Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • சொல்லின் செல்வர் அனுமன் புகழ் பாடுவோம்

    இராமாயணம் என்னும் புண்ணிய இதிகாசத்தில் நம்மால் மறக்க முடியாத ,மறைக்க முடியாத பெயர் அனுமன்.  இதிகாசத்தின்  நடுநாயகமாக விளங்குபவரும் அவரே.  ராமாயணம் முழுவதும், எங்கேயும் தன் அளப்பரிய அறிவைப் பற்றியோ, ராமபிரானுக்கு தான் செய்த தொண்டைப் பற்றியோ பிறரிடம் தற்பெருமையாக சொன்னதே இல்லை. அடக்கத்தின் உருவமான அனுமன், சீதையை கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தும், ராமரிடம் தனக்கு இது வேண்டும் ,அது வேண்டும் என்று எதையும் கேட்டதில்லை. ஆனால் ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்யமும், அங்கதனுக்கு  ராஜகுமாரன் என்ற பட்டமும், விபீஷணனுக்கு  இலங்கையின் அரசபதவியும் கிடைத்தது.  இதைக்கண்டு நெகிழ்ந்த ராமன்,“ உனது கடனை நான் எப்படி திரும்பச் செலுத்துவேன். நான் எப்பொழுதும் உனக்கு கடன்பட்டவனாகவே இருப்பேன். நீ சிரஞ்சீவியாக வாழ்வாய். என்னைப் போன்றே உன்னையும் எல்லாரும் போற்றி வணங்குவர்”, என்றார்.  “நீ எப்படி கடலைத் தாண்டினாய்?” என ராமன் கேட்டதற்கு ,அனுமன் மிகவும் அடக்கமாக, “எம்பெருமானே! எல்லாம் உமது நாம மகிமையால்” என்றார்.

    பக்திக்கும் , இறை சேவைக்கும் உதாரணமாக திகழும் அனுமன் பிரம்மச்சரியத்தை முழுமையாகப் பின்பற்றுபவர். ஆற்றல், சீலம், அறிவு, பக்தி, வெற்றி, வீரம், புலனடக்கம் என்று நிகரற்ற தன்மைகளைக் கொண்ட அவர், தனது பக்தர்களுக்கு புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், போன்றவற்றைத் தருபவர்.

      அப்பேற்பட்ட அனுமனை சாதரணமாக வணங்கி விட முடியுமா?.

    வடமாலை அணியும் வழக்கம் ஏன்?

    ராம பட்டாபிஷேகத்தின் போது, சீதாதேவி அனுமனுக்கு முத்துமாலை ஒன்றைப் பரிசளித்தாள். இதை வடக்கே “வடமால்யா’ என்று சொல்வார்கள். இது தென்னகத்தில் வடைமாலையாகி விட்டது என்கிறார்கள் ஆன்மீகப் பெரியவர்கள்.

    வெற்றிலை மாலையின் தாத்பரியம்

    அசோக வனத்தில் அனுமன் சீதையைக் கண்டு ராமரைப் பற்றிய விவரங்களை கூறி ராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றார். அன்னையிடம் விடைபெறும் சமயம், அனுமனை ஆசிர்வதிக்க எண்ணிய சீதை தான் அமர்ந்திருந்த வெற்றிலைக் கொடியின் இலைகளை பறித்து அனுமனின் தலையில் புஷ்பமாய் தூவி ஆசீர்வதித்து வழி அனுப்பி வைத்ததால், அன்னையின் நினைவாகவே அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகின்றது என்று கூறப்படுகிறது.

     வெண்ணெய் சாத்துதலின்  அர்த்தம்

    ராமசேவையையே தன் மூச்சாக இருந்த அனுமன் , ராவண வதத்தின் போது  போர்க்களத்தில் உடம்பெல்லாம் புண்ணாகி கிடக்க, அவரின் காயத்தின் வேதனையை போக்க குளிர்ந்த பொருளான வெண்ணையை அனுமனுக்கு சாத்தும் வழக்கம் ஏற்பட்டது. இதில் ஆச்சரியமான விஷயம், அனுமனுக்கு சாத்தப்படும் இந்த வெண்ணெய் எவ்வளவு வெயில் அடித்தாலும் உருகுவது இல்லை. எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப்போவதும் இல்லை.

    ராம கடாட்சம் பெற துளசி மாலை

    ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம்.

    காரிய சித்திக்கு குங்குமப் பொட்டு:

    அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம் என்பதால், பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்த வேண்டும். காரியம் சித்தியாகும் வரை இது போல் பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும்.

    மேலும் திருமணத்தடை நீங்க அனுமானுக்கு வியாழனன்று வெற்றிலை மாலையும்  எடுத்த  வேலைகளில் வரும் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலையை  சாத்தும் நம்பிக்கையும் உண்டு.

    அஞ்சிலே ஒன்று பெற்றான்

    அஞ்சிலே ஒன்றைத் தாவி

    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்

    கண்டு அயலார் ஊரில்

    அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்

    எம்மை அளித்துக் காப்பான்.

    பொருள்: வாயுவுக்கு பிறந்தவன் அனுமான். ஆகாயத்தில் பறந்து, கடல் தாண்டி இலங்கை சென்றான். பூமிதேவியின் மகளான சீதையைக் கண்டான். அவளை மீட்க இலங்கைக்கு நெருப்பு வைத்தான். அவன் தன்னையே நமக்கு தந்து பாதுகாப்பான்.

    விளக்கம்: பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவுக்கு பிறந்தான். வானில் (ஆகாயம்) பறந்தான். கடலை (நீர்) தாண்டினான். ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்கு பூமியை (மண்) தோண்டும் போது கிடைத்த சீதையைக் கண்டான். பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பை இலங்கைக்கு வைத்தான். ஆக, பஞ்சபூதங்களையும் அடக்கியாண்டவர் அனுமான். அவரை வணங்கினால் இந்த பூதங்கள் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்.

    மேற்கண்ட இந்த ஸ்லோகத்தை,மனமுருக பாடி அனுமனை  வழிபட்டால் கல்வி கேள்விகளில் மட்டுமின்றி, பகைவரை அச்சமுறச் செய்யும் வலிமையும், மேருமலையைக் குன்றச் செய்யும் உறுதியான மனோதிடத்தையும்  நமக்கு தருவார் அனுமன்.

  • இறைவன் நைவேத்தியம் சாப்பிடுகிறாரா ?

    குருகுலத்தில் எப்போதும் போல் குரு தன் சீடர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு துறு துறு சீடனுக்கு  எப்போதும் குறுகுறுவென்று தன் குருவிடம் எப்போதும் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அன்றும் அப்படி தான், குரு தனது நித்ய கடமைகளை முடித்து விட்டு இறைவனுக்கு நைவேத்யம் படைத்து பூஜையை முடித்தார். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த அந்த சீடன், ‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்தியம்  இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இறைவனுக்கு நாம் படையலிடும் நைவேத்யத்தை அவர் சாப்பிட்டு விட்டால், அதை  நாம் பக்தர்களுக்கு  எப்படி பிரசாதமாக தர  முடியும்?” என்று கேட்டான்.

    சீடனின் கேள்வி குருவுக்கு புரிந்து விட்டது. கேள்விக்கு வெறுமனே பதில் சொல்லாமல் சீடனுக்கு புரியும்படி விளக்கம் தர முடிவு செய்தார். அவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல், அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ,“நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.

    சீடனுக்கு குரு தன் கேள்விக்கு பதில் சொல்லாதது ஏமாற்றம் தந்தாலும், குருவின் கட்டளைக்கு பணிந்து வகுப்பறையை தயார் செய்தான்.  அன்றைய வகுப்பில் ,அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு.

    அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர். சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கேட்ட சீடனை  சைகையால் தன்னருகில் அழைத்தார் குரு. குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.

    “எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.

    “முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.

    “எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”

    கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..

    ” பூர்ண மித பூர்ண மிதம் …” என கூறி முடித்தான்.

    மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்..

    “நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”என்றார்.

    பதட்டம் அடைந்த சிஷ்யனும் , புத்தகத்தை காண்பித்து கூறினான்

    “ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்…”என்றான்.

    “இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?.இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே?.நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”

    சிஷ்யன்  ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன்  பார்த்தான். குரு தொடர்ந்தார்,

    “உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது.புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன்.இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா?.அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம்.ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்தியம்  உட்கொள்கிறோம். ”என்று விளக்கினார்.

    இது நாள் வரை தனது அறியாமையை கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்த தனது பக்குவமற்ற தன்மையை எண்ணி வெட்கப்பட்டதுடன், பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்தியம்  செய்து முழுமையடைந்தான் சீடன்.

  • சிவமே மூச்சாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள் – (ஆனாய நாயனார் )

    இசையால் சிவபெருமானை மயக்கிய ஆனாய நாயனார்

    மங்கலமா மழநாட்டு மங்கலமா நகருண்

        மருவுபுக ழாயனார் வளரா மேய்ப்பார்

    கொங்கலர்பூந் திருக்கொன்றை மருங்கு சார்ந்து

        குழலிசையி லைந்தெழுத்துங் குழைய வைத்துத்

     தங்குசரா சரங்களெல்லா முருகா நிற்பத்

        தம்பிரா னணைந்துசெவி தாழ்த்த வாழ்ந்து

    பொங்கியவான் கருணைபுரிந் தென்று மூதப்

        போதுகவென் றருளவுடன் போயி னாரே.

    – யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்

     லால்குடி ரயில் நிலையத்திலிருந்து, பூவாலுர் வழியே வடமேற்கில், சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருமங்கலம்.

    திருமங்கலம் என்ற திருத்தலத்தில்,ஆயர் குலத்தில் ஆனாய நாயனார் அவதரித்தார். சிவதொண்டை தனது மூச்சாக கொண்ட இவரிடம், ஏராளமான பசு மந்தைகள்  இருந்தன. ஆனாயர் குழல் ஊதுவதில் சிறந்தவர்.  பசுக்கூட்டத்தை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் போது இவர் குழல் ஊதுவார்.

    ஒருநாள் வழக்கம் போல்,திருநீறு அணிந்துகொண்டு பசுக்களுடன் முல்லை நிலத்திற்கு செல்கிறார். கார் காலமாதலால் வனமெங்கும் முல்லை மலர் பூத்து நறுமணம் வீசியது. காணும் பொருட்களிளெல்லாம் சிவனை காணும் நாயனார் , ஐந்தெழுத்து மந்திரத்தை நமச்சிவாய என்று குழலோசையில் வசித்தார்.

    சிவமயமான  குழல் ஓசையைக் கேட்டு பசுக்கள் அருகில் வந்து நின்றன. இளம் கன்றுகள் தாய்மடியில் பால் குடிப்பதை நிறுத்திவிட்டு அப்படியே நின்றது.  அதே போல எருதுகளும் மான் போன்ற விலங்குகளும் அசையாமல் நின்றது. ஆடுகின்ற மயில்கள் அப்படியே ஆடாமல் நின்றது.மலர்கள் அசையாமல் நின்றது. நமச்சிவாய நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் மண்ணிலும் விண்ணிலும் ஒலிக்கின்றது.

     ஆனாயர் இசைத்த குழலிசையானது, வையத்தை நிறைத்தது. வானத்தையும் தன் வசமாக்கிற்று. சிவபெருமான் இடப வாகனத்தின்மேல்  எழுந்தருளி உமையாள் சகிதம் எதிர்நின்று காட்சி தந்தார்.  அக்குழல் இசையை என்றும் கேட்பதற்கு “இந்நின்ற நிலையே பூமழை பொழிய”, முனிவர்கள் துதிக்கக் குழல் வாசித்துக்கொண்டே அந்நின்ற நிலையோடு ஆனாயநாயனார் எம்பெருமான்  சிவனோடு ஜோதியில் சங்கமித்தார்.

    இசையால் இறைவனை  வசப்படுத்திய ஆனாயர் வாழ்க்கை நமக்கு சொல்லும் எளிய பாடம் , பெரும் விரதங்கள் , யாகங்கள் , ஹோமங்கள் மூலம் இறைவனை அடையும் முயற்சிகளுக்கு இணையானது இறைவனின் புகழை அனுதினமும் தியனிப்பதும் , மனமுருகி பாடுவதும் என்பதே. தென்னாடுடைய சிவனை இதயத்தில் நிறுத்தி வாயாராப் பாடுவோம் . சிவபெருமானின் பேரருள் பெறுவோம்.

    ஓம் நமச்சிவாய ………

  • ஆசி தரும் அட்சதை

    நம் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சியாகட்டும் ,கோவில்களில் நடக்கும் மங்கள விழாவாகட்டும் ‘அட்சதை’ எனும் மங்களப் பொருளுக்கு முதன்மையான  ஒரு இடம் கட்டாயம் இருக்கும். அட்சதை இல்லாத வாழ்த்தே இருக்க முடியாது. இந்த அட்சதையானது மலர்களைவிட ஒரு படி மேலானது என்கிறார்கள் பெரியோர்கள்.

    அட்சதை  இல்லாத இடத்தை நிரப்பத்தான் ,மலர்களும் புனித தீர்த்தமும் உபயோகிக்கப்படுகிறது. இதற்கான பெயர் காரணத்தை ஆராய்ந்துப் பார்க்கும் போது வடமொழியில் ‘க்ஷதம்’ என்றால் இடிப்பது. ‘அக்ஷதம்’ என்றால் இடிக்கப்படாதது என்று பொருள். ‘முனை முறியாத அரிசி’யைத்தான் தான் அட்சதை என்று கூறுகிறோம்.

      அரிசியோடு தூய மஞ்சள், பசுநெய் சேர்த்து உருவாக்கப்படுவதே அட்சதை. அட்சதைக்குப் பச்சரிசியே சிறந்தது என்பதால்,அதை தான் அட்சதை தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். அரிசிகென்று உள்ள தனித் தன்மையானது, அது  உணர்வையும் சக்தியையும் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல்கொண்டது. ஆகையால் தான் அரிசியை கை தொட்டு யாரும் கொடுக்க மாட்டார்கள். தும்பைப்பூ போன்ற வெள்ளை அரிசியோடு மங்களகரமான மஞ்சள் நிறம், நெய்யும் சேர்ந்து மினுமினுப்போடு இருக்கும் அட்சதை, தேவதைகளின் அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

    அட்சதையின்  தாத்பரியமானது, நிலத்தின் அடியில் விளையும் மஞ்சள், நிலத்தின் மேலே தோன்றும் நெல்,இவற்றோடு தூய்மையான நெய் சேரும் போது, அது தெய்வீகத் தன்மை பெறுகிறது. இதை தவிர வேறு ஒரு மகோன்னதமான காரணமும் சொல்லப்படுகிறது. அரிசிக்கு  சந்திரனின் அம்சம் இருப்பதால், குருவின் ஆதிக்கம் கொண்ட மஞ்சள் மற்றும் மகாலக்ஷ்மியின் அருள்கொண்ட நெய்யுடன்  சேரும்போது அங்கு நல்ல அதிர்வுகள் உண்டாகி, அந்த இடமே சுபிட்சமாகும் என்பது நம்பிக்கை.

    திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் தட்டில் வைத்து, அட்சதையை எடுத்துக்கொள்ளச் சொல்வதே நல்லது. ஆன்றோர்களின் வாக்கின்படி, அரிசி உடல், மஞ்சள் ஆன்மா, நெய் தெய்வசக்தி. நம்முடைய வாழ்வானது,உடல், ஆன்மா, தெய்வசக்தியோடு இணைந்து இருக்கிறது என்பதே அட்சதை நமக்கு சொல்லும் கருத்து. ஹோமங்கள்முதலிய சுப நிகழ்வுகளோ  அல்லது சிரார்த்தமோ நடந்து  முடிந்த பிறகு, அதை நடத்திவைத்தவர்கள் வாழ்த்துக் கூறி இதைத் தூவுவார்கள்.இது தவிர நம் இல்லங்களில் நடைபெறும் பிறந்தநாள், திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பெரியவர்கள் அட்சதையைத் தூவி வாழ்த்துவது நம் மரபு.  

    ஆனால் இன்றைய துரித கதி வாழ்க்கை முறையில் ,திருமணங்களில் கூட , மணமக்களை யாரும் ஒவ்வொருவராகச் சென்று அட்சதை தூவி வாழ்த்த நேரமில்லாமல், எங்கோ ஓர் இடத்தில் இருந்துகொண்டு வீசி எறிவதைப் பார்க்கிறோம். இது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.  இது ஆசியை அவமதிக்கும் ஒரு விஷயம்.  இதை வீசி எறியாமல் ,மணமக்களின்  தலையில் மெள்ளத் தூவுவதே சிறந்தது.

    சங்க காலத்துக்கு முன்பிருந்தே நம் வழிபாடுகள், விழாக்கள் எல்லாவற்றிலும் அட்சதை இருந்து வந்துள்ளதற்கு பல சான்றுகளை பார்க்க முடியும். புதிய காரியங்கள் எதைத் தொடங்கினாலும் பெரியவர்கள், நண்பர்கள் கூடி அட்சதையை  தூவி வாழ்த்துவதால், எடுத்த காரியங்கள் யாவும் வெற்றிமேல் வெற்றி பெற்று, எல்லா நலன்களையும் அடைவார்கள் என்பது நிச்சயம். மங்களங்கள் யாவும் தரும் இதை, தெய்வங்களின் அம்சம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். அட்சதையின் மகத்துவம் உணர்ந்து அதை நல்ல முறையில் பயன்படுத்தி இறை அருள் பெறுவோம்.

  • சனி பகவானை மகிழ்விக்க வேண்டுமா ?

    சகல கிரகங்களுக்கும் அரசனைப் போன்ற சனீஸ்வரன் பெயரைக் கேட்டாலே நம் அனைவருக்கும்  கொஞ்சம் நடுக்கம் தான். கோவிலுக்கு போனால் கூட , சனீஸ்வரர் சன்னதியில் கொடுக்கப்படும் பிரசாதங்களையோ, திருநீற்றையோ நம் வீட்டிற்கு எடுத்துவர யோசிப்போம். சூரியபகவானுடைய மகனும்,கறுத்ததேகம் உடையவன் என்று கூறப்படுபவருமான சனி பகவானையே மகிழ செய்து, அவரால் நேரக்கூடிய துன்பத்தை வென்ற அரசன் ஒருவன் இருந்தான். அவன் யார் எப்படி சனி பகவானிடம் வரத்தைப் பெற்றான் என்பதைப் பற்றி இப்பதிவில்  பார்ப்போம்.

    ரகு குலத்தில் பிறந்த தசரதன் என்ற அரசன் மகா பராக்கிரமசாலி. ஏழு கண்டங்களுக்கும் அதிபதியான அம்மன்னன் ஆட்சி காலத்தில், சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் நேரம் வந்தது .சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமானது, மிகக் கொடிய பஞ்சத்தை தோற்றுவிப்பதும், பன்னிரெண்டு ஆண்டுகள் வரையில் பூலோகத்தில் கொடிய துன்பத்தில் ஆழ்த்துவதாகும். அதை நினைத்து தேவர்கள் ,அசுரர்கள் எல்லோருமே பயந்து நடுங்க, தனது குல குருவான வசிஷ்டர் முதலான ரிஷிகளையும் தன் மந்திரிகளையும் கூட்டி பூலோகத்தில் துன்பம் நேராமல் தடுப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் என்று கேட்டார்  தசரத சக்கரவர்த்தி. அதற்கு வசிஷ்டர் இது பிரஜைகளின் தலையெழுத்து,துன்பப்பட்டே  ஆக வேண்டும்,இதை  பிரம்மவாலும் மாற்ற முடியாது என்றார்.

    இதைக் கேட்டு தசரதனால்  சும்மா இருக்க முடியவில்லை. எப்படியாவது  பூலோகத்திற்கு சனிபகவானால் ஏற்படக் கூடிய துன்பம் நேராமல் பாதுகாக்க வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டவனாக ,வெண்ணிறமான புரவிகளோடு ஒளிர்ந்த  ரதத்தில் ,ஆகாயத்தில் இன்னொரு சூரியபகவான் போல் ரோகிணி நட்சத்திரத்தை பின் தொடர்ந்து சென்றான். தேவர்கள்,அசுரர்கள் ,மனிதர்கள் அனைவரையும் பயந்து நடுங்கும்படிச் செய்பவனான சனிபகவான் தசரதனைப் பார்த்தான் .

    சனிபகவான் புன்னைகை புரிந்தபடி, “ ராஜராஜனே ,உன்னுடைய வீரம் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் . தேவர்,அசுரர்,முதலிய அனைவரும், என் பார்வை பட்டவுடன் சாம்பலாகப் போய்விடுவார்கள் .ஏ ராஜேந்திரா ,நீ மகா தவங்களைச் செய்தவனும்,அதிகமான புண்ணிய பலம் பெற்றவனும் ஆகையாலேயே என் பார்வை பட்டும் கம்பீரமாக நிற்கிறாய் .உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் .நீ எதைக் கேட்டாலும் தருகிறேன்” என்று சனிபகவான் கூறினார்.

    தசரதன் சனிபகவானைப் பார்த்து,“ தங்கள் எக்காலத்திலும் ரோகிணி நட்சத்திரத்தைப் பின்னம் செய்யக் கூடாது .சூரியர் சந்திரர் உள்ளவரையும் இனி எக்காலத்திலும் அது நடக்கக்கூடாது .முதலாவதாக அந்த வரத்தையே தங்களிடமிருந்து பெற விரும்புகிறேன்” என்று கூறினார்.அவ்வாறே ஆகுக என்று கூறிய  சனிபகவான் ஆயினும் உனக்கு வேண்டிய வரம் எதுவாயினும் கேள் என்று கூற

    தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை தியானித்து  பின் சனிபகவானைக் குறித்து ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினான்..

    நம கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாய ச

    நமகாலாக்னிரூனாய க்ருதாந்தாய ச வை நம

    நமோ நிமலாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாய ச

    நமோ விசால நேத்ராய சுக்ஷ்கோதர பயாக்ருதே       

    நம புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம

    நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே

    நமேஸ்த கோடாக்ஷாய துர்நிரீச்ரயாய வை நமே

    நமோ கோராய ரெளத்ராய பீஷ்ணாய கபாலிநே

    நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸதுதே

    சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாய ச

    அதோத்ருஷ்டே,நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே

    நமோ மந்த கதே,துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே

    தபஸா தகத் தேஹாய நித்யப் யோக ரதாய

    நமோ நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம

    ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ  ஸுநவே

    துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸு தத்க்ஷணாத்…

    இதன் விளக்கம் :

    கரியவனே, நீல நிறம் படைத்தவனே , நீலகண்டன் போல் சிவந்த காலாக்னி போன்ற உருவன் உடையவனே, உன் கருணையைப் பெற வேண்டி மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். மாமிசம் இல்லாத உயர்ந்த தேகம் படைத்தவனே. உன்னை வணங்குகிறேன் . அகன்ற விழிகளையுடையவனே ,உன்னை வணங்குகிறேன். பயங்கரமான தோற்றம் உடையவனே, உன்னை நான் வணங்குகிறேன் . புஷ்கல கோத்திரத்தில் பிறந்தவனே, தடித்த ரோமம் உடையவனே, உன்னை வணங்குகிறேன். அகன்ற தாடை உடையவனே ,ஜடாமுடி தரித்தவனே, அகன்ற கண்களும், ஒட்டிய வயிறுமாக பயங்கரமான தோற்றமுடையவனே உன்னை வணங்குகிறேன். சூரிய புத்திரனே ,சூரியனுக்கு பயத்தை உண்டாக்கக் கூடியவனே ,மெதுவாக நடப்பவனே, நீண்ட தவத்தால் வருந்திய தேகம் உடையவனே, யோகத்தில் நிலைத்து நிற்பவனே, உன்னை வணங்குகிறேன். ஞானக்கண் உடையவனே, கச்யப குமாரனாகிய சூரியனின் புத்திரனே, உன்னை வணங்குகிறேன்.

    சனிபகவானே ,நீ கருணைக் கட்டினால் உன்னுடைய அன்புக்கு பத்திரமான மனிதன் மகாராஜனாகிறான்.யானை,சேனை,படைகளும் அந்தஸ்தும் பெறுகிறான்.அதேபோல் உன்னுடைய கோபத்திற்கு ஆளானவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்கணமே எல்லாவற்றையும் இழந்து பரம தரித்திரனாகி விடுகிறான். ஆகையால் நீ அனுக்கிரஹ மூர்த்தியாக கருணைக்கண் கொண்டே நீ பார்க்க வேண்டும்.உன்னைத் தொழுது சேவை செய்கின்ற பாக்கியத்தை அளிக்க வேண்டும் என்று தசரதன் பிரார்த்தனை செய்தான்.

    சனிபகவான் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக , “ஏ ராஜனே , நீ இப்போது கூறிய ஸ்தோத்திரத்தை படிப்பவர் யாரானாலும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு  தடவையேனும் பாராயணம் செய்து வருபவர் எவரானாலும் அவர் அக்கணமே என்னால் உண்டாகும் பீடைகளிளிருந்து விடுபடுவார்.உளுந்து,எள்ளு முதலானவற்றை உரிய தட்சணையோடு தானம் செய்பவர்கள் கரிய நிறப் பசுவை தானமாகக் கொடுப்பவர் என்னுடைய நாளான சனிக்கிழமைகளில் நீ கூறிய இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி பூஜை செய்த பிறகும் இந்த ஸ்தோத்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பவர்,ஜெபித்தபடி என்னை நமஸ்காரம் செய்பவர்களை நான் ஒரு நாளும் துன்புறுத்தமாட்டேன் .கோசாரத்தின் படியாகவும்,ஜென்ம இலக்னத்தின்படி வரும் அந்தர திசைகளிலும் கூட என்னால் துன்பம் தேராமல் ரட்சிப்பேன்.ஏ ரகுநந்தனா ,உனக்கு நான் இந்த வரத்தை அளிக்கிறேன்” என்று கூறினார்.

    சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து பின் சிரத்தையோடு இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர் சகல துன்பங்களிலிருந்தும் விடுபட்டு ,நீண்ட ஆயுளும் நல்ல புத்தியும் பெறுவர்.  

  • பிள்ளையார் சுழி சொல்வது என்ன ?

    தீராத வயிற்று வலி என்று ஒருவன் டாக்டரிடம் போனான். அவரும் பரிசோதித்து பார்த்துவிட்டு மருந்தை சீட்டில் எழுதி கொடுத்தார். அவனும் அதை கடைக்கு எடுத்துச் சென்றான். சிறிது நேரத்தில் திரும்பி வந்து டாக்டரிடம் , நீங்க எழுதிக் கொடுத்த எல்லா மாத்திரையும் கிடைத்து விட்டது. ஆனால் சீட்டின் ஆரம்பத்தில் எழுதிய ஒரு மாத்திரை மட்டும் கிடைக்கவில்லை என்றான்.  டாக்டரும் அதை வாங்கிப் பார்க்க ,அது தான் மாத்திரை எழுத ஆரம்பிக்கும் முன் போட்ட பிள்ளையார் சுழி என்று தெரிந்துக் கொண்டார்.

    இது கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், படித்தவர்,படிக்காதவர் என்று நம் அனைவருக்கும்,எதையாவது  எழுத ஆரம்பிக்கும் பொழுது பிள்ளையார் சுழி போட்டு  எழுதும் பழக்கம் இன்றும் உள்ளது. முழுமுதற் கடவுளான கணபதியை வணங்கி காரியங்களைத் துவங்குவது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு. அந்த அடிப்படையில் பிள்ளையார் சுழி போடுவது நம்மில் வழக்கமாக இருக்கிறது.

    இவ்வளவு ஏன்,நம்முடைய  பழைய காலத்து ஏடுகள், கல்வெட்டுகளிலெல்லாம் கூட பிள்ளையார் சுழி காணப்படுவதாக சொல்லப்படுகிறது. அதனால்  இது கர்ண பரம்பரையான வழக்கமாகவே கருதப்படுகிறது. இதற்கு பலரும் பலவிதமாக கருத்து கூறியிருக்கிறார்கள். கடவுள் இல்லை என்று வாதிடும் நாத்திகர்கள் கூட, எழுத துவங்குவதற்கு முன் எழுது கோலின் நிலையை ஆராய்வதற்காக போட்ட வட்டமும், கோடும் தான், பிற்காலத்தில் பிள்ளையார் சுழியாக ஆகி விட்டது என்று சொல்வார்கள்.

    அது அவர்கள் வாதமாக இருக்கட்டும். ஆனால், உண்மை அதுவல்ல. பிள்ளையார் பிரணவ சொருபம். பிரணவமாகிய ஓம் ஐந்தெழுத்துகள் சேர்ந்தது. முதல் உரு நட்சத்திர வடிவம். அதாவது வட்டப் புள்ளி. இரண்டாவது உரு நேர் கோடு. மூன்றாவது வட்டம். நான்காவது பிறை மதி. ஐந்தாவது பிந்து. இவற்றில் வட்டப் புள்ளியும் நேர் கோடும் இணைந்தது பிள்ளையார் சுழி. இந்த சுழியை இட்டாலே போதும் பிள்ளையார் வணக்கம் ஆகி விடுகிறது என்பது ஐதீகம்.

    பிரணவத்தின் ஐந்து கூறுகளுக்கும் அதி தேவதைகளாக ஐந்து பேரை சிவஞான போதம் அறிவிக்கிறது. அகாரத்திற்கு பிரம்மன் என்றும், உகாரத்திற்கு விஷ்ணு என்றும், மகாரத்திற்கு ருத்திரன் என்றும், பிந்துவிற்கு மகேசன் என்றும், நாதத்திற்கு சதாசிவன் என்றும் சிவஞான போதம் கூறுகிறது. எழுதத் துவங்குவது என்பது ஒரு சிருஷ்டி. அது தோன்றவும், நின்று நிலவவும், வளர்ச்சி பெறவும் இந்த ஐந்து தேவதைகளையும் வணங்கும் விதமாகவே பிள்ளையார் சுழி போடப்பட்டது. ஆரம்பத்தில் பிரணவ வடிவமே வழக்கமாக இருந்துள்ளது. பிரணவத்தை விரைவாக எழுதும் பொழுது உ போலத் தோன்ற, காலப் போக்கில் அதுவே பிள்ளையார் சுழியாக ஆகி விட்டது.

    எது எந்த விதமாக அர்த்தம் புரிந்துக்கொள்ளப்பட்டாலும், ஒரு செயலை நாம் துவங்குவதற்கு முன் முழுமுதற் கடவுளை வணங்கி ஆரம்பிக்க அது வெற்றியில் தானே முடியும்?.

  • சிவமே மூச்சாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள் – (அரிவாட்டாய நாயனார் )

    சோழவள நாட்டின் செழிப்பினை வையத்திற்கு எடுத்துக் கூறிய  கணமங்கலம் என்னும் ஊரில்  தாயனார் என்னும் சிவனடியார் வாழ்ந்து வந்தார் . வேளாண் மரபைச் சேர்ந்த இவர்,சிவனடியார்களிடத்துப் பேரன்பு மிக்கவர். அனுதினமும் இறைவனுக்குச் சம்பா அரிசியின் அமுதும், செங்கீரையையும், மாவடுவையும் நிவேதனப் பொருட்களாக  அளிப்பதை தனது கடமையாகக் கொண்டிருந்தார். எக்காரணத்தைக் கொண்டும் இதில் இருந்து தவறியது இல்லை . ஜாடிக்கு ஏற்ற மூடி போல் இவரது மனைவியும் இவரைப் போலவே இறைவனிடம் பக்தி கொண்டிருந்தாள். கணவன் ,மனைவி இருவருக்கும் இந்த  தெய்வப் பணி மட்டுமே வாழ்க்கையில் முக்கியமான அம்சமாக இருந்தது.

    தன் மீது அளவில்லாத அன்பு கொண்ட அடியவர்களின் புகழை உலகறிய செய்வது தானே அந்த ஆடலரசனின் வேலை . தாயனார் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன ? அவரிடமும் இறைவனின் திருவிளையாடல் ஆரம்பமானது. இறைவனுக்குத் தவறாமல் பணிபுரியும் அந்த தம்பதியினருக்கு வறுமையை  ஏற்படுத்தினார். ஆனால் வறுமையைக் கண்டு சற்றும் மனம் தளராமல் வழக்கமாக செய்யும் தொண்டினை அந்த தம்பதியினர் செய்து வந்தனர்.

      நாளுக்கு நாள் வறுமை அதிகமான நிலையிலும் அடியார் சற்றும் மனம் தளராமல், கூலிக்கு நெல் அறுக்கும் பணிக்கு தள்ளப்பட்டும்,அதில்  கிடைத்த  நெல்லில் செந்நெல்லைக் கோயில் நைவேத்தியத்துக்கும், கார்நெல்லை தம் உணவிற்கும் வைத்துக் கொள்வார்.

    இங்ஙனம் வறுமையிலும் செம்மையாக  வாழ்ந்து  வந்த அடியாருக்கு செந்நெல்லாகவே கூலியாக கிடைத்ததால், நாயனாருக்கும் அவரின் மனைவிக்கும் அரிசி இல்லாமல், தோட்டத்தில் விளைந்த கீரையைப் பக்குவம் செய்து சாப்பிடத் தொடங்கினார்.

    விடுவாரா ஈசன், நாளடைவில் அந்த கீரைக்கும் பஞ்சம் வந்தது.சோர்ந்து போகாமல்  அந்த சமயத்திலும் அடியார் தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொண்டார். ஒருநாள் நாயனார் தன் மனைவியுடன் இறைவனுக்கு திருவமுது படைப்பதற்கான செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஓர் கூடையில் சுமந்துக்கொண்டு புறப்பட்டார். பசியால் ஏற்பட்ட சோர்வு அவரை மிகவும் வருத்தியது.

    நாயனார் பசியினால் நிலத்தில் விழப்போக ,அம்மையார் தாங்கிக் கொண்டார். கூடையில் சுமந்து வந்த நிவேதனப் பொருள்கள் கீழே விழுந்து சிதறியதால் , நாயனார் மனம் கலங்கினார்.இதற்கும் மேலும் தான் உயிர் வாழ விரும்பாமல் , தம்மிடம் இருந்த அரிவாளால் கழுத்தை அரிந்துகொள்ள துணிந்தார்.

    அவரது பக்தியினைக் கண்ட அம்பலத்தரசன் தொண்டரைத் தடுத்தாட் கொண்டார். திருவமுது சிந்திய நிலவெடிப்பிலிருந்து ருத்திராக்ஷ மாலையும், திருநீறும் அணியப் பெற்ற திருக்கரம் ஒன்று வெளிப்பட்டது.

    அத்திருக்கரம் நாயனாரின் கையைப் பற்றியது. இறைவனின் ஸ்பரிசத்திலே மெய் உருகி நின்றார் நாயனார். அவர் கையில் இருந்து  அரிவாள் தானாக நழுவியது. நிலத்தில் இருந்து வெடுக் வெடுக் என்று ஒலி கேட்டது. அவ்வொலியைக் கேட்ட நாயனார் தான் நிலத்தில் கொட்டிய மாவடுவை எம்பெருமான் ஏற்றுக்கொண்டார் என்பதற்கு அறிகுறியாகத்தான் இந்த ஓசை கேட்கிறது என்று உணர்ந்து அகமகிழ்ந்தார்.

    இறைவனின் திருவருட் கருணையை எண்ணி எண்ணி மனம் உருகிய நாயனாரும் அவர் மனைவியாரும் நிலத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்தனர். அடியவரை ஆட்கொண்ட இறைவன் சக்தி சமேதராய்த் தம்பதியர்க்குப் பேரானந்த காட்சி அளித்தார். இறைவன் நாயனாருக்கும் அவர் தம் மனைவியாருக்கும் என்றென்றும் தம் அருகிலேயே இருந்து மகிழ்ந்து வாழும் பேரின்பப் பேற்றினை அருளினார்.

  • தெரிந்த பொருட்களும் தெரியாத தத்துவங்களும்

    நாம்  தெரிந்தவர் யாரையாவது பார்க்கப் போகும் போது வெறுங்கையுடன் போவது இல்லை. நம் சக்திக்கு ஏற்றவாறு, எதையாவது வாங்கிக்கொ ண்டு தான் போவோம். அது மரியாதை நிமித்தம் காரணமாகவோ அல்லது நம்முடைய கவுரவத்திற்காகவோ  வெறுங்கையுடன் போவது நம் பண்பாடு இல்லை. சாதாரணமான மனிதர்களுக்கே நாம் இவ்வளவு யோசிக்கும் போது, இவ்வுலகையும், நம்மையும் படைத்துக் காக்கும் இறைவனை பார்க்க கோயிலுக்கு செல்லும்போது, அத்தெய்வத்திற்கு அபிஷேகத்திற்காகவோ, அர்ச்சனை செய்யவோ  பூஜை பொருட்கள் வாங்கிச்செல்வோம். அதற்கான காரண காரியத்தைக் கேட்டால், யாருக்கும் தெரியாது. வழிவழியாக நம் பெரியவர்கள் செய்து வந்ததை நாமும் அர்த்தமும், காரணமும் தெரியாமல் பின்பற்றி கொண்டிருக்கிறோம் .

    சில பூஜை பொருட்களுக்கான அர்த்தத்தையும், அதன் பின் உள்ள தத்துவத்தையும் இப்பதிவில் பார்க்கலாம்.

    தேங்காய்

    பருப்பில்லாத கல்யாணமா ? என்றொரு சொல் வழக்கொன்று உண்டு. அது போல் தேங்காய் இல்லாமல் நம் இந்து மதத்தில் எந்த ஒரு கோவில் கைங்கரியமும், சுப நிகழ்வுகளும் நடக்க முடியாது. கோவில்களுக்கு நாம் தேங்காயை அர்ப்பணிப்பதன் தத்துவமாவது ,தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்கும். அதை இரண்டாக உடைக்கும்போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது.

    அதுபோல்  நம் மனதில் குடிகொண்டிருக்கும் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும்பொழுது தான் வெண்மையான மனமும், அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும், அன்பாகவும் இருக்கும். அடுத்த முறை நாம் கோவிலுக்கு தேங்காயை எடுத்து  வைக்கும் போது, இந்த தாத்பரியத்தை நினைத்துப் பார்த்து இறைவனிடம் அகந்தை அற்ற மனதை வேண்டுவோம்.

    விபூதி (திருநீறு)

    புனிதமான நம் இந்து மத சின்னமான திருநீறு, நாளை ஒரு நாள் நாமும் இது போல் பிடி சாம்பல் ஆகப்போகிறோம் என்பதை நமக்கு உணர்த்துவதாகும். முடியாண்ட மன்னனும் முடிவில் பிடி சாம்பல் ஆக வேண்டும். ஆதலால்  வாழும் போது நான் என்ற அகம்பாவமும், சுயநலம், பொறாமை இருக்கக்கூடாது என்ற எண்ணத்தையும், சிந்தனையும் நமக்கு உணர்த்தவே, விபூதியை நெற்றியிலும், உடம்பிலும் பூசிக்கொள்கிறோம்.

    வாழைப்பழம்

    முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்திற்கும் பூஜை பொருட்களில் முக்கியத்துவம்  கொடுக்கப்படுகிறது. வாழைப்பழத்தின் நடுவே கருப்பு கலரில் மிகச்சிறியதாக விதைகள் இருக்கும். ஆனால் மற்ற பழங்களின் விதையை போல் அது முளைக்காது. அதைப் போலவே நாமும், எனக்கு இந்த பிறவியிலேயே முக்தியை கொடு வேறு பிறவி வேண்டாம் என இறைவனின் அருள் பெறவே வாழைப்பழத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

    அகல் விளக்கு  

    எவ்வளவு விஞ்ஞானம் வளர்த்தாலும், மின்சாரத்தினால் ஏற்றப்படக்கூடிய ஒரு  விளக்கினால் மற்றொரு மின்சார விளக்கை ஏற்ற முடியாது. ஆனால் மண்ணால் செய்யப்பட்ட ஒரு அகல் விளக்கினைக் கொண்டு  மற்றொரு அகல் விளக்கை  ஏற்றி இருள் சூழ்ந்த இடத்தை ஒளிர வைக்க முடியும்.

    அதுபோல் நாமும் சுயநலமற்று இருக்க வேண்டும் என்று உணர்த்தவே அகல் விளக்கை ஏற்றுகிறோம். நாம்  வாழ்ந்தால் மட்டும் போதாது, அடுத்தவரையும் வாழ வைக்கவேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவது அகல் விளக்கு தத்துவம்.

    இறைவன் நம்மிடம் , இதைக்  கொடு , அதை செய் என்று எதிர்பார்ப்பதில்லை. உள்ளார்ந்த பக்தியுடன் ஒரு இலையை கிள்ளிப் போட்டு என்னை பூஜித்தாலே நான் மகிழ்வேன் என்றார் கிருஷ்ணர். ஆகவே நாமும்  இறைவனுக்கு நம்முடைய தூய்மையான பக்தியை பிரதானமாகக் கொண்டு இந்த எளிமையான பூஜை பொருட்கள் மூலம் இறை அருள் பெற முடியும் .