Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • திருப்பம் தரும் திருமலை

    திருப்பதி திருமலை ஏழுமலையான், பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பவர். ஏழுமலையான் குறித்த புராணங்கள், சாத்திரங்கள், தல புராணங்கள், மற்றும் அவதார மகிமையை எடுத்துரைக்கும் பக்திப் பாடல்கள் ஆகியவை இதற்குச் சாட்சியாக விளங்கு கின்றன. திருப்பதி வேங்கடா சலபதியின் கோவிலின் செல்வச் செழிப்பையும் அதன் பிரபலத்தை எடுத்துக்காட்டுகின்றன. திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம். புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது ,பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும்,செய்வினை தோஷம், வறுமை போக்கும். சந்ததி விருத்தி உண்டாகும்.என்கிறது.பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமம் மாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது, இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது. திருப்பதி திருமலை மகான்கள் நிறைந்த பூமி என்பதால்,அருளாசி நிறைந்து காணப்படுகிறது .திருப்பதி சென்றால் திருப்பம் என்பது போல , திருப்பதி சென்று வந்ததால் என் கடன் பிரச்சனை தீரும். துக்கம் சந்தோசமாய் மாறும் ,சோதனைகளை ,சாதனைகள் ஆக்கும் .குல தெய்வம் இல்லாத வர்கள் திருப்தி பெருமாள் தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள் .

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 19

    அரும்பொருளகத்துக்குள் உறைந்து கிடந்த காலம், சில சிலைகள் வழியாக உயிர்கொண்டு எழுவது போலிருந்தது எங்களுக்கு. நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தாலும் இந்த மண்ணை விட்டுச் செல்ல மனிதர்களுக்கு மனமிருப்பதில்லை. ஏதோ ஒரு வடிவில் தன்னுடைய இருப்பை விட்டுச் செல்லவே ஒவ்வோர் உயிரும் ஏங்குகிறது போலும். இங்கே உள்ள கலைப் பொருட்களை வடித்த கைகள் இன்று இல்லை. அதனால் என்ன ? அவர்கள் உருவாக்கிய பொக்கிஷங்கள் இன்னும் பல நூற்றாண்டுகளைப் பார்க்கும்.

    அரும்பொருளகத்தின் கிழக்குப் புறக் காட்சிக்கூடத்திலிருந்து நாங்கள் சுற்றிப் பார்க்கத் தொடங்கினோம். கிடந்தகோல விஷ்ணுவைப் பார்க்குமுன், கண்ணாடிப் பெட்டிகளில் பலவிதமான உலோகத் திருமேனிகள் இருந்தன. எல்லாமே கம்போடியாவின் பல பகுதிகளில் இருந்து திரட்டப்பட்டு இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சில பெரிய திருமேனிகள் தனியான கண்ணாடிப் பெட்டியிலும், சிறிய திருமேனிகள் இரண்டு அடுக்குக் கண்ணாடிப் பெட்டியிலும் வைக்கப்பட்டிருந்தன.

    பெரும்பாலான உலோகத் திருமேனிகள் அளவிற் சிறியனவாகவும் நல்ல நிலையிலும் இருக்கின்றன. எஞ்சியவை, பெரிய திருமேனிகளின் உடைந்த பாகங்கள். இடக் கை மட்டும் ஒன்று கிடைத்துள்ளதை வைத்து அந்தத் திருமேனியின் மொத்த அளவை ஊகித்துப் பார்த்தால் அது பெரியதாக இருந்திருக்க வேண்டும். அவ்வளவு பெரிய உலோகச் சிலைகளை வார்த்து எடுக்கும் நுட்பம் பண்டைக் கம்போடியர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

    செப்புத் திருமேனிகள் எல்லாமே பலவிதமான வண்ண வேறுபாட்டில் உள்ளன. திருமேனிகளில் கலந்துள்ள உலோகங்களின் விகிதாச்சாரத்தைப் பொறுத்து அவற்றின் வண்ணம் வேறுபடுகிறது. வெண்கலம் என நாம் குறிப்பிடுவது பெரும்பகுதி செம்பு கலந்த கலப்பு உலோகத்தைத்தான். வெண்கலத் திருமேனியைப் பொதுவாக செப்புத் திருமேனி என்றுதான் அழைப்பர். தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம், பாதரசம், பியூட்டர் (தகரமும் காரீயமும் கலந்த கலவை) இரும்பு, காரீயம், பிஸ்மத் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தத் திருமேனிகள் வார்க்கப்பட்டுள்ளன.

    ஆக அடர்த்தியான வண்ணம் கொண்ட திருமேனியே ஆகத் தூய்மையான உலோகத்தில் வார்க்கப்பட்டது. அந்த அளவுக்குத் தூய்மை இல்லாத உலோகத்தால் வார்க்கப்பட்ட திருமேனிகள் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். வெண்கலப் பொருட்களைப் பார்த்தால் அவற்றைக் கையால் தொட்டு அது எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறது என்று பார்ப்பது கம்போடியர்களின் பழக்கம். அதிலிருந்து அந்தப் பொருளில் எவ்வளவு பாதரசம் கலந்திருக்கிறது என்று சொல்லிவிடுவார்களாம் நிபுணர்கள்.

    இங்குள்ள மணற்கல் சிற்பங்களுக்கும் உலோகத் திருமேனிகளுக்கும் அதிக ஒற்றுமை உண்டு. கல் சிற்பத்தில் என்னென்ன வேலைப்பாடு உள்ளதோ அதே வேலைப்பாடு உலோகத் திருமேனியிலும் உண்டு. அதேவேளையில், உலோகத்தில் மட்டுமே வார்க்கப்பட்ட திருமேனிகள் எனச் சில இங்கே உள்ளன. அவற்றைப் போன்ற மணற்கல் சிற்பங்கள் வேறு இல்லை. எடுத்துக்காட்டாக, 4 கால்கள், 16 கரங்களுடன் கூடிய  நடன ஹேவஜ்ரர், எட்டுக் கரங்களுடன் கூடிய மைத்ரேயர் திருமேனிகளைக் குறிப்பிடலாம்.

    ஹேவஜ்ரர் சிலை நமது நடராஜர் சிலையைப் போன்றது எனலாம். ஒற்றைக் காலில் ஒட்டுமொத்த எடையும் குவியும் வண்ணம் உள்ளது. சிற்பக் கலையில் மிகுந்த தேர்ச்சியுள்ளவர்களால் மட்டுமே அப்படிப்பட்ட திருமேனிகளை வடிக்க முடியும். சிலையின் எடையைத் துல்லியமாகக் கணித்து அதன் வடிவ அழகில் சமரசம் செய்துகொள்ளாமல் சமநிலை காண்பது எளிதான பணியல்ல. உள்ளங்காலும் உச்சந்தலையும் நேர்கோட்டில் வந்தால்தான் நடராஜ நர்த்தனம் திருத்தமாக இருக்கும்.

    இந்த வடிவச் சிக்கல் காரணமாகத்தான் நம் நாட்டு சிவாலயங்களில் கல் நடராஜர் சிற்பங்களை அதிகம் காண முடியாது. கருவறைச் சுற்றுச் சுவர்களில் நாம் காணும் எல்லா நடராஜர் சிற்பங்களும் கிட்டத்தட்ட சற்றே மேம்பட்ட, எடை பரவலாக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்களே.

    ஆடல் வல்லானின் இனித்தமுடன் எடுத்த பொற்பாதத்துக்கு, கீழிருந்து வரும் கல் முட்டுக் கொடுத்திருக்கும். அல்லது அம்பலவாணனின் இடுப்புவரை பின்புறக் கல்லோடு இணைந்தவாறிருக்கும். உலோகத் திருமேனிகளைப் போல், ஊன்றிய வலக்காலில் மட்டும் எல்லா எடையையும் தாங்கிய கல் நடராஜரை இதுவரை நான் கண்டதில்லை.

    தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழீஸ்வரம் உள்ளிட்ட எல்லா கல் நடராஜர் சிற்பங்களும் இப்படி இருப்பதைக் காணலாம். (இதைப் படிக்கும்போது, நம் கண்ணெதிரே, நமக்குத் தெரிந்து, நம்முடைய அலட்சியத்தால், மிகச் சில மாதங்களுக்கு முன் சிதைந்து இடிந்து விழுந்த மானம்பாடி சிவன் கோயிலில் இருந்த, கொள்ளை அழகுமிக்க நடராஜர் சிலையை நினைத்துப் பார்ப்போம்.)

    ஊர்த்துவ தாண்டவர் சிற்பமும் கிட்டத்தட்ட நடராஜர் சிற்பத்தைப் போன்றதுதான். பாண்டியர் காலக் கோயில்களில் எல்லாம் வீரபத்திரரோடு காணப்படும் ஊர்த்துவ தாண்டவர் சிலைகளும் முதுகு, இடக் காலுக்குப் பின்னால் மண்டபப் பெருந் தூண்களோடு சேர்த்துச் செதுக்கப்பட்டிருக்கும். கஜசம்ஹாரமூர்த்தி சிலை, கல்லில் இன்னும் கஷ்டம். உடலைத் திருகிக் கொண்டு நிற்பது போன்ற வடிவத்தில் சமநிலை காண்பது மிகக் கடினமானது. உலோகத் திருமேனிகளில் கூட, உரித்த கரித்தோல், திருவாசியுடன் இணைந்து எடையைப் பரவலாக்கி இருக்கும்.

    கம்போடிய அரும்பொருளகத்திலுள்ள முக்கியமான ஹேவஜ்ரர் சிலை, ஊன்றிய இடக்கால்(கள்) நுனி தவிர, இடுப்பிலிருந்து கால்களுக்கு நடுவே இறங்கும் அலங்காரத் துணியால் முட்டுக் கொடுக்கப்பட்டு வடிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், 16 கைகள், மூன்று நிலைகளாக உயரும் எட்டுத் தலைகள் உள்ள இந்தத் திருமேனி, கம்போடியச் சிற்பிகளின் கைவண்ணத்துக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

    ஹேவஜ்ரர், வஜ்ரயான பௌத்தப் பிரிவைச் சேர்ந்த போதிச்சத்துவர். நடராஜர் முயலகனை மிதித்து ஆடுவதுபோல் ஒன்றன் மேல் ஒன்றாய்க் கிடைமட்டமாக அண்ணாந்த நிலையில் அடுக்கப்பட்ட குழந்தைகள் மேல் இடக்காலை ஊன்றி ஆடுகிறார் ஹேவஜ்ரர். அந்தக் குழந்தைகளின் சடலம் மனிதர்களை காம, க்ரோத, மோக மாச்சர்யங்களுக்கு ஆட்படுத்தும் மாரனின் குறியீட்டு வடிவம். இரண்டு கால்களுக்குப் பின்னால் மேலும் இரண்டு கால்கள் இருப்பதை உற்றுப் பார்த்தால்தான் தெரியும்.

    முதல் அடுக்கில் மூன்று தலை. அடுத்த அடுக்கில் 4 தலை. உச்சியில் ஒன்று என எட்டுத் தலைகள். எல்லாத் தலைகளிலும் நெற்றிக் கண் உள்ளது. வலப்பக்கமுள்ள எட்டுக் கைகளிலும் விதவிதமான விலங்குகளை வைத்திருக்கிறார் ஹேவஜ்ரர். இடப்பக்கமுள்ள எட்டுக் கைகளில் அமர்ந்த கோலத்திலுள்ள பலவித மனிதர்களை உள்ளங்கையில் தாங்கியிருக்கிறார். இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று தேடிப் படிக்க வேண்டும். சினமிக்க காக்கும் கடவுள் எனச் சொல்லப்பட்டாலும் எல்லா முகங்களிலும் எல்லையற்ற கனிவும் கருணையும்தான் தெரிகிறது. நெடுங்காலம் மண்ணுக்குள் புதைந்துகிடந்த திருமேனி போலும். முகம் அரித்துப் போயிருக்கிறது. எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுக்காத சிலை. அங்கோர் பாணியைச் சார்ந்த 12ஆம் நூற்றாண்டுத் திருமேனி இந்த ஹேவஜ்ரர். நடுத்தர உயரம்தான் என்றாலும் நுணுக்கமான சிலை.

    புனோம்பென் அரும்பொருளகத்தில் அடுத்து நாம் கவனிக்க வேண்டியவை இரண்டு மைத்ரேயர் சிலைகள். ஒன்று ஏழாம் நூற்றாண்டு. மற்றது பத்தாம் நூற்றாண்டு. ஏழாம் நூற்றாண்டு மைத்ரேயர் 35 செ.மீ உயரம். நான்கு கைகள். முழங்கால் வரையுள்ள ஒரே ஒரு துண்டுமட்டும் அணிந்தவாறு காணப்படும் இந்த மைத்ரேயரின் முகத்தில் தென்படும் புன்னகை அபாரமானது. சிரிக்க எத்தனிக்கும்முன் எடுத்த படம் போன்ற நிலையில் பிரியத் தொடங்கும் உதடுகள். முன்கைகள் முழங்கைக்குப் பிறகு இல்லை. பின்னங்கைகள் இரண்டும் வித்தக முத்திரையில் உள்ளன. ஜடாபாரமாகக் கட்டிய முடிக்கு நடுவே ஒரு ஸ்தூபி போன்ற முடிச்சு உள்ளது.       

    பத்தாம் நூற்றாண்டு மைத்ரேயர், கொஞ்சம் உயரமானவர். 75 செ.மீ. மொத்தம் எட்டுக் கைகள். முன் கை இரண்டும் தான முத்திரையில் உள்ளன. எஞ்சிய ஆறு கைகளும் வித்தக முத்திரையில் உள்ளன. இவரது ஆடை கொஞ்சம் வேலைப்பாடுகளுடன் உள்ளது. இலேசாக முறுக்கிய, அழகான மீசையுண்டு இவருக்கு. மெல்லிய தாடியும் உண்டு. வடிந்த காதுகள். நான்கு நிலைகளாக மகுடம்போல் தலைமுடி கட்டப்பட்டிருக்கிறது.

     

    இந்த இரண்டு முக்கியமான திருமேனிகளைத் தவிர, உலோகப் பிரிவில், தலையும் கால்களும் இல்லாத ஓர் ஆண் தெய்வத்தின் உடல் மட்டும் கொண்ட திருமேனி ஒன்று உள்ளது. வலப்பக்கக் கால் முழுவதுமாக இல்லை. இடக்கால் முழங்கால் வரை உள்ளது. இடக் கை இல்லை. வலக்கை முழங்கை வரை உள்ளது. 11ஆம் நூற்றாண்டுத் திருமேனி. அரும்பொருளகச் சேகரிப்பு அறையிலிருந்து 2000ஆம் ஆண்டுதான் வெளியே காட்சிக்குக் கொண்டு வரப்பட்டதாம். மடிப்பு மடிப்பாக உள்ள ஆடை இடைக்குக் கீழ் மட்டும் உள்ளது. திறந்த மார்பில் அணிகலன் ஏதும் இல்லை. 11ஆம் நூற்றாண்டின் பாப்புவான் பாணித் திருமேனி என்கிறது அரும்பொருளகக் கையேடு.

    சுண்டு விரல்மட்டும் நீண்ட இடக் கரம் ஒன்று உள்ளது ஓரிடத்தில். கட்டை விரல் உள்ளிட்ட அத்தனை விரல்களிலும் மோதிரங்கள் உள்ளன. உள்ளீடற்ற கை. எந்தத் திருமேனியினுடையது என்பதை ஊகிக்க முடியவில்லை. தாவும் நிலையிலுள்ள அனுமன், இரண்டு கை, நான்கு கைகளோடு அமர்ந்த நிலையிலுள்ள கணேசர் விக்கிரகங்கள் ஐந்தாறு உள்ளன. ஒரு விநாயகர் பின்னங்கைகளில் சங்கும் சக்கரமும் ஏந்தியிருக்கிறார். 13ஆம் நூற்றாண்டுத் தும்பிக்கையாழ்வார் !

    ஆவுடையார் மீது நிற்கும் நிலையில் மூன்று திருமேனிகள் உள்ளன. சிவா, விஷ்ணு, லட்சுமி என்கிறது கையேடு. விஷ்ணுவுக்கு சங்கு, சக்கரம் ஏந்திய நான்கு கரங்கள். சிவனுக்கு இரண்டு கரங்கள். ஒன்றில் திரிசூலம். மற்றொன்று என்னவென்று அடையாளங்காண முடியவில்லை. இதே போல் பௌத்தத் திருமேனிகள் மூன்று உள்ளன ஒரே பீடத்தில். நடுவே நாகபுத்தர். பாம்பணை மேல் பத்மபீடத்தில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலம். புத்தருக்கு வலப்பக்கத்தில் லோகேஸ்வரர் நான்கு கரங்களோடு. இடப்பக்கத்தில் பிரஜ்னபரம்பிதா. இவர் நமக்குப் புதியவர். மஹாயான பௌத்தத்தில், முழுமை பெற்ற விவேகி என்ற பொருளாம் இந்தப் பெண் தெய்வத்துக்கு. இந்தத் திருமேனி வலக்கையில் சுவடிக்கட்டும் இடக் கையில் தாமரை மொக்கும் வைத்திருக்கிறது. வாக்தேவி ??? 13ஆம் நூற்றாண்டுத் திருமேனி இது. வித்தியாசமானது நமக்கு. தனித் தனியாகச் செய்து பொதுவான பீடத்தில் அமர்த்தியுள்ளனர் இந்தத் திருமேனிகளை.

    இந்து ஆலயங்களில் பயன்படும் திருவாசியைப் போன்ற வடிவத்தில் ஒன்று இருந்தது. மகர தோரணத்தின் முடிவில் நாக முகப்புடன் இருந்தது அது. இத்துடன் சில புத்தர் சிலைகள், கருடன், சிங்கச் சிலைகள் என நிறைவாக இருந்தது உலோகப் பகுதி.

     

     பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • வீட்டில் பணம் கொழிக்க, கருப்பு மஞ்சள்….

    கருப்பு மஞ்சள் நர்மதா நதிக்கரையில் மற்றும் மத்திய பிரதேசத்தில் கிடைக்கும் அற்புதமான தாந்த்ரீக மஞ்சள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட ஒன்று. கிடைப்பது கொஞ்சம் அரிது. இதை தாந்த்ரீக வழிமுறைகளில் பல விஷயங்களுக்கு உபயோகப்படுத்துவதுண்டு. மேலும், இதை காளியின் அம்சம் கொண்டதாக கூறுவது வழக்கம். மேலும் இதை காளி மற்றும் பைரவர் உபாசணைக்கும் பயன்படுத்தலாம். இதை வைத்திருப்போருக்கு செய்வினை, எதிர் மறை சக்திகளின் தீண்டல் அறவே இருக்காது. கோர்ட்டுகளில் வழக்குகளை சந்தித்து வருவோருக்கு மிக முக்கியமான பாதுகாவலாகவும் வெற்றியை தேடி தரும் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. வீட்டில் சதா சண்டை சச்சரவு தம்பதிகளுக்குள் நிகழ்ந்து வந்தால், இருவரும் இதை முகத்தில் அரைத்து தேய்த்து வந்தால், சச்சரவுகள் தீரும். முத்தாய்ப்பாக இதை மேலே கொடுக்கும் எதற்கும் அல்லாமல் பலர் இதை தன வசியத்திற்காகவே உபயோகப்படுத்துகின்றனர். பணத்தை வசீகரிக்கும் தன்மையை உடைய இதை வட மாநிலங்களில் தினமும் நெற்றியில் இட்டு செல்வர்-பண தேவைகளுக்கு செல்லும் பொழுது. மேலும் இதை ஆட்காட்டி விரலில் ஊசியால் சிறிது குத்தி குருதி எடுத்து அத்துடன் குழைத்து நெற்றியில் இட எப்பேர்ப்பட்ட வராத பணமும் வந்து சேரும் என்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ராகு,குரு ஜாதகத்தில் அல்லது நடப்பு திசையில் அல்லது கோட்சாரத்தில் பலவீனமாக இருந்தால் இதை தினசரி நெற்றியில் இட்டு வர, மற்றும் தன்னுடன் வைத்து கொண்டு வெளியே செல்ல பலவீனங்கள் குறைந்து நன்மைகள் பெருகும் என்பதாக கூறப்படுகிறது.

  • குலசேகரன்பட்டினம் தசரா விழா … ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி விரதமிருந்து வரும் பக்தர்கள் காளி உள்ளிட்ட வேடமிட்டு காணிக்கை வசூலித்தனர். பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 3ம் நாள் திருவிழாவில் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, சமயசொற்பொழிவு, திருக்குறள் அவதாரம் கேள்வி பதில் நிகழ்ச்சி, மெல்லிசை விருந்து நடந்தது. இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.

  • சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா…

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தில் இரண்டாவது நாள் சின்ன சேஷ வாகனத்தில் வேணு கோபால சுவாமி அலங்காரத்தில் தரிசனம் கொடுத்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று காலை 5 தலைகளுடன் கூடிய சிறய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வேணு கோபால சுவாமி அலங்காரத்தில் நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலீத்தார். பெரிய சேஷ வாகனத்தை ஆதிசேஷனாகவும் சிறிய சேஷ வாகனத்தை வாசுகியாகவும் நினைத்து சுவாமி வேணு கோபால சுவாமி அலங்காரத்தில் வீதிஉலா வந்ததை அயிரகணக்காண பக்தர்கள் பக்தி மனம் உருக கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி வீதிஉலாவில் கோயில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் தலைமையில் ஜீடர்களின் சீடர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடியபடி வந்தனர். இதில் பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்த பக்தர்கள் கோலட்டம் ஆடியும் சுவாமியின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடம் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளில் சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். அன்னம் பால், தண்ணீரை வேறு செய்வது போல் பக்தர்களின் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை சுவாமி தனது பக்தர்களுக்கு அருள் புரிவதாக ஐதீகம்.

  • திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.8.39 கோடியில் தங்க காசுமாலை

    திருப்பதி ஏழுமலையான் ஆலய பிரம்மோற்சவ பெருவிழா – கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சமர்பித்தார். பின்னர் தேவஸ்தான சார்பில் அச்சிடப்பட்ட 2018 ஆண்டுக்காண கலெண்டர் மற்றும் டைரிகளை அவர் வெளியிட்டார். இதனைதொடர்ந்து, விஜயவாடாவை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியரான ராமலிங்கராஜூ, 8.39 கோடி மதிப்பிலான தங்க காசு மாலையை சந்திரபாபுநாயுடு முன்னிலையில் காணிக்கையாக வழங்கினர்.

  • புரட்டாசி சனிக்கிழமைகளில் கடன் கொடுக்கலாமா?

    புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார். எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும். சனிக்கிழமை அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது. கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார். ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம்.

  • திருமலை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் பலவித வாகனங்களில் தாயார்களுடன் உற்சவமூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறும் விதமாக, மீன லக்னத்தில் பிரம்மோற்சவம் கொடி ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி பிரம்மாண்ட நாயகனின் பிரம்மோற்சவத்திற்காக புதிய மஞ்சள் துணியில் கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடியை நான்கு மாடவீதியில் உற்சவ மூர்த்திகளுடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி முன்னிலையில் பட்டாட்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பிரம்மோற்சவம் முன்னிட்டு மலைப்பாதைகளில் 24 மணி நேரமும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது. மேலும் இன்று தொடங்கியுள்ள பிரம்மோற்சவம் அக்.1-ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவம் சமயத்தில் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் 4 ஆயிரம் அறைகள் வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. பிரம்மோற்சவத்துக்காக தேவஸ்தானம் ரூ. 9.5 கோடி செலவு செய்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள் வாகன சேவையுடன் ஏழுமலையானை விரைவாக தரிசனம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு பழனியில் இருந்து மலர்கள்…

    பழனியில் இருந்து திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவுக்கு புஷ்ப கைங்கர்ய சபா மூலம் மலர்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. முதல் நாளன்று சம்பங்கி, தாமரை, அரளி, மருகு, மரிக்கொழுந்து, செண்டுமல்லி, பட்டுப்பூ, துளசி, தாமரை, வாடாமல்லி என பலவகையான மலர்கள் சுமார் ஆயிரம் கிலோ அனுப்பப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்துக்கு முதல்நாளன்று இங்கிருந்து மலர்கள் அனுப்பப்படும். பிரம்மோற்சவம் நிறைவு பெறும் வரை பூக்கள் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் கிலோ வரையில் அனுப்பப்படும்.

  • குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா துவங்கியது….

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவையொட்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து காணிக்கை வசூலித்து கோயிலில் வழங்குவர். இந்தாண்டுக்கான தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் காலை 8 முதல் 9 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. மாலை 3 மணி முதல் 6 மணி வரை சமயசொற்பொழிவுகளும், இரவு 8 மணிக்கு கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், இரவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. 23ம் தேதி இரவு ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 24ம் தேதி இரவு மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 25ம் தேதி இரவு காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்திலும், 26ம் தேதி இரவு சிம்மவாகனத்தில் மகிசா சுரமர்த்தினி திருக்கோலத்திலும் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 27ம் தேதி மாலை 4.30 மணிக்கு மகிசாசூரன் வீதியுலாவும், இரவு 9 மணிக்கு பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலாவும், 28ம் தேதி இரவு 9 மணிக்கு கமலவாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்திலும், 29ம் தேதி இரவு அன்னவாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் அம்மன் வீதியுலா நடக்கிறது. 30ம் தேதி காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணி மற்றும் அதிகாலை 3.30 மணி வரை கடற்கரை வளாகத்தில் சிறப்பு பக்தி இன்னிசை, இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சிம்மவாகனத்தில் அம்மன் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிசா சூரசம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.