Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • தெரிந்த கோயில் தெரியாத அதிசயம்…. ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோவில்

    108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

  • தெரிந்த கோயில் தெரியாத அதிசயம்….தேவிகாபுரம் பொன்மலைநாதர் கோயில்

    திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.

  • ஸ்ரீரங்கம் கோவிலில் நூற்றுக்கால் மண்டபம் கண்டுபிடிப்பு….

    ஸ்ரீரங்கம் கோவிலில் பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்த நூற்றுக்கால் மண்டபம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஆகும். 156 ஏக்கர் பரப்பளவில் 7 பிரகாரங்கள் மற்றும் 21 கோபுரங்களுடன் அமையப்பெற்று இருப்பதால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு பெரிய கோவில் என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடப்பதற்கு முன்பாக சுமார் 20 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ஏராளமான திருப்பணி வேலைகள் நடந்தன. அப்போது கோவில் வளாகத்தில் பல இடங்களில் மண் மூடி காணப்பட்ட பகுதிகள் எல்லாம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றன. ஆயிரங்கால் மண்டபத்தின் ஒரு பகுதியில் மறைந்திருந்த யானை சிற்பங்கள் வெளியே தெரியும்படி சீரமைக்கப்பட்டது. ஆயிரங்கால் மண்டபத்தை போன்று, கோவிலின் தென் கிழக்கு மூலையில் பிரசாதங்கள் தயாரிக்கும் பகுதியில் நூற்றுக்கால் மண்டபம் இருந்ததும், பல ஆண்டுகளாக அது மறைக்கப்பட்டு இருந்ததும் கோவில் திருப்பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள நூற்றுக்கால் மண்டபத்தின் தூண்களுக்கு இடையே சுவர் எழுப்பி மறைத்து இருந்ததும், அதன் மேல்பகுதியில் அடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்ததும், இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை படிந்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. நூற்றுக்கால் மண்டபத்தை மறைப்பதற்காக எழுப்பப்பட்டு இருந்த சுவர்களை இடித்து அப்புறப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் நூற்றுக்கால் மண்டபம் பக்தர்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்படும். கிருஷ்ண ஜெயந்தியின்போது நம்பெருமாள் இந்த மண்டபத்தில் எழுந்தருள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்’ என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • நவகிரகங்களின் பயோடேட்டா ………….

    1.சூரியன்

    காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
    சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.
    திக்கு – கிழக்கு
    அதிதேவதை – அக்னி
    ப்ரத்யதி தேவதை – ருத்திரன்
    தலம் – சூரியனார் கோவில்
    நிறம் – சிவப்பு
    வாகனம் – ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
    தானியம் – கோதுமை
    மலர் – செந்தாமரை , எருக்கு
    வஸ்திரம் – சிவப்பு
    ரத்தினம் – மாணிக்கம்
    அன்னம் – கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்

    2.சந்திரன்
    பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
    கடக ராசிக்கு அதிபதி.
    திக்கு -தென்கிழக்கு
    அதிதேவதை – ஜலம்
    ப்ரத்யதி தேவதை – கௌரி
    தலம் – திருப்பதி
    நிறம் – வெள்ளை
    வாகனம் – வெள்ளைக் குதிரை
    தானியம் – நெல்
    மலர் – வெள்ளை அரளி
    வஸ்திரம் – வெள்ளாடை
    ரத்தினம் – முத்து
    அன்னம் – தயிர் சாதம்

    3 . அங்காரகன் (செவ்வாய்)

    இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
    மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.

    திக்கு -தெற்கு
    அதிதேவதை – நிலமகள்
    ப்ரத்யதி தேவதை – க்ஷேத்திரபாலகர்
    தலம் – வைத்தீசுவரன் கோவில்
    நிறம் – சிவப்பு
    வாகனம் – ஆட்டுக்கிடாதானியம் – துவரை
    மலர் – செண்பகப்பூ, சிவப்பு அரளி
    வஸ்திரம் – சிவப்பு ஆடை
    ரத்தினம் – பவளம்
    அன்னம் – துவரம் பருப்பு பொடி சாதம்

    4.புதன்
    இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
    மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி

    திக்கு – வட கிழக்கு
    அதிதேவதை – விஷ்ணு
    ப்ரத்யதி தேவதை – நாராயணன்
    தலம் – மதுரை
    நிறம் – வெளிர் பச்சை
    வாகனம் – குதிரை
    தானியம் – பச்சைப் பயறு
    மலர் – வெண்காந்தள்
    வஸ்திரம் – வெண்ணிற ஆடை
    ரத்தினம் – மரகதம்
    அன்னம் – பாசிப்பருப்பு பொடி சாதம்

    5.குரு

    இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.
    தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.

    திக்கு – வடக்கு
    அதிதேவதை – பிரம்மா
    ப்ரத்யதி தேவதை – இந்திரன்
    தலம் – திருச்செந்தூர்
    நிறம் – மஞ்சள்
    வாகனம் – மீனம்
    தானியம் – கடலை
    வஸ்திரம் – மஞ்சள் நிற ஆடை
    ரத்தினம் – புஷ்பராகம்
    அன்னம் – கடலைப் பொடி சாதம் , சுண்டல்.

    6.சுக்கிரன்

    இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம்,
    துலாம் ராசிகளுக்கு அதிபதி.

    திக்கு – கிழக்கு
    அதிதேவதை – இந்திராணி
    ப்ரத்யதி தேவதை – இந்திர மருத்துவன்
    தலம் – ஸ்ரீரங்கம்
    வாகனம் – முதலை
    தானியம் – மொச்சை
    மலர் – வெண் தாமரை
    வஸ்திரம் – வெள்ளாடை
    ரத்தினம் – வைரம்
    அன்னம் – மொச்சைப் பொடி சாதம் .

    7.சனி

    இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.
    மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.

    திக்கு – மேற்கு
    அதிதேவதை – யமன்
    ப்ரத்யதி தேவதை – பிரஜாபதி
    தலம் – திருநள்ளாறு
    நிறம் – கருமை
    வாகனம் – காகம்
    தானியம் – எள்
    மலர் – கருங்குவளை, வன்னி
    வஸ்திரம் – கருப்பு நிற ஆடை
    ரத்தினம் – நீலம்
    அன்னம் – எள்ளுப்பொடி சாதம்

    8.ராகு

    இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.

    திக்கு – தென் மேற்கு
    அதிதேவதை – பசு
    ப்ரத்யதி தேவதை – பாம்பு
    தலம் – காளத்தி
    நிறம் – கருமை
    வாகனம் – நீல சிம்மம்
    தானியம் – உளுந்து
    மலர் – மந்தாரை
    வஸ்திரம் – கருப்பு நிற ஆடை
    ரத்தினம் – கோமேதகம்
    அன்னம் – உளுத்தம்பருப்புப்பொடி சாதம்

    9.கேது

    இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.

    திக்கு – வட மேற்கு
    அதிதேவதை – சித்திரகுப்தன்
    ப்ரத்யதி தேவதை – பிரமன்
    தலம் – காளத்தி
    நிறம் – செம்மை
    வாகனம் – கழுகு
    தானியம் – கொள்ளு
    மலர் – செவ்வல்லி
    வஸ்திரம் – பல நிற ஆடை
    ரத்தினம் – வைடூரியம்
    அன்னம் – கொள்ளுப்பொடி சாதம்.

     

  • கடன் தீர என்ன அபிஷேகம் செய்யலாம் ….

    பலவிதமான வழிபாடுகளுள் விரைவாக பலன் தரும் ஒன்று, அபிஷேகம், ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நிச்சயம்.

    முக்தி கிடைக்க:
    இறைவனை நெய்யால் அபிஷேகம் செய்ய மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்க வழி வகுக்கும்.

    தீர்க்காயுசுடன் வாழ:
    சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்ய ஆயுள் அதிகரிக்கும்.

    குடும்ப ஒற்றுமை நீடிக்க:
    குடும்ப ஒற்றுமைக்கும், குதூகலத்திற்கும் இறைவனை இளநீரினால் அபிஷேகம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

    நல்வாழ்க்கை அமைய:
    நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய பிரச்னை தலையெடுக்காது

    கடன் தீர:
    மாப்பொடியினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை தீரும்.

    நினைக்கும் காரியம் நிறைவேற:
    சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய காரிய சித்தி உண்டாகும்.

    பிணிகள் தீர:
    கரும்புச்சாறு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும்.
    குழந்தை பாக்யம் பெற:
    நல்ல பசுந்தயிரினால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்யம் உண்டாகும்.
    பயம் போக்க:
    மனதில் தோன்றும் இனம் புரியா பயத்தை நீக்க எலும்பிச்சை சாற்றால் அபிஷேகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
    இனிய குரல் வளம் கிடைக்க:
    இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்தால் வாழ்வும் இனிமையாகும். குரலும் தேன் குரலாகும்.
    செல்வம் சேர:
    பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய உடல் நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும். அதேபோல சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டுவித செல்வங்களையும் அடையலாம்.
    பாவங்கள் கரைய:
    பஞ்சகவ்யத்தால் அதாவது பசுவின் ஐந்து உப உற்பத்தியான பால், நெய், தயிர், சாணம், கோமியம் சேர்த்து அபிஷேகம் செய்ய பாவங்கள் கரைய உதவும்.

  • கடன் தீர என்ன அபிஷேகம் செய்யலாம் ….

    பலவிதமான வழிபாடுகளுள் விரைவாக பலன் தரும் ஒன்று, அபிஷேகம், ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நிச்சயம்.

    முக்தி கிடைக்க:
    இறைவனை நெய்யால் அபிஷேகம் செய்ய மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்க வழி வகுக்கும்.

    தீர்க்காயுசுடன் வாழ:
    சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்ய ஆயுள் அதிகரிக்கும்.

    குடும்ப ஒற்றுமை நீடிக்க:
    குடும்ப ஒற்றுமைக்கும், குதூகலத்திற்கும் இறைவனை இளநீரினால் அபிஷேகம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

    நல்வாழ்க்கை அமைய:
    நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய பிரச்னை தலையெடுக்காது

    கடன் தீர:
    மாப்பொடியினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை தீரும்.

    நினைக்கும் காரியம் நிறைவேற:
    சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய காரிய சித்தி உண்டாகும்.

    பிணிகள் தீர:
    கரும்புச்சாறு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும்.
    குழந்தை பாக்யம் பெற:
    நல்ல பசுந்தயிரினால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்யம் உண்டாகும்.
    பயம் போக்க:
    மனதில் தோன்றும் இனம் புரியா பயத்தை நீக்க எலும்பிச்சை சாற்றால் அபிஷேகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
    இனிய குரல் வளம் கிடைக்க:
    இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்தால் வாழ்வும் இனிமையாகும். குரலும் தேன் குரலாகும்.
    செல்வம் சேர:
    பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய உடல் நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும். அதேபோல சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டுவித செல்வங்களையும் அடையலாம்.
    பாவங்கள் கரைய:
    பஞ்சகவ்யத்தால் அதாவது பசுவின் ஐந்து உப உற்பத்தியான பால், நெய், தயிர், சாணம், கோமியம் சேர்த்து அபிஷேகம் செய்ய பாவங்கள் கரைய உதவும்.

  • கடன் பிரச்சனைகள் தீர என்ன அபிஷேகம் செய்யலாம் ….

    பலவிதமான வழிபாடுகளுள் விரைவாக பலன் தரும் ஒன்று, அபிஷேகம், ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நிச்சயம்.

    முக்தி கிடைக்க:
    இறைவனை நெய்யால் அபிஷேகம் செய்ய மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்க வழி வகுக்கும்.

    தீர்க்காயுசுடன் வாழ:
    சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்ய ஆயுள் அதிகரிக்கும்.

    குடும்ப ஒற்றுமை நீடிக்க:
    குடும்ப ஒற்றுமைக்கும், குதூகலத்திற்கும் இறைவனை இளநீரினால் அபிஷேகம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

    நல்வாழ்க்கை அமைய:
    நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய பிரச்னை தலையெடுக்காது

    கடன் தீர:
    மாப்பொடியினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை தீரும்.

    நினைக்கும் காரியம் நிறைவேற:
    சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய காரிய சித்தி உண்டாகும்.

    பிணிகள் தீர:
    கரும்புச்சாறு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும்.
    குழந்தை பாக்யம் பெற:
    நல்ல பசுந்தயிரினால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்யம் உண்டாகும்.
    பயம் போக்க:
    மனதில் தோன்றும் இனம் புரியா பயத்தை நீக்க எலும்பிச்சை சாற்றால் அபிஷேகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
    இனிய குரல் வளம் கிடைக்க:
    இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்தால் வாழ்வும் இனிமையாகும். குரலும் தேன் குரலாகும்.
    செல்வம் சேர:
    பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய உடல் நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும். அதேபோல சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டுவித செல்வங்களையும் அடையலாம்.
    பாவங்கள் கரைய:
    பஞ்சகவ்யத்தால் அதாவது பசுவின் ஐந்து உப உற்பத்தியான பால், நெய், தயிர், சாணம், கோமியம் சேர்த்து அபிஷேகம் செய்ய பாவங்கள் கரைய உதவும்.

  • அர்த்தத்துடன் வழிபடுவோம்…..!

    அபிஷேகத் தத்துவம்:
    கோயிலுக்கு செல்கிறோம் . குருக்கள் எதோ அபிஷேகம் செய்கிறார்.கும்பிட்டுவருகிறோம். ஆனால் அதன் தத்துவத்தை புரிந்து கொள்ளவேண்டும்.
    நம்மை காக்கும் கடவுளுக்கு முதலில் தூய நீர், மஞ்சள் நீர், ஆகியவற்றில் நீராடிய பின் பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறுகிறது. இவைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தத்துவம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது நல்லது.

    தூய நீர் :
    தூய வாழ்கை வாழ வேண்டும் என்ற நமது எண்ணத்தை நீர் அபிஷேகத்தால் இறைவனிடம் வெளிப்படுத்துகிறோம்.

    மஞ்சள் :
    மங்களமும், ஆரோக்கியம் பெருக வளம் கொண்ட வாழ்வைப் பெற மஞ்சள் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    பால் :
    களங்கமற்ற மனம் வேண்டி செய்யப்படும் அபிஷேகம் பாலாபிஷேகம்.

    சந்தனம்
    தேயத்தேய சந்தனம் மணப்பது போல் பிறருக்காக உழைத்து, வாழ்க்கையில் தியாகம் புரிவதைக் குறிக்கும்.

    பன்னீர் :
    பன்னீர் போன்ற தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கும்.

    விபூதி :
    இந்த உலகில் என்னதான் அனுபவித்தாலும் இறுதியில் எல்லாம் ஒரு பிடி சாம்பல்தான் என்பதை விபூதி அபிஷேகம் உணர்த்தும். அர்த்தத்துடன் வழிபடுவோம் . தத்துவத்தை புரிந்து கொள்வோம் பலனை பெறுவோம்.

  • மகாபெரியவா கருணையினால் காணாமல் போன வலி

     

    காஞ்சி கருணை மகாபெரியவா , தனது அடியார்கள் மீது கருணை மழை பொழிவதில் அற்புதர். இன்றைக்கும் தனது அடியார்கள் மீது கருணை பொழிந்து கண்ணின் இமையைப் போல காத்து ரட்சிக்கிறார் காஞ்சி கருணை தெய்வம் . பக்தர்கள் வாழ்வில் மகான்  செய்த அற்புதங்கள் ஆயிரமாயிரம்.  இரு பக்தர்கள் உள்ளம் குளிர்ந்த ஒரு சம்பவத்தை இங்கு அறிந்து கொள்வோம்…

     பழையனூர் என்ற ஊர்ல மகாபெரியவாளோட பக்தர் ஒருவர் மாசத்துக்கு ஒருதரமாவது பெரியவாளை தரிசனம் பண்ண வந்துடுவார். சொந்த ஊர்ல வேலை பார்த்து கொண்டு இருந்த அவரை சென்னைக்குப் பக்கத்துல வேலை மாத்தல் பண்ணி உத்தரவு வந்தது . பட்டணம் வந்ததும் வாங்கின சம்பளத்துல செலவெல்லாம்போக மிச்சம் பார்த்த அவருக்கு இங்கே கைக்கு வாங்கறது வாய்க்கும் வயத்துக்குமே சரியா இருந்தது.

     மாசத்துக்கு ஒருதரம் பெரியவாளை தரிசனம் பண்ணினவர் ஆறேழு மாசத்துக்கு ஒருதரம்கூட வரமுடியலை. பொருளாதார நிலைமை ரொம்ப குறைந்து  கொண்டே போனது .ஒருநாள் காதில்  போட்டு கொண்டு இருந்த கடுக்கனையும் கழட்டி விற்கிற நிலைமை வந்தது . அப்ப ரொம்பவே மனசு உடைஞ்சு போனவர், பரமாசார்யா படத்துக்கு முன்னால நின்னு, “இப்படி ஒரு நிலை எனக்கு வந்துடுத்தே…பகவானே நீங்க பார்த்துண்டு இருக்கலாமா? பாரம்பரியமா போட்டுண்டு இருக்கிற இந்த கடுக்கன் யாரோ ஒருத்தரோட கைக்குப் போகப்போறதே. இதை மட்டும் விற்க வேண்டாதபடிக்கு என்னோட கஷ்டம் தீர்ந்துதுன்னா, இதை உங்ககிட்டேயே சமர்ப்பிச்சுடறேன்..!”  என்று வேண்டிக் கொண்டார் .

     கொஞ்சநேரத்துக்கெல்லாம், அவர் வேலைபார்த்த இடத்துல இருந்து ஒரு ஆள் வந்து, “சார் முதலாளி ஒங்களை உடனே கூட்டிண்டு வரச்சொன்னார்”.அவரும் உடனே போனார்

     அவர் இடத்துக்குப் போட்ட புது ஆள்,கணக்கெல்லாம் தப்புத்தப்பா எழுதி வைச்சிருக்கானாம். உடனடியா சரி பண்ணியாகணும்,அதனால உங்க பழைய இடத்துக்கே மாற்றியுள்ளேன். பயணப்படி இத்யாதிக்கெல்லாம் பணம் தரச் சொல்லியிருக்கேன் என்றார் முதலாளி .

     பரமாசார்யாளை வேண்டின அடுத்த க்ஷணமே தன்னோடமொத்த கஷ்டமும் தீர்ந்து சந்தோஷத்தோடு மளமளன்னு புறப்பட்டுப் போய் சேர்ந்தார்.

     அப்படியே ஆறேழு மாசம் நகர்ந்தது.பரமாசார்யாளை அவர் பார்க்க வர்றதும் குறைஞ்சுது.ஒரு நாள் திடீர்னு அவருக்கு காதுல லேசா வலிக்க ஆரம்பித்து , பின் பொறுக்கவே முடியாதபடிக்கு வலி அதிகரிச்சு டாக்டரைப் பார்க்க போயிருந்தார். நிறைய பரிசோதனை பண்ணிவிட்டு “இது கொஞ்சம் சிவியரா இருக்கும்னு நினைக்கிறேன். அநேகமா ஆபரேஷன் பண்ண வேண்டியிருக்கலாம். அதனால சென்னைக்குப் போய் பெரிய டாக்டர் யாரையாவது பாருங்கோ”ன்னு சொன்னார் டாக்டர்.

     பதறி அடிச்சுண்டு சென்னைக்கு வந்தவர், பிரபல டாக்டர் ஒருத்தர்கிட்டே காட்டியிருக்கார். அந்த  டாக்டரும் ஆபரேஷன் பண்ணியே ஆகணும்னுசொல்லிட்டு, “நாளைக்கு கார்த்தால வந்து அட்மிட்ஆகிடுங்கோ..! அப்படி வர்றச்சே கடுக்கனைக் கழட்டி பத்திரமா வைச்சுட்டு வந்துடுங்கோன்னு சொல்லி இருக்கார் டாக்டர். அப்போதான் ஒரு விஷயம் மனசுக்குள்ளே ஞாபகம் வந்திருக்கு.

     

     “அடடா..கஷ்டமெல்லாம் தீர்ந்தா கடுக்கனை சமர்ப்பிக்கறதா வேண்டிண்டோமே. அதை செலுத்தவே இல்லையே.கழட்டறதே கழட்டறோம் கடுக்கனை கையோடு எடுத்துண்டுபோய் ஆசார்யா கிட்டேகுடுத்துட்டு வந்துடுவோம்”னு நினைச்சவர் அவசர அவசரமாக காஞ்சிபுரம் புறப்பட்டுட்டார்.

     

     சில வேதவித்துகள் போகிற வழியில் பெரியவாளை தரிசிக்க மடத்துக்கு வந்தார்கள்.அவர்களுக்கெல்லாம் குங்குமத்தோட ஆளுக்கு ஒரு பழமும் கொடுத்த பெரியவா கொஞ்சம் இளைஞரா இருந்த ஒருத்தரை மட்டும், “நீ கொஞ்ச நேரம் இரு,அப்புறம் போகலாம்!” என்றார். அவர்கள் சேர்ந்து வந்ததனால்,எல்லாரும் மடத்துல ஒரு இடத்தில் போய் உட்கார்ந்திருந்தார்கள் .

     

    கொஞ்சநேரம் ஆச்சு. காதுவலி பக்தர் அங்கே வந்தார். தான் வேண்டிண்ட முதல் காது ஆபரேஷன் வரை எல்லாத்தையும் சொல்லி, கடுக்கனை ஒரு மூங்கில் தட்டுல வைச்சு பெரியவாளிடம் வைத்தார்.பெரியவாஒரு ஆரஞ்சு பழம் தோலை உறிச்சு,அந்த பழத்தை பக்தர்கிட்டே குடுத்து வழி அனுப்பினார்.

     

    அடுத்ததா தன் பக்கத்தில் இருந்த ஒருத்தர்கிட்டே “வேத வித்துகள்ல இளைஞரா இருந்தவரை கூப்பிடச் சொன்னார்!” . “என்ன, நேத்திக்கு வேதமந்திரம் சொல்றச்சே இவாள்லாம்காதுல கடுக்கன் போட்டுண்டு இருக்கா. நமக்கு வசதி இல்லாம வேப்பங்குச்சியை செருகிண்டு இருக்கோமேன்னு மனசுக்குள்ளே குறைப்பட்டுண்டியா? இந்த இதை  எடுத்துண்டுபோய் சுத்தி பண்ணிப் போட்டுக்கோ”பக்கத்தில் இருந்த கடுக்கன்களைக் காட்டிச் சொன்னார்.

     எல்லோருக்கும் ஆச்சர்யம்.இளைஞர் கண்ணுலேர்ந்து ஆனந்த கண்ணீர் வழிஞ்சது.இவனுக்கு தரலாம்னு எப்படி முன்கூட்டியே தீர்மானிச்சார்? பெரிய ஆச்சரியம்னா, அதைவிட பெரிசா இன்னொண்ணு அடுத்த நாளே ஏற்பட்டது.

     

     ஆபரேஷன் பண்ணிகறதுக்காக ஆஸ்பத்திரிக்குப் போனவர் தன்னோட வலி கொஞ்சம் குறைஞ்சிருக்கிறதை உணர்ந்து டாக்டர்கிட்டே சொன்னபோது, எதுக்கும் இன்னொருதரம் செக் பண்ணினடாக்டர்,ஆபரேஷனேவேண்டாம். சாதாரண மருந்துல குணமாகிவிடும்ன சொல்ல, அதே மாதிரி குடுத்த சொட்டு மருந்துல ஒரு வேளைலே அவர் காதுவலி காணாமல் போய் விட்டது .

     காது வலி மட்டுமல்ல பக்தரின் மன வலியும் பறந்தே போய் விட்டது.

     

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஸ்ரீ மகாபெரியவா சரணம்…

  • தெரிந்த கோயில் தெரியாத அதிசயம்…. மதுரை மீனாட்சியம்மன்

    கோயிலின் கிழக்கு கோபுரத்தின் நடுவிலிருந்து மேற்கு கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு – தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.