பஞ்சபூதங்களில் ஆகாயத்தை தலமாக சிதம்பரம் நடராஜர் கோவில். ஆகாச தலமான இங்கு இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து ஆகாயமாக அருள்புரிகிறார். சிவனின் வழிபாட்டுப்பாடல்களின் ஆரம்பம் மற்றும் முடிவில் திருச்சிற்றம்பலம் என்று கூறப்படுவது இத்தலமே. எல்லாவற்றிற்கும் ஆரம்பம் மற்றும் முடிவு ஆகாயம் என்பதை உணர்த்தத்தான் திருச்சிற்றம்பலம் என்று கூறப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்றே குறிப்பிடப்படுகிறது. இங்கு இறைவன் உலக உயிர்கள் உய்யும்பொருட்டு தனது ஆனந்த தாண்டவத்தை பதஞ்சலி, வியாக்கிரதபாதர் மற்றும் உலக உயிர்களுக்கு காட்டி அருளுகிறார். பஞ்ச சபைகளில் இத்தலம் பொன்னம்பலம், கனக சபை என்று வழங்கப்படுகிறது. சைவ சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்ற சிறப்பினைப் பெற்றுள்ளது இத்தலம். இங்கு மகாவிஷ்ணு கோவிந்தராஜப் பெருமாள் என்கின்ற நாமத்துடன் புண்டரீகவள்ளித் தாயாருடன் அருள்புரிகிறார். பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்றாகும். இங்கு இறைவன் நடராசன் என்ற பெயரிலும் அம்மை சிவகாமி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர். பஞ்சபூதங்களின் வடிவில் உலகம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனான சிவபெருமானை போற்றி வணங்குவோம்.
Category: கோவில்கள்
கோவில்கள்
-
ஜோதி ரூபமாக உள்ள அண்ணாமலையார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது அண்ணாமலையார். பஞ்சபூதங்களில் நெருப்பினை இத்தலம் குறிக்கிறது. அக்னித்தலமான இங்கு இறைவன் தேயு லிங்கம் என்றழைக்கப்படுகிறார். இத்தலத்தில் இறைவன் ஜோதி ரூபமாக அடிமுடி தேடிச் சென்ற திருமால், பிரம்மா மற்றும் உலகத்தினருக்கு காட்சியளித்தார். இங்கு காணப்படும் மலையே இறைவனாகக் கருதப்படுகிறார். திருவண்ணாமலையில் காணப்படும் மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பௌர்ணமி தினங்களில் இத்தலத்தில் கிரிவலம் வருவது சிறப்பாகும். இத்தலத்தில் உள்ள சிவபெருமானை சைவ சமயக்குரவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் முருகனின் மீது இத்தலத்தில் பாடல்கள் பாடியுள்ளார். நினைத்தாலே முக்தி தரும் தலம் இது என்பது இதன் சிறப்பாகும். இங்கு நடைபெறும் கார்த்திகை தீபம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு இறைவன் அருணாச்சலேஸ்வரர், அண்ணாமலையார் என்ற பெயரிலும், அம்மை உண்ணாமலை என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.
-
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள ஜம்புலிங்கேஸ்வரர்
பஞ்சபூத தலத்தில் நீர் தலமாக அமைந்துள்ளது ஜம்புலிங்கேஸ்வரர் கோவில், திருச்சி அருகில் திருவானைக்காவல்அமைந்துள்ளது இக்கோயில். பஞ்சபூதங்களில் நீரினை இத்தலம் குறிக்கிறது. காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இத்தலலிங்கம் அப்பு லிங்கம் என்றழைக்கப்படுகிறது.
இத்தலத்தில் உமையம்மை நீரில் சிவலிங்கத்தை வடித்து வழிபாடு நடத்தினாள். யானையும், சிலந்தியும் இத்தல இறைவனை வழிபட்டு முறையே சிவகணத்தலைவனாகவும், கோச்செங்கட் சோழ அரசனாகவும் உயர்நிலை அடைந்தன.
ஜம்பு என்றழைக்கப்படும் வெண்நாவல் மரத்தின் அடியில் இத்தல இறைவன் அருள்புரிந்ததால் இவர் ஜம்புகேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
இங்குள்ள இறைவன் தரைமட்டத்திற்கு கீழே அமையப்பெற்று எப்போதும் நீர் சூழ்ந்தே காணப்படுகிறார். இத்தல இறைவனை உமையம்மை வழிபட்டதால் உச்சி கால வழிபாட்டின்போது அர்ச்சகர் சேலை அணிந்து இங்கு வழிபாடு நடத்துவது சிறப்பம்சமாகும்.
யானை ஏறி செல்ல முடியாத அளவில் கட்டப்பட்ட மாடக்கோவில்களில் இத்தலம் முதன்மையானது. சிவனடியார்கள் பலராலும் இத்தலம் பாடப்பெற்றுள்ளது. இத்தலத்தில் அம்மையும் அப்பனும் அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர் என்ற பெயர்களில் அருள்புரிகின்றனர். -
பஞ்சபூதத்தில் முதல் தளமான காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவில்
ஏகாம்பரேசுவரர் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூதங்களில் நிலம் எனப்படும் மண்ணினை இத்தலம் குறிக்கிறது. இங்குள்ள லிங்கம் பிருத்வி லிங்கம் என்றழைக்கப்படுகிறது. கம்பை ஆற்றின் கரையில் சுயம்புவாக எழுந்தருளிய இறைவனை உமையம்மை கண்டபோது ஆற்றில் ஏற்பட்ட வெள்ள மிகுதியால் இறைவனை இறுக அணைத்தாள். அதனால் இறைவனின் திருமேனி குழைந்து அதில் தழும்புகள் ஏற்பட்டன. அதனால் இத்தல இறைவன் தழுவக் குழைந்த நாதர் என்றழைக்கப்படுகிறார். இத்தலம் முக்திதரும் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சைவ சமயக் குரவர்களில் ஒருவரான சுந்தரர் பார்வையிழந்து தவித்தபோது இத்தல இறைவனின்மீது பாடல்கள் பாடியே இடக்கண் பார்வையைப் பெற்றார். சுயம்பு மூர்த்தியான இத்தல இறைவனுக்கு அபிசேகங்கள் நடைபெறுவதில்லை. இவ்விடம் திருக்குறிப்புத்தொண்டர், கழற்சிங்கர், ஐயடிகள் காடவர்கோன் போன்ற நாயன்மார்களின் அவதாரத் தலம் மற்றும் சாக்கிய நாயனாரின் முக்தித்தலமாகும். இத்தலத்தில் இறைவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற நாமத்துடனும், அம்மை ஏலவார்குழலி என்ற நாமத்திலும் அருள்புரிகிறார்கள்.
-
திருமுல்லைவாயிலில் பச்சைமலையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயில் மன்னாதீஸ்வரர், பச்சைமலையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான, தொன்மை வாய்ந்த திருமுல்லைவாயில் பச்சைமலையம்மன் சமேத மன்னாதீஸ்வரர் திருக்கோயிலில் பல லட்சம் செலவில் திருப்பணி வேலைகள் நிறைவடைந்தன.
இதையடுத்து இத்திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை விமர்சையாக நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு கடந்த 22-ஆம் தேதி திங்கள்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, 25-ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. சனிக்கிழமை காலை 8 மணிக்கு நான்காம் கால யாகபூஜையும், மாலை 4.30 மணிக்கு 5-ஆம் கால யாக பூஜையும் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. மகா பூர்ணாஹுதியும் அதைத் தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு, யாத்ரா தானமாக வந்து ராஜ கோபுரத்துக்கு 9.30 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு உற்சவமூர்த்தி பச்சைமலையம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். -
பகவான் கிருஷ்ணரின் சமாதி!
பூரி ஜகன்னாதர் ஆலயம்! ரத உற்சவத்துக்கு பெயர் பெற்ற இடம். ஆனால் நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் அங்கு உண்டு. அந்த கோவிலின் கருவறை தான் “கிருஷ்ணரின்” சமாதி. ஆம்! அவதார முடிவில், உடலை விட்டு நாராயணர் சென்ற பின்னர், மீதி இருந்த யாதவ குலத்தினர், அவர் உடலுக்கு மரியாதை செய்து, கங்கையில் விட்டனர். கிருஷ்ணரோ இயற்கையான “வாசி யோகி”. ஒரு வாசி யோகியின் உடலுக்கு அழிவு கிடையாது. அது எப்போதும் நல்ல அதம சக்தியை பரப்பிக்கொண்டிருக்கும். நடப்பவைகளை ஒருவர் கண்டு நின்றார். அனைவரும் சென்ற பின், கங்கை நதியிலிருந்து உடலை மீட்டு அவருக்கு ஒரு சமாதி கட்டி கோவிலாக்கினார். கருவறையை “சங்கு” ரூபத்தில் அமைத்தார். ஆம்! அவர் போகர் சித்தர்.
-
லிங்கத்தின் ஆவுடையில் நிற்கும் கோலத்தில் பெருமாள்!
சிவபெருமானின் ஆவுடையில் பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பது, சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற மாபெரும் தத்துவத்தை குறிக்கிறது. இது போன்ற அமைப்பை காண்பது மிகவும் அரிது. பொதுவாக பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக உற்சவ மூர்த்தி வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். ஆனால் இங்கு மட்டுமே மூலவருக்கு சொர்க்க வாசலுடன் சேர்த்து மூன்று வாசல்கள் உள்ளது. வைகுண்ட ஏகாதசி தினத்தில் இந்த சொர்க்க வாசல் திறக்கப்பட்டு மூலவரையே நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். வேலூர் மாவட்டத்தில் திருப்பாற்கடல் என்கிற ஊரில் , பிரசன்ன வெங்கடேச பெருமாள் என்கிற நாமத்துடன் பெருமாள் அருள் பாலிக்கிறார்.
-
கக்கிய பால் அரு மருந்தாகிறது!
க்ரவுஞ்சகிரி, செந்தூருக்கு அருகே இருபது கிலோமீட்டர் தூரத்தில் சுப்பிரமணியர் கோவில் கொண்ட மலை வாச ஸ்தலம். பெங்களூரிலிருந்து பெல்லாரி செல்லும் பாதையில் ஹோஸ்பெட் என்கிற ரயில் தடத்தில் இறங்கி செல்ல வேண்டும். முருகர் வள்ளி தேவயானை இன்றி தனித்து நிற்கும் இடம். அம்பாளுக்கு தனி சந்நிதி. மிக தனிமையான இடம். கனத்த அமைதியும், குளிர்ச்சியும் சூழ்ந்த இயற்கை பச்சை சூழ்ந்த மலை.
அதிசயம் – முருகர் காலடியில் ராமரும் லக்ஷ்மணரும் அமர்ந்திருக்கிறார்கள். சீதையை மீட்டவுடன் அவர்கள் இருவரும் இங்கு வந்து முருகருக்கு பூசை செய்ததாக சொல்கிறார்கள். ஒருகாலம் வரை பெண்களுக்கு இங்கு அனுமதி கிடையாதாம். அதனால், ராமர் வந்த காலத்தில் சீதையை கோயிலுக்கு வெளியே இருக்க சொல்லிவிட்டு அனுமனை காவலுக்கு வைத்துவிட்டு உள்ளே வந்தார்களாம். இன்றும் முருகருக்கு நடக்கிற பூசைகள், ராமர் லக்ஷ்மணருக்கு தான் சென்று செருகிரதாம்.
முருகருக்கும் பார்வதி அம்மைக்கும் வாக்கு வாதம் வரவே, பார்வதி தேவி முருகனிடம், தான் கொடுத்த தாய் பால் தானே முருகனை வளர்த்தது என்று கேட்க, அதுவும் எனக்கு வேண்டாம் என்று அத்தனையையும் கக்கி விடுவதாக ஐதீகம். அது மலையில் உறையவே, வெள்ளை கல்லாக மாறுகிறது. இந்த வெள்ளை கல், பால் நிறத்தில், தொட்டால் நல்ல நறுமண விபூதி போல் உள்ளது. முருகர் சன்னதி முன் ஒரு தட்டில் வைத்திருக்கிறார்கள். கேட்டால், எடுத்துக்கொள்ள சொல்கிறார்கள். அரு மருந்தாக பயன் படுகிறது. மிக அபூர்வமாக இருக்கிறது.
-
நரசிம்மர் உலாவரும் தலம்
கோவிந்தனின் இருப்பிடம் திருமலை. இம்மலை தொடராக அமைந்துள்ளது. இது ஒரு காட்சிக்கு ஆதிசேஷன் தலை தூக்கி, உடல் நீட்டி படுத்து இருப்பது போல் காணக்கிடக்கிறது. இவ்வுடம்பில் தலைப் பகுதியில் திருமலையும், உடற் பகுதியில் அஹோபிலமும், வால் பகுதியில் ஸ்ரீசைலமும் கொண்டு இருப்பது காணக் கண் கொள்ளாக் காட்சி.
அஹோபிலம்”, பகவன் நாராயணன் ஹிரண்ய கசிபுவை முக்தியடயச்செய்ய அவதாரம் எடுத்த தலம். தேவர்கள் பெருமாளை காணும்பொழுது “ஹிரண்ய கசிபுவின்” வதம் எப்படி நடந்தது என்று கேட்க்க, பெருமாளும் நாடகத்தை நடத்திக்காட்டி அருளும் தலம். இன்றும் நரசிம்மர் அரூபமாகவும், ரூபமாகவும் வலம் வரும் தலம். மிகவே அமானுஷ்யமான புண்ய ஸ்தலம். நரசிம்மருக்கு ஒன்பது கோயில்கள் உள்ளது. மலைமேல் தனியாக செல்லக்கூடாது. கொடிய மிருகங்கள் வாழும் இடம்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள இத்தலத்தின் பெருமையை எங்கேயும் காண முடியாது. கருணாமூர்த்தியான எம்பெருமான் நாம சக்கரவர்த்தியான பிரஹல்லாதனுக்கு அருள் பாலித்தவர். இங்கே காணப்படும் இப்பெருமானின் நவ கோலங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. பக்தன் பிரஹல்லாதனுக்கு அருள் பாலிக்க ஹிரண்யகசிபுவைத் தன் தொடையில் வைத்து வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி மாலையாகப் போட்டுக்கொண்டவர், ஜுவாலா நரசிம்மர்.
பின்னர் கோபம் தணிந்து, கையில் படிந்த ரத்தக் கறையை அருகில் உள்ள ஓடை நீரில் சுத்தம் செய்துகொள்கிறார். அந்த ஓடையில் அவர் கை வைத்த இடம் என்று சுட்டப்படும் இடம் சென்னிறமாகக் காணப்படுவதைப் பார்க்க முடிகிறது. அந்த இடத்தினை ஒட்டிக் கொஞ்சம் முன்னும் பின்னும் பார்த்தால் ஒடை சாதாரணமாகத் தெரிகிறது. இந்த அற்புதத்தை இன்றும் காணலாம்.
இந்த நரசிம்மருக்குப் பானகம் நிவேதனம் செய்தால் கடன் தொல்லை தீரும் என பக்தர்கள் கருதுகிறார்கள். இங்கு தாயாருடன் இருக்கும் பெருமாள் மாலோலன். செஞ்சுலக்ஷ்மி என்ற தாயாரின் அம்சமான ஆதிவாசிப் பெண்ணை மணந்ததால் பெருமாளின் திருநாமம் மாலோலன். இவ்வூரின் பெயரே மந்திரம். அஹோபிலம் மஹாபலம் என்று சொன்னால் உடல், மனம் வாக்கு, புத்தி ஆகியவற்றுக்கு மஹாசக்தி. மாலோலன் மனத்துக்கு இனியன். -
பாதாள அஞ்சனக்கல்லில் செய்யப்பட்ட கிருஷ்ணர்!
குருவாயூர் திருக்கோயிலில் தரிசனம் தரும் மூலவர் ஸ்ரீகுருவாயூரப்பனின் விக்கிரகம் தனிச் சிறப்பு கொண்டதாகும். மிகவும் புனிதமானது எனக் கருதப்படும் பாதாள அஞ்சனம் எனும் கல்லில் மூலவர் விக்கிரகம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த விக்கிரகத்தை ஒரு காலத்தில் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் வைத்து வழிபட்டு வந்தார். அதன் பிறகு அந்த விக்கிரகத்தை பிரம்மதேவனிடம் அளித்தார். பிறகு பிரம்மனிடம் இருந்து கைமாறி காசியாபா பிரஜாபதி, வசுதேவர் ஆகியோரிடம் போனது. கடைசியில் வசுதேவரிடம் இருந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே இந்த விக்கிரகம் வந்து சேர்ந்தது. துவாரகையில் தன் மாளிகையில் இதை வைத்து வணங்கி வந்தார் ஸ்ரீகிருஷ்ணர். கிருஷ்ண அவதாரம் பூர்த்தியாக வேண்டிய வேளை வந்தது. அதற்கு முன்னதாகத் தன் பக்தரான உத்தவரிடம், ‘இன்னும் ஏழு நாட்களில் துவாரகையைக் கடல் கொள்ள இருக்கிறது. அந்த வெள்ளத்தில் இந்தக் கிருஷ்ண விக்கிரகம் மிதக்கும். அதை குரு பகவான் உதவியுடன் பக்தர்கள் வணங்கத்தக்க புனிதமான ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்’ என்றார் கிருஷ்ண பகவான். அடுத்த ஒரு சில தினங்களில், பகவானின் வாக்குப்படி பெரிய பிரளயம் ஒன்று துவாரகையைத் தாக்கியது. அந்த வெள்ளத்தில் மிதந்து வந்த விக்கிரகம் ஸ்ரீகிருஷ்ணரின் வாக்குப்படி குரு பகவானிடம் போய்ச் சேர்ந்தது. இதை பிரதிஷ்டை செய்வதற்காக குருவும் அவரது முதன்மை சிஷ்யனான வாயுவும் சேர்ந்து ஒரு நல்ல இடத்தைத் தேடி அலைந்தார்கள். இறுதியில் அவர்கள் கேரள தேசத்தை அடைந்தார்கள். அங்கே பரசுராமரை சந்தித்தனர். இந்த விக்கிரகம் பிரதிஷ்டை ஆக வேண்டிய இடம் இதுதான் என்று பரசுராமரே இருவரையும் கூட்டிக் கொண்டு போய் ஓரிடத்தைக் காண்பித்தார். பச்சைப்பசேல் என்று அழகாகக் காட்சி தரும் அந்த இடத்தின் அருகே சிவபெருமான் பன்னெடுங் காலமாக தவம் இருந்து வந்தார். அந்த இடத்தில் விக்கிரகம் பிரதிஷ்டை ஆனது. குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை ஆனதால் இந்த க்ஷேத்திரம் பின்னாளில் ‘குருவாயூர்’ ஆயிற்று. தென் துவாரகை எனவும் போற்றப்படுகிறது.