Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பத்மாவதி பரிநய உற்சவத்தின் 3வது நாளில் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பத்மாவதி, சீனிவாச பெருமாளின் திருமணத்தை நினைவு கூறும் விதமாக திருமணம் நடைபெற்ற முந்தைய நாள்

    முதல் மூன்று நாட்கள் பத்மாவதி பரிநய உற்சவம் என்ற பெயரில் 1992ம் ஆண்டு முதல் தேவஸ்தானம் சார்பில் திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் பத்மாவதி பரிநய உற்சவம் நடத்தப்படுகிறது.

    அதன்படி, நேற்று முந்தினம் பரிநய உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. முதல்நாள் கஜ வாகனத்திலும், இரண்டாவது நாள் தங்க குதிரை வாகனத்திலும் மூன்றாவது நாளான இன்று மாலை அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமியும், ஸ்ரீதேவி பூதேவி தாயார்கள் தனி பல்லக்கிலும் எழுந்தருளி நான்குமாட வீதியில் ஊர்வலமாக சென்று, நாராயணகிரி தோட்டத்தில் உள்ள பத்மாவதி பரிநய மண்டபத்தை அடைந்தனர்.

    அங்கு மலையப்பசுவாமியும், தாயார்களும் எதிர்ரெதிர் திசைகளில் கொலு வைக்கப்பட்டு, மாலை மாற்றும் வைபவம் நடந்தது. தொடர்ந்து, பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, பூ பந்து எறிதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், ஊஞ்சல் உற்சவத்தில் மலையப்ப சுவாமியும், தாயார்களும் எழுந்தருளினர். அன்னமய்யா சங்கீர்த்தனைகள் பாடப்பட்டது.

    இதையடுத்து, மலையப்ப சுவாமியும், தாயார்களும் பரிநய மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். இதில் செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் , இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு மற்றும் அதிகாரிகளும் திரளான பக்தர்களும் பங்கேற்றனர்.

  • தங்க குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பத்மாவதி பரிநய உற்சவத்தின் 2வது நாளில் தங்க குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகுண்டத்தில் இருந்து மகா விஷ்ணு சீனிவாச பெருமாளாக கலியுகத்தில் அவதரித்தார்.
    நாராயணவனத்தை ஆட்சி செய்து வந்த ஆகாச ராஜ மன்னர் தனது மகளான பத்மாவதியை சீனிவாச பெருமாளுக்கு திருமணம் செய்து வைத்தார். சித்திரை மாதம் தசமி அன்று நாராயணவனத்தில் திருமணம் நடைபெற்றதாக வெங்கடாச்சல மகத்தியம் என்ற பூராண நூலில் கூறப்பட்டுள்ளது.
    பத்மாவதி, சீனிவாச பெருமாளின் திருமணத்தை நினைவு கூறும் விதமாக திருமணம் நடைபெற்ற முந்தைய நாள் முதல் மூன்று நாட்கள் பத்மாவதி பரிநய உற்சவம் என்ற பெயரில் 1992ம் ஆண்டு முதல் தேவஸ்தானம் சார்பில் திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் பத்மாவதி பரிநய உற்சவம் நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று பரிநய உற்சவம் கோலாகலமாக தொடங்கியது.
    தொடர்ந்து, இன்று மாலை அலங்கரிக்கப்பட்ட தங்க குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமியும், ஸ்ரீதேவி பூதேவி தாயார்கள் தனி பல்லக்கிலும் எழுந்தருளி நான்குமாட வீதியில் ஊர்வலமாக சென்று, நாராயணகிரி தோட்டத்தில் உள்ள பத்மாவதி பரிநய மண்டபத்தை அடைந்தனர்.
    அங்கு மலையப்பசுவாமியும், தாயார்களும் எதிர்ரெதிர் திசைகளில் கொலு வைக்கப்பட்டு, மாலை மாற்றும் வைபவம் நடந்தது. தொடர்ந்து, பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, பூ பந்து எறிதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், ஊஞ்சல் உற்சவத்தில் மலையப்ப சுவாமியும், தாயார்களும் எழுந்தருளினர்.
    அன்னமய்யா சங்கீர்த்தனைகள் பாடப்பட்டது. இதையடுத்து, மலையப்ப சுவாமியும், தாயார்களும் பரிநய மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.
    பரிநய உற்சவத்தின் 3வது நாளான நாளை மாலை அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்திலும் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

  • திருப்பதியில் விரைவில் தரிசனம்…. நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மூலம் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட் திட்டம் மே முதல் வாரத்தில் அமல்
    புதிய அறங்காவலர் குழு பதவியேற்ற பிறகு பரிசீலனைக்கு வைக்கப்பட்டு நடைமுறையில் கொண்டு வரப்படும் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு பேட்டி
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட் வழங்கும் திட்டம் மே மாதம் முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.
    திருமலையில் இணைசெயல் அலுவலர் சீனிவாசராஜூ தேவஸ்தான பணியாளர்களுக்கு சோதனை முறையில் ஆதார் கார்டு மூலம் டிக்கெட் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் குறைந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் விதமாக நேர ஒதுக்கீடு செய்யும் திட்டம் கடந்த டிசம்பர் மாதம் சோதனை முறையில் ஆதார் கார்டு மூலம் வழங்கப்பட்டது.
    தற்போது ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மூலம் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய அறங்காவலர் குழு இந்த மாத இறுதியில் பதவியேற்கவுள்ளதால் அவர்கள் முன்பு இத்திட்டம் குறித்து விளக்கப்பட்டு பின்னர் மே மாதம் முதல் வாரத்தில் பக்தர்களுக்கு நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
    திட்டத்திற்காக திருப்பதியிலும் திருமலையிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் பெற்ற பக்தர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் வைகுண்டத்திற்குள் அனுமதிக்கபட்டு, 1 மணி நேரம் முதல் 2 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    இதையொட்டி இன்று தேவஸ்தான பணியாளர்கள் இந்த திட்டத்திற்காக மென்பொருள் தயார் செய்தி டி.சி.எஸ். நிறுவன ஊழியர்கள் சோதனை முறையில் டிக்கெட் பெற்று லட்டு டோக்கன் பெறுவது உள்ளிட்ட வேறு ஏதாவது சிரமங்கள் ஏற்படுகிறதா என சோதனை இன்று நாள் நன்றாக உள்ளதால் நடத்தி வருவதாகவும் தினந்தோறும் திருமலையில் உள்ள பஸ் ஸ்டாண்டில் அதிகாலை 500 டிக்கெட் வரை சோதனை முறையில் வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

  • தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

    உலக பிரசிதிப்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சை பெரிய கோவிலில் பிரச்சித்தி பெற்ற சித்திரை திருவிழா மிக பிரமாண்டான முறையில் 18 நாட்கள் நடத்தப்படும். இந்தாண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும், காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மேலும் பரத நாட்டியம், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது.
    அதிகாலை 4 மணி யளவில் பெரிய கோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத் பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்-கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன் பின் ஒன்றாக முத்துமணி அலங்கார சப்பரத் தில் புறப்பட்டு தேர் மண்டபமான மேலவீதிக்கு வந்தது.
    அங்கு தியாகராஜர் – கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதைத் தொடர்ந்து காலை 5.40 மணிக்கு தேர்வடம் பிடித் தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலையில் அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிவ.. சிவ… ஓம். நமச்சிவாய என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
    தேர் தஞ்சையில் உள்ள மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்குராஜ வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேர் முன்பு மேளதாளங்கள் மற்றும் தப்பாட்டம், கோலாட்டம் குழுவினர் இசை முழுங்க பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்து சென்றது.

  • ஹோரை சாஸ்திரம்

    பலரும் அன்றாட செயல்களைக்கூட பஞ்சாங்கம், ஜோதிடத்தை அனுசரித்து நடந்து கொண்டு நன்மைகளை அனுபவித்து வருகின்றர். அந்த வகையில் ஹோரை சாஸ்திரத்தை தற்போது நம்மில் பலரும் பின்பற்றி பயன்படுத்தி வருகின்றர்.
    ஹோரை சாஸ்திரம்: ஹோரை சாஸ்திரம் ஒரு வாரத்திற்கு வரும் ஏழு கோள்களை கொண்டே கணிக்கப்பட்டிருகிறது. அன்றைக்கு நடைமுறைக்கு வரக்கூடிய நாட்களுக்கு அதிபதியாக உள்ள கோளின் ஹோரை , சூரிய உதயம் முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு நடைமுறைக்கு வரும்.
    ஹோரையில் வாரத்தில் வருவதுபோல் ‍‌ஞாயிறு (சூரியன்), திங்கள் (சந்திரன்), செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி என தொடர்ந்து வருவது போல நடைமுறைக்கு வராமல் சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்ற தொடர் சுழற்சி முறையில் நடைமுறைக்கு வரும்.
    அன்றைய தின அதிபதிக்குரிய கோளின் ஹோரை ஆரம்பத்தில் நடைபெற்று, அடுத்தடுத்தக் கோள்களின் ஹோரை நடைமுறைக்கு வரும். நாட்கள் மாறி மாறி வந்தாலும், கோள்களின் ஹோரைகள் ஹோரைக்குரிய கோள்களின்படி தொடர் சுழற்சி முறையிலேயே நடைமுறைக்கு வரும். நாட்களில் சுப நாள், அசுப நாள் என்றும், கோள்களில் சுப கோள், அசுப கோள் என்றும் இருப்பதுபோல் ஹோரைகளிலும் சுப ஹோரை, அசுப ஹோரை இருக்கும் என்று பலரும் நினைத்து ஹோரையைத் தவறாகப் பின்பற்றி வருகின்றனர்.
    வார நாட்களில் திங்கள், புதன் ,வியாழன் , வெள்ளி, ‍‌ஞாயிறு ஆகியன சுப நாட்கள் என்றும், சனி, செவ்வாய், அசுப நாட்கள் என்றும் சிலர் கடைபிடிபதுபோல் ஹோரையையும் அவ்வாறே பிரித்து சுப ஹோரை, அசுப ஹோரை என்றும் பின்பற்றி வருகின்றனர்.
    ஆனால், ஹோரை சாஸ்திர விதிமுறையில் சுப ஹோரை, அசுப ஹோரை என்றில்லை என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு குறிப்பிட்ட ஹோரையிலும், வெவ்வேறு குறிப்பிட்ட பணிகளைச் செய்யலாம் என்று ஹோரை சாஸ்திர விதிமுறை கூறுகிறது.

  • நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேக பணிகள்….

    14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகம்!
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது.
    14 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, பல கோடி ரூபாய் மதிப்பில் நெல்லையப்பர் – காந்திமதியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
    இதனையடுத்து, கடந்த 20 ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையும், 21 ஆம் தேதி மஹா கணபதி ஹோமமும் நடைபெற்றன.
    யாகசாலை பூஜைக்காக நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கம் முன்புள்ள பகுதியில் யாகசாலைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
    87 யாக குண்டங்கள், 49 வகையான வேதிகைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று காலை நடைபெற்ற கடம் யாகசாலை பிரவேசம் நிகழ்ச்சியில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நேற்று மாலை முதல் கால யாகசாலை பூஜை, பஞ்ச வாத்தியங்கள் முழங்க துவங்கியது. கும்பாபிஷேகத்தை ஒட்டி, பல்வேறு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  • கள்ளழகரின் கோபம்…. புராணக்கதைகள்

    கள்ளழகர் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்குவதற்கு இரு விதமான புராணக்கதைகள் கூறப்படுகின்றன. இதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    கள்ளழகர் கோபம் :
    மதுரை மாநகரில் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரப் பெருமானுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருமாலின் அவதாரமாக விளங்கும் சுந்தரராஜப்பெருமாள் தன் தங்கை மீனாட்சியின் திருமணத்தை காணவும், சீதனம் கொடுப்பதற்காகவும் அழகர் மலையில் இருந்து கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்படுகிறார். ஆனால் அவர் வந்து சேருமுன்பே திருக்கல்யாணம் நடந்து முடிந்து விடுகிறது.
    கள்ளழகர் வைகை ஆற்றின் வடகரைக்கு வரும்போது, மீனாட்சி அம்மனுக்கு திருமணம் முடிந்துவிட்டதாக தகவல் கிடைக்கிறது. இதனால் கோபம் கொள்ளும் கள்ளழகர் மதுரை மாநகருக்குள் வராமல் வண்டியூர் வழியே மீண்டும் அழகர் மலைக்கு திரும்பிச் சென்று விடுகிறார். இது ஒரு புராணக் கதை.
    அடுத்து ஒரு புராணம் :
    அழகர்மலை உச்சியில் தண்ணீர் வற்றாத நூபுர கங்கை உள்ளது. மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து மாவிலி மன்னனிடம் மூன்றடி மண் கேட்டார். அதற்கு மன்னனும் சம்மதித்தார். உடனே மகாவிஷ்ணு, விசுவ ரூபம் எடுத்து ஒரு அடியை பூமியிலும், இன்னொரு அடியை விண்ணிலும், மூன்றாவது அடியை மன்னனின் தலையிலும் வைத்தார்.
    இதில் 2-வது அடியை விண்ணுக்கு கொண்டு செல்லும்போது அங்கிருந்த பிரம்மா அது தன் தந்தையின் கால் என்பதை அறிந்து அதற்கு பாதபூஜை செய்கிறார். பாத பூஜை செய்யும் தண்ணீரில் ஒரு துளி மகாவிஷ்ணுவின் சிலம்பில் பட்டு அழகர் மலையில் விழுகிறது. அதுவே சிலம்பாறு (நூபுரகங்கை) என வர்ணிக்கப்படுகிறது.
    நூபுர கங்கை தீர்த்தம் தனிச்சுவையும், வினைதீர்க்கும் மருந்துமாக சிறந்து விளங்குகிறது என்று புராதனப்பாடல்கள் கூறுகின்றன. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும்.
    இத்தகைய புகழ்மிகு நூபுர கங்கையில் ஒரு நாள் சுதபஸ் என்ற முனிவர், தண்ணீரில் மூழ்கி நீராடியபடி மந்திரங்களை சொல்லிக்கொண்டு இருந்தார்.
    அந்த சமயத்தில் துர்வாச முனிவர் தன் சீடர்களுடன் நூபுர கங்கைக்கு வந்தார். அங்கே நீராடிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவர் அவரை கவனிக்கவில்லை. அவர் குளித்து முடித்து பூஜை செய்துவிட்டு சற்று நேரம் கடந்து வந்து துர்வாச முனிவரை வரவேற்றார். அதனால் துர்வாச முனிவர் கோபம் அடைந்து சுதபஸ் முனிவரை மண்டூகம் (தவளை) ஆகும்படி சாபமிட்டார்.
    உடனே சுதபஸ் முனிவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். அதற்கு துர்வாச முனிவர், சித்திரை மாதம் பவுர்ணமி (சித்ரா பவுர்ணமி) தினத்திற்கு மறுநாள் வரும் கிருஷ்ணபட்ச பிரதமை திதியில் சுந்தரராஜப்பெருமாள் உமக்கு சாபவிமோசனம் அளிப்பார் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். சாபத்தால் தவளையாக மாறிய சுதபஸ்முனிவர், சுந்தரராஜப் பெருமாளை நினைத்து வைகை கரையில் தவம் இருந்தார்.
    தவத்தினால் மனம் இறங்கிய சுந்தரராஜப்பெருமாள் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு (சுதபஸ் முனிவர்) சாபவிமோசனம் அளித்தார்.
    சமய ஒற்றுமை :
    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில் சார்பாக தனித்தனியாக சித்திரைத்திருவிழா கொண்டாடப்பட்டு வந்துள்ளது. பின்னர் மதுரையை ஆண்ட மாமன்னர் திருமலை நாயக்கர் சித்திரை திருவிழாவை சைவ-வைணவ சமயங்களின் ஒற்றுமையை காத்திடும் வகையில் ஒரே விழாவாக இணைத்து நடத்தினார்.
    அதைத்தொடர்ந்து மன்னர் திருமலை நாயக்கர் காலம் முதல் தொன்று தொட்டு, சித்திரைத் திருவிழா ஒரே விழாவாக வரலாற்றுப் பெருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

  • ஏப்ரல் 30-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்

    அழகர்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது சித்திரை பெருந்திருவிழாவாகும். இதையொட்டி அழகர்கோவிலில் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் திருவிழா தொடங்குகிறது.

    மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் பெருமாள் கோவிலுக்குள் புறப்பாடு நடைபெறுகிறது. நாளை மறுநாளும் இதே நிகழ்ச்சி நடைபெற்று, 28-ந்தேதி மாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் கள்ளழகர் தங்க பல்லக்கில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் விடைபெற்று மதுரைக்கு புறப்படுகிறார்.

    தொடர்ந்து பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி உள்பட பல மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளி பின்னர் 29-ந்தேதி அதிகாலை சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக செல்லும் கள்ளழகர், பின்னர் காலை 6 மணிக்கு மேல் மூன்றுமாவடியில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அப்போது பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது.
    அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து அழகரை வணங்கி வரவேற்கிறார்கள். தொடர்ந்து வழிநெடுக உள்ள மண்டபங்களில் பெருமாள் எழுந்தருளி, அன்று இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் திருமஞ்சனமாகிறார். அப்போது சூடி கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலையை பெருமாளுக்கு சாத்தி பக்தர்களுக்கு சேவை சாதித்தல் நடைபெறுகிறது.

    30-ந்தேதி காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் தங்ககுதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். அப்போது லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். அன்று இரவு வண்டியூர் பெருமாள் கோவிலில் சாமி எழுந்தருளுகிறார்.
    மே 1-ந்தேதி காலை சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். தொடர்ந்து கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாபம் விமோசனம் தந்தருளும் பெருமாள், அன்று மாலை அனுமார் கோவில் சென்றடைகிறார்.

    அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 11 மணி முதல் ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    2-ந்தேதி அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்துடன் பெருமாள் எழுந்தருள்கிறார். 3-ந்தேதி ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் அதிகாலை பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் அழகர் காட்சி தருகிறார். தொடர்ந்து தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் முன்பு வையாழியானவுடன் திருமாலிருஞ்சோலை நோக்கி வழிநடையாக செல்கிறார்.

    4-ந்தேதி அதிகாலை அப்பன் திருப்பதி மண்டபங்களில் காட்சி தரும் பெருமாள், அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கள்ளழகர் தனது இருப்பிடமான அழகர்மலைக்கு வந்து கோவிலில் இருப்பிடம் சேருகிறார். 5-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த வருடம் சுமார் 435 மண்டபங்களில் அழகர் எழுந்தருள்கிறார்.

    திருவிழாவின் போது கள்ளழகர் மதுரைக்கு செல்லும் போது பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 29 உண்டியல் பெட்டிகள் பெருமாளுடன் செல்கிறது. இதற்காக அவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

  • திருப்பதி ஏழுமலையான் தங்க கஜ வாகனத்தில் வீதிஉலா

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பத்மாவதி பரிநய உற்சவத்தின் முதலாவது நாளான இன்று தங்க கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    வைகுண்டத்தில் இருந்து மகா விஷ்ணு சீனிவாச பெருமாளாக கலியுகத்தில் அவதரித்தார். நாராயணவனத்தை ஆட்சி செய்து வந்த ஆகாச ராஜ மன்னர் தனது மகளான பத்மாவதியை சீனிவாச பெருமாளுக்கு திருமணம் செய்து வைத்தார்.சித்திரை மாதம் தசமி அன்று நாராயணவனத்தில் திருமணம் நடைபெற்றதாக வெங்கடாச்சல மகத்தியம் என்ற பூராண நூலில் கூறப்பட்டுள்ளது.
    பத்மாவதி, சீனிவாச பெருமாளின் திருமணத்தை நினைவு கூறும் விதமாக திருமணம் நடைபெற்ற முந்தைய நாள் முதல் மூன்று நாட்கள் பத்மாவதி பரிநய உற்சவம் என்ற பெயரில் 1992ம் ஆண்டு முதல் தேவஸ்தானம் சார்பில் திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் பத்மாவதி பரிநய உற்சவம் நடத்தப்படுகிறது. அதன்படி பரிநய உற்சவம் கோலாகலமாக தொடங்கியது.
    இதையொட்டி தங்க கஜ வாகனத்தில்மலையப்ப சுவாமியும், ஸ்ரீதேவி பூதேவி தாயார்கள் தனி பல்லக்கிலும் எழுந்தருளி நான்குமாட வீதியில் ஊர்வலமாக நாராயணகிரி தோட்டத்தில் அமைக்கப்பட்டபத்மாவதி பரிநய மண்டபத்தை அடைந்தனர்.அங்கு மலையப்பசுவாமியும், தாயார்களும் எதிர்ரெதிர் திசைகளில் கொலு வைக்கப்பட்டு, மாலை மாற்றும் வைபவம் நடந்தது. தொடர்ந்து, பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, பூ பந்து எறிதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், ஊஞ்சல் உற்சவத்தில் மலையப்ப சுவாமியும், தாயார்களும்எழுந்தருளினர்.
    அன்னமய்யா சங்கீர்த்தனைகள் பாடப்பட்டது. இதையடுத்து, மலையப்ப சுவாமியும்,தாயார்களும் பரிநய மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.பரிநய உற்சவத்தின் இரண்டாவது நாளான நாளை தங்க குதிரை வாகனத்திலும் 3வது நாளான நாளை மறுநாள் தங்க கருட வாகனத்திலும் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
    இதில் செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ, ஜீயர்களும் பக்தர்களும் திரளாக பங்கேற்றனர்.

  • “செட்டிப்பெண் மருத்துவம்” சித்திரைத் தேர் திருவிழா

    தென்கைலாயம் என போற்றுதலுக்குரிய சிவ வழிபாடு ஆலயமாக மாநிலத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள “சிராப்பள்ளி” என அழைக்கப்படும் மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் உடனுறை மட்டுவார் குழலம்மை திருக்கோவில் சீர்மிகு சித்திரைத் தேர் திருவிழா முக்கிய நிகழ்வான “செட்டிப்பெண் மருத்துவம்” நிகழ்ச்சி மிகசிறப்பாக சிராப்பள்ளி தலத்தில் நடைப்பெற்றது.

    சிராப்பள்ளி தலத்தில் “திருநாவுக்கரசர்” அருளிய பாடல் நினைவுக்கு வருகிறது..
    தாயுமாய் எனக்கே தலை கண்ணுமாய்ப்,
    பேயனேனையும் ஆண்ட பெருந்தகை,
    தேய நாதன் சிராப்பள்ளி மேவிய,
    நாயனாரென நம்வினை நாசமே !!

    “உள்ளத்தில் உயர்ந்த உள்ளம் தாயுள்ளம் என்பார்கள் ” எல்லாம் வல்ல பரம்பொருளாகிய சிவபெருமான். சிராப்பள்ளியில் குன்றில் மேல் செவ்வந்திநாதராக அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.. சிவவழிப்பாட்டில் நம்பிக்கையும், பக்தியும், கொண்டு வழிபடும் அடியவர்க்கு ஈசனே வந்து அருள் புரிவார் என்பது திண்ணம். அதன் படி செவ்வந்திநாதர் தம்மிடம் தீவிர பக்தி கொண்ட “ரெத்தினாவதி” செட்டிப் பெண்ணுக்கு அவரின் தாயாக வந்து பிரசவம் பார்த்து சுகப்பிரசவம் செய்து குழந்தை வரம் அருளினார் என்பது தல வரலாறு .. அப்படி தாயாக ஈசன் வரும் பொழுது அம்பாள் பார்வதியும், கங்கையும், பணிப் பெண்களாக வந்து அருள் புரிந்தனர் .

    உண்மையான தாய் வந்தவுடன் தாயான ஈசன் “ரிஷபாரூடராய்” காட்சி தந்தார். இவ்வாறு செவ்வந்திநாதர் தாயாக வந்து அருள் புரிந்த ஐதீகம் . ஒவ்வொரு ஆண்டும் இத்திருதலத்தில் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவம் விழாவில் ஐந்தாம் நாள் விழாவில் செட்டிப் பெண் மருத்துவம் என்ற ஐதீக விழா நடைபெறுகின்றது .

    காலை செட்டிப் பெண்ணுக்கு வளைகாப்பு இட்டு பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடைபெறும் .. பின்னர் ஐதீகம் செய்யப்பட்டு குழந்தை பிரசவம் நடைபெறும் . அன்று மாலை ரிஷப வாகனத்தில் தாயான ஈசன் காட்சி தந்து அறுபத்தி மூன்று நாயன் மார்களுடன் வீதி உலாவந்து பத்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார் .. தாயான ஈசனை வேண்டும் பக்தர்களுக்கு குறைவின்றி அருள் பாலித்து சுகப்பிரசவம் நடைபெறுகின்றது .. அன்றைய விழாவில் பக்தர்களுக்கு பிரசவ மருந்து வழங்கப்படும் .