Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Raagu – Kedhu Peyarchi Palangal Simmam

    வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டுமென்ற வேட்டை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!!

    கிரகநிலை:
    குருபகவான் சுக ஸ்தானத்திலும் – ராகு விரைய ஸ்தானத்திலும் – சனி பகவான் பஞ்சம ஸ்தானத்திலும் – கேது ரணருண ரோக ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    
    கிரகமாற்றம்:
    13.02.2019 அன்று ராகு பகவான் லாப ஸ்தானத்திற்கும் – கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.
    23.11.2019 அன்று குரு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    இந்த பெயர்ச்சியில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாட்டப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றிமறையும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். உற்றார்-உறவினர்களை அனுசரித்துச் செல்லவேண்டியிருக்கும். பணவரவுகளில் சுமாரான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் – வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கல் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாக்கக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது.

    பொருளாதார நிலை:

        பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண்செலவுகளும், புத்திர வழியில் மகிழ்ச்சி குறைவும் ஏற்படலாம். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உற்றார்-உறவினர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.

    கொடுக்கல்-வாங்கல்:

        பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும்  பெரிய தொகைகளை கொடுக்கல்-வாங்கலில் ஈடுபடுத்தும்போது கவனமுடன் செயல்படுவது நல்லது. பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண்பிரச்சினைகளில் சிக்கிகொள்வீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளின் தீர்ப்பு இழுபறி நிலையிலிருக்கும்.

    தொழில், வியாபாரம்:

        செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். அவ்வப்போது சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலம் அடைவார்கள். அபிவிருத்தியும் பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை.

    உத்தியோகம்:

        பணியில் சற்று கவனமுடன் செயல்படுவதும் உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கையாள்வதும் நல்லது. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்திக் கொள்ளவும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும்.

    அரசியல்:

        பெயர், புகழை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய காலமிது என்பதால் மக்களின் ஆதரவைப் பெற முயற்சி செய்வது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக சில செலவுகளை செய்ய நேரிடும். மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும்.

    விவசாயிகள்

        பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுத்துவிட முடியும். நீர்வரத்து தேவைக்கேற்றபடி இருக்கும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றர்-உறவினர்களை அனுசரித்துச் செல்வது.  வாய்க்கால், வரப்பு பிரச்சினைகளை பெரிதுபடுத்தாமலிருப்பது நல்லது.

    பெண்கள்:

        உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. பொருளாதார நிலை ஓரளவுக்கு தேவைக்கேற்றபடி இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும்.

    கலைஞர்கள்:

        கிடைத்த வாய்ப்புகளை கைநழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்

    மாணவ-மாணவியர்:

        கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் அனுகூலத்தை அடையலாம். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் வீண் அலைச்சலையும், பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். அரசு வழியில் ஆதரவு கிட்டும்.

    உடல் ஆரோக்கியம்:

        உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு  போன்றவை தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாடப் பணிகளில் உங்களின் தனித்திறனால் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நல்ல பெயரெடுப்பீர்கள்.

    மகம்:
    தடைபட்டு வந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும்.  முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமை  அதிகப்படும்.  உடல் நலம் சீரடையும்.  மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும்.  தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். 

    பூரம்
    அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆர்டர்கள்   பெறுவதில் இருந்த சிக்கல்கள்  தீரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும்.  மற்றவர்கள் மூலம்  உதவி  கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை  வாங்கி மகிழ்வீர்கள்.  கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து  வேற்றுமை நீங்கும். இதனால் வாழ்க்கையில்  சந்தோஷம் அதிகரிக்கும்.   

    உத்திரம் 1ம் பாதம்:
    கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும்,  துன்பமும் நீங்கும்.   பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடந்து  முடியும்.  மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம்  உண்டாகும். எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமை வெளிப்படும். எல்லா பிரச்சனைகளும் தீரும். மனகவலை அகலும்.

    பரிகாரம்: ஞாயிறுகிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும். சூரிய உதயத்திற்குப் பின் தூங்குவதைத் தவிர்க்கவும்.
    மலர் பரிகாரம்: பிரதோஷம் தோறும் அபிஷேகத்திற்கு எலுமிச்சை சாறு அர்ர்பணிக்கவும். 
    அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
    அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
     

  • Raagu – Kedhu Peyarchi Palangal Kadagam

    நல்ல அறிவாற்றலும், கற்பனைத்திறனும் எதிலும் சிந்தித்துச் செயல்படும் குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே!!

    கிரகநிலை:
    குருபகவான் பஞ்சம பூர்வ ஸ்தானத்திலும் – ராகு ராசியிலும் – சனி பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் – கேது சப்தம ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    
    கிரகமாற்றம்:
    13.02.2019 அன்று ராகு பகவான் விரைய ஸ்தானத்திற்கும் – கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.
    23.11.2019 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    இந்த பெயர்ச்சியில் ராகு குடும்ப ஸ்தானத்திற்கு வந்தாலும் உங்கள் ராசிக்கு நட்பு கிரகமான குருவுடன் இணைந்திருக்கிறார். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன் – மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம், கார், பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் – வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். லாபங்கள் தடைபடாது. வெளிவட்டாரத தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடையமுடியும். அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    பொருளாதார நிலை:

        குடும்ப்த்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன் – மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகள் தாராளமாக அமையும். பொன்பொருள் சேர்க்கை சேரும். சிலருக்கு, பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நடைபெறும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

    கொடுக்கல்-வாங்கல்:

        பொருளாதார நிலை மிகவும் முன்னேற்றகரமாக இருப்பதால் கொடுக்கல்-வாங்கலில் சரளமான நிலையினை அடையமுடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

    தொழில் வியாபாரம்:

        தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசுவழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும்.

    உத்தியோகம்:

        பணியில் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப்பெறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்துமுடிக்க முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிச்சி தரும்.

    அரசியல்:

        பெயரும், புகழும் உயரக்கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடிவரும்.

    விவசாயிகள்:

        பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர்வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளைக் கையாண்டு அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி, நிலம், மனை போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும்.

    பெண்கள்:

        உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். கணவன் – மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். சொந்த கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். சேமிப்பும் பெருகும்.

    கலைஞர்கள்:

        புதிய வாய்ப்புகள் தேடிவரும். புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கைக்குவராமலிருந்த பணத்தொகைகளும் தடையின்றி வந்து சேரும். சுகவாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கி மகிழ்வீர்கள்.

    மாணவ மாணவியர்:

        நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறமுடியும். கல்விக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். விளையாட்டும் போட்டிகளில் சிறப்பான பரிசுகளைப் பெறுவீர்கள்.

    உடல் ஆரோக்கியம்:

        உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவச் செலவுகள் குறையும். மனைவி, பிள்ளைகள் சுபிட்சமாக அமைவார்கள். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

    புனர் பூசம் 4ம் பாதம்:
    மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும்.  பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு  வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  தொழில் வியாபாரத்தில்  இருந்த போட்டிகள்  விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  

    பூசம்:
    சரக்குகளை  பாதுகாப்பாக வைப்பது நல்லது.  உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு உழைப்பு  அதிகரிக்கும்.  எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது  நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன்,  மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். 

    ஆயில்யம்:
    குழந்தைகள்  உங்கள் சொல்படி நடப்பது  மனதுக்கு  மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.  மாணவர்களுக்கு கல்வி,  விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும். மனகுழப்பம் நீங்கி. காரிய வெற்றி கிடைக்கும். மன நிம்மதி கிடைக்கும்.

    பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று இலுப்பை எண்ணையில் பஞ்சமுக தீபம் ஏற்றி வணங்கி 16 முறை வலம் வரவும்.
    மலர் பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அம்மனுக்கு அரளிப்பூமாலை சாற்றி வழிபடவும்.
    அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு
    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Raagu – Kedhu Peyarchi Palangal Midhunam

    பார்வைக்கு வெகுளி போல இருந்தாலும் தன்னுடைய காரியங்கள் அனைத்தையும் எளிதில் சாதித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!!

    கிரகநிலை:
    குருபகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் – ராகு தனவாக்கு ஸ்தானத்திலும் – சனி பகவான் சப்தம ஸ்தானத்திலும் – கேது அஷ்டம ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    
    கிரகமாற்றம்:
    13.02.2019 அன்று ராகு பகவான் ராசிக்கும் – கேது பகவான் சப்தம ஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.
    23.11.2019 அன்று குரு பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    இந்த பெயர்ச்சியால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் – மனைவிடையே சிறு சிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. பொன்பொருள் சேரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். தொழில் வியாபார செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். பணம் கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யத் துணிவார்கள் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தாமத்த்ப்படும். சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் லாபங்களுக்கு குறை இருக்காது.

    பொருளாதார் நிலை:
    கணவன் – மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும். புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தெய்வ தரிசனக்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவு சுமாராக இருக்கும்.

    கொடுக்கல்-வாங்கல்:
    பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்துச் செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் சற்று தடைகள் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமற்ற நிலைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

    தொழில், வியாபாரம்:
    தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையே இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். புதிய புதிய வாய்ப்புகள் தேடிவந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

    உத்தியோகம்:
    பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறாப்பாகவே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை உண்டாகும்,

    அரசியல்:
    மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டியிருக்கும். கட்சிப்பணிகளுக்காக நிறைய செலவாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால்தான் முன்னேற முடியும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் ஓரளவுக்கு ஆதாயப் பலனையே அடையமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும்.

    விவசாயிகள்:
    விளைச்சல் ஓரளவுக்குத்தான் இருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்கவே அரும்பாடு பட வேண்டிவரும். வயல் வேலைகளுக்கு தகுந்த நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்கமாட்டார்கள். சந்தையிலும் விளைபொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பங்காளிகளை அனுசரித்துச் செல்லவும்.

    பெண்கள்:
    உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்ளவும் புத்திர வழியில் மனசஞ்சலங்கள் தோன்றும்.

    கலைஞர்கள்:
    தகுந்த பாத்திரங்களுக்காக காத்திராமல் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. போட்டி, பொறாமைகள் அதிகரிப்பதால் நல்ல வாய்ப்புகள் பறிபோகும். ஆடம்ப்ர வாழ்க்கையிலும் பாதிப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.

    மாணவ-மாணவியர்:
    கல்வியில் மந்த நிலை ஏற்படக்கூடிய காலம் என்பதால் சற்று ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பொழுதுபோக்குகளால் மனம் வேறுபாதைகளுக்கு மாறிச்செல்லும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெற இயலாமல் போகும்.

    உடல் ஆரோக்யம்:
    உடல் ஆரோக்யம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூறமுடியாது. அடிக்கடி பாதிப்புகள் உண்டாகியபடியே இருக்கும். மனைவி, பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். நீண்டநாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது.

    மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
    எல்லாவிதமான முன்னேற்றத்தையும் தரும். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட  தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில் வியாபாரம்  முன்னேற்றம் அடையும். புதிய தொழில்  அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். 

    திருவாதிரை:
    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமணம்  தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும்.  குடும்ப உறுப்பினர்கள் மத்தியில்   மகிழ்ச்சி நிலவும், கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.    

    புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
    தொலைதூர தகவல்கள்  நல்ல தகவல்களாக வரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும்  எளிதாக செய்து முடிப்பீர்கள். காரிய தடை நீங்கும். எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து  தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

    பரிகாரம்: முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று நல்லெண்ணையில் தீபம் ஏற்றி 7 முறை வலம் வரவும்.

    மலர் பரிகாரம்: புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு துளசி சாற்றி வழிபடவும்.
    அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Raagu – Kedhu Peyarchi Palangal Rishabam

    தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக அக்கறையும், ஆடை ஆபரணங்களின் மீது ஆர்வமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! 

    கிரகநிலை:
    குருபகவான் சப்தம ஸ்தானத்திலும் – ராகு தைரிய ஸ்தானத்திலும் – சனி பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் – கேது பாக்கிய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    
    கிரகமாற்றம்:
    13.02.2019 அன்று ராகு பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் – கேது பகவான் அஷ்டம ஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.
    23.11.2019 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கும் மாறுகிறார்.    

    இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவர் – மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். உற்றார் – உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும், திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆனால் எதையும் சமாளிக்கும் திறன் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் இருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளும், தொழிலாளர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

    குடும்பப் பொருளாதாரநிலை:
    கணவன் – மனைவியிடையே அடிக்கடி வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. மணமாகாதவர்களுக்கு சுப காரியங்கள் நடைபெற தாமத நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் தடைகளுக்குப் பின்பே வெற்றிபெற முடியும். அசையும்-அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும்.

    கொடுக்கல் – வாங்கல்:
    பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வாங்கிய பணத்தை திருப்பித்தருவதில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்ததைக்கேட்டால் அடுத்தது பகையாக மாறும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும்.

    தொழில், வியாபாரம்:
    தொழில், வியாபாரத்தில் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். உடனிருப்பவர்களே தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெறமுடியாமல் போகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

    உத்தியோகம்:
    பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிலும் திறம்படச் செயல்படுவீர்கள். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும், உத்தியோக உயர்வுகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் உண்டாகும். வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

    அரசியல்:
    மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்திசெய்தால் உங்கள் பதவிக்கு பங்கம் ஏற்படாது பார்த்துக்கொள்ள முடியும். கட்சிப்பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டிவருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும்போது சிந்தித்துச் செயல்படவும்.

    விவசாயிகள்:
    பயிர் விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளைக் கையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். இதனால் செய்யும் தொழிலில் சுணக்கம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும்.  நீர்வரத்து சிறப்பாகவே இருக்கும்.

    பெண்கள்:
    உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனமெடுப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சனைகளை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருக்கவும் மணவயதை அடைந்தவர்களுக்கு மணமாக சில தடைகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும்.

    கலைஞர்கள்:

    பயணங்களால் அலைச்சல்களும் உடல் சோர்வும் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு ஏற்படும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.

    மாணவ-மாணவியர்:
         
    மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாகக்கூடிய காலமிது என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்விரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைகள் ஏற்படும். தேவையற்ற நட்புகள் உங்களை வேறுபாதைக்கு அழைத்துச்செல்லும். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும்.

    உடல் ஆரோக்கியம்:

    தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் உடல் ஆரோக்கியத்தால் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். உடல்நிலை சோர்வடையும். குடும்பத்திலுள்ளவர்களுக்கும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத வீண் விரயங்களும் ஏற்படும்.

    கார்த்திகை 2, 3, 4 பாதம்:
    அவசரப்படுவதை தவிர்ப்பது நன்மை தரும். வீண் செலவும்,  அலைச்சலும் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம்  ஏற்படலாம்.  தேவையற்ற  குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். எனவே  எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.  தொழில் வியாபாரம்  தொடர்பான  பணிகளில் தாமதம் ஏற்படும்.  வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. 

    ரோகிணி:
    உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை.   தீ, ஆயுதம் இவற்றை கையாளும் போது  கவமனாக இருப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.  வாழ்க்கை துணையின் உடல்  ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் மனகவலை  ஏற்படலாம்.

    மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
    மற்றவர்களுக்கு உதவி செய்யபோய்  தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை.  மாணவர்களுக்கு: கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம்.  சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். 

    பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று தேங்காய் தீபம் ஏற்றி 11 முறை வலம் வரவும்.
    மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் மல்லிகை மலரை அருகிலிருக்கும் நவக்கிரகங்களுக்கு அர்ப்பணிக்கவும்.
    அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
    அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
    அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542

  • Raagu Kedhu Peyarchi – Mesham

    எடுக்கும் காரியங்களை வேகத்தோடும், விவேகத்தோடும் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!!

    கிரகநிலை:
    குருபகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் – ராகு சுக ஸ்தானத்திலும் – சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் – கேது தொழில் ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    
    கிரகமாற்றம்:
    13.02.2019 அன்று ராகு பகவான் தைரியவீர்ய ஸ்தானத்திற்கும் – கேது பகவான் பாக்கியஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.
    23.11.2019 அன்று குரு பகவான் பாக்கியஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    நினைத்தது நிறைவேறும் பெயர்ச்சியாக அமையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இதுவரை தடைபட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைவிலகி இனிதாக நடைபெறும். புத்திர பாக்கியம் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும். பலர் சொந்தமாக வீடு, வாகனம் வாங்கி மகிழ்வர். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவர். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன் – மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு பெற்று மனமகிழ்வர். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

    குடும்ப பொருளாதாரம்:
    குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமணம் சுபச் செலவுகள் உண்டாகும். சொந்த பூமி, மனை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். இதன் மூலம் உங்கள் பொருளாதார நிலை சீராகும். 

    கொடுக்கல்-வாங்கல்:
    பொருளாதார நிலை சீராக இருப்பது உங்களின் கொடுக்கல் வாங்கல் நல்ல நிலைமையில் இருப்பதைக் காட்டுகிறது. பிறரை நம்பி பெரிய தொகையைக் கடனாக கொடுக்கும் போது சற்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். உடனிருப்பவர்களே பண விஷயத்தில்  துரோகம் செய்யத் துணிவார்கள். உங்களுக்கு உள்ள வம்பு வழக்குகள் நல்ல ஒரு முடிவுக்கு வரும்.

    தொழில், வியாபாரம்
    தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் பெருகும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உங்களுக்குள்ள வங்கிக் கடன்கள் குறையும்.

    உத்தியோகம்:
    செய்யும் பணியில் உயர்வான நிலை ஏற்படும்.  கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். 

    அரசியல்:
    பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

    விவசாயிகள்:
    பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப்பெறுவதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு பூமி, மனை வாங்கும் யோகமும் கிட்டும்.

    பெண்கள்:
    உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் – உறவினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக வழியில் லாபம் கிட்டும்.

    கலைஞர்கள்:
    திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். புதிய கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள்.

    மாணவ – மாணவியர்:
    கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். திறமைக்கேற்ற மதிப்பெண்களைப் பெற்று முன்னேறுவீர்கள். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.

    உடல் ஆரோக்யம்:
    ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். குடும்பத்திலுள்ளவர்களும் சில நேரங்களில் மருத்துவச் செலவுகளை ஏற்படுத்துவார்கள்.  தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

    அஸ்வினி:
    நீங்கள் பயமின்றி எந்த காரியத்திலும் இறங்கலாம். அவசரமாக எதையும் செய்ய தோன்றும்.  துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்.  சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஆனால்  வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டு  செயல்படுத்துவது வளர்ச்சிக்கு உதவும்.  

    பரணி:
    வாடிக்கையாளர்களிடம்  சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில்  வேகம் காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள்  எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது.  குடும்பத்தில் இருப்பவர்களுடன்  தன்மையாக பேசுவது நல்லது. 

    கார்த்திகை 1ம் பாதம்
    கணவன்,  மனைவிக்கிடையே  ஒற்றுமை குறைவு ஏற்படலாம் கவனம் தேவை.  பிள்ளைகளுக்காக செய்யும்  வேலைகளில் தடை ஏற்படலாம். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது  நல்லது.  

    பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும். 
    மலர் பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் அம்மனுக்கு செவ்வரளிப் பூவால் மாலை கட்டி அர்ப்பணிக்கவும்.
    அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Ragu kedhu peyarchi podhu palangal

    ஏற்றம் தரும் ராகு பெயர்ச்சி – ஞானம் தரும் கேது பெயர்ச்சி

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

    Mobile/WhatsApp: +91 7845119542

    நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருஷம் உத்தராயனம் சிசிரரிது மாசி மாதம் 01ம் தேதி – 13.02.2019 சுக்லபக்ஷ நவமி – கிருத்திகை நக்ஷத்ரம் – புதன்கிழமை – மாஹேந்திர நாமயோகம் – பாலவ கரணம் – அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 18.29க்கு (உதயாதி பகல் மணி 02.02க்கு) மிதுன லக்னத்தில் ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவேசிக்கிறார். 

    நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருஷம் உத்தராயனம் சிசிரரிது மாசி மாதம் 01ம் தேதி – 13.02.2019 சுக்லபக்ஷ நவமி – கிருத்திகை நக்ஷத்ரம் – புதன்கிழமை – மாஹேந்திர நாமயோகம் – பாலவ கரணம் – அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 18.29க்கு (உதயாதி பகல் மணி 02.02க்கு) மிதுன லக்னத்தில் கேது பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார். 

    ராகு கேது – ஓர் அறிமுகம்:
    ராகு – கேதுக்கள் சகோதரர்களாவார்கள். ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும். ஆனால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு. எந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்களது ஆதிபத்தியத்தை இந்த கிரகங்கள் நமக்குக் கொடுப்பார்கள். உதாரணமாக ஜெனன கால ஜாதகத்தில் மேஷ ராசியில் ராகு இருக்கிறார் என்றால் அவர் மேஷ ராசியின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார். 

    அறிவியல் பூர்வமாக நமது DNAதான் நம்மைப் பற்றியும் நமது முன்னோர்களைப் பற்றியும் சொல்லும் விஷயமாகும். ராகு – கேது என்னும் கிரகங்கள் DNA போலதான். ராகுவை வைத்து தகப்பானார் வழிகளையும் – கேதுவை வைத்து தாயார் வழிகளையும் புரிந்து கொள்ள இயலும். எனவே தான் ராகு தந்தை வழி காரகன் என்றும் கேதுவை தாய் வழி காரகன் என்றும் சொல்கின்றனர். 

    ராகு கேதுக்களை வைத்துதான் தார தோஷம்- களத்திர தோஷம் – பிதுர் தோஷம் – புத்திர தோஷம் போன்றவற்றை சொல்ல முடியும்.
    கல்வி – ஞானம் – திருமணம் – மக்கட்பேறு – வேலை – வெளிநாடு சம்பாத்தியம் – கர்மா போன்ற நமது வாழ்வின் இன்றியமையாத காரகங்களுக்கு ராகு கேது முக்கியமானவர்களாகும்.

    பொது பலன்கள்:
    பொதுவில் உலகளவில் அரசு சார்ந்த விஷயங்களில் சிறிது பிரச்சனைகள் தலைதூக்கலாம். உத்திர நக்ஷத்ரத்தில் ராகுவும் – பூரட்டாதி நக்ஷத்ரத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். ராகுவினுடைய அம்சம் என்பது குருவினுடைய நக்ஷத்ரம் – புதன் ராசியில் சஞ்சரிக்கிறார். கேது சூரியனுடைய நக்ஷத்ரம் – குருவின் ராசியில் இருக்கிறார். அரசாங்கம் ஒவ்வொரு முடிவையும் தவறாக எடுப்பதும் அதற்கு பரிகாரமாக மேல் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் அதை சரி செய்வதுமாக இருக்கும். ராகுவினுடைய மாற்றம் புதன் வீட்டில் இருக்கிறது.

    சனியின் பார்வை ராகுவின் மீது விழுகிறது. நாடுகளுக்குள் மோதல்கள் வரலாம். இவ்வருடம் வெப்பம் அதிகமாக இருக்கும். பணநடமாட்டம் சீராக இருக்கும். கல்வி சார்ந்த விஷயங்களில் தொய்வு ஏற்படும். அதே வேளையில் குருவின் வீட்டில் கேது சாரம் இருப்பதன் மூலம் ஆன்மீகம் மிக அதிகமான வளர்ச்சி காணும். பூமி நிலம் சம்பந்தாமான பிரச்சனைகள் அதிகமாவதும் அதை தீர்க்க நீதிமன்றத்தை நாடுவதும் அதிகமாகும். அறுவை சிகிச்சை சம்பந்தமான புதிய கண்டுபிடிப்பு உருவாகும்.

    அதே வேளையில் கேதுவிற்கு முதல் கேந்திரத்தில் சனி பகவான் இருக்கிறார். ஆன்மீகம் – கோவில் சம்பந்தமான பிரச்சனைகளில் சிறிது சுணக்கம் ஏற்படும். ராகு – கேது சஞ்சாரம் செய்யும் இடங்களால் கலப்புத் திருமணங்கள் அதிகமாகும். நிலம் – நீர் – காற்று – ஆகாயம் – நெருப்பு என பஞ்சபூதங்கள் மூலமாகவும் மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும். தற்கொலைகள் அதிகமாகும். 

    பொது பரிகாரம்:
    ராகுவும் கேதுவும் நாகம் சம்பந்தமான கிரகங்கள் என்பதால் அடிக்கடி நாகதேவதையை வணங்குவது நல்லது.

    ராகுவிற்கு ஸ்ரீதுர்க்கை அம்சமுள்ள அம்மனையும் – கேதுவிற்கு வினாயகர் – ஆஞ்சநேயரையும் வணங்குவது நன்மை தரும்.

    பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள்:
    மேஷம் – மிதுனம் – கடகம் – சிம்மம் – கன்னி – துலாம் – தனுசு – மகரம்

    பெயர்ச்சியால் பரிகாரத்தின் மூலம் நன்மை அடையும் ராசிகள்:
    ரிஷபம் – விருச்சிகம் – கும்பம் – மீனம்
     

  • Rasi palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   ஊக்கம் 
    ரிஷபம் – அமைதி
    மிதுனம் – ஓய்வு 
    கடனம் –  பக்தி 
    சிம்மம் – தனம் 
    கன்னி – போட்டி 
    துலாம் –  அசதி
    விருச்சிகம் – சினம்  
    தனுசு – நற்செயல்
    மகரம் – பணிவு 
    கும்பம் – ஆர்வம் 
    மீனம் – சாதனை
    சந்திராஷ்டமம்    : சுவாதி, விசாகம்
     

  • Feb 12 – Radham Sapdhami

    பிப்ரவரி 12
    விளம்பி வருடம் – தை 29
    ரத சப்தமி
    12-பிப்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    சப்தமி    கா    11.44
    நட்சத்திரம்    :    பரணி    மா    6.18
    யோகம்    :    சித்த யோகம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Thyagarjar Swami koil masi thiruvizha

    பூலோகம் கைலாயம் என்று அழைக்கப்படும் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமிதிருகோவிலில் மாசி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    உலக பிரசித்தி பெற்ற 2000 ஆயிரம் ஆண்டுகள்  பழமை வாய்ந்த, திருவொற்றியூர் தியாகராஜசுவாமி , வடிவுடையம்மன் கோவிலில் மாசி திருவிழா பத்து நாள் பிரம்மோற்சவம்   ஆண்டு தோறும் மாசிமாதம் நடைபெறுகிறது. 

    இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு 108 சங்க நாதங்கள் முழங்க பரிவர்த்தனைகளுடன் கலச பூஜைகளுடன்  வாத்தியங்கள் ஒலிக்க  வெகு விமரிசையாக  கொடியேற்றப்பட்டது
     10 ம் தேதி முதல் தொடங்கப்படும் மாசி உத்சவம் 20 ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    தினமும் உற்சவர் தியாகராஜர் , சூரிய பிரபை, சந்திர பிரபை, நாகவாகனம், அதிகாரநந்தி யானை வாகனம் என  தினதோரும்  பக்தர்களுக்கு காட்சியளிப்பார். முக்கிய நிகழ்வான திருத்தேர் ஓட்டம் 16 ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

     இதனையடுத்து 18 ம் தேதி ஒன்பதாம் நாள் திங்கட்கிழமைகல்யாண சுந்தரர்  சங்கிலி நாச்சியார்  திருக்கல்யாண உத்சவம் நடைபெறுகிறது இதற்க்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளனர்
     

  • Ranganathar koil maha kumbabishegam

    கோவை பெரியநாயக்கன்பாளைம் அருகே மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள பாலமலையில் தென்திருப்பதி என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற மிகவும் பழமையான ஸ்ரீ செங்கோதை அம்மன், ஸ்ரீபூங்கோதை அம்மன் சமேத அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. 

    இந்த கோவிலில் தாயார், அரங்கநாதருடன் தன்வந்திரி பகவான், ஆஞ்சிநேயர், சக்கரத்தாழ்வார் பன்னிரு ஆழ்வார்கள், கருடாழ்வார், தும்பிக்கையாழ்வார்,  ராமானுஜர் கோயில்கள் உள்ளன. மேலும் இக்கோயில் உருவாக பெரும் பங்கு வைத்த பெரியவரான காளி தாசருக்கும் ஒரு கோயில் உள்ளது.

    கடந்த 8ம் தேதி மாலை 4 மணிக்கு ஆச்சார்ய வர்ணத்துடன் தொடங்கிய விழாவில் மகாகணபதி ஹோமம், சங்கல்பம், முதல்கால யாக பூஜைகள், தீபாராதனை, 2ம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, பிம்பசுத்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் காரமடை அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவில் ஸ்ரீ சுதர்சன பட்டர் ஸ்வாமிகள் தலைமையில் மஹா கும்பாஷேகம் நடைபெற்றது. 

    இந்த விழாவில் யாக பூஜைகளில் இருந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மூலவர் கோபுரம், அம்மன் கோபுரம், ராஜ கோபுரங்களில் உள்ள விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெருமாள் மற்றும் அம்மன் சாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், அபிசேக பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் 

    கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி இந்த விழாவில் கலந்து கொண்டு ஜமாப் குழுவினருடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடனமாடி பக்தர்களை உற்சாகப்படுத்தினார். அதனை தொடர்ந்து பஜனை குழுவினரின் பாடல்கள் நாள் முழுவதும் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.