Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சிறுவாபுரி முருகன்!

    சொந்த வீடு பற்றிய கனவு என்பது எல்லோருக்குமே இருக்கும். ஆனால், எல்லோராலும் அந்தக் கனவை அத்தனை எளிதாக அடைந்து விட முடிவதில்லை. கையில் பணமிருந்தும் சொந்த வீடு அமையாதவர்கள் பலர் உண்டு. ஆனால், அப்படியெல்லாம் நீங்கள் கவலைப்படத் தேவையில்லைஉங்கள் உள்ளத்தின் உந்துசக்தியாக இருந்து உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்துத் தருகின்றேன் என்கிறார், சிறுவாபுரி முருகன். 

     

    ஆம், சிறுவாபுரிக்குச் சென்று உள்ளன்போடு வணங்கினால், நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்கின்றனர் இக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள். குறிப்பாக சொந்தமாக வீடு அமையவேண்டும் என இங்கு வேண்டிக்கொள்ள வருபவர்களே அதிகம்.

    சென்னை, கல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கிலோமீட்டர் பயணம் செய்தபின் இடது புறமாக பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து  3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி முருகனை தரிசிக்கலாம்.

    சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ராமாயண காலத்தில், ராமருக்கும் லவகுசனுக்கும் போர் நடந்த இடம் என்றும் கூறப்படுகிறது.

    பசுமை கட்டிநிற்கும் நெல்வயல்களைக் கடந்து போனோமென்றால், சிறுவாபுரி கிராமத்தின் வடகிழக்கு மூலையில் இருக்கிறது, அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோயில். கோயிலின்  உள்ளே கம்பீரமான ராஜ கணபதி, அருணாசலேஸ்வரர் மற்றும் அபீத குஜலாம்பாள், சூரியனார், சண்டிகேஸ்வரர், நாகார், ஆதிமூலர், நவக்கிரகங்கள் கால பைர்வர், அருணகிரிநாதர், மயூரநாதர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

    ஐந்து நிலைகளைக்  கொண்ட ராஜ கோபுரமும் உயரமான கொடிமரமும் இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்கள். அருணகிரிநாதர் திருப்புகழில் இந்த திருத்தலம் பற்றி பாடியுள்ளார். மூலவர் பால சுப்ரமணிய சுவாமி  நான்கரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

     பால சுப்பிரமணியரைத் தவிர அனைத்து தெய்வங்களும் மரகதப் பச்சைக்கல்லால் ஆனவை. இதைபோல் வேறெங்கும் காணமுடியாது. கோயிலின் தல விருட்சமாக மகிழ மரம் திகழ்கின்றது.திருக்கார்த்திகை, நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நிலம், வீடு, வீட்டு மனை என பூமி சார்ந்த எந்த விஷயம் என்றாலும் இங்கு வந்து வணங்கிச் சென்றால், உடனே அவர்களுக்கு அமைவது நிதர்சனமான உண்மை. 

  • பகவான் சீரடி சாயிபாபாவின் பதினோரு உபதேச மொழிகள்

    பகவான் சீரடி சாய் மகாராஜ்  தன்னை நினைக்கும் அடியவர்களுக்கு அளவில்லாத அருள் பாலித்து வருகிறார். தனது பக்தர்களை வழி நடத்த பதினோரு உபதேசங்களை நல்கியுள்ளார் பாபா 

     

    எவன் ஒருவன் சீரடி மண்ணை மிதிக்கிறானோ. அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து செளகரியத்தை அடைகிறான்.

    துவாரகாமாயியை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.

    இந்த உலகத்தை விட்ட பிறகும் நான் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.

    என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அனேக ஆசிர்வாதங்களையும் புத்திமதிகளையும் கொடுக்கும்.

    என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.

    என்னுடைய மசூதியில் இருந்துகொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.

    என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும் என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.

    நீ என்னை அடைந்தால் நான் உன்னை காப்பாற்றுகிறேன்.

    நீ என்பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.

    நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவற்றை உடனே நான் உனக்குக் கொடுப்பேன்.

    என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது. சாயி மகானின் வார்த்தைகளை வேத வாக்காக நம் வாழ்க்கையில் கடைபிடிக்க என்றென்றும் வாழ்வில் வசந்தம் நிலைக்கும்.

     

    ஓம் ஸ்ரீ சாய் ராம் ….

  • ஆடியில் அம்மனுக்கு வளைகாப்பு

     

    ஆடி மாதம்  முழுவதுமே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்பட்டாலும் அவற்றுள் சில நாட்கள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள் என்பதால், திருவாடிபூரம் பெண்களுக்கு ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது.மங்கையர்களுக்கு அரசியான அந்த அம்மனுக்கு பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதுபோல, வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப்பூரம். அம்மன் கோவில்கள் அனைத்திலும், ஆடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக சிறப்பாக நடைபெறும்.

     

                                                                    

    ஒருமுறை ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வளையல்களை விற்க வந்த  வளையல் வியாபாரி ஒருவர், பாதி வளையல்கள் விற்றுவிட்டு பெரியபாளையம் என்கிற கிராமத்தை கடந்து செல்லும்போது, அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாமல்  சோர்வடைந்த அவர், அங்கு இருந்த  ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு தூங்கிவிட்டார். கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு சுற்றுமுற்றும் தேடினார்.

    அன்றிரவு, அந்த வளையல் வியாபாரியின் கனவில் அம்மன் தோன்றி,“நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன்.  பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும்.” என்றாள் அம்பாள்.

    தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் அந்த வளையல் வியாபாரி. அத்துடன்  அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் கிராம மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார். இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது.

    வைணவத்தில்,ஆண்டாள் தோன்றிய தினமே  ஆடிப்பூரமாக கொண்டாடப்படுகிறது.   பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம். உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள் என்பது நம்பிக்கை. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான கோதை நாச்சியார் தோன்றிய ஆடிப்பூரம் நன்னாளில் ஆண்டாளை தரிசித்து பூமாலை, வளையல்களை கொடுத்து வணங்கினால் மங்களங்கள் யாவும் கைக்கூடும்.

     

                                                                     

     

    திருவாடிப்பூர தினத்தன்று எல்லா கோவில்களிலும் அம்பாளுக்கு வளையல் சாற்றுவார்கள், பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாக தருவார்கள். அம்மனுக்கு படைத்த வளையலை கர்ப்பிணிகள் கைகளில் அணிந்துக்கொண்டால், சுகப்பிரசவம் நிகழும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும். 

     

     ஆண்டாள் திருப்பாதமே சரணம் ……

     

  • ஏரி காத்த ராமரின் கதை

    பெருமாளுக்கும் நீர் நிலைகளுக்கும் ஆதிகாலம் தொட்டே தொடர்பு உண்டு. பாற்கடலில் பள்ளி கொண்டவன் அந்த ஆதிபிரான். இவனே லட்சுமணனுடன் இணைந்து மதுராந்தகம் ஏரி உடையாமல் இரவெல்லாம் காத்து நின்றான் என்கிறது தல புராணம். இறைவன் தன் சக்தியால் ஒரு கண நேரத்தில் ஏரி உடையாமல் காத்துவிட முடியும். ஆனால் ராமர் மனித உருக் கொண்டு பிறந்ததால் வில்லேந்தியே மதுராந்தகம் ஏரியைக் காத்ததாகக் கூறப்படுகிறது.

    மதுராந்தகம் ஏரி முற்காலத்தில் அதனைச் சுற்றி உள்ள சிறிய மற்றும் பெரிய கிராமங்களுக்கு பாசனத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீராகவும் பயன்பட்டு வந்தது. மழை நீரைத் தேக்கிவைக்கும் இந்த ஏரியில், அதிகப்படியான நீரின் காரணமாக உடைப்பு ஏற்படுவது வழக்கம்.


    ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த லயோனல் பிளேஸ், ஏரிக்கரையைப் பலப்படுத்தப் பல முயற்சிகள் எடுத்தார். ஆனால் பலனேதும் ஏற்படவில்லை. இங்குள்ள இந்த ராமர் கோயிலுக்கு வந்த அவரிடம், அப்போது இருந்த அர்ச்சகர் கோயிலைச் செப்பனிட்டு, தாயாருக்கு தனிச் சன்னிதி அமைத்துத் திருப்பணி செய்து தரக் கோரிக்கை விடுத்தார். பதிலுக்கு மாவட்ட ஆட்சியரும் பெருமாளிடம் ஓர் கோரிக்கை வைத்தார். தெய்வ பலத்தால் வரும் ஆண்டு ஏரி உடைப்பெடுக்காமல் இருந்தால், திருப்பணியை ஏற்று நடத்துவதாக ராமருக்கு கோரிக்கை வைத்தாராம் மாவட்ட ஆட்சியர்.


    பருவ மழை வந்தது. வழக்கம்போல் ஏரி நிரம்பித் தளும்பியது. கவலையுடன் கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்த ஆங்கிலேயே மாவட்ட ஆட்சியரின் கண்களுக்கு இரு இளைஞர்கள் தென்பட்டனர். அவர்கள் கைகளில் நாண் பூட்டிய வில்லில் அம்பு பொருத்தப்பட்ட நிலையில் இருந்ததாம். மின்னல் ஒளியில் இதனைக் கண்ட மாவட்ட ஆட்சியர், அம்பிலிருந்தும் மின்னல் ஒளி தோன்றியதைக் கண்டாராம். அதற்குப் பின்னர் ஏரிக்கரை உடையவில்லை என்பது வரலாறு.


    தான் கூறியபடியே தாயாருக்குத் தனிச் சன்னிதி கட்டிக் கொடுத்தாராம் மாவட்ட ஆட்சியர். இச்சம்பவம் குறித்த கல்வெட்டு தாயார் சன்னிதியில் உள்ளது. இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏரி காத்த ராமர் எனப் புகழப்பட்டார் மூலவர் ராமர்.

    இரண்டு தேர் ஒரே பிரம்மோற்சவத்தில் இரண்டு நாள் தேர்த்திருவிழா நடைபெறுவது இத்தலத்தின் சிறப்புப் பெருமை. ஆனி பிரம்மோற்சவத்தில், ராமர், புஷ்பக விமானம் போல் அமைக்கப்பட்ட தேரிலும், மறுநாள் கருணாகரப் பெருமாள் மற்றோரு தேரிலும் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சி.
    தரிசனம் தரும் பலன் தம்பதியர் ஒற்றுமையை எடுத்துக்காட்டுவது போல ராமரும் சீதையும் கை கோத்து நின்று நற்பலன்களைத் தருவதாக ஐதீகம். கல்விச் செல்வத்தை வாரி வழங்கும் வகையில் ராமானுஜர் திருவுருவக் காட்சி. இங்குள்ள கண்ணன் பிள்ளைப் பேறு வழங்கும் வள்ளல் என்பது ஐதீகம்.


    சீதையுடன் கை கோத்த நிலையில் காட்சி தருகிறார் மூலவர் ராமர். விபண்டக மகரிஷிக்குக் காட்சி தரும்போது இந்த அன்புக் கோலத்தைக் காட்டி அருளினாராம் ராமர். இதனையொட்டி விபண்டக மகரிஷி கை கூப்பிய நிலையில் இங்கு காட்சி அளிக்கிறார். தனிச் சன்னிதியில் ஜனகரின் மகள் ஜனகவல்லித் தாயார் திருக்கோலம் கொண்டுள்ளார். வெண்ணிற உடையில் உடையவர் ராமானுஜருக்குப் பெரும்பாலும் திருத்தலங்களில் காவி உடை அணிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் அதிசயமாக இத்தலத்தில் வெண்ணிற உடையில் காட்சியளிக்கிறார் உடையவர். குடும்ப வாழ்கையில் இருக்கும்பொழுதுதான் இத்திருத்தலத்தில் தீட்சை பெற்றார் என்பதால் இத்திருக்கோலம்.

  • பிரதோஷங்களில் இத்தனை வகைகளா?

     

    சிவ வழிபாட்டில் சோமவாரம் வழிபாடு மிக விசேஷம். அதுவும் அன்று பிரதோஷமாக இருந்தால் ,சிவன் கோவிலில் வழிபாடு செய்யும் போது  கோடி புண்ணியத்தை பெறுவதற்கு சமம். ஆனால் பிரதோஷத்தில் 20 வகை இருக்கிறது என்பது பலரும் அறியாத செய்தி. 20 வகை பிரதோஷம் மற்றும் அதன் பலன்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

     தினசரி பிரதோஷம் :

    தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமே பிரதோஷ காலமாகும்.  ஐந்து வருடங்கள் முறையாகச் நித்தியப்பிரதோஷத்தை செய்வர்களுக்கு முக்தி நிச்சயம் என்கிறது நமது சாஸ்திரம்.

    பட்சப் பிரதோஷம் :

    அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத் திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும்.

     மாதப் பிரதோஷம் :

    பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.

    நட்சத்திரப் பிரதோஷம் :

    பிரதோஷ திதியாகிய ‘திரயோதசி திதி’யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்

    பூரண பிரதோஷம் :

    திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது ‘சுயம்பு லிங்கத்தை’த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும்

     திவ்யப் பிரதோஷம் :

    பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது ‘திவ்யப் பிரதோஷம்’ ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

    தீபப் பிரதோஷம் :

    பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது,மற்றும்  ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும் என்பது நம்பிக்கை.

    அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :

    ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் ,திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவானாம்.

    மகா பிரதோஷம் :

                

                                                               

    ஈசன் விஷம் உண்ட நாளான  சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ஆகும். இந்த மகா பிரதோஷ தினத்தில் , எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும்,’மகா பிரதோஷம்’எனப்படும்.

    உத்தம மகா பிரதோஷம் :

    சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

    ஏகாட்சர பிரதோஷம் :

    வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுவதும் பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதும்  பல விதமான நன்மைகளைத் தரும்.

    அர்த்தநாரி பிரதோஷம் :

    வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அன்று சிவாலயம் சென்று வழிபட, தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

    திரிகரண பிரதோஷம் :

    வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

    பிரம்மப் பிரதோஷம் :

    ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். முன்ஜென்மப் பாவம் மற்றும் தோஷங்களை  நீக்க வல்லது இந்த பிரதோஷ வழிபாடு.

    அட்சரப் பிரதோஷம் :

    வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகளின் அகந்தையை நீக்கி ஈசனின் அருள் கிடைக்க செய்த பிரதோஷம் இது.

    கந்தப் பிரதோஷம் :

    சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்டதால், இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் பெறலாம்.

     சட்ஜ பிரபா பிரதோஷம் :

    ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம் என்கிறார்கள் சான்றோர்கள்.

    அஷ்ட திக் பிரதோஷம் :

    ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

    நவக்கிரகப் பிரதோஷம் :

    மிகவும் அரிதாக ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம்.  இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

    துத்தப் பிரதோஷம் :

    அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது தான் துத்தப் பிரதோஷம். அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

                                                

                                                                 

    ஓம் நம சிவாய…..

  • பிரதோஷங்களில் இத்தனை வகைகளா?

     

    சிவ வழிபாட்டில் சோமவாரம் வழிபாடு மிக விசேஷம். அதுவும் அன்று பிரதோஷமாக இருந்தால் ,சிவன் கோவிலில் வழிபாடு செய்யும் போது  கோடி புண்ணியத்தை பெறுவதற்கு சமம். ஆனால் பிரதோஷத்தில் 20 வகை இருக்கிறது என்பது பலரும் அறியாத செய்தி. 20 வகை பிரதோஷம் மற்றும் அதன் பலன்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

     தினசரி பிரதோஷம் :

    தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமே பிரதோஷ காலமாகும்.  ஐந்து வருடங்கள் முறையாகச் நித்தியப்பிரதோஷத்தை செய்வர்களுக்கு முக்தி நிச்சயம் என்கிறது நமது சாஸ்திரம்.

    பட்சப் பிரதோஷம் :

    அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத் திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும்.

     மாதப் பிரதோஷம் :

    பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.

    நட்சத்திரப் பிரதோஷம் :

    பிரதோஷ திதியாகிய ‘திரயோதசி திதி’யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்

    பூரண பிரதோஷம் :

    திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது ‘சுயம்பு லிங்கத்தை’த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும்

     திவ்யப் பிரதோஷம் :

    பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது ‘திவ்யப் பிரதோஷம்’ ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

    தீபப் பிரதோஷம் :

    பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது,மற்றும்  ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும் என்பது நம்பிக்கை.

    அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :

    ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் ,திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவானாம்.

    மகா பிரதோஷம் :

                

                                                               

    ஈசன் விஷம் உண்ட நாளான  சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ஆகும். இந்த மகா பிரதோஷ தினத்தில் , எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும்,’மகா பிரதோஷம்’எனப்படும்.

    உத்தம மகா பிரதோஷம் :

    சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

    ஏகாட்சர பிரதோஷம் :

    வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுவதும் பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதும்  பல விதமான நன்மைகளைத் தரும்.

    அர்த்தநாரி பிரதோஷம் :

    வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அன்று சிவாலயம் சென்று வழிபட, தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

    திரிகரண பிரதோஷம் :

    வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

    பிரம்மப் பிரதோஷம் :

    ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். முன்ஜென்மப் பாவம் மற்றும் தோஷங்களை  நீக்க வல்லது இந்த பிரதோஷ வழிபாடு.

    அட்சரப் பிரதோஷம் :

    வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகளின் அகந்தையை நீக்கி ஈசனின் அருள் கிடைக்க செய்த பிரதோஷம் இது.

    கந்தப் பிரதோஷம் :

    சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்டதால், இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் பெறலாம்.

     சட்ஜ பிரபா பிரதோஷம் :

    ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம் என்கிறார்கள் சான்றோர்கள்.

    அஷ்ட திக் பிரதோஷம் :

    ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

    நவக்கிரகப் பிரதோஷம் :

    மிகவும் அரிதாக ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம்.  இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

    துத்தப் பிரதோஷம் :

    அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது தான் துத்தப் பிரதோஷம். அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

                                                

                                                                 

    ஓம் நம சிவாய…..

  • துரியோதனனை ஏன் தடுக்க வில்லை கிருஷ்ணன் ?

     

    பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே,அவருடன் இருந்து ,அந்த அவதாரம் முடியும் மட்டும் இறுதி வரை அவருடனே இருந்தவர் உத்தவர். பகவானே தன்னுடைய பால்ய நண்பராக  இருந்த போதிலும்,தனது வாழ்நாளில், தனக்கென எந்தவிதமான உதவியோ நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.

    துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில்,உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர்,“உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர்,என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.ஆனால், என் நண்பனான நீங்கள் இதுவரை என்னிடம் எதுவுமே கேட்டதில்லை. உங்களுக்கு நான் ஏதாவது தர விரும்புகிறேன், என்ன வேண்டுமோ தருகிறேன் கேளுங்கள்”என்றார்..

    சிறு வயது முதலே கண்ணனுடன் நெருங்கி பழகி வந்த காரணத்தினால்,அவரின்  செயல்களை உற்று கவனித்து வந்த உத்தவருக்கு,பல நேரங்களில் கண்ணனின் லீலைகள்,புரியாத புதிராகவே இறுதிவரை இருந்தன.

    அவற்றுக்கான தனக்கு புரியாத காரண காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார். “பெருமானே ! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு ! நடந்து முடிந்த மகாபாரத நாடகத்தில்,எனக்குப் புரியாத பல விஷயங்கள்  உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன் என்றார் உத்தவர்.

    உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: “ கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். ஆபத்பாந்தவனான உன்னை , கடைசி வரை பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பவை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் முன் கூட்டியே நன்கறிந்த ஞானியான நீ முன்னதாகவே சென்று, ‘தருமா!  வேண்டாம்இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன்அப்படிச் செய்யவில்லை?

    போகட்டும்.விளையாட ஆரம்பித்ததும்,தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி பாடம் புகட்டியிருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தோடு ,நாட்டை,தன்னையும் இழந்தான். அதோடு நில்லாமல் தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.’

    குல தேவதையான திரௌபதியை  பணயம் வைத்து ஆட முற்பட்ட போதாவது உனது தெய்வீக சக்தியால்,அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை.மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போது தான் சென்று,திரௌபதி மானம் காத்தேன்’ ஆடை தந்தேன், என்று ஜம்பமாக மார்தட்டிக் கொண்டாய்.

    மாற்றான் ஒருவன்,குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, மானம் என்ன அவளிடம் இருக்கிறது? அவள் அப்போதே இறந்து விட்டாள் உயிர் மட்டுமே ஊசலாடியது,

    ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன்?ஆபத்தான இது போன்ற சமயத்தில் உன் பக்தர்களுக்கு உதவாத, நீ எப்படி ஆபத்பாந்தவன் ? நீ செய்தது நியாயமா!தருமமா ?”என்று மிகக் கடுமையாக குரலில் குழம்பிய மன நிலையில் கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

    பகவான் சிரித்தார். “உத்தவரே ! விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை.அதனால்தான் தருமன் தோற்றான்”என்றான் கண்ணன்.

    உத்தவர் ஏதும் புரியாது அதிர்ச்சியுடன் திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான். “துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. ‘பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன்.

    அது விவேகம்.

    தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்’ என்று சொல்லியிருக்கலாமே

    சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள் ?நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது அவன் கேட்கும் எண்ணிக்கைளை ,என்னால்தான் போடமுடியாதா ?

    தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டதோடு, விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். ‘ஐயோ ! விதி வசத்தால் சூதாட ஒப்புக் கொண்டேனே !ஆனால், இந்த விஷயம்  கண்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே !அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறுஅவனே என்னை  தன் வேண்டுதலால் கட்டிப் போட்டு விட்டான்.

    யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் வெகு நேரமாக காத்து நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும்,தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே !

    துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளும் தனது  பலத்தையே நம்பி, சபையில் வந்து வீண் வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய,  என்னைக் கடைசி வரை கூப்பிடவேயில்லை ! நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், ‘ஹரி…  ஹரி…  அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல் கொடுத்தாள். அப்போது தான் உள்ளே செல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

     

                                                                          

    இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?” என்று பதிலளித்தான் கண்ணன்.

    “அப்படியானால், கூப்பிட்டால் தான் நீ வருவாயா ? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில், கஷ்டங்களில் உதவ உன் அடியவர்களுக்கு வரமாட்டாயா ?” என்றார் உத்தவர்.

    “உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் ‘சாட்சி பூதம் மட்டுமே, நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே !அது தான் தெய்வ தர்மம்” என்றான் கண்ணன்.

    அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்ட இருக்க  வேண்டும்.அப்படித்தானே?”என்றார் உத்தவர்.

    “உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நீங்கள் நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக உங்கள் அருகில் நிற்பதை நீங்கள் மனப்பூர்வமாக உண்மையில் உணரும் போது மட்டும் தான் உங்களால் தவறுகளையோ, தீவினை செயல்களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து விடும் போதுதான்,எனக்குத் தெரியாமல் இது அது என ஏதாவது தீவினையை நான் உங்களுள் இருப்பதை மறைத்து எதையாவது செய்து விடலாம் என்று எண்ணி நீங்களாகவே முடிவெடுத்து செய்கிறீர்கள்.

    பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் பெரும்பாலும் தவறாக நிகழ்வதும் அப்போதுதான்.எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே,அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால்,இந்த சூதாட்டநிகழ்ச்சி வேறு விதமாக  முடிந்திருக்கும் அல்லவா?” என்றான்,ஸ்ரீகிருஷ்ணன்.

    உண்மை தானே ,பகவான் நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும்,அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை உணர்ந்தாலே, பாவங்களை செய்யாமல் இருப்போம்.

  • அஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் ஆடி வெள்ளி

     

    பெண்களுக்கு  ஆடி வெள்ளியும், தை வெள்ளியும் மிகவும் விசேஷமான கிழமைகளாகும். அம்பிகை அருள் பொங்கும்  வெள்ளிகிழமை தான்  சுக்ரனுக்கும் உகந்த நாளாகும். அம்பிகை மற்றும் சுக்ரன் கடைக்கண் பட்டால் வீட்டில்  பொன்னும் பொருளும் சேரும் என்பது நம்பிக்கை.  

    செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த பரந்தாமனின் பத்தினியான லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தமான வெள்ளிக்கிழமைகளில்,விரதமிருந்து திருவிளக்கு பூஜை செய்து வந்தால் நம் இல்லத்தில் மட்டுமில்லாமல் உள்ளத்திலும் நிரந்தரமாக வசித்திடுவாள்.

    லட்சுமி வழிபாட்டை தொடங்கும் போது முறையாக விளக்கு ஏற்றி வைத்து குங்குமம், சந்தனம், பூ ,தேங்காய், வெற்றிலை, பாக்கு, இனிப்புப் பொருட்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பின்பு அஷ்டலட்சுமி வருகைப் பதிகம், துதிப்பாடல்கள் பாடி தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் செல்வ வளம் பெருகும்.

    பொதுவாக திருமகள் எனப்படும் மகாலக்ஷ்மி எப்போதும் ஓரிடத்தில் நிலையாக இருப்பதில்லை என்றொரு  வழக்கு உண்டு. இதைக் குறித்து உலகைக் காக்கும் அந்த பரந்தாமனே ஒரு முறை தாயாரிடம்  கேட்க, அதற்கு அவள், “தர்மம் செய்யாத கருமிகள், மிருகங்களை வதைத்து உண்பவர்கள், சூதாடிகள், பரத்தை வீட்டுக்குப் போகிறவர்கள், குடிகாரர்களை கண்டால் எனக்கு பிடிக்காது.அதிகமாக கோபப்படுபவர்கள், பொய் சொல்பவர்கள், பொறாமைக்காரர்கள், தற்புகழ்ச்சி செய்து கொள்பவர்கள், தன்னிடம் பணம் உள்ளது என கர்வபடுகிறவர்கள், ஏழைகளை கண்டு இரக்கப்படாதவர்கள் போன்றோருக்கு எனது அருள் கிடைக்காது; ஒரு வேளை வினைப் பயனால் அது கிடைத்திருந்தாலும் அது நிலைக்காது” என்றாள்.

    இதை கேட்டு மகிழ்ந்த எம்பெருமான்  “இந்த அவ நடத்தைகள் இல்லாதவர்களின் வீட்டில் மகாலக்ஷ்மி கடாட்சம் எப்போதுமே இருக்கும் என்று வரமளிக்கிறேன்” என்று கூறி அருளினார்.

    மங்களங்களை அள்ளித் தரும் லட்சுமி தேவி நம் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய வேண்டும் என்று யாருக்கு தான் ஆசை இருக்காது. ஆனால் அதற்கு பெரிய அளவில் மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லை. தினமும் நாம் கொஞ்சம் நேரம் செலவழித்தாலே போதும், அந்த அன்னை நம்மை தேடி வருவாள்.

    சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.

    வீட்டில் எப்போதும் சண்டை, சச்சரவோ , அமங்கலச் சொற்களோ பேசவே கூடாது.மாறாக காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

    பெண்கள்  நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது. மேலும் அவர்கள்  வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.அதே போலபெண்கள் எப்போதும் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடவே கூடாது.

    வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும் என்பது நம்பிக்கை.  விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.

    மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு. விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறருக்கு  கொடுக்கக் கூடாது.

    வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.

     வழிபாட்டிற்கு உகந்ததான ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்தால் அந்த மகாலட்சுமியின் அருள் கிட்டும்.  சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில், அம்பிகையை மனதில் நிறுத்தி விரதமிருந்தால் நாம் நினைத்தது நிறைவேறும்.

     

  • செவ்வாய் தோஷம் தீர்க்கும் ஆடி கார்த்திகை விரதம்

     

     தேவர்களை சிறைப்பிடித்து,மக்களை கொடுமைப்படுத்திய சூரனை வதைக்க வேண்டி ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறுமுகனை வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகை பெண்களிடம் கொடுக்கப்பட்டது. கார்த்திகைப் பெண்களும் குமரனை  பாலூட்டி போற்றி வளர்த்தார்கள். அவனை சேர்த்து ஒன்றாக்கிய  உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தி இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால் `கார்த்திகேயன்’ எனவும் அழைக்கப்படுவான் என்று கூறி அருளினார்.  மேலும் அவர்களுக்கு நட்சத்திர பதவியும் அளித்து, இந்த கார்த்திகைப் பெண்களின் நட்சத்திரம் வரும் சமயம் முருகனுக்கு விரதம் இருப்பவர்களுக்கு,அவனருளால்  குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்று அருளிச் செய்தார்.

     

                                                                            

    இது தான் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் என்று அழைக்கப்படுகிறது. ‘ஆறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப்போதில் வீற்றிருந்து அருளினானே’ என்று கந்த புராணம் சிறப்பித்துக் கூறுமளவிற்கு ஆடிக் கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது

     கிழமைகளில் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. திதிகளில் சஷ்டி திதி முக்கிய விரதமாகும். நட்சத்திரத்தில் ‘கிருத்திகை’ முருகனின் நட்சத்திரம் ஆகும். மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது.

    முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

    ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

     எல்லா முருகன் கோயில்களிலும் ஆடிக்கிருத்திகையன்று   பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என விமரிசையாக பல விழாக்கள், உற்சவங்கள் நடைபெறுகிறது. கந்தன் காவடிப் பிரியன் என்பதால், அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை  செலுத்துவது வழக்கம்.

    ஜோதிட சாஸ்திரத்தின்படி முருகப் பெருமான் செவ்வாயின் அம்சமாதலால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடை, செவ்வாய் தோஷ தடை, குரு, செவ்வாய் திசை நடப்பவர்கள் ஆடி கிருத்திகை நாளன்று முருகப் பெருமானை பக்தியுடன் மனமுருக பிரார்த்தித்தால் சகல தோஷ, தடைகளும்  நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

    மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும். முறையாக விரதங்கள் மேற்கொள்வதால் நமது உடலும், உள்ளமும் தூய்மையாகி மனம் அமைதியும் சந்தோஷமும் அடைகிறது.

    வேலுண்டு வினையில்லை…..மயிலுண்டு பயமில்லை…..

  • மங்கலம் பொங்கும் ஆடிச்செவ்வாயில் அவ்வை விரதம்

     

    வாரா வாரம் தான் செவ்வாய் கிழமையும் , வெள்ளிக்கிழமையும் வருகிறது. ஆனால் ஆடி மற்றும் தை மாதங்களில்  வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு?. ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வருவது ஏதோ நேற்று தோன்றிய வழக்கம் இல்லை. காலம் காலமாக நம் முன்னோர் ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனின் அருள் பெற விரதமிருந்து வருவது வழக்கத்தில் உள்ளது. இவ்வளவு ஏன் அன்னை பராசக்தியே சிவனை அடையும் நோக்கில் இம்மாதத்தில் தான் விரதம் இருந்து இறைவனின் இடப்பாகத்தை பெற்று அர்த்தநாரீஸ்வரியாகும் வரம் பெற்றார். ஆடிச் செவ்வாய் தேடிக்குளி” என்ற பழமொழி ஒன்றே இவ் விரதத்தின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது.

     ஆடி செவ்வாய்க் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்பது  பெண்களின் நம்பிக்கை.

     மேலும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஆடி மாத செவ்வாயன்று பெண்கள் அவ்வையார் விரதம் இருப்பது வழக்கம். குறிப்பிட்ட நாளில் இரவு அனைவரும் தூங்கிய பின் விரதம் இருக்கும் பெண்கள் ஒன்று கூடி,  மூத்த சுமங்கலி பெண்கள்  வழிகாட்ட, இளம்தலைமுறைப்  பெண்கள் விரதத்தை தொடங்குவர்.

    பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்பட்ட  ஒருவித வடிவம் கொண்ட கொழுக்கட்டையை நைவேத்தியமாக  தயாரிப்பார்கள். மேலும் அன்றைய தினம் செய்யப்படும் நைவேத்தியங்கள் எதிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள்.

    அவ்வையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி செய்யப்படும் பூஜையில் அவ்வையாரின் கதையை ஒருவர் சொல்ல அனைவரும் அதை பக்தியுடன் கேட்டு, இறுதியில்  நைவேத்தியமாக செய்த பிரசாதங்களை பெண்களே உண்பார்கள். இதில் ஆண்களை மட்டுமின்றி, ஆண் குழந்தைகளைக் கூட   அனுமதிக்க மாட்டார்கள்.  பூஜை முடிந்தபின் வழிபாடு நடந்த இடத்தை சுத்தம் செய்துவிடுவார்கள்.இந்த விரதத்தை கடைபிடிப்பதால் குடும்ப ஒன்றுமை நிலைக்கும் என்றும் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடி , குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும்  நம்பப்படுகிறது.

     இதை தவிர ஆடிச்செவ்வாயில்  துர்க்கை, முருகனுக்கும் பெண்கள்  விரதம் இருப்பதுண்டு. செவ்வாய்க் கிழமைகளில் இராகு காலத்தில் மாலை 3 மணியில் இருந்து  4:30 மணிவரை உள்ள ராகு காலத்தில்  அம்பிகையை வழிபடுவது  விசேஷமாகும். 

     இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால்,விவாகமான பெண்கள் தம் கணவனின் குறையாத அன்பைப் பெற முடியும். மாங்கல்யம் நிலைத்து நிற்பதுடன்,  மணமாகாத பெண்கள்  நல்ல கணவன் கிடைக்கவும், விவாகத் தடைகள் நீங்கவும் வழி செய்யும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.