Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • 12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர்!

     

    அவரவர் ராசிக்குரிய விநாயகப்பெருமானின் மூர்த்தங்களை வழிபட்டால் சிறப்பு இதோ.. 12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர்

    மேஷம்: செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் இயற்கையில் வீரம் மிக்கவர்கள். எவருக்கும் அஞ்சாதவர்கள். மனதிற்கு சரியென்று பட்ட விஷயத்தை எவர் தடுத்தாலும் விடாது தைரியத்துடன் செயல்படுத்துபவர்கள். மனோ தைரியம் மிக்க நீங்கள் வழிபட வேண்டியவர் வீர கணபதி.

    ரிஷபம்: சுக்கிரனின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் அம்பிகையின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமானவர்கள். 12 ராசிகளில் சந்திரன் உச்சம் பெற்ற நிலையில் இருப்பது உங்களுடைய ஜாதகத்தில் மட்டுமே. இயற்கையில் ராஜயோகத்தைப் பெற்ற நீங்கள் வழிபட வேண்டியவர் ராஜராஜேஸ்வரியின் அம்சத்தில் உள்ள ஸ்ரீவித்யா கணபதி.

    மிதுனம்: பல்வேறு திறமையை உடைய நீங்கள் கண் திருஷ்டி தோஷத்தால் அடிக்கடி அவதிப்பட நேரிடும். உங்களின் திறமையும், வளர்ச்சியும் அடுத்தவர் மனதில் போட்டி, பொறாமையை வளர்க்கலாம். எதிரிகளைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படுவதில்லை என்றாலும், மறைமுகமாக வந்து சேருகின்ற தாக்குதல்களிலிருந்து விடுபட நீங்கள் வழிபட வேண்டியவர் லட்சுமி கணபதி

    கடகம் : பல்கலை வித்தகர்களான நீங்கள் பன்முகம் கொண்டவர்கள். அபார ஞானமும், அசாத்தியமான ஞாபக சக்தியும் கொண்ட நீங்கள் அமைதியான முறையில் அடுத்தவர்களை வழிநடத்தும் திறன் மிக்கவர்கள். ஒரு நேரம் சாந்தம், ஒரு நேரம் கோபம் என முகத்தில் நவரசத்தையும் காட்டும் நீங்கள் வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி.

    சிம்மம்: இயற்கையில் தைரிய குணம் மிக்க உங்களுக்கு என்றுமே வெற்றித்திருமகள் துணை நிற்பாள். 12 ராசிகளில் தலைமை குணத்தினை உடைய உங்களுக்கு என்றுமே தன்னம்பிக்கை குறையவே குறையாது. அசாத்தியமான மன வலிமையுடன் என்றென்றும் வெற்றியினை ருசித்து வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் விஜய கணபதி.

    கன்னி: இயற்கையில் பெண்மை குணத்தினை உடைய நீங்கள் சரியான துணையுடன் செயல்படும் காரியங்களில் வெற்றி காண்பவர்கள். உங்களின் வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செயல்படும்போது உங்களை வெல்ல எவராலும் இயலாது. உங்களின் வழிபாட்டிற்குரியவர் மோகன கணபதி

    துலாம்: அயராத உழைப்பினை உடைய நீங்கள்,மேற்கொண்ட லட்சியத்தினை அடையும் வரை ஓய மாட்டீர்கள். ஒரு லட்சியத்தில் வெற்றி பெற்றாலும் நிறைவு கொள்ளாது, அடுத்த லட்சியத்தை நாடி செல்பவர்கள். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வானமே எல்லை என்று செயல்பட்டு வரும் உங்களின் வழிபாட்டிற்கு உரியவர் க்ஷிப்ர ப்ரஸாத கணபதி.

    விருச்சிகம்: இயற்கையில் மிகவும் சுறுசுறுப்பான குணத்தினை உடைய நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்காது சதா பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் நினைத்த மாத்திரத்தில் காரியத்தை செய்துமுடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தினைக் கொண்டவர்கள். எப்போதும் பரபரப்புடன் இயங்கி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சக்தி கணபதி

    தனுசு: குரு பகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் நேர்மையை மிகவும் நேசிப்பவர்கள். நேர் வழியைத் தவிர குறுக்குவழியில் செல்ல விருப்பமில்லாதவர்கள். தர்ம நெறியில் செல்வதால் அடிக்கடி தர்மசங்கடத்தை சந்தித்து வரும் உங்களுக்கு சங்கடஹர கணபதியே வழிபாட்டிற்கு உகந்தவர்.

    மகரம்: சனிபகவானின் ஆதிக்கத்தினைப் பெற்ற நீங்கள் தியாக உள்ளம் கொண்டவர்கள். அளவான ஆசை கொண்டவர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையினால் ஒருசில இழப்பினை சந்திப்பவர்கள். இதனால் அடிக்கடி மனக் குழப்பத்திற்கு ஆளாகும் நீங்கள் மனதினை அடக்கி ஆள கற்றுக் கொண்டீர்களேயானால் வெற்றி நிச்சயம். நீங்கள் வழிபட வேண்டியவர் யோக கணபதி.

    கும்பம்: அனுபவ அறிவின் மூலமாக அடுத்தவர்களை அடக்கி ஆள நினைப்பவர்கள் நீங்கள். தான் அறிந்திராத விஷயத்தையும் கூட தனக்குத் தெரியாது என்று வெளிக்காண்பிக்காமல் செயல்படுவீர்கள். அதேநேரத்தில் அவற்றை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் செலுத்துபவர்கள். புதிய விஷயங்களையும் எளிதில் கற்றுக்கொண்டு தனித்திறமை மூலம் முன்னேறி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சித்தி கணபதி.

    மீனம்: இயற்கையில் கள்ளம், கபடம் இல்லாத குழந்தைத்தனமான குணத்தினை உடையவர்கள் நீங்கள். அடுத்தவர்களிடம் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எல்லோரும் நல்லவரே என்ற எண்ணத்துடன் பழகி வருவீர்கள். சூது, வாது தெரியாத நீங்கள், தான் நினைத்ததை அடைந்துவிட வேண்டும் என்ற பிடிவாத குணத்தினை உடையவர்கள். உங்களுடைய வழிபாட்டிற்கு உரியவர் பால கணபதி.

     

  • எந்தெந்த கிழமையில் எந்தெந்த கடவுளை வணங்குவது சிறப்பு? 

     

    ஞாயிறு – கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரியனை வணங்க ஏதுவான நாள். ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்லி வணங்கலாம்.

    திங்கள் – சிவாலய தரிசனம் நன்மை தரும். தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி பாடல்களைக் கொண்டு அம்பிகையையும், சிவபெருமானையும் வழிபடுவது நல்லது.

    செவ்வாய் – சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில் ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் நினைத்தது நடக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். கந்தசஷ்டி கவசம் படிப்பதும் நன்மை தரும்.

    புதன் – பெருமாளை சேவிப்பது நன்மை தரும். துளசிமாடத்திற்கு பூஜை செய்ய உகந்த நாள். விஷ்ணு ஸஹஸ்ரநாமம், நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களைப் படிப்பதும் நன்மை தரும்.

    வியாழன் – நாம் குருவாக எண்ணும் மகான்களைப் போற்றுவதற்கு உகந்த நாள். சாயிபாபா, ராகவேந்திரர், ராமானுஜர், காஞ்சி பரமாச்சார்யாள் போன்ற மகான்களை ஆராதனை செய்ய உகந்த நாள் பகவத்கீதையைப் பொருள் புரிந்து படிப்பது நன்மை தரும்.

    வெள்ளி – மஹாலக்ஷ்மி வழிபாடு நன்மைதரும். கோபூஜை செய்வது, பஞ்சமுக குத்துவிளக்கினை ஏற்றி வைத்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அம்பிகையின் ஆலயங்களை தரிசிப்பது நன்மை தரும். மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம், மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம், அன்னபூர்ணா அஷ்டகம் ஆகியவற்றைப் படிப்பதும் நல்லது.

    சனி – ஆஞ்சநேயர், கருடாழ்வார், நந்திகேஸ்வரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என இறைவனுக்குத் தொண்டு செய்து இறைநிலை அடைந்த அடியவர்களை வணங்குவதற்கு உகந்தநாள். ராமாயணம், மகாபாரதம், சுந்தரகாண்டம், பெரியபுராணம் முதலான நூல்களைப் படித்தறிதலுக்கு உகந்த நாள். விநாயகப்பெருமானை எல்லா நாட்களிலும், எல்லா நேரத்திலும் வணங்கலாம். நினைத்தவுடன் நம் மனக்கண் முன் தோன்றுபவர் விநாயகர்.

  • கண் திருஷ்டி நீக்கும் கண் நிறைந்த பெருமாள்!

     

    நீண்டப் பெரியவாய கண்கள் என்னை பேதமை செய்தனவே!’ இது திருப்பாணாழ்வாரின் வாக்கியம். உறையூர் அழகியமணவாளனை மட்டுமின்றி, மலையடிப்பட்டி கண் நிறைந்த பெருமாளையும் இது குறிக்கும்.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலிருந்து கிள்ளுக்கோட்டை செல்லும் வழியில் சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ள ஊர் மலையடிப்பட்டி. இங்கு கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீகண் நிறைந்த பெருமாளுக்கு அபிஷேக – ஆராதனைகள் செய்து வழிபட்டால் கண் குறைபாடுகள் நீங்கும்; திருஷ்டி தோஷங்கள் விலகும். 

    சுமார் 2500 வருட பழைமை வாய்ந்த கோயில் இது. ஒருகாலத்தில், ‘திருமால் அடிப்பட்டி’ என அழைக்கப்பட்டு, பின்னர் இந்த ஊர் ‘மலையடிப்பட்டி’ என மருவியதாகச் சொல்வர். சீதை பெற்ற செல்வம் லவன். பின்னர் சீதைக்கு உதவியாக வால்மீகி முனிவர் குசனை தோற்றுவித்த தலம் இது. பராசக்தியின் அருள், இந்த சக்தி தீ்ர்த்தத்தில் விளையும் தர்ப்பைக்கு உண்டு என்பர்.

    நின்றான், அமர்ந்தான், கிடந்தான் எனும் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார் பெருமாள். மதுரை கூடலழகர் கோயிலிலும் பெருமாள் இதுபோன்ற மூன்று நிலைகளில் சேவை சாதிக்கின்றார். சயனித்துள்ள மூலவர் அனந்தபத்மநாபனாகவும், அமர்ந்த நிலையில் உற்சவர் வைகுண்டநாதராகவும் அருள்கிறார். நின்ற கோல பெருமாள் புண்டரீகாட்சன் எனும் திருநாமத்தில் அழைக்கப் படுகிறார். தாயார் கமலவல்லி நாச்சியார், செல்வங்கள் அள்ளித் தந்து பக்தர்களின் குறைகளையும் கவலைகளையும் தீர்க்கிறாள்.

     

     

    புகழ்பெற்ற திருவனந்தபுர அனந்தபத்மநாபனுக்கும் கண் நிறைந்த பெருமாளுக்கும் சில பொருத்தங்கள் உண்டு. அங்குள்ளது போன்றே, கருவறை…. மூன்று பாகங்களில் வாயில் கதவுகள் இல்லாமல், தூண்கள் மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. திருவரங்கத்து அரங்கன் புஜங்க சயனம், மலையடிப்பட்டி அரங்கன் அனந்த சயனம். பாதங்களில் பத்ம கமலங்கள் (தாமரை மலர்).  திவாகர மகரிஷி தாமரை மலர்களைக் கொண்டு பூஜித்துப் பலன் பெற்றார். எனவே, தாமரை மலர்கள் கொண்டு பெருமாளை வழிபடுவது சிறப்பு. பாதத்துக்கு அருகில் ஸ்ரீமகாலட்சுமியும்  நாபிக்கமலத்தில் பிரம்மாவும், நவகிரகங்களும், கந்தர்வர்களும் வீற்றிருக்கின்றனர். இறைவனின் பாதத்தையொட்டி ஸ்ரீபட்டாபிஷேக நரசிம்மரும், ஸ்ரீவைகுண்டநாதரும் வீற்றிருக்கிறார்கள். மற்ற எந்த திருத்தலத்திலும் பட்டாபிஷேக நரசிம்மரைத் தரிசிப்பது அரிது என்கின்றனர். இரண்ய வதம் முடித்து பிரகலாதனுக்கு பட்டாபிஷேகம் நடத்தும் கோலத்தில் காட்சி அளிக்கிறார் இவர். ஸ்ரீவைகுண்ட நாதர் தரிசனம் முக்தி அளிக்கும்.

     

    கோயிலுக்கு எதிரில் சக்திவாய்ந்த தீர்த்தக்குளம் உள்ளது. இங்கே பக்தர்கள் கால்கள்படாமல் நீரை எடுத்துத் தலையில் தெளித்துக்கொண்டு, பிறகு கோயிலுக்குள் செல்ல வேண்டும்.  தல விருட்சமான அழிஞ்சில் மற்றும் வில்வத்துக்கு இங்குள்ள சக்தி தீர்த்தத் திலிருந்து கால்படாமல் நீர் எடுத்து வந்து ஊற்றி, நம் கைகளால் அரைத்த மஞ்சள் பூசி, குங்குமத்தில் பொட்டிட்டு வணங்கினால் லட்சுமிகடாட்சம் பெருகும்; திருமணத் தடை நீங்கும். பெருமாளின் திருமுடிக்கு மிக அருகில் இறக்கையை விரித்த வண்ணம் கருட பகவான் சேவை சாதிக்கிறார். எனவே, முக்தி தரும் தலம் இது என்கிறது ஸ்தல வரலாறு.

    கண் திருஷ்டி, பில்லி சூனியம், ஏவல் மற்றும் சகல வித தோஷங்களும் பெருமாளை ஸேவித்தால் நீங்கும். பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் வேண்டிக்கொண்டால், பார்வை சீராகும். மேலும் இந்தத் தலத்தை கிரிவலம் வந்து வழிபட்டால் பூர்வ ஜென்ம புண்ணியங்களைப் பெறலாம். பக்தர்கள் முப்பது முழம் சாமந்தி அல்லது செவ்வந்திப் பூக்களை மாலையாகக் கோத்து அணிவித்தால் நன்மை கிட்டும். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறையும்.

     

     

  • ஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்!

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு, 9 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 15ம் நூற்றாண்டு முதல் நடைபெற்று வந்த புஷ்பயாகம், காலப்போக்கில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 1980ஆம் ஆண்டு முதல், புஷ்ப யாகம் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கு வருடத்தில் வரும் கார்த்திகை மாத ஸ்ராவண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அதன்படி, கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு, ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து பாபவிநாசம் சாலையில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்தில் இருந்து, பல வண்ண மலர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர், தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 டன் மலர்கள், கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 3 டன் மலர்கள் மற்றும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 2 டன் மலர்கள் என மொத்தம் 9 டன் மலர்களை கொண்டு புஷ்பயாகம் நடைபெற்றது.

  • திருப்பதி ஸ்ரீவாரி சேவையில் புதியமுறை

    திருமலை ஏழுமலையானுக்கு பக்தர்கள் செய்யும் ஸ்ரீவாரி சேவையில் புதிய முறையை தேவஸ்தானம் அமல்படுத்துகிறது. நவம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் புதிய முறை நடைமுறைக்கு வருகிறது.
    ஏழுமலையானுக்கு தற்போது சேவை செய்ய வரும் பக்தர்கள் ஒரு வாரம் திருமலையில் தங்கி சேவை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தங்கும் இடம், உணவு, ஏழுமலையான் தரிசனம், லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.
    இந்நிலையில், 3 மற்றும் 4 நாள்கள் சேவையை தொடங்க வேண்டும் என இளைஞர்கள் தேவஸ்தானத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, 3 மற்றும் 4 நாள்கள் சேவையை தேவஸ்தானம் வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில், சேவை புரிய விரும்பும் இளைஞர்கள் அக்டோபர் 24 முதல் தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
    3 நாள்கள் சேவை: வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, வயது வரம்பு 25 முதல் 40 வரை. 4 நாள்கள் சேவை: திங்கள் முதல் வியாழக்கிழமை வரை, வயது வரம்பு- 18 முதல் 60 வரை என தேவஸ்தானம் தெரிவித்தது.

  • தோனியின் 2 வயது மகளால் உலக புகழ்பெற்ற கேரள கோயில்

    அம்பலப்புழா கிருஷ்ணன் கோயில் குறித்த பாடல் பாடிய கிரிக்கெட் வீரர் தோனியின் 2 வயது மகளை திருவிழாவின் போது சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது அம்பலப்புழா உண்ணிக்கிருஷ்ணன் கோயில். கேரளாவில் புகழ்பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன் மோகன்லால் நடித்த ‘அத்வைதம்’ என்ற திரைப்படத்தில், ‘ அம்பலப்புழா உண்ணிக் கண்ணனோடு நீ…’ என தொடங்கும் பாடல் இடம் பெற்றிருந்தது. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனியின் 2 வயது மகள் சிபா, இந்த பாடலை பாடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. தோனியே இதை படம்பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன்மூலம், அம்பலப்புழா உண்ணிக்கிருஷ்ணன் கோயிலும் உலகளவில் பிரபலமாகி விட்டது. இதையடுத்து, கோயில் திருவிழாவின் போது தோனி மகள் சிபாவை சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஜனவரி 14ம் தேதி கோயிலில் நடக்கும் 12 களபம் திருவிழாவின் போது தோனி மகளை அழைத்து கவுரவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  • குழந்தை வரம் வேண்டுமா திருக்கருகாவூருக்கு செல்க!

     

     

    குழந்தை வரம் வேண்டுமா  திருக்கருகாவூரில் உள்ள கர்ப்பரட்சாம்பிகையின் சந்நிதிக்கு வந்து, அம்பாளை மனதார வழிப்பட்டால் ,நிச்சயம் உங்களுக்கு குழந்தை வரம்  கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

     குழந்தை பாக்கியம் மட்டும் அல்ல, திருமண பாக்கியம் கூடி வராத பெண்களும்   இங்கு வந்து  கர்ப்பரட்சாம்பிகை  பிரார்த்தனை  செய்தால் திருமணம் கூடி வரும்.  அதே போல் ,முற்பிறவிகளின் கர்மாக்கள் காரணமாக புத்திர பாக்கியம் இல்லாமல் இருப்பின்,வியாழக்கிழமைகளில்  கர்ப்பரட்சாம்பிகை சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி அம்பாளை வழிபட்டு வந்தால்,வம்ச தோஷம் நீங்கி,புத்திர பாக்கியம் கிடைக்கும். இது மட்டும் அல்ல அடியார்களை வாட்டும் நோய்நோடிகளில் இருந்து அவர்களைக் காத்தருள செய்கிறார்.

     வளர்பிறை பிரதோஷ   நாளில் கருகாவூரின் நாயகர் முல்லைவனநாதர்க்கு புனுகு சார்த்தி வணங்கினால்,தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்து விடும்  என்பதும் இத்தலத்துக்கான மற்றொரு சிறப்பு அம்சமாகும். இத்தலம்   வரலாற்று  காலம் தொட்டே,கருவுற்ற  மகளிருக்கான ஆரோக்கியதலமாக இருந்து வந்துள்ளது. போர் நிகழும் காலங்களில் ,கருவுற்ற மகளிருக்கு அடைக்கலாம் தரும் இடமாக  இவ்வூர் திகழ்ந்தாக வரலாற்றுக்   கூறுகிறது.

     தங்க தொட்டில் தலலோ

     

    தமிழக கோயில்களிலேயே   இங்கே மட்டும் தான் தங்கத் தொட்டில் பிரார்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற கோயில்கள் போல தங்கரதம் செய்ய வேண்டும் என்ற யோசனை  எழுந்த போது. எது மகப்பேறு அருளும் தலம் என்பதால் தங்கத் தொட்டில் செய்துவைத்தோம் என்கிறார்கள். அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள்,தங்க தொட்டிலில் தங்கள் சிசுவைப் படுக்கவைத்து,அம்பாள்  சந்நிதியை ஒருமுறை வலம் வருகின்றனர்.

    தங்கத்தால் செய்யப்பட்ட தொட்டிலுக்குச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால்,அழகாக உருண்டு வரும்.குழந்தைக்காக வேண்டி வருபவர்களும் இந்தப் பிரார்த்தனையச் செய்யலாம்.அவர்கள், குழந்தைக்கு பதிலாகக் கோயிலில்  தரப்படும் ஸ்கந்தர் விக்கிரத்தை தொட்டிலில் இட்டு ,அம்பாள் சந்நிதியை வலம்வந்தால், குழந்தை பாக்கியம்   நிச்சயம் கிடைக்கும்.

     

    அன்னையின் அருள் பெற்றதாக  நடிகை ஸ்ரீப்ரியா நம்முடன் சிலவற்றை பகிர்கிறார்.

    என் வாழ்வில் திருக்கருகாவூருக்கு  ஓரு முக்கியமான இடம் உண்டு.என்னுடைய அம்மா ஊர் கும்பகோணம். அதனால் அதை சுத்தி இருக்கிற கோயில்கள் பத்தி எல்லாம் அவங்களுக்கு நல்லா தெரியும்.  என்னுடைய முதல் குழந்தை .ஆறு மாதங்களில்  சிதைஞ்சுப் போயிடுச்சு.அந்த சமயத்தில் நான்  ரொம்ப மன உளைச்சலில் இருந்தேன். அம்மா திருக்கருகாவூர் கோயிலுக்கு பொய் எங்களுக்காகப் பிரார்த்தனை பண்ணிட்டு பிரசாதமும் ,நெய்யும் கொண்டு வந்து  கொடுத்தாங்க.

    நாங்க கோவிலுக்கு போகலன்னாலும். அந்த கர்ப்பரட்சகி மேல முழு நம்பிக்கையும் வெச்சு, மனதார  வேண்டிக்கிட்டு முறைப்படி அந்த நெய்யைச் சாப்பிட்டு வந்தோம்.அந்த வருடமே  மீண்டும் நான் கருத்தரிச்சேன். அதிலிருந்து யாராவது குழந்தை இல்லைன்னு வருத்தப்பட்டு   என்கிட்ட  சொன்னால் உடனே நான் அவங்களுக்குச் சொல்றது திருக்கருகாவூர் போய்ட்டு வாங்க என்பது தான்.   40 வயதுக்கு மேல ஆனவங்களுக்குக் கூட திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை  கோவிலுக்கு  சென்று வந்தால் குழந்தை பிறந்திருக்கு.

    குழந்தை இல்லாதவர்கள்  நம்பிக்கையோடு ஒருமுறை திருக்கருகாவூர் சென்று அம்பாளை வழிப்பட்டு வாருங்கள். நிச்சயம் அம்மனின் அருளால் குழந்தை பாக்கியம் பெறுவீர்கள்.

     

  • பெண் வடிவ தட்சிணாமூர்த்தி!

     

     

    சிவனுடன் போட்டி நடனமிட்ட பார்வதி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை காளி கோவிலில் அருள்பாலிக்கிறாள். இங்கு பெண் வடிவ தட்சிணாமூர்த்தி உள்ளார்.

    தல வரலாறு: சிவ, சக்தி இடையே தங்களில் யார் சக்தி மிக்கவர் என வாதம் ஏற்பட்டது. பார்வதிதேவி, ‘நானே உயர்ந்தவள்’ என வாதிட்டாள். ”சரி…நீயே உயர்ந்தவளாக இரு!” என்ற சிவன் அவளை உக்கிர (கோபம்) காளியாக மாற்றி விட்டார். தாயுள்ளம் கொண்ட தனக்கு கோபம் வரும்படி ஆகி விட்டதே என வருந்திய பார்வதி, சிவனிடம் விமோசனம் கேட்டாள். 
    அதற்கு சிவன், ”பார்வதி! நீ வருந்த வேண்டாம். உலக நன்மை கருதி நான் செய்த திருவிளையாடலே இது. அரக்கர்களால் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் துன்பம் ஏற்பட இருக்கிறது. நீ அவர்களை அழிக்க வேண்டும். பின், தில்லை(சிதம்பரம்) வந்து என்னை நோக்கி தவம் இரு. நான் அங்கு ஆனந்த நடனமாட, நடராஜர் என்ற பெயர் தாங்கி வருவேன். அப்போது சிவகாமி என்ற பெயருடன் என்னை வந்தடைவாய்,” என்றார். 
    அவள் ‘தில்லை காளி’ என்ற பெயரில் சிதம்பரத்தில் அமர்ந்தாள். ‘எல்லைக்காளி’ என்றும் சொல்வர். 
    நான்கு முக அம்மன்: சிவனுக்கும், அம்பாளுக்கும் நடந்த நடனப் போட்டியில், சிவன் ஊர்த்துவ தாண்டவர் என்ற பெயரில், உக்ர தாண்டவம் ஆடினார். ஒரு கட்டத்தில் தன் காலைத் தலையில் தூக்கி வைத்து ஆடிய சிவன், இவ்வாறே காளியால் செய்ய முடியுமா என கேட்டார். ஆனால், பெண்மைக்குரிய தன்மையால் அவளால் இயலவில்லை. இதனால் அவள் தோற்றாள். இதையடுத்து காளியின் கோபம் அதிகரித்தது. அவளை அமைதிப்படுத்த விரும்பிய பிரம்மா, ‘வேதநாயகி’ எனப் புகழ்ந்து பாடி, நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில் உருவத்தை மாற்றும்படி வேண்டினார். அவளும் ‘பிரம்ம சாமுண்டீஸ்வரி’ என்ற பெயரில் நான்கு முகத்துடன் காட்சி தந்தாள். இவள் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சாந்தசொரூபிணியாக அருள்கிறாள்.
    தில்லை காளி: தில்லை காளிக்கு பக்தர்கள் நல்லெண்ணெய் அபிஷேகம், வெள்ளை வஸ்திரம் அணிவித்தல், குங்கும அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். ஞாயிறு (ராகு காலம்), பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜை நடக்கும். மகம் நட்சத்திரத்திற்கு இவள் அதிதேவதை என்பதால், மகத்தில் பிறந்தவர்கள், நினைத்தது நிறைவேற இவளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். 
    வித்தியாசமான தட்சிணாமூர்த்தி: தட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் ‘கடம்பவன தக்ஷணரூபிணி’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். விரிந்த கூந்தலுடன் கல்லால மரத்தடியில் காட்சி தருகிறார். அருகில் சனகர், சனந்தனர், சனவாதனர், சனத்குமாரர் என்ற முனிவர்கள் வீற்றிருக்கின்றனர். கல்வியில் சிறப்பு பெற மாணவர்கள் வியாழனன்று நெய் தீபமேற்றி வழிபடுகின்றனர். பிரகாரத்தில், நின்ற கோலத்தில் உள்ள சரஸ்வதிக்கு ‘வீணை வித்யாம்பிகை’ என்று பெயர். கல்வி அபிவிருத்திக்காக இவளை வணங்கி வரலாம்.

  • தட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவரா?

     

    தட்சிணாமூர்த்தி என்பவர் யார்? குரு என்பவர் யார்? மூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் தட்சிணாமூர்த்தி வேறு. இருவரும் ஒருவரல்ல.ஆனால் நிறையபேர் தட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவர்தான் என நினைத்துக்கொண்டு வழிபாடு செய்கின்றார்கள்.(நானும் அவ்வாறு வழிபாடு செய்துவந்துள்ளேன்) உண்மையில் தட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

    அது தொடர்பான விவரங்கள் வருமாறு:-

     தட்சிணாமூர்த்தி என்பவர் சிவ வடிவம். குரு பகவான் என்பவர் கிரகவடிவம். இவர் சிவன். அவர் பரகஸ்பதி. தட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி.குரு அதிகாரி. தட்சிணாமூர்த்தி சிவகுரு. தெற்குநோக்கி உள்ளார். குரு தேவகுரு. வடக்கு நோக்கி உள்ளார். தட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர்,சனாதனர்,சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுககு போதிப்பவர்.
    குரு பகவான் நவகோற்களில் குரு என்கின்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்கிளல் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர். தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர். குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர். சிவன்தோன்றுதல் மறைதல் என்கின்றத தன்மைகள் இல்லாதவர். குருவோ உதயம் அஸ்தமனம் என்கின்ற தன்மைகள் உடையவர்.
    இத்தனை தத்துவவேற்றுமைகளை கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர்.இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல…
    தட்சிணாமூர்த்தியை தட்சிணாமூர்த்தியாக(சிவகுருவாக)வழிபடுங்கள். சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தியை குருபகவான் என்றே மாற்றிவிட்டார்கள்.
    அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கின்றார்கள்.குருவிற்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தட்சிணாமூர்த்திக்கு அணிவிக்கின்றார்கள்.கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கின்றார்கள்.
    குருபெயர்ச்சியன்று தட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள் சாந்தி பரிகாரங்கள் செய்கின்றார்கள்.
    இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள்சொல்கின்றார்கள் என்கின்றபோதும் தட்சிணாமூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகின்றார்கள்.
    குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும்தானாம். ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம். அதனால் குருவுக்கு செய்வதை இவருக்கு செய்வதில் தவறில்லை என்று வாதிடுகின்றார்கள். அதுவும் தவறு.
    குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பரிம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன. 
    எனவே தட்சிணாமூர்த்தியும் குருபகவான ஒன்றே என நம்மை நாமே குழுப்பிக்கொள்ளக்கூடாது.

  •  அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?

     

    கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன். அதனை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலம் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
    சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம். அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்ய ணேவ்டும்? மற்ற மாதங்களில் செய்யலாமே?
    ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.
    அது என்ன சாபம்?
    தெரிந்த கதைதான். சந்திரன், அஸ்வினி முதல் ரேவதி வரையிலான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சனால் உடல் தேயட்டும் என்று சாபம்.
    சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது. அவன் மிகவும் வருந்திக் கெஞ்சவே, திங்களூரில் சிவனை பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார், தட்சன். உடனே அவன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான். அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார், அவன்பால் மனமிரங்கி அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார்.
    கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுப்பொலிவும் வருடத்தின் ஒருநாள் அதாவது ஐப்பசி பௌர்ணமி அன்று மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும். இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாக இருக்கும் என்று அருளிச் செய்தார் விடைவாகனர்.
    திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு!
    ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல்.
    நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தினார்கள்.

     

    அன்னாபிஷேகத்தின் சிறப்புகள்:
    அம்பிகைபாகன் சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே.
    அன்னம் பிராணன் என்றும், அஹமன்னம் எனவும் வேதங்கள் போற்றுகின்றன. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிடதங்கள்.
    இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சம் கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
    அது மட்டுமல்ல, நமது பேரண்டம் நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு என்னும் பஞ்ச பூதங்களால் ஆனது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்ற திருமூலர் வாக்குப்படி நமது உடலும் பஞ்சபூதங்களுக்கும் தலைவன் சிவபிரான்.
    அந்தப் பஞ்சபூதங்களை சரியான வகையில் செயல்படச் செய்து, உயிர்களுக்கு உணவும் நீரும் குறைவின்றிகிட்ட அருள் செய்த ஈசனுக்கு நன்றி சொல்லும் வகையிலும், நாட்டிலும் வீட்டிலம் எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் வராமல் இருக்கவும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.
    அன்னம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாவது நிலத்தில் விழும் நெல், ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் வெப்பத்தீயினால் பால் இறுகி விளைச்சலைத் தருகிறது. காற்றின் உதவியுடன் கதிரடித்து எடுக்கப்படும் நெல், உமி நீக்கப்பட்டு அரிசியானபின் மண்ணால் ஆன பானையில் நீரில் இடப்பட்டு, காற்றின் துணையால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழுள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது. அந்த அன்னத்தினால் செய்யப்படுவதால்தான், அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.

    அன்னாபிஷேகம் செய்யும் முறை:
    ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்க அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த அன்னத்தைக் கொண்டு (தேவையானால் சற்று நீர் கலந்து) அன்னாபிஷேகம் செய்யப்படும். சமீபகாலமாக அன்னாபிஷேகத்தின் போது அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு லங்காரம் செய்வது வழக்கமாயிருக்கிறது.
    சிவலிங்கத் திருமேனியின் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள். சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். கீழ்ப்பகுதி, பிரம்ம பாகம். நடுப்பகுதி, விஷ்ணு பாகம். இதுவே ஆவுடை. மேற்பகுதி பாணம், சிவபாகம். அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படும்.
    இந்த அபிஷேகம் மட்டும்தான் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்திரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும். நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் மீதமிருக்கும் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.
    லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும். எனவே அதனை எவரும் உண்ணாமல் அப்படியே எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள். நீர்வாழ் உயிர்களுக்கு உணவு!
    நமது இந்து மதம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை. எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு தடையின்றிக் கிடைக்கும் என்பதை இயற்கையின் சமன்பாட்டு விதியை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர்.
    அதனால்தான் அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாம் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது.
    நல்ல அதிர்வுகளும், உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் பிரும்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கே அளிக்கப்படுகிறது. ஏனெனில் அவற்றைத் தாங்க சிறு உயிர்களால் முடியாது என்ற ஜீவகாருண்யமே காரணம்.
    பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னத்தில் சில கோயில்களில் தயிர் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.