Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Thai madha viradhangal

    தை பொங்கல் திருநாள் முதலாக, தை அமாவாசை, ரத சப்தமி, தைப்பூசம், தை கிருத்திகை ஆகியன நாமறிந்த சிறப்பான நாட்கள். தை மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டிய வேறு சில வழிபாடுகளும் உண்டு.

    சாவித்ரி கௌரி விரதம்: தை மாதம் 2-ஆம் நாள் அனுஷ்டிக்க வேண்டிய  விரதம் இது. சிவனார் தனக்கருளிய இந்த விரதத்தை, தருமருக்கு போதித்தாராம் மார்க்கண்டேயர்.
    விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். அதன்பின், குயவர் வீட்டுக்குப் போய் அவரது சக்கரத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு வர வேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டும். 

    பிறகு மௌன விரதம் பூண்டு முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் பூஜித்து, 9-வது நாளன்று மாலையில் பூஜையை முடிக்க வேண்டும். இந்த முறைப்படி ஒன்பது ஆண்டுகள் பூஜை செய்ய வேண்டும். ஒன்பதாம் ஆண்டு பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோடி முறங்களில்…

    ஒவ்வொன்றிலும் ஒன்பது வெற்றிலை பாக்கு- ஒன்பது மஞ்சள் கிழங்குகள் – ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும். அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உண்ண வேண்டும்.

    நீண்ட ஆயுள், செல்வம், சந்தான பாக்கியத்தையும் அருளக் கூடியது இந்த விரதம்.

    பைரவ வழிபாடு: தை மாதத்தில் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை வடை மாலை சாற்றி வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும்.

    வீரபத்திர வழிபாடு: மங்கலவாரம் எனப்படும் செவ்வாய்க் கிழமை தோறும் ஒரு வருட காலம் வீரபத்திரரை வழிபட, வல்வினைகள் நீங்கும். வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், தை மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளிலாவது இந்த விரதம் இருப்பது சிறப்பு. இதனால், நீங்காத தடைகள் நீங்கும். பயமும் தீவினைகளும் நம்மைவிட்டு விலகும். கிரக பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் அற்புத வழிபாடு இது.
     

  • Thai Pirandhadhu Vazhi Pirakkum

    மகர மாதத்திற்குள் உத்திரப்புண்ணியக்காலம் துவங்கக் கூடிய முதல் நாள்தான் தை பொங்கல். பிற கோள்களைப் போல் சூரியனுக்கும் இயக்கம் உண்டு. ஆனால், அது தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் சிறப்புடையது. வேறு எந்த கோளையும் சுற்றி வராது. 

    ஆன்மீகத்தில் சிவனுக்கு இணையாக சூரியனை ஒப்பிடப்படுகிறது. சிவபெருமான் தனக்குத் தானே கட்டுப்பாடுகள் வைத்துக் கொள்வார். அவருக்கு மேலே யாரும் கிடையாது. அதுபோல்தான் சூரியனும் எந்த கோளையும் சுற்றாது. மாறாக மற்ற கோள்கள்தான் அதை சுற்றும். எனவே, இவ்வளவு சிறப்புப் பெற்ற தையையே தமிழர்களின் முதல் மாதமாக சங்கக் 

    காலங்களில் போற்றிக் கொண்டாடப்பட்டுள்ளது. தை பிறந்ததால் வழி பிறக்கும் என்பது பழமொழி. எல்லா துறைகளைப்போலவே வேளாண் துறையிலும் தை தான் முதல் மாதம். நெல், சோளம் எல்லாமே மார்கழியில் அறுவடை முடிந்து தை முதல் நாள் புதிய நெல், புது பானை வைத்துக் கொணடாடுவதே தை பொங்கல்.
     

  • January 15 – Rasi palangal

    ஜனவரி 15 
    விளம்பி வருடம் – தை 1
    தைப்பொங்கல்
    15-ஜன-2019 செவ்வாய்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    நவமி    இ    8.24
    நட்சத்திரம்    :    அசுவினி    கா    10.09
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சுவாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   கவலை  
    ரிஷபம் – வரவு 
    மிதுனம் – தாமதம்  
    கடனம் –  செலவு 
    சிம்மம் – ஆதரவு 
    கன்னி – அசதி
    துலாம் –  வெற்றி 
    விருச்சிகம் – வருத்தம் 
    தனுசு – நன்மை 
    மகரம் – அமைதி
    கும்பம் – செலவு 
    மீனம் – பயம் 

  • Vazhvil Irulai Neekum Thai Pongal

    நாம் எத்தனையோ பண்டிகைகளை ஆண்டு முழுவதும் கொண்டாடினாலும் தைப் பொங்கலுக்கு தனிச்சிறப்பு உண்டு. இதற்கு காரணம் பஞ்ச பூதங்களையும், இயற்கையையும் உழைப்பையும், உழைப்பாளிகளையும் போற்றி வணங்குவதற்காக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உழவர் திருநாளாகவும், அறுவடை நாளாகவும் போற்றப்படுகிறது. பொங்கல் பண்டிகை கிராமங்களில் ஒரு வாரம் முழுக்க உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. 

    வீட்டில் பெரிய கோலம் வரைந்து புதுப்பானையில் புத்தரிசி இட்டு சர்க்கரை, வெல்லம், முந்திரி, திராட்சை எல்லாம் கலந்து பொங்கல் வைப்பார்கள். கரும்பு, மஞ்சள் கிழங்கு, காய்கறிகள், இளநீர், தென்னம்பாளை ஆகியவற்றை வைத்து சூரிய கடவுளுக்கு படைத்து வழிபடுகின்றனர். மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். அன்றைய தினம் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அன்று அதிகாலையே மாட்டை குளிப்பாட்டி கொம்புகள், கால் குளம்புகளில் வண்ணம் பூசி மஞ்சள், குங்குமம் வைத்து மாலை சூட்டி தூபதீபம் காட்டி பூஜித்து வணங்குவார்கள். 3ம் நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. நகரத்தில் இருப்பவர்கள் அனைவரும் தங்களது உறவினர், நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று விருந்து, விழா என்று குதூகலமாக பொழுதை கழிப்பார்கள்.

    பொங்கல் பண்டிகை வடமாநிலங்களில் ‘மகர சங்கராந்தி‘ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அங்கு விதவிதமான பட்டங்கள் பறக்க விடுவது மிகப்பெரிய திருவிழாவாக நடைபெறுகிறது. கடற்கரை, பொது மைதானங்களில், பொதுமக்கள் பெரும் திரளாகக் கூடி போட்டி போட்டு பட்டம் பறக்க விடுகின்றனர். இந்த இனிய தைப் பொங்கல் திருநாளில் இருள் நீங்கி, ஒளி பிறக்கவும் எங்கும் பச்சையும் பசுமையுமாக இருக்கவும், எல்லாம் வல்ல சூரிய பகவானின் அருள் வேண்டி பிரார்த்திப்போம்.
     

  • Magara Jothi Dharisanam

    சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷம் முழங்க சபரிமலை ஐயப்பன் கோவிலில் லட்சக்கண்க்கான பக்தர்கள் மகரஜோதி தரிசனம் செய்துள்ளனர். 

     கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகர விளக்கு பெருவிழா நடைபெற்றது. முன்னதாக பந்தளம் பகுதியில் இருந்து திருவாபரண பவனி, மாலை சரங்குத்தி வந்து சேர்ந்தது. இதையடுத்து ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. 

    பின்னர் பக்தர்களுக்காக நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் காட்சி தந்தது. 

    இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் வணங்கினர். மாலை 6.40 மணியளவில் மகர ஜோதி 3 முறை காட்சி தந்தது. 

    பக்தர்கள் சரண கோஷம் முழங்க மகரஜோதியை வழிபட்டனர். வரும் 20-ம் தேதி வரை, ஐயப்பன் கோவிலில் படி பூஜைகள் நடைபெறும். 

    இதையடுத்து, பந்தளம் கொட்டார ராஜ தரிசனத்திற்கு பின்னர் கோவிலின் நடை அடைக்கப்படும். 

  • Thai pongal vaika ugandha neeram

    தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்!
    உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். நிகழாண்டு வரும் 15-ம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் பூஜை செய்திடவும் உகந்த நேரமாகும்.

    சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. 

    தைப்பொங்கல்

    ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. தை மாதம் பிறப்பதற்கு முன் நெல் அறுவடையாகின்றது. தை மாதத்தின் முதல் நாளன்று, அந்த புதிய அரிசியை மண் பானையில் வைத்து பொங்கல் செய்வர். இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவர். 

    பெரும்பாலும் கிராமங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி பொங்கல் பொங்கியெழும்போது, 'பொங்கலோ பொங்கல்' என்று கூவி மகிழ்வார்கள். இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள். விவசாயத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. 

    மாட்டுப்பொங்கல் 

    உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். ஆவினத்திற்கு நன்றி கூறும் இந்நாளாளில், மாட்டு தொழுவத்தினைச் சுத்தம் செய்து, கால்நடைகளைக் குளிப்பாட்டி மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி வீர நடை’ நடக்க வைப்பார்கள்.

    அன்று தொழுவத்திலேயே பொங்கல் வைத்து கற்பூர தீபாராதனைக் காட்டப்படும். 'பொங்கலோ பொங்கல்… மாட்டு பொங்கல் பட்டி பெருக.. பால் பானை பொங்க.. நோவும் பிணியும் தெருவோடு போக..' என்று கூறி, மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர். இதன் பின் அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும். 

    காணும்பொங்கல் 

    பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது கனு’ பொங்கல். ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பிடியும் உடன்பிறந்தானுக்கு’ என்பது பழமொழி. அதாவது பொங்கலில் பொங்கிய பால் சாதத்தை உடன்பிறந்தவர்களின் நலத்திற்காக காணும் பொங்கல்தினம் காக்கா குருவிகளுக்கு அன்னமிடுவதும் இப்பழமொழியின் விளக்கம். 

    காணும் பொங்கல் அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம். சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர். 

    அந்தவகையில் நிகழாண்டு வரும் 15-ம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் பூஜை செய்திடவும் உகந்த நேரமாகும். 

    இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் இந்நாளில் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பெருகிட வாழ்த்துகள்! 

  • Jothi vadivil Kathchi Tharum Iyappan

    பாற்கடலில் அமுதம் கடைந்து அதைத் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது, சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலவில்லை. 

    பின்னர் தியானம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார். அதனால் சிவபெருமானுக்காக விஷ்ணு மோகினியாக மீண்டும் அவதரித்த பொழுது சிவனுக்கும், மோகினிக்கும் பிறந்தவரே ஐயப்பன். இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு ஹரி (விஷ்ணு) – ஹரன் (சிவன்) என்ற பெயரும் உண்டு. குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டுச் சென்று விட்டனர். அந்தச் சமயத்தில் வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் மரத்தடியில் தேஜசுடன் இருந்த குழந்தையை கண்டார். அந்தக் குழந்தையை அரண்மனைக்குக் கொண்டு சென்றார். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனர். 

    பிறகு மணிகண்டனை குருகுலத்தில் சேர்க்க பந்தள மன்னன் முடிவு செய்தார். தெய்வக்குழந்தையான ஐயப்பன் குறுகிய காலத்திலேயே நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், 64 கலைகள் ஆகிய அனைத்தையும் கற்று தேர்ந்தார். பிறவியிலேயே ஊமையாக குருகுலத்தில் இருந்த குருவின் மகனான கண்ணனை மணிகண்டன் பேசவைத்தார். மணிகண்டனின் அபூர்வ சக்திகளையும், செயல்களையும் கண்ட குரு அவரை தாங்கள் யார் என்பதனை அறிய விரும்புவதாகக் கூறினார். குருவுக்கு உண்மையை மறைக்க விரும்பாத மணிகண்டன் தான் யார் என்பதைக் கூறி அதனை இரகசியமாக வைத்திருக்க வேண்டினார். அத்துடன் குருதட்சிணையாக ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தில் ஜோதி சொரூபனாக காட்சி தருவதாக கூறினார்.

    இதனால் தான் ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார். எப்போதும் தவக்கோலத்தில் அருளும் ஐயப்பன், ஆண்டுதோறும் மகர சங்கராந்தி நாளில் மட்டும் திருவாபரணம் அணிந்து முழு அலங்காரத்துடன் அருள்பாலிப்பார். அன்றைய தினம் சந்நிதானத்திற்கு எதிரில் உள்ள ஐயப்பனின் ஐந்தாவது மலையான காந்த மலையில் ஜோதி சொரூபமாக ஐயப்பன் காட்சிதருவார்.
     

  • Thiruppavai padal 30

    வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
    திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
    அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
    பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
    சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
    இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
    செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

    பொருள்:

    அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.

  • January 14 Rasi Palangal

    ஜனவரி 14
    விளம்பி வருடம் – மார்கழி 30
    போகி பண்டிகை
    14-ஜன-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    இ    8.32
    நட்சத்திரம்    :    ரேவதி    கா    9.23
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   லாபம் 
    ரிஷபம் – அச்சம் 
    மிதுனம் – உதவி 
    கடனம் –  வரவு  
    சிம்மம் – பயம்   
    கன்னி – நன்மை 
    துலாம் –  செலவு  
    விருச்சிகம் – ஆதாயம் 
    தனுசு – சுகம் 
    மகரம் – அசதி 
    கும்பம் – கவலை 
    மீனம் – தாமதம் 

  • Bogi Festival Special

    பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நெடுங்காலமாக இந்த போகி திருநாளில் பழையபொருட்களை எரிக்கும் பழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது. போகி பண்டிகை என்பது இந்திரன் முதலியோரை பூஜித்து, திருப்தி செய்ய வேண்டிய நாள்.

    பழைய பொருட்களையும், பயனற்றவையும்விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது போகிப் பண்டிகை. வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் நீக்கவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவம்.

    மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய பொருட்களை எரித்துதமிழக மக்கள் போகி கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கு ஏற்ப, பழையபொருட்களை தீயிட்டு எரித்து, போகி பண்டிகையை மக்கள் கொண்டாடுகின்றனர்.

    பனிக்காலமான மார்கழி மாதம் முடியும் நாளான போகியன்று அருகில் அண்டியிருக்கும் பூச்சிகள், விஷக்கிருமிகள் போன்றவற்றை அழிப்பதற்காகத்தான்  பழையதை எரிக்கும் சடங்கை நடைமுறைப்படுத்தினர் முன்னோர். அத்துடன், குளிர்காலத்தில் வியாதிகள் எளிதில் தொற்றிவிடும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக  மூலிகைச்செடிகளை எரித்து அதில் வெளிவரும் புகையை சுவாசித்தனர். வேப்பிலைக் கொத்துக்களை வீட்டு வாசலில் கட்டினர்.

    போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகள், தேவையில்லாத பழைய பொருட்கள் ஆகியவற்றைதீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால்வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என நம்பப்படுகிறது. பிறகு வீட்டின் வாயிலை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து அழகான கோலம்போடப்படும்.

    போகி தினத்தன்று பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பிடித்த உணவைபடைத்து, புத்தாடகள் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்து தீப ஆராதனை செய்து வழக்கத்தில்உள்ளது. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.

    பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களைஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போதுகுழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். இவ்வாறாக பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இந்த போகிபண்டிகை அமைந்திருக்கும்.