Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Worlds biggest Siva Lingam

    கேரள மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 111 அடி உயரம் கொண்ட சிவலிங்கம், உலகின் உயரமான சிவலிங்கமாக ‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ என்ற சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே உள்ள செங்கல் மகேஸ்வரம் பகுதியில் சிவபார்வதி திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் 111 அடி உயரத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

    இந்நிலையில் இந்த சிவலிங்கத்தை ஆய்வு செய்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தார் உரிய சான்றிதழை வழங்கினர். இதையடுத்து இந்த சிலையானது சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
     

  • Thiruvabaraan pettiyil enna iruuku

    பலரும் நினைப்பது போல இது ஐயப்பன் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்கள் இல்லை. சபரிமலையில் கோயில் கொண்ட தர்ம சாஸ்தாவுக்காக பந்தள ராஜனால் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள்.

    திருவாபரணப் பெட்டி ஊர்வலமாக வரும் போது பார்த்திருப்போம்… மொத்தம் மூன்று பெட்டிகளைக் கொண்டது அது.

    1. திருவாபரணப் பெட்டி

    2. வெள்ளிப் பெட்டி

    3. கொடிப் பெட்டி

    இந்த திருவாபரணப் பெட்டி மட்டுமே ஐயப்பன் சந்நிதியை அடைகிறது. மற்ற இரண்டு பெட்டிகளும் மாளிகைப்புரத்தம்மன் சந்நிதிக்குச் சென்று விடும்.

    திருவாபரணப் பெட்டி – பெட்டி 1

    ஐயப்பன் சந்நிதியில் கொடுக்கப்படும் முக்கியமான திருவாபரணப் பெட்டியில் தர்மசாஸ்தாவை அலங்கரிக்க கீழ்க்காணும் ஆபரணங்கள் உள்ளன.

    – திருமுகம் – (சாஸ்தாவின் முகக் கவசம்)

    – (மீசையுடன் ராஜ கோலத்தில் காணப்படும் முகம்)

    – ப்ரபா மண்டலம் (ப்ரபாவளி-திருவாச்சி)

    – வலிய சுரிகை (பெரிய கத்தி)

    – செறிய சுரிகை (சிறிய கத்தி)

    – யானை – யானை விக்ரஹம் 2

    – கடுவாய் – புலி விக்ரஹம் 1

    – வெள்ளி கட்டிய வலம்புரி சங்கு

    – பூர்ணா – புஷ்கலா (நிற்கும் கோலத்தில் தேவியர் உருவம்)

    – பூத்தட்டம் (பூக்களை வைக்கும் தங்கத் தட்டு)

    – நவரத்தின மோதிரம்

    – சரப்பளி மாலை

    – வில்வ மாலை (தங்க இதழ்களால் ஆனது)

    – மணி மாலை (நவரத்னங்களால் ஆனது)

    – எருக்கம் பூ மாலை (தங்க எருக்கம்பூக்களால் ஆனது)

    வெள்ளி பெட்டி (பெட்டி 2)

    வெள்ளிப்பெட்டி என்று அழைக்கப்படும் இந்தப் பெட்டியில்,

    தங்கக் குடம் ஒன்றும், மற்ற பூஜா பாத்திரங்களும் இருக்கின்றன.

    இந்த தங்கக்குடத்தால் ஸ்வாமிக்கு பின்னர் நெய்யபிஷேகம் செய்யப்படும்.

    கொடிப்பெட்டி (பெட்டி 3)

    மாளிகைப்புரம் சந்நிதிக்குச் செல்லும் இந்தக் கொடிப்பெட்டியில்,

    யானைக்கான நெற்றிப் பட்டம், தலைப்பாறை மற்றும் உடும்பாறை மலைக்கான கொடிகள், குடை மற்றும் யானை ஊர்வலத்துக்கானப் பொருட்கள் உள்ளன.

    கொடிப்பெட்டியில் உள்ளவைகளால் மறுநாள் யானை அலங்கரிக்கப்பட்டு மறுநாள் மணிமண்டபத்தில் இருந்து சரம்குத்தி வரை யானையில் ஊர்வலம் வரும்.

    இந்த திரு ஆபரணங்கள் சபரிமலையில் கோயில் கொண்டுள்ள பகவானுக்கு அணிவிக்கவேயன்றி ஐயப்பன் தானே அணிந்து கொண்டிருந்தவையல்ல.

    திருவாபரணத்தில் வரும் சாஸ்தாவின் திருமுகத்தில், அழகான முறுக்கு மீசை தெரிவதைக் காணலாம். அத்துடன் பூர்ணா புஷ்கலா தேவியரின் உருவமும் உடன் இருப்பதைக் காணமுடியும்.

    வானில் மாமலை மேலே மகர நக்ஷத்ரம் உதித்து நிற்க, கொடிமரத்தை கருடன் வட்டமிட, அந்த ஆபரணங்கள் சந்நிதானத்துக்குள் சென்று, ஐயப்பனுக்கு சார்த்தி தீபாராதனை நடக்கும் அந்த நொடி, பொன்னம்பல மேட்டில் ஜோதி தெரிய … மனம், உடல், இடம், காலம் என அனைத்தும் மறக்கும் பேரானந்தம்; அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று.
     

  • Thiruppavai Paadal 29

    சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
    பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
    பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
    குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
    இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
    உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
    மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை; பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.
     

  • January 13 – Rasi Palangal

    ஜனவரி 13
    விளம்பி வருடம் – மார்கழி 29
    13-ஜன-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    இ    8.00
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    கா    8.06
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அஸ்தம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   ஆதரவு 
    ரிஷபம் – சிரமம் 
    மிதுனம் – அசதி
    கடனம் –  லாபம்  
    சிம்மம் – செலவு  
    கன்னி – சுகம் 
    துலாம் –  கவலை 
    விருச்சிகம் – வெற்றி
    தனுசு – நன்மை
    மகரம் – பயம் 
    கும்பம் – வருத்தம் 
    மீனம் – சிக்கல்

  • Thiruvabaranam pattri therindhu kolvoma

    சபரிமலை ஐயப்பனுக்கு நடைபெற கூடிய முக்கியமான உற்ஸவம் மகர விளக்கு உத்ஸவம். ஐயப்பனின் வளர்ப்புத் தந்தையான ராஜசேகர பாண்டியன், வருடந்தோறும் மகர ஸங்கராந்தியன்று திருவாபரணங்களோடு வந்து ஐயப்பனைத் தரிசிப்பதாக வாக்களித்துள்ளார்.

    பண்டைய காலத்தில் இந்த ஒரு நாள் மட்டுமே சபரிமலையின் நடைத்திறப்பு. வருடம் முழுதும் தவத்தில் இருக்கும் ஐயப்பன், திருவாபரணம் சார்த்தும் நேரத்தில் கண்திறந்து பக்தர்களைப் பார்க்கிறார் என்பதே ஐதீகம்.

    வருடத்தின் மற்ற நாட்கள் முழுவதும் பந்தளம் அரண்மனையின் பொறுப்பில், பெட்டகத்தின் உள்ளே பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டிருக்கும் திருவாபரணம், வருடத்தில் வெகு சில நாட்களுக்கு மட்டும்தான் வெளியே கொண்டு வரப்படுகிறது.

    மகர விளக்கு உத்ஸவத்தின் 3 நாட்கள் முன்பு, பந்தளம் அரண்மனையில், பூஜைகளை முடித்து சபரிமலை புறப்படுவதற்காக இன்றைய அரசர் உட்பட அனைவரும் காத்திருப்பார்கள். எத்தனை நேரம் ஆனாலும் எல்லோரும் வானை நோக்கிப் பார்த்தபடி காத்து இருப்பார்கள். கண்கூடாகக் காணும் அதியமாக வானில் கருடன் வந்து யாத்திரை துவங்க வட்டமிட்டு உத்தரவு தரும். திருவாபரணத்தை கருடன் வட்டமிட்ட பிறகுதான் திருவாபரண யாத்திரை புறப்படும்.

    ஐயப்பன் காலம் தொட்டு இந்த ஆபரணப் பெட்டியை சுமப்பதற்காகவே பாரம்பரியமாக சில குடும்பங்கள் இருக்கின்றன. பரம்பரை பரம்பரையாக அவர்களே இந்தப் பெட்டிகளைச் சுமப்பதற்காக விரதம் இருந்து வருகிறார்கள். அவர்கள் எங்கெங்கு இருந்தாலும் இந்தக் காலகட்டத்தில் தங்கள் பாக்கியத்தை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் வந்து சேர்ந்து விடுவார்கள்.

    சுமார் மூன்று நாட்கள் காட்டுப் பாதையில் வந்து சேர்ந்த ஆபரணம் பெரியானைவட்டத்தை அடையும் போது உண்டாவது பரவசம். வட்டமிட்டுப் பறக்கும் க்ருஷ்ணப்பருந்து சாட்சியாய் உடன் வர, ஆட்டம் ஆடி துள்ளி துள்ளி மலைமேல் ஏறும் அந்தக் காட்சியை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கும்.

    சரங்குத்தி கடந்து பதினெட்டாம் படியேறி ஆபரணம் சந்நிதானம் அடைவதைக் கண்டாலே ஆனந்தம்.

    ஐயப்பனுக்கு திருவாபரணம் சார்த்தி காணக்கிடைக்கும் தரிசனம் – கண நேரம் மட்டுமே கிடைக்கும் அரிதானதொரு தரிசனம்.
     

  • Thiruvabaran Oorvalam Started

    சபரிமலையில் உள்ள ஐ யப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு திரு விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. சபரிமலையில் கடந்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை விழா நிறைவடைந்தது. அடுத்து மகர விளக்கு பூஜைக்கான விழா தொடங்கியது.

    வருகிற 14-ந்தேதி மாலையில் மகர விளக்கு பூஜை நடக்கிறது. அன்று சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவார்கள்.

     சபரிமலையில் மகர விளக்கு பூஜை நடக்கும் போது ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திரு வாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருக்கும். விழாக்காலங்களில் திருவா பரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

    அதன்படி மகர விளக்கு பூஜைக்காக திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளத்தில் இருந்து இன்று தொடங்கியது. வலியகோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது.

    திருவாபரண ஊர்வலத்தில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் பங்கேற்பது வழக்கம். இந்த முறை சபரிமலையில் போராட்டங்கள் நடந்ததால் ஊர்வலத்திற்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித் துள்ளனர். சபரிமலை போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளனர். இதனால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டது. 
     

  • Sani Dhosha Thunbathi Irundhu Kaakum Perumal

    சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார். பெருமாளுக்குரிய கிரகமான புதன் கன்னி ராசியில் புகுவதும், உச்சம் பெறுவதும் புரட்டாசியில்தான் நிகழ்கிறது. அதே நேரம் புரட்டாசி மாதத்தில்தான் சூரியனும் கன்னி ராசியில் புகுகிறது.

    புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகம். அதனால் சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார்.ஆகவேதான் புரட்டாசி சனிக் கிழமைகள் அன்று விரதம் மேற்கொள்கிறார்கள். 

    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவத்தை விலக்குவது நல்லது. இயலாதவர்கள் சனிக்கிழமை அன்று மட்டுமாவது அசைவம் சாப்பிடாமல் இருக்கலாம்.

    சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும். அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் சாத்வீகமான எளிய உணவாக இருத்தல் வேண்டும். மாலையிலும் நீராடி பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் வேண்டும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே நீராடி புருஷோத்தமனை வணங்கிய பின்பு சாதாரணமான உணவுகளை உண்ணலாம். அன்றும் அசைவத்தைத் தவிர்க்க வேண்டும். 

    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் சனிக்கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும். மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதியாகவம், லக்னங்களில் ரிஷபம், கன்னி, துலாம், கும்பத்திற்கு யோகாதிபதி ஆகவும் விளங்குகிறார். இவர்கள் தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் அவரால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ளவும். தவறாமல் சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
     

  • Thiruppavai Padal – 28

    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
    அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
    பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
    குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
    உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
    சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
    இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.

    விளக்கம்:

    “குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்ற மளிக்கிறது. அவனுக்கு என்ன குறை? ராமாவதாரத்தில், ராமபட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ் ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட் டார். ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்துஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே! அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே! அவனோடு நம்மை ஒப்பிடலாமா? என்ற குறை இருந்ததாம். கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான். கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான். ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர்குலப்பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்.
     

  • January 12 – Rasi Palangal

     ஜனவரி 12 
    விவேகானந்தர் பிறந்த நாள்
    விளம்பி வருடம் – மார்கழி 28
    12-ஜன-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    மா    6.56
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    முழுவதும்    0.00
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   வெற்றி
    ரிஷபம் – நிம்மதி
    மிதுனம் – புகழ்  
    கடனம் –  யோகம் 
    சிம்மம் – பெருமை  
    கன்னி – பொறுமை 
    துலாம் –  பேராசை
    விருச்சிகம் – தேர்ச்சி
    தனுசு – தாமதம் 
    மகரம் – லாபம் 
    கும்பம் – மேன்மை  
    மீனம் – நிம்மதி

  • Raagu – Kedhu Dhosha Parigarangal

    சுக்கிர வார ராகுகால விரதம்:

    ராகுவால் ஏற்படும் பல்வேறுவிதமான தோஷங்கள் நீங்க 11 வெள்ளிக்கிழமைகளில் ராகுகாலத்தில் அமிர்தகடிகையில் அதாவது, காலை 11-30 முதல் 12 மணிக்குள் துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடலாம். கடைசிவாரம் அதாவது, பதினொன்றாவது வாரம் துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து மஞ்சள், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பாக்கு, பழ வகைகள், முழுத்தேங்காய், சர்க்கரைப் பொங்கல் வைத்து உங்களால் எத்தனை சுமங்கலிகளுக்கு கொடுக்க முடியுமோ அத்தனை பேருக்கு தரலாம்.

    மங்களவார ராகுகால விரதம்:

    இந்த விரதத்தை செவ்வாயுடன் ராகு சேர்ந்துள்ள ஜாதகர்கள் செய்யலாம். செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் அமிர்தகடிகையில் அதாவது, மாலை 4 முதல் 4.30 மணிக்குள் துர்க்கை அம்ம னுக்கு சிவப்பு புடவை சாற்றி எலுமிச்சம் பழம் மாலை போட்டு வணங்கலாம். எலு மிச்சம் சாதம் நற்சீரக பானகம் ஆகியவற்றை கோயிலில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம்.

    பஞ்சமி திதி:

    ராகு பரிகாரத்திற்கு மிகவும் சிறப்பான நாளாக பஞ்சமி திதி சொல்லப்பட்டுள்ளது. பஞ்சமி திதியன்று புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று புற்றுக்கு பால் வார்த்து வழிபடலாம். அத்துடன் அம்மன் சந்நதியில் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கோயிலில் பக்தர்களுக்கு உளுந்துவடை விநியோகம் செய்யலாம்.

    பைரவர் வழிபாடு:

    ஞாயிற் றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்தால் சர்வ தோஷ நிவாரணம் உண்டு. வெள்ளிக் கம்பியில் உளுந்துவடை மாலை கோத்து பைரவருக்கு அணிவிக்கலாம்.

    திருவாதிரை வழிபாடு:

    ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திர நாளில் ஸ்ரீபெரும்புதூர் சென்று ஸ்ரீராமானுஜரை வழிபட்டால் சகலதோஷ தடைகள் நீங்கும். திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ராமானுஜரையும் தரிசிக்கலாம்.

    குருவார விரதம்:

    வியாழக்கிழமை ராகுகாலத்தில் துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அல்லது மஞ்சள் நிற புடவை சாற்றி அபிஷேக அர்ச்சனை, ஆராதனைகள் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல், கொண்டைக்கடலை சுண்டல் நிவேதனம் செய்து விநியோகம் செய்யலாம்.

    சங்கடஹர சதுர்த்தி:

    கேது தோஷம் நீங்க ஏழு சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு அபிஷேக, அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வணங்கலாம். கரும்புச்சாறு அபிஷேகம் மிகவும் சிறப்பானதாகும். காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அங்கும் கேது பரிகாரம் செய்யலாம்.