Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • அருள்மிகு ஸ்ரீ லா ஸ்ரீ ஆதி அண்ணாமலையார் வட்ட கோவில் மகா கும்பாபிஷேகம்…

    சுருளிமலையில்  அருள்மிகு ஸ்ரீ லா ஸ்ரீ ஆதி அண்ணாமலையார் வட்ட கோவில் மகா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி மலையில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ லா ஸ்ரீ ஆதி அண்ணாமலையார் வட்ட கோவில். இத் திருக்கோவிலில் சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் நடைபெற்று வரும் அனைத்து பூஜைகளும் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.

    இத்திருக்கோவில் 12 ஆண்டுகளுக்கு பின்பாக தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு இன்று நூதன புனராவர்த்தன  மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக நேற்றைய தினம் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மகா கணபதி ஹோமம், அனுக்ஜை தொடர்ந்து பிரவேச பலி, அங்குரார்பணம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜைகள், பிரவேச பலி, மகாபூர்ணகுதி, வேதிகா அர்ச்சனை உள்ளிட்டவை நடத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் மூலா மாலா மந்திர ஹோமங்கள், நாடி சந்தானம், மஹா பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடைபெற்று மஹாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் 8 மணிக்கு மேலாக யாத்திரதானம், கடம் புறப்பாடுதல் உள்ளிட்டவை நடைபெற்று ஸ்ரீ ஆதி அண்ணாமலையார் வட்ட திருக்கோவில் விமானத்திற்கும் ராஜகோபுரத்திற்கும் புனித நீர் கொண்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் செய்யப்பட்ட தண்ணீர் கொண்டு பக்தர்களுக்கு தீர்த்தவாரி தெளிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது.

    இன்று நடைபெற்ற இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கம்பம், சுருளிப்பட்டி, காமையகவுண்டன்பட்டி, கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

  • ஆகஸ்ட் 05 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  இன்பம்    
    ரிஷபம்         – சுகம்
    மிதுனம்     – ஆக்கம்   
    கடகம்         –  செலவு
    சிம்மம்         –   போட்டி  
    கன்னி         –    உதவி    
    துலாம்         –     லாபம்   
    விருச்சிகம்     –  நற்செயல்
    தனுசு         –     வெற்றி
    மகரம்         –    அச்சம்
    கும்பம்         –      ஏமாற்றம்   
    மீனம்         –      கவலை
    சந்திராஷ்டமம்    –         கேட்டை. மூலம்

  • ஆகஸ்ட் 05 – இன்றைய நல்லநேரம்…

    ஆகஸ்ட் 05 – இன்றைய நல்லநேரம்…
    குரோதி வருடம் – ஆடி 20
    ஆகஸ்ட் 05 – 2024
    திங்கள்
    நல்ல நேரம் : கா 6.00 – 7.30
    எமகண்டம் : கா 10.30 – 12.00
    குளிகை : ம 1.30 – 3.00
    ராகு : கா 7.30 – 9.00
    திதி : பிரதமை
    திதி நேரம் :  பிரதமை மா 6.36
    நட்சத்திரம் :  ஆயில்யம் மா 4.36
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : பூராடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • ஆகஸ்ட் 03 – ஆடிப்பெருக்கு நாள் ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  புகழ்   
    ரிஷபம்         – தெளிவு
    மிதுனம்     – ஆக்கம்   
    கடகம்         –  விவேகம்
    சிம்மம்         –   உயர்வு
    கன்னி         –    போட்டி   
    துலாம்         –     தனம்  
    விருச்சிகம்     –  அலைச்சல்
    தனுசு         –     பகை
    மகரம்         –    ஓய்வு
    கும்பம்         –      வரவு   
    மீனம்         –      நன்மை
    சந்திராஷ்டமம்    –         விசாகம், அனுஷம்

  • ஆகஸ்ட் 03 – ஆடிப்பெருக்கு…

    ஆகஸ்ட் 03 – ஆடிப்பெருக்கு…
    குரோதி வருடம் – ஆடி 18
    ஆகஸ்ட் 03 – 2024
    சனி
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 1.30 – 3.00
    குளிகை : கா 6.00 – 7.30
    ராகு : கா 9.00 – 10.30
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் :  சதுர்த்தசி மா 4.55
    நட்சத்திரம் :  புனர்பூசம் ம 1.42
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : கேட்டை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • சகல ஐஸ்வர்யம் அருளும்…ஆடிப்பெருக்கு வழிபாடு!

    ஆடிப்பெருக்கன்று திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் திருமண வரம் வேண்டி, காவிரியைப் பிரார்த்திப்பார்கள். புதுமணம் ஆன பெண்கள் தாலி பிரித்து, புதுத் தாலி முடிந்து கொள்வார்கள். வயது முதிர்ந்த சுமங்கலி, புதுத் தாலி எடுத்துத் தருவார். அதோடு, திருமணம் ஆன தினத்தன்று அணிந்து கொண்ட மலர் மாலைகளை வீட்டில் பத்திரமாக பாதுகாத்து வைத்து, ஆடிப்பெருக்கன்று ஆற்றில் விடுவர். ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த பெண்கள் தலைமையில் இவை அனைத்தும் காவிரிக் கரையில் நடைபெறும். சிறுவர்கள் ‘சப்பரத் தட்டி’ எனப்படும் சிறு மரத் தேர்களை உருட்டிக் கொண்டு ஆற்றங்கரையில் விளையாடுவர்.

    விவசாயத்தையும், தங்கள் குடும்பத்தையும் வாழ வைக்கிற காவிரிக்கு மங்களப் பொருட்களை அர்ப்பணித்து, பெண்கள் தங்கள் கழுத்திலும், உடன் வந்திருக்கிற ஆண்கள் தங்கள் கைகளிலும் மஞ்சள் கயிறுகளைக் கட்டிக் கொள்வார்கள்.அன்றைய தினம் பெண்கள் நீராடி விட்டு, புத்தாடை அணிந்து கொள்வர். ஆற்றங்கரையில் ஓரிடத்தை சுத்தம் செய்து விட்டு தீபம் ஏற்றி வைப்பர். அங்கு வாழையிலைகளைப் பரத்துவார்கள். பசுஞ்சாணத்திலோ அல்லது மஞ்சளிலோ பிள்ளையார் பிடித்து வைத்து வாழையிலையில் மங்களப் பொருட்களை வைப்பார்கள். மஞ்சள், குங்குமம், தாம்பூலம், தாலிப்பொட்டு, தேங்காய், கண்ணாடி வளையல்கள், பனையோலையால் ஆன காதோலை, கருகமணி, அரிசி, வெல்லம், ரவிக்கைத் துணி, காப்பரிசி, அவல் போன்றவற்றை வைப்பதுண்டு.

    சர்க்கரைப் பொங்கல், தேங்காய்ச் சாதம், புளிசாதம், தயிர் சாதம் போன்ற சித்ரான்னங்களை வீட்டில் இருந்தே எடுத்து வந்து வைப்பார்கள். குடும்பத்தில் இருக்கிற அனைவரும் கூடி இருக்கும்போது காவிரித் தாயைப் போற்றி அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்த பாடல்களைப் பாடுவார்கள். பிறகு, தேங்காய் உடைத்து வைத்து, நிவேதனம் செய்து விட்டுக் கற்பூரம் காண்பிப்பார்கள். இதே தீபத்தை காவிரிக்கும் காண்பித்து வணங்குவார்கள். அதன்பின் தாலிப்பொட்டு, மஞ்சள், குங்குமம், காதோலை, கருகமணி, புஷ்பம் போன்றவற்றை காவிரித் தாய்க்கு அர்ப்பணிப்பர். வாழைமட்டையில் தீபமும் ஏற்றி நீரில் மிதக்க விடுவர்.காவிரிக்கு நடத்துகிற இந்த வழிபாடு அனைத்து வரங்களையும் வழங்கும். குழந்தைப் பேறு, திருமணப் பேறு கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யமும் தேடி வரும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

  • திருமணத்தடை நீக்கும் ஆடிப்பெருக்கு விழாவின் முக்கியத்தும்….

    திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், சுமங்கலி பெண்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற வேண்டியும், ஆடிப் பெருக்கன்று ஆற்றங்கரைக்கு சென்று கங்கா தேவிக்கு சிறப்பு வழிபாடு செய்து சுமங்கலிபூஜை நடத்துவர்.

    தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று சிறப்பித்து கூறுவர். ஆடிச்செவ்வாய் தேடிக்குளி’ என்பது பழமொழி. பெண்கள் விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம். ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தால் திருமண யோகம் கூடிவரும்.

    இவை தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பவுர்ணமி, ஆடிப்பெருக்கு என்ற பல முக்கிய விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. ஆடி மாதத்தின் 18-வது நாள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடப்படுகிறது.

    “ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவிரி
    வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக
    எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக”

    என்று காவிரி நதியை அன்னையாக பாவித்து பாடினார் கவிஞர் கண்ணதாசன்.

    ஆடிப்பெருக்கன்று காவிரியை பெண்ணாகவும், சமுத்திரராஜனை ஆணாகவும் கருதி, காவிரிப்பெண் தனது கணவரான சமுத்திரராஜனை அடைவதை மங்கலகரமான விழாவாக காவிரி டெல்டா மக்கள் கொண்டாடுகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் அன்று அதிகாலையிலேயே காவிரி ஆற்றங்கரைக்கு வந்து, நீராடி காவிரியை வணங்கி சுமங்கலி பூஜையும் நடத்துகின்றனர்.

    பெண்கள் குளித்து முடித்துவிட்டு ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்கின்றனர். ஒரு இடத்தில் வாழை இலையை போட்டு அதில் பிள்ளையார்சிலை வைத்து அதன்முன் அகல் விளக்கு ஏற்றுகின்றனர். மங்கல பொருட்களான புதுமஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், புதுத்துணி, பனைஓலையில் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, படையல் அரிசி, வெல்லம், பழங்கள் ஆகியவற்றை வைத்து காவிரி அன்னையை வழிபட்டு பூஜைசெய்வர். பின்னர் சுமங்கலி பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார்கள். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள். திருமணமாகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று வேண்டி கருகமணி, காப்பரிசி வைத்து வணங்கி சிறப்பு பூஜை செய்து கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக்கொள்வார்கள்.

    ஈரோடு பவானி கூடுதுறை, திருச்சி, கரூர், ஈரோடு, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி ஆறு செல்லும் இடங்களில் எல்லாம் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும். செல்வ செழிப்பை தரும் வரலட்சுமி விரதம்:வரலட்சுமி விரதம் ஆடிமாதம் சுக்ல பட்சத்து வெள்ளிக்கிழமையில் வரும். இந்த ஆண்டு வருகிற (வெள்ளிக்கிழமை) வருகிறது. எட்டுவகை செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீ மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்யப்படுவதால் இவ்விரதம் வரலட்சுமி விரதம் என பெயர் பெற்றது.

    திருமணமான ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு நல்ல கணவன் அமைவர். பூஜையை முதல் வெள்ளிக்கிழமை செய்ய வசதி இல்லாதவர்கள் மறு வெள்ளிக்கிழமை செய்யவேண்டும். வரலட்சுமி விரதம் இருப்பதால் கர்ம நோய்கள் நீங்கும், திருமணத்தடை அகலும்.

  • ஜூலை 31 – ஏகாதசி நாள் ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  பொறுமை  
    ரிஷபம்         – ஆக்கம்
    மிதுனம்     – ஆதாயம்  
    கடகம்         –  நலம்
    சிம்மம்         –   பக்தி
    கன்னி         –    தாமதம்  
    துலாம்         –     போட்டி
    விருச்சிகம்     –  வாழ்வு
    தனுசு         –     மகிழ்ச்சி
    மகரம்         –    வெற்றி
    கும்பம்         –      பயம்  
    மீனம்         –      ஏமாற்றம்
    சந்திராஷ்டமம்    –         ஹஸ்தம், சித்திரை

  • ஜூலை 31 – சர்வ ஏகாதசி…

    ஜூலை 31 – சர்வ ஏகாதசி…
    குரோதி வருடம் – ஆடி 15
    ஜூலை 31 – 2024
    புதன்
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : கா 7.30 – 9.00
    குளிகை : கா 10.30 – 12.00
    ராகு : ம 12.00 – 1.30
    திதி : ஏகாதசி
    திதி நேரம் :  ஏகாதசி மா 6.10
    நட்சத்திரம் :  ரோகிணி ம 1.01
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : சுவாதி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • ஜூலை 30 – ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  நன்மை
    ரிஷபம்         – ஆதாயம்
    மிதுனம்     – போட்டி
    கடகம்         –  புகழ்
    சிம்மம்         –   லாபம்  
    கன்னி         –    தாமதம்  
    துலாம்         –     முயற்சி
    விருச்சிகம்     –  வெற்றி
    தனுசு         –     ஆதரவு
    மகரம்         –    பரிசு
    கும்பம்         –      நிம்மதி
    மீனம்         –      உயர்வு     
    சந்திராஷ்டமம்    –         உத்திரம், ஹஸ்தம்