திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மார்ச் 11-ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 11-ஆம் தேதி காலை விக்னேஷ்வர பூஜை, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் ஆகியவை நடைபெறுகின்றன. காலை 6.45மணியில் இருந்து 8.15 மணிக்குள் காப்பு கட்டப்பட்டு பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. கோயில் ஊழியர்கள், ஊர் பிரமுகர்கள் பூக்களை தட்டுகள், கூடைகளில் எடுத்து, ஊர்வலமாக சென்று அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் செய்கின்றனர். வெளியூர், வெளி மாவட்ட பக்தர்கள் அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் செய்ய உள்ளனர்.
இந்த தேவஸ்தான பூச்சொரிதல் விழா முதல் வார பூச்சொரிதல் விழாவாகும். அன்றைய தினம் அம்மன் உலக நன்மைக்காக பச்சை பட்டினி விரதத்தை தொடங்குவார். அதேபோல், பக்தர்களும் மஞ்சள் ஆடை உடுத்தி விரதத்தை தொடங்குவார்கள். பங்குனி மாதம் கடைசி வார ஞாயிற்றுக்கிழமை வரை விரத்தை கடைபிடிப்பார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 4-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறவுள்ளது.
Category: பரிகாரங்கள்
பரிகாரங்கள்
-
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா…
-
விளக்குகளை இந்த நாட்களில் தேய்த்தால் ஏற்படும் தீமைகள்
தீபத்தினை வழிபடுவதற்கு என்று சில வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தெய்வீகமான குத்து விளக்கின் அடிப்பாகத்தில், ஸ்ரீ பிரம்மாவும், அதன் நடுப் பகுதியான தண்டு பாகத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவும், விளக்கின் மேல் பாகத்தில், ஸ்ரீ சிவபெருமானும் உறைவதாகச் சொல்லப் படுகிறது.
விளக்கில்லாத கோயிலில் ஏதாவது ஒரு திசையில் பஞ்சுத் திரி போட்டுத் தீபம் ஏற்றினால் சூரிய பகவானின் பூரண அருள் கிடைக்கும். இது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்பெற வேண்டிய ஒன்று.
குத்து விளக்கில், அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரும் இன்னும் சில சக்திகளும் குடிகொண்டு உள்ளார்கள் என்றும் போற்றப் படுவதால், குத்து விளக்கு, கடவுளின் அம்சமாகவே கருதப்படுகிறது.
விளக்கினை, உபயோகப்படுத்திய பின்னர், அதில் அழுக்கும், பிசுக்கும் ஏறி இருக்கும்.நான்கு நாட்களுக்குப் பிறகாவது சுத்தம் செய்ய வேண்டாமா? விளக்கினை தேய்த்து சுத்தம் செய்ய சில குறிப்பிட்ட நாட்களே உகந்தவை ஆகும்.
திங்கள் நடு ராத்திரி முதல் புதன் நடுராத்திரி வரை, குபேர தன தாட்சாயணி மற்றும் குககுரு தன தாட்சாயணியும் குடி கொண்டிருப்பதால், இந்த நாட்களில் குத்து விளக்கினைத் தேய்ப்பதால், இந்த சக்திகள் விலகி விடும். வெள்ளி அன்று தேய்த்தால் குபேர சங்கநித யட்சணி விலகி விடும்.ஆகையால், ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில்தான் விளக்கினை சுத்தம் செய்ய வேண்டும்.
ஞாயிறு அன்று சுத்தம் செய்து விளக்கினை ஏற்றினால், கண் சம்பந்தப் பட்ட நோய்கள் அகலும். திங்கள் அன்று சுத்தம் செய்து விளக்கினை ஏற்றினால், மன சஞ்சலங்கள் நீங்கும்.வியாழன் அன்று சுத்தம் செய்து விளக்கினை ஏற்றினால், குரு கடாட்சம் கிட்டும். சனி அன்று சுத்தம் செய்து விளக்கினை ஏற்றினால், வாகன விபத்துக்களில் இருந்து விடுபடலாம்.
-
பூஜை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை….
வீட்டில் பூஜை செய்யும் போது சிலருக்குப் பல குழப்பங்கள் ஏற்படுவதுண்டு. வெற்றிலையை எப்படி வைக்க வேண்டும்? எந்த பழம் எந்த தெய்வத்திற்கு உகந்தது? பூஜையை எப்படி ஆரம்பிக்க வேண்டும்? எந்தப் பூ கொண்டு ஸ்வாமிக்கு அர்ச்சனைச் செய்வது எனப் பல சந்தேகங்கள் ஏற்படும். வெற்றிலைக்கு நுணியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியம் இருக்க வேண்டும். வெற்றிலைபாக்கில் நுண்ணாம்பு இருக்கக் கூடாது. அவல்பொறி, கடலை மற்றும் கல்கண்டு நிவேதனமாகப் படைக்கலாம். பச்சரிசியில் சாதம் செய்து தான் கடவுளுக்குப் படைக்க வேண்டும். மேலும், நாகப்பழம், மாதுளை, கொய்யா, வாழைப்பழம், நெல்லி, இளந்தை, விளாம்பழம், புளியம்பழம், மாம்பழம் ஆகிய பழங்கள் பூஜைக்கு ஏற்றவையாகும். வாழையில் நாட்டுப்பழம் நல்லது. குடுமி தேங்காயை சீறாக உடைத்து பிறகு குடுமியைப் பிரிக்க வேண்டும். அழுகிய தேங்காய் இருந்தால், அதனை மாற்றி வேறு தேங்காயை உடைக்கலாம். கோணலான, வழுக்கையான தேங்காய் இருக்கக் கூடாது. வழிப்பாட்டிற்கு முன்பாக சாம்பிராணி புகை போடுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சாம்பிராணி வாசம் கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல் கொண்டது. கோலமிட்டு, விக்ரகங்களைச் சரியாக அமைத்துக்கொண்டு, விளக்கேற்றி, ஊதுவத்தி ஏற்றி அர்ச்சனை செய்து அதன்பின் கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். விநாயகரை துளசியால் பூஜிப்பது தவறு. பெருமாளுக்கு அர்ச்சதையால் பூஜிப்பதும் தவறு. சிவபெருமானுக்கு தாழம் பூ ஆகாது. திருமகளுக்கு தும்பை பூ ஆகாது. பவளமல்லி சரஸ்வதிக்கும், அம்பிகைக்கு அருகம்புல்லும் பூஜைக்கு உகந்தது அல்ல. வில்வம், கொன்றை, தும்பை, வெள்ளேருக்கு, ஊமத்தை சிவனுக்கு உரியது. காளியம்மன், துர்கை, முருகனுக்கு அரளி பூக்கள் உகந்தவை. அருகம்புல், மல்லி, சாமந்தி, நீலப்பூ, ரோஜா, பன்னீர் ரோஜா, சங்குப்பூ, தாமரை, மரிகொழுந்து, சம்பங்கி, துளசி, விரிச்சிப்பூ ஆகியவை பூஜைக்கான மலர்கள் என்று ஆன்றோர்களால் கூறப்படுகிறது. சாமந்தி போன்ற மனமில்லாத மலர்கள் பூஜைக்கு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஒருசிலர் கூறுகிறார்கள். ஆனால், அலங்காரத்திற்குப் பயன்படுத்தலாம். அர்ச்சிக்கும் போது முழு மலரால் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும். பூவின் இதழ்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் தவறாகும். காய்ந்துபோன மற்றும் அழுகிப்போன, வாடிப்போன, பூச்சி கடித்த பூக்களைப் பயன்படுத்த தெய்வ குற்றமாகும். இவையே பூஜை அறையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் ஆகும்.
-
யார் இந்த யார் இந்த வாஸ்து புருஷன் ?
வீடு, கட்டிடங்கள், கோவில் கட்டும் போது வாஸ்து பார்க்கிறார்கள். யார் இந்த வாஸ்து புருஷன் தெரியுமா?
அந்தகாசுரன் என்பவனை சிவன் வதம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தி பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பசியால் வாடிய பூதத்திடம், “இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்,” என்று கூறினர்.
மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் செய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும். -
ராகு காலத்தில் துர்கையை வழிபடுவது ஏன்?
செவ்வாயன்றும், வெள்ளியன்றும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால துர்க்கை வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ராகுவிற்கும் துர்க்கை வழிபாட்டிற்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது.ராகு கிரகத்தின் அதிதேவதை துர்க்கை, அதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு கால வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். ராகுவுக்கு உடலில்தான் விஷம் இருக்கிறதேயன்றி, வாலில் அமிர்தம் இருக்கிறது.ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் மறையும் அந்திநேரத்திற்கு முன்பு, ராகுவின் வால் பாகம் அமிர்தமாக இருக்கும்.அதாவது ஞாயிறன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் துர்க்கையை வழிபட்டால் கோரிய பிராத்தனைகள் நிறைவேறும் என்பது ஐதீகம். நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிணி தீர வேண்டுமானால், ஞாயிறு மாலை 4.30 – 6.00 ராகு கால வேளையில், துர்க்கை தனித்திருக்கும் ஆலயத்தில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்றவேண்டும். அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கிய வாறு விளக்கு இருக்க வேண்டும்.
-
துண்பங்களை போக்கும் துளசி
மகா விஷ்ணுவின் மனைவியான, செல்வத்தை அளித்தரும் திருமகளின் வடிவமாக வணங்கப்படுகிறது துளசி. தூய்மையின் மறு உருவமாக விளங்குகிறது துளசி. பல இடங்களில் விஷ்ணு பக்தர்களால் விஷ்ணுப்ரியா என்ற நாமத்துடன் துளசி பூஜைகள் நடைபெற்று வருவதே, துளசியின் பெருமையைச் சொல்லும். மரணத்தைக் கூட தள்ளிப்போட வைக்கும் சக்தி துளசிக்கு உண்டு என்கிறது புராணங்கள். பூலோக வாழ்விற்குத் தேவையான செல்வங்களைப் பெற வீடுகளில் துளசியை வைத்து தூப, தீபங்கள் காட்டி வழிபாடு செய்வது நம் மரபு. துளசியை வளர்ப்பதன் மூலம் தெய்வ அருள் மட்டுமல்ல, வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. பெருமாள் தலங்களில் இடம் பிடித்திருக்கும் துளசி, மூல முதற்கடவுளாக விளங்கும் விநாயகப்பெருமானுக்கும் அர்ச்சனைக்குரியதாகிறது. துளசி அர்ச்சனை செய்பவர்களுக்கு, நுண்ணறிவு பலன் கிட்டும். ஒரு துளசி தளத்தில் 33 கோடி தேவர்களும், பன்னிரு சூரியர்களும், அஷ்ட வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கின்றனர். அதன் நுனிப்பகுதியில் பிரம்மனும், நடுவில் மகாவிஷ்ணுவும், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரீ, பார்வதி ஆகியோரும் வசிக்கின்றனர். துளசியை வளர்த்து வழிபடுபவதால் ஆயுள் பலம், புகழ், செல்வம், குழந்தைப்பேறு ஆகியன கிட்டும். துளசி காஷ்டம் என்ற மணிமாலையைக் கழுத்தில் அணிபவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் விலகும்; மற்ற பாபங்களும் அகன்று விடும். அமாவாசை அன்று யாக்ஞவல்கியரின் மனையாளான காத்யாயினி சக்தியை துளசியால் வழிபட்டால், பிரிந்த தம்பதியர் மீண்டும் இணையும் பாக்கியம் கிடைக்கும்.
-
திருப்பதியில் உங்கள் வேண்டுதல் நிறைவேற….
திருமலை திருப்பதியில் வடக்குதுவாரம் என்பதற்கு பதிலாக ஏகாதசி, துவாதசி இரண்டு நாட்களுக்கு மட்டும் வைகுண்ட பிரதட்சணம் நடைபெறுகிறது. அதாவது 12 ம் நூற்றாண்டில் ஆனந்த நிலையம் விரவுபடுத்துவதற்காக, கர்ப்பாலயத்தை சுற்றிவரும் பாதை அகலப்படுத்தப்பட்டது. அந்த பழைய குறுகலான பாதையே வைகுண்ட பிரதட்சணமாக, இந்த இருநாட்கள் மட்டும் திறந்து விடப்படுகிறது. மற்றநாட்களில் நாம் கோயிலை சுற்றிவரும் பாதையில் ஆனந்த நிலைய விமானத்தில் வடக்குமுகமாக விமான வேங்கடேஸ்வர சாமி எழுந்தருளியிருக்கிறார்.கூடவே, பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார் , வருடத்தின் 365 நாளும் இவரை தரிசிக்கலாம், இது வைகுண்ட ஏகாதசியின் பலனை கொடுக்கும் என்பது ஆகமம்.
பரமபதநாதர் (வண்ண கட்டமிடப்பட்டிருப்பது) அருகில் வெள்ளி தோரணத்தில் காட்சி தருபவர்தான் விமான வெங்கடேஸ்வரர். ஆனந்த நிலைய விமானத்தில் பரமபதநாதர் என்பது வைகுண்டத்தில் பாற்கடலில் மஹாவிஷ்ணு கோலம் ஆதிசேஷனின் மேல் வலதுகால் மடித்து, இடதுகால் பூமியை தொட்டுஇருக்கும் இந்த திருக்கோலம்தான் பரமபதநாதர் எனப்படுகிறது. இது பிரம்மா முதலானவர்களுக்குக்கூட கிடைக்காத தரிசனம் பரமபதநாதர் எனபது இந்த தரிசனத்தை பக்தர்கள் ஆனந்த நிலைய விமானத்தில் எப்போதும் தரிசிக்கலாம். “..உள்ளே, சாமிய நாம கூட்டத்துல சரியா பார்த்து வேண்டுதல்கள சொல்லமுடியாத காரணத்துனால, கோபுரத்துல அதே கோலத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர் அமைக்கப்பட்டிருக்காரு..,இவருகிட்ட உங்களோட வேண்டுதல்கள மனசார சொல்லிட்டு வாங்க..அது அப்படியே மூலவர்கிட்ட சொன்னமாதிரி..நிச்சயம் நல்ல பலன் தரும்..” -
சந்திரகிரகணம்… பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்
ஜனவரி 31 ஆம் தேதி அதாவது தை மாதம் 18 ஆம் நாள் புதன் கிழமை பெளர்ணமி தினத்தன்று சந்திரகிரகணம் நடைபெறுகிறதது. பூசம் நட்சத்திரத்தில், ஆயில்யம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் கடகம் இராசியில் கன்னியா லக்கினத்தில் சந்திர கிரகணம் ஆரம்பம் ஆகி முடிவடைகிறது. ஜனவரி 31ஆம் தேரி மாலை 5.16 க்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகிறது. இரவு மணி 6.58 க்கு மத்திய காலமாக இருக்கும், இரவு 8.40 க்கு சந்திர கிரகண முடிவடைகிறது. சந்திரகிரகணம் புதன்கிழமை அன்று வருவதால், புதன் கிழமை பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. அதே போல, புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
-
துன்பங்களை போக்கும் புரட்டாசி…
தமிழ் மாதங்களில் 6–வது மாதமாக புரட்டாசி வருகிறது. இது கன்னி ராசிக்குரிய மாதமாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது வழக்கம். ‘உப’ என்றால் ‘சமீபம்’ என்று பொருள். ‘வாசம்’ என்றால் ‘வசிப்பது’ என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
புரட்டாசி மாதம் மகாளய பட்சம் வருகிறது. மகாளய பட்சத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுக் கிறோம். புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்தது. தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வேங்கடேசன் அவதாரம். பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார். ஏழுமலையான் சீனிவாசன் என்ற பெயரில் பூமிக்கு வந்த கதை தெய்வாம்சம் மிக்கது.
சனிக்கிழமை விரதம்
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரியனவற்றை சேகரித்து வைத்து, ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து, மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனை வருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.
இந்த புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். எந்த விரதமானாலும் பகலில் தூங்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு போடக்கூடாது. மது, மாமிசத்தை விலக்கி பாவம் செய்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து உயிர்களிடத்தும் கருணை உள்ளவர்களாக இருக்க வேண்டும். -
குரு பெயர்ச்சி 2017: 12 ராசிகளுக்கான பலன், பரிகாரங்கள்
ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் அடக்கம். இவற்றை நவ நாயகர்கள் என்று அழைக்கப்படும் ஒன்பது கிரகங்கள் ஆளுகின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அம்சம், ஒவ்வொரு காரகத்துவம், ஆதிக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சில சுப கிரகங்களாகவும் சில பாவ கிரகங்களாகவும் உள்ளன.
ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பிற்கேற்ப ஒருவருக்கு நல்லதை செய்கின்ற கிரகம், மற்றொருவருக்கு தீமை செய்யும். ஒருவருக்கு நல்லதை செய்கின்ற தசை மற்றொருவருக்கு தீமை செய்யும்.
இது அந்தந்த ஜாதக அமைப்பின்படி உள்ள அம்சமாகும். அந்த வகையில் சுப கிரகம் என்று சொல்லக்கூடிய, சகல தோஷங்களையும் போக்கக்கூடிய, விசேஷ பார்வை பலம்பெற்ற குரு பகவான் இந்த ஆண்டு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசியில் இடம்பெயர்ந்துள்ளார்.
இந்த குரு பெயர்ச்சியால் குருபகவான் 12 ராசிகாரர்களுக்கு யாருக்கு நல்ல பலன்களை தருகிறார். யார் யார் பரிகாரம் செய்ய வேண்டும் குருவின் செயல்கள் என்ன, குரு பலம், குரு பார்வை, குரு யோகம் உங்களுக்கு உள்ளதா என்பதைப் பார்க்கலாம்.
இந்த குரு பெயர்ச்சி கும்பம், மேஷம், மிதுனம் ஆகிய ராசி காரர்களுக்கு யோகம் தரக்கூடியது. காரணம் குருபகவானின் பார்வை இம்முறை இந்த மூன்று ராசிகளின் மீது படுகிறது.தனுசு, கன்னி, மத்திம பலன்களை அடைகின்றனர். கன்னி ராசிக்கு இரண்டாம் இடத்திலும், தனுசு ராசிக்கு 11ஆம் இடத்திலும் குருபகவான் அமர்கிறார். எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் பரிகாரம் செய்தால் பலன் கிட்டும் என்பது நிச்சயம்.
மேஷம் – யோகம்
குரு பகவான் துலாம் ராசியில் அமர்ந்துள்ளார். அஷ்டமத்து சனி, ஆறாம் இடத்து குரு பகவால் அல்லல்பட்ட மேஷ ராசிகாரர்களுக்கு இனி நல்ல காலம் பிறக்கிறது. 2018 அக்டோபர் 3 வரை பலன்கள் அருள்கிறார் குருபகவான்.
மேஷம் 7வது ஸ்தானம். குரு பகவான் 7ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். குரு பகவான் ராசிக்கு 2, 5, 7, 9,11ல் அமரும் போது நல்லது நடக்கும்.
கணவன்மனைவி உறவு நல்லது நடக்கும். விட்டுக்கொடுப்பார்கள். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். பகை விலகும். நட்புகள் மலரும். உங்களின் ராசிக்கு 3வது ஸ்தானத்தை 9ஆம் பார்வையாக பார்க்கிறார். இளைய சகோதரர்கள் உறவு அதிகரிக்கும்.
9,12 ஆதிபத்தியம் வெளிநாட்டு பயணம் கைகூடும். இது அற்புதமான குரு பெயர்ச்சி.11வது ஸ்தானத்தை பார்க்கிறார் 5ஆம் பார்வையாக பார்க்கிறார். . எண்ணங்கள் பலிக்கும் என்ன நினைத்தாலும் பலிக்கும். மூத்த சகோதர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
7ஆம் பார்வையாக ராசியை பார்ப்பதால் தோற்றப்பொலிவு அதிகரிக்கும். அஷ்டமத்து சனியின் ஆதிக்கம் கட்டுப்படும். ராசியை சம சப்தம பார்வையாக பார்ப்பதால் பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தனவரவு அதிகரிக்கும்.
ரிஷபம் – உடல்நலனில் அக்கறை
துலாம் ரிஷபத்திற்கு ஆறாம் இடம். இந்த இடத்தில் குரு பகவான் அமர்ந்துள்ளதால் கடன் வாங்கக் கூடாது. உடல்நலத்தில் அக்கறை தேவை. வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும்.
ஆறாம் இடத்தில் அமர்ந்துள்ள குரு 10வது ஸ்தானத்தை பார்க்கிறார் வேலையில் இதமான சூழ்நிலை கிடைக்கும். பார்க்கும் இடம் நன்மை ஏனேனில் கர்ம ஸ்தானத்தை பார்வையிடுகிறார்.
12 இடமான விரைய ஸ்தானத்தை பார்க்கிறார். 2வது இடமான குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். கணவன் மனைவு ஒற்றுமை அதிகரிக்கும். தனகாரகன் தன ஸ்தானத்தை பார்க்கிறார். வரவை தாண்டி செலவு அதிகரிக்கும். சுப செலவாக மாற்றலாம்.
வியாழக்கிழமை மஞ்சள் நிற ஆடையை அணியலாம். உடல் நலத்தில் அக்கறை தேவை. வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
மிதுனம் – பொற்காலம்
குரு பகவான் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானம். ராசியை 9ஆம் பார்வையாக பார்க்கிறார். 11வது இடத்தை பார்க்கிறார். 9வது இடத்தை பார்க்கிறார். இது அற்புதமான குரு பெயர்ச்சி. பாக்கிய ஸ்தானம், லாப ஸ்தானத்தை பார்க்கிறார். தோற்றப்பொலிவு அதிகரிக்கும்.
எண்ணங்கள் நிறைவேறும். மிதுனராசிக்காரர்கள் ஏற்றம் பெறுவார்கள். முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.
கடகம் – அல்லல் விலகும்
கடக ராசி காரர்களே குருபகவான் உங்களின் ராசிக்கு 4வது இடத்தில் அமர்ந்திருக்கிறார். இதனால் அல்லல் விலகும்.
ராசிக்கு 8வது இடத்தை பார்க்கிறார். 10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். 12 இடமான அயன சயன இடத்தை பார்க்கிறார்.
அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் தடைகள் விலகும். கண்டங்கள் விலகி உடல் ஆரோக்கியம் ஏற்படும்.
குருவின் 7ஆம் பார்வை கர்ம ஸ்தானமான 10வது இடத்தின் மீது விழுவதால் நல்ல தொழில் அமையும். நல்ல வேலை அமையும். அங்கீகாரம் கிடைக்கும்.
12வது இடமான விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் வரவை அறிந்து செலவு செய்யவும். சுப விரையமாக செய்யவும். குரு பெயர்ச்சி நன்மையை அள்ளி வழங்கும்.
சிம்மம் – ஆன்மீக பயணம்
குருபகவான் உங்கள் ராசிக்கு 3வது இடத்தில் அமர்ந்துள்ளார். தொடர்புகள் வெற்றி கிடைக்கும். இளைய சகோதர்கள் மீது அக்கறை தேவை.
குரு பகவான் உங்களுக்கு 7வது இடத்தை 5ஆம் பார்வையாக பார்க்கிறார். 9வது இடத்தை 7ஆம் பார்வையாக பார்க்கிறார். பாக்கிய ஸ்தானத்தை பார்த்தால் தந்தையின் உடல் நலம் உண்டாகும்.
11வது இடத்தை 9ஆம் பார்வையாக பார்ப்பதால் அல்லல்கள் விலகும். வாழ்க்கை துணைக்கு மகிழ்ச்சி.
9ஆம் பார்வை பார்ப்பதால் நீண்ட தூர பயணம் உண்டாகும். தர்ம ஸ்தானத்தை பார்ப்பதால் தான தர்மத்திற்கு செலவு. ஆன்மீக பயணம் உண்டாகும். தன லாபத்தை தரும். வியாழக்கிழமை மவுன விரதம் இருப்பது அவசியம்.கன்னி – தன லாபம்
குரு பகவான் கடந்த ஓராண்டாக ஜென்மத்தில் இருந்தார். இப்போது 2வது இடத்திற்கு செல்கிறார். இன்னல்கள் விலகும். தன வரவை அள்ளி வழங்கும். நல்ல குரு பெயர்ச்சி. 2வது இடத்தில் வாக்கு வன்மை பெருகும்.
ராசிக்கு 6வது இடம், களத்திர ஸ்தானத்திற்கு மறைவு. கணவன் மனைவி விட்டுக்கொடுக்க வேண்டும்.
7ஆம் இடத்திற்கு 12வது இடத்தை குரு பார்க்கிறார். குடும்ப ரகசியம் காக்க வேண்டும்.8வது இடம் அஷ்டம ஸ்தானத்தை பார்க்கிறார். நோய் நொடிகள் விலகும். 10வது இடம் தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். வெளிநாட்டு பயணம் ஏற்படும்.
துலாம் – ஜென்ம குரு
துலாம் ராசியில் அமர்ந்து 5, 7,9ஆம் இடத்தை பார்க்கிறார். மாற்றங்களும், ஏற்றங்களும் கிடைக்கும். வேலை பளு அதிகரிக்கும்.
உழைப்புக்கு ஏற்ற உயர்வு வரும்.வெற்றி கிடைக்கும். பஞ்ச ஸ்தானத்தை பார்ப்பதால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வீட்டில் இந்த ஆண்டு குவா குவா சத்தம் கேட்கும்.
7வது இடத்தை பார்ப்பதால் நல்ல வாழ்க்கைத்துணை அமையும், திருமணம் கைகூடும். வெளிநாடு சுற்றுலா செல்லலாம். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.
9வது இடத்தை பார்ப்பதால் தந்தையின் உடல்நலம் சீராகும். சுக்கிரன் வீட்டில் குரு அமர்வதால் புதிய வண்டி வாகனம் வாங்கலாம். சகோதர உறவு சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம் – தடைகள் விலகும்
லாபஸ்தானத்தில் இருந்து குரு 12வது இடமான விரைய ஸ்தானத்திற்கு வந்துள்ளார். குருவின் பார்வை 4வது இடம், 6வது இடம் 8ஆம் இடத்தின் மீது படுகிறது. தடைகள் விலகும். நிறைய செலவுகள் ஏற்படும். விரையங்களை சுப விரையமாக மாற்றலாம்.
வீடு வாங்குகள், கடன் வாங்குகள். கடன் சேமிப்பு 4வது பார்வையாக கும்பத்தை பார்க்கிறார். மூட்டுவலி விலகும். நெருக்கடிகள் விலகும்.
நல்ல வீடு வாங்கலாம். மேற்படிப்பு படிக்கலாம். 6வது இடத்தை பார்ப்பதால் எதிரிகள் விலகுவார்கள். 8வது இடத்தை பார்வை படுவதால் நன்மைகள் உண்டாகும். கணவரின் வருமானம் அதிகரிக்கும். பட்டமங்கலம் அனுக்கிரக தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.
தனுசு – லாப ஸ்தானம்
தனுசு ராசி காரர்களே 11 வது இடமான லாப ஸ்தானத்தில் குரு அமர்ந்துள்ளார். நல்ல வேலை அமையும், உத்யோகத்தில் உயர்வு கிடைக்கும். ஏழரை சனி நடந்தாலும் நன்மையே கிடக்கும்.
குரு பகவான் 3வது இடம், 5வது இடம், 7வது இடத்தை பார்க்கிறார். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். அதைப்போலவே பஞ்சம ஸ்தானத்தை பார்க்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார். மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும். 7வது இடமான களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் கணவன் மனைவி உறவு அதிகரிக்கும். திருமணம் நடைபெறாமல் இருந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு வியாழ நோக்கம் வந்து விட்டது.
மகரம் – தடைகள் விலகும்
குருபகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் அமர்கிறார். குருவின் பார்வை தன ஸ்தானம் குடும்ப ஸ்தானம், வாக்குஸ்தானம். 4வது இடம், 6வது இடம் பார்வை படுகிறது. தனச்செழிப்பை அள்ளி வழங்கும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
4வது ஸ்தானத்தில் குருவின் பார்வை படுவதால் உயர் கல்வி கற்பதில் இருந்த தடைகள் விலகும். பட்டம் பெற்று சிறப்படைவீர்கள். வீடு, வாகனம் வாங்கலாம். இந்த ஆண்டு 6வது இடத்தை குருபகவான் பார்ப்பதால் நோய்கள் விலகும்.
கும்பம் – யோகம்
அஷ்டம ஸ்தானத்தில் இருந்த குரு 9வது இடத்தில் வந்து அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். குரு பெயர்ச்சி மாபெரும் வரவாக அமைந்துள்ளது.
சோர்வு நீங்கி மகிழ்ச்சி தென்படும். தோற்றத்தில் பொலிவு ஏற்படும். வாழ்க்கைக்கு தேவையானவை கிடைக்கும். தனச்செழிப்பு மனத்தெளிவை தரும்.
நஷ்டங்கள் நீங்கி லாபம் அதிகரிக்கும். குரு பகவான் 5ஆம் பார்வையாக உங்களின் ராசியை பார்க்கிறார். ராசிக்கு 3வது இடத்தை பார்க்கிறார். 5வது இடத்தை பார்க்கிறார்.
மூன்றாமிடத்தை 7ஆம் பார்வையாக பார்ப்பதால் இளைய சகோதரர்களுடன் உறவு மேம்படும். அக்கம்பக்கத்தினர் உறவு மேம்படும். தொடர்புகள் அதிகரிக்கும். மிகப்பெரிய பாராட்டு கிடைக்கும்.
பூர்வபுண்ணிய ஸ்தானத்தை 9ஆம் பார்வையாக பார்ப்பதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். குரு அருளால் முருகப்பெருமானே வந்து பிறக்கப் போகிறார். நோய்நொடிகள் அற்ற வாழ்க்கையும், தாய், தந்தையரின் உறவு மேம்படும். உலகம் பாராட்டும் வகையில் வெற்றி கிடைக்கும் யோக காலமாகும்.
மீனம் – வெற்றி
மீன ராசிக்காரர்களே இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் இருந்த குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து 12வது இடமான விரைய ஸ்தானத்தை பார்க்கிறார்.
2வது இடமான தன ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தன வரவு ஏற்படும். ஆனால் விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் சுப விரையம் ஏற்படும்.
4வது இடத்தை குரு பார்ப்பதால் தாயாரின் உடல்நலம் சீராகும். கல்வி முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு வாகனம் வாங்கலாம்.
வியாழக்கிழமைகளில் மஞ்சள் வண்ண ஆடை அணியுங்கள். தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.
– குருபரன்