Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ஜனவரி 22 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்

    ஜனவரி 22 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – தை 8
    சுபமுகூர்த்த நாள்
    22-ஜன-2024 திங்கள்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : துவாதசி
    திதி நேரம் : துவாதசி இ 9.42
    நட்சத்திரம் : ரோகிணி கா 6.03
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : சுவாதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • ஆலங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா….

    ஆலங்குடி அருகே உள்ள நம்பம்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா இன்று விமரிசியாக நடைபெற்றது

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நம்பம்பட்டி  கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன்  மற்றும் பரிவாரதெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான திருப்பணி வேலைகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்தது.திருப்பணி வேலைகள் முடிந்து அதன் தொடர்ச்சியாக இன்று அக்கோயில்களின் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

    கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊரார்கள் ஏற்பாட்டில் கடந்த மூன்று தினங்களாக கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் சிவாச்சாரியர்களால் செய்யப்பட்டு இன்று காலை யாகசாலையில் இருந்து புனித நீரானது முத்துமாரியம்மன்  ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு கருட வாகனத்தில் வட்டமிட கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது .அதன் முத்துமாரி அம்மனுக்கு  தீப ஆராதனை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் மரக்கன்று  இலவசமாக வழங்கப்பட்டது.

    இந்த கும்பாபிஷேக நிகழ்வில்  சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு முத்துமாரியம்மன்  அருள்பெற்று சென்றனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை நம்பன் பட்டி  கிராம பொதுமக்கள் செய்திருந்தனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி காவல்துறையினர் செய்தனர்.

  • ஜனவரி 21 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – குழப்பம்
    ரிஷபம்         –  அமைதி
    மிதுனம்     –   இரக்கம்
    கடகம்         –  உழைப்பு  
    சிம்மம்         –   கோபம்
    கன்னி         –    பயம்
    துலாம்         –     எதிர்ப்பு
    விருச்சிகம்     –  வெற்றி
    தனுசு         –     லாபம்
    மகரம்         –    நன்மை
    கும்பம்         –      மகிழ்ச்சி   
    மீனம்         –      பொறுமை
    சந்திராஷ்டமம்    –      சித்திரை

  • நெல் வேலி திருவிளையாடல்… நெல்லையப்பர் கோயிலில் தத்ரூபமாக நடைபெற்ற நிகழ்வு…

    திருநெல்வேலி என பெயர் வர காரணமாக அமைந்த நெல் வேலி திருவிளையாடல் திருவிழா நெல்லை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலின் தைப்பூச திருவிழாவில் நான்காம் திருநாளில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோவில் தைப்பூசத் திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான திருநெல்வேலி என பெயர் காரணம் வர நடைபெற்ற சுவாமி நெல்லையப்பர் நெல்லுக்கு வெளியிட்ட திருவிளையாடல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் மகா மண்டபத்தில் எழுந்தருளினர் அதனை தொடர்ந்து வேத பட்டர் சுவாமிக்கு அமுது படைக்க நெல்லை நகர் வீதிகளில் நெல்மணிகள் யாசகம் பெற்று கோவில் பிரகாரத்தில் காய வைக்கும் நிகழ்வு நடைபெற்றது இதனைத் தொடர்ந்து வேதப்பட்டர் குளிக்க  சென்ற போது மழை பெய்யும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் அருளால் வேதபட்ட காய வைத்த நெல் இருந்த இடத்தில் மட்டும் மழை பெய்யாமல் இருந்தது போன்ற திருவிளையாடல் நிகழ்வும் தத்ரூபமாக கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மூலம் செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து குளிக்கச் சென்ற வேதபட்டார் மழை பெய்து நெல் நனையாமல் இருந்ததை கண்டு இன்புற்று பாண்டிய மன்னரிடம் தகவலை தெரிவித்து பாண்டிய மன்னருடன் சேர்ந்து வந்து பார்த்தபோது சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் காட்சி கொடுக்கும் திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த திருவிளையாடல் நிகழ்ச்சிகளை கோவில் ஓதுவார் பாடலாக பாடி தத்ரூபமாக விளக்கினார்.

    இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இன்று மாலை சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் விநாயகர் சுப்ரமணியர் சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோர் பஞ்சவர்ண வாகனத்திலும் எழுந்தருளி பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறுகிறது.

  • ஜனவரி 21 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்

    ஜனவரி 21 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – தை 7
    சுபமுகூர்த்த நாள்
    21-ஜன-2024 ஞாயிறு
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 7.31 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : ஏகாதசி இ 9.58
    நட்சத்திரம் : கார்த்திகை கா 6.02
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : சித்திரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • ஜனவரி 20 – 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – நற்செயல்
    ரிஷபம்         –  உற்சாகம்
    மிதுனம்     –   ஓய்வு
    கடகம்         –  சோதனை
    சிம்மம்         –   நட்பு
    கன்னி         –    மகிழ்ச்சி
    துலாம்         –     விவேகம்  
    விருச்சிகம்     –  ஜெயம்
    தனுசு         –     குழப்பம்
    மகரம்         –    சலனம்
    கும்பம்         –      நிறைவு  
    மீனம்         –      வெற்றி
    சந்திராஷ்டமம்    –      ஹஸ்தம்

  • ஜனவரி 20 – கார்த்திகை

    ஜனவரி 20 – கார்த்திகை
    சோபகிருது வருடம் – தை 6
    கார்த்திகை
    20-ஜன-2024 சனி ரஜப் 8
    திருப்பரங்குன்றம் முருகன் தேர்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : தசமி
    திதி நேரம் : தசமி இ 10.41
    நட்சத்திரம் : பரணி அ.கா 5.36
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : அஸ்தம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • ஜனவரி 19 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – மகிழ்ச்சி
    ரிஷபம்         –  இன்பம்
    மிதுனம்     –   இரக்கம்  
    கடகம்         –  பொறுமை
    சிம்மம்         –   போட்டி
    கன்னி         –    விவேகம்
    துலாம்         –     முயற்சி  
    விருச்சிகம்     –  எதிர்ப்பு
    தனுசு         –     சுகம்
    மகரம்         –    நலம்
    கும்பம்         –      ஜெயம்
    மீனம்         –      பாசம்
    சந்திராஷ்டமம்    –      உத்திரம்

  • ஜனவரி 19 – நவமி

    ஜனவரி 19 – நவமி
    சோபகிருது வருடம் – தை 5
    19-ஜன-2024 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : நவமி
    திதி நேரம் : அஷ்டமி அ.கா 1.26
    நட்சத்திரம்: அசுவினி கா 7.27
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • காஞ்சி வரதராஜ பெருமாள் பார்வேட்டை உற்சவம்….

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் கண்டருளுவது வழக்கம்.

    அதன்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட வரதராஜ பெருமாள்  வாலாஜாபாத், வழியாக கிராமங்கள் தோறும் மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.

    பழைய சீவரம் மலைமீது எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேக ஆராதனைகள், நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மாலை வெயில் வரதராஜ பெருமாள் மீது படும்படி மலையில் இருந்து ஒய்யாரமாக இறக்கப்பட்டார்.

    மலையிலிருந்து இறங்கிய வரதராஜ பெருமாளை பழைய சீவரத்தில் கோவில் கொண்டுள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி பெருமாள் எதிர்கொண்டு அழைத்து செல்ல இரண்டு பெருமாள்களும் பக்தர்களுக்கு சேவை சாதித்து காட்சி அளித்தனர்.

    ஆண்டுக்கு ஒரு முறை தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பழையசீவரம் பார்வேட்டை உற்சவத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.