Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ஜனவரி 25 – பவுர்ணமி நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – சாந்தம்
    ரிஷபம்         –  முயற்சி
    மிதுனம்     –   நலம்
    கடகம்         –  நன்மை  
    சிம்மம்         –   சினம்
    கன்னி         –    பாராட்டு
    துலாம்         –     அலைச்சல்
    விருச்சிகம்     –  கவனம்
    தனுசு         –     ஆக்கம்
    மகரம்         –    ஆர்வம்
    கும்பம்         –      சிரமம்
    மீனம்         –      மேன்மை
    சந்திராஷ்டமம்    –      கேட்டை

     

  • ஜனவரி 25 – தைப்பூசம்

    ஜனவரி 25 – தைப்பூசம்
    சோபகிருது வருடம் – தை 11
    பவுர்ணமி
    25-ஜன-2024 வியாழன்
    தைப்பூசம்,
    கோவை, மருதமலை, பழநி முருகன்,
    நாகர்கோவில் நாகராஜா தேர்
    கரிநாள்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் : பவுர்ணமி இ 11.56
    நட்சத்திரம் : புனர்பூசம் கா 9.13
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : கேட்டை
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • சிவன், அம்பாள், முருகனுக்கு உகந்த தைப்பூசம்…

    சந்திரன் கடகத்தில் தனது சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் பூச நட்சத்திரத்தில் இருந்து மகர ராசியில் இருக்கும் சூரியனை பார்க்கும் நாளே தைப்பூசம். சக்தியின் வெளிப்பாடும், தெய்வாம்சமும் பொருந்திய காலம் தை மாதம். தைப்பூச நாள் சிவன், அம்பாள், முருகனுக்கு உகந்த நாளாகும்.

    தினசரி கோயிலுக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் வீட்டில் காலை, மாலை இரு வேளையும் காமாட்சியம்மன் விளக்கு அல்லது குத்துவிளக்கு ஏற்றி வைத்து அந்த ஜோதியை வணங்குவது பல காலமாக உள்ள சாஸ்திர சம்பிரதாய வழக்கம். ஆலயத்தில் இறைவனை தரிசித்த பின்னர் கற்பூர ஜோதியை வணங்கி கண்களில் ஒற்றிக் கொள்வது ஆலய வழிபாடுகளின் முக்கிய அம்சம்.

    தைப்பூசத்தின் சிறப்புகள் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிவார்.நடன நிலையில் உள்ள சிவனை, நடராஜர் என வணங்குகிறோம். தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார். இந்த நிலையை உமா மகேஸ்வரர் என்றழைக்கிறோம். ஆகவே இந்த தைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும்.

    தேவ குருவான பிரகஸ்பதிக்கு பூசம் நட்சத்திரம் என்பதால் அன்றைய தினம் குரு வழிபாடு செய்வதும் சிறப்பு. பூச நட்சத்திர நாள் காவடி பிரியன் கந்தனுக்கு மிகவும் விசேஷமான நாள். இந்நாளில்தான் முருகப் பெருமான் வள்ளியை மணமுடித்தார். தாரகாசுரனை வதம் செய்ய தாய் பார்வதியிடம் வேல் வாங்கிய நாள். இந்நாளில் அனைத்து முருகன் ஸ்தலங்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும்.

    தைப்பூச நாளை காணிக்கை செலுத்தும் நாளாக முருக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். பழங்கள், நெல், காய்கறிகள் எது விளைந்தாலும் அதை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகவே காவடிகளில் அவற்றை வைத்து எடுத்து செல்வார்கள்.இந்த நாளில் உடலை வருத்தி நடைபயணம் மேற்கொண்டு முருகப் பெருமானை தரிசிப்பார்கள். தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளிலும், மருதமலை, சிக்கல், வயலூர், குன்றக்குடி, வல்லக்கோட்டை, திருப்போரூர், குன்றத்தூர், வடபழனி என அனைத்து முருகன் கோயில்களிலும் அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும்.

  • தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் தெப்ப திருவிழா தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கோ பூஜையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. தெப்பத் திருவிழாவின் முதல் நாளான நேற்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் முதலில் வெள்ளீஸ்வரர் மூன்று சுற்றுகளும் அதனை தொடர்ந்து காமாட்சி அம்மன் எழுந்தருளி தெப்பத்தில் ஏழு சுற்றுகளும் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

     

    பின்னர் இரவு காமாட்சி அம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. தெப்பத்தில் சென்றுவர குறிப்பிட்ட பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் தெப்ப திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் கோவில் ஜப்பம் அருகே குவிந்து இருந்தனர் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மாங்காடு போலீசாரம் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    நேற்று தொடங்கிய தெப்ப திருவிழாவானது வரும் 26 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் செயல் அலுவலர் கவெனிதா மற்றும் பரம்பரை தர்மகர்த்தா மணலி. சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

  • ஜனவரி 24 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – வெற்றி
    ரிஷபம்         –  தனம்
    மிதுனம்     –   ஓய்வு  
    கடகம்         –  மறதி   
    சிம்மம்         –   சினம்
    கன்னி         –    உற்சாகம்
    துலாம்         –     நிறைவு
    விருச்சிகம்     –  செலவு   
    தனுசு         –     பகை
    மகரம்         –    நன்மை
    கும்பம்         –      பெருமை
    மீனம்         –      லாபம்
    சந்திராஷ்டமம்    –      அனுஷம்

  • ஜனவரி 24 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்

    ஜனவரி 24 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – தை 10
    சுபமுகூர்த்த நாள்
    24-ஜன-2024 புதன்
    குன்றக்குடி,
    திருவிடைமருதூரில் தேர்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : சதுர்த்தசி இ 10.43
    நட்சத்திரம் : திருவாதிரை கா 7.43
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அனுஷம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • ஜனவரி 23 – பிரதோஷ நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – போட்டி
    ரிஷபம்         –  பொறுமை
    மிதுனம்     –   நலம்
    கடகம்         –  லாபம்  
    சிம்மம்         –   இரக்கம்   
    கன்னி         –    சிந்தனை
    துலாம்         –     மறதி
    விருச்சிகம்     –  சோதனை  
    தனுசு         –     நட்பு
    மகரம்         –    வெற்றி
    கும்பம்         –      அசதி  
    மீனம்         –      புகழ்
    சந்திராஷ்டமம்    –      விசாகம்

  • ஜனவரி 23 – பிரதோஷம்

    ஜனவரி 23 – பிரதோஷம்
    சோபகிருது வருடம் – தை 9
    பிரதோஷம்
    23-ஜன-2024 செவ்வாய்
    காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேர்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : திரையோதசி
    திதி நேரம் : திரையோதசி இ 9.56
    நட்சத்திரம் : மிருகசீரிசீ டம் கா 6.31
    யோகம் : மரணயோகம்
    சந்திராஷ்டமம் : விசாகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • தஞ்சாகூர் ஸ்ரீ பரஞ்ஜோதி ஈஸ்வரர் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா…

    சிவகங்கை மாவட்டம் தஞ்சாகூர் ஸ்ரீ அரூபசக்தி ஞானாம்பிகை சமேத ஸ்ரீ பரஞ்ஜோதி ஈஸ்வரர் திருக்கோவில் ஆலய – அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக  பெருவிழா.

    சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தஞ்சாகூர்   கிராமத்தில் ஸ்ரீலஸ்ரீ சிவகுமார மௌனகுரு சுவாமிகள் நல்லாசியுடன் ஆதி வில்வ வன ஷேத்திரம் என்னும் ஸ்ரீ அரூபசக்தி ஞானாம்பிகை சமேத ஸ்ரீ பரஞ்ஜோதி ஈஸ்வரர் திருக்கோவில் ஆலய – அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக  பெருவிழா  காலை மங்கள இசை பாராயணம் வேத பாராயணம் நான் மறை போற்றும் நாயகன் பரஞ்ஜோதிஸ்வரருக்கு  நான்காம் கால வேள்விகள் தீபாராதனையுடன்.தொடங்கி பரிவார கலசங்கள் அனைத்து மூல மூர்த்திகளின் விமானங்கள் புறப்பாடாகி  அருள்மிகு பரஞ்ஜோதிஸ்வரர். ஞானாம்பிகை ராஜகோபுரத்திற்கு  மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை பரஞ்ஜோதிஸ்வரர் மூலஸ்தான கும்பாபிஷேகம் மஹா அபிஷேகம் கோ பூஜை மஹா தீபாராதனை போன்ற பூஜைகள் நடைபெற்றது.

    இக்கும்பாபிஷகம் விழாவை காண சிவகங்கை மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில்  இருந்து சுமார்  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர்.

     

  • ஜனவரி 22 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – பெருமை
    ரிஷபம்         –  அமைதி
    மிதுனம்     –   உழைப்பு  
    கடகம்         –  ஆக்கம்
    சிம்மம்         –   ஆதரவு  
    கன்னி         –    பாராட்டு
    துலாம்         –     பகை
    விருச்சிகம்     –  நஷ்டம்
    தனுசு         –     விருத்தி  
    மகரம்         –    நட்பு
    கும்பம்         –      முயற்சி
    மீனம்         –      இன்பம்
    சந்திராஷ்டமம்    –      சுவாதி