Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Mananoi Theerkum Thirumurugan Poondi

    நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார கோயில்கள் உள்ளன. அதில் கோவை மாவட்டத்தில் உள்ள திருமுருகன் பூண்டியும் ஒன்று. 
    கோவை மாவட்டம் அவிநாசி அருகே உள்ளது திருமுருகன் பூண்டி. சிறப்பு வாய்ந்த முருகன் கோவில் இது. பெரும்பாலான கோவில்களில், சுப்ரமணியர் சிலை, முன்புறம் மூன்று முகங்களும், பின்னால் மூன்று முகங்களுடனும் அமைந்திருக்கும்.

    இக்கோவிலில் மட்டும், முன்னால் தெரியும் வகையில் ஐந்து முகங்கள் அமைந்துள்ளன. ஆறாவது முகம், பின்னால் அமைந்துள்ளது. அந்த முகம், “அதோ முகம் என அழைக்கப்படுகிறது.
    இம்முகத்தை நேரடியாக பார்க்கக் கூடாது என்பதால், கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் தெற்கு நோக்கி சுவாமி அமர்ந்திருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பு.

    மேலும், திருச்செந்தூரில், வதம் செய்துவிட்டு, செந்தில் வேலவன் திருமுருகன்பூண்டிக்கு வந்து விட்டதால், திருச்செந்தூர் கோவில் மூல ஸ்தானத்துக்கான மூலவர், இங்கு அமைந்துள்ளதாகவும் வரலாறு உள்ளது.

    வள்ளி, தெய்வானையுடன் ஒரே சன்னதியில் அமைந்துள்ளதும், முருகன் பிடித்த லிங்கமும் சுப்ரமணியர் கருவறையில் உள்ளது.

    மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து, தீர்த்தங்களில் தினமும் குளித்து, 48 மண்டலங்கள் வழிபட்டு, அதோ முகத்தை பார்த்தால் போதும் மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை. மருந்து தேவையில்லை சுவாமி தரிசனமும், பிரசாதமும் மட்டுமே மருந்து என நம்பப்படுகிறது.

  • Vinayakarai Vaithu vananga Vendiya Disai

    அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் முதன்மையாக இருக்கும் விநாயகரை நாம் மங்கலகரமான விழாக்களின் போது பெரும்பாலும் வீட்டில் ஹால் அல்லது பூஜை அறையில் வைத்து தான் வணாங்குவோம்.

    விநாயகரை வாஸ்து சாஸ்திரத்தின்படி வைத்து வணங்கினால் அவரின் அருள் கிடைக்கும். செல்வம் பெருகும். விநாயகரின் தும்பிக்கையானது எப்போதும் இடதுபுறமுள்ள அவரின் தாயார் கௌரியை பார்த்த வண்ணமே இருக்க வேண்டும்.

    விநாயகரின் பின்புறமானது வீட்டின் எந்த ஒரு அறையினையும் பார்த்தப்படி இருக்கக்கூடாது. ஏனெனில் அவரின் பின்புறம் வறுமையினை குறிக்கும் என்பதால் வீட்டின் வெளிப்புறத்தினை பார்த்தப்படி தான் இருக்க வேண்டும்.

    தென்புற திசையில் விநாயகரை வைத்து வணங்க கூடாது. கிழக்கு அல்லது மேற்கு புறமாக தான் வைத்து வணங்கவேண்டும். கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவரை நோக்கி விநாயகரை வைக்கக்கூடாது. அதே போன்று அந்த சுவரில் சாய்த்தும் வைக்கக்கூடாது.

    உலோகத்தில் செய்யப்பட்ட விநாயகர் என்றால் கிழக்கு அல்லது மேற்கு திசையினை பார்த்து வைத்து வணங்கவேண்டும். வடகிழக்கு மூலையில் வைத்து வணங்குவது இன்னும் சிறப்பான பலனை தரும்.

    வீட்டிற்குள்ளாக மாடிப்படி இருந்தால் அதற்கு அடியில் விநாயகரை வைக்கக்கூடாது. ஏனெனில் மாடிப்படிகளில் ஏறி நடப்பது அவரின் தலை மீது ஏறி நடப்பதை போன்றதாகும். இது துரதிர்ஷ்டத்தினை ஏற்படுத்தும்.
     

  • Thiruppavai Padal 25

    ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
    ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
    தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
    கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
    நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
    அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

    விளக்கம்:

    பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. “உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் “தூண் என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்த வரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.
     

  • January 9 – Rasi Palangal

    ஜனவரி 9
    விளம்பி வருடம் – மார்கழி 25
    09-ஜன-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    திரிதியை    ம    1.35
    நட்சத்திரம்    :    அவிட்டம்    இ    1.50
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ஆயில்யம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   தேர்ச்சி
    ரிஷபம் – நிறைவு
    மிதுனம் – உழைப்பு
    கடனம் –  கவனம் 
    சிம்மம் – நன்மை 
    கன்னி – பரிசு
    துலாம் –  நலம் 
    விருச்சிகம் – போட்டி
    தனுசு – முயற்சி
    மகரம் – பாராட்டு 
    கும்பம் – புகழ்
    மீனம் – மேன்மை

  • Thirunallaru Sani Parigara thalama

    பெரும்பாலோனோர் திருநள்ளாறு திருத்தலத்தை சனியின் பரிகாரத் தலமாக கருதுகின்றனர். அவ்வாலயம் சனியது ஆலயமோ சனிக்கு ப்ரீதியான இடமோ அல்ல. அவ்வாலயம் அருள்மிகு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் அருள்பாலிக்கும் தளமாகும்.

    வருத்ததிற்கு உரிய விஷயம் என்னவென்றால் சுவற்றில் குடையப்பட்டிருக்கும் சனியை பார்க்க முந்தியடித்து செல்லும் மக்கள் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை தரிசிப்பதில்லை.

    தல வரலாறு:
    நள தமயந்தியை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.  நளமகாராஜாவுக்கு 7 1/2 சனி பிடித்தது. அவரது ராஜ்யம், மனைவி தமயந்தி மக்கள் அனைவரையும் இழந்தார். எனினும் சனியானவர் நள மகாராஜாவை விடாமல் துரத்தினாராம்.

    அப்பொழுது நளமகாராஜா திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயம் சென்று ஈசனை ஆலிங்கனம் செய்து கொண்டார். உடனே ஈசன் அங்கு தோன்றி, சனியை ஆலயத்தின் உள்ளே வராதே என்று சொல்ல சனியும் ஆலய வெளியிலேயே நின்றுவிட்டார்.

    அத்துடன் திருநள்ளாறு வந்து என்னை அதாவது, ஸ்ரீ தர்பாரனண்யேஸ்வரரை தரிசத்து செல்பவரை சனி பிடிக்கக்கூடாது என்று கட்டளை இட்டார். ஆக திருநள்ளாறு திருத்தலத்தில் தரிசிக்கப்பட வேண்டிய மூர்த்தி ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரே தவிர சனி அல்ல.

    ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தரிசனம் பெற்றாலே சனி பீடை தானே விலகிவிடும். ஆக இதைப்படிக்கும் அன்பர்கள் திருநள்ளாறு சென்றால் சனிக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை கட்டாயம் தரிசியுங்கள்.

    தல விருட்சம்:

    திருனள்ளாறு அருள்மிகு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தல விருக்ஷமாக இருப்பது தர்பைப்புல் தாவரம். இதுவே அவ்வாலயம் சனி பரிகார ஸ்தலம் அல்ல என்பதை நிரூபிக்கும். ஏனெனில் சனியது அபிமான தாவரம் வன்னி எனப்படும் மரமே தவிர தர்பைப்புல் அல்ல….

  • 2 nimidangal mattume moodappadu Adisaya koil

    இது உலகிலேயே மிகவும் அசாதாரணமான கோயில் ஆகும் ஒவ்வொருநாளும் திறந்திருக்கும் நேரம் 23.58 x 7 கோயில் மூடுவதற்கு நேரம் இல்லை. இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம். 

    அற்புதம்!

    1500 ஆண்டுக்கும் மேல் பழமையான இந்த கோவில் கேரள மாநிலம்,  கோட்டயம் மாவட்டம்  திருவார்பூவில் இக் கோயில் அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ணர் எப்போதும் பசியாக இருக்கிறார். எனவே 23.58 மணி நேரமும், 365 நாட்களும் கோவில் திறந்திருக்கும்.

    கோயில் 2 நிமிடங்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது. 11.58 மணி முதல் 12 மணி வரை. இந்த கோவிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கோவில் நடை சாத்தி அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் கோவில் நடை திறக்க தந்திரியின் கைகளில் ஒரு கோடாரியும் கொடுக்கப்படுகிறது. 

    கிருஷ்ணா பசியை சகித்துக் கொள்ள முடியாது என்று நம்புவதால், ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்கப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டால்,  கோடாரி உதவியுடன் கதவைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

    கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார். அந்த நிலையில் இருந்த  கிருஷ்ணரே இக்கோவில் மூலவர் சிலை  என்பது நம்பிக்கை.

    அபிஷேகம் முடிந்தபின், முலவரின் தலையை முதலில் உலர்த்தியபின், நைவேத்திம் அவருக்குப் படக்கப்படும், பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும். இந்த கோயிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கிரகணத்தின் போது கூட கோயில் மூடப்படுவதில்லை. அப்படி மூடினாள் இந்தக் கிருஷ்ணர் பசி தாங்க மாட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள். 

    ஒருமுறை, கோயில்.. கிரகணத்தின் போது மூடப்பட்டது. கதவைத் திறந்தபோது, ​​ஆண்டவரின் இடுப்புப் பட்டை  வீழ்ச்சியடைந்ததைக் கண்டார்கள். அந்த சமயத்தில் வந்த ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால் தான் அவ்வாறு நடந்ததுஎன்று சொன்னார். அப்போதிருந்து,  கிரகணத்தின் போதும் அக்கோவில் மூடப்படுவதில்லை.

    கிருஷ்ணா தூங்கும் நேரம் தினமும் 11.58 மணி முதல் 12 மணி வரை. 2 நிமிடங்கள் மட்டுமே. பிரசாதம் பெறாமல் பக்தர்கள்  செல்ல அனுமதி இல்லை. தினமும் 11.58 மணி (ஆலயத்தை மூடுவதற்கு முன்பு) பூசாரி சத்தமாக "இங்கு யாராவது பசியாக உள்ளீர்களா?" என அழைப்பார். பிரசாத வழங்களில் அனைத்து பக்தர்களும் பங்கேற்க வேண்டும்.

    மற்றொரு முக்கிய விஷயம், நீங்கள் பிரசாதம் சுவைத்தால், நீங்கள் அதன்பிறகு பசியால் வாட மாட்டீர்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப்பிரச்சனை இருக்காதாம். 
    கோவிலின் முகவரி,
    திருவார்பூ கிருஷ்ணா கோயில், திருவார்பூ – 686020 
    கோட்டையம் மாவட்டம்,
    கேரள மாநிலம்.

  • Thoranamalai Murugan Koil Thai Poosam

    நெல்லை மாவட்டம் கடையத்திற்கு அருகே தென்றல் தவழும் தென் பொதிகை மலைத்தொடரில் வீற்றிருக்கும் தோரணமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா வரும் 21-ந் தேதி நடக்க உள்ளது. தோரணம் போல் மலை அமைந்த காரணத்தால் தோரணமலையாக ஸ்தலம் விளங்குகிறது. அகத்தியர் மாமுனிவர் அமர்ந்து தமிழ் வளர்த்த மலை இது. இம்மலையில் 64 சுனைகள் உள்ளன. இந்த சுனைகளில் உள்ள நீர் புனித நீராக கருதப்படுகிறது. இந்த சுனை நீரை பருகி, இதில் நீராடி முருகனை வழிப்பட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்கள் அனுபவித்து கூறும் கூற்றாகும்.

    926 படிகளை ஏறி, மலை உச்சியை அடைந்தால், முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கையில் வேல் ஏந்தி மயில் வாகனத்தோடு நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இந்த தலத்தில் முருகன் கிழக்கு நோக்கி திருச்செந்தூர் முருகனை பணித்தபடி உள்ளார். எனவே இத்தலத்தில் குன்றுக்குள் இருக்கும் முருகனை வழிபட்டால் திருச்செந்தூரில் வழிபட்ட அதே பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். கடையத்தில் சிறிது காலம் வாழ்ந்த மகாகவி பாரதியார் ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று போற்றிப் பாடியதும் இந்த தோரணமலை முருகனைத்தான்.

     இத்தகைய சிறப்புக்குரிய தோரணமலை முருகன் கோவில் தைப்பூச விழா வரும் 21-ந் தேதி நடக்க இருக்கிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத தோரணமலை முருகன் திருக்கல்யாணம் நடக்கிறது. ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் ஆசியுரை வழங்குகிறார்.

    அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், விவசாயம் தழைக்க அகத்திய பூஜை, மதியம் 2 மணிக்கு ஊட்டி படுகர் இனமக்களின் பாரம்பரிய நடனம், இரவு 7 மணிக்கு வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், இரவு 9 மணிக்கு தோரணமலையானின் ஆவணப்படம், பட்டிமன்றம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் கே.ஆதிநாராயணன், கே.ஏ.செண்பகராமன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

  • Thiruppavai Padal 24

    அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
    சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
    கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
    கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
    குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
    வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
    என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
    இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.

    விளக்கம்:

    இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம். இதை “போற்றிப் பாசுரம் என்பர். இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.
     

  • Tuesday do’s & dont’s

    செவ்வாய் கிழமையில் முடி வெட்டவோ, நகம் வெட்டவோ கூடாது என்று நம் வீட்டில் சொல்லக் கேட்டிருப்பீர்கள். செல்வம் போகும், துரதிஷ்டம் , நோய் கூடும் என சொல்லப்படுகிறது. இதற்கான காரணங்கள் என்ன என்று நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் அதனை கடைபிடிப்பார்கள். ஏன் செய்யக் கூடாது என்பதற்கான காரணத்தை இங்கே சொல்லப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    துர்கை மற்றும் லட்சுமி தினம்
    இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் செவ்வாய் கிழமையானது துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக சொல்கிறோம்.

    செலவு கூடாது
    செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்குரிய நாளான செவ்வாயில் யாருக்கும் கடனாகவோ, வேறெதற்காகவோ பணம் கொடுக்க விரும்ப மாட்டார்கள். மகாலட்சுமி நம்மை விட்டு போய்விடுவாள் என்ற நம்பிக்கை உண்டு. அதே சமயம் பண வரவை எதிர்பார்ப்பார்கள்.

    வீட்டை சுத்தம் செய்யமாட்டார்கள்
    எப்படி முடி வெட்டவோ, சவரம் செய்ய மற்றும் நகம் வெட்ட மாட்டார்களோ, அதே போல் இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி செய்தால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை.

    ஆயுள் குறைவு :
    செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது, நகம் வெட்டுவது சவரம் சசெய்வதால் துரதிர்ஷ்டத்தை வழங்குவதொடடு.ஜோதிடத்தின் படி…இச்செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளில் இருந்து 8 மாதங்கள் குறைவதாக சொல்லப்படுகிறது.

     ரத்த சம்பந்த நோய்கள் :
    மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார். இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகக்கூடுமாம்.

    செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகள்
    முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது. உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து, பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாக நேரிடும். எனவே தான் செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்ட வேண்டாம் என்று சொல்கிறார்களாம்.

  • January 8 – Rasi Palangal

    ஜனவரி 8
    விளம்பி வருடம் – மார்கழி 24
    08-ஜன-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    கா    11.28
    நட்சத்திரம்    :    திருவோணம்    இ    11.14
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    புனர்பூசம்,பூசம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   நலம் 
    ரிஷபம் – நன்மை 
    மிதுனம் – உதவி 
    கடனம் –  ஆர்வம் 
    சிம்மம் – ஆக்கம்  
    கன்னி – தாமதம் 
    துலாம் –  பக்தி 
    விருச்சிகம் – சாதனை 
    தனுசு – நட்பு
    மகரம் – பணிவு 
    கும்பம் – வெற்றி 
    மீனம் – பெருமை