Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Selvam Serthu Pugazh Oonga Vlampuri Sangu

    ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ந்து இருக்கும். 

    கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது. 

    வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும். 

    இதையே தர்ம சாஸ்திரம். "சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ… ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று விளக்குகிறது. 

    சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். 

    கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார். 

    நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர். 

     வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும். 

     செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும். 

     அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும். 

    சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும். 

     ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம். 

    பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும். 

    பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது சங்கை பூஜை அறையில் வைத்திருப்பது மிகவும் நன்மை பயக்கும், ஏனேன்றால் பல அரிய புண்ணிய சக்திகளும், தர்ம சக்திகளும் சங்குகளில் குடிகொண்டிருக்கின்றன புனித தீர்த்தங்கள், கடல்களில் சங்குகளில் நீரை ஏந்தி தர்ப்பணம் செய்வது பித்ருக்களின் ஆசியை நமக்கு பெற்றுத் தருகிறது. நல்ல ஒழுக்கத்திற்கும் நலவழி காட்டுகிறது.

    வாஸ்து பூஜை, அம்பாள் பூஜை, சிவ, விஷ்ணு, பிரம்ம பூஜைகளுக்கான பிரத்யேக சங்குகள் வலம்புரிச் சங்குகள் தான். அனைத்துச் சங்குகளில் எப்போதும் விதவிதமான ஓங்காரப் பிரணவ சப்தம் ஒலித்துக் கொண்டிருக்கும். இறைவன் பிரணவசக்கரமகவும், பிரணவ இயந்திரமாகவும், பிரபஞ்சத்திற்கு வழங்கிய போது சங்கில் பூரணம் பெற்றது.
     

  • Sani Bagavan Thandanayil Irundhu Thappika

    சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம். ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.

    எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது – அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் – சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி – கொடுமையாக தண்டிக்கிறார்.

    ஆண்டவனுக்கு தெரியும். நமக்கு எது, எப்போ கிடைக்கனும்னு. மேல நடக்க வேண்டியதை பார்க்கலாம். இதுக்கு மேல நீங்கதான் ராஜா! கலக்க போறீங்க.

    இது எல்லாமே, சனியால அவஸ்தை பட்டவங்களுக்கு நல்லா புரியும். மத்தவங்களுக்கு ஒரு காமெடியா தெரியலாம். கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் – யாரும் சனியோட கடுமையாக பாதிக்க படக்கூடாதுங்கிறதுக்காக ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம். 

    பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று
    சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.
        
    வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும். அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும்.இந்த பச்சரிசி மாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்ளும். 

    இப்படி இரண்டே கால் வருடங்கள் வரை எறும்புக் கூட்டில் இருப்பதை முப்பத்து முக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரக நிலை மாறும். அப்படி மாறியதும்,அதன் வலு இழந்து போய்விடும். இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப் போடவேண்டும்.

    ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள். இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச் சனி,அஷ்டமச் சனி,கண்டச் சனி,அர்த்தாஷ்டகச் சனி – சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.
    உடல், ஊனமுற்றவர்களுக்கு – காலணிகள், அன்ன தானம் – அளிப்பது , மிக நல்லது.

  • Thirupathy Arjitha Seva Tickets

    ஜனவரி மாதம் குலுக்கல் முறையில் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் இணையதளம் மூலம் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்து விடுகின்றனர்.
    அவ்வாறு ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளை தேவஸ்தானம் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு அளித்து வருகிறது. 

    இந்த டிக்கெட்டுகளைப் பெற விரும்பும் பக்தர்கள் சேவை நாளின் முன்தினம் திருமலை மத்திய விசாரணை அலுவலகத்தில் உள்ள விஜயா வங்கியில் தங்கள் பெயர், ஆதார் எண், பெருவிரல் ரேகை, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றை அளித்து, சேவா டிக்கெட்டுகளைப் பெற விண்ணப்பிக்க வேண்டும். 

    விண்ணப்பங்களை மாலை 5 மணிக்கு குலுக்கல் நடத்தி, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அதிகாரிகள் குறுந்தகவல் அனுப்புவர். 

    தகவல் பெற்ற பக்தர்கள் மத்திய விசாரணை அலுவலகத்துக்குச் சென்று, தங்கள் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டு, மறுநாள் அதில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்குச் சென்று, ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம்.
    அதன்படி, ஜனவரி மாதம் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இதனை திருப்பதி திருமலை தேவஸ்தான இணையதளத்தில் http://www.tirumala.org காணலாம். 

  • Sennimalai Murugan koil Thai Poosam

    சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் தைப்பூச தேர்த் திருவிழா 12 நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் தைப்பூச தேர்த்திருவிழா ஜனவரி 13 ஆம் தேதி காலை 7 மணிக்குமேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 8 மணி, 14 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பல்லக்கு சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

    15 ஆம் தேதி இரவு 8 மணிக்கு மயில் வாகனக்காட்சியும், 16 ஆம் தேதி காலை, பகல், இரவு மண்டபக் கட்டளை நிகழ்ச்சியும், 17 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெள்ளி மயில் வாகனக் காட்சியும், 18 ஆம் தேதி இரவு 8 மணிக்கு யானை வாகனக் காட்சியும், 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கைலயங்கிரி வாகனக் காட்சியும், இரவு 8 மணிக்கு காமதேனு வாகனக் காட்சியும் நடைபெறுகிறது. 

    20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துகுமார சுவாமிக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு வசந்த திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறும். தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி 21 ஆம் தேதி  நடைபெறுகிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு கைலாசநாதர் கோயிலில் வள்ளி – தெய்வானை சமேத முத்துகுமார சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, காலை 6 மணிக்குமேல் 7 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். 

    தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதரிசனம் 25 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, அன்று காலை 9 முதல் கைலாசநாதர் கோயிலில், வள்ளி-தெய்வானை சமேத முத்துகுமார சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மகா தரிசனம் நடைபெறும். அப்போது, நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி நாதஸ்வர தவிலிசை கச்சேரியுடன் திருவீதி உலா காட்சி நடைபெறும். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். 26 ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர்த் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவுபெறுகிறது. 
     

  • Thiruppavai Padal 23

    மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
    வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
    மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
    போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
    கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
    சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
    காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

    விளக்கம்:

    எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு…என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும். இதைத்தான் ஆயர்குலப் பெண் கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.
     

  • January 7 – Rasi Palangal

    ஜனவரி 7
    விளம்பி வருடம் – மார்கழி 23
    07-ஜன-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    பிரதமை    கா    9.23
    நட்சத்திரம்    :    உத்திராடம்    இ    8.43
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவாதிரை,புனர்பூசம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   யோகம் 
    ரிஷபம் – புகழ் 
    மிதுனம் – சாந்தம் 
    கடனம் –  அமைதி
    சிம்மம் – பொறுமை 
    கன்னி – கஷ்டம் 
    துலாம் –  பரிசு  
    விருச்சிகம் – ஓய்வு 
    தனுசு – சலனம் 
    மகரம் – பிரீதி
    கும்பம் – நலம் 
    மீனம் – ஆர்வம் 

  • Thirupathy Arjitha Sevai Reservation

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல்  மாதம் நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு கோட்டா வெளியீடப்பட்டுள்ளது.

    ஏப்ரல்  மாதத்திற்கான  ஆர்ஜித சேவை முன்பதிவு செய்வதற்கான கோட்டா வெளியிடப்பட்டுள்ளது.  இதில் 10,061 டிக்கெட் குலுக்கல் முறையில் பதிவு செய்யும் விதமாகவும்,  53 ஆயிரத்து 250 டிக்கெட்டுகள் பொதுப்பிரிவில் நேரடியாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது.

    ஆன்லைன் குலுக்கல் முறையில் 10,061 டிக்கெட்

    சுப்ரபாதம்  -7,836
    தோமாளை – 130
    அர்ச்சனை – 130
    அஷ்டதள பாதபத்ம ஆராதனை – 240
    நிஜபாத தரிசனம் – 1,725
    விசேஷ பூஜை – 2,500
    பொது கோட்டா  ( GENERAL CATEGORY ) 53,250
    கல்யாண உற்சவம் – 11,875
    ஊஞ்சல் சேவை – 3,750
    ஆர்ஜித பிரம்மோற்சவம் – 6,875
    வசந்த உற்சவம் – 12,650
    சகஸ்கர தீப அலங்கார சேவை – 15,600

     இந்த டிக்கெட்  www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Kanniyakumari Thirupathy Koil Kumbabishegam

    கன்னியாகுமரியில் ரூ 2.50 கோடியில் வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 27ம் தேதி  நடைபெற உள்ளதாக செயல் அலுவலர் அனில்குமார்  சிங்கால் தெரிவித்துள்ளார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் இருந்து குறைகள் , ஆலோசனைகள், கருத்துக்களை கேட்கக்கூடிய டயல் யுவர் இ.ஓ. நிகழ்ச்சி இன்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் இந்த மாதம் ஜனவரி 8 மற்றும் 22ம் தேதிகளில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனத்தில் இரண்டு நாட்களுக்கு 8 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

     9 மற்றும் 23ம் தேதிகளில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பெற்றோர்களுடன் சுபதம் நுழைவாயில் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த மாதம் 27ஆம் தேதி கன்னியாகுமரியில் 2.50 கோடி ரூபாயில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுள்ள வெங்கடேஷ்வர சுவாமி  கோவில் திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மார்ச் 13-ஆம் தேதி ஐதராபாத்தில் மாதிரி கோவில் திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

    கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில்  உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில் 100 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பதி  மற்றும் அதனை சுற்றியுள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில் ,அப்லாயகுண்டா பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்  சுவாமி கோவிலில் நடைபெறும்  ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் பக்தர்கள் பெரும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. 

    ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சேவை செய்யக்கூடிய ஸ்ரீவாரி சேவா தன்னார்வத் தொண்டர்களுக்கு குலுக்கல் முறையில் அவர்கள் சேவை புரிவதற்கான பணி இடம்    தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கப்படுகிறது. வம்ச பாரம்பரிய அர்ச்சகர்கள் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் இருவேறு தீர்ப்புகளை வழங்கி உள்ளது அவற்றை கருத்தில்  வைத்துக்கொண்டு விரைவில் நடைபெறும் அறங்காவலர் குழு கூட்டத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். ஏழுமலையான் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள நான்கு மாடவீதிகளில் 280 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வரும் ஆறு மாதங்களில் மேலும் 1100 சிசிடிவி கேமராக்கள் பெருத்தப்பட்டு  கண்காணிப்பு கேமராவின் கீழ் கோயில் மற்றும் நான்கு மாட வீதி  கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார்.
     

  • Thiruppavai Padal 22

    அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
    பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
    சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
    கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
    செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
    திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
    அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
    எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்
    களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!

    விளக்கம்:

    இறைவனின் கடைக்கண் பார்வை பட்டால் போதும். சாபங்கள் கருகிப்போகும். எப்படி அவனது பார்வையை நம் மீது திருப்புவது. மிக எளிதாக ஆண்டாள் பாடிய திருப்பாவையின் பாடல்களையும் மார்கழியில் மட்டுமல்ல! எந்நாளும் பக்தியுடன் படித்தால் போதுமே! அதற்கு அவகாசமில்லையா! அவள் சொல்லியிருக்கிறாளே! இந்த பாவையில் கோவிந்தா, விக்ரமா போன்ற எளிய பதங்களை… அவற்றைச் சொன்னாலே போதுமே! அவனது பார்வை பட்டுவிடும்.
     

  • January 6 – Rasi Palanagal

    ஜனவரி 6
    மார்கழி 22
    06-ஜன-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    அமாவாசை    கா    7.34
    நட்சத்திரம்    :    பூராடம்    மா    6.18
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மிருகசீரிடம்,திருவாதிரை
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   லாபம் 
    ரிஷபம் – மகிழ்ச்சி 
    மிதுனம் – களிப்பு  
    கடனம் –  சோர்வு 
    சிம்மம் – மறதி
    கன்னி – தனம் 
    துலாம் –  ஓய்வு  
    விருச்சிகம் – நிம்மதி
    தனுசு – பாராட்டு
    மகரம் – அலைச்சல்  
    கும்பம் – ஆர்வம் 
    மீனம் – யோகம்