Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ஸ்ரீ சுயம்பு சிவப்பு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…

    திருவண்ணாமலை அடுத்த வில்வாரணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுயம்பு சிவப்பு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை  நடைபெற்றது.

    தமிழகம் முழுக்க ஆடி கிருத்திகை தினமான இன்று அனைத்து முருகன் திருக்கோவிலிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்கள் பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் அடுத்த மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆடிக்கிருத்திகை தினமான இன்று வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ‌சிவசுப்பிரமணிய சாமிக்கு பால், தயிர் தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அதிகாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    அதிகாலை முதல் சுயம்பு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஏராளமான முருக பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் மூன்று மணி நேரத்தில் மேலாக காத்திருந்து காத்திருந்து பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி பால்குடம் உள்ள தேவைகளை கையில் ஏந்தி முருகப்பெருமானுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

  • சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா…

    சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை சுமந்து வந்தும், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ஆறு வாரங்கள் தொடர்ச்சியாக இங்கு வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் செவ்வாய்க்கிழமைகளில் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் என்பது அலை மோதும்.

    ஆடி கிருத்திகை தினமான இன்று சிறுவாபுரி முருகன் கோவிலில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து வழிபட்டனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பால் குடங்களை சுமந்தபடி பெண்கள் பாதயாத்திரையாக சிறுவாபுரி முருகன் கோவிலை வந்தடைந்தனர். காவடிகளை சுமந்த படியும் பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    ஆலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட பால் அங்குள்ள முருகனுக்கும் வள்ளி, தெய்வானைக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

  • ஜூலை 30 – இன்றைய நல்லநேரம்…

    ஜூலை 30 – இன்றைய நல்லநேரம்…
    குரோதி வருடம் – ஆடி 14
    ஜூலை 30 – 2024
    செவ்வாய்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : கா 9.00 – 10.30
    குளிகை : ம 12.00 – 1.30
    ராகு : ம 3.00 – 4.30
    திதி : தசமி
    திதி நேரம் :  தசமி இ 7.30
    நட்சத்திரம் :  கார்த்திகை ம 1.40
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் : சித்திரை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • ஜூலை 29 – கார்த்திகை நாள் ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  பாராட்டு
    ரிஷபம்         – நன்மை
    மிதுனம்     – அமைதி
    கடகம்         –  செலவு
    சிம்மம்         –   பயம்
    கன்னி         –    கவலை
    துலாம்         –     வரவு
    விருச்சிகம்     –  தாமதம்
    தனுசு         –     ஜெயம்
    மகரம்         –    ஆதரவு
    கும்பம்         –      வெற்றி  
    மீனம்         –      ஆக்கம்     
    சந்திராஷ்டமம்    –         பூரம், உத்திரம்

  • ஜூலை 29 – ஆடி கார்த்திகை…

    ஜூலை 29 – ஆடி கார்த்திகை…
    குரோதி வருடம் – ஆடி 13
    ஜூலை 29 – 2024
    திங்கள்
    ஆடி கார்த்திகை
    திருத்தணி முருகன் தெப்பம்
    நல்ல நேரம் : கா 6.00 – 7.30
    எமகண்டம் : கா 10.30 – 12.00
    குளிகை : ம 1.30 – 3.00
    ராகு : கா 7.30 – 9.00
    திதி : நவமி
    திதி நேரம் :  நவமி இ 9.11
    நட்சத்திரம் :  பரணி ம 2.40
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : அஸ்தம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • கிருத்திகை அன்று சொல்ல வேண்டிய முருகன் மந்திரம்…. அகத்தியர் அருளியது

    ஓம் முருகா, குரு முருகா,

    அருள் முருகா, ஆனந்த முருகா

    சிவசக்தி பாலகனே

    ஷண்முகனே சடாக்ஷ்ரனே

    என் வாக்கிலும் நினைவிலும்

    நின்று காக்க

    ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா

    முருகனின் ஆறெழுத்து  மந்திரப் பிரயோகம்….

    சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே

    தன முதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே

    பகை பிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே

    பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே

    சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே

    சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே

    அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை

    ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே.

     

    மேற்கண்ட  மந்திரம் அகஸ்தியர்  அருளியது  

    எந்த காரியத்திற்காக கிளம்பும் முன் இதை ஜெபித்து

    திருநீறு  அணிந்து செல்ல கரிய வெற்றி உண்டாகும்.

  • செவ்வாய் தோஷம் தீர்க்கும் ஆடி கார்த்திகை விரதம்

    முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

    தேவர்களை சிறைப்பிடித்து,மக்களை கொடுமைப்படுத்திய சூரனை வதைக்க வேண்டி ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறுமுகனை வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகை பெண்களிடம் கொடுக்கப்பட்டது. கார்த்திகைப் பெண்களும் குமரனை  பாலூட்டி போற்றி வளர்த்தார்கள்.

    அவனை சேர்த்து ஒன்றாக்கிய  உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தி இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால் `கார்த்திகேயன்' எனவும் அழைக்கப்படுவான் என்று கூறி அருளினார்.  மேலும் அவர்களுக்கு நட்சத்திர பதவியும் அளித்து, இந்த கார்த்திகைப் பெண்களின் நட்சத்திரம் வரும் சமயம் முருகனுக்கு விரதம் இருப்பவர்களுக்கு,அவனருளால்  குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்று அருளிச் செய்தார்.

    இது தான் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் என்று அழைக்கப்படுகிறது. ‘ஆறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப்போதில் வீற்றிருந்து அருளினானே’ என்று கந்த புராணம் சிறப்பித்துக் கூறுமளவிற்கு ஆடிக் கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது

     கிழமைகளில் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. திதிகளில் சஷ்டி திதி முக்கிய விரதமாகும். நட்சத்திரத்தில் ‘கிருத்திகை’ முருகனின் நட்சத்திரம் ஆகும். மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது.

  • முருகப் பெருமானுக்கு உகந்த ஆடி கிருத்திகை!

    முருகப் பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அதில் தைப்பூசம், தை கிருத்திகை, பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை போன்றவை மிகவும் முக்கியம் வாய்ந்த விழாக்களாக கருதப்படுகிறது.

    எல்லா மாதங்களிலும் கிருத்திகை வரும். ஆனால் ஆடிக்கிருத்திகை போன்ற சிறப்பு தை மாதக் கிருத்திகையில் கூட இருக்காது.  அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றில் ஆடி கிருத்திகை விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். அனைத்து முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை வீதிஉலா என விமரிசையாக நடைபெறும்.

    இது தேவர்களின் மாலை காலம். எனவே, இக்காலத்தில் உப்பில்லா உணவை எடுத்துக்கொண்டு கார்த்திகை விரதம் இருந்தால் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. பலரும், ஆடி மாதத்தில் இருந்து துவங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிப்பார்கள்.

    நட்சத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு வாய்ந்தவையாகும். முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

     

  • ஜூலை 28 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  ஜெயம்
    ரிஷபம்         – மறதி
    மிதுனம்     – சுகம்
    கடகம்         –  உயர்வு
    சிம்மம்         –   நட்பு
    கன்னி         –    அமைதி
    துலாம்         –     புகழ்
    விருச்சிகம்     –  ஆதரவு
    தனுசு         –     பெருமை
    மகரம்         –    சுபம்
    கும்பம்         –      செலவு
    மீனம்         –      போட்டி    
    சந்திராஷ்டமம்    –         மகம், பூரம்

  • ஜூலை 28 – சூரிய வழிபாடு நன்று…

    ஜூலை 28 – சூரிய வழிபாடு நன்று…
    குரோதி வருடம் – ஆடி 12
    ஜூலை 28 – 2024
    ஞாயிறு
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : அஷ்டமி
    திதி நேரம் :  சப்தமி அ.கா 1.25
    நட்சத்திரம் :  அசுவினி ம 3.58
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : உத்திரம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்