Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Ragu Kedhu Parigara Thalangal

    சனி, குரு, பெயர்ச்சிகளை போல ராகு-கேது பெயர்ச்சியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  ராகு-கேது தோஷங்களால் பல்வேறு வகையில் அவதிகள் ஏற்படுவது உண்டு. தோஷத்திற்குரிய பரிகாரத்தலங்களை வழிபட்டால், அதிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. ராகு – கேது பெயர்ச்சி அடைந்து இருக்கும் நிலையில் தோஷம் நீக்கும் கோயில்கள் சிலவற்றை பார்க்கலாம்…. 

    வாயுத் தலம் – ஸ்ரீ காளஹஸ்தி

    ராகு-கேது பரிகார தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீகாளஹஸ்தி. ஆந்திர மாநிலத்தில் உள்ளது இந்த ஸ்தலம்.  காற்றாக எம்பெருமானே எழுந்தருளியிருக்கும் தலம். இங்கு வழிபட்டால் ராகு-கேது தோஷம் உள்பட சகல தோஷமும் விலகும்..

    மகாவிஷ்ணு  வழிபட்ட திருக்களாச்சேரி

    நாகை மாவட்டத்தில், தரங்கம்பாடிக்கு அருகே உள்ளது திருக்களாச்சேரி. இந்த கோயிலில், ராகு- கேது தோஷம் உள்ளவர்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட தோஷங்கள் நீங்கும். ராகு கால வேளையில் இங்கு வந்து, நாகலிங்கப் பூ, வில்வம் மற்றும் வன்னி இலை ஆகியவற்றை சமர்ப்பித்து, தல விருட்சமான குரா மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி மனதாரப் பிரார்த்தனை செய்ய வேண்டும். 

    ஸ்ரீகோலவிழி அம்மன் கோயில்

    சென்னை மயிலாப்பூரில் உள்ளது ஸ்ரீபத்ரகாளியம்மன் மற்றும்  ஸ்ரீகோலவிழி அம்மன் கோயில். ராகு தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வேண்டிக் கொண்டால், விரைவில் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

    காஞ்சி ஸ்ரீமாகாளீஸ்வரர் கோயில்

    காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே உள்ள  ஜவஹர்லால் தெருவில்  அமைந்துள்ளது ஸ்ரீமாகாளீஸ்வரர் கோயில். ராகுவும் கேதுவும் தங்களின் பாவ விமோசனத்துக்காக, இங்கு ஸ்ரீமாகாளீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்கிறது தல புராணம். சிவனார் ராகு-கேதுவை தனது கைகளில் ஏந்தியபடி, அம்பிகையுடன்  அருள் வழங்கும் தரிசனம் இக்கோயிலின் சிறப்பம்சம்!
    இங்கு வழிபட்டால், அனைத்து தோஷங்களும்  நீங்கும். ராகு- கேது பெயர்ச்சியின்போது, இங்கு பரிகார ஹோமங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன

    தேவர்குளம் ஸ்ரீசக்தி விநாயகர்

    திருநெல்வேலி, தேவர்குளம் அருகே உள்ள மூர்த்தீஸ்வரத்தில், ராகு- கேதுவுடன் அருள் பாலிக்கிறார் ஸ்ரீசக்தி விநாயகர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வந்து, இங்கு உள்ள விநாயகரை வழிபட, ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

    திருப்பாம்புரம்

    கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பாம்புரம் திருக்கோயில். ராகுவும் கேதுவும் ஒரே உருவமாக இருப்பது இக்கோயிலின் சிறப்பு. ஆதிசேஷன் இங்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி, வழிபட்டு விமோசனம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது. இங்கு வழிபட்டால் ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நீங்கும்.

    திருமுருகன்பூண்டி

    திருப்பூர் மாவட்டத்தில் முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் – திருமுருகன்பூண்டி. இந்தத் தலம், கொங்கு மண்டலத்தில் சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான், இந்தத் தலத்துக்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ மாதவனேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. எனவே, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

    செங்காணி ஸ்ரீகோதபரமேஸ்வரர்

    திருநெல்வேலி அருகே அமைந்துள்ளது செங்காணி ஸ்ரீகோதபரமேஸ்வரர் ஆலயம். ராகு தோஷம் நீக்கும் பரிகாரத் திருத்தலமாக இக்கோயில் திகழ்கிறது. ஸ்ரீகோதபரமேஸ்வரர் மட்டுமின்றி, இங்கே எழுந்தருளியுள்ள அனைத்து தெய்வங்களும் ராகு தோஷம் நீக்கும் வல்லமையோடு திகழ்கின்றனர்.

  • Rasi palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   முயற்சி 
    ரிஷபம் – இன்பம் 
    மிதுனம் – புகழ்
    கடனம் –  செலவு 
    சிம்மம் – சுகம் 
    கன்னி – வெற்றி 
    துலாம் –  உறுதி
    விருச்சிகம் – சுமை   
    தனுசு – தனம் 
    மகரம் – பக்தி 
    கும்பம் – தாமதம் 
    மீனம் – அன்பு
    சந்திராஷ்டமம்    : விசாகம்,அனுஷம்
     

  • Feb 13 Ragu Kedhu Peyarchi Indru

    பிப்ரவரி 13
    விளம்பி வருடம் – மாசி 1
     கார்த்திகை 
    ராகு கேது பெயர்ச்சி
    13-பிப்-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    கா    11.13
    நட்சத்திரம்    :    கார்த்திகை    மா    6.14
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    விசாகம்,அனுஷம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Raagu – Kedhu Peyarchi Palangal Meenam

    எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் உதவிகரமாகத் திகழவேண்டுமென்ற எண்ணம் கொண்ட மீன ராசி அன்பர்களே!!

    கிரகநிலை:
    குருபகவான் பாக்கிய ஸ்தானத்த்திலும் – ராகு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் – சனி பகவான் தொழில்  ஸ்தானத்திலும் – கேது லாப ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    
    கிரகமாற்றம்:
    13.02.2019 அன்று ராகு பகவான் சுக ஸ்தானத்திற்கும் – கேது பகவான் தொழில் ஸ்தானத்திற்கும்  மாறுகிறார்கள்.
    23.11.2019 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    இந்த பெயர்ச்சியின்  மூலம் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் மறையும். வீண் வம்பு, வழக்குகள் முடிவிற்கு வரும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் அனுகூலப்பலன் கிட்டும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் ஓரளவுக்கு லாபம் அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டார பழக்கவழக்கங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எந்த எதிர்ப்பையும் எதிர் கொண்டு வெற்றியினைப் பெறுவீர்கள். கணவன் – மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும்.

    பொருளாதார நிலை:

        குடும்ப ஒற்றுமை சுமாராகத்தான் இருக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உற்றார் – உறவினர்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். அசையும் – அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.

    கொடுக்கல் – வாங்கல்:

        பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகக்கூடிய காலமென்பதால கொடுக்கல் – வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். பணவிஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதினால் வீண்பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வீண் வம்பு, வழக்குகள் ஏற்படும்.

    தொழில் வியாபாரம்:

        தொழில் வியாபாரம் சுமாராகத்தன் நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. புதிய கூட்டாளிகளால் தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமுடனிருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

    உத்தியோகம்:

        பணியில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். செய்யும் பணியில் இடையூறுகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப்பளுவை குறைத்துக்கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானமுடனிருப்பது நல்லது.

    அரசியல்:

        மக்களின் ஆதரவு சிறப்பாக இருந்தாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் இடையூறுகள் உண்டாகும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்தாலும் எந்தவொரு காரியத்திலும் திருப்தி இருக்காது. உடன் பழகுபவர்களுடன் எச்சரிக்கையுடனிருப்பது நல்லது.

    விவசாயிகள்:

        பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் விலைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்காது. இதனால் பட்ட பாட்டிற்கு பலன் குறைவாக இருக்கும். நீர்வரத்து குறைவதால் பயிரிட அதிக செலவு ஏற்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் விரயங்கள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளிலும் தாமத நிலை ஏற்படும்.

    பெண்கள்:

        உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியாமல் போகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன் – மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும்.

    கலைஞர்கள்:

        எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. வரவேண்டிய பணத் தொகைகளில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

    மாணவ – மாணவியர்:

        கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. பொழுது போக்குகளாலும் கல்வியில் நாட்டம் குறையும்.

    உடல் ஆரோக்கியம்:

        உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். மனக்குழப்பங்களும் நிம்மதிக் குறைவுகளும் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். அலைச்சல், டென்சன் அதிகரிக்கும்.

    பூரட்டாதி 4ம் பாதம்:
    வீண் மனகுழப்பம்  ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். ஆன்மிக எண்ணம்  ஏற்படும். விருப்பமான நபரை  சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான  காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு  செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில்   கூடுதல் லாபம் பெற முடியும். 

    உத்திரட்டாதி:
    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக   வேலைகளை செய்யாவிட்டால்  மேல் அதிகாரிகளின்  அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன்  சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை.  கணவன், மனைவிக்கிடையே  மனவருத்தம்  ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன்  பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. 

    ரேவதி:
    அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது.  மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம்  உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும்.

    பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். 
    மலர் பரிகாரம்: சிவன் ஆலயத்திற்கு தாமரை மலரை சமர்ப்பிக்கவும்.
    அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு
    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
    அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
     

  • Raagu – Kedhu Peyarchi Palangal Kumbam

    எந்த பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து நியாயமாக தீர்த்துவைக்கும் அறிவாற்றல் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!!
    கிரகநிலை:
    குருபகவான் தொழில் ஸ்தானத்த்திலும் – ராகு ரண ருண ரோக ஸ்தானத்திலும் – சனி பகவான் லாப ஸ்தானத்திலும் –  கேது விரைய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    
    கிரகமாற்றம்:
    13.02.2019 அன்று ராகு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் – கேது பகவான் லாப ஸ்தானத்திற்கும்  மாறுகிறார்கள்.
    23.11.2019 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    இந்த பெயர்ச்சியின் மூலம் பணவரவுகளுக்கான பஞ்சமிருக்காது. கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். நல்ல வரன்கள் தேடிவரும். புத்திர பாக்கியமும் உண்டாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். கணவன் – மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உற்றார் – உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு அசையும் – அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் சேரும். செய்யும் தொழில், வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள், ஊதிய உயர்வுகள் போன்றவை கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, கணவன் – மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது உற்றார் – உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம்.

    பொருளாதார நிலை:

        பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன், குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகமும் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் போன்றவையும் உண்டாகும்.

    கொடுக்கல் – வாங்கல்:

        பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும். வம்பு, வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும்.

    தொழில், வியாபாரம்:

        தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையிருக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தி பெருகுவதுடன் லாபங்களும் தாராளமாக அமையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். நிதானமாகச் செயல்படுவது நல்லது.

    உத்தியோகம்:

        பணியில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறுவதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். சக நண்பர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.

    அரசியல்:

        பெயர், புகழ் உயர்க்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் பெருகும். அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவுகள் பெருகும். வருவாய் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.

    விவசாயிகள்:

        பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளைக் கையாண்டு பயிர் விளைச்சலைப் பெருக்குவீர்கள். அரசு வழியிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் – உறவினர்களின் ஆதரவுகளின் மகிழ்ச்சியளிக்கும்,. கடன்கள் குறையும்.

    கலைஞர்களுக்கு:

        எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும்.

    பெண்கள்:

        உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் திறம்படச் செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன் – மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும் என்றாலும் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் – உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பொன் பொருள் சேரும். சொந்த வீடு வாகனங்களையும் வாங்குவீர்கள்.

    மாணவ – மாணவியர்:

        கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்கலுக்கு செல்வீர்கள். நல்ல நட்புகளால் அனுகூலப் பலன் கிடைக்கும்.

    உடல் ஆரோக்கியம்:

        உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். அனைவரும் சுபிட்சமாக இருப்பதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

    அவிட்டம் 3, 4 பாதம்:
    பணவரத்து  அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும்.  எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.  துணிச்சல் உண்டாகும்.  எதை பற்றியும்  முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி  விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்களுக்கு   கீழ்நிலையில்  உள்ளவர்களால் லாபம்  கிடைக்க பெறுவீர்கள்.  சரக்குகளை  பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.  

    சதயம்: 
    உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம்  காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான  பொருட்கள் வாங்குவதன்  மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள்  வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை  தவிர்ப்பது நல்லது.  

    பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
    கணவன், மனைவிக்கிடையே   மனம்விட்டு பேசுவதன் மூலம்  கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது  நன்மைதரும். துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும்.   மாணவர்களுக்கு மிகவும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை நீங்கும்.  

    பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.  
    மலர் பரிகாரம்: விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை வாங்கிக் கொடுக்கவும்.
    அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
    அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
     

  • Raagu – Kedhu Peyarchi Palangal Magaram

    எதிலும் போராடி வெற்றிபெறக்கூடிய ஆற்றலும் தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட மகர ராசி அன்பர்களே!!

    கிரகநிலை:
    குருபகவான் லாப ஸ்தானத்த்திலும் – ராகு சப்தம ஸ்தானத்திலும் – சனி பகவான் விரைய ஸ்தானத்திலும் – கேது ராசியிலும் இருக்கிறார்கள்.    
    கிரகமாற்றம்:
    13.02.2019 அன்று ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கும் – கேது பகவான் விரைய ஸ்தாந்த்திற்கும் மாறுகிறார்கள்.
    23.11.2019 அன்று குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    இந்த ராகு கேது பெயர்ச்சியால் அதீதமாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், குடும்பத்தில் முன்னேற்றமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம். திருமன சுபகாரியங்களில் சிறு சிறு தடைகளுக்கு பின் வெற்றிகிட்டும். பொருளாதார நிலையும் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன் – மனைவியிடையே தெவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று போட்டிகளை எதிர்கொண்டே முன்னேற்றம் அடையமுடியும். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

    பொருளாதார நிலை:

        குடும்ப சூழ்நிலை ஓரளவுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் – மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும், அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகளில் சுமாரான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைக்கவும்.

    கொடுக்கல்-வாங்கல்:

        பொருளாதார தேவைகேற்றபடி இருந்தாலும் கொடுக்கல் – வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாகக் கொடுப்பதை தவிர்க்கவும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தேவையற்ற வம்பு, வழக்குகள் உண்டாகி மன சஞ்சலங்கள் ஏற்படும்.

    தொழில், வியாபாரம்:

        தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் குறைவாக இருந்தாலும் வர வேண்டிய வாய்ப்புகளுக்கு தடை இருக்காது. நிறைய போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்துவிடுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும்.

    உத்தியோகம்:

        பணியில் வேலைப் பளு அதிகமாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் வேலைப்பளுவை குறைக்க உதவும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.  எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்திக்கொள்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும்.

    அரசியல்:

        மக்களின் தேவையறிந்து செயல்பாட்டால் பெயர், புகழை காப்பாற்றிக்கொள்ள முடியும். கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை செய்யவேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மேடைப் பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடன் பழகுபவர்களை நம்பி எந்தவொரு காரியத்தையும் ஒப்படைக்காமலிருப்பது உத்தமம்.

    விவசாயிகள்;

        பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். உழைப்பிற்கான பலனைப் பெறுவதில் இடையூறுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தாமதப்படும். சந்தையிலும் விளைபொருளுக்கேற்ற விலை கிடைக்காது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகக்கூடிய காலமென்பதால் தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும்.

    பெண்கள்:

        உடல் ஆரோக்கியத்தில் வயிறு, சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தோன்றிமறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையப்பெறுவதில் தடைகள் ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கவும்.

    கலைஞர்கள்:

        புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் அது தகுதிகேற்றதாக இருக்கது. ரசிகர்களின் ஆதரவுகள் குறையாமலிருப்பதால் எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடமுடியும். கார், பங்களா வாங்கும் முயற்சிகளில் கடன்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

    மாணவ – மாணவியர்:

        கல்வியில் சற்று மந்தமான நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெற அதிக முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லுமென்பதால் நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை.

    உடல் ஆரோக்கியம்:

    உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உணவு விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும்.

    உத்திராடம் 2, 3, 4 பாதம்:
    மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது  கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக  செய்து முடிப்பீர்கள்.  வியாபாரம்  தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். 

    திருவோணம்
    உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை   கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.  செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு  அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே   சகஜ நிலை காணப்படும். குழந்தைகள்  திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். 

    அவிட்டம் 1,2 பாதம்:
    உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும்  போதும்  நிதானமாக பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு எதிலும்  மிகவும் கவனமாக  ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு  உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.  

    பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும்.  
    மலர் பரிகாரம்: வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சூட்டவும். மல்லிகை மலரை பெருமாளுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்யவும்.
    அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு
    அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
    அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 
     

  • Raagu – Kedhu Peyarchi Palangal Dhanusu

    கம்பீரமான தோற்றமும், சிறந்த தெய்வபக்தியும், எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!!

    கிரகநிலை:
    குருபகவான் விரைய ஸ்தானத்த்திலும் – ராகு அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் – சனி பகவான் ராசியிலும் – கேது தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    
    கிரகமாற்றம்:
    13.02.2019 அன்று ராகு பகவான் சப்தம ஸ்தானத்திற்கும் – கேது பகவான் ராசிக்கும் மாறுகிறார்கள்.
    23.11.2019 அன்று குரு பகவான் ராசிக்கு மாறுகிறார்.

    இந்த பெயர்ச்சியின் மூலம் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் – மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மேன்மை ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்டுக் கொண்டிருந்த பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் தற்போது கிடைக்கும்.

    பொருளாதார நிலை:
    கணவன் – மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். உற்றார் – உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பிரிந்தவர்களும் ஒன்று சேருவார்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். சிலருக்கு சொந்தமாக கார், பங்களா வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். குடும்பத்தில் சுபிசமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

    கொடுக்கல் – வாங்கல்:

        பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் – வாங்கலும் சரளமாகவே இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்கும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வம்பு, வழக்குகளில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

    தொழில், வியாபாரம்:

        செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும்.  வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபம் கிட்டும். பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்வீர்கள். போட்டி, பொறாமைகள் குறையும். நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் கடனுதவி கிடைக்கும்.

    உத்தியோகம்:

        பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால் வாழ்க்கைத் தரம் உயரும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப்பளு குறையும். புதிய வேலை வாய்ப்பு தகுதிகேற்றபடி கிடைக்கும்.

    அரசியல்:

        மக்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்றாலும் பெயர், புகழுக்கு பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடைப் பேச்சுகளில் நிதானமுடன் நடந்துகொள்வது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். வருவாய் பெருகும்.

    விவசாயிகள்:

        பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்றுவிட முடியும். வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். பூமி மனை சேரும்.

    பெண்கள்:
        உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். அசையும் – அசையா சொத்துக்களால் ஓரளவுக்கு அனுகூலம் ஏற்படும். சேமிக்க முடியும்.

    கலைஞர்கள்:

        இதுவரை பட்ட துயரங்களுக்கு ஒரு முடிவுவரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். வரவேண்டிய பணத்தொகைகளும் கைக்கு வந்து சேரும். இழந்தவற்றை மீட்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.

    மாணவ – மாணவியர்:

        கல்வியில் சிறுசிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். விளையாட்டுப் போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றொர், ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும்.

    உடல் ஆரோக்கியம்:

        உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் சிறுசிறு கவலைதரும் சம்பவங்கள் நடைபெறும். தேவையற்ற அலைச்சலகள் அதிர்கரிப்பதால் உடல் நிலை சோர்வடையும்.

    மூலம்:  
    எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால்  இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து  எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள்  கிடைக்க பெறுவீர்கள்.  தொழில் வியாபாரம்  சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள்.   

    பூராடம்:
    வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய  பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர  பயணங்களால் காரிய அனுகூலம்  உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள்  உங்களை அனுசரித்து செல்வார்கள்.  

    உத்திராடம் 1ம் பாதம்:
    கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை  காணப்படும். பிள்ளைகள் மற்றும் துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். பெண்களுக்கு எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.  மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம்  உண்டாகும்.   
    பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.  
    மலர் பரிகாரம்: சாமந்தி மலரை குருவிற்கு அர்ப்பணிக்கவும். 
    அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Raagu – Kedhu Peyarchi Palangal Rishabam

    நல்ல அறிவாற்றலும், மற்றவர்களின் மனநிலையறிந்து பேசும் திறனும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!!

    கிரகநிலை:
    குருபகவான் ராசியிலும் – ராகு பாக்கிய ஸ்தானத்திலும் – சனி பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும் – கேது தைரிய வீர்ய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    
    கிரகமாற்றம்:
    13.02.2019 அன்று ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கும் – கேது பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.
    23.11.2019 அன்று குரு பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    இந்த பெயர்ச்சியில் தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். பணவரவுகள் தேவைகேற்றபடியிருக்கும். கணவன் – மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகமும் அதனால் கடன்களும் உண்டாகும். உற்றார் – உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொதுநல காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    பொருளாதார நிலை:

        பணவரவுகள் தேவைகேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண்செலவுகள் உண்டாகும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. கணவன் – மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக்கக்கூடிய காலம் என்பதால் விட்டுகொடுத்து அனுசரித்து நடப்பது நல்லது. உற்றார்-உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும் சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும்.

    கொடுக்கல் – வாங்கல்:

        பொருளாதார நிலை ஓரளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று சாதகமான நிலைகள் உண்டாகும். முடிந்தவரை தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.

    தொழில், வியாபாரம்:

        தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளால் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கைநழுவிப் போகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படமாட்டார்கள். அரசு வழியிலும் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். தொழிலிலும் மந்த நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனமுடனிருப்பது நல்லது.

    உத்தியோகம்:

        உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் காலம் என்பதால் தங்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் பழிச் சொற்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளை கண்முன்னேயே பிறர் தட்டிச்செல்வர். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு  தாமதமாக கிடைக்கும்.
     

    அரசியல்:

        மக்களின் ஆதரவைப் பெற அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. பெயர், புகழுக்கு இழுக்கு நேராதபடி பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்கவும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்யவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.

    விவசாயிகள்:

        பயிர் விளைச்சல் நன்றாக அமைய கடும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலையால் பயிர் வேலைகள் சரிவர நடக்காது போகும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானிய உதவிகள் தாமதப்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

    பெண்கள்:

        உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்துமென்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படமுடியும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார்-உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.

        
    கலைஞர்கள்:

        புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகளிலும் இழுபறியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் உண்டாகும். சுக வாழ்க்கை பாதிப்படையும்.

    மாணவ – மாணவியர்:

        கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.

    உடல் ஆரோக்கியம்:

        உடல் ஆரோக்கியம் ஓரளவுக்குச் சுறுசுறுப்பாக இருக்கும். அவ்வப்போது ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளுக்குப் பின் குணமாகும். எந்தவொரு காரியத்திலும் அதிக உழைப்பினை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

    விசாகம் 4ம் பாதம்:
    மனோதைரியம் அதிகரிக்கும். எல்லாகாரியங்களும் சாதகமாக நடந்து  முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லா தரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும்.   நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். தொழில் வியாபாரம்  முன்னேற்ற மடையும்.  

    அனுஷம்:
    தொழிலில் இருந்து வந்த போட்டிகள் குறையும்.  தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம்  கிடைக்க பெறுவீர்கள்.  கடன் பிரச்சனை தீரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின்  ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். 

    கேட்டை:
    குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.  திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும்.  கணவன்,  மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்.  பிள்ளைகளுக்காக  செய்யும் பணிகள் திருப்தி தரும்.    அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன்  இருந்த தகராறுகள் நீங்கும்.  பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும். 

    பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும். 
    மலர் பரிகாரம்: நவக்கிரகங்களுக்கும் மலர்கள் வாங்கிக் கொடுக்கவும்.
    அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
    அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
     

  • Raagu – Kedhu Peyarchi Palangal Thulam

    அனைவரையும் கவர்ந்திழுக்ககூடிய அழகும், அறிவும் உடைய துலா ராசி அன்பர்களே!!

    கிரகநிலை:
    குருபகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும் – ராகு தொழில் ஸ்தானத்திலும் – சனி பகவான் தைரிய வீர்ய  ஸ்தானத்திலும் – கேது சுக ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    
    கிரகமாற்றம்:
    13.02.2019 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கும் – கேது பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.
    23.11.2019 அன்று குரு பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    இந்த பெயர்ச்சியால் குடும்பத்தில் தடைபட்டுக்கொண்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. சுக வாழ்வு அமையும். சொந்தமாக வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கக்கூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும். எதிலும் வெற்றிமேல் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். பல இடையூறுகளைச் சந்தித்து வந்தாலும் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகு. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியொகத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் தற்போது கிடைக்ககூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

    பொருளாதார நிலை:

    குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன் – மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும்.

    கொடுக்கல்-வாங்கல்:

        பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கொடுக்கல்-வாங்கலும் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் வீடு தேடிவரும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பொருளாதார உயர்வுகளால் குடும்பத் தேவைகள் மட்டுமின்றி பிற தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

    தொழில், வியாபாரம்:

        தொழில், வியாபாரம் அமோகமாக நடைபெறும். போட்டிகள் குறையும். நல்ல வாய்ப்புகள் தேடிவரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளியூர், வெளிநாடுகள் மூலமும் முன்னேற்றம் உண்டாகும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும்
        
    உத்தியோகம்:

        பணியில் தடைபட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் தடை விலகி கிடைக்கப் பெறும். கௌரவமும், புகழும் உயரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிகேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் உயர்வடையும்.

    அரசியல்:

        பெயர், புகழ் உயர்வடையும். மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்யநேர்ந்தாலும் வரவேண்டிய பணவரவுகள் வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். கௌரவ பதவிகள் கிடைக்கும்.

    விவசாயிகள்:

        பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். நவீன முறைகளைக் கையாண்டு பயிர் விளைச்சலைப் பெருக்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். நீர்வரத்து தாராளமாக இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். அரசு வழியில் மானிய உதவிகள் கிட்டும். சுபகாரியங்கள் யாவும் கைகூடும்.

    பெண்கள்:

        உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்

    கலைஞர்கள்:

        எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று உங்களின் நடிப்புத்திறன் வெளிச்சத்திற்க் வரும். ரசிகர்களின் ஏகோபித்த ஆத்ரவுகளால் மனநிறைவு உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள்.

    மாணவ-மாணவியர்:

        கல்வியில் முன்னேற்றமான நிலையிருக்கும். தேவையற்ற நட்புகளையும் பொழுதுபோக்குகளையும் தவிர்ப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச்செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

    உடல் ஆரோக்கியம்:

        உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. குடும்பத்திலுள்ளவர்கள் அவ்வளவு நலமாக இருப்பார்கள் என்று கூறமுடியாது.

    சித்திரை 3, 4 பாதம்:
    எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. ராசியாதிபதியால்  திடீர்  உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம்.  பணவரத்து இருக்கும்.  கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  மற்றவர்கள் மூலம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்தமான  போக்கு காணப்பட்டாலும் பணவரத்து  குறைவு இருக்காது.  

    சுவாதி:
    தொழில்  கூட்டாளிகளுடன்  அனுசரித்து  செல்வது நன்மைதரும்.   உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.    வீண் அலைச்சலும் கூடுதல்  உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு  நடக்க வேண்டி இருக்கும்.   

    விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
    குடும்பத்தில் கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.  தடைபட்டு வந்த காரியங்கள் நடந்து மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கவனமாக படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.  நன்மைகள் உண்டாகும். மனவருத்தம் நீங்கும்.  

     

    பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் லக்ஷ்மி பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள். 
    மலர் பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் மல்லிகை அல்லது பிச்சிப்பூவை கோவிலுக்கு அர்ப்பணிக்கவும்.
    அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு
    அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
    அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Raagu – Kedhu Peyarchi Palangal Kanni

    அழகிய் உடல்வாகு நீல விழியும், சிறந்த ஒழுக்கமும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!!

    கிரகநிலை:
    குருபகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திலும் – ராகு லாப ஸ்தானத்திலும் – சனி பகவான் சுக ஸ்தானத்திலும் – கேது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    
    கிரகமாற்றம்:
    13.02.2019 அன்று ராகு பகவான் தொழில் ஸ்தானத்திற்கும் – கேது பகவான் சுக ஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.
    23.11.2019 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

    இந்த பெயர்ச்சியால் நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றியினைப் பெற்றிடுவீர்கள். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் சுபவிரயங்கள் ஏற்படும் என்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். கணவன் – மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான நிலை ஏற்படும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலை பளு அதிகமாக இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. எதையும் சமாளித்து ஏற்றத்தைப் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வம்பு, வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும். 

    பொருளாதார நிலை:

        குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படும். வீண் விரயங்கள் அதிகரிக்கும். கணவன் – மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும், முன்கோபத்தைக் குறைப்பதும் நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.

    கொடுக்கல் – வாங்கல்:

        பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் முடிந்தவரை பெரிய தொகைகளை கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை திரும்பப்பெறுவதில் தடைகள் ஏற்படும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாதிருப்பது நல்லது.

    தொழில், வியாபாரம்:

        தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு சுமாரான நிலைகள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

    உத்தியோகம்:

        பணியில் சற்று வேலைப் பளு கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப் பலனை பெற முடியும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்படும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை குறைத்துகொண்டால் வீண் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். புதிதாக வேலைதேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

    அரசியல்:

     பெயர் புகழுக்கு இழுக்கு நேராமல் பாதுகாத்துகோள்ளவேண்டிய நேரம் என்பதால் எல்லா விஷயங்களிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அரசு வழியில் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மக்களின் ஆதரவு ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும். பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும்.

    விவசாயிகள்:

        பயின் விளைச்சல் சுமாராகத்தானிருக்கும் போட்ட முதலீட்டினை எடுக்க அரும்பாடுபட வேண்டிவரும். நீர்வரத்து போதிய அளவு இருக்கும் என்றாலும் வேலையாட்கள் சரியான நேரத்திற்கு வேலைக்கு கிடைக்கமாட்டார்கள். வாய்க்கால், வரப்பு பிரச்சினைகளால் வீண் விவாதங்கள் ஏற்படும். பண வரவு தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

    பெண்கள்:

        உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் வீண் விரயங்கள் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்படும். அசையும் – அசையா சொத்துக்களால் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும்.

    கலைஞர்கள்:

        மக்களின் ஆதரவும், ரசிகர்களின் ஆதரவும் சிறப்பாகவே இருக்கும். கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொண்டால் சிரிய பட்ஜெட் படம் என்றாலும் நல்ல பெயரினை வாங்கித்தரும். வரவேண்டிய பணத்தொகைகளில் சற்று இழுபறி நிலை இருக்கும்.

    மாணவ-மாணவியர்:

        கல்வியில் முன்னேற்றத்தினைப் பெற்றுவிட முடியும். சிறுசிறு இடையூறுகள், தேவையற்ற நட்பு வட்டாரங்கள் ஏற்படுவதால் அவ்வப்போது கல்வியில் மந்த நிலை தோன்றினாலும் எதையும் சமாளித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பயணங்களில் கவனமுடனிருப்பது நற்பலனைத் தரும்.

    உடல் ஆரோக்கியம்:

        உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறைவு உண்டாகும். நீண்டநாள் பிரச்சினைகளுக்காக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது என்றாலும் பெரிய கெடுதியில்லை.

    உத்திரம் 2, 3, 4 பாதம்:
    நிம்மதியும், சுகமும் அதிகமாகும்.  புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி  வரலாம்.  பணவரத்து திருப்திகரமாக  இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம்  அதிகரிக்கும்.   யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி  இருக்கும்.    

    அஸ்தம்:
    உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மற்றவர்களுக்காக பொறுப்புகள் ஏற்கும் போது மிகவும் கவனமாக  இருப்பது வீண்பழி   ஏற்படாமல் தடுக்கப்படும்.   அனுபவபூர்வமான அறிவுதிறன் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.   

    சித்திரை 1, 2, பாதம்:
    செலவு செய்ய நேரிடும்.  உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு மற்றவர்கள்  உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்.  காரிய தடை நீங்கும்.

    பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தா கோவிலுக்குச் சென்று நெய் அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி  வரவும்.
    மலர் பரிகாரம்: புதன்ஹோரைகளில் பெருமாள் அல்லது விநாயகர் அல்லது சாஸ்தா கோவிலுக்கு மரிக்கொழுந்தை அர்ப்பணிக்கவும். 
    அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு
    அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
    அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542