Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ஜனவரி 28 – இன்றைய நல்லநேரம்

    ஜனவரி 28 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – தை 14
    28-ஜன-2024 ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : திரிதியை
    திதி நேரம் : துவிதியை அ.கா 3.35
    நட்சத்திரம் : மகம் ம 3.54
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூராடம்,உத்திராடம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • ஜனவரி 27 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – ஆக்கம்
    ரிஷபம்         –  பரிசு
    மிதுனம்     –   தனம்  
    கடகம்         –  மறதி   
    சிம்மம்         –   வெற்றி  
    கன்னி         –    போட்டி
    துலாம்         –     சாதனை
    விருச்சிகம்     –  பகை
    தனுசு         –     யோகம்
    மகரம்         –    நிறைவு
    கும்பம்         –      தடங்கல்
    மீனம்         –      ஆரோக்கியம்  
    சந்திராஷ்டமம்    –      மூலம், பூராடம்

     

  • ஜனவரி 27 – தை 13

    ஜனவரி 27 – தை 13
    சோபகிருது வருடம் – தை 13
    27-ஜன-2024 சனி ரஜப் 15
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : துவிதியை
    திதி நேரம் : பிரதமை அ.கா 1.36
    நட்சத்திரம் : ஆயில்யம் ம 1.24
    யோகம் : மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கொடி ஏற்றம்…

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் காலை 7 மணி அளவில் நடராஜ பெருமானுக்கு பள்ளி அறையிலிருந்து நடராஜப் பெருமானின் பாதம் ஊர்வலமாக புறப்பட்டு நடராஜ பெருமானின் கனகசபையில் வந்து அடைந்தவுடன் பூஜைகள் நடைபெற்றது.

    பின்பு குடியரசு தினமான இன்று நமது இந்திய தேசியக் கொடியை வெள்ளித் தட்டில் வைத்து சிதம்பரம் நடராஜர் ஆலய பொது தீட்சதர்கள் சிவராம தீட்சதர் தலைமையில் ஊர்வலமாக நடராஜப் பெருமானின் காலடியில் வைத்து பூஜித்து பின்பு ஊர்வலமாக புறப்பட்டு மேல தாளங்கள் வாதியங்கள் முழங்க நமது இந்திய தேசியக் கொடியை ஊர்வலமாக கொண்டு சென்று 142 அடி உயரமுள்ள கீழ கோபுரத்தில் கொடி ஏற்றினார்கள்.

    பின்னர் சிதம்பர நடராஜர் கோவில் தீட்சதர்கள்  இந்திய தேசிய கொடிக்கு மரியாதை தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் வீட்டு விழாக்கள் போல் குடியரசு தின விழாவை கொண்டாடினார்கள்

  • நெல்லையப்பர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் ஏற்றப்பட்ட தேசியக்கொடி

    குடியரசு தினத்தை முன்னிட்டு நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் தேசியக்கொடி ஏற்றப்பட்டது கோவில் யானை காந்திமதி மற்றும் கோவில் ஊழியர்கள் வணக்கம் செலுத்தி தேசியக்கொடிக்கு மரியாதை செய்தனர்.

     தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவிலில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவில் முன்பு அமைந்துள்ள விக்டோரியா மகாராணி அவர்களால் வழங்கப்பட்ட தூண் முன்பு தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது கோவிலில் தேசியக்கொடி வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் யானை காந்திமதி முன் செல்ல ஊர்வலமாக கோவில் ஊழியர்களால் தேசிய கொடி எடுத்து வரப்பட்டது.

     தொடர்ந்து கொடிகம்பம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேசிய கொடியை கோவில் செயல் அதிகாரி ஏற்றி மரியாதை செய்தார் அப்போது கோவில் யானை காந்திமதி மூன்று முறை பிளிறி தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்ததது.அதே வேளையில் கோவில் ஊழியர்களும் தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர் தொடர்ந்து தேசியக்கொடிக்கு மகா தீபாராதனை நடைபெற்று குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

  • ஜனவரி 26 – குடியரசு தினம்

    ஜனவரி 26 – குடியரசு தினம்
    சோபகிருது வருடம் – தை 12
    26-ஜன-2024 வெள்ளி
    குடியரசு தினம்,
    சுசீந்சீ திரம் தாணுமாலையன் தேர்
    வாஸ்து நாள்(காலை 10.41 – 11.17)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : பிரதமை
    திதி நேரம் : பவுர்ணமி முழுவதும்0.00
    நட்சத்திரம் : பூசம் கா 11.07
    யோகம் : மரணயோகம்
    சந்திராஷ்டமம் : கேட்டை,மூலம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • தஞ்சை பெருவுடையார் கோயில் மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

    தஞ்சை பெருவுடையார் கோயில் மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

    தை மாதம் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.

  • திருவாரூர் சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் தைபூச திருவிழா!

    திருவாரூர் சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் தைபூச திருவிழா!


     

  • ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் அதிர்ஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா!

    ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் அதிர்ஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா!

    திருவண்ணாமலை மாவட்டம் மாதலம்பாடி மதுரா கணேசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலய அதிர்ஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

  • மகாலிங்க சுவாமி கோவில் தைப்பூச பெருவிழாவையொட்டி பஞ்சரத தேரோட்டம்!

    மகாலிங்க சுவாமி கோவில் தைப்பூச பெருவிழாவையொட்டி பஞ்சரத தேரோட்டம்!

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி கோவில் தைப்பூச பெருவிழாவையொட்டி பஞ்சரத தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.