Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Thunbangalai Pookum Perumal Slogam

    இந்த துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    துன்பங்களை போக்கும் பெருமாள் ஸ்லோகம்
    ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்

     ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !

    பொதுப்பொருள் : 

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

    இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.

  • Ragu Kalathil Elumichai vilaketri vazhipattal

    எலுமிச்சை தீய ஆவிகளை நீக்கும் தந்திரத்தில் பயன்படுகிறது. தீய ஆவிகளை அகற்ற எலுமிச்சையானது திரி சூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இரு புறங்களிலும் வைக்கப்படுகிறது.

    கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க இது இந்தியாவில் மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதனை நோய்வாய்பட்ட மக்களின் அருகில் தொங்கவிடும் போது, இது தீய ஆவிகளை விரட்டி அவர்களை நோய்களிலிருந்து குணமடைய செய்யும் என்று நம்பப்படுகிறது.

    எலுமிச்சை விளக்கு எப்படி செய்ய வேண்டும்.?

    துர்கா பூஜையின் போது எலுமிச்சை விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. எலுமிச்சை தோல் மெல்லியதாக இருக்க வேண்டும். (ஒற்றை எண்களில், அதிகபட்சம் 9) அதனை நெகிழ்வாக உருட்டிக் கொள்ள வேண்டும். அதனை செங்குத்தாக சரிபாதியாக வெட்டி கொள்ள வேண்டும், கிடைமட்டமாக வெட்டக் கூடாது.

    சாற்றினைப் பிழிந்து வெளியேற்ற வேண்டும். பின் அந்த பாதி எலுமிச்சையை உள்புறம் வெளியே வருமாறு திருப்பி, ஒரு கிண்ணம் போல் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை எண்ணெய் அல்லது நெய் கொண்டு நிரப்பி திரியிட்டு விளக்கேற்ற வேண்டும்.!

    எலுமிச்சை விளக்கின் முக்கியத்துவம்.

    எலுமிச்சை நம்மை ஒத்ததாகும். மேலும் நாம் நமது உட்பகுதியை கடவுளுக்கு காட்ட வேண்டும். மாயை, பேராசை, காமம் மற்றும் கோபம் ஆகியவற்றை கடவுளுக்கு முன்பாக வெளியே ஏறிய வேண்டும். எலுமிச்சைக்கு உள்ளே இருக்கும் வெள்ளை தோல் நமது தூய மனதையும், இருண்ட பகுதி (மறைந்திருக்கும் பச்சை விதைகள்) மாயையையும் குறிக்கும்.

    விளக்குத் திரியின் முக்கியத்துவம்.

    வாழைத் தண்டில் செய்யப்பட்ட திரியானது குற்றங்களையும், ஜென்ம பாவங்களையும் நீக்குகிறது. பருத்தியில் செய்யப்பட்ட திரி நல்ல அதிர்ஷ்டத்தையும், தாமரை தண்டில் செய்யப்படும் திரி முற்பிறவி வினைகளை நீக்கி வளமான வாழ்க்கையை நிறுவவும், வெள்ளை பூண்டு வகை செடியில் செய்யப்படும் திரி அதிர்ஷ்டம் மற்றும் சொத்துக்களைப் பெருக்கவும், புதிய மஞ்சள் பருத்தி துணி, பராசக்தியின் அருளைப் பெற்று சிக்கல்களிலிருந்து விடுபடவும் மற்றும் புதிய சிவப்பு பருத்தி துணி திருமணம் மற்றும் குழந்தை பெறும் தடைகளை நீக்கி மாயம், மந்திரம், தந்திரம் போன்றவற்றிலிருந்து விடுபடவும் உதவுகின்றது.!

    எந்த நாட்களில் விளக்கேற்றுவது சிறந்தது?

    நோய்களால் அதிகம் அவஸ்தைப்படுவோர், அது விரைவில் குணமாக ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால் செவ்வாய் கிழமையன்று ராகு காலத்திலும், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வேறுசில வேண்டுதல்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்திலும், 2 எலுமிச்சை விளக்கேற்றி அம்மனை மனமுருகி வேண்டினால், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, செழிப்போடும் சந்தோஷமாகவும் வாழலாம்
     

  • Vennai Sendhura Piriyarana Anjaneyar

    ராம ராவண யுத்தம் நடந்தபோது ராமரையும் லட்சுமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான். அப்போது ராவணன் சரமாரியாய்  அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப்பட்டார். அந்த காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக்கொண்டாராம். 

    வெண்ணெய்  சீக்கிரமாக உருகும் தன்மை உடையது. அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை.  அதனால் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது. 

    செந்தூரம் ஏன்? 

    ராம ராவண யுத்தம் முடிந்த பிறகு சீதையை பார்த்து செய்தியை கூற அனுமன் சென்ற போது சீதை நெற்றி வகிட்டில் செந்தூரம் அணிந்து இருந்ததை  பார்த்து இது குறித்து சீதையை வினவ ராமன் ராவணனுடன் யுத்தம் செய்ய செல்லும் போது அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டி செந்தூரம்  அணிந்ததாக கூறினார். 

    நெற்றியில் சிறியதளவு இட்டதற்கே இத்தனை பெரிய வெற்றி ராமனுக்கு என்ற போது உடல் முழுவதும், பூசினால் ராமன்  எவ்வளவு வெற்றி வாகை கூட முடியும் என எண்ணி உடல் முழுதும் ஆஞ்சநேயர் செந்தூர் அணிந்து கொண்டதாகவும், இதுவே அனுமனுக்கு  செந்தூரம் சாத்தும் வழக்கம் வர காரணம் என்பதாகவும் வரலாறு. 
     

  • Anumanukku Vetrilai Maalai. Vada Malai En

    அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த போது சீதையை தேடிப்போன அனுமன் சிம்சுகா மரத்தடியில் வீற்றிருந்த சீதையை கண்டதும் ஸ்ரீ  ராமனை பற்றி சொல்லி சீதையின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். 

    பொதுவாக யாரேனும் பெரியவர்களை நமஸ்கரித்தால் அவர்களை அட்சதை தூவி  ஆசீர்வதிப்பது வழக்கம். அனுமன் சேவித்த போது சீதைக்கு அட்சதையோ புஷ்பமோ கிடைக்கவில்லை. 

    ஆனால் அருகில் தடவிய போது வெற்றிலை  இலைகள் கிடைக்க அதனையே அனுமன் தலை மீது தூவ அனுமனும் அந்த வெற்றிலைகளை ஒரு நூலில் கோர்த்து சீதையிடம் கொடுத்து தனக்கு  மாலையாக அணிவிக்குமாறு கேட்டு அதை கழுத்தில் அணிந்ததாகவும் அதன் காரணமே அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவதாகவும்  சொல்கிறார்கள்.
    வடை மாலை

    நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்து வடை  சாப்பிட்டால் தசைப்பிடிப்பு ஏற்படும். 

    ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமாப எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே  அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய்  அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடை செய்து கொடுத்ததாக ஐதீகம். 
     

  • Aaru Balangalai Allitharum Anjaneyar

    நேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம். அனுமன் ஜெயந்தியன்று `ராம ராம ராம' நாமம் சொல்வது விசேஷம். 

    `ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,  
    வாயுபுத்ராய தீமஹி, தந்தோ
    ஹனுமன் ப்ரசோதயாத்' 

    என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும். இதையும் சொல்லி வழிபடலாம். அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம். வெற்றிலை அல்லது வடை மாலை சாத்தலாம். வெண்ணெய் சாத்தி வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். 

    ஆன்ம பலம், மனபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன். அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும். 
     

  • Thiruppavai Padal 21

    ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
    மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
    ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
    ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
    தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
    மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
    ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
    போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

    பொருள்:

    கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.

    விளக்கம்:

    “மன்னாதி மன்னர்களெல்லாம் உன் காலில் விழ காத்துக் கிடப்பது உன்னிடமுள்ள பயத்தால்! ஆனால், நாங்கள் அவர்களைப் போல பயந்த சுபாவம் உள்ளவர்கள் அல்ல! நாங்கள் வா என்று அழைத்தால் நீ வந்தாக வேண்டும். வர மறுத்தால், உன்னை எங்கள் அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம். அப்போது, நீ தப்பவே முடியாது என்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். ஆம்…ஆண்டாள் மாலைக்குள் புதைந்து கிடந்த ஒரு தலைமுடியால் அவனைக் கட்டிப் போட்டு விட்டாளே! அந்த ரங்கநாதன் அவளிடம் வசமாக சிக்கிக் கொண்டானே! இதுதான் பக்தியின் உச்சநிலை. பகவானிடம் நம்மை அர்ப்பணித்து விட்டால், அவன் நம்மிடமிருந்து தப்பி ஓடமுடியாது என்பது இப்பாடலின் உட்கருத்து.
     

  • January 5 – Rasi Palan

    ஜனவரி 5 அனுமன் ஜெயந்தி
    விளம்பி வருடம் – மார்கழி 21
     அமாவாசை 
    05-ஜன-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    முழுவதும்    0.00
    நட்சத்திரம்    :    மூலம்    மா    4.15
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரோகிணி,மிருகசீரிடம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   நன்மை 
    ரிஷபம் – லாபம் 
    மிதுனம் – கவனம்  
    கடனம் –  உதவி 
    சிம்மம் – ஆர்வம் 
    கன்னி – வரவு 
    துலாம் –  உயர்வு  
    விருச்சிகம் – செலவு  
    தனுசு – வெற்றி 
    மகரம் – பெருமை 
    கும்பம் – களிப்பு 
    மீனம் – இன்பம் 

  • Sivanukku Mattum Poojai Seiyalama?

    சிவலிங்கத்தை முறையாக பராமரிக்க முடியாவிடில், வீட்டில் வைப்பது நல்லதல்ல. வழக்கமான பூஜைகளை விட சிவலிங்க பூஜைகள் தனித்துவம் வாய்ந்தது. அதன் பூஜை முறைகளும் வித்தியாசமானது. தவறாக பூஜை செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    முதலில் குளித்தவுடன் கங்கை தீர்த்தத்தை கட்டாயம் தெளிக்க வேண்டும். குளிப்பதனால் உடல் சுத்தமானாலும், கங்கை நீர் தெளித்தால் தான் மனம் சுத்தமாகும் என்பது ஐதீகம்.

    ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சிவலிங்கத்தை எடுத்து வைப்பதற்கு முன்பாக சிவலிங்கத்தின் காலடியில் விழுந்து வணங்க வேண்டும். பின்னர் அதனை கங்கை நீர் கலந்த சுத்தமான நீரில் முக்கி எடுக்க வேண்டும். கல் வடிவில் இருந்தால் அதன் மீது கங்கை நீர் கலந்த நீரை தெளிக்க வேண்டும்.

    பதப்படுத்தப்பட்ட பாலை சிவலிங்கத்திற்கு ஊற்றி பூஜை செய்யக் கூடாது. ஐஸ் பாலில் தான் பூஜை செய்ய வேண்டும்.தினசரி சிவலிங்க வழிபாட்டிற்கு முன்பு 3 வரி சந்தன பட்டையை லிங்கத்தின் மீது பூசவும்.சிவலிங்கத்தை வீட்டில் வைக்க வேண்டும் என்றால், தங்கம், வெள்ளி அல்லது பித்தளையில் செய்த நாகயோனி நிழலில் வைக்க வேண்டும்.

    வீட்டில் சிவலிங்கத்தை தண்ணீர் ஊற்றிருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். லிங்கத்தின் மீது தண்ணீர் படவில்லை என்றால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.சிவலிங்கத்தை மட்டும் தனியாக வைத்து பூஜை செய்யக் கூடாது. அத்துடன் கௌரி அல்லது விநாயகரின் களிமண் சிலையை வைத்து பூஜை செய்ய வேண்டும்.சிவலிங்கத்திற்கு பூஜை செய்த எந்த ஒரு பொருளையும் பிரசாதமாக உண்ணக் கூடாது.

    எப்போதும் சிவனுக்கு மிகவும் பிடித்த வெள்ளை பூக்களால் அர்ச்சனை செய்ய்யுங்கள்.தினமும் சிவலிங்கத்தை துடைத்து சுத்தம் செய்து பூஜை செய்ய வேண்டும். பூஜையை தவறாமல் செய்தால் சிவனின் அருள் கிட்டும்
     

  • Jayanthiku Ellam Jayanthi Anjaneyar Jayanthi

    மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. கடவுளர்களுக்கும் தேவர்களுக்கும் பகல் வேளை தொடங்கும் முன்பாக வரும் பிரம்ம முகூர்த்த காலம் என்று  கருதப்படும் புண்ணிய மாதம்.  

    சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக  அவதரித்தவனே ஆஞ்சநேயன். அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. 

    ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.  ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும்.  நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி,  வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.
     

  • Anjaneyar viradham Irupadhu Eppadi

    ஆஞ்சநேயருக்கு தொடர்ந்து செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

    ஆஞ்சநேயரை வீட்டில் பூஜை செய்யும் பக்தர்கள் தனியாக ஒரு பூஜை அறையை அமைத்துக் கொள்ள வேண்டும். அங்கே ஆஞ்சநேயரின் படத்தையோ, சிலையையோ வைக்க வேண்டும். பூஜை காலத்தில் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

    பூஜை அறையினுள் துளசி இலைகள் போட்டு தீர்த்தம் வைத்திருக்க வேண்டும். சுவாமிக்கு பிடித்தமான நிவேதப் பொருட்களையும் வைத்திருக்க வேண்டும். பூஜை செய்பவர்கள் உடல் மட்டுமின்றி உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும். அதுபோல பூஜை அறையையும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை அறை தரையை துணியால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

     
    பூஜை அறையில் எப்போதும் ஆராதனை புகை மணம் வீச வேண்டும். இவையெல்லாம் நாம் ஆஞ்சநேயருடன் மனம் ஒன்ற உதவும். வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து அனுமன் சாலீசா துதியைப் பாராயணம் செய்யலாம்.

    செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் தொடர்ந்து பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். தொடர்ந்து ஒரு மண்டலம் பாராயணம் செய்தால் தடைப்பட்ட திருமணம் உள்பட சுபாகரியம் நிறைவேறும்.