Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Sabari malai Nadai thirappu

    மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பிப்ரவரி 12 ஆம் தேதி திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலையான மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடத்தப்படும். 

    இது தவிர மண்டல, மகர விளக்கு சீசன், விஷு மற்றும் ஓணம் பண்டிகை நாட்களிலும், கோவில் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு  மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். நிகழ்ச்சியில், தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலை வகிக்கிறார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மறுநாள் 13-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 17 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்படும்.

  • Thirupathy Perumal arul pera

    திருப்பதி பெருமாளின் முழுமையான அருளை பெற சரியான  வழிமுறை….. 

    திருப்பதி பெருமாளை தரிசிக்கும் பக்தர்கள் நேரே திருமலைக்கு சென்று பெருமாளை மட்டும் வணங்கி திரும்புவது தவறு. 

    வெங்கடாசலபதியின் முழுமையான அருளை நாம் பெற முதலில் பத்மாவதி தாயாரை வழிபட வேண்டும். 

    முதலில் தாயார் வீற்றிருக்கும் திருச்சானூர் கோவிலுக்கு சென்று பத்மாவதி தாயாரை மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். 

    பக்தர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யுமாறு தன் பதியாகிய வேங்கடவனிடம் பத்மாவதி தாயார் சிபாரிசு செய்வதாக ஒரு ஐதீகம்.

     தாயாரை தரிசித்த பின்னர் அன்றைய தினமோ அல்லது அதற்கு மறுதினமோ திருமலை மீது வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும்.

    ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக செல்வது சிறந்த பலனைக் கொடுக்கும். 

    நடந்து மலையேற முடியாதவர்கள் வாகனங்கள் மூலமாக மலைக்கு செல்லலாம். 

    திருமலை வந்த பின்பு முதலில் அந்த ஏழுமலையான் இங்கு கோவில் கொள்ள அனுமதித்த, இந்த மலைக்கு சொந்த காரரான ஸ்ரீ ஆதி வராகர் ஸ்வாமியின் கோவிலில் உள்ள புஷ்கரணியில் நீராடி அந்த வராகர் ஸ்வாமியை வழிபட வேண்டும்.

     திருமலையில் கோவில் கொண்டிருக்கும் ஸ்ரீனிவாசனை தரிசிக்க செல்ல வேண்டும். 

    ஏழுமலையானை தரிசிக்கும் போது அவருக்கு உரிய மந்திரம் தெரிந்தால் அதை சில முறை ஜெபித்த பின்பு உங்களின் கோரிக்கையையோ அல்லது விருப்பதையோ அவரிடம் மனமுருகி பிராத்தனை செய்ய வேண்டும். 

    இப்படி செய்வதன் மூலம் பக்தர்களின் அனைத்து குறைகளையும் போக்கி ஏழுமலையான் அருளிபாலிப்பர் என்பது ஐதீகம்.

  • Indraya Nalla Neeram

    பிப்ரவரி 9
    விளம்பி வருடம் – தை 26
    திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை
    09-பிப்-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    கா    10.23
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    ம    3.34
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   வெற்றி
    ரிஷபம் – எதிர்ப்பு 
    மிதுனம் – அசதி
    கடனம் –  சிக்கல்  
    சிம்மம் – வரவு  
    கன்னி – சுகம் 
    துலாம் –  தாமதம் 
    விருச்சிகம் – மகிழ்ச்சி 
    தனுசு – தடங்கல்
    மகரம் – நட்பு 
    கும்பம் – பயம் 
    மீனம் – கவலை
    சந்திராஷ்டமம்    :    உத்திரம்,அஸ்தம்

  • Kala Sarba Dhosha Poojai

    கால சர்ப தோஷ பூஜைகளுக்காக, செம்பு, ஈயம் மற்றும் வெள்ளி உலோகங்களால் செய்யப்பட்ட தனித்தனி நாகர் வடிவ சிலைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். கால சர்ப தோஷ பூஜை செய்யும் நாள் அன்று, முதலில் நீராடிவிட்டு புத்தாடை உடுத்தி பூஜை செய்யும் இடத்ததை பூக்கள் கொண்டு அலங்கரித்துக்கொள்ளுங்கள். 

    பூஜை செய்யும் பீடத்தில் பூஜைக்கு என ஒரு தட்டை வைக்க வேண்டும். அந்த தட்டில் நீங்கள் வாங்கிய நாகர் சிலைகளை வைத்துக்கொண்டு, மஞ்சளில் விநாயகர் படித்து அதை அரச இலையிலோ அல்லது மாவிலையிலோ வைத்து அந்த பூஜை தட்டில் நாகர் சிலைக்கு அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்.  

    முதலில், ஓம் நமச்சிவாய என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே பூஜையை தொடங்க வேண்டும். பின்னர், நாகர் சிலைக்கு தண்ணீர், பால், தேன், மற்றும் இதர அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து முடிக்க வேண்டும். அதனை தொடர்ந்து, நாகர் சிலைக்கு மஞ்சள், சந்தனம் இட்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். 

    அதன் பின் விஷ்ணு சகஸ்ரநாமம், நவநாக் ஸ்தோதிரம், ஆகியவற்றை சொல்லிக்கொண்டே தேங்காய் உடைத்து அதில் நெய் ஊற்றி, தீபம் ஏற்ற வேண்டும். உடைத்த தேங்காயை நாகர் சிலைக்கு முன்பாக வைத்து, பூஜைக்கு நீங்கள் படைக்க நினைத்த படையல்களால் பழங்களோ, தேங்காயோ அல்லது வேறு ஏதேனும் பொருட்களோ அதை அரச இலையில் வைத்து படைத்து சூடன் ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும். 

    வழிபாட்டின் போது உங்களது பிரச்னைகளை எல்லாம் மனிதில் நினைத்து பூஜை செய்ய, அதற்கு தீர்வு கிடைக்கும். பூஜை முடிந்ததும், நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் ஓடும் ஒரு புன்னிய நதியில் செம்பு மற்றும் ஈயத்தால் ஆன நாகர் சிலையை போட்டு விடுங்கள். வெள்ளி நாகர் சிலையை அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று வழங்கி விடுங்கள். 

    இந்த பூஜை நம்பிக்கையுடனும், உண்மையாகவும், அர்பணிப்புடனும் செய்தால் கால சர்ப பூஜைக்கான பலன்களாக நீண்ட நாட்களாக அவர்கள் படும் துன்பமும், துயரமும், இன்னல்களும் படிப்படியாக அவர்களை விட்டு விலகும். 
     

  • Muruganukku Ugandha Kizhamai

    வருவாய் அதிகரிக்க வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். வாரத்தின் ஏழு நாட்களில் மூன்றாவது நாளாக இடம் பிடிப்பது செவ்வாய்க் கிழமை. 

    பொருளாதார நிறைவையும் வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. முருகப் பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமை இந்த தெய்வங் களை வணங்கினால் கவலைகள் அகலும். 

    செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்பது; நைவேத்தியமாக அன்றை தினம் அங்காரகனுக்கு முக்கியத்துவம் உகந்த நாளாகும். தங்குதடை இல்லாத வாழக்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்பு களையும், மாபெரும் சக்தியையும் பொங்கி வரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும், செந்நிற கனிவைத்து தீபாராதனை செய்ய வேண்டும்.
     

  • Sivan Malai Theertha kavasam

    சிவன்மலை முருகன் கோயில் ஆண்டவன் உத்தரவு கண்ணாடி பெட்டியில் தீர்த்தக்  கலசம் வைக்க உத்தரவு வந்து இருக்கிறது. 

    சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் உத்தரவு பொருள் மாற்றப்பட்டுள்ளது. கண்ணாடிப் பேழையில் காவிரி தீர்தத்துடன் கலசம் வைக்க உத்தரவு வந்துள்ளது. கரூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் கனவில் கடவுள் தோன்றி தீர்த்தக் கலசம் வைக்க உத்தரவு கொடுத்ததையடுத்து காவிரி தீர்தத்துடன் கலசம் வைக்கப்பட்டுள்ளது. 

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி  முருகன் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில் ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். பின்னர் அந்தப் பொருள் கோயில் மூலவர் அறைக்கு முன்பாக கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

    இந்தக் கண்ணாடிப் பேழைக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்பதை சிவன்மலை முருகனே பக்தர்களின் கனவில் வந்து உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் இது ஆண்டவன்  உத்தரவு' என்று அழைக்கப்படுகிறது. இப்படி கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் எதுவும் இல்லாமல் இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரையில் பழைய பொருள் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருக்கும். 

    கடைசியாக, கடந்த அக்டோபர் 26ஆம் தேதி 3 கதிர் அறுக்கும் அரிவாள்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு, அந்த அரிவாள்கள் புதன்கிழமை வரை கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தன. 

    இந்நிலையில், கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற பக்தரின் கனவில் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சுவாமி சன்னதியில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற பூக்கள் வைத்து உத்தரவு கேட்கப்பட்டது. இதில் வெள்ளை நிற பூ விழுந்ததை அடுத்து  சிவன்மலை கோயிலில் காவிரி நீர் அடங்கிய தீர்த்தக் கலசம் வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின், கண்ணாடிப் பேழைக்குள் இந்த தீர்த்தக் கலசம் பக்தர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக இந்த கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தற்போது தீர்த்த கலசம் வைக்கப்பட்டுள்ளதால், கன மழை அல்லது கடும் வறட்சி ஏற்படுமா என்ற கேள்வி பக்தர்களின் மனதில் எழுந்து இருக்கிறது. 

  • Indraya Naal eppadi

    பிப்ரவரி 8
    விளம்பி வருடம் – தை 25
    சதுர்த்தி
    08-பிப்-2019 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    திரிதியை    கா    8.57
    நட்சத்திரம்    :    பூரட்டாதி    ம    1.44
    யோகம்    :    சித்த யோகம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Indraya Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   உதவி 
    ரிஷபம் – வரவு 
    மிதுனம் – பயம்  
    கடனம் –  நன்மை 
    சிம்மம் – தாமதம்  
    கன்னி – உயர்வு
    துலாம் –  இன்பம் 
    விருச்சிகம் – பரிசு 
    தனுசு – பெருமை 
    மகரம் – ஆதாயம் 
    கும்பம் – புகழ்
    மீனம் – முயற்சி
    சந்திராஷ்டமம்    :    பூரம்,உத்திரம்

  • Kadan Thollai Teera Koil

    மும்மூர்த்திகளின் அம்சத்தோடு ஒரு பெருமாள் சிலையை பார்த்திருக்கிறீர்களா?

    ஒரு பெரிய மருத்துவமனையாக செயல்பட்ட இடத்தின் மிச்சங்கள் முழுமையாக இருப்பதை பார்த்திருக்கிறீர்களா?

    1100 ஆண்டுகளுக்கு முன் மருத்துவம், கலைகள், தொழில் என பலதுறைகளை கற்றுக்கொடுத்த இடம் இப்போதும் சென்னைக்கு அருகில் இருப்பதை நீங்கள் அறிவீர்களா?

    இத்தனைக்கும் ஒரே பதில் திருமுக்கூடல்.

    வேகவதி, பாலாறு, செய்யாறு என மூன்று ஆறுகள் கூடும் இடம், இப்போது வறண்டு போய் வெறும் மணலாய் காட்சியளித்தாலும், அப்போது 3 ஆறுகளும் கட்டற்று பாய்ந்த இடம். ஒரு பக்கம் குதிரைப்படை, யானைப்படைகள் குளிக்க, இளைப்பாற இந்த முக்கூடல்தான் இடம் தந்திருக்கிறது. 

    மிகச்சரியாக மூன்று ஆறுகள் கூடும் இடத்தில், நுழைவு கோபுரம் இல்லாமல், காட்சியளிக்கும் கோயிலில் வேங்கடேச பெருமாள் உறைகிறார். 

    நுழைந்ததும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதை உணர்த்தும் வகையில் மிகவும் தூய்மையாக அழகாக நந்தவனத்தோடு காட்சியளிக்கிறது.

    வரதர், ஆண்டாள், தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். தாயார் அலமேலு மங்கையாக காட்சியளிக்கிறார். 

    தலத்தின் நாயகனான வேங்கடேசப்பெருமாளைப் பார்க்கும் ஆவலுடன் எட்டி நடைபோட்டால், வடக்கு பார்த்த விதத்தில் நின்றவண்ணம் அருள்பாலிக்கிறார் எம்பெருமான்.

    ஏன் இரு கண்களை மட்டும் படைத்திருக்கிறான் இறைவன். இன்னும் இன்னும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல பேரழகாக எழுந்து நிற்கிறான் பெருமான். கண்கள் போதவில்லை, கொஞ்சம் விட்டால் நம்முடன் கிளம்பி வந்துவிடுவான் இந்த வேங்கடேச பெருமான். அப்படியொரு அன்பும், கருணையும் பொங்கி வழிகிறது இவனிடத்தில்.  

    கருவறையில், திருப்பதி போலவே சங்கு, சக்கரம் தனியாக பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. சங்கு சக்கரம் இறைவனின் இடப்புறம் காட்சியளிக்கிறது. 

    வேங்கடேசனின் வலப்புறம் மார்க்கண்டேயர், பிருகு மகரிஷி,  தாயார் காட்சியளிக்கிறார்கள். வழக்கமாக சயன கோலத்தில் இருக்கும் பெருமாளுடன் காட்சியளிக்கும் இவர்கள், நின்ற கோலத்தில் அருள்தரும் வேங்கடேசனுடன் இருக்கிறார்கள். 

    அதற்கொரு காரணம் இருக்கிறது. பக்தனுக்காக எம்பெருமான் தனது தோற்றத்தையே மாற்றிக்கொண்ட நெகிழ்ச்சி தரும் புராணம். 

    தொண்டைமான் மன்னன் திருப்பதிக்கு போக நினைக்கிறான். அதுவோ பகைவன் நாட்டை நெருங்கும் நேரம். பக்தனாக தவிக்கிறான் மன்னன். பக்தனுக்காக தவிக்கிறான் இறைவன். 

    சங்கு சக்கரத்தை அனுப்பி பகைவனை விரட்டி பக்தனுக்கு அருள் பாலிக்கிறார். இறைவனின் அருளை எண்ணி மனம் உருகி, அப்பா என்றழைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறான் தொண்டைமான் மன்னன். அந்த அழைப்பின் ஒலி இன்றளவும் ஸ்ரீ அப்பன் வேங்கடேச பெருமாள் என்ற அழைப்பாக பக்தர்களிடத்தில் ஒலிக்கிறது. 

    அப்படி பக்தனின் அனுக்கனாக உள்ள வேங்கடேச பெருமாள், தன்னை நோக்கி வரும் மன்னன் தொண்டைமானுக்காக சயன கோலத்தில் இருந்து அவசரமாக எழுந்து மன்னன் பார்க்க ஆசைப்பட்ட திருப்பதி பெருமாளின் நின்ற கோலத்தில் அருள் தருகிறார்.

    மன்னனாக வந்ததற்காக மாறவில்லை. அன்பனாக, பக்தியுடன் பரிதவித்த ஒரு உயிருக்கு அருள்பாலிக்கும் வேகத்தில் எழுந்து நின்ற இறையின் தரிசனம். 

    இப்பெருமானின் வலக்கரத்தில் பிரம்மனின் அம்சமாக தாமரை ஜொலிக்கிறது. சிவபெருமானின் ஜடா முடி கிரீடத்துடன் பெருமாளின் தலையை அலங்கரிக்கிறது. மும்மூர்த்திகளையும் ஒரேசேர தரிசிக்க இரண்டு கண்கள் போதாது என்று சொன்னது உண்மை என்று நீங்களும் உணர்வீர்கள்.. 

    கோயிலில் உள்ள அனுமனுக்கு வடைமாலை சாத்தப்படுவதில்லை. தேன்குழல்தான் சாத்தப்படுகிறது. மிகவும் சக்திவாய்ந்தவராக மெய்சிலிர்க்கிறார்கள் பக்தர்கள். வேங்கடேச பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள அனுமன் பக்தர்களின் கடன்பிரச்னைகளை தீர்த்து மனநிம்மதி தருவதாக ஐதீகம். அதனால், கண்குளிர கண்டு அனுமனின் அருள்பெற்று திரும்புகிறார்கள்.

    இத்திருக்கோயிலில் பொங்கலையொட்டி நடக்கும் பரிவேட்டை மிகவும் பிரசித்தி பெற்றது. 

    கோயிலின் கிழக்குப் புறச்சுவரில் உள்ள கல்வெட்டில் இங்கு சிறப்பான மருத்துவமனை ஒன்று செயல்பட்டதற்கான ஆதாரம் இருக்கிறது. 

    தமிழிலும், கிரந்த எழுத்துகளிலும் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் பதினொன்றாம் நூற்றாண்டை சேர்ந்ததாக கண்டறியப்பட்டிருக்கிறது.

    பதினொன்றாம் நூற்றாண்டில் 15 பேர் ஒரேநேரத்தில் சிகிச்சை பெறும் வகையில் 15 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை செயல்பட்டிருக்கிறது. நோயுற்ற, காயமடைந்த படை வீரர்கள் மற்றும் மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள், அவர்களுக்கான மருந்துகள், மருந்துகளை தயாரிக்கும் ஆதூர சாலைகள் என நேர்த்தியாக செயல்பட்ட மருத்துவமனை இருந்திருக்கிறது. 

    கோயில் கல்வெட்டில் படி எடுக்கப்பட்டதன்படி எந்தெந்த நோய்க்கு என்ன மருந்து என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. அதைப் பார்த்ததும் நம் முன்னோர்களின் மருத்துவத்திறன் வியப்பை ஏற்படுத்துகிறது.

    திருமுக்கூடல் கல்வெட்டானது ஆதூர சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மருந்துகளின் பட்டியல் மருந்து வகைகள் ஓராண்டுக்கு தேவையான அளவில் சேர்த்துவைக்கப்பட்டிருந்தன. அந்த மருந்துகள் மாத்திரைகள், பொடிகள் கரைசல்கள், திரவங்கள், லேகியங்கள் போன்றவையும் இருந்துள்ளன.

    இக்கோயிலில் சுற்றுப்புறக்கூடங்களும், ஜனநாத மண்டபமும் ஹைஷ்ய மாதவன் தமயன் என்பவனாலும் கட்டப்பட்டுள்ளது. வேதங்கள், சாத்திரங்கள், இலக்கணம் மற்றும் மருத்துவம் போன்றவற்றை கற்றுக்கொடுக்கும் பள்ளியும், மாணவர்களுக்கான தங்கும் விடுதியும், மருத்துவ விடுதியும் ஜனநாத மண்டபத்தில் நிறுவப்பட்டிருந்தன. மருத்துவமனையையும், இம்மண்டபத்தையும் காவல் காத்த திருமுக்கூடல்பேரய்யன் என்பவனுக்கு நாள் ஒன்றுக்கு நான்கு நாழி நெல்லும், ஒரு காசும் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது என்ற குறிப்பும் கல்வெட்டில் இருக்கிறது. 

    கோயிலுக்கு செல்லும் வழி
    செங்கல்பட்டில் இருந்து பழைய சீவரம் சென்றால், திருமுக்கூடலை தரிசித்து வேங்கடேசனை கைதொழலாம். சென்னையில் இருந்து ஏறக்குறைய 70 கிலோமீட்டர் தொலைவுதான். 
    1100 ஆண்டுகளுக்கு முன் கல்விசாலை, மருத்துவமனை, படைகள் பரிபாலனம், என பண்பட்டு வாழ்ந்த மக்கள் இருந்த மண்ணை போற்றுவோம்.
    வாவென்று கைநீட்டி அழைத்தால் மனதில் வந்து குடியேறி கலி தீர்க்கும் தெய்வத்தை தொழுவோம்.

    ஓம் நமோ நாராயணாயா ! 

    (இந்த கோயிலின் அறியவகை புகைப்படங்கள் கீழே உள்ள போட்டோ கேலரியில் காணலாம்)

    – எழுத்தாளர் பாமா