Category: தொடர்கள்

தொடர்கள்

  • குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ…சோம வழிபாடு!

    வாரங்களில் திங்கட்கிழமையை குறிக்கும் சொல்லுக்கு சோமவாரம் என்று பெயர். இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது பெருஞ் சிறப்புக்குரியது. சோம என்பதற்கு பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்.

    சாபத்தின் காரணமாக நோயில் விழுந்த சந்திரன், தன் சாபமும், நோயும் நீங்க சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான். அதன் பயனாக அவன் நோய் நீங்கப்பெற்றான். மேலும் நவக்கிரகங்களில் ஒருவராகும் வாய்ப்பையும் பெற்றான். அவன் பெயரில் உருவானதே சோமவார விரதமாகும்.

    இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், துன்பங்கள், பாவங்கள் விலகுவதுடன், நல்ல வாழ்க்கைத் துணையையும் பெறுவார்கள். இந்து சமய திருமணங்களில் அருந்ததி பார்ப்பது என்று ஒரு நிகழ்வு உண்டு. கற்புக்கரசியான அந்த அருந்ததி தேவியை வசிஷ்ட முனிவர் தன் வாழ்க்கைத் துணைவியாக பெற்றது, சோமவார விரதத்தின் வாயிலாகத்தான். எனவே பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து நல்ல வாழ்க்கைத் துணையை அடையலாம்.

    இந்த நல்ல நாளில் சிவபெருமான் நாமத்தை உச்சரித்து மாலை வேளையில் சிவாலயம் சென்று சிவனை தரிசித்தால். குடும்ப பிரச்சனைகள் தீர்ந்து மனதில் சந்தோஷம் நிலவும். சவாலயம் செல்ல இயலாதவர்கள். வீட்டிலேயே சிவப்பெருமான் படத்திற்கு பூஜை செய்து வணங்கினால். சிவனின் பூரண ஆசிர்வாதம் கிட்டும்.

  • சஷ்டி விரதம்…அனுஷ்டிக்கும் முறை!

    சஷ்டி தினத்தில் முருகப்பெருமானின் அருளைப் பெற “சஷ்டி விரதம்” அனுஷ்டிக்கும் முறையையும், அதன் பலன்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

    இந்த சஷ்டி தினத்தன்று காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு வீடு முழுவதுமோ அல்லது வீட்டின் பூஜை அறையை மட்டுமோ சுத்தம் செய்ய வேண்டும், பின்பு பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீபமேற்றி, தூபங்கள் காட்டி, பால், பழம் நிவேதனம் வைக்க வேண்டும்.காலையிலிருந்து உணவேதும் அருந்தாமல் அப்பூஜையறையில் அமர்ந்து “கந்த சஷ்டி கவசத்தையோ” வேறு ஏதேனும் முருகனின் மந்திரங்களையோ நாள் முழுவதுமோ அல்லது உங்களால் முடிந்த வரை ஜெபிக்க வேண்டும். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள். ஓம் முருகா என்று மனதிற்குள் ஜெபித்தவாறு தங்கள் வேலையில் ஈடுபடலாம்.

    இந்த சஷ்டி விரத நாட்களில் புலால் உணவுகளையோ, போதை வஸ்துக்களையோ விரதமிருப்பவர் உண்ணக்கூடாது. மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இந்த சஷ்டி விரதத்தை உணவருந்தாமலும், அப்படியில்லையெனில் ஒன்று அல்லது இரண்டு வேளை உணவு உட்கொண்டு மேற்கொள்ளலாம். வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மூன்று வேளை உணவு உட்கொண்டு இவ்விரதத்தை மேற்கொள்ளலாம்.

    சஷ்டி தினத்தன்று குழந்தையில்லாப் பெண்கள் விரதமிருப்பதால், அவர்களின் உடலின் குறைகள் நீங்கி முருகப்பெருமானின் அருளால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் ஆரோகியம் மேம்படும். மேலும் இந்த விரதத்தை தொடர்ந்து மேற்கொள்பவர்களுக்கு எல்லா செல்வமும், எல்லாவற்றிலும் வெற்றியடையும் யோகமும் வாய்க்கும்.

  • ஏகாங்கம்… துவியாங்கம்… செய்யும் முறைகள்!

    இறைவனை ஐந்து முறைகளில் நமஸ்காரம் செய்யலாம் அவை ஏகாங்கம், துவியாங்கம், திரியாங்கம், பஞ்சாங்கம், அஷ்டாங்கம் ஆகியவையாகும்.

    ஏகாங்கம் தலையை மட்டும் தாழ்த்தி வணங்குதல்

    துவியாங்கம் வலக்கையை மட்டும் குவித்து தலையில் வைத்து வணங்குதல்

    திரியாங்கம் தலையின் மீது இரண்டு கைகளையும் குவித்து வைத்து வணங்குதல்

    பஞ்சாங்கம் தலை 2 கைகள் முழங்கால்கள் ஆக ஐந்தும் தரையில் பொருந்தும்படி வணங்குதல் (இந்த நமஸ்காரம் பெண்களுக்கானதாகும்)

    அஷ்டாங்கம் தலை 2 கைகள் 2 கால்கள், மோவாய் 2 தோள்கள் ஆகிய எட்டும் தரையில் படும்படி வணங்குதல் (இவை பெண்கள் செய்யக்கூடாது)

  • திருப்பதி – கும்பாபிஷேகம் கோலகலமாக நடைபெற்றது!

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் கோலகலமாக நடைபெற்றது.இந்த கும்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

     இந்த நிகழ்வையொட்டி சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. யாக சாலையின் மூலவர் மற்றும் கோயிலில் உள்ள இதர சன்னதிகளான வரதராஜ சுவாமி, யோகநரசிம்மர், ராமானுஜர், வகுலமாதா சன்னதியில் உள்ள மூலவர்களின் ஜீவ சக்திகள் கும்பத்திற்கு கொண்டு வரப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜைகள் நடந்தன.

    பின்னர் மூலவர் சன்னதிக்கு மேல் உள்ள ஆனந்த நிலையம் மற்றும் இதர சன்னதிகளின் கோபுரங்களுக்கு மராமத்து பணிகள், தங்க கொடிமரம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று கருவறைக்கு மேல் உள்ள ஆனந்த நிலையம், ராஜகோபுரம் மற்றும் இதர சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  • சாய் பாபா அளித்த உறுதிமொழிகள்!

    இன்றளவும் ஷீரடி சாய்பாபாவின் பக்தர்கள் பெருகிக்கொண்டேயிருப்பதன் காரணம் அவர் தன் பக்தர்களுக்கு அளித்த உறுதி மொழிகள் தான். அவற்றை காண்போம்

    ஷீரடிக்கு வந்து ஷீரடி மண்ணை வணங்குபவர்களுக்கு எந்த விதமான ஆபத்தும் உண்டாகாது.

    என் சமாதியின் படி ஏறுபவனுக்கு, அவனின் அனைத்து துக்கங்களையும் போக்கிவிடுவேன்.

    எனது உடல் இந்தப் பூவுலகில் இருந்து மறைந்தாலும், துன்பம் என்று துயரப்படும் பக்தன் தன் மனதால் நினைத்தால் போதும் ஓடி வந்து அவன் துன்பம் களைவேன்.

    திடமான பக்தி, உறுதியான நம்பிக்கை, பிரிபூரண விசுவாசத்துடன் இருக்கும் பக்தனின் ஆசையை என் சமாதி பூர்த்தி செய்யும்.

    நான் உயிருடன் இருக்கிறேன். அதை நீங்கள் உங்களுக்கு ஏற்படும் அனுபவங்கள் மூலம் கண்டிப்பாக உணர முடியும். இதை நீங்கள் சத்தியமாக உணர்ந்து கொள்ள முடியும். என்று பாபா கூறினார்.

     

     

  • கோவில் பிரசாதத்தின் தத்துவம்!

    கோயிலுக்குக் கொண்டு செல்லப்படும் எல்லாப் பொருட்களும் வழிபாடு முடிந்து இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றன. நிவேதனம் செய்தவுடன் அந்தப் பொருட்கள் பிரசாதம் என்ற புனித நிலையை அடைகின்றன. அதுபோல எத்தகைய மாசுக்கள் படிந்த மனிதனும் தன்னை மனப்பூர்வமாக இறைவனுக்கு ஒப்படைத்து விட்டால் புனிதனாகி விடலாம் என்பதையே பிரசாதம் குறிக்கிறது.

    கோயில்களில் அபிஷேக ஆராதணை முடிந்தபிறகு 16 வகை உபசாரங்கள் செய்யப்படுகின்றன. பொதுவாக வீட்டிற்கு வரும் விருந்தினரை நாம் உபசரிக்கிறோம். அவர்களுக்கு வேண்டியதைத் தந்து மரியாதை செலுத்துகிறோம். நமது உபசரிப்புக்கு மகிழ்ந்து அவர்கள் நம்மை வாழ்த்திவட்டுச் செல்கின்றனர். இந்த அடிப்படையில்தான் இறைவனுக்கு 16 வகையில் உபசாரங்கள் செய்யப்படுகின்றன. நமது உபசாரங்களுக்கு மகிழ்ந்து இறைவன் அருள்புரிகிறான்.

  • இறைவனை பூஜிப்பதால்…கிடைக்கும் பலன்கள்!

    பூஜை செய்யும்போது பல்வேறு உபசாரங்களை இறைவனுக்குச் செய்கிறோம். இப்படிச் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை காண்போம்

    அபிஷேகம் செய்தால் பாவம் அகலும்

    பீட பூஜை செய்தால் சாம்ராஜ்யம் கிடைக்கும்.

    சந்தனம் சாத்துவதால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

    புஷ்பம் சமர்ப்பித்தால் சௌக்கியம் தரும்.

    தூபம் காட்டுவதால் நல்ல குணங்கள் கிடைக்கும்.

    தீபம் காட்டுவதால் உடல் ஒளியைத் தரும்.

    நைவேத்தியம் மகா போகங்களைக் கொடுக்கும்.

    தாம்பூலம் சமர்ப்பித்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

    நமஸ்காரம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்.

    ஜபம் செய்தால் அஷ்ட ஐஸ்வரியங்கள் கிடைக்கும்.

    ஹோமம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும்.

    அன்னதானம் செய்தால் எல்லா தெய்வங்களையும் திருப்திப்படுத்தும்.

  • பக்தர்களை காக்கும் திரிசூலம்!

    சிவபெருமானும் பார்வதி தேவியும் திரிசூலம் வைத்திருப்பார்கள். இந்த ஆயுதம் இவர்களது எல்லையற்ற பேராற்றலைக் காட்டுகிறது. இது பக்தர்களைக் காப்பாற்றும் வகையில் செயல்படும். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை உணர்த்தும் புற அடையாளமாக திரிசூலம் விளங்குகிறது. திரிசூலத்தின் ஒரு முனை ஆசைகளைத் தூண்டுவதாகவும் மறுமுனை அதை செயல்படுத்துவதாகவும், இன்னொரு முனை இந்தச் செயலைச் செய்யலாமா என்ற ஞானத்தைத் தருவதாகவும் அமைந்துள்ளது.

    பார்வதிதேவி கையில் ஆயுதம் வைத்திருந்தாலும், அவளது மீனாட்சி போன்ற சில அவதாரங்களின் கையில் ஆயுதம் இல்லை. இவை அனுக்கிரக சக்தியைக் குறிக்கும். நமக்குப் பயம் ஏற்பட்டால் ஆயுதமேந்திய தெய்வங்களையும், பிற கோரிக்கைகளுக்காக அனுக்கிரஹ தெய்வங்களையும் வணங்கலாம் என்பது ஐதீகம்.

  • ராமன்…அனுமனுக்கு கூறிய விளக்கம்!

    ராமதாசர் ராமாயணத்தை எழுதும்போது தன்னுடைய சீடர்களுக்கும் கதையைச் சொல்வார். ராமாயணம் எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் அனுமன் மறைவாக வந்து அமர்வார் என்பது ஐதீகம். ஒரு முறை அனுமன் ராமதாசரின் அருகே அமர்ந்து கதையைக் கேட்டார்.

    அனுமன் அசோகவனத்தை அடைந்து வெள்ளை நிற பூக்களைப் பார்த்தார் என ராமதாசர் சீடர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். மறைந்திருந்த அனுமானுக்குக் கோபம் வந்துவிட்டது. அவர், ராமதாசரின் முன்னால தோன்றி. “நான் சிவப்புப் பூக்களை அல்லவா பார்த்தேன். நீங்கள் தவறாக எழுதியருக்கிறீர்கள். அதைத் திருத்துங்கள்” என்றார். ராமதாசர் மறுத்துவிட்டார். இந்த விவகாரம் ராமபிரானிடம் சென்றது. அவர் அனுமானிடம். “ஆஞ்சநேயா! நீ பார்த்த பூக்கள் வெள்ளைதான். ஆனால், உன் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தமையால் அவை உனக்கு சிவப்பாய்த் தோன்றின” என விளக்கினார்.

    நாம் இந்த உலகை எந்த நோக்குடன் பார்க்கிறமோ, அப்படியே அது நமக்குத் தோன்றும் என்பது இந்தக் கதையின் கருத்தாக அமைந்துள்ளது!

  • நேர்த்திக்கடன்…பரிகாரங்கள் வித்யாசம்!

    பலனை அனுபவித்தபின் அதற்குப் பிரதிபலனாக வேண்டியிருந்தபடி இறைவனுக்கு நன்றியைச் செலுத்துவது நேர்த்திக் கடனாகும். இந்தக் கடனை சொல்லியபடி சரிவரச் செய்து முடிக்காவிட்டால் சோதனைகள், பாதிப்புகள் ஏற்படும் என்பர்

    பரிகாரம் என்பதோ சோதனைகள், பாதிப்புகள், தடைகள் ஏற்பட்டுவரும்போது அவற்றை நிவர்த்திப்பதற்காகவும், எடுத்த காரியங்களில் வெற்றி வாகை சூடுவதற்காகவும், நினைத்த காரியங்கள் தங்குதடையின்றி நடந்து நன்கு ஈடேறுவதற்காகவும் செய்யப்பெறும் பூஜைகள், சடங்குகள், யாகங்கள், கழிப்புகள், மந்திரங்கள், பலிகள், விரதங்கள் போன்றவற்றைச் செய்வதாகும். பரிகாரங்கள் சாமிக்கு மட்டுமல்ல ஆவிகள், தேவதைகள், துர்தேவதைகள் போன்றவற்றிற்கும் செய்யப்பெறும், அதாவது, சுருக்கமாகச் சொன்னால்…

    திருப்தியடைந்தபின் செய்வது நேர்த்திக் கடன், திருப்தியடைய வேண்டிச் செய்வது பரிகாரமாகும். பொதுவாக இரண்டுமே நம் காரியம் நடக்க நடத்தப்பெறும் ‘பேரங்கள்’ என்று கூடக் கூறுவர்…ஆனால்…இரண்டிலுமே முறைப்படி நடக்காவிடில் பாதிப்புகள் ஏற்படலாம்.