Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • அண்ணாமலையார், பிருங்கி மகரிஷிக்கு காட்சியளித்து கிரிவலம்…

    பராசக்தியம்மனுடன் ஊடல் கொண்ட அண்ணாமலையார் பிருங்பி மகரிஷிக்கு காட்சியளித்து கிரிவலம்-ஏராளமான பக்தர்கள் வழிபாடு.

    தை மாதம் 2ஆம்  நாளான நேற்று மாலை திருவண்ணாமலை, திருவூடல் தெருவில் அண்ணாமலையார், பராசக்தியம்மன்   ஆகியோர் ஊடல் கொண்ட நிகழ்வு நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இந்த திருவூடல் நிகழ்வில் அண்ணாமலையாhருடன் ஊடல் கொண்ட பராசக்தியம்மன் தனியாக அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று விடுவார். ஆண்ணாமலையார் மட்டும் தனியாக குமரக்கோயிலுக்கு சென்று இரவு தங்கி விட்டு இன்று காலையில் பிருங்கி மகரிஷி முக்தியடைவதற்க்கு அவருக்கு அண்ணாலையார் நேரில் காட்சியளித்து கிரிவலம் வருவார். கிரிவலம் சென்ற அண்ணாமலையாரை பக்தர்கள் வழிநெடுக தீபஆரதனைகள் செய்து வழிபட்டனர்.

  • ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் மகாபாரத அக்னி வசந்த விழா கொடியேற்றம்…

    மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 211 ஆம் ஆண்டு மகாபாரத அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

    திருவண்ணாமலை அடுத்த மங்கலத்தில்  அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 211- ஆம் ஆண்டு மகாபாரத அகினி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கி மஞ்சுவிரட்டு மற்றும் சக்தி கரகத்துடன்  விநாயகர்,  போர்மன்னன், பகவான் திரௌபதி அடங்கிய பஞ்சபாண்டவர்கள் சுவாமிகள் முக்கிய மாட விதிகள் வீதி உலா நிகழ்ச்சி மிக விமர்சியாக நடைபெற்றது.

     

  • ஜனவரி 18 – இன்று எந்த ராசிக்கு யோகமான நாள்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – யோகம்
    ரிஷபம்         –  கவனம்
    மிதுனம்     –   ஆர்வம்  
    கடகம்         –  சினம்
    சிம்மம்         –   தாமதம்
    கன்னி         –    பகை  
    துலாம்         –     குழப்பம்
    விருச்சிகம்     –  நிறைவு
    தனுசு         –     பயம்  
    மகரம்         –    உற்சாகம்
    கும்பம்         –      உழைப்பு
    மீனம்         –      அமைதி
    சந்திராஷ்டமம்    –      பூரம்

  • ஜனவரி 18 – இன்றைய நல்லநேரம்

    ஜனவரி 18 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – தை 4
    18-ஜன-2024 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : அஷ்டமி
    திதி நேரம் : சப்தமி அ.கா 3.16
    நட்சத்திரம் : ரேவதி கா 8.31
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூரம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • ஜனவரி 17 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – ஆதாயம்
    ரிஷபம்         –  நட்பு
    மிதுனம்     –   தாமதம்
    கடகம்         –  ஜெயம்  
    சிம்மம்         –   உழைப்பு  
    கன்னி         –    எதிர்ப்பு
    துலாம்         –     உற்சாகம்
    விருச்சிகம்     –  இன்பம்
    தனுசு         –     ஓய்வு  
    மகரம்         –    அசதி
    கும்பம்         –      அலைச்சல்  
    மீனம்         –      விருத்தி
    சந்திராஷ்டமம்    –      மகம்

  • ஜனவரி 17 – உழவர் நாள்

    ஜனவரி 17 – உழவர் நாள்
    சோபகிருது வருடம் – தை 3
    17-ஜன-2024 புதன்
    உழவர் நாள்
    கரிநாள்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : சப்தமி
    திதி நேரம் : சஷ்டி அ.கா 4.15
    நட்சத்திரம் : உத்திரட்டாதி கா 9.53
    யோகம் : சித்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : மகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • ஜனவரி 16 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – சிரத்தை
    ரிஷபம்         –  கவலை
    மிதுனம்     –   நன்மை
    கடகம்         –  மகிழ்ச்சி
    சிம்மம்         –   அமைதி
    கன்னி         –    ஓய்வு
    துலாம்         –     ஆக்கம்
    விருச்சிகம்     –  உற்சாகம்  
    தனுசு         –     உயர்வு
    மகரம்         –    உழைப்பு
    கும்பம்         –      நலம்
    மீனம்         –      சிந்தனை
    சந்திராஷ்டமம்    –      ஆயில்யம், மகம்

  • ஜனவரி 16 – மாட்டுப் பொங்கல்

    ஜனவரி 16 – மாட்டுப் பொங்கல்,
    சோபகிருது வருடம் – தை 2
    16-ஜன-2024 செவ்வாய்
    மாட்டுப் பொங்கல்,
    திருவள்ளுவர் தினம்
    கரிநாள்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : சஷ்டி
    திதி நேரம் : பஞ்சமி கா 7.39
    நட்சத்திரம் : பூரட்டாதி கா 11.27
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • கடன் தொல்லை நீக்கும் தை வெள்ளி அம்மன் வழிபாடு…

    அம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமை எத்தனை முக்கியமோ அதுபோல தை வெள்ளிக்கிழமையும் சிறப்பு வாய்ந்தது. தை மாத வெள்ளிக்கிழமையில் அம்மன் கோயிலுக்குச் சென்று வணங்கினால், நம்மையும் நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வாள். தை வெள்ளியன்று அம்மன் ஆலயங்களில் சந்தனக் காப்பு சாத்தி வழிபட்டால், சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும். அம்மன் உள்ளம் குளிர்ச்சியாகி நமக்கு வேண்டும் வரத்தை தருவாள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கடன் தொல்லைகள் நீங்கி நிம்மதி பிறக்கும்.

    தை மாத வெள்ளியன்று அம்மனுக்கு  செந்நிற மலர்கள் சூட்டி வழிபடலாம். செவ்வரளி மாலை சமர்பித்து வணங்குவது சிறப்பு. தை வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் அம்மன் கோயிலுக்குச் சென்று அங்குள்ள துர்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களையும் கண் திருஷ்டி முதலானவற்றையும் நீக்கும். துர்கை சந்நிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபட வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும்.

    அதேபோல தை வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பாயசமோ சர்க்கரைப் பொங்கலோ செய்து, நைவேத்தியம் செய்து ஸ்வாமி படத்துக்கு முன்னே அமர்ந்து பிரார்த்தனை செய்ய நன்மைகள் நடைபெறும். மகாசக்தியின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டியும் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெற வேண்டியும், சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு, செல்வவளம் கிடைத்து குலம் தழைக்கும்.

     

  • கோவில் திருவிழாவில் திரளான ஆண்கள் நடனம் ஆடி காணிக்கை செலுத்திய நிகழ்வு….

    கோவில் திருவிழாவில் நடைபெற்ற வினோத வழிபாடு திரளான ஆண்கள் நடனம் ஆடியபடி காணிக்கை செலுத்தும் நிகழ்வு.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தொட்டம்பாளையம் கிராமத்தில்  ஸ்ரீ ராமலிங்கர் சமேத ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. நூறாண்டுகள் பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம்..

    அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த 12இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை அடுத்து திருவிழாவில்  வைபவம் அழைத்தல், கரக ஊர்வலம் படைக்கலம் கொண்டு வருதல் போன்ற பல்வேறு விசேஷ வைபவங்கள் நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவானி ஆற்றங்கரையில் தீர்த்த குடம் எடுத்தல் பொங்கல் வைத்து சக்தி அழைத்தல் என இந்த தைப்பொங்கல்  விழாவை தொடங்கினர். தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான வீரக்குமார்களின் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

     இதில் சிறுவர்கள் உட்பட ஆண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வீரக்குமாரர்களாக கத்தி போடும் போது அனைவரும் தீசுக்கோ தாயே தீசுக்கோ என்று கூறி கத்திப்போட்டு  சௌடேஸ்வரி அம்மனுக்கு ரத்தத்தை காணிக்கையாக செலுத்தினர். இதில் இளைஞர்கள் ஆடிய கத்தி ஆட்டம் காண்போரை வெகுவாக கவர்ந்தது.

    ஒவ்வொரு வருடமும் தை மாதம் இந்த திருவிழா நடத்தப்படுவதால் தொட்டம்பாளையம் மட்டுமல்லாது சிறுமுகை திருப்பூர் அவிநாசி புளியம்பட்டி சத்தியமங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் இந்த கத்தி போடும் வைபவத்தை காண வந்திருந்தனர்..