Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • யம பயம் நீக்கும் பைரவர் வழிபாடு

     

    சிவபெருமானின்  அனேக  திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. ஒவ்வொரு மாதமும் தேய்பிறைக்கு பின் வரும் அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு.

    சிவன் கோவில்களில் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவரைக் காணலாம். பைரவரின் திருவுருவத்தின் விசேஷம் என்னவென்றால் அவரது உருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளதாக  ஐதீகம். ஜாதக  ரீதியாக பார்க்கும்  போது  பைரவரின் தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

    பைரவர் பாம்பை தன்னுடைய பூணுலாகவும்,  சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம் முதலியவற்றை தன்னுடைய கரங்களில் ஏந்தியும்  காட்சி தருகிறார்.  பைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது மிகவும்   விசேஷமாக கூறப்படுகிறது.

    ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, எள் கலந்த சாதமும் இனிப்புப் பண்டங்களும் சமர்ப்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும் என்கிறது சாஸ்திரம்.

     கிழமைகளும் பைரவர் பூஜைகளும்

     ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட திருமணத்தடை நீங்கும். வழக்கில் வெற்றி கிட்டும். கண்டச் சனியின் துன்பம் நீங்க , திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி, புனுகு சாற்றி, பாகற்காய் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சனை செய்து  வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும்.

    புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு  தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம். வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் இல்லத்தில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும். சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்க, சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

    இந்த  நாட்கள் என்று இல்லாமல் எல்லா நாட்களிலும் , சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. பைரவர்,  சனி பகவானின்  குரு என்று சொல்லப்படுவதால் ,பைரவரை வழிபடுபவருக்கு சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும். மேலும் பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதோடு ,யமபயம் நீங்கும்.

     

  • திருப்பதியில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு வசதி…

    வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளும் என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது. 65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் சில நிபந்தனைகளுடன்.
    1) ஆதார் அட்டை அவசியம்.
    2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்
    3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.
    4) .காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.
    5) .தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு.
    6.) உதவி செய்ய உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதுர் அவசியம்.
    7) .காலை உணவு பால் இலவசம்.
    8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.
    9) ஒருமுறை சென்றவந்த பிறகு
    3 மாத கழித்த பின் அனுமதி அனுமதிக்கப்படுவர்.
    10) இவை அனைத்தும் இலவச சேவையாகும்.

  • விரதங்கள் எதற்காக, யாருக்காக ?

     

    விரதங்கள் நம்மை ஒரு கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கு உட்படுத்த ஏற்படுத்தப்பட்டது. ஆனால், எந்த விரதத்தை ,எந்த தெய்வத்திற்காக ,எதற்காக  அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரியாமல் செய்தால் எந்த பலனும் ஏற்படாது. விரதங்களும் அவற்றின் பலன்களைப் பற்றியும் காணலாம்.

               

    சோமவார விரதம்

    கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் கடைப்பிடிக்கப்படும் சோமவார விரதம் சிவபெருமானைக் குறித்து அனுஷ்டிப்பதாகும். காலையில் உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல் ,இரவு மட்டும் சாப்பிட வேண்டும். அப்படி முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம். தகுந்த வாழ்க்கை துணை வேண்டுபவர்களும், திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை கிடைக்கவும் இந்த விரதம் இருப்பர்.

     

    பிரதோஷம்

    தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகளில் பிரதோஷ விரதம் சிவபெருமான், நந்திதேவரின் அருள் வேண்டி இருப்பது.

    சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கும் போது, சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து இந்த விரதத்தை ஆரம்பிக்கலாம். வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டிய இந்த விரதத்தின் போது, பகலில் எதையும் சாப்பிடாமல்,மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று பிரதோஷ  வழிபாடு முடிந்த பிறகு, சாப்பிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதினால்  கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், ஆகியவை நீங்கும்.

     

    சித்ரா பவுர்ணமி விரதம்

     

    சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில், சித்திரகுப்தருக்காக இருப்பது.காலையில் பிதுர் தர்ப்பணம் செய்து விட்டு, இரவில் மட்டும் சாப்பிட வேண்டும்.இதனால் மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்தலாம் .

     

    தை அமாவாசை விரதம்

     

    சிவபெருமானுக்காக இருக்கப்படும் தை அமாவாசையில் ,காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதால், முன்னோர்களுக்கு முக்தி கிடைப்பதுடன், குடும்பமும்  அபிவிருத்தி அடையும்.

    கந்தசஷ்டி விரதம்

    ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள் சேவற்கொடியோன் சுப்பிரமணியருக்காக இருக்கப்படும் விரதம். முதல் 5 நாட்கள் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு ,கடைசிநாள் முழுமையாக பட்டினி இருந்து, மாலை சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம்.

     

                                                                                      

    மங்களவார விரதம்

    தை மாதம் முதல் செவ்வாயில்  துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் பைரவர் மற்றும் வீரபத்திரருக்காக அனுஷ்டிக்கும் விரதம்.பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு இருக்கும் இந்த விரதத்தால், பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்கும்.

    தைப்பூச விரதம்

    தை மாத பூச நட்சத்திரத்தில் சிவபெருமானுக்காக இருக்கப்படும் விரதம். காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்ககூடிய இந்த விரதத்தால்,திருமண யோகம் கூடி வரும்.

     

    கேதார விரதம்

    புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7 நாட்கள் தான் விரததிற்குரிய நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும் விரதம் இருக்கலாம்.

    ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொண்டு, கேதாரநாதருக்காக  முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம்  இருந்தால்,தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர் என்பது நம்பிக்கை . 

     

                                                                                          

    கிருத்திகை விரதம்

     கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில்  சுப்பிரமணியருக்காக  அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால், 16 வகையான செல்வத்தைப் பெறலாம்.

    நவராத்திரி விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை மகாசக்தி பார்வதிதேவியை ,முதல் 8 நாள் பழ உணவு சாப்பிட்டு, 9ம் நாளான மகாநவமி அன்று முழுமையாக சாப்பிடாமல் விரதம் இருந்தால், கல்வி, செல்வம், ஆற்றல் ஆகியவற்றை அடையலாம்.

     

    இந்த விரதங்கள் புண்ணியங்களை பெற்றுத்தருவதுடன் நமது உடல் மற்றும் மனதையும் மேம்படுத்துகிறது.

  • திருப்பதியில் நிறைவு பெற்ற பிரம்மோற்சவ விழா…

    சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடந்திர பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் 4 மாட வீதிகளிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் கருட சேவை, தேர் திருவிழா, சக்கர ஸ்நானம் உள்ளிட்டவைகளை காண ஆயிக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரண்டனர். நிறைவு நாளான இன்று காலை கோயில் குளத்தில் 1 கோடி லிட்டர் தண்ணீரில் சக்கர ஸ்நான நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, காலை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்ப சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வாரை ஊர்வலமாக கோயிலில் இருந்து குளம் வரை கொண்டு வந்தனர். பின்னர் வராக சுவாமி கோயில் அருகே உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சக்கரத்தாழ்வாரின் சக்கர ஸ்நான புனித நீராடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு, தலைமை பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா, இறகு பந்து வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் அர்ச்சகர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

  • திருப்பதி போறீங்களா… உங்களுக்கான முக்கிய தகவல்…

    திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருமலை கோயிலில் சுவாமி தரிசனம் மற்றும் தங்கும் விடுதி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் 24 மணி நேரமும் இலவசமாக தெரிந்து கொள்ளலாம். வெளியூர் மற்றும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு செய்து தரப்பட்ட வசதிகள், தங்கும் விடுதியில் உள்ள அறைகள் காலியாக உள்ளதா அல்லது நிறைம்பி வழிகின்றதா? தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறை எங்கு உள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ள இந்த தொலை பேசி எண்கள் உதவும்…
    மூல் மட் மின் தொலைபேசி எண் : 0877-2277499.
    புஷ்பா மாண்டபம் தொலைபேசி எண்: 0877-2277301.
    ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் தொலைபேசி எண்: 0877-2277317.
    உத்ததி மட் (திருப்பதி) தொலைபேசி எண் 0877-2225187.
    ஸ்ரீ திருமல காஷி மட் தொலைபேசி எண் 0877-2277316.
    ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட் தொலைபேசி எண் 0877-2277302.
    ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை தொலைபேசி எண்: 0877-2277282.
    ஸ்ரீ காஞ்சி காமகோடி மட் தொலைபேசி எண்: 0877-2277370.
    ஸ்ரீ புஷ்பகிரி மட் தொலைபேசி எண்-0877-2277419.
    ஸ்ரீ உட்டாரடி மட் தொலைபேசி எண்-0877-2277397.
    உடுப்பி மட் தொலைபேசி எண்-0877-2277305.
    ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆத்வான் ஆசிரமம் தொலைபேசி எண்: 0877-2277826.
    ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் தொலைபேசி எண்: 0877-2270597,2277383.
    ஸ்ரீ திருப்பதி ஸ்ரீமன்னாரயன ராமானுஜா
    ஜீயர் மட் தொலைபேசி எண்: 0877-2277301.
    ஸ்ரீ சிருங்கரி சரத மடம் தொலைபேசி எண்: 0877-2277269,2279435.
    ஸ்ரீ அஹோபீதா மட் தொலைபேசி எண் 0877-2279440.
    ஸ்ரீ திருமல காஷி மத் தொலைபேசி: 222 77316
    உடிபி மட் தொலைபேசி எண்: 0877 222 77305
    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி ராமனுஜீயர் மட் தொலைபேசி எண்: 0877 222 77301)
    ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் தொலைபேசி எண் 0877 222 77370)
    ஸ்ரீ வல்லபச்சரிய மடம் தொலைபேசி: 222 77317
    மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் தொலைபேசி எண்: 0877 222 77302
    ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி தொலைபேசி எண் : 0877 222 77436
    ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி ஆதித்யான் ஆஷ்ரம் தொலைபேசி எண் 0877 222 77826
    ஸ்ரீ வைகநாத ஆசிரமம் தொலைபேசி எண்: 0877 222 77282
    ஸ்ரீ அஹோபில மட் பட் தொலைபேசி எண்: 0877-2279440
    ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் தொலைபேசி எண்: 0877 222 77269
    ஸ்ரீ வைசராஜர் மடம்
    மோதிலால் பன்சிலால் தர்மசாலா தொலைபேசி எண்: 0877 222 77445
    ஹோட்டல் நரிலமா சௌல்ரி தொலைபேசி எண்: 0877 222 77784
    ஸ்ரீ சீனிவாச சொல்ரி தொலைபேசி எண்: 0877 222 77883
    ஸ்ரீ ஹதிராம்ஜி மட் தொலைபேசி எண் : 0877 222 77240
    கர்நாடகா விருந்தினர் மாளிகை தொலைபேசி எண் 0877 222 77238
    தக்ஷிணா இந்தியா ஆர்யா வியா கபு முனிரட்ணம் அறநெறிகள் தொலைபேசி எண்: 0877 222 77245
    ஸ்ரீ சிருங்கேரி சங்கர நீலம் தொலைபேசி எண்: 0877 222 79435
    ஸ்ரீ ஸ்வாமி ஹதிராஜ் முட்டம் தொலைபேசி எண்: 0877-2220015

  • திருப்பதி போறீங்களா… உங்களுக்கான முக்கிய தகவல்…

    திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருமலை கோயிலில் சுவாமி தரிசனம் மற்றும் தங்கும் விடுதி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் 24 மணி நேரமும் இலவசமாக தெரிந்து கொள்ளலாம். வெளியூர் மற்றும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு செய்து தரப்பட்ட வசதிகள், தங்கும் விடுதியில் உள்ள அறைகள் காலியாக உள்ளதா அல்லது நிறைம்பி வழிகின்றதா? தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறை எங்கு உள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ள இந்த தொலை பேசி எண்கள் உதவும்…
    மூல் மட் மின் தொலைபேசி எண் : 0877-2277499.
    புஷ்பா மாண்டபம் தொலைபேசி எண்: 0877-2277301.
    ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் தொலைபேசி எண்: 0877-2277317.
    உத்ததி மட் (திருப்பதி) தொலைபேசி எண் 0877-2225187.
    ஸ்ரீ திருமல காஷி மட் தொலைபேசி எண் 0877-2277316.
    ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட் தொலைபேசி எண் 0877-2277302.
    ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை தொலைபேசி எண்: 0877-2277282.
    ஸ்ரீ காஞ்சி காமகோடி மட் தொலைபேசி எண்: 0877-2277370.
    ஸ்ரீ புஷ்பகிரி மட் தொலைபேசி எண்-0877-2277419.
    ஸ்ரீ உட்டாரடி மட் தொலைபேசி எண்-0877-2277397.
    உடுப்பி மட் தொலைபேசி எண்-0877-2277305.
    ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆத்வான் ஆசிரமம் தொலைபேசி எண்: 0877-2277826.
    ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் தொலைபேசி எண்: 0877-2270597,2277383.
    ஸ்ரீ திருப்பதி ஸ்ரீமன்னாரயன ராமானுஜா
    ஜீயர் மட் தொலைபேசி எண்: 0877-2277301.
    ஸ்ரீ சிருங்கரி சரத மடம் தொலைபேசி எண்: 0877-2277269,2279435.
    ஸ்ரீ அஹோபீதா மட் தொலைபேசி எண் 0877-2279440.
    ஸ்ரீ திருமல காஷி மத் தொலைபேசி: 222 77316
    உடிபி மட் தொலைபேசி எண்: 0877 222 77305
    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி ராமனுஜீயர் மட் தொலைபேசி எண்: 0877 222 77301)
    ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் தொலைபேசி எண் 0877 222 77370)
    ஸ்ரீ வல்லபச்சரிய மடம் தொலைபேசி: 222 77317
    மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் தொலைபேசி எண்: 0877 222 77302
    ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி தொலைபேசி எண் : 0877 222 77436
    ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி ஆதித்யான் ஆஷ்ரம் தொலைபேசி எண் 0877 222 77826
    ஸ்ரீ வைகநாத ஆசிரமம் தொலைபேசி எண்: 0877 222 77282
    ஸ்ரீ அஹோபில மட் பட் தொலைபேசி எண்: 0877-2279440
    ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் தொலைபேசி எண்: 0877 222 77269
    ஸ்ரீ வைசராஜர் மடம்
    மோதிலால் பன்சிலால் தர்மசாலா தொலைபேசி எண்: 0877 222 77445
    ஹோட்டல் நரிலமா சௌல்ரி தொலைபேசி எண்: 0877 222 77784
    ஸ்ரீ சீனிவாச சொல்ரி தொலைபேசி எண்: 0877 222 77883
    ஸ்ரீ ஹதிராம்ஜி மட் தொலைபேசி எண் : 0877 222 77240
    கர்நாடகா விருந்தினர் மாளிகை தொலைபேசி எண் 0877 222 77238
    தக்ஷிணா இந்தியா ஆர்யா வியா கபு முனிரட்ணம் அறநெறிகள் தொலைபேசி எண்: 0877 222 77245
    ஸ்ரீ சிருங்கேரி சங்கர நீலம் தொலைபேசி எண்: 0877 222 79435
    ஸ்ரீ ஸ்வாமி ஹதிராஜ் முட்டம் தொலைபேசி எண்: 0877-2220015

  • மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 15 சபரிமலை நடை திறப்பு….

    சபரிமலை, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சபரிமலை நடை திறப்பது தமிழக காலண்டர் படி ஒரு நாள் முன்னதாக திறக்கிறது. இது தமிழக- கேரள பஞ்சாங்க கணிப்பில் ஏற்பட்ட சிறு வித்தியாசத்தால் ஏற்பட்டுள்ளதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சபரிமலை நடை எல்லா தமிழ் மாதத்தின் கடைசி நாளில் மாலை ஐந்து மணிக்கு திறந்து அடுத்த தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டில் ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் ஒரு நாள் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. தமிழக காலண்டர் படி ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி அதாவது அக்டோபர் 18 ஆகும், அன்று தீபாவளி. ஆனால் கேரள காலண்டர் படி ஐப்பசி ஒன்றாம் தேதி 17-ம் தேதி ஆகும். இதனால் சபரிமலை நடை அக்டோபர், 16-ம் தேதி மாலையில் திறந்து 17 முதல் 21 வரை பூஜைகள் நடைபெறும்.அதுபோல கார்த்திகை ஒன்றாம் தமிழக காலண்டர்களில் நவம்பர் 17-ல் வருகிறது. ஆனால் கேரளாவில் நவம்பர் 16-ம் தேதி கார்த்திகை ஒன்றாம் தேதியாகும். இதனால் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நவம்பர் 15-ம் தேதி மாலை திறக்கும்.

  • திருமலையில் தேரில் மலையப்பர் பவனி …

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த புரட்டாசி முதல் சனிக்கிழமையான 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தில் தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இந்நிலையில், 8ம் நாளான இன்று காலை தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தில் மலையப்பர் பவனி வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் 4 மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு தேரின் மீது உப்பு, மிளகு போன்றவைகளை தெளித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு குதிரை வாகனத்தில் உற்சவர் பவனி வந்து அருள் பாலித்தார்.

  • அனைவருக்கும் சரஸ்வதி பூஜை , ஆயுத பூஜை வாழ்த்துக்கள்….

    மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி மந்திரம் இதோ ……
    ஓம்ஹிரீம் ஐம்ஹிரீம் சரஸ்வத்யை நமஹ.

  • கோயில்களில் 6 கால பூஜைகள் நேரம்:

    நாம் கோவிலுக்கு செல்லும் போது நேரம் பார்க்காமல் சென்று விடுவோம். ஆனால் அங்கு சென்றப்பின் பார்த்தால் சன்னிதானம் நடைச் சாத்தியிருக்கும். நாம் காத்திருக்க வேண்டியிருக்கும். எனவே எப்போது நடை திறந்திருக்கும்,  சன்னிதானத்தில் தெய்வத்திற்கு பூஜைகள் செய்யும் நேரம் எப்போது என்றுப் பார்த்து சென்றால் சிறந்தது. ஒரு நாளில் ஆறு கால பூஜைகள் நடைபெறும் எந்த நேரத்தில் அந்த பூஜைகள் நடைபெறும் என்று தெரிந்துக்கொண்டு நாம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம் ……..
    ஆறு கால பூஜைகள் நடைபெறும் நேரம்:
    1.உஷக்கால பூஜை-கலையில்  ஆறுமணிக்கு….
    2.காலசந்தி பூஜை -காலையில் பத்து மணி முப்பது நிமிடத்திற்கு …..
    3.உச்சிக்கால பூஜை -மதியம் பன்னிரெண்டு மணிக்கு …
    4.சாயங்கால பூஜை -மாலையில் ஐந்து மணிக்கு …..
    5.இரண்டாங்கால பூஜை -இரவு எட்டுமணிக்கு ….
    6.அர்த்தஜாம பூஜை -இரவு ஒன்பதுமணிக்கு ….
    குறிப்பிட்ட நேரத்திற்கு அரைமணிநேரம் முன்பாகவே நாம் சன்னிதானம் சென்றுவிட்டால் சிறப்பான தரிசனம் கிடைக்கும்.