Category: கோவில்கள்

கோவில்கள்

  • நாளுக்கு நாள் வளரும் அதிசய விநாயகர்!

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் வரசித்தி விநாயகர். இந்த விநாயகர் கிணற்றில் சுயம்புவாக தோன்றினார். வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது.

    இக்கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் இன்றளவும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆனால் கடவுள்களே தங்களை வெளிப்படுத்தி காட்டி, கோயில் கட்ட அற்புதங்களும் நடந்தது உண்டு. காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகரும் ஒரு திருவிளையாடல் மூலம் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தி, பிறகு கோயில் கட்ட வைத்தார்.

     

    விநாயகரின் மகிமை!

     

    விநாயகரின் மகிமையை அறிந்த ஊர் பொதுமக்கள். பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகரைச்சுற்றி சன்னதி எழுப்பினர். இன்றும் விநாயகரைசுற்றி ஈரம் கசிந்து கொண்டிருப்பதை சற்று கவனித்து பார்த்தால் தெரியும். அது தண்ணீர் மட்டுமல்ல, அவரது அளவிட முடியாத கருணையும்தான். இதை காணும்போது உள்ளம் உருகும், நெஞ்சம் நெகிழும்.

     பக்தர்களுக்கு பேரருள் புரியும் காணிப்பாக்கம் விநாயகர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறாராம். கொல்லபல்லி கிராமத்தை சேர்ந்த பெஜவாடா சித்தைய்யா என்பவர் ஒரு வெள்ளி கவசம் சுவாமிக்கு வழங்கினார். ஆனால் தொடர்ந்து விநாயகர் சிலை வளர்ந்து கொண்டு வருவதால் வெள்ளி கவசம் விநாயகர் சிலைக்கு பொருந்தவில்லையாம். இந்த அதிசயத்தால் பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர். 

     கோயில் அருகே மணிகண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது இங்கிருந்து ஒரு பாம்பு, தினமும் காணிப்பாக்கம் விநாயகரை வணங்கிச்செல்வதாக ஒரு நம்பிக்கை.

    பிரார்த்தனை!

    குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் ஸ்ரீவரசித்தி விநாயகரை வணங்கி சென்றால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. அவ்வாறு பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், கோயிலுக்கு வந்து பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் போன்ற நேர்த்திக்கடன்களை செய்கின்றனர்.

    இங்கு நாகர் சன்னதியும் இருக்கிறது. இவரை வணங்கினால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. கோயிலில் ஆஞ்சநேயர், நவகிரகங்களும் அருள்பாலிக்கின்றன.

     அதேபோல் தினமும் மாலை “சத்தியப்பிரமாணம்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்டு சத்தியப்பிரமாணம் செய்யும்போது, அவர்கள் பொய் கூறி இருந்தால் கட்டாயம் விநாயகர் உடனடியாக தண்டனை வழங்கி விடுவாராம். 

     இதனால் உடலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் நீங்க, வரசித்தி விநாயகரை மனமுருகி வழிபட்டால் குறைகள் நீங்கி நன்மை கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

     விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

  • கோவில் அதிசயங்கள்..!

    கோவில் அதிசயங்கள்..!

    அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.
    ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!
    அவைகளில் சில:
    1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். – நடராஜ கோயில்
    2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.
    3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.
    4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.
    5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.
    6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.
    7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.
    8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.
    9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.
    10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.
    11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர்சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.
    12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.
    13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.
    14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள்
    பெண்வடிவில் உள்ளது.
    15. மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு கோபுரங்கள் கிடையாது.
    16. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோமளவல்லி தாயாருக்கு படி தாண்டா பத்தினி என்ற பெயரும் உண்டு – பெருமாளோடு எக்காலத்திலும் வெளியே வராத காரணத்தால் அப்பெயர் பெற்றார்.

     

  • வேலே முருகர்!

     

    திர்வேலே மூலவராக விளங்கும் ஆலயம், சுவிட்சர்லாந்து நாட்டில் அமைந்த குமரன் கோவில், ஆல்ப்ஸ் மலைக்கும், ரைன் நதிக்கும் இடையே அமைந்த திருத்தலம், முருகனைத் தேடி வெள்ளை மயில் வந்து திருவிளையாடல் புரிந்த தலம், ஆன்மிகப் பணியோடு, சமுதாயப் பணியையும் இணைத்து செய்யும் பொது நலக்கோவில், சித்திரைத் தேர் கொண்ட ஆலயம், சுவிஸ் நாட்டு மக்களின் மனம் கவர்ந்த கோவில் என பல்வேறு பெருமைகளைக் கொண்ட ஆலயமாகத் திகழ்வது செங்காலன் கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில்.

    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதை சுவிட்சர்லாந்து நாட்டிலும் நிரூபித்திருக்கிறார் முருகப்பெருமான்.   ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில், ஜீவநதியான ரைன் நதிக் கரையோரம் எழுந்தருளியுள்ளார், ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி. சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா நாட்டின் எல்லையோர மாவட்டமாக விளங்குவது செங்காலன். இதில் சென்மார்க்கிறேத்தன் கிராமத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம். வேலும், மயிலும் பிரதானமாக விளங்கும் ஆலயம் இது. இவ்வாலயம் பல்வேறு சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.

    தாமாக வந்த வெள்ளை மயில் 

    கதிர்வேலாயுத சுவாமி ஆலயப் பகுதிக்கு கடந்த 2010–ம் ஆண்டு ஒரு வெள்ளைநிற மயில் ஒன்று தாமாகப் பறந்து வந்து சேர்ந்தது. அங்கே மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த தமிழ் இளைஞர்களுக்கு இது வியப்பாக இருந்தது. உடனே அருகில் இருந்த ஆலய நிர்வாகியிடம் இத்தகவலைக் கூறினர். அந்நாட்டு வனவிலங்கு சட்டப்படி, உடனே அவரும் இதனைக் காவல்    துறைக்குத் தெரிவித்தார். அத்தோடு தங்கள் ஆலய தெய்வமான       முருகப்பெருமானைப் பற்றியும், முருகனின் வாகனம் மேற்படி மயில் என்பதையும் எடுத்துக் கூறினார். அதனால் அவர்கள் எவராவது உரிமை கோரினால் திரும்பத் தந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், ஆலயத்தின் வசம் மயிலை காவல்துறையினர் ஒப்படைத்தனர். ஆண்டுகள் பல கடந்தும், இன்றுவரை எவரும் அந்த மயிலை உரிமை கோரவில்லை. அபூர்வ பறவையான வெள்ளை மயில், கந்த சஷ்டி நாளில்  இந்த ஆலயத்தைத் தேடி பறந்து வந்த நிகழ்வு அப்பகுதிவாழ் மக்களாலும், பக்தர்களாலும் இன்றும் வியப்பான செய்தியாகப் பேசப்படுகிறது. 

    வேலே முருகர்

    முருகப்பெருமானின் திருக்கோவில்களில் வேலுக்கும் முக்கியப் பங்குண்டு. முருகனின் அருவுருவத் திருக்கோலம் ‘வேல்’ ஆகும். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் இவ்வாலயத்தின் குறிப்பிடத்தக்க அம்சம், மூலவராக விளங்கும் முருகப்பெருமானின் வேலாயுதம். இந்த வேலினை மையமாக வைத்தே ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட பிறகு இதை நோக்கினால் முருகப்பெருமானே நேரில் காட்சி தருவது போலத் தோன்றுகிறது.

    ஆலய அமைப்பு

    இவ்வாலயம் சென்மார்க்கிறேத்தன் என்ற கிராமத்தில், தொழிற்சாலைப் பகுதியில் பிரமாண்ட தனிக் கட்டிடத்தில் அமைந்துள்ளது.  அயல்நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாட்டு கட்டிட பாணியில் அமைந்துவிட்டது போலும். எளிய நுழைவு வாசல், நுழைந்ததும், சில படிகள் ஏறினால் ஆலயம் நம்மை வரவேற்கிறது.

    வேல்கள் தாங்கிய கதவுகள் வழியே உள்ளே நுழைந்ததும், விநாயகப் பெருமான் காட்சி தருகிறார். அருகே எளிய கொடிமரம், மயில் மூலவரை தரிசித்த வண்ணம் காட்சி தருகின்றன. மூலவராக முருகப்பெருமானின் வேல் அழகுற அலங்கரிக்கப்பட்டு நமக்கு காட்சிதருகின்றது. இடது பின்புறம் விஷ்ணு துர்க்கை அழகுற வீற்றிருக்கிறாள். எதிரில் சண்டிகேசுவரர், பைரவர் காட்சி தருகின்றனர். அருகே அலங்கார மண்ட பத்தில் விநாயகர், வள்ளி–தெய்வானை சமேத முருகப்பெருமான் என அனைத்து வித உற்சவ மூர்த்திகளும் அழகுற வடிவமைக்கப்பட்டு காட்சியளிக்கின்றனர். மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகள் அனைத்துமே ஐம்பொன் சிலைகளால் அமைந்துள்ளது தனிச் சிறப்பு அம்சமாகும். 

    ஆண்டுதோறும் வைகாசி விசாக பட்சத்தை அடிப்படையாகக் கொண்டு, பன்னிரண்டு நாட்கள் பிரமோற்சவமும் வீதியுலாவும் நடைபெறுகிறது. விழாவில் முக்கிய அம்சமாக தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதற்கென  மரத்திலான பெரிய சித்திரைத்தேர் இலங்கையில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் காவடி எடுத்தல், பால் குடம், தீச்சட்டி, அலகு குத்துதல் என பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்    கணக்கில் பக்தர்கள் கூடுவது குறிப்பிடத்தக்கது.

    இது தவிர, தைப்பொங்கல், மாசி மகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற அனைத்து ஆலய விழாக்களும் சிறப்புடன் நடத்தப்படுகிறது. முருகப்பெருமானின் முக்கியத் திருவிழாவான தைப்பூசம், கந்தசஷ்டி விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.


    தரிசன நேரம்

    இவ்வாலயம் நாள்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், சிறப்பு நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும். 

    சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழ் மக்களிடம் இவ்வாலயம் சமயத்தையும், ஆன்மிகத்தையும் வளர்த்து மக்களை நெறிப்படுத்துகின்றது.  அத்துடன் தங்கள் தாய்நாட்டில் வாழும் ஆதரவற்ற சிறுவர்களுக்கும், போரினால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது.

    இதுமட்டுமின்றி, சென்னையில் ஏற்பட்ட வர்தா புயல் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட இவ்வாலயம் உதவிகள் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்து சமயத்தில் ஈடுபாடு கொண்ட சுவிஸ் நாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு திருமண வைபவங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன.

    தலவரலாறு

    2005–ம் ஆண்டில் சிறிய அளவில் தமிழர்கள் வழிபாடு செய்ய தொடங்கப்பட்ட இந்த ஆலயம், தனி ஆலயமாக மாற்றம் பெற்று 2007–ம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதன் பின் இப்பகுதியில் தமிழர்கள் பங்களிப்பும் அதிகமாகி வர, அவர்களின் வருகையும் கூடியது.  பக்தர் களின் வேண்டுதல்களை கதிர்வேலாயுதசுவாமி நிறைவேற்றித்தர, பக்தர்கள் வருகையும் அதிகரித்தவண்ணம் உள்ளது.  அயல்நாட்டினரும் இவ்வாலயத்தை வியப்புடன் தரிசித்துச் செல்கின்றனர்.

    சுவிட்சர்லாந்து  நாட்டின் கிழக்கு மாநிலம் செங்காலன். இதன் முக்கிய ஊராகத் திகழ்வது  சென்மார்க்கிறேத்தன். ஆல்ப்ஸ் மலைக்கும், ரைன் நதிக்கும் இடைப்பட்ட பகுதியில்   இயற்கை எழில் வாய்ந்த ஊரில் அமைந்துள்ள திருக்கோவில் இது.

    ஜுரிச்சிலிருந்து ஆஸ்திரியா செல்லும் ரெயில் வழித்தடத்தில், ஜுரிச்சின் மாநகரில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும், செங்காலன் மாநகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. அல்ரன்றைன் என்ற உள்நாட்டு விமான நிலையம் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆஸ்திரியா எல்லை 200 மீட்டர் தூரத்திலும், ஜெர்மனி எல்லையில் இருந்து 30 கி.மீ தொலைவிலும்  அமைந்துள்ளது.

  • சிங்கிரி குடியில் உள்ள நரசிம்மர்!

     

     

    திருமணத்தடை, கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கிரி குடியில் உள்ள நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.

    கடலூர் மாவட்டம் சிங்கிரி குடியில், 16 திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் நரசிம்மர் உக்கிரமாக அருள்பாலிக்கிறார். ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.

    “நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை’ என்னும் வாக்கிற்கு ஏற்ப, சரணடைந்த உடனேயே அருள்பாலிப்பவர் நரசிம்மர். ஐந்து நிலை, ஏழு கலசங்களுடன் மேற்கு பார்த்த ராஜகோபுரமும், மிகப்பெரிய கொடி மரமும் உள்ளது.

    வைகானஸ ஆகமப்படி இத்தலத்தில் பூஜை நடக்கிறது.

    மனநிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

    வேண்டுதல் நிறைவேற செவ்வாய்க் கிழமைகளில் நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.

    பிரகலாதனின் விருப்பப்படி நரசிம்மர், மூலஸ்தானத்தில் 16 திருக்கரங்களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் மிகப்பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.
    இரணியனை மேற்கு பார்த்து நின்று நரசிம்மர் வதம் செய்ததைக் குறிக்கும் வகையில், மேற்கு பார்த்த நிலையில் உள்ளார்.

    நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். வடக்கு நோக்கி சிறிய வடிவில் யோக நரசிம்மர், பாலநரசிம்மர் ஆகியோரும் உள்ளனர்.

    ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதை காண்பது அரிது. இவ்வகை அபூர்வ நரசிம்மர் தலங்கள் ராஜஸ்தானிலும், தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார்கள்.

    மற்ற நரசிம்மர் தலங்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் தலம் இது. உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பாவன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

  • மழையை தரும் “மிளகு பிள்ளையார்”

    திருநெல்வேலி மாவட்ட சேரன்மாதேவியில் அமைந்துள்ளது மிளகு பிள்ளையார் கோவில். இந்தக் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றைக் காண்போம்.

    கேரளத்தை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு தீராத வியாதி உண்டாயிற்று. மருந்தால் அது தீரவில்லை. ஒருநாள் அவனது கனவில், ‘மன்னா! நீ உன் உயரத்துக்கு ஒரு பொம்மை தயார் செய்து, அதனுள் துவரம் பருப்பு அளவுள்ள மாணிக்க கற்களை கொட்டி, உன் வியாதியை அதற்குள் இடம் மாற்றி, ஒரு பிராமணனுக்கு தானமாக கொடுத்து விடு. உன்னிடம் உள்ள அந்த வியாதி அந்த பிராமணனை சேர்ந்து விடும்’ என அசரீரி ஒலித்தது.

    அந்த அசரீரியை தெய்வத்தின் கட்டளையாக ஏற்ற மன்னன், ஒரு பொம்மையை செய்தான். ஆனால் அந்த பொம்மையை எந்த பிராமணனும் வாங்க முன்வரவில்லை. இந்த தகவலை கர்நாடகாவில் உள்ள பிரம்மசாரி பிராமண இளைஞன் ஒருவன் கேள்விப்பட்டான். இதனையடுத்து அவன் அங்கிருந்து புறப்பட்டு வந்து மன்னரிடம் இருந்து அந்த பொம்மையை வாங்கிக் கொண்டான்.

    பிரம்மசாரியின் கைக்கு வந்தவுடன் அந்த பொம்மை உயிர் பெற்றது. தனக்கு அந்த பிரம்மசாரி செய்திருந்த காயத்ரி மந்திரத்தின் பலனில் ஒரு பகுதியைக் கேட்டது. ‘அப்படி கொடுத்து விட்டால் வியாதி உன்னை அண்டாது’ என்றும் அந்த பொம்மை சொன்னது. இதனைக்கேட்ட அந்த பிரம்மசாரி பொம்மை கேட்டபடி காயத்ரி மந்திரத்தின் பலனின் ஒரு பகுதியை கொடுத்து விட்டான். ஆனால் கொடுத்த பின்னர் அவனது மனது துன்பம் அடைந்தது.

    ‘வியாதியால் அவதிப்படுவோம் என்ற பயத்தில், சுயநலம் கருதி தர்மத்துக்கு மாறாக காயத்ரி மந்திரத்தின் பலனை தானம் செய்து விட்டோமே’ என்று அவன் கலங்கினான். இதற்கு பிராயச்சித்த மாக தனக்கு கிடைத்த மதிப்பு மிக்க மாணிக்க கற்களை பொதுநலன் கருதி செல வழிப்பது என்று அவன் முடிவெடுத்தான். ‘என்ன நன்மை செய்யலாம்?’ என்பதில் குழப்பம் வரவே, பொதிகை மலையில் வசித்து வரும் அகத்திய முனிவரிடம் சென்று யோசனை கேட்பது என்று முடிவு செய்தான்.

    பிறகு பொதிகை மலை சென்று அகத்தியரை சந்தித்தான். அவனது பிரச்சினையை அறிந்து கொண்ட அகத்தியர், ‘நல்ல விஷயங்களிலேயே தலை சிறந்தது தண்ணீர் தானம் தான். நீ மலையில் இருந்து கீழே இறங்கி செல்லும்போது, வழியில் ஒரு பசுவை காண்பாய். அதன் வாலைப் பிடித்துக்கொண்டே செல். அது போகும் வழியை குறித்துக்கொள். அதன்படி கால்வாய் வெட்டு. பசு சாணம் போடும் இடத்தில் மதகு ஏற்படுத்து. அது கோமியம் பெய்யும் இடங்களில் மறுகால் ஏற்படுத்து. பசு படுக்கும் இடங் களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்து விடும். அங்கே கால்வாய் பணியை முடித்து மீதி தண்ணீர் அங்கே சேரும்படியாக ஒரு குளம் தோண்டு’ என்றார்.

    அந்த இளைஞன் பசுவை கண்ட இடம்தான் சேரன்மாதேவி. அகத்திய முனிவரே அந்த பசுவாக மாறி வந்து நின்றதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. பசு சென்ற பாதையில் மதகு, ஏரிகளை அமைத்தான் இளைஞன். கடைசியாக பிராஞ்சேரி என்ற ஊரில் பசு மறைந்து விட்டது. அங்கே மிகப்பெரிய ஏரியை தோண்டினான். இப்போதும் மழை வெள்ள காலங்களில் நீர் நிறைந்து காணப்படும் இந்த ஏரியை பார்த்தால், கடல் போல் காட்சியளிக்கும்.

    மக்களுக்காக நல்லது செய்பவர்கள், தங்கள் பெயரை விளம்பரப்படுத்துவதில்லை. அந்த இளைஞனின் பெயரும் கூட இன்றுவரை யாருக்கும் தெரியாது. அவனது மொழியின் பெயராலே அந்த கால்வாய்க்கு ‘கன்னடியன் கால்வாய்’ என்று பெயர் வைத்து விட்டனர். கன்னடத்தில் இருந்து வந்த ஒரு இளைஞன், மலையாள மன்னனிடம் உதவி பெற்று, தமிழ்நாட்டில் கால்வாய் தோண்டிக் கொடுத்திருக்கிறான்.

    அந்த இளைஞன் கால்வாய் வெட்டியதோடு நின்று விடவில்லை. அந்த கால்வாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவேண்டுமே என்று கவலைப்பட்டான். அவன் கவலைப்பட்டது போலவே, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மழையே இல்லை. கால்வாய் தண்ணீர் ஓடாமல், காய்ந்து போய் விட்டது.

    உடனே அவன் ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவரது உடலில் மிளகை அரைத்துத் தேய்த்து அபிஷேகம் செய்தான். அந்த அபிஷேக நீர், கால்வாய்க்குள் விழும்படி செய்தான். என்ன ஆச்சரியம்! உடனே மழை கொட்டி தீர்த்தது. இப்போதும் மழை இல்லாத காலங்களில் சேரன்மாதேவி பகுதி விவசாய சங்கத்தினர் இந்த வழிபாட்டை செய்கின்றனர்.

    அவன் பிரதிஷ்டை செய்த விநாயகரே ‘மிளகு பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகிறார்.

    மழை இல்லாத காலங்களில் இத்தலத்தில் வீற்றிருக்கும் விநாயகரது உடலில் மிளகை அரைத்துத் தேய்த்து அபிஷேகம் செய்து, அந்த புனித நீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தால் மழை வரும் என்பது ஐதீகம்.

    திருநெல்வேலியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சேரன்மாதேவி திருத்தலம்.

     

  • மரணபயம், மனச்சஞ்சலம் போக்கும் ஸ்ரீவாஞ்சியம்

     

    மரணபயம், மனச்சஞ்சலம் போக்கும் ஸ்ரீவாஞ்சியம்

     

    64 சுயம்பு லிங்கங்களில் ஒன்றான ஸ்ரீ வாஞ்சிநாதர்லிங்கம் இருக்கும் புன்னியத்தலமான ஸ்ரீவாஞ்சியம், சிவபெருமானே பார்வதி தேவியிடம் தமக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறியத் தலம் ஆகும். கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழித்தடத்தில் அச்சுத மங்களத்திலிருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது  ஸ்ரீ வாஞ்சியம். அனைத்து சிவாலயங்களிலும் பிரசித்து பெற்றதாக திகழும் திருவாஞ்சியம், பூலோக கைலாயம் என அழைக்கப்படுகிறது. தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் என்பதால் இது ஸ்ரீ வாஞ்சியம் எனப்படுகிறது.

    பெயரை சொன்னாலே முக்தி கிடைக்கும் என்று சொல்லப்படுகிற  ஸ்ரீவாஞ்சியத்தில் உலகிலேயே எம தர்மராஜனுக்காக தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் இங்குள்ள  குப்தகங்கையில் நீராடி ,பின் இடப்புறம் அக்னிமூலையில் தனிகோயில் கொண்டுள்ள எம தர்மராஜனை வணங்கி அதன் பின் தான் வாஞ்சி நாதனை வழிபடவேண்டும் என்கிறார்கள். நாள்தோறும் எமதர்ம ராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள் நடைபெறுகின்றன. மரணபயம், மனச்சஞ்சலம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும்.

     

                                                                            

    எமதர்மனே இங்கு ஷேத்திர பாலகராக இருப்பதால் ,கோயில் அருகில் யாராவது இறந்து விட்டாலும் கூட ,பிணத்தை எடுக்கும் வரை கோயிலில் நடைபெறும் பூஜைகள் நிறுத்தி வைக்கப்படாமல் தொடர்ந்து நடக்கிறது.

    தலத்தின் புராணக்கதை

    பிரளய காலத்தில் உலகம் அழிந்த போது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடிப் பார்க்கையில், காவிரிக் கரையில் கண்ட திருவாஞ்சியத்தின்  அழகில் மயங்கி லிங்க வடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டு விட்டனர் என்கிறது புராணம்.

     மேலும் ஒருமுறை கங்காதேவி சிவனிடம், மக்கள் அனைவரின் பாவங்களை சுமந்ததால் ,தனக்கு ஏற்பட்ட பாவத்தை எங்கனம் போக்குவது என்று கேட்க,  அதற்கு சிவன், உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்றார்.  அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது.

     

    ஸ்ரீவாஞ்சியத்தின் எண்ணிலடங்கா சிறப்புகள்

    ஒருவர் திருவாஞ்சியம் வந்து வழிபட பில்லி சூனியம் அறவே அகன்று தூய்மை பெற முடியம். கொலை,தற்கொலை போன்ற துர்மரணங்கள் ஏற்பட்ட வீட்டில் வசிப்பவர்கள் ஸ்ரீவாஞ்சியம் வந்து பஞ்சதானம் கொடுத்து வழிபட்டால் துர்மரணம் பெற்றவர்களின் ஆத்மாசாந்தி அடைந்து கர்மா விலகி நற்பயன் பெறவர்.

    இத்தலத்தின் சிவனின் முன் யோகபைரவராக அமர்ந்திருக்கம் பைரவரை வழிபட நரம்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கி நலன் பெறலாம். தீர்க்க முடியாத வழக்களில் சிறைபட்டவர்கள் இங்குள்ள பைரவரை வழிபட்டால் நீண்டகால வழக்குகள் உடைந்து நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஸ்ரீவாஞ்சியத்தில் அருள் பாலிக்கும் மங்கலாம்பிக்கையை வணங்க , மீண்டும் வாழ்க்கையில் ஒன்று சேர்வர்.

    ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலமாகவும்,காலசர்ப்பதோஷத்திற்கான தலமாகவும் விளங்குகிறது. சனிபகவான் அதிதேவதையான எமதர்மராஜா தனி சன்னதியில் எழுந்தருளியிருப்பதால் சனி சம்பந்தப்பட்ட தொல்லைகள்  உபாதைகள் நீங்கப் பெறலாம்.

     நம் இறுதி காலம் முடிந்தபின் ,நமது பிள்ளைகளால் செய்யப்பட வேண்டிய பிதுர் காரியங்களை இக்கோயிலில் முன்கூட்டி நாமே ‘ஆத்ம தர்ப்பணம்’ செய்து, முக்தி கிடைக்க வழி செய்துக்கொள்ளலாம்.

    இத்தலத்தில் இறந்தாலோ அல்லது ,இறந்தவர்களுக்கு இங்கு பிதுர் காரியம் செய்தாலோ  சிவனே அவர்களது காதில் பஞ்சாட்சர மந்திரம் கூறி தன்னுள் சேர்த்து கொள்வதாக ஐதீகம்.

    இவ்வளவு சிறப்புகளைக் கொண்டுள்ள ஸ்ரீவாஞ்சி திருத்தலம் வாழ்வில் நாம் ஒரு முறையாவது செல்ல வேண்டிய புண்ணிய தலமாகும்.

     

     

  • மரணபயம், மனச்சஞ்சலம் போக்கும் ஸ்ரீவாஞ்சியம்

     

    மரணபயம், மனச்சஞ்சலம் போக்கும் ஸ்ரீவாஞ்சியம்

     

    64 சுயம்பு லிங்கங்களில் ஒன்றான ஸ்ரீ வாஞ்சிநாதர்லிங்கம் இருக்கும் புன்னியத்தலமான ஸ்ரீவாஞ்சியம், சிவபெருமானே பார்வதி தேவியிடம் தமக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறியத் தலம் ஆகும். கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழித்தடத்தில் அச்சுத மங்களத்திலிருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது  ஸ்ரீ வாஞ்சியம். அனைத்து சிவாலயங்களிலும் பிரசித்து பெற்றதாக திகழும் திருவாஞ்சியம், பூலோக கைலாயம் என அழைக்கப்படுகிறது. தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் என்பதால் இது ஸ்ரீ வாஞ்சியம் எனப்படுகிறது.

    பெயரை சொன்னாலே முக்தி கிடைக்கும் என்று சொல்லப்படுகிற  ஸ்ரீவாஞ்சியத்தில் உலகிலேயே எம தர்மராஜனுக்காக தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் இங்குள்ள  குப்தகங்கையில் நீராடி ,பின் இடப்புறம் அக்னிமூலையில் தனிகோயில் கொண்டுள்ள எம தர்மராஜனை வணங்கி அதன் பின் தான் வாஞ்சி நாதனை வழிபடவேண்டும் என்கிறார்கள். நாள்தோறும் எமதர்ம ராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள் நடைபெறுகின்றன. மரணபயம், மனச்சஞ்சலம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும்.

     

                                                                            

    எமதர்மனே இங்கு ஷேத்திர பாலகராக இருப்பதால் ,கோயில் அருகில் யாராவது இறந்து விட்டாலும் கூட ,பிணத்தை எடுக்கும் வரை கோயிலில் நடைபெறும் பூஜைகள் நிறுத்தி வைக்கப்படாமல் தொடர்ந்து நடக்கிறது.

    தலத்தின் புராணக்கதை

    பிரளய காலத்தில் உலகம் அழிந்த போது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடிப் பார்க்கையில், காவிரிக் கரையில் கண்ட திருவாஞ்சியத்தின்  அழகில் மயங்கி லிங்க வடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டு விட்டனர் என்கிறது புராணம்.

     மேலும் ஒருமுறை கங்காதேவி சிவனிடம், மக்கள் அனைவரின் பாவங்களை சுமந்ததால் ,தனக்கு ஏற்பட்ட பாவத்தை எங்கனம் போக்குவது என்று கேட்க,  அதற்கு சிவன், உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்றார்.  அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது.

     

    ஸ்ரீவாஞ்சியத்தின் எண்ணிலடங்கா சிறப்புகள்

    ஒருவர் திருவாஞ்சியம் வந்து வழிபட பில்லி சூனியம் அறவே அகன்று தூய்மை பெற முடியம். கொலை,தற்கொலை போன்ற துர்மரணங்கள் ஏற்பட்ட வீட்டில் வசிப்பவர்கள் ஸ்ரீவாஞ்சியம் வந்து பஞ்சதானம் கொடுத்து வழிபட்டால் துர்மரணம் பெற்றவர்களின் ஆத்மாசாந்தி அடைந்து கர்மா விலகி நற்பயன் பெறவர்.

    இத்தலத்தின் சிவனின் முன் யோகபைரவராக அமர்ந்திருக்கம் பைரவரை வழிபட நரம்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கி நலன் பெறலாம். தீர்க்க முடியாத வழக்களில் சிறைபட்டவர்கள் இங்குள்ள பைரவரை வழிபட்டால் நீண்டகால வழக்குகள் உடைந்து நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஸ்ரீவாஞ்சியத்தில் அருள் பாலிக்கும் மங்கலாம்பிக்கையை வணங்க , மீண்டும் வாழ்க்கையில் ஒன்று சேர்வர்.

    ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலமாகவும்,காலசர்ப்பதோஷத்திற்கான தலமாகவும் விளங்குகிறது. சனிபகவான் அதிதேவதையான எமதர்மராஜா தனி சன்னதியில் எழுந்தருளியிருப்பதால் சனி சம்பந்தப்பட்ட தொல்லைகள்  உபாதைகள் நீங்கப் பெறலாம்.

     நம் இறுதி காலம் முடிந்தபின் ,நமது பிள்ளைகளால் செய்யப்பட வேண்டிய பிதுர் காரியங்களை இக்கோயிலில் முன்கூட்டி நாமே ‘ஆத்ம தர்ப்பணம்’ செய்து, முக்தி கிடைக்க வழி செய்துக்கொள்ளலாம்.

    இத்தலத்தில் இறந்தாலோ அல்லது ,இறந்தவர்களுக்கு இங்கு பிதுர் காரியம் செய்தாலோ  சிவனே அவர்களது காதில் பஞ்சாட்சர மந்திரம் கூறி தன்னுள் சேர்த்து கொள்வதாக ஐதீகம்.

    இவ்வளவு சிறப்புகளைக் கொண்டுள்ள ஸ்ரீவாஞ்சி திருத்தலம் வாழ்வில் நாம் ஒரு முறையாவது செல்ல வேண்டிய புண்ணிய தலமாகும்.

     

     

  • இந்தியாவின் மிகப்பெரிய திருவாரூர் தியாகராஜர் கோயில்

    365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய திருவாரூர் தியாகராஜர் கோயில்

    கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று.

    திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார்.

    *இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்*

    *தியாகராஜர்* என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள்.

    *தியாகராஜர்* கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது.

    *9 ராஜ கோபுரங்கள்*

    *80 விமானங்கள்*

    *12 பெரிய மதில்கள்*

    *13 மிகப்பெரிய மண்டபங்கள்*

    *15 தீர்த்தக்கிணறுகள்*

    *3 நந்தவனங்கள்*

    *3 பெரிய பிரகாரங்கள்*

    *365 லிங்கங்கள்* 
    (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்),

    *100க்கும் மேற்பட்ட சன்னதிகள்*

    *86 விநாயகர் சிலைகள்*

    *24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள்* என பிரமாண்டமாக விளங்குகிறது.

    இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர்.

    *திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள்*

    *3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு.*

    கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், 
    முன்காலத்தில்,

    திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

    *தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது.*

    *இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு*
    *(வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.*

    *அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த “லிங்கம்” வைக்கப்படும்*.

    *அதன் மேல் வெள்ளி குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும்*.

    *மற்ற நேரங்களில்*, 
    *பூட்டிய இந்த பெட்டி *தியாகராஜரின்* *வலதுபுறத்தில் இருக்கும்.*

    *திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.*

     

  • செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்

     

    செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் அளிக்கும் மிகச் சக்தி வாய்ந்த யந்திரத்தில் மந்திரப் பிரயோகம் செய்து வைத்தீஸ்வரன் கோவிலில் பிரதிஷ்டை செய்து வைத்தனர்.

    இந்தியாவில் கிரக, விஞ்ஞான பூர்வமான ஆகர்ஷண சக்திகள் வாய்ந்த பல ரகசியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் விந்திய மலை. இம்மலைத் தொடருக்கு தெற்கில் உள்ள பூமி, அங்கார பூமி என்றும், இங்கு செவ்வாயின் தோஷம் அதிக அளவில் ஏற்படாது என்றும் புராதன நூல்களில் கூறப்பட்டுள்ளன.

    இதற்கு காரணம், செவ்வாயின் சாரப்பாதையில் இருந்து விந்திய மலைக்கு தெற்கே உள்ள பூமிப்பகுதி, விலகி இருப்பதே. இந்த உண்மையை அறிந்த நமது பெரியோர்கள், செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் அளிக்கும் மிகச் சக்தி வாய்ந்த யந்திரத்தில் மந்திரப் பிரயோகம் செய்து வைத்தீஸ்வரன் கோவிலில் பிரதிஷ்டை செய்து வைத்தனர்.

    சீதையைத் தேடிக்கொண்டு, தம்பி லட்சுமணனுடன் வனவாசம் வந்த ஸ்ரீ ராமபிரான், சீதா தேவியை ராவணனிடம் இருந்து காப்பாற்றுவதற்காக போரிட்டு, உயிர் துறந்த ஜடாயுவுக்கு, திருப்புட்குழி என்ற புண்ணிய தலத்தில் அந்திம தகனக் கிரியைகளைத் தன் தொடை மேலேயே செய்துவிட்டு, அதற்குப்பின் செய்ய வேண்டிய தினச்சடங்குகளை வைத்தீஸ்வரன் கோவிலில் செய்ததால், மேலும் இத்திருத்தலம் புனிதம் பெற்று, புள்ளிருக்கும் வேளூர் எனச் சிறப்புப் பெயருடன் திகழலாயிற்று.

     

    மேலும், அங்காரகன் என்று புகழ்பெற்ற செவ்வாயும் இத்திருத்தலத்தில் ஒரு சமயம் தவம் செய்ததால், செவ்வாய் தோஷ பரிகார பலம் இந்த சேத்திரத்திற்கு மேலும் அதிகமாயிற்று.
    செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் திருக்கோவிலுக்கு வந்து, இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, இறைவனையும், வணங்கி, தனிச்சன்னதியில் எழுந்தருளி இருக்கும் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி, தரிசனம் செய்ய எத்தகைய கடுமையான செவ்வாய் தோஷமும் நீங்கும்.
    ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அவரின் உடலில் ரத்தத்தின் ஆற்றல் மிக குறைவாக இருக்கும். அல்லதுஅவரின் எலும்பு பகுதி ஏதாவது பாதிப்புகள் இருக்கும். 
    செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரர் கோயில். இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் அமைந்துள்ளது.
    வைத்தீஸ்வரர் கோவில் செவ்வாய்க்கு தோஷத்திருக்கு மட்டும் அல்லாது மருத்துவம் சார்ந்த நோய்களை போக்கும் கோவிலாகவும் உள்ளது. இங்கு மிகும் பிரத்சிதி பெற்றது நாடி ஜோதிடம். ஆதலால் இங்கு வரும் பக்தர்கள் நாடி ஜோதிடத்தை அதிகமாக நம்புகின்றனர். திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் தேவாரத்தை பாடி இறைவனை வழிபட்டனர்.

    ஈசன் மற்றும் அம்பிகை :
    ஈசனின் பெயர் வைத்தீஸ்வரர் பெருமாள், அம்பிகையின் பெயர் தையல்நாயகி. மேலும் இத்திருகோவிலில் உள்ள ஈச பெருமான் சுயம்புவாக எழுந்தருளி மூலிகை தைலத்துடன் உள்ளார். வைத்தீஸ்வரர் என்ற பெயருக்கு மருத்துவர் என்ற பெயரும் உண்டு.
    கோவில் வரலாறு :
    செவ்வாய் கிரகத்திருக்கு மிகவும் கொடுமையான “தொழுநோய்’’ வந்ததாகவும் அதனை போக்க சிவ பெருமானே தானாக தோன்றி அவருக்கு மருத்துவம் பார்த்து குணமடைந்ததால் செவ்வாய் ஈச பெருமானின் அருகில் உள்ளத்தால், இத்திருக்கோவில் செவ்வாய் கிரகத்திற்கு மிகவும் சிறப்பாக உள்ளது.

    ஒருமுறை ராவணன் சீதையை கானகத்தில் இருந்து தூக்கி கொண்டு போகும் பொது , ராவணனை தடுத்த சடாயுவை ராவணன் கொன்றான். அப்போது சடாயுவின் உடல் கீழ் விழுந்தது. அதனை கண்ட ராமன் மற்றும் அவர் தமையன் இலக்குமணன் உடலை கண்டு அந்த உடலுக்கு சிதை மூட்டி எரித்தனர். இந்த சிதை இக்குளத்திற்கு அருகாமையில் உள்ளது. ஆதலால் இக்குளம் “சடாயு குளம்’’ என்று அழைக்கப்படுகிறது.
    அது மட்டும் அல்லாது இந்த கோவிலின் மட்டற்ற பெருமை சித்தர்கள் பாற்கடலில் கலந்த அமிர்தத்தால் அபிஷேகம் சேயும் போது அந்த அம்ரிதம் சிதறி குளத்தில் விழுந்தது. ஆதலால் இத்திருக்குளம் “சிதர்கள் அம்ரிதா தீர்த்தம்’’ என்ற பெயர் பெற்றது.

     

    கோவிலின் சிறப்பம்சம் :
    இத்திருக்கோவிலில் உள்ள கோபுரங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்து உள்ளது. அது மட்டும் அல்லது கோவிலில் நவகிரஹம் ஈசனின் பின் உள்ளது. 
    இந்த திருகோயில் ஆனது பதினாறு தீர தளங்களில் ஒன்று. இந்த கோவிலில் அணைத்து நோய்களும் தீர்வாக உள்ளது. இங்கு வைத்தீஸ்வரர் கோவில் என்பதால் தன்வந்திரி உள்ளார்.
    மேலும் இத்திருகோவிலில் உடம்பில் கட்டிகள், முகபரூ மற்றும் நோய் ஆகியாவை இத்திருகோவிலில் தரும் எண்ணயை வாங்கி குணம் பெறுகின்றனர். வைத்தீஸ்வரர் கோவிலில் தான் தன்வந்திரி ஜீவ சமாதி ஆனார்.
    சுமார் ஐந்து ஆயிரம் நோய்களை குணபடுத்தும் வல்லமை பெற்றது இத்திருத்தலம். மேலும் இத்தலத்தில் கொடுக்கப்படும் திருசாந்து உருண்டை மிகும் பிரசித்தி பெற்றது. இந்த உருண்டை வேம்பு, சந்தனம் மற்றும் திருநீறு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது. இவை அனைத்தும் எம்பெருமானுக்கு ஆகும்.

    இத்தலத்தின் மற்றொரு சிறப்பு இந்த கோபுர வாசலில் ஆதி சிவன் உள்ளார். இந்த சிவனை வழிபட்டால் ஆயிரம் சிவனை வழிபட்டதற்கு சமம் என்பது ஆன்றோர் வாக்கு.

  • குழந்தை ரூபத்தில் அருள்பாலிக்கும் கிருஷ்ணர் கோவில்

     

    குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் குழந்தை ரூபத்தில் அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சிறப்பு வாய்ந்தவராக திகழ்கிறார்.

    கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலை போன்று குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் குழந்தை ரூபத்தில் அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சிறப்பு வாய்ந்தவராக திகழ்கிறார்.

    இக்கோவிலின் மூலஸ் தானத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக குழந்தை போலவே காட்சியளிப்பார். மறுநாள் உறியடி உற்சவம் நடக்கும். உற்சவர் ராஜகோபாலர் ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சி தருகிறார். மகா விஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த போது, அவரது குழந்தை பருவத்தில் கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்த போது ராஜகோபாலர் என்றும் அழைக்கப்பெற்றார். 

    இதன் அடிப்படையில் இங்கு மூலவராக கிருஷ்ணரையும், உற்சவராக ராஜ கோபாலரையும் வடித்துள்ளனர். மூலஸ்தானம் எதிரி லுள்ள கொடிமரத்தைச் சுற்றி லும், அஷ்டதிக் பாலகர் களின் உருவம் பொறிக்கப்பட் டிருக்கிறது. முன் மண்டபத்தில் கருடாழ்வார் இருக்கிறார். நம்மாழ்வார், பெரியாழ்வார், விஸ்வக்சேனர் ஒரே சன்னதியில் காட்சி தருகின்றனர். 

    பிரகாரத்திலுள்ள காவல் தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார். பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் இருக்கும் பகுதி ஆதித்தவர்ம மகாராஜா ஆட்சி காலத்தில் அவரது எல்கைக்கு உட்பட்டு இருந்தது. 

    குருவாயூரப்பனின் பக்தரான இவர், தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் குருவாயூரப்பனுக்கு கோவில் எழுப்ப ஆசைப்பட்டார். அவ்வேளையில் கிருஷ்ணர், கையில் வெண்ணெயுடன் குழந்தைக் கண்ணனாக அவனது கனவில் காட்சி தந்தார். குறிப்பிட்ட இடத்தில், தனக்கு கோவில் எழுப்பும்படி கூறினார். 

    அதன்படி கோவில் கட்டிய மன்னன், தான் கனவில் கண்ட வடிவத்திலான கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு நவநீத கிருஷ்ணர் (நவநீதம் என்றால் வெண்ணெய்) என திருநாமம் சூட்டினான். 

    இக்கோவிலில் தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 

    தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு செய்வித்து, பால்பாயாசம், உன்னியப்பம், பால், பழம், அரிசிப்பொரி, வெண்ணெய், அவல், சர்க்கரை படைக்கின்றனர். 

    சித்திரை பிரம்மோற்ஸவத்தின் நான்காம் நாளில் கிருஷ்ணர் கையில் வெண்ணெய் பானையுடன், வெண்ணெய்த்தாழி உற்சவம் காண்கிறார். இவ்விழாவின் ஏழாம் நாளில் இவர் இந்திர வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் விசேஷமாக நடக்கும். சித்ரா பவுர்ணமியன்று கிருஷ்ணர், இங்குள்ள பழையாற்றுக்கு சென்று ஆராட்டு வைபவம் காண்பார். 

    ஆடி கடைசி சனிக்கிழமையன்று( நாளை) இவருக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது. அன்று மூலஸ்தானம் முழுவதும் மலர்களால் நிரப்பி, சுவாமியின் முகம் மட்டுமே தெரியும்படியாக அலங்கரிப்பர். இவ்வேளை யில் சுவாமியை தரிசித்தால் மன நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.