திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற செப்டம்பர் 23-ந் தேதி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. பிரம்மோற்சவ விழாவை ஒட்டி அக்டோபர் 1ந் தேதி வரை 16 வாகனங்களில் மலையப்பசாமி மாடவீதிகளில் பவனி வருகிறார். திருப்பதி ஏழுமலையான்கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 23-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி செப்டம்பர் 19-ந் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனமும், 22-ந் தேதி அங்குரார்ப்பணமும் நடக்கிறது. அதனை தொடர்ந்து 23-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், இரவு 9 மணி முதல் 11 மணி வரையும் மொத்தம் 16 வாகனங்களில் மலையப்பசாமி மாடவீதிகளில் உலா வருகிறார். 23-ந் தேதி மாலை துவாஜரோகணம் எனும் கொடியேற்றத்தை தொடர்ந்து இரவு 9 மணி முதல் 11 மணி வரை பெரியசேஷ வாகன வீதி உலா நடக்கிறது. 24-ந் தேதி காலை 9 மணிக்கு சின்னசேஷ வாகனத்திலும், இரவு 9 மணிக்கு அம்ச வாகனத்திலும், 25-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும், 26-ந் தேதி காலை 9 மணிக்கு கல்ப விருட்ச வாகனத்திலும், இரவு 9 மணிக்கு சர்வபூபால வாகனத்திலும் வீதிஉலா நடக்கிறது. 27-ந் தேதி காலை மோகினி அவதாரத்திலும், இரவு 7.30 மணிக்கு கருடவாகனத்திலும் மலையப்பசாமி வீதி உலா வருகிறார். 28-ந் தேதி காலை அனுமந்த வாகனத்திலும், மாலை 5 மணிக்கு ஸ்வர்ண ரதோட்சவத்திலும், இரவு 9 மணிக்கு கஜவாகன வீதி உலாவும் நடக்கிறது. 29-ந் தேதி காலை 9 மணிக்கு சூரியபிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. அக்டோபர் 1-ந் தேதி காலை 6 மணிக்கு சக்ரஸ்நானம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு துவாஜரோகனம் நடக்கிறது.
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
சபரிமலை நடை செப்டம்பர் 16 திறப்பு…
புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை செப்டம்மபர் 16-ம் தேதி திறக்கப்படுகிறது. 21 வரை நடை திறந்திருக்கும். 16-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து விளக்கு ஏற்றுவார். தொடர்ந்து ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட திருநீறு பிரசாதமாக வழங்கப்படும். இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும். 17-ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு நடை திறந்ததும் வழக்கமான பூஜைகள் நடைபெறும். எல்லா நாட்களிலும் காலை 5.30 முதல் 11.30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை போன்ற பூஜைகளுடன் களபாபிஷேகம், சகஸ்ரகலசம் போன்ற பூஜைகளும் நடைபெறும். 17 முதல் 21-ம் தேதி வரை எல்லா நாட்களிலும் இரவு 7.00 மணிக்கு படிபூஜை நடைபெறும். 21-ம் தேதி இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
-
ஏழுமலையான் ரகசியங்கள்…
திருப்பதி ஏழுமலையான் சிலையில் பல சுவாரசியங்களும், ரகசியங்களும் அடங்கி உள்ளன. திருப்பதி ஏழுமலையான் சிலை 250 கோடி வருடம் வயதான “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறையால் உருவானதாகும். 3,000 அடி உயரத்தில் உள்ள திருமலையில் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செகிறார்கள் ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்குமாம். அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது. பொதுவாக பச்சைக்கற்பூரத்தை கருங்கல்லிலோ அதனால் ஆன சிலகளிலோ பூசினால் உடனே வெடித்துவெடும் ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு நாள் முழுவதும் பச்சை கற்பூரம் சாத்தினாலும் ஒன்றும் ஆவதில்லை. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச் சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன.
-
ஏழுமலையான் ரகசியங்கள்…
திருப்பதி ஏழுமலையான் சிலையில் பல சுவாரசியங்களும், ரகசியங்களும் அடங்கி உள்ளன. திருப்பதி ஏழுமலையான் சிலை 250 கோடி வருடம் வயதான “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறையால் உருவானதாகும். 3,000 அடி உயரத்தில் உள்ள திருமலையில் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செகிறார்கள் ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்குமாம். அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது. பொதுவாக பச்சைக்கற்பூரத்தை கருங்கல்லிலோ அதனால் ஆன சிலகளிலோ பூசினால் உடனே வெடித்துவெடும் ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு நாள் முழுவதும் பச்சை கற்பூரம் சாத்தினாலும் ஒன்றும் ஆவதில்லை. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச் சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன.
-
கருட சேவையின் சிறப்பு
மகாவிஷ்ணுவின் முதல் பக்தனாக இருப்பவர் கருட பகவான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. மகாவிஷ்ணு கருடனை தனது வாகனமாக தேர்ந்தெடுத்ததால், பிரம்மோற்சவத்தின் போது மற்ற வாகனங்களைவிட கருட வாகனத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கருடசேவையின் போது தமிழ்நாட்டின் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து வரும் துளசி மாலை மூலவருக்கு அணிவிக்கப்படும். இந்த மாலையுடன் மூல விக்ரக மூர்த்தி அணிந்து இருக்கும் தங்கச்சங்கலி, மகரகண்டி, லட்சுமிஹரம் போன்ற நகைகளை கருடசேவையின் போது மட்டும் உற்சவமூர்த்தியான மலையப்பசாமிக்கு அணிவித்து அலங்கரிப்பார்கள். இந்த நகைகள் அணிந்து வரும் மலையப்பசாமியை தரிசனம் செய்வது கண்கொள்ளாக் காட்சியாகும். ஏழுமலையானையும், கருடனையும் ஒரு சேர வணங்குவதாக நினைத்து, கருடச்சேவையை காண லட்சக்கணக்கிலான பக்தர்கள் திருமலையில் கூடுவார்கள்.
-
புரட்டாசி சனிக்கிழமை விரதம்
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரியனவற்றை சேகரித்து வைத்து, ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து, மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனை வருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.
இந்த புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். எந்த விரதமானாலும் பகலில் தூங்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு போடக்கூடாது. மது, மாமிசத்தை விலக்கி பாவம் செய்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து உயிர்களிடத்தும் கருணை உள்ளவர்களாக இருக்க வேண்டும். -
திருவேங்கடவன் கதை…
ஒரு முறை முனிவர்கள் எல்லோரும் கூடி கங்கை நதி கரையில் யாகம் ஒன்றை நடத்த திட்டமிட்டனர். அப்போது அங்கே நாரதர் தோன்றி, ‘மும்மூர்த்திகளில் யார் பெரியவர்?, யாருக்கு ‘அவிர்பாகம்’ கொடுப்பீர்கள்?’ என்று கேட்டார். இது முனிவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவர்கள் பிருகு முனிவரிடம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்படி கேட்டுக் கொண்டனர். பிருகு முனிவர் மும்மூர்த்திகளை தேடிச் சென்றார். முதலில் பிரம்மனிடம் சென்றார். அங்கு பிரம்மா வேதத்தை ஓதி கொண்டிருந்தார். இன்னொரு வாயினால் நாராயண நாமத்தை உச்சரித்துக் கொண்டு இருந்தார். பிருகு முனிவரை கவனிக்கவில்லை. அடுத்ததாக கயிலாயத்துக்கு சிவனை காணச் சென்றார், பிருகு முனிவர். அங்கு சிவன் தியானத்தில் இருந்தார். பிருகு முனிவரை கவனிக்க முடியாமல் போய்விட்டது. ஆகவே முனிவர் வைகுண்டத்தை நோக்கி சென்றார். அங்கு மகாவிஷ்ணு திருமகளுடன் இருந்தார். பிருகு முனிவரை வரவேற்கவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த பிருகு முனிவர், விஷ்ணுவின் மார்பு மீது தன் காலால் உதைத்து விட்டார். விஷ்ணு கோபப்படவில்லை. மாறாக வாஞ்சையுடன் பிருகு முனிவரின் காலை வருடினார். பிருகு முனிவரின் செயலால் ஆத்திரமடைந்த திருமகள், திருமாலின் செய்கையால் மேலும் ஆவேசமடைந்து அவரை பிரிந்து வைகுண்டத்தை விட்டு பூலோகம் வந்து விட்டாள். அங்கு கொல்வறாழர் என்னும் ஊரில் தங்கினாள். திருமகளை விட்டு பிரிந்து இருக்க முடியாத மகா விஷ்ணுவும், வைகுண்டத்தை விட்டு கீழே இறங்கி சேஷசலத்தை தன் இருப்பிடமாக தேர்ந்தெடுத்துக் கொண்டார். இது விஷ்யோத்தர மஹாதமியத்தில் உள்ள கதையாகும்.
-
சிலைகள் இல்லாத கோவில்!
மூலஸ்தானத்தில், சுவாமி – அம்பாள் சிலைகள் இருப்பது தான் வழக்கம்; ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள ஆவுடையார்கோவிலில் சிவலிங்கத்துக்கு பதிலாக குவளையும், அம்பாளுக்கு பதிலாக பாதமும் மட்டுமே உள்ளது.
பொதுவாக, சிவாலய மூலஸ்தானங்களில், ஆவுடையார் மீது லிங்கம் இருக்கும்; ஆனால், இங்கு, வெறும் ஆவுடையார் மட்டுமே உள்ளது. லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில் குவளை சாத்தப்பட்டுள்ளது. குவளை உடலாகவும், உள்ளிருக்கும் உருவமற்ற பகுதி ஆத்மாவாகவும் கருதப்படுவதால், சுவாமிக்கு, ‘ஆத்மநாதர்’ என பெயர் வந்தது.
இங்கு, சுவாமிக்கு தீபாராதனை செய்த தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை. ஆவுடையாருக்கு பின்புறம் வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. வெள்ளை நிறம் சூரியனாகவும், சிவப்பு – அக்னியாவும், பச்சை நிறம், சந்திரனாகவும் கருதப்படுகின்றன.
சுவாமிக்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றுகின்றனர். இவற்றை வணங்கினாலே தீபாராதனை தட்டை வணங்கியதற்கு சமம் என்பதால், அதை வெளியில் கொண்டு வருவதில்லை.
அதேபோன்று, பொதுவாக, சிவன் கோவில்கள் கிழக்கு நோக்கியும், சில மேற்கு பார்த்தவாறும் இருக்கும். ஆனால், ஆவுடையார் கோவில் தெற்கு நோக்கி உள்ளது. சிவன், குருவாக இருந்து, தெற்கு நோக்கி அமர்ந்து உபதேசிக்கும் நிலையை, தட்சிணாமூர்த்தி என்பர்.
தட்சிணம்’ என்றால் தெற்கு; சிவன், மாணிக்கவாசகருக்கு குருவாக உபதேசம் செய்த தலம் என்பதால், தெற்கு நோக்கி அமைந்துள்ளது.சூரிய, சந்திர கிரகணங்களின் போது கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம். ஆனால், இங்கு கிரகணநாளில், ஆறு கால பூஜை நடைபெறுகிறது. ஆதியந்தம் இல்லாத உருவமற்ற சிவனுக்கு, எக்காரணத்தாலும் பூஜை தடைபடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர்.
அம்பாளின் பெயர் யோகாம்பாள்!
இவளுக்கும் உருவம் இல்லை. சிவனை மீறி, தட்சனின் யாகத்திற்கு சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, இத்தலத்தில் யார் கண்ணுக்கும் தெரியாமல், உருவத்தை மறைத்து தவம் செய்தாள். எனவே, அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடைபெறுகிறது.
பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இப்பாதத்தை கண்ணாடியில் பிரதிபலிக்க செய்துள்ளனர். இவளது சன்னிதி அடைத்தே இருக்கும் என்பதால், சன்னிதி முன் உள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும்.
நைவேத்யம்!
ஆத்மநாதர் முன் உள்ள படைக்கல்லில், புழுங்கல் அரிசியில் சமைத்த சூடான சாதத்தை ஆவி பறக்க கொட்டுவர். அப்போது சன்னிதி கதவுகள் சாத்தப்பட்டு, சிறிதுநேரம் கழித்து திறக்கப்படும்.
சுவாமி உருவமற்றவர் என்பதால், உருவமில்லாத ஆவியுடன் நைவேத்யம் படைக்கப்படுகிறது. இது தவிர பாகற்காய் மற்றும் கீரையும் நைவேத்தியமாக படைக்கப்படும். வித்தியாசமான நடை முறைகள் கொண்ட இக்கோவிலை, வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து விடுங்கள்!
-
ஏன் இப்படி இருக்கிறார் சிவ பெருமான் ?
மற்ற எல்லா தெய்வங்களை விடவும்,சிவபெருமான் தோற்றத்தில் ரொம்பவே வேறுபாடு உடையவர். மற்ற தெய்வங்கள் அலங்கார ஜோடனையாக காட்சி தரும் போது,ஈசன் மட்டும் மரவுரியும்,ஜடாமுடியும், பாம்பு அணிகலனும்,உடல் முழுக்க சம்பலுமாக காட்சித் தருகிறார்.இதற்கு பின் உள்ள தாத்பரியங்களை பார்ப்போம்.
சிவ பெருமான் சந்திரனைச் சடைமுடியில் தரித்துக் கொண்டிருப்பது ஏன் ?
தக்கன் தன்னுடைய இருபத்தேழு பெண்களையும் சந்திரனுக்கு விவாகஞ்செய்து கொடுத்தபோது இவர்கள் அனைவரிடத்திலும், ஒரே மாதிரியான அன்பை தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் சந்திரனோ அவர்களில் மிகுந்த அழகுள்ள கார்த்திகை ,மற்றும் ரோகிணியிடம் மட்டும் மிகுந்த காதலுடன் இருந்தான். அவர்கள் அனைவரும் மனம் வருந்தித் தக்கனிடத்தில் சொல்லிக் கவலைப் பட்டுக் கொண்டார்கள். அவன் கோபங்கொண்டு சந்திரனுடைய சோடசகலைகள் அத்தனையும் அழிந்து போகும்படி சபித்தான்.
அந்த சாபத்தின்படி தினம் ஒவ்வொரு கலையாகப் பதினைந்து கலை குறையக் கண்ட சந்திரன் மிகுந்த துயரங்கொண்டு தேவேந்திரனிடத்தில் சொல்ல, இந்தச் சாபத்தை என்னால் நீக்க முடியாது, பிரமதேவனிடத்தில் போய்ச் கேள் என சொல்ல,சந்திரனும் பிரம்மனிடத்தில் முறையிட்டார். “நான் சொன்னாலும் தக்கன் இந்த சாபத்தை நிவர்த்தி செய்யமாட்டான். நீ வைகுந்தத்துக்குப் போய் விஷ்ணுவிடத்தில் ஆலோசனைக் கேள் என சொல்ல,சந்திரன் அப்படியே செய்யதான். விஷ்ணுவும் தன்னால் முடியாது, நீ ஸ்ரீ கைலாசகிரிக்குப் போய்ப் பரமசிவனிடத்தில் சரணடை என்று சொன்னார். இதைக் கேட்ட சந்திரன் ஸ்ரீகைலாயகிரிக்குப்போய், பரமசிவனைப் பணிந்து தொழுதான். பரமசிவனும் அவன் மேல் கருணை காட்டி, சந்திரனிடத்தில் இருந்த ஒரு கலையினையும் தமது முடியில் தரித்துக் கொண்டு இது உன்னிடத்திலிருந்தால் தக்கன் சாபம் இதனை அழிக்க முடியும். இனி என்னுடைய திருமுடியிலிருக்கிற கலையைத் தொடராது. இந்தக் கலையழியாமல் இருப்பதனால் உனக்கு முன்னிருந்ததுபோலநாளுக்கு நாள் ஒவ்வொரு கலையாக வளர்ந்து சோடசகலைகளும் நிறைவுபடும். அப்படி நிறைந்தாலும் வளர்ந்தது போல மறுபடி குறைவுபடுகிறதும் வளருவதுமாக இருக்கும் என வரம் அருளினார்.
பரமசிவன் தன்னுடைய ஒரு திருக்கரத்தில் மானை தரித்துக் கொண்டிருப்பது ஏன்?
பிட்சாடன மூர்த்தியாக தாருகாவனத்தில் எழுந்தருளின ஈசனைப் பார்த்து மோகித்த ரிஷி பத்தினிகள் தங்கள் கற்பு நிலை தவறினார்கள்.இதனால் தாருகாவனத்து ரிஷிகள் கோபமுடைந்து ,ஒருவேள்விசெய்து அதிலிருந்து வெளிவந்த புலியை சிவனைக் கொல்வதற்காக ஏவினர். ஈசனோ அதனைக் கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்து கொண்டார். வேள்வியில் இருந்து பின் வந்த மானை இடக்கையில் வைத்துக் கொண்டருளினார்.பின்பு வந்த மழுவை ஆயுதமாக வைத்துக் கொண்டார். தொடர்ந்து வந்த சர்ப்பங்களை ஆபரணமாகத் தரித்துக்கொண்டார். இவை தவிர முயலகன் என்ற அசுரன் வர அவனைக் கீழேதள்ளி முதுகிலேறி நின்றார் . ரிஷிகள் தொடர்ந்து மந்திரங்களை ஏவ,அவகைளை டமருக ரூபங்கொண்டு அவர் திருக்கரத்தில் தாங்கிக்கொண்டார்.
சிவன் ஏன் கபாலத்தை ஏந்திக்கொண்டு இருக்கிறார் ?
பிரம்மாவின் அகந்தையை அழிக்கும் பொருட்டு, அவருக்கிருந்த ஐந்து தலையில் நடுத்தலையைக் கிள்ளிக் கையிற் கபாலமாக வைத்தருளினார். அது முதல்பிரமனுக்குச் சதுர்முகனென்று பெயராகியது. பரமசிவன் கபாலம் தரித்துக் கொண்டிருப்பதனால் கபாலியென்றும் பெயருண்டானது.
பரமசிவன் கண்டத்தில் விஷம் பொருந்தியிருப்பது ஏன்?
தேவர்கள் அமிர்தம் எடுக்க பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷமுண்டானது. அதைக் கண்டு பயந்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட அவர்களை காக்கும் பொருட்டு விஷத்தைக் கண்டத்தில் வைத்தருளினார். இதனால் நீலகண்டன் எனப் பெயர் பெற்றார்.
பரமசிவனுக்கு ரிஷபவாகனம் ஏன்?
தருமதேவதையானது என்றும் நித்தியமாயிருக்கவேண்டும்மென்ற எண்ணங்கொண்டு ரிஷபரூபமாகிப் பரமசிவனிடத்தில் பணிந்து “இறைவனே !நான் இறவாமலிக்கும் படி அடியேனை வாகனமாகக் கொண்டருள வேண்டும்” என வேண்டிக்கொண்டது. இறைவனும் மனமிரங்கி,அதனைத் தமக்கு வாகனமாகக் கொண்டருளினார்.
-
ஓணம் வரலாறு…
திருவோணம் பண்டிகை!
கேரளாவில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பெறும் இவ்வோணம் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து திருவோண நட்சத்திரம் வரை பத்து நாள்களும் நடைபெறுகிறது.
கேரளாவில் கொண்டாடப் பெறும் திருவோணம் பண்டிகை மகாபலி சக்கரவர்தியின் நினைவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
முன்னொரு காலத்தில், சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டி, பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி. எனவே அவ்வெலிக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கினார் சிவபெருமான். அந்த எலியானது மறு பிறப்பில் மகாபலி என்ற என்ற பெயருடன் மன்னனாக பிறந்து, சக்ரவர்த்தியாகி மூவுலகையும் சிறப்பாக ஆட்சி புரிந்தது.

மகாபலி என்னும் மன்னன் கேரள நாட்டைச் சிறப்பாக ஆண்டுவந்தான். அவன் பெற்ற தவவலிமையால் மூவுலகையும் ஆளும் மன்னனாகத் திகழ்ந்தான். இதனைப் பொறுக்காத தேவர்கள் அசுர வலிமை கொண்ட மகாபலியை அடக்கித் தங்களின் வலிமைக்குக் கொண்டுவரத் திருமாலின் உதவியை நாடிச் சென்றனர். திருமாலும் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்டார். திருமாலின் சூட்சமத்தை அறிந்த அசுர குருவான சுக்ராச்சாயான் அறிவுரையைக் கேளாத மகாபலியும் மூன்றடி மண் கொடுக்க சம்மதித்தார். திருமால் விசுவரூபம் எடுத்து வானத்தை ஒரு அடியாகவும், பூமியை மற்றொரு அடியாகவும் வைத்து அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்தார். வாமன மூர்த்தியால் மகாபலிச் சக்கரவர்த்தி பாதாளத்துள் வீழ்த்தப்பட்டபோது, தான் ஆட்சி செலுத்திய நாட்டை ஆண்டுக்கொரு முறை வந்து கண்ணுற்று மகிழத் திருமாலிடம் வரம் வேண்டினார். பிறகு திருமாலும் மகாபலியை ஆட்கொண்டு வரம் நல்கினார். இவ்வாறு மகாபலிச் சக்கரவர்தியின் நினைவு நாளாகவும், மகாபலி மன்னன் இந்த திருவோண நன்னாளில் தான் ஆண்ட நாட்டிற்கு வருவதாகவும், அவனை வரவேற்கும் முகமாகவும் இவ்வோணம் பண்டிகை கொண்டாடப் பெறுவதாகக் கூறப்படுகிறது.

கேரளாவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் வாயிற் படியிலும் மகாபலி மன்னனை வரவேற்கும் முகமாக பல வண்ண மலர்களால் ஆன கோலங்களைப் பெண்கள் வரைகின்றனர். கோலத்தின் நடுவில் குத்துவிளக்கேற்றி வைத்து, அதனைச் சுற்றிப் பல வகையான காய், கனிகளையும் அழகுற அடுக்கி வைக்கின்றனர். இக்கோலத்தை “அத்தப்பூக் கோலம்” என்று அழைக்கின்றனர். அன்று மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து பலவிதமான காய், கனிகளையும் உணவு வகைகளையும் விருந்தினர்களுக்கு வழங்கித் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். திருமால் உறையும் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
விருந்துக்கு பிறகு ஆண்களும், பெண்களும் இணைந்து பல்வேறு நடனங்களை ஆடி மகிழ்வார்கள். ஓணப்பட்டுடுத்திய பெண்கள் அத்தப்பூ கோலத்தில் மீது குத்துவிளக்கு ஏற்றி வைத்து அதனை சுற்றி நடனமாடுவார்கள். மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். ஆண்கள் புலிக்களி நடனம், களரி, கயிறு இழுத்தல், கடுவா ஆட்டம், எறி பந்து, கிளியாந்தட்டு, ஓண ஊஞ்சல் என நடக்கும் விளையாட்டுகள் மனதிற்கும், உடலுக்கும் உரம் சேர்க்கும் வகையில் இருக்கும்.