Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • பழநியில் பங்குனி உத்திர தேரோட்டம்

    பழநி, பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் தேரோட்டம் நடந்தது.பங்குனி உத்திர விழா திரு ஆவினன்குடி கோயிலில் மார்ச் 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாம் நாளான நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் முத்துகுமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் உலா வந்தார்.வடக்கு கிரிவீதியில் திருத்தேரில் ஏற்றம் செய்தனர். மாலை 4:50 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. நான்குகிரி வீதிகளில் தேர்வலம் வந்த போது நவதானியம், பழங்கள், நாணயங்களை தேரின் மீது பக்தர்கள் வீசினர்.மாலை 6:25 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் சிவநேசன், கந்தவிலாஸ் செல்வக்குமார், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இன்று (மார்ச் 31) இரவு 10:00 மணிக்கு மேல் தங்கக் குதிரை வாகனத்தில் முத்துகுமாரசுவாமி உலா வருவார். ஏப்.,2ல் கொடி இறக்கத்துடன் விழா நிறைபெறும்.–மலைக்கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பால்குடங்கள், தீர்த்த காவடிகளுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் செவ்வந்தி, செண்டுமல்லி, ரோஜா, தாமரை, வாழை, இளநீர் கொண்ட தோரணங்கள், உட்பிரகாரத்தில் நிலைமாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பழநி புஷ்பகைங்கர்ய சபா சார்பில், திருஆவினன்குடி கோயிலில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்திருந்தனர்.

  • உறையூர் நாச்சியார் கோயிலில் பெருமாள் சேர்த்தி சேவை

    உறையூர் நாச்சியார் கோயிலில் பெருமாள் சேர்த்தி சேவை நேற்று நள்ளிரவு வரை நடந்தது. திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், நாச்சி யார் சேர்த்தி சேவை நேற்று நடந்தது. இதற்காக ஸ்ரீரங்கம் கோயில் கண்ணாடி அறை யில் இருந்து நம்பெருமாள் தங்க பல்லக்கில் அதிகாலை 3.30 மணிக்கு புறப் பட்டு வழி நடை உபயங்கள் கண்டருளி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் முன்பு உள்ள மண்டபத்துக்கு மதியம் 12 மணிக்கு சென்றடைந்தார். அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு சேர்த்தி மண்டபத்துக்கு மதியம் 1.15 மணிக்கு வந்தார். பின்னர் மதியம் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நம்பெருமாள், கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை நடை பெற்றது. பின்னர் சேர்த்தி மண்டபத்தில் இருந்து அதிகாலை 1.30க்கு நம்பெருமாள் புறப்பா டாகி, இன்று காலை 4 மணிக்கு வெளிஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு கண்ணாடி அறைக்கு சென்றடைந்தார்.

  • வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

    கோவை அருகே பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலையில் வேள்வி, சிறப்பு பூஜை அபிஷேகம், சுவாமி திருவீதி உலா மற்றும் திருக்கல்யாணம் உற்சவம் நடந்த்து.
    தொடர்த்து விழாவின் 6ம் நாளான நேற்றுக் காலை மணிக்கு நாடராஜர் பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் தரிசனக்காட்சி நடைபெற்றது. மாலையில் வெள்ளிங்கரி ஆண்டவர் மனோன்மணி அம்மன் தேரில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு ஆதிவாசிகள் நடனம்,தாரைதப்பட்டை, சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலைநிகழச்சிகளும்,பால்காவடி,பன்னீர் காவடி,புஷ்பகாவடி ஆட்டம் நடைப்பெற்றது. தொடர்ந்து மாலை 5.50 மணிக்கு பேரூர் ஆதீனம் இளையப்பட்டம் மருதாசல அடிகளார் தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். பக்தர்கள் வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு அரோகரா என பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

  • ரெங்கநாதர் கோயிலில் சேர்த்தி சேவை

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் தாயார் சன்னதியை சென்றடையும் சேர்த்தி சேவை கோலாகலமாக நடைபெற்றது.108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இங்கு ஆதிபிரம்மா திருநாள் என்று அழைக்கப்படும் பங்குனி தேரோட்ட விழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சேர்த்தி சேவை நடைபெற்றது. இதில் நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு திருச்சுற்று வழியாக தாயார் சன்னதியை வந்தடைந்தார். அங்கு ரெங்கநாதர், தான் அணிந்திருந்த மோதிரத்தை நாச்சியாருக்கு அன்பளிப்பாக அளித்தார். இதற்கிடையில் தாயாருக்கும், நம்பெருமாளுக்கும் இடையேயான சண்டையை நம்மாழ்வார் தீர்த்து வைப்பார். இதையடுத்து சமாதானமடைந்த தாயார் அந்த மோதிரத்தை ஏற்றுக்கொள்வார். இந்த நிகழ்வை நினைவுகூரும்விதமாக நடைபெறும் சேர்த்தி சேவை வைபத்தின்போது, பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாளுடன் தாயாரும் இணைந்து சேர்த்தி சேவை சாதித்தார். வருடத்தில் பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீதாயார் ஸ்ரீரெங்கநாதர் சேர்ந்திருப்பர். அன்றைய தினம் வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், வேண்டுவன கிடைக்கும், திருமண பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இதனால் ரெங்கநாதரையும், தாயாரையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சேவித்தனர்.

  • தங்கக்குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழாவில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் நேற்று பங்குனி உத்திரம் நடைபெற்றது. அப்போது தெய்வானையுடன் முருகப்பெருமான் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேலும் இரவு தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  • நாங்குநேரி சுவாமி தெய்வநாயகப் பெருமாளுக்கு பங்குனி திருக்கல்யாண தோ்த்திருவிழா

    108 திவ்யதேசங்களில் ஒன்றான பாண்டியநாட்டுத் திருப்பதியான நாங்குநேரியில் சுவாமி ஸ்ரீ வரமங்கா ஸமேத தெய்வநாயகப் பெருமாள் திருக்கோவிலில் பங்குனி திருக்கல்யாண பிரம்மோற்ச்வம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது..
    திருவரமங்கை என்னும் வானமாமலை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாடல்கள் பாடப்பெற்றது. இத்தலத்தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
    பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம், நரசிம்ம புராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது. ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து பிறகு எம்பெருமானை மணந்து கொண்டதால் ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்) எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் அழைக்கப்படுகின்றது.
    இத்தகைய சிறப்பு வாய்ந்த இத் திருத்தலத்தில் பல்வேறு உற்ச்சவங்கள் மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு திருக்கல்யாண திருவிழா ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி மதுரகவி ஸ்ரீ வானமாமலை இராமானுஜ ஜீயா் சுவாமிகள் அனுக்கிகத்துடன் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் சுவாமி தயார் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. விழாவின் 9ம்திருநாளான இன்று காலை 6.00 மணிக்கு ஸ்ரீவரமங்கை நாச்சியார் சமேத ஸ்ரீ தெய்வநாயகப்பெருமாள் தேருக்கு ஏழுந்தருளினார். காலை 9.00 மணி அளவில் வானமாமலை ஜூயா் சுவாமிகள் எழுந்தருள அவருக்கு கோயில் மரியாதைகள் செய்யப்பட்டது. பின்னர் ஜீயா் சுவாமிகள் தோ் வடம் பிடித்தா். அதனை தொடா்ந்து ஆயிரக்கணக்கான ஊா்மக்கள் கோவிந்தா கோபாலா என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா். பொதுவாக தென் தமிழகத்தில் தோ் முற்றிலும் மனித முயற்ச்சியிலே இழுக்கப்படும். தோ் 4 ரத வீதிகளில் வலம் வந்தது. விழாவினை வானுமாமலை மடத்தினா் செய்திருந்தனா். நாளை பங்குனி உத்திரத்தன்று பெருமாள் தாயார் திருக்கல்யாணம் மற்றும் பட்டணபிரவேசம் சிறப்பாக நடைபெறும்.

  • வேலுடையான் பட்டு சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர விழா

    நெய்வேலி வேலுடையான் பட்டு சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு காவடி மற்றும் பால் குடம் எடுத்து நேர்த்தி கடன்.
    கடலூர் மாவட்டம் நெய்வேலி வேலுடையான்பட்டு பகுதியில் உள்ள சுபபிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் இந்த ஆண்டு திருவிழா கடந்த 21ம் தேதி கொடியயேற்றத்துடன் தொடங்கியது இதனையடுத்து சாமிக்கு தினம் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வந்தது நேற்று முன் தினம் திருக்கல்யாண உற்சவமும் நேற்று இரவு தேர் திருவிழாவும் நடந்து இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெய்வேலி மற்றும் சுற்றிள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என விதவிதமான காவடி மற்றும் பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நெர்த்தி கடன் செலுத்தினார்கள்.

  • பங்குனி உத்தரத்தின் சிறப்பு

    பங்குனி உத்தரம் என்பது முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12-ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. சிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம். இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள். இத்தினத்தில் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது. இந்நாளில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

  • மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேர்திருவிழா

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மயிலத்தில் உள்ள மயில் வடிவ மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. இன்று அதிகாலை கோவில் நடை திறப்கப்பட்டது. மூலவருக்கு பால் தயிர், சந்தனம், பன்னீர், தேன், ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடைபெற்று, பின்னர் தேர் திருவிழாவை ஒட்டி முதலில் விநாயகர் தேரை மயிலம் பொம்மபுரம் ஆதினம் 20ம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருத்தேர் வடம்பிடித்தும் இரண்டாவதாக முருகர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் விழுப்புரம் மாவட்டம் மட்டும் இல்லாமல் கடலூர் புதுச்சேரி , சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரகனகான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தும் சாமி தரிசன் செய்தனர்.

  • கபாலீஸ்வரர் கோவில் 63 நாயன்மார்கள் வீதி உலா

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிவன் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும் இந்த கோவிலில் பங்குனி திருவிழாவின் 8ஆம் நாளான இன்று 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது . இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிவபெருமான், கபாலீஸ்வரராகவும், அம்பாள், கற்பகாம்பாளாகவும் அருள் பாலிக்கின்றனர். இந்த கோவிலின் பங்குனி பெருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 5ஆம் நாள் வெள்விடைப் பெருவிழா காட்சி நிகழ்வு நடைபெற்றது. காமதேனு வாகனத்தில் கபாலீஸ்வரர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அதனை தொடர்ந்து நேற்றய தினம் பங்குனி விழாவின் 7ம் நாளையொட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது விநாயகர், கபாலீஸ்வரர், அம்மன், முருகன், சன்டிகேஸ்வரர் தேர்கள் வலம் வந்தன திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் இன்று பங்குனி விழாவின் 8 ம் நாள் முக்கிய நிகழ்வான 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நகரின் முக்கிய நான்கு மாட வீதிகளான கீழவீதி , தெற்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி வழியே நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிக்கனக்கானோர் சாமி தரிசனம் செய்தனர். சைவ சமயத்தில் மூவர் என அழைக்கபடும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என 63 நாயன்மார்களுடனன் கபாலீஸ்வரர் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினர்