Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ஆன்மீகத்தில் முக்கியத்துவம் பெற்ற சின்னங்கள்! 

    ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற சின்னங்கள்  மற்றும் குறியீடுகளை பயன்படுத்துவதில்  உள்ள மனோதத்துவம் மற்றும் தகவல்கள்

    திரிசூலம்:

    பண்டைய காலத்திலேருந்த கடவுளர்களது  ஆயுதமாக திருசூலம் இருந்து வருகிறது. இந்து சமயத்தின்  தெய்வங்களான சிவன்,காளி,துர்க்கை ஆகிய தெய்வங்களின் கைகளில் திரிசூலம் இருக்கிறது. ஆணவம்,கன்மம், மாயை எனும் மூன்று வித இருளை நீக்கும் அடையாளமாகவும்,தீய சக்திகளை அழிக்கும் தத்துவமாகும் திரிசூலம் உள்ளது.  திரிசூலத்தில் உள்ள மூன்று கூர்மையான  பகுதிகள் ,மனித வாழ்வின் மூன்று நிலைகளான விழிப்பு,கனவு, மற்றும் தூக்கம் ஆகிய நிலைகளையும்,மனம், வாக்கு, உடல், ஆகியவற்றியும் மறை பொருளாக குறிப்பிடுகிறது .மூன்று நிலைகளிலும்  மனிதர்கள் ஒன்று பட்ட நிலையில் இருக்க வேண்டும் என்பதை சூலத்தின் வடிவம் எடுத்துக்காட்டுகிறது. கதவுகளில் அவற்றை பொருத்தி வைத்திருப்பதும் வழக்கம்.அதன் முலம் தீய சக்திகளின் தாக்கம் வீடுகளுக்குள் வராமல் காப்பதாகவும் மக்கள் நம்புகிறார்கள்.

    ஸ்ரீ சக்கரம்

    சக்தி வழிபாடுகளில் மிகவும் முக்கியமான ஓன்றாக இருக்கும் ஸ்ரீ சக்கரவழிபாடனது. காமாட்சி, துர்க்கை, ராஜராஜேஸ்வரி,லலிதாம்பிகை போன்ற தெய்வங்களுக்கு ஸ்ரீ சக்கர  பிரதிஷ்டை செய்வதும்,அதை தனிப்பட்ட முறையில்  வழிபடுவதும் வழக்கத்தில் இருக்கிறது.  சக்தி வாய்ந்த ஸ்ரீ சக்கர வழிபாட்டை தகுந்த முறைப்படி,உபதேசம் பெற்று,உரிய நியமங்களுடன் வழிபட்டு வந்தால் பல நல்ல பலன்கள் கிடைக்கும் ஆன்றோர்களுடைய நம்பிக்கையாகும்.  ஆதி சங்கரர் பல்வேறு தலங்களுக்கு சென்று அங்கு உக்கிரமாக இருக்கும் அம்பிகையின் மூல ஸ்னாத்துக்கு முன்னர் அந்த கோவிலின் உட்புறத்தில் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை அந்த தெய்வங்களை சாந்த சொரூபிணியாக மாற்றியுள்ளார்.ஒற்றைகாலில் நின்றபடி அம்பிகை தவம் செய்யும் மாங்காடு தலத்திலும்  அர்த்த மேருஅமைப்பில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்ய பட்டு வழிபாடுகள் நடந்தது வருகின்றன. 

    ஓம்காரம்

    ஓம் என்ற சொல் தமிழில் பிரணவ மந்திரமாக குறிக்கபடுகிறது. ஓம் அக்னிமீளே புரோஹிதம், என்று தொடங்கி ,இறுதியில் ஹரி: ஓம் என்று ரிக் வேதமானது, ஓம்காரத்தில்  தொடங்கி ஓம் கராத்திலேயே நிறைவடைகிறது.அதாவது, ஆரம்பமும்,முடிவும் ஓம்காரமாக அமைந்து  உலக இயக்கம் யாவும் வட்ட வடிவி இயங்கி வருகின்றன. நமது உடல் இயக்க அதிர்வுகள் அனைத்தும் ஒரு புள்ளியில் தொடங்கி,ஒரு வட்ட மடித்து மீண்டும் அதே புள்ளியில் வந்து  முடிகின்றன. ஓம்கார சின்னம் வரி வடிவம் மற்றும் சப்த வடிவம் ஆகியவற்றில் உலக இயக்கத்தோடு ஒன்றுபட்ட நிலையை உண்டாக்கக் கூடியதாகும்.

     கலசம்

    மண்ணால் ஆன அல்லது செம்பு,பித்தளை,தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட,நீர் நீறைந்த பாத்திரத்தின் மேல் தேங்காய் வைத்து அதில் மாவிலைகள் செருகி வைக்கப்படும் அமைப்பு கலசம் எனப்படுகிறது.  இந்த கலசத்தின் உள்ளே  புனித  நதிகளின் நீராகவும்,வாசனை திரவியங்கள் கலக்கப்படுகிறது.  வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல் ,மேல் இருந்து கிழாக நுணுக்கமாக சுற்றப்படும்.அதற்கு மஞ்சள் குங்குமும் வைத்து சகல அலங்கார அமைப்புடன் உள்ள பாத்திரம் பூரண கும்பம்   என்று அழைக்கப்படுகிறது. 

     இதைகிரகப்பிரவேசம்,திருமணம்,தினசரி பூஜை கோவில்களின் கும்பாபிஷேகம் மற்றும் இதர ஹோம பூஜைகளுக்கும் இந்த கும்ப அமைப்பு முக்கியமான ஓன்றாக இருக்கும்.  பூரண கலசமானது உயிருள்ள ஒரு  தேவைதையின் வடிவமாக கருதப்படுகிறது.

  • படிப்பில் சிறக்க பிரம்மன் கோவிலுக்கு வாங்க!

    கும்பகோணத்தில்  உள்ள வேதநாராயணப் பெருமாள் கோயிலில் சரஸ்வதி பிரம்மனுடன் அருள்புரிகிறாள்.படிப்பில் சிறந்து விளங்க இத்தலம் ஏற்றது. மகா விஷ்ணு இங்கு பிரம்மாவுக்கு காட்சியளித்து விமோசனம் அளித்தார்.அவர் வேதநாராயண பெருமாளாக இங்கு கோவில் கொண்டிருக்கிறார்.

    பிரளய வெள்ளத்தில் பூலோகமே அழிய கும்பகோணம் மட்டும்  அழியாமல் இருந்தது.  இதன் சிறப்பு அம்சமாகும். சிறப்பு மிக்க  இங்கு யாகம் நடத்த பிரம்மா,தன் துணைவியரான சரஸ்வதி ,காயத்ரியுடன் வந்தார். பிரம்மாவுக்கு நான்கு தலையும் ,காயத்ரிக்கு ஐந்து தலையும் இருந்தது. கணவரை விட மனைவிக்கு அதிக தலைகள் இருந்ததால் யாகத்தில் நெருப்பு எழவில்லை.இதை அறிந்த சரஸ்வதி தன் மந்திர சக்தியால் காயத்ரியை பார்க்க ,ஐந்தாவது தலை மறைந்தது.அதன் பின் குண்டத்தில் நெருப்பு பற்ற யாகம் நடந்தது.

    இறுதியில் தேவியருடன் தோன்றிய விஷ்ணு,சபா விமோசனம் கொடுத்து பிரம்மனுக்கு வேதங்களை கற்றுக் கொடுத்தார். ஒரு சன்னதியில் சரஸ்வதி ,காயத்ரியுடன் நின்ற கோலத்தில் பிரம்மா வீற்றிருக்கிறார். அடுத்துள்ள சன்னதியில் ஸ்ரீ தேவி,பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் வேத நாராயணார் அருள்பாலிக்கிறார். பிரம்மாவுக்கு எதிரில் உள்ள சன்னதியில் யோக நரசிம்மர் தாயார்களுடன் காட்சியளிக்கிறார்.

    ஒரே இடத்தில் மூன்று தெய்வங்களை தரிசிப்பது சிறப்பு ஆகும். இங்கு வேதவல்லித்தாயார்,ஆண்டாளுக்கும் இங்கு சன்னதி உள்ளன.சரஸ்வதி பூஜையன்று காயத்ரி முக்குத்தியுடன் காட்சி தருகிறாள். இதை சுமங்கலி பெண்கள் தரிசித்தால் மங்கல்ய பலம் உண்டாகும். கல்வியில் சிறக்கவும்,தொழிலில் வளர்ச்சி பெறவும் பிரம்ம சங்கல்ப பூஜை நடத்துகின்றனர். கேது தோஷம் நீங்க இத்தலத்தில் இருக்கும் பிரம்மவை வணங்கினால் தோஷம் விலகும் என்பது ஐதிகம்.

  • நரகத்தில் இருந்து தப்பிக்க ,நரக சதுர்த்தசி விரதம்

    ஒரு முறை தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கு ஒரு சந்தேகம்  ஏற்பட்டது. அவர் இருண்ட காடு ஒன்றில்,அவர்  தனது மனைவி மற்றும் மக்களுடன் தவம் செய்து கொண்டிருந்தார். வெளிச்சமே பார்த்திராத கானகம் என்பதால், இருட்டோடு சேர்ந்து  துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், மற்றும் அரக்கர்களால் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். இருள் நீங்கி அந்த இடம் ஒளியால் நிறைய  விஷ்ணுவை நினைத்து பிரார்த்தித்தார்.

    அப்போது ஒரு நாள் சனாதன முனிவர் என்பவர் அங்கு வந்தார். அவரிடம் தீர்க்கதமஸ் தனது சந்தேகத்தைக் கேட்டார். “மனிதன் துன்பத்திலிருந்தும், இருளிலிருந்தும் விடுபட விரதங்களை அனுஷ்டிக்கிறான். இந்த விரதங்களும் துன்பத்தையே பாதையாக கொண்டு பட்டினி, உடலை வருத்திக்கொண்டு தவம், நேர்ச்சைகள் ஆகியவையாகத்தான் உள்ளன. இது மேலும் மனிதனை துன்பப்படுத்தும் அல்லவா? ஏற்கனவே துன்பப்படும் மனிதன் இன்னும் துன்பத்தை அனுபவித்து தான் நல்வாழ்வைக் காண வேண்டுமா? இதுபோன்ற பாதையைத்தான் நமது சாஸ்திரங்கள் காட்டுகிறதா? மனம் மகிழ்ச்சியடைய சுலபமான வழி ஏதும் இல்லையா?” என அத்தனை நாள் தன் மனதுள் தேக்கி வைத்திருந்த ஆதங்கத்தை கேள்வியாக கேட்டார்.

    இதற்கு பதிலளித்த சனாதனர், “தீவிர விரதங்களால் உடலை வருத்திக்கொண்டு மெய், வாய், கண், செவி, மூக்கு ஆகியவற்றை அடக்கித்தான் ,ஒளிமயமான பரம்பொருளைக் காணமுடியும் என நமது எந்த வேதங்களும் வகுக்கவில்லை.

     மாறாக தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை   தானும் சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து,ஒளி எங்கும் பரவ  தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் இருளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் சுலபமாக விடுபடலாம்”என போதித்தார். மனமகிழ்ந்த தீர்க்கதமசும் இந்த விரதத்தை எப்படி பின்பற்றுவது என்று கேட்கவே, சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார்.

    ஐப்பசி மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து யமதீபம் ஒன்றை ஏற்றிவைக்க வேண்டும். யமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து அகாலமரணம் சம்பவிக்காமல் காத்திடும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். மறுநாள் நரக சதுர்த்தசி அன்று நாம் செய்த பாவங்களால் ,நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு  அன்று பூஜை செய்ய வேண்டும்.

     எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் அமர்ந்து நமக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம்மையும்,நம்மை சேர்ந்த  குடும்பத்தாரையும்  இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்று கூறினார். தீபாவளி திருநாள் தோன்றிய கதை இது .

    தீபாவளியன்று இரவில் லட்சுமி குபேர பூஜை செய்வதால், குபேர வாழ்வை பெறலாம். மேலும் யமுனையின் சகோதரனான யமதர்ம ராஜாவை தீப ஒளிகளால் பூஜிப்பதால், நீண்ட ஆயுளைப் பெற முடியும் என்கிறது சாஸ்திரம். அமாவாசை அன்று கேதார கவுரி விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் ,குடும்பத்தில் அமைதியும் தம்பதியினரிடையே ஒற்றுமையும் செழிக்கும்.

  • திருமலை ஸ்ரீவேங்கடவனுக்கு தினமும் எத்தனை மணி நேரம் ஓய்வு தெரியுமா?

    சர்வலோகத்தையும் காத்தருளும் திருமலை ஸ்ரீவேங்கடவனுக்கு தினமும் எத்தனை மணி நேரம் ஓய்வு தெரியுமா?

    வெறும் ஒண்ணரை மணி நேரம்தான்!

    பக்தர்கள் நள்ளிரவு இரண்டு மணிக்கு ஓட்டமாக ஓடிப் போய் பெருமாளைத் தரிசித்திருக்கிறார்கள். திருவையாறு சங்கீத மூர்த்தியான தியாகராஜ ஸ்வாமிகள் திருப்பதி தரிசனத்துக்குப் போயிருக்கிறார். கஷ்டப்பட்டு நடந்து மலையேறி இவர் சன்னிதியை அடையும்போது நள்ளிரவு. அதுவரை பெருமாளின் தரிசனம் கிடைத்துக் கொண்டிருந்தது.

    இவர் சன்னிதிக்கு முன் போய் நின்று கண்ணீர் மல்க, அந்த பெருமாளை பிரார்த்திக்கத் தொடங்கும்போது, அங்கிருந்த அர்ச்சகர்கள் தியாகராஜ ஸ்வாமிகள் யார் என்பது தெரியாமல், ஏகாந்த சேவை முடிந்தது. தியாகராஜர் வெளியே வந்து ஒரு பாடல் பாடுகிறார்.

    அவ்வளவுதான்… ஸ்ரீவேங்கடவனுக்கு முன்னால் இருந்த திரை மட்டும் திடீரெனப் பற்றி எரிந்து தரையில் பொத்தென விழுந்தது. மாலவன் தரிசனம் கிடைத்தது. அதன்பின் ஏகாந்த சேவையை மீண்டும் ஒருமுறை தியாகராஜருக்காகச் செய்துவிட்டு அர்ச்சர்கள் நடையைச் சாத்தியதாக ஒரு கதை உண்டு.

     ஏகாந்த சேவை’ முடிந்த கையோடு திரையிட்டுவிடுவார்கள். அதன்பின் அதிகாலை – அதாவது ஒண்ணரை மணி நேரம் கழித்து ‘சுப்ரபாத சேவை’க்காகத் திருப்பள்ளி எழுச்சி பாடி, துயில் களைப்பர்.

    பொதுவாக, திருப்பதியில் தினந்தோறும் அதிகாலை மூன்று மணிக்குத் தொடங்கும் தரிசனம், நள்ளிரவு ஒண்றரை மணிவரை நீடிக்கும். அதன்பின் பெருமாளைத் தூங்கச் செய்வதற்காக ஏகாந்த சேவை என்கிற தரிசனம் நடக்கும்.

    சயனம் கொள்பவர் – கருவறையில் இருக்கும் போக ஸ்ரீநிவாசமூர்த்தி. மூலவரின் பிரதிநிதியாக இவரை வெல்வெட் மெத்தை விரிக்கப்பட்ட வெள்ளித் தொட்டிலில் இடுவார்கள். பெருமாள் ஓய்வெடுத்துக் கொள்வதாக ஐதீகம்! பிறகு காய்ச்சிய பால், முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை நைவேத்தியம் செய்வார்கள்.

    இரவு வேளையில் வெளிச்சத்தைக் குறைவாக்கி நாம் உறங்குகிறோம் அல்லவா? அது போல் சன்னிதியின் விளக்குத் திரியைச் சற்றே குறைத்து வைப்பார்கள். அன்னமாச்சார்யர் பரம்பரையில் வந்தவர்கள், தம்புராவுடன் வந்து கீர்த்தனைகளைப் பாடி அவரைத் தூங்கச் செய்வார்கள். பின்னர் சன்னிதிக்குத் திரை போடப்பட்டு, தங்க வாசல் அடைக்கப்படும். அதிகாலை சுப்ரபாத தரிசனத்தின்போதுதான் மீண்டும் திறக்கப்படும்.

    அதிகாலை மூன்று மணிக்குத் திறக்கப்பட்டு, மூன்றரை வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். திருப்பதி மலையில் உள்ள ஆகாயகங்கை தீர்த்தத்தில் இருந்து, மூன்று குடங்களில் புனிதநீர் வந்து பூஜைகள் நடந்தேறும்.

    முதல் நாள் பெருமாளுக்கு அணிவித்த பூமாலைகளைக் களைந்து கோயிலுக்குப் பின்னால் உள்ள பூக்கிணற்றில் சேர்ப்பார்கள். பின்னர், புதிய மாலைகள் வாத்திய முழக்கங்களோடு கொண்டு வரப்படும். பூக்கள் வந்தவுடன் பெருமாளின் மார்பில் வாசம் புரியும் ஸ்ரீமகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சார்த்துவார் அர்ச்சகர். பின்னர் பெருமாளுக்கு மாலைகள் சாத்தப்படும். இது பூர்த்தி ஆனதும், அடுக்கு தீபாராதனை செய்யப்படும்.

    அதன் பின், ஒரு அர்ச்சகர் பஞ்சாங்கத்தைப் பிரித்து அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை சத்தம் போட்டு வாசித்து, கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்திக்குத் தெரியப்படுத்துவார். அதோடு உண்டியலில் முதல் நாள் காணிக்கையாக வந்த தொகை, தங்கம் – வெள்ளி வந்த விவரம் போன்றவற்றைத் தெரியப்படுத்துவார். மூலவர் ஸ்ரீவேங்கடவனே வெளியே வந்து இவற்றை எல்லாம் கேட்பதாக ஐதீகம். இந்த நிகழ்வின்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    இவை எல்லாம் முடிந்த ஸ்ரீவேங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் சமர்ப்பிக்கப்படும். அப்போது, ஆலயத்தில் இரண்டு முறை மணி ஒலிக்கப்படும். என்ன நைவேத்தியம்?! தயிர் சாதம்! மூலவருக்கு உண்டான இதே நைவேத்தியம்தான் இவருடைய படைகளுக்கும்.

    அதாவது – விஷ்வக்சேனர், கருடன், நித்யசூரிகள் ஆகிய அனைவருக்கும் இதே தயிர்சாதம்தான் நிவேதனம்!பெருமாளின் நைவேத்தியமே இவர்களுக்கும் கிடைப்பது பெரும் பாக்கியம் ஆகும்.

  • திருத்தணி கோவிலில் கிருத்திகை விழா கோலாகலம்…..

    திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது. கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை, 4:45 மணிக்கு, மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.மாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சாய்ரட்சை பூஜையும், இரவு, 7:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கிருத்திகை விழாவையொட்டி, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை வழிபட்டனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்தும், மலர் காவடிகள் எடுத்து வழிபட்டனர்.

  • மங்கலத்தை தரும் மஞ்சளின் சிறப்பு!

    திருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதல் இடம் பெறுவது மஞ்சள் தான்.அது ஒரு மங்கல பொருளாகப் கருதப்படுகிறது. நாம் எந்த ஒரு பூஜை செய்தாலும் மஞ்சள் பிள்ளையாரை  வைத்து மலரும்,குங்குமுமம் வைத்து பூஜை செய்வது தான் வழக்கம். இலையில் விழுந்தால் அரிசி,தலையில் விழுந்தால் அட்சதை. அட்சதை முனை முறியாத அரிசியில் மஞ்சள் தடவித் தூவுவது ஆகும். பெண்கள்  முகத்திற்கு மஞ்சள் பூசிக் குளிப்பது வழக்கம்.

    சுமங்கலி பெண்கள் விட்டிற்கு வந்தால் வெற்றிலை, பாக்கு, குங்குமத்தோடு மஞ்சளும் கொடுப்பார்கள். இதை செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள் விலகுவதாக நம்பிக்கை. விரத காலங்களில் மஞ்சள் ஆடை அணிந்தால் குடும்பத்தில் மங்கலங்கள் நடைபெறும்.நீண்ட ஆயுளும் ஐஸ்வர்யமும்,ஆரோக்கியமும் பெற மஞ்சள்  வண்ணத்தை பார்க்கும் பொருட்களில் உபயோகப்படுத்துவது வழக்கம்.

    திருமணத்தில் மங்கள சூத்திரமாய், அட்சதையாய், கங்கணமாய் நன்னாட்களில் வாசல் முற்றங்களில் குங்குமத்துடன் பூசப்பட்ட கலவையாய், பொங்கல் பானைகளில் சுற்றிக் கட்டப்பட்டது மஞ்சள். தடைகளைத் தகர்க்கும் விநாயகனை மஞ்சளில் பிடித்து வழிபடுவதும் மங்களத்தைக் குறிக்கும். இப்படி, ஒவ்வொரு நிகழ்விலும் நீக்கமற நிறைந்த மஞ்சள், மங்களத்திற்கு அடையாளமாக பார்க்கப்படுகிறது.

    ஒவ்வொரு பெண்ணும் மங்களத்தின் சின்னமாய் புருவ மத்தியிலும், மணமானோர் நெற்றி வகிடிலும் குங்குமத் திலகம் இடுவது வெறும் சடங்கோ, அழகுக்கோ மட்டும் அல்ல. பொருள் உலகின் நன்மைகளை அடைய நம் உடல், மன கட்டமைப்பிற்கு இது உறுதுணையாக இருக்கின்றது. மஞ்சளோடு, சிறிது சுண்ணாம்பு, கற்பூரம் கலந்து தயாரிக்கப்படுவதே குங்குமம். “குடும்பத்தின் ஆண் முக்தி நோக்கம் கொண்டு விபூதி இடுவதும், பெண் பொருள் உலக நன்மைக்காக குங்குமம் இடுவதும் வாழ்வில் சமநிலை நிலவ உதவும் சிறு உபாயம்,” என்பது சத்குருநாதர் வாக்கு.

    மங்கலத்தை அறிவிக்கும் நிறம்.புத்தாடை அணியும் பொழுது மஞ்சள் தடவி அணிந்தால் ஆடை,அணிகலன்கள் சேரும் என்பது நம்பிக்கை.  உணவில் நறுமணமூட்டி, நிறமூட்டி, சுவையூட்டி, உட்கொள்ளும் மருந்து, வெளிப்பூச்சு மருந்து, அழகு சாதனப் பொருள், மங்கள நிகழ்வுகளில் முக்கிய பங்கு, ஆன்மீக வாழ்வின் இன்றியமையா அம்சமாக திகழ்கிறது மஞ்சள்.

  • எமபயம் தீர்க்கும் ‘எமதீபம்’

    தீபாவளி ஒவ்வொரு ஊர்களில் ஒவ்வொரு வகையில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.  வடமாநிலங்களில் தீபாவளித் திருநாள் ஐந்து நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.அங்கு தீபாவளியின்  முதல் நாளை  ‘தந்தேரஸ்’என்று அழைக்கிறார்கள். ‘தந்தேரஸ்’ அன்று நாம் செய்யப்படும் தானமானது  பலமடங்கு பலனளிக்கும் என்பது வட மாநில மக்களின் நம்பிக்கை.

    தீபாவளித் திருநாளின் முதல் நாள் தன்வந்திரி திரயோதசியாக கொண்டாடப்படுகிறது. ஆரோக்கியம் தானே அனைத்திற்கும் பிரதானம். அதனால் ஆரோக்கியம் அருள வேண்டி வைத்தியத்திற்கு தலைவரான  தன்வந்திரியைக் குறித்துப் பிரார்திக்கப்படுகிறது . ‘தந்தேரஸ்’அன்று இரவு முழுவதும் விளக்கு ஏற்றிவைப்பது , எமபயம் தீர்ப்பதாக ஐதீகம்.எனவேஅந்த விளக்கு ‘எமதீபம்’ என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் யமராஜன் தன் சகோதரி யமுனையின் வீட்டிற்குச் சென்று ஆசிகள் வழங்கி, பல பரிசுகள் கொடுக்க  யமுனையும் மனம் மகிழ்ந்து, தனது சகோதரனுக்குப் பரிசுகளும் இனிப்புகளும் கொடுக்கிறாள். இத் திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகிறார்கள். சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை, ‘எமனுக்குப் பிடித்த விழா’ என்று புராணங்களும் போற்றுகின்றன. 

    இது குறித்து இன்னொரு தகவலும் உண்டு. சனி பகவானும் யமனும் சகோதரர்கள். ஆயினும்,தம்முள்  கருத்து வேறுபாடு உள்ளவர்கள். இருவரும் இறைவனை வழிபட்டுத் தகுந்த பதவியினைப் பெற்று பூலோகவாசிகளுக்கு அவரவர் செய்யும் பாவ,புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கிறார்கள். யமனும் சனியும்  தீபாவளி அன்று மட்டும்  தங்களை மகிழ்விக்கும் மக்களுக்கு நன்மைகள் செய்வார்கள் என்பது நம்பிக்கை.

    மகாளய பட்ச நாட்களில் ,தாங்கள் வசித்த ஊருக்கு தங்கள் சந்ததியினரை பார்க்க வரும் மறைந்த நம் முன்னோர்களுக்கு மகாளய பட்ச நாட்களிலும் மகாளய அமாவாசையிலும் தர்ப்பணம் செய்வது வழக்கத்தில் உள்ளது. பிதுர்லோகத்திலிருந்து தங்கள் ஊருக்கு வந்தவர்கள் உடனே திரும்பிச் செல்வதில்லை. தீபாவளி சமயத்தில்தான் தங்கள் உலகத்திற்குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது.

    அதனால் வடநாட்டில் வீட்டைச் சுற்றி விளக்குகள் ஏற்றி வைப்பது வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த தன திரயோதசி நாளில் யம தீபம் என்ற விளக்கை ஏற்ற வேண்டும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது.

    தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசியன்று மாலை நேரத்தில் யமதீபம் ஏற்றி, அந்த தீபத்தினை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவார்கள். இதனால் முன்னோர்கள் மட்டுமல்ல, யமனும் மகிழ்ந்து அருளுவானாம்.

     இவ்வாறு யமதீபம் ஏற்றி, எமதர்மராஜனை வணங்கினால்,  விபத்துகள், எதிர் பாராத மரணம் ஆகியவை ஏற்படாமல் ,ஆரோக்கியமாக வாழ யமன் அருள் புரிவார் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை. நம் இல்லங்களை தீபங்களால் வண்ணமயமாக்குவோம்.மன இருளை விரட்டுவோம்.

  • சபரிமலை அக்டோபர் 16ல் நடைதிறப்பு

    சபரிமலை ஐயப்பன் கோயில் ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 16ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை உதயாஸ்தமன பூஜை, படிபூஜை, சகஸ்ரநாமம், களபாபிஷேகம் போன்றவை நடைபெறுகின்றன. மேலும் இந்த 5 நாட்களில் தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 21ம் தேதி நடை சாத்தப்படுகிறது.

  • நீங்கள் தீபம் ஏற்றும் முறை சரியா?

    தினந்தோறும் காலையும், மாலையும் பூஜை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம். தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும், அவற்றின் பலன்கள் பற்றியும் தெரியும்?
    தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும். மேற்குத் திசையில் உள்ள முகத்தைமட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும்.
    சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும். தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.
    திரிகளின் வகைகளும் அதன் பலன்களும்:
    1. பஞ்சுத்திரி – சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி.
    2. தாமரைத் தண்டு திரி – முற்பிறவியின் பாவங்களை அகற்றி செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
    3. வாழைத்தண்டு திரி – மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
    4. வெள்ளெருக்குப் பட்டைத் திரி – செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப்பெருமானுக்கும் உகந்தது இது.
    5. தம்பதிகள் மனமொத்து வாழவும், மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட புதிய திரிபோட்டு விளக்கேற்ற வேண்டும்.