள்; கண்களையும் கருத்தையும் கவரும் சிலா விக்கிரகங்கள்; மண்டபத்தில் பூரணை- புஷ்கலை சமேத ஸ்ரீசாஸ்தா மற்றும் நவக் கிரகங்களுக்குத் தனிச் சந்நிதிகள்.

    சற்றே நடந்தால், அர்த்த மண்டபம் தாண்டி ஸ்ரீகாசிநாதரின் கருவறை. சிறிது சாய்ந்த லிங்கத் திருமேனி. சுயம்பு வடிவம். காசியப முனிவர் தொழுத ஈசன். நமசிவாயனை உளமார வணங்கி, அவன் அருள் பெற்றுத் திரும்புகிறோம்.

    பிராகாரமெங்கும் நிறைய சந்நிதிகள். அதிகார நந்தி, ஜுரதேவர், சூரிய பகவான், சந்திர பகவான், அறுபத்துமூவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, சப்தமாதாக்கள், அகத்திய மாமுனி, மூஷிக வாகனத்துடன் கன்னி விநாயகர், காசி விஸ்வநாதர்- விசாலாட்சி, வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமண்யர், அண்ணாமலையார், ஸ்ரீசொக்கநாதர்- மீனாட்சி என்று தரிசிக்கலாம்.

    பிரம்மோற்ஸவம் என அனைத்து விசேஷங்களும் குறைவின்றி நடைபெறுகின்றன..

    நெல்லையிலிருந்து இங்கு வந்துசெல்ல நல்ல போக்குவரத்து வசதிகள் உள்ளன.

  • அம்பை அருள்மிகு கிருஷ்ணசாமி கோயில்

    நெல்லை மாவட்ட திருக்கோயில்கள்

    அம்பை அருள்மிகு கிருஷ்ணசாமி கோயில்

    கி.பி.16-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இக்கோயிலின் கட்டடக்கலை அமைப்பை நோக்கும்போது  இது பிற்காலத்தியது எனத் தெரிகின்றது. 

    இக்கோயிலில் கல்வெட்டுகள் எதுவும் இடம் பெறவில்லை. எனினும் கோயிலுக்கு சொந்தமான நன்செய் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அவற்றின் வருவாயில் கோயில் நிர்வாகம் நடைபெறுகிறது. எனவே இக்கோயிலுக்கு நிலக்கொடைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஏனோ அவை கல்வெட்டுகளாக இடம் பெறவில்லை.

     இக்கோயில் மூலவர் எப்போதும் துணைவியரான ருக்மிணி, சத்தியபாமையுடன் இருப்பதால் நித்யகல்யாணப் பெருமாள் என்று வழங்கப்படுகிறார். இங்கு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. இங்கு வேணுகோபாலரே தனது நாச்சியார்களுடன் தீர்த்தவாரி காண்கிறார்.
    இக்கோயில் கருவறை சதுர வடிவமானது. மூலவர் நின்ற நிலையில் உள்ளார். அதனையடுத்து உள்ள மண்டபத்தில் உருளைத்தூண்கள் இருவரிசையில் உள்ளன. நடுவில் உற்சவமூர்த்தி திருவுருவம் அமைந்துள்ளது. அதனையடுத்து முகப்பில் துவாரபாலகர் திருவுருவங்கள் வரையப்பட்டுள்ளன. கருவறை விமானம் ஏக தளமுடையதாக உள்ளது. 

    திராவிடப்பாணியில் அதாவது சிகரம் (தலை) எட்டுப்பட்டை உடையதாக உள்ளது. கூரைப்பகுதிக்கு மேல் சுதையால் உருவாக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தினையடுத்து சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அமைந்துள்ளன.

     கோட்டங்கள் வெற்றிடமாக உள்ளன. சிற்பங்கள் இடம் பெறவில்லை. கூரைப்பகுதியில் கொடுங்கையில் கூடுமுகங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில திருமால் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சுற்றில் வாகன மண்டபம் அமைந்துள்ளது. அவற்றில் கருடன், அனுமன் உள்ளிட்ட பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    நெல்லையிலிருந்து வந்துசெல்ல நல்ல போக்குவரத்து வசதிகள் உள்ளன.

  • சமய ஒற்றுமைக்கு சாட்சி சொல்லும் சங்கரலிங்கர் கோயில்

    நெல்லை மாவட்டத் திருக்கோயில்கள்-3

    சங்கரன் கோவில் என கோவிலின் பெயரிலேயே அழைக்கப்படும் இந்த ஊர், நெல்லை மாவட்டத்தின் சிறப்புமிக்க திருத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.. இது ஐம்பூதத் தலங்களில் ஒன்றாகும். அந்த வகையில்  இது மண் தலமாகும். இக்கோவிலின் கிழக்கு வாசலில் 125 அடி உயரமுள்ள 9 நிலை கொண்ட இராஜகோபுரம் அமைந்துள்ளது..

    கோவிலின் தென்பகுதியில் அர்த்த மண்டபம் , அந்தராள மண்டபம் , மணி மண்டபம், மா மண்டபம், பரிவார மண்டபம் என வரிசையாக உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் ஒரு புற்றில் வள்மீகநாதர் என்னும் நாகாபரண புற்றுலிங்கம் உள்ளது. இதுவே இக்கோவில் உருவாக காரணமான புற்று ஆகும்.

    வடபக்கம் சனிபகவான் , காசி விசுவநாதர், பைரவர், துர்கா தேவி உள்ளனர். கீழ்ப் பிரகாரத்தில் சூரிய, சந்திரன் உள்ளனர் . மகா மண்டபத்தின் மதில் சுவற்றில் பல தெய்வங்களின் சிறு உருவங்கள் அழகாக செதுக்கப்பட்டு அக்கால சிற்பக்கலை நுணுக்கங்களை நமக்கு போதிக்கிறது. இம்மதிலின் தென் பக்கம் தட்சிணா மூர்த்தி, மேல் பக்கம் நரசிம்மர், வடபக்கம் பிரம்மா உள்ளனர். இவர்களை நாம் தரிசித்துவிட்டு அர்த்த மண்டபத்தில் நுழைந்தால் அங்கிருந்து சிறிய உருவில் எழுந்தருளியுள்ள சங்கரலிங்கப் பெருமாளை கண்குளிர தரிசிக்கலாம்.

    சங்கரலிங்கர் கோவில் போன்றே கோமதியம்மன் கோவிலிலும், கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம் , அந்தராள மண்டபம் , மா மண்டபம் சுற்று மண்டபங்கள் உள்ளன. கோமதியம்மை கர்ப்பக்கிரகத்திற்கு நேர் எதிரில் ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதன் மேல் மக்கள் அமர்ந்து தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிக்கிறார்கள். இருபக்கமும் மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.வடக்குப் பிரகாரத்தில் புற்றுமண் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

    மக்கள் இம்மண்ணை வீட்டிற்கு எடுத்துச் சென்று நோய் நீக்கம் பெறுகிறார்கள். இது தோல் நோய்களை நீக்கும் அருமையான மருந்தாகும். அர்த்த மண்டபத்திற்குள் நுழைந்து கோமதி அம்மையைத் தரிசிக்கிறோம் .வலது கையில் மலர்ச் செண்டுடன் இடது கையைத் தொங்கவிட்டு ஒரு பக்கமாக சாய்ந்து நிற்கும் அழகு திருக்கோலம் நம் மனதை விட்டு என்றும் நீங்குவதில்லை .. இந்தக் கோவிலில் தினசரி 7 கால பூஜைகள் நடைபெறுகின்றன.

    இக்கோவிலில் சங்கரனார் மற்றும் கோமதியம்மைக்கு மட்டுமே இரண்டு சந்நிதிகள் , தெருவிலிருந்து நேரே தரிசிக்குமாறு இரண்டு பெரும் வாயில்களுடன் அமைந்துள்ளது. ஆனால் நடுவில் உள்ள சங்கர நாராயணருக்கு தலைவாசல் ஒன்று இல்லாதபடி உள்ளடங்கியே உள்ளது. மேலும் அம்மையின் வேண்டுதல் படி இறைவன் சங்கரநாராயணராகக் காட்சி கொடுத்தமையால் சங்கரநாராயணர்த் திருக்கோவில் பின்னால் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுள்ளது. 

    வைணவப் பெரியார் இராமானுசர் மற்றும் வீர வைணவர்களான விஜயநகர மன்னர்கள் காலத்திலும், .திருமாலுக்கு இக்கோவிலோடு தொடர்பினை உண்டாக்கி இரண்டு பெருந் தெய்வங்களும் இணைந்ததே சங்கரநாராயணர் என்று உருவாக்கிவிட்டனர் என்கிறார்கள்.

    பரமேஸ்வரன் தன்னுள் அடங்கிய நாராயணரை வெளிப்படையாகத் தனது இடது பாகத்தில் காட்டி அருளினாரா ? அல்லது சிவன், திருமால் என்ற இரண்டு பெருந் தெய்வங்களும் இணைந்ததால் சங்கரநாராயணரா ? எது எப்படியிருப்பினும் , தற்காலத்திற்கு மிகவும் அவசியமான சமய ஒற்றுமைக்கு இக்கோவில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி மக்களை நல்வழிப்படுத்தி வருகிறது. என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை . தமிழ்நாட்டில் சங்கரநாராயணருக்கு தனிக்கோவிலாக அமைந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடும் ஒரே திருக்கோவிலும் இதுவேயாகும்.

    இத்தலம் தென் கிழக்கு தமிழக மக்களின் ஒரு பிரார்த்தனை தலம் ஆகும். பாம்பு , தேள் போன்ற சிறு விஷ ஜந்துக்களிலிருந்து நமக்கு துன்பம் வராதிருக்க பிராணிகளின் வெள்ளியிலான உருவங்களை வாங்கி உண்டியலில் செலுத்துவர். இங்கு கிடைக்கும் புற்று மண்ணைக் கரைத்துப் பூசினால் தோல் வியாதிகள் நீங்குவது யாவரும் அறிந்ததே. இத்தலத்திற்கு வந்து நாகசுனையில் மூழ்கி முறையாக வழிபடுவோர் குட்டம் , குன்மம் முதலிய தீராத நோய்களிலிருந்து விடுபட்டு நலம் பெறுகின்றனர்.

    சங்கரன்கோயில்,  திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தாலுகா தலைநகராக விளங்கி வருகிறது. திருநெல்வேலியிலிருந்து 45 கிலோமீட்டர் தூரத்திலும் , கழுகுமலையிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும், இராசபாளையத்திலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. நல்ல போக்குவரத்து வசதியுள்ள தார் சாலைகளும்,  புகைவண்டி நிலையமும் அமைந்துள்ளன. இது சென்னை – செங்கோட்டை .இருப்புப் பாதையில் அமைந்துள்ளது. 

    Google Maps link – https://goo.gl/maps/8zP6Kpjn5LxoCedG8

  • தென் திருப்பதி… அழகிய நம்பிராயர் கோயில்

    நெல்லை மாவட்ட கோயில்கள் – 2

    திருப்பதி தெரியும். தென் திருப்பதி தெரியுமா? நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், திருக்குறுங்குடி என்ற இடத்தில் அமைந்துள்ள அழகிய நம்பிராயர் கோயில்தான் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    திருப்பதியைப் போன்றே இயற்கை எழில் கொஞ்சும் அழகிய வனப்பகுதியில் அமைந்துள்ள நம்பிராயர் கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தையது. 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

    கோடை காலங்களில்  ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற புகழ்பெற்ற மலைப் பகுதிகளுக்குச் செல்ல பலரும் விரும்புவார்கள். அந்த வகையில் ஆன்மீக ரீதியாகவும், இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதி என்ற வகையிலும் நம்பி மலையில் உள்ள அழகிய நம்பியை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் இந்த கோவிலுக்கு யாத்திரையாக வரும் பக்தர்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளனர்.

    திருநெல்வேலியில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் பயணித்தால் திருக்குறுங்குடியை அடுத்து மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக நம்பி மலைக் கோவில் உள்ளது. மனத்துக்கு ரம்மியமாகவும், பார்வைக்குக் குளிர்ச்சியாகவும் அடர்ந்த மரங்கள் நிறைந்த பாதையில் சுமார் 2 கிலோ மீட்டர் சென்றதும், மலைப்பாதை தொடங்குகிறது. 

    மேடும், பள்ளமுமாக இந்த மலைப் பாதை பார்ப்பதற்குக் கடினமான தோற்றம் கொண்டிருந்தாலும் மலைக் காடுகளின் பசுமை வாசனையும், குளுமையான மூலிகைக் காற்றும் மலையேறுபவர்களுக்குக் கொஞ்சமும் கூட சோர்வையோ, களைப்பையோ அளிப்பதில்லை. அந்த அளவுக்கு இயற்கை எழில் சூழ்ந்த அந்தப் பிரதேசம் நம்மைப் புத்துணர்ச்சி கொள்ளச் செய்கிறது.


    மலைக்கோவிலில் இருக்கும் திருமலை நம்பியை தரிசிக்க பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஆர்வம் காட்டுவது வழக்கம். அனால், பெரியவர்கள்  மலை மீது ஏறிச் செல்ல சிரமப்படுவதால் அவர்களுக்காகவே கீழ் கோவிலில் இருந்து மலைக்கோவில் செல்ல ஜீப் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக 8 பேர் வரை பயணம் செல்லலாம். நபர் ஒருவருக்கு 100 ரூபாய் வீதம் வசூலிக்கப்படும். சிலர் மலையடிவாரம் வரை சென்று காட்டுபாதையில் நடந்தே மலை நம்பி கோவிலுக்கு செல்கிறார்கள்.

    பசுமை விரித்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை முகட்டில் மேகக் கூட்டங்களின் நடுவில் நம்பினோரைக் கைவிடேன் என கருணையின் பிறப்பிடமாக திருமலைநம்பி வீற்றிருக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலை திருமங்கையாழ்வார் கட்டியதாகக் கூறப்படுகிறது.

    ராமாயண காலத்தில் ராமரும், லட்சுமணரும், வானர படைகளுடன், ராவணனுடன் போர் புரிவதற்காக தங்கிய இடம் இந்த மலை என்றும் கூறப்படுகிறது. இந்த மலையில் இறைவனின் பாதச்சுவடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    `வைணவ தலத்தின் குரு` என்று அழைக்கப்படும் ராமானுஜரின் மந்திர உபதேசம் நம்பி கோவிலில் நடைபெற்றுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. திருமங்கையாழ்வார் இந்த கோவில் அமைந்த இடத்தில்தான் முக்தி நிலையை அடைந்துள்ளார். அதாவது அவரது ஜீவசமாதி இங்கு அமைந்துள்ளது. 

    நம்பிராயர் கோவிலுக்கு முன்பாக காவல் தெய்வமாக கால பைரவர் சன்னதி உள்ளது. பைரவருக்கு பூச்சட்டையும், வடை மாலையும் சாத்தி பிரார்த்தனை செய்யப்படுகிறது. 

    நம்பி மலைக்கு வரும் பயணிகள் இரண்டு வகையான பலனை அடைகின்றனர். மலை மேல் உள்ள நம்பியாண்டவரை தரிசித்தும், அருவியில் குளித்த ஆனந்தத்தையும் பெறுகின்றனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் இந்தப் பகுதிகள் இருந்தாலும் தேவையற்ற கெடுபிடிகள் இல்லாத சுற்றுலாத் தலமாகவே உள்ளது. மலையில் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் மூலிகை கலந்து வருவதால் சோப்பு, ஷாம்பு போன்றவற்றைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் திருக்குறுங்குடிக்கு பேருந்து வசதிகள் உள்ளன. அதுபோலவே அருகிலுள்ள வள்ளியூர், களக்காடு ஆகிய ஊர்களில் தங்கும் விடுதிகளும் உள்ளன.

    Google Maps link – https://goo.gl/maps/j1aFx3TTwSTTubCQA

  • ஏழிசை இசைக்கும் கல் தூண்கள்

    நெல்லை மாவட்ட கோயில்கள்1

    பக்தி மணம் கமழும்  திருநெல்வேலி மாவட்டத்தில் ஏராளமான கோயில்கள் உள்ளன. பிரசித்தி பெற்ற சைவ, வைணவ திருத்தலங்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் உண்டு. இவற்றில் நெல்லை மாவட்டம் என்கிற பெயருக்குக் காரணமாக அமைந்த நெல்லையப்பர் கோயில் தனிச் சிறப்புப் பெற்றது.

    ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தெற்கு வடக்காக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.

    கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ- வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
    இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது.

    ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில்தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.


    மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது மட்டுமின்றி மிக அகலமானதும் கூட. இந்த பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்று உள்ளது. இதுபோல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் இருக்கிறது.

    இந்தக் கோயிலில் 2 கோபுரங்கள் உள்ளன. இந்தக் கோபுரங்கள் ஆகம விதிப்படி ராமபாண்டியன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. கோயிலின் மத்தியில் அழகான நந்தவனம் அமைக்கப்பட்டு, அதன் நடுவில் நூறு தூண்களுடன் கூடிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. இது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட பெரியது என பலரும் கூறுகின்றனர்.  

    பிரசித்தி பெற்ற இந்தத் திருக்கோயில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.  
    நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவிலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயிலுக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் சிறப்பான போக்குவரத்து வசதிகள் உள்ளன.

    Google maps link //goo.gl/maps/LVxpCYS7PiGvPHc18 

  • பெருமாளின் திருமேனியே மலையாக விளங்கும் சிங்க பெருமாள் கோயில்

    திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சனிதசை, ராகுதசை நடப்பவர்களுக்கும் இத்தலம் பரிகாரத்தலமாக விளங்குகிறது சிங்க பெருமாள் கோயில். இந்த கோயில் நரசிம்மரின் பெயரால் சென்னை அருகே செங்கல்பட்டு செல்லும் வழியில் “சிங்க பெருமாள் கோவில்” அமைந்துள்ளது. 

    இக்கோவில் ஒரு குடவரைக் கோவிலாகும் பெருமாளின் திருமேனியே மலையாக விளங்குவதால் நாம் மலையைச்சுற்றி வலம் வர வேண்டும். பெருமாள் சங்கு சக்கரம் தாங்கி நான்கு கரங்களுடன் வலது காலை மடக்கி அமர்ந்த கோலத்தில் நெற்றிக்கண்ணுடன் பிரம்மாண்டமாக சேவை சாதிக்கின்றார். 

    ஆரத்தி காட்டும் போது திருமண்ணை விலக்கி, நெற்றிக்கண்ணை சேவை செய்து வைக்கும் போது அந்த காட்சி மெய் சிலிர்க்க வைப்பதாக இருக்கும். இத்தலம் பாடலாத்ரி என்றும் அழைக்கப்படுகின்றது. 

    பாடலம் என்றால் சிவப்பு அத்ரி என்றால் மலை எனவே இந்தக் குன்று பாடலாத்ரி என்றும் இம்மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் பாடலாத்ரி நரசிம்மர் என்றும் அழைக்கப்படுகின்றார். ஜாபாலி என்னும் முனிவர் பெருமாளை நரசிம்ம மூர்த்தியாக சேவிக்க வேண்டும் என்று இம்மலையில் தவம் செய்தார். அவரது தவத்திற்கிணங்கி பெருமாள் பிரதோஷ வேளையில் உக்ர நரசிம்மராக சிவந்த கண்களோடு பாடலாத்ரி மீது தரிசனம் தந்தார். 

    முனிவர் வேண்ட பின் அதே கோலத்தில் நாம் எல்லோரும் வழிபடுவதற்காக இத்தலத்தில் கோவில் கொண்டார். பிரணவகோடி விமானத்தின் கீழ் நரசிம்மர் சங்கு சக்கரம் ஏந்தி வலக்கரம் அபய ஹஸ்தமாகவும், இடக்கரத்தை தொடை மீது வைத்தும் பிரம்மாண்ட திருவுருவில் அருள்கிறார். வலது காலை தொங்கவிட்டு இடக்காலை மடித்த நிலையில் நெற்றிக்கண் ஒளிரும் அபூர்வ திருமேனி கொண்டவர் இவர். 

    இவருக்கு பிரதோஷ தினத்தன்று திருமஞ்சனம் நடைபெறுகின்றது. ஆண்டாள், லட்சுமி நரசிம்மர், ஆழ்வார்கள், இராமானுஜர் ஆகியோர்களுக்கு இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கிரிவலம் வரும் போது அரிய வகை அழிஞ்சல் மரத்தை பார்க்க முடியும். அதையும் தவறாமல் வழிபட வேண்டும். அம்மரத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு நெய் விளக்கேற்றி வழிபட திருமண வரம், மழலை வரம் இருக்கிறது. 

    பலர் இம்மரத்தில் தொட்டில் கட்டியிருப்பதைக் காணலாம். பெருமாள் திருமேனியே மலையாக விளங்குவதால் பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரது பாதங்களிலும், ரத சப்தமி தினத்தன்று நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படருகிறது. கடன் தொல்லை, வழக்குகளிலிருந்து விடுதலை, செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை விலக, இந்த நரசிம்மர் அருள்கிறார். திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சனிதசை, ராகுதசை நடப்பவர்களுக்கும் இத்தலம் பரிகாரத்தலமாக விளங்குகிறது. 

    நரசிம்ம ஜெயந்தி, ராமானுஜ ஜயந்தி, சித்ரா பவுர்ணமி, வைகாசி சுவாதி நட்சத்திர தினத்திற்கு முன்வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். ஆடிப்பூரம், ஆவணி பவித்ரோற்சவம், கிருஷ்ணஜயந்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் மணவாளமாமுனிகள் உற்சவம், கார்த்திகையில் திருக்கார்த்திகை, தை மாதசங்கராந்தியன்று ஆண்டாள் நீராட்டு உற்சவம், மார்கழியில் 5 நாட்கள் தெப்போற்சவம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் என ஆண்டு முழுவதும் விழாக்கோலம் காண்கின்றது இத்திருத்தலம் . 

    இவரிடம் தன் கோரிக்கை நிறைவேறினால் பானகம் கரைத்து ஆலய வலம் வரும் பக்தர்களுக்கு அளிப்பதாக வேண்டிக்கொண்டால், கட்டாயம் அந்த கோரிக்கை நிறைவேறிவிடும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.