Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ஜூன் 23 – இன்றைய நல்லநேரம்

    ஜூன் 23 – இன்றைய நல்லநேரம்
    குரோதி வருடம் – ஆனி 09
    ஜூன் 23 – 2024
    ஞாயிறு
    காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    குளிகை : 3.00 – 4.30
    ராகு : 4.30 – 6.00
    திதி : துவிதியை
    திதி நேரம் :  பிரதமை கா 6.19
    நட்சத்திரம் :  பூராடம் மா 6.42
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் : ரோகிணி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • ஜூன் 22 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – களிப்பு
    ரிஷபம்         – கீர்த்தி
    மிதுனம்     – ஜெயம்
    கடகம்         –  பரிவு  
    சிம்மம்         –   பாசம்   
    கன்னி         –    பகை
    துலாம்         –     பரிசு
    விருச்சிகம்     –  பாராட்டு
    தனுசு         –     குழப்பம்  
    மகரம்         –    மேன்மை
    கும்பம்         –      நிம்மதி
    மீனம்         –      நஷ்டம்
    சந்திராஷ்டமம்    –         பரணி, கார்த்திகை

  • ஜூன் 22 – காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா

    ஜூன் 22 – காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா
    குரோதி வருடம் – ஆனி 08
    ஜூன் 22 – 2024
    சனி
    காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    குளிகை : 6.00 – 7.30
    ராகு : 9.00 – 10.30
    திதி : பிரதமை
    திதி நேரம் :  பவுர்ணமி கா 7.19
    நட்சத்திரம் :  மூலம் இ 7.03
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : கார்த்திகை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • சொர்ணவாரீஸ்வரர் சாந்தநாயகி அம்மன் கோயில் ஆனி தேரோட்டம்…

    சிவகங்கை மாவட்டம் மேலநெட்டூர் சொர்ணவாரீஸ்வரர் சாந்த நாயகி அம்மன் கோயில் ஆனி தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடந்தது. சிவபெருமானின் கோபத்தை தணிக்க ஒரு கோடி சஷ்டி விரதம் இருந்து வலம் வந்த போது எதிரே வந்த சிவனின் கோபம் தணிந்ததால் இங்கு சொர்ணவாரீஸ்வரர்/சாந்த நாயகி அம்மன் என பெயர் பெற்ற ஸ்தலம் இது.

    இங்கு ஆனி மாதம் பத்து நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும், இந்தாண்டு திருவிழா கடந்த  13ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி அம்மனும் சுவாமியும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தனர். பத்தாம் நாளான இன்று தேரோட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    மாலை நான்கு மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் சொர்ணவாரீஸ்வரரும் சாந்தநாயகி அம்மனும் அலங்கார கோலத்தில் குதிரைகள் பூட்டிய தேரில் அமர்ந்தனர். முதலில் விநாயகர் தேர் செல்ல் அதன்பின் சொர்ணவாரீஸ்வரர் தேரை பொதுமக்கள் கூடி இழுத்தனர். நான்கு மாட வீதிகளையும் வலம் வந்த தேர் மாலை ஐந்தரை மணிக்கு நிலையை வந்தடைந்தது.

    பின் தேருக்கு முன்னால் பக்தர்கள் பலரும் சிதறு தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். தேரோட்டத்தை முன்னிட்டு மானாமதுரை டிஎஸ்பி கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

     

  • பழனி மலைக்கோயில் 108 வலம்புரி சங்கு பூஜை

    பழனி மலைக்கோயில் உலக நலன் வேண்டி 108 வலம்புரி சங்கு பூஜை மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் இன்று உலக நலன் மற்றும் விவசாய செழுமை வேண்டி 108 வலம்புரி சங்கு பூஜை மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் தங்கச் சப்பரத்தில் பிரதான கலசம் வைக்கப்பட்டு புனித நீர் நிரப்பப்பட்டு முன்னதாக தாம்பாளத்தில் வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு புனித நீர் நிரப்பப்பட்டு ரோஜா, தாமரை  அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க யாகம் நடைபெற்றது. யாக பூஜை நிறைவாக பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீபாராதனை  நடைபெற்றது. பின்னர் கலசங்கள் கோவிலை சுற்றிவர செய்யப்பட்டு கலச தீர்த்தம் மற்றும் சங்க தீர்த்தம் அருள்மிகு தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பச்சை கற்பூரம், சுத்த அன்னம்,வில்வ இலை கொண்டு  அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

    முன்னதாக அர்ச்சக ஸ்தானிக சங்கம் சார்பில் சண்முக நதியில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

  • ஜூன் 21 – பவுர்ணமி நாள் ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – வெற்றி
    ரிஷபம்         – தனம்
    மிதுனம்     – வரவு
    கடகம்         –  செலவு
    சிம்மம்         –   பக்தி   
    கன்னி         –    சோர்வு
    துலாம்         –     சாதனை
    விருச்சிகம்     –  புகழ்  
    தனுசு         –     சிந்தனை
    மகரம்         –    பிரமை
    கும்பம்         –      திறமை  
    மீனம்         –      அசதி  
    சந்திராஷ்டமம்    –         அசுபதி, பரணி

  • ஜூன் 21 – பவுர்ணமி

    ஜூன் 21 – பவுர்ணமி
    குரோதி வருடம் – ஆனி 07
    ஜூன் 21 – 2024
    வெள்ளி
    திருநெல்வேலி நெல்லயப்பர்,
    சாத்தூர் வெங்கடேசப் பெருமாள் தேர்,
    மன்னார்குடி ராஜகோபால சுவாமி தெப்பம்
    யோகா தினம்
    நல்ல நேரம் : 9.30 – 10.30
    எமகண்டம் : 3.00 – 4.30
    குளிகை : 7.30 -9.00
    ராகு : 10.30 – 12.00
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் :  சதுர்த்தசி கா 7.44
    நட்சத்திரம் :  கேட்டை மா 6.58
    யோகம் : மரண-அமிர்த
    சந்திராஷ்டமம் : பரணி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம்…

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர்  திருக்கோவிலில்  திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது; திரளான பக்தர்கள் பங்கேற்பு.

    அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பிரம்மோற்சவ விழா துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    திருமண விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பட்டாடை அணிந்து, வண்ண மலர்கள் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, ஸ்ரீ மீனாட்சி சகிதமாக சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து  சிவ வாத்தியங்கள் முழங்க பழங்கள், பட்டுச்சேலை, பட்டுவேட்டி, திருமாங்கல்யம், வண்ணமலர்கள், இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொண்டுவரப்பட்டு மணமேடைக்கு முன் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    பின்னர் மாங்கல்ய பூஜையை தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சியும், தீப, தூப, மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதன் பிறகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர்   திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் திருமண விருந்து அளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • ஜூன் 20 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – நற்செயல்
    ரிஷபம்         – லாபம்
    மிதுனம்     – வெற்றி
    கடகம்         –  திறமை
    சிம்மம்         –   சலனம்  
    கன்னி         –    தேர்ச்சி  
    துலாம்         –     இன்பம்  
    விருச்சிகம்     –  பொறுமை
    தனுசு         –     மறதி
    மகரம்         –    களிப்பு
    கும்பம்         –      கீர்த்தி  
    மீனம்         –      முயற்சி
    சந்திராஷ்டமம்    –         ரேவதி, அசுபதி

  • ஜூன் 20 – இன்றைய நாள் எப்படி…?

    ஜூன் 20 – இன்றைய நாள் எப்படி…?
    குரோதி வருடம் – ஆனி 06
    ஜூன் 20 – 2024
    வியாழன்
    திருக்கோளக்குடி,
    கானாடு காத்தான்,
    கண்டதேவி சிவன் தேர்
    நல்ல நேரம் : 10.30 – 11.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    குளிகை : 9.00 – 10.30
    ராகு : 1.30 – 3.00
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் :  திரையோதசி கா 7.40
    நட்சத்திரம் :  அனுஷம் மா 6.25
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : அசுவினி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்