Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் விடையாற்றி உற்சவம்

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத திருவிழா நிறைவடைந்த நிலையில் விடையாற்றி உற்சவ நிகழ்ச்சிகள் துவங்கி உள்ளன.
    பங்குனி மாத விழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி அறுபத்து மூவர் விழாவுடன் மார்ச் 31-ம் தேதி கபாலீஸ்வரர் திருக்கல்யாண உற்சவத்துடன் கொடி இறக்கப்பட்டது.
    கடந்த பத்து நாட்களாக வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் இறைவன். அவருக்கு ஓய்வு அளிக்கும் வகையில் விடையாற்றி விழா துவங்கியுள்ளது. இவ்விழாவில், உற்சவமூர்த்தி தினமும் எளிமையான அலங்காரத்துடன் மண்டபத்தில் எழுந்தருள்வார். அதைத் தொடர்ந்து விடையாற்றி கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவு தினமும் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும்.

    ஏப்ரல் 4-ம் தேதியான இன்று திரு.சஞ்சய் சுப்ரமணியம் குழுவினர் பாட்டு மாலை 6.30 மணிக்கும், பேராசிரியர் தி.இராஜகோபால் பக்தி என்னதான் செய்யாது என்ற தலைப்பில் சொற்பொழிவும் நடைபெற உள்ளது.

  • முத்துமாரியம்மன் கோயிலில் திருவிழா

    ஸ்ரீகாளஹஸ்தி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். சித்தூர் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலின் துணைக்கோயிலான முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சரக உற்சவம் நடைபெற்றது. பின்னர் கோயில் வளாகத்தில் மயில் கோலம், சேஷபானு கோலம் ஆகியவை போடப்பட்டது. இதில் ஸ்ரீகாளஹஸ்தியை சுற்றிய பகுதிகளை சேர்ந்த ஏராளமாக பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
    இதேபோல் இன்று (4ம் தேதி) காலை கிராம கடவுள் கோலமும், மாலை ரேணுகாதேவி கோலமும் மதியம் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    விழாவின் நிறைவு நாளான நாளை(5ம் தேதி) காலை முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை மற்றும் கோயில் வளாகத்தில முத்துமாரியம்மன் கோலமும், இரவு அம்மன் ஊர்வலமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை சிவன் கோயில் நிர்வாக அதிகாரி பிரம்மராம்பா செய்து இருந்தார்.

  • திருப்பதியில் புதன்கிழமைகளில் நடைபெறம் சஹஸ்ரகலசாபிஷேகம்

    ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 6 மணிக்கு தங்கவாயில் முன்பு நடைபெறும் பிரதான சேவை ‘சஹஸ்ரகலசாபிஷேகம்’ போக ஶ்ரீநிவாச மூர்த்தியுடன் ஶ்ரீதேவி பூதேவி உடனுறை திருமலையப்பர் ஸ்வாமிக்கும் இந்த சஹஸ்ரகலசாபிஷேகம் நடைபெறும். 1511-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே இந்த சஹஸ்ரகலசாபிஷேகம் நடைபெறுவதற்கான ஆதாரம் உள்ளது. தங்கவாயில் முன்பு நடைபெறும் இந்த சஹஸ்ரகலசாபிஷேகத்தில் ஆர்ஜித சேவைக் கட்டணம் செலுத்தி பக்தர்கள் பங்குகொள்ளலாம். எம்பெருமானை தரிசித்து பிரசாதம் பெற்றுச் செல்லலாம்.

  • தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் பங்குனி உத்திர தீமிதி திருவிழா

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தீ மிதித் திருவிழா நடைபேற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை ஸ்ரீசவுந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீஅக்னீஸ்வரர் காவிரி ஆற்றில் தீர்த்தவாரியில் கலந்து கொண்ட முருக பக்தர்கள் காவிரி ஆற்றில் குளித்து நாக்கில் வேல் குத்தியும். பால் குடம் எடுத்தும் வீதி உலாவாக வந்து தண்டாயுதபாணிசுவாமி கோயில் முன்பாக பரப்பட்டிருந்த தீ குழியில் இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

  • திருப்பரங்குன்றம் முருகனுக்கு திருக்கல்யானம்

    ஆறு படை வீடுகளில் முதல் படை வீடாள் திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா 14 நாட்கள் நடைபெறும். கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் 14 நாள் திருவிழா தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
    12ம் நாள் திருவிழாவான இன்று அருள்மிகு திருக்கோயிலில் சுப்பிரமணிய சுவாமி – தெய்வானை திருமண நிகழ்ச்சி திருக்கோயில் ஆறுகால் மண்டபத்தில் மதியம் 12:39 க்கு கடக லக்னத்தில் நடைபெற்றது. அதை தொடர்ந்து மற்ற பூஜைகள் மற்றும் தீபாரனை காட்டப்பட்டது.
    இந்நிகழ்ச்சிகாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிருந்து மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் கோவிலில் எழுந்தருளினர். திருக்கல்யாண நிகழச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் தாங்கள் திருமாங்கல்ய கயிறை புதிதாக மாற்றிக் கொண்டரை்.

  • ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் புதிய ஆச்சாரியர் தேர்வு

    ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் , 11வது பட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீரங்கராமானுஜ மகாதேசிகன் ஜீயர் சுவாமிகள் (84), கடந்த, 19ம் தேதி திருநாட்டை அலங்கரித்தார் (காலமானார்). மறுநாள், ஸ்ரீரங்கம் பெரியாஸ்மரத்தில் அவரது உடல் திருப்புட்குழி புகுந்தது (நல்லடக்கம் செய்யப்பட்டது).
    தனக்கு பிறகு, 12வது பட்டத்திற்கு வர வேண்டிய, மூன்று பேர்களின் பெயர்களை மறைந்த ஆண்டவன் ஸ்வாமிகள் குறிப்பிட்டிருந்தார்.
    அதனடிப்படையில், ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் ஒன்று கூடி கலந்தாலோசித்து, 12வது பட்டமாக வெள்ளியனூர் நாராயணச்சாரியரை புதிய ஆச்சாரியராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
    திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும், வெள்ளியனூர் நாராயணாச்சாரியர் விரைவில் பட்டமேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புதிய பட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாராயணச்சாரியார் பூர்வாசிரமத்தில், சின்னாண்டவன் திருக்குடந்தை ஸ்வாமிகளின் கொள்ளுப் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கோடையை சமாளிக்க திருப்பதி கோவிலில் சிறப்பு வசதி

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். அதுவும் பள்ளி விடுமுறை காலங்களான ஏப்ரல், மே மாதங்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மேலும் அலைமோதும். ஆனால் கோடை வெயிலில் திருப்பதிக்கு செல்பவர்கள் சுட்டெரிக்கும் வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் தத்தளிப்பர்.
    கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்ட நிலையில் திருப்பதி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. மாட வீதிகள், அன்னதான சத்திரம் உள்ளிட்ட இடங்களில் வெப்பத்தை தடுக்க தரையில் வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது.
    திருப்பதி கோவில் முழுவதும் குளுகுளு வசதி செய்யப்படுகிறது. தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருக்கும் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளிலும் ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது.
    கல்யாண மண்டபம், தங்கவாசல், ஆனந்த நிலையம் ஆகிய இடங்களிலும் 24 மணி நேரமும் ஏ.சி. வசதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனந்த நிலையம் என்று அழைக்கப்படும் கற்ப கோவிலுக்குள் வெளி காற்று வராது என்பதால் கூடுதல் ஏ.சி.க்கள் பொருத்தப்பட்டுள்ளது.
    மேலும் திருமலையில் பஸ் நிலையம், மாட வீதிகள், லட்டு விற்பனை மையம் உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளன.

  • திருப்பதியில் வசந்த உற்சவம் நிறைவு

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வசந்த உற்சவம் இன்று நிறைவடைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் இரண்டு நாட்களுக்கு முன் தினம் துவங்கியது.
    வசந்த உற்சவத்தையொட்டி, உற்சவர்கள், கோவிலில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்தை அடைந்தனர். அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, நைவேத்தியம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
    உற்சவத்தின் நிறைவு நாளான இன்று திரேதா யுகக் கடவுளான சீதா தேவி சமேத ராமர், துவாபர யுகக் கடவுளான ருக்மணி தேவி சமேத கிருஷ்ணர், கலியுக தெய்வமான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி ஆகிய உற்சவர்கள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர்.
    இரவு மூன்று யுக தெய்வங்களின் திருவீதி உலா திருமலை கோவில் மாட வீதிகளில் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

  • திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

    தொடர் விடுமுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைலமோதுகிறது. நான்கு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக தரிசனத்துக்கு அனுப்பப்படுகின்றனர். நேற்று காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 61 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 15 மணி நேரத்துக்கு மேல் ஆனதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.300 கட்டணத்தில் பதிவு செய்த பக்தர்களுக்கு 4 மணி நேரமும், ஸ்ரீவாரிமெட்டு மற்றும் அலிபிரி மலைப்பாதை வழியாக திவ்ய தரிசன டோக்கன் பெற்று வந்தவர்களின் தரிசனத்துக்கு 3 மணி நேரமும் ஆனது. கோடைவிடுமுறை தொடங்க உள்ள நிலையில் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையான் கோவில் உள்ள திருமலைக்கு செல்வதற்காக திருப்பதி-திருமலை இடையே தொடர்ந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

  • திருப்பதியில் செவ்வாய் கிழமைகளில் நடைபெறும் அஷ்டதள பாதபத்மாராதனம்

    ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணிக்கு இரண்டாவது அர்ச்சனையாக 108 தங்கத் தாமரைகளால் மூலமூர்த்திக்கு நடைபெறும் அர்ச்சனை நிகழ்ச்சியே ‘அஷ்டதள பாத பத்மாராதனம்’ சுமார் 20 நிமிடம் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
    1984-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தான பொன் விழாவை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட சேவையாகும். ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பக்தர் இதற்குத் தேவையான 108 தங்கத் தாமரைகளை காணிக்கையாக சமர்ப்பித்தார். பின்னர் இது ஆர்ஜித சேவையாக அறிவிக்கப்பட்டது. 108 தங்கத் தாமரையால் அர்ச்சனை நடக்கும்போது பக்தர்கள் மகிழ்ச்சியுடன் எம்பெருமானை தரிசிக்கலாம்.