Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்!

    திருச்செந்தூரில் அமைந்துள்ள, சுப்ரமணிய சுவாமி கோவில், அறுபடை வீடுகளில், இரண்டாம் படை என போற்றப்படும், மிகச் சிறப்புமிக்க கோவிலாகும். சூரசம்ஹாரம் சிவனின் தோன்றல் பாலமுருகனுக்கும், சிவனின், தீவிர பக்தன் சூரபதுமனுக்கும், திருச்செந்துார் கடற்கரையில் நிகழ்ந்ததால், அங்கு, இப்போதும் இந்நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில், ஆண்டுதோறும், வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மிகச் சரியாக, திருச்செந்துாரில் இருந்து, 6 மைல் துாரத்தில், கடற்கரையோரமாக உள்ள, மாம்பாடு என்ற தலத்தில் தான், போர் நடந்தது. தற்போது, அந்த ஸ்தலம், மணப்பாடு என, அழைக்கப்படுகிறது.

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா… என்கிற கோஷம், விண்ணை முட்டும் அளவிற்கு, பக்தர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும், முருகனை மயில் வாகனத்தில் ஏற்றி, சேவல் கொடியை அளிக்கின்றனர். போரில் வெற்றி அடைந்ததும், முருகன், தன் அய்யன் சிவனுக்கு பூஜை செய்ய விரும்பினான். அதற்காக, கடற்கரையில் கட்டப்பட்ட கோவில் தான், திருச்செந்துார் கோவில். இங்கு, மூலஸ்தானத்தின் பின்பகுதியில், முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தை காணலாம். வெற்றி மாநகர் என, பொருள் படும்படி, ஆரம்பத்தில் வடமொழியில் ஜெயந்திபுரம், பின், சயந்தி, செந்தில் என அழைக்கப்பட்டு, இறுதியில், திருச்செந்துார் என்ற தமிழ்ப்பெயரில் நிலைத்து இருக்கிறது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை நேரில் கண்டாலும், அதன் சிறப்பை படித்தாலும், பெரியவர்கள், ஆன்மிகவாதிகள் சொல்ல காது குளிரக் கேட்டாலும், பகைவனின் பயமின்றி தைரியமாக வாழலாம். அஞ்சும் முகம் தோன்றும் போது, இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள் என்பது நம்பிக்கை. இந்நிகழ்ச்சியின் போது வழங்கப்படும் பிரசாதம், திருநீறு மந்திரமாகும் என்பது, திருமூலர் வாக்கு.

    ஆறுமுகக் கடவுள் நம் முருகன்!

    ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம் மற்றும் புகழ் என்கிற ஆறு குணங்களை குறிக்கிற, இந்த ஆறுமுகக் கடவுளை தோற்றுவிக்க எழுந்தது, அதோமுகம். அதோமுகம் என்பது, சிவனின் ஆறாவது முகம் என, தன் திருமந்திரத்தில் குறிக்கிறார், திருமூலர். சிவன், ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களை, திருவானைக்காவல் திருத்தலத்தில் காட்டி அருள்கிறார். ஞானிகளுக்கு மட்டும் புலப்படும் ஆறாம் முகமான அதோமுகம், சூட்சுமமாக கண்களுக்கு புலப்படாமல், மறைந்து அகமுகமாகவே இருக்கும். ஆனால், சூரபதுமனை வெல்வதற்காக, திருமுருகனைத் தோற்றுவிக்கத் தீப்பொறியைத் தெறிக்க எழுந்த போது, காட்சியானது அதோமுகம். இம்முகம், பூலோக இறுதியில், ஊழியின் முடிவில், மீண்டும் தோன்றும் என்கிறது திருமந்திரம். உக்கிரத்தை வெளிப்படுத்தும் அதோமுகம், சனகாதி முனிவர்களுக்குக் காட்சி அளிக்கும் போது மட்டும், சாந்த சொரூபமாக இருக்கும்.

    கந்த சஷ்டி திருநாள் :

    கந்த சஷ்டி என்றால், திருச்செந்துார். வேல் என்றால், அது ஆணவத்தை அழித்து, நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். இதன் பொருள் விளங்கும்படி தான், பக்தர்கள், வேல் வேல் வெற்றிவேல்… என, முழங்குகின்றனர். ஐப்பசி மாதத்தில் வருகிற தேய்பிறை சஷ்டியே,கந்தர் சஷ்டி நாள். இந்நன்னாளில், என்ன வரம் கேட்டாலும், அந்த வரம் தந்திடுவான் முருகன் என்பது நம்பிக்கை. மற்ற நாட்களில், விரதம் இருக்க இயலாதவர்கள் கூட, ஆறாவது திதி நாளாம், சஷ்டியில் விரதம் இருப்பதன் மூலம், மகாலட்சுமியின் அருளையும் பெறலாம் என்பதும் ஐதீகம்.

    அசுரர்களை அழிக்க நினைத்த முருகன், முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என, எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்து, ஆறாம் நாள், எஞ்சியிருந்த அரக்கன் சூரபதுமனை அழித்தார். இப்படி, நம் முருகப்பெருமான், அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே, நாம், கந்த சஷ்டி விழாவாக கொண்டாடி மகிழ்கிறோம். இன்று, முருகனுக்கு பால், பழம், தினைமாவும், தேனும் கலந்து நிவேதிப்பது விசேஷமானது. சஷ்டி விரதமிருந்தால், கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதைத் தான், சட்டியிலிருந்தால் தான் அகப்பையில் வரும் என, பழமொழியாக சொல்கிறோம். ஐஸ்வர்யத்தைத் தரும் ஆறாம் எண்ணிக்கையில், இந்த விரதம் வருவது மிகச்சிறப்பு. ஆறாம் எண்ணுக்குரிய கிரகம் சுக்கிரன். வீடு, திருமணம், வாகனம் என, திருமகளின் அம்சமாக, அனைத்து சவுகரியங்களையும் தரக்கூடியது சுக்கிரனே. எனவே, கந்த சஷ்டி திருநாளில், சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி, நற்கதி பெறுவோம். 16 செல்வங்களையும் பெற்று, இன்பமான வளமான வாழ்வை பெறுவோம்.

    கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, சூரபதுமன் வதம் தவிர்த்து, மேலும் இரு காரணங்கள் உண்டு. உலக நன்மைக்காக, முருகன் அவதரித்த நாள் என்பதற்காகவும், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை வேண்டி, யாகம் செய்ய முருகன் தோன்றி, அருள்புரிந்த நாள் என்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது. கணவனும், மனைவியும் இணைந்து இந்த விரதத்தை மேற்கொண்டால், நல்ல பிள்ளைகள் பிறப்பர் என்பது நம்பிக்கை!

     கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை:

    அதிகாலை, 4:30 மணியிலிருந்து, 6:00 மணிக்குள் குளித்து முடித்து, பால் பழம் மட்டும் சாப்பிட வேண்டும். ஓம் சரவணபவ, ஓம் சரவண பவாய நம, ஓம் முருகா… ஆகிய மந்திரங்களில், ஒன்றை தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா… வேலவனுக்கு அரோகரா… என கோஷமிட்டு, கோவிலில் விளக்கேற்றி, வழிபாடு செய்ய வேண்டும். திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம் மற்றும் சண்முக கவசம் போன்ற பாடல்களில் ஒன்றை, காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்வது நல்லது.

     விழா முடிவு? :

    சூரசம்ஹாரத்தோடு, இன்றைய விழா முடிவடைந்து விடுவதில்லை. தேவர்களுக்கு, முருகன் செய்த மாபெரும் உதவிக்கு கைமாறாக, தன் மகள் தெய்வானையை, முருகனுக்கு மணம் முடித்து வைத்தான் இந்திரன். எனவே, மறுநாள், முருகன் – தெய்வானை திருமண வைபவத்தோடு தான், விழா நிறைவு பெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலில் மட்டும், சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. காரணம், அங்கு போருக்குப் பின், அமைதி நிலவுவதாக ஐதீகம். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை, தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்த முருகன், ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின் போது, சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா என, மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். சூரசம்ஹார விழாவின், ஏழாம் நாளன்று, மாலையில், முருகன் சிவப்பு ஆடை அணிந்து, சிவ பெருமானாகவும், எட்டாம் நாள் அதிகாலையில், வெண்ணிற ஆடையில், பிரம்மாவின் அம்சமாகவும், மதிய வேளையில், பச்சை ஆடை சாத்தி, பெருமாள் அம்சமாகவும் காட்சி அளிக்கிறார். உண்மையை பேசி, பிறருக்கு நல்லதை செய்வதால் மட்டுமல்லாமல், தெய்வங்களின் மீதான நம்பிக்கையும் சேர்ந்தால் தான், வாழ்வின் எல்லா நன்மைகளையும், இன்பங்களையும் பெற முடியும்.

     திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் :

    திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி திருவிழாவில், முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. முருகக் கடவுளின் அறுபடை வீடுகளுள், இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில், கந்த சஷ்டி திருவிழா, 20ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும், திருச்செந்துார் வந்திருந்த பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், இன்று நடக்கிறது. மதியம், 2:00 மணிக்கு சஷ்டி மண்டபத்தில், ஜெயந்தி நாதருக்கு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு, சூரசம்ஹாரத்திற்காக, கடற்கரைக்கு சுவாமி எழுந்தருளுகிறார். அங்கு, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.  இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சுரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில்  திரள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • முருகனின்  சூரசம்ஹாரம்!

    சூர பதுமன் + சூர சம்ஹாரம் = அழகன் முருகன்

    தனித்தமிழ் கடவுள் என்ற சிறப்பு பெற்றவன் முருகன்; சூரபதுமன், ‘நான்’ என்கிற அகங்காரமும், ‘என்’ என்கிற மமகாரமும் அமையப் பெற்ற, ஓர் அரக்கன். நம் அழகன், சூரபதுமன் என்கிற அரக்கனின் ஆணவத்தை அடக்கி, அவனை ஆட்கொள்ளவும், தேவர்களின் துயர் போக்கவும், இறைவனால் நிகழ்த்தப் பெற்ற ஒரு திருவிளையாடல் தான், சூரசம்ஹாரம்.

    மிகப்பெரிய யாகங்கள், தவங்கள் செய்து, சிவபெருமானின் நன்மதிப்பைப் பெற்ற சூரபதுமன் என்ற அரக்கன், ‘என்னைக் கொல்ல இந்த ஏழுலத்திலும், யாருக்கும் வல்லமை இருக்கக் கூடாது; மேலும், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான், எனக்கு அழிவு வர வேண்டும்…’ என, புத்திசாலியாகவும் வரம் வாங்கிக் கொண்டான். 

    முனிவர்களுக்கும், மனிதர்களுக்கும், பொறுக்க முடியாத தொந்தரவுகளைச் செய்யத் துவங்கினான் சூரபதுமன். ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலையில், சிவன், தன் அதோமுகத்தின் மூலம், ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்து, ஆறு தெய்வக் குழந்தைகளை உருவாக்கினார்; அக்குழந்தைகளை, ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். சிறிது காலத்திற்குப் பின், சிவபெருமான், அக்குழந்தைகளை ஒன்றிணைத்து, ஆறுமுகன் கடவுளை தோற்றுவித்தார். அன்று தான், தீமைகளை வெல்லும் புனிதம் படைக்கப்பட்டதாய் கூறப்பட்டது.
    அழகனின் தோற்றம், ஈசனின் பங்கோடு முடியவில்லை. தன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி, வேல் ஒன்றை அளித்தாள் சக்தி தேவி. நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் என்ற தலத்தில் தான், தன் தாயிடம் வேலைப் பெற்றார் முருகப் பெருமான். ‘சிக்கலில் வேல் வாங்கி, செந்துாரில் சூரசம்ஹாரம்’ என்பர். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு, முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயமும், ஆண்டுதோரும் நடக்கிறது. 

    அய்யனின் படைப்பும், அம்மையின் ஆயுதமும் இருக்கும் ஆசியால், முருகன், அரக்கன் சூரபதுமனுடன் போரிட்டான்; தான், தனி ஆள் இல்லை என, தன் தளபதி நவவீரர்களின் தலைவன் வீரபாகுவுடன் கைகோர்த்து, அரக்கனை எதிர்த்தான். 
    சூரபதுமன் அவ்வளவு எளியவானா என்ன, உடனே ஒரு வேல் எறிந்ததும் அழிந்து போக! அவனும் பல உருவமாக மாறி, முருகனுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான்.  நம் பால முருகன் சிறுவனாயிற்றே… பயந்து போகட்டும் என, மாமரமாய் உருமாறி, அதை முருகனின் வேல் இரண்டாக பிளக்க, அதில் ஒன்று சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் உருமாற்றினான் சூரபதுமன். முருகனே, தன் வேலாயுதத்தால், சூரபதுமன் உடலை இரண்டாக பிளந்து, சேவலாகவும், மயிலாகவும் மாற்றிக் கொண்டான் .

    என்பதும், மற்றுமொரு வரலாறு! போரின் இறுதி கட்டம் வந்தது. நம் அழகன் முருகன், சூரபதுமன் உருமாறிய சேவலை கொடியாகவும், மயிலை தன் வாகனமாகவும் மாற்றி, வெற்றி முழக்கமிட்டான். இந்த நிகழ்ச்சியின் நினைவுகூறல் தான், இன்று பல திருத்தலங்களில் நடைபெறும், சூரசம்ஹாரம் வழிபாடு!

    திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி திருவிழாவில், முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. சூரசம்ஹாரத்தோடு, இன்றைய விழா முடிவடைந்து விடுவதில்லை. தேவர்களுக்கு, முருகன் செய்த மாபெரும் உதவிக்கு கைமாறாக, தன் மகள் தெய்வானையை, முருகனுக்கு மணம் முடித்து வைத்தான் இந்திரன். எனவே, மறுநாள், முருகன் – தெய்வானை திருமண வைபவத்தோடு தான், விழா நிறைவு பெறுகிறது.

  •   சனி பகவான் காக்கும் கிராமம்!

    மகாராஷ்டிராவின் ஷிரடி கிராமத்தில் இருக்கும் வீடுகள் எந்நேரமும் திறந்துகிடக்கின்றன. இந்த கிராமத்தில் இருக்கும் வீடுகளுக்கு கதவு, பூட்டு, பாதுகாப்பு பீரோ… என எதுவுமே இருக்காதாம். அடுத்த ஊர்களுக்கு செல்வதாக இருந்தாலும் சரி, வெளி மாநிலங்களுக்கு செல்வதாக இருந்தாலும் சரி, வீடுகளை பூட்டாமலேயே சென்றுவிடுவர்களாம்.

    இதற்கான காரணம் ஷிரடி கிராமத்தையும், அங்கிருக்கும் வீடுகளையும் சனி பகவான் பாதுகாப்பதாக, கிராம மக்கள் நம்புகிறார்கள். அதனால் இந்த கிராமத்தில் கதவு, கேட், பூட்டு என எதுவுமே இருப்பதில்லையாம். அதையும் மீறி திருடினால், அதற்கான தண்டனையை சனி பகவான் கொடுத்துவிடுவார், என்ற நம்பிக்கையில் வீடுகளை திறந்து வைத்திருக்கிறார்கள். ஆச்சரியமாக இருந்தாலும், இதுவரை எந்த வீட்டிலும் திருடு போகவில்லையாம்.

  • வியர்க்கும் முருகப்பெருமான்!

    வியர்க்கும் முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்ய இன்று மாலை அன்னை பராசக்தியிடம் வேல் வாங்குகிறார்.

    இன்று மாலை 24.10.2017 சிக்கல் சிங்காரவேலர் சன்னதியில், 1008 அண்டங்களையும், 108 யுகமாக ஆண்டு தீவினை புரிந்த மும்மலங்கள் ரூபமாக விளங்கிய சூரபதுமன், சிங்கமுகன், தாருகன் ஆகியோரின் தீராத கொடுமையில் இருந்து அனைத்து லோகங்களையும் தேவர்களையும் காக்க, போரிடும் முன்பு சிக்கல் நவநீதேஸ்வரரையும், வேல்நெடுங்கண்ணி அம்பாளையும் வணங்கி ஆசி பெற்ற போது,

    அன்னை பராசக்தியானவள் தனது சக்தியை வேலாயுதமாக வழங்க, அந்த பரவசத்தில் முருகனுக்கு வியர்க்க,சஷ்டியில் சூரபதுமனை சம்ஹரித்து அருள் புரிந்தார் முருக பெருமான்.ஒவ்வொரு ஆண்டும் சிக்கல் சிங்காரவேலருக்கு சஷ்டிக்கு முந்திய நாள் இரவு பஞ்சமி திதியில் வேல்நெடுங்கண்ணி (வேல் போன்ற கண்களை உடையவள் ) அம்பாளிடம் சக்தி வேல் பெரும் நிகழ்வு அற்புதமாக நடைபெறுகிறது. திருத்தேர் நிலைக்கு வந்த பிறகு இரவு சிங்காரவேலர் நாதஸ்வரம் மேள தாளங்கள் முழங்க தேரில் இருந்து அற்புதமாக ஆடிக்கொண்டு அம்பாள் சன்னதிக்கு எழுந்தருள்வார்.

    அன்னைக்கு சிறப்பு அலங்காரத்துடன் வெள்ளை சார்த்தி, (சிவ ரூபமாய் தேவி திகழ்வதால் சிவன் சன்னதி சாத்தப்படும், அம்பாள் சன்னதியில் அன்று மட்டும் குங்குமத்திற்கு பதில் திருநீறு தருவர்) தீபாராதனை நடைபெற்று அர்ச்சகர் தேவியிடம் உள்ள சக்தி வேலை பெற்று சிங்கார வேலருக்கு சார்த்துவார். துள்ளி துள்ளி ஆனந்தமாக அரோஹரா அரோஹரா கோஷம் முழங்க அதை பெற்று கொண்ட பெருமானின் திருமேனி முழுக்க முத்து முத்தாக அரும்பி வியர்க்கும் அதிசயத்தை இன்றும் காணலாம்.

    அதோடு சுவாமி தன் ஆஸ்தானத்துக்கு எழுந்தருளிய பின்னர் பக்த கோடிகள் அனைவரும் வரிசையாக சென்று  சுவாமியை அருகில் தரிசித்து வலம் வரலாம். சுவாமியுடன் வள்ளியம்மை, தெய்வானை அம்மைக்கும் வியர்க்கும். பக்தர்கள் தரிசனத்துக்கு பிறகு அதிகாலை அபிஷேக ஆராதனைகள் தொடங்கி சூரசம்ஹாரம் அன்று மாலை நடைபெறும். கடவுள் உண்டா என்று கேட்கும் அத்தனை பெருக்கும் தன் இருப்பை நிரூபிக்க கூடிய தலங்களில் ஒன்று தான் சிக்கல் சிங்கார வேலர் திருக்கோயில் ஆகும்..

  • குமரப்பெருமானுக்கு சக்திவாய்ந்த வேல் வழங்கிய அம்மன்!

    திருச்செந்தூர் என்றாலே ஆறுபடை வீடுகளில் 2 ம் படை வீட்டில் அமர்ந்திருக்கும் செந்திலாண்டவ பெருமாள் தான் அனைவரது கண் முன்பும் வந்து நிற்கும்.அதே போல் சிறப்பு வாய்ந்த மற்றொரு கோவிலும் திருச்செந்தூரில் அமைந்து உள்ளது. அந்த கோவிலின் பெயர் வெயிலுகந்தம்மன் திருக்கோவில். இக்கோவிலில் விற்றிருக்கும் அம்மன் பெயர் ஸ்ரீ  வெயிலுகந்தம்மன். தல விருட்சம் பன்னீர் மரமாகும் ,தீர்த்தம்  வதனாரம்ப தீர்த்தம். இந்த தீர்த்தம் சிறப்பு வாய்ந்தாக கருதப்படுகிறது. இந்த கோவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

    ஸ்ரீ  வெயிலுகந்தம்மன் கோவிலின் சிறப்பு!

    வெயிலுகந்தம்மன் திருக்கோயில், சூரபத்மனை வதம் செய்த கந்தனுக்கு பராசக்தி, பலவடிவம் கொண்டு கைகொடுத்த திருத்தலம் ஆகும். கந்தபுராணத்தின்படி, முருகப்பெருமான் பத்மாசூரனை அழிப்பதற்கு முன்பே அவருடைய தாய் பராசக்தியானவள் திருச்செந்தூரில் அமர்ந்தருளியிருக்கின்றார். பத்மாசூரனை பற்றி தெரிந்து கொண்ட பிறகு அவனை அழிப்பதற்கு முருகப்பெருமான் இங்கு வந்து தன் தாயை வணங்கி வேண்டி நிற்க, அன்னையும் கருணை கூர்ந்து தன் மகனுக்கு வெற்றி தரும் சக்தி வேலை கொடுத்தபடியினால், ‘வேல் உகந்த அம்பாள்’ என்று இந்த அம்பாள் அழைக்கப்பட்டார். அதுவே பின்பு பேச்சு வழக்கில் “வெயிலுகந்தம்மன்” என்று மருவி வழங்கலாயிற்று. அதன்பிறகே அன்னையின் ஆணைப்படி இந்நகரை முருகப்பெருமான் நிர்மாணித்ததாக கூறப்படு கிறது.

    சூரபத்மனுடன் நடந்தபோரின் போதும் அன்னையே பல வடிவம் கொண்டு போருக்கு உதவினாள். சூரனை அழித்ததினால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட, சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்து தவம் இயற்றும்படி அன்னை ஆணையிட, அதன்படியே சுப்பிரமணியரும் செய்திட்டார். பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தையும், ஜபமாலையுடன் தவமியற்றும் கோலத்தில் சுப்பிரமணியர் இருக்கும் கோலத்தையும், திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்றும் காணலாம். அன்னையும், கிழக்கு முகமாக சிவபூஜை செய்யும் தன் மகனை ஆசீர்வதிக்கும் கோலத்தில் பத்திரகாளி அம்மன் அம்சத்தில் அருள்பாலிப்பதை(கோவிலுக்கு சற்று தொலைவில்) காணலாம்.

    சூரசம்ஹாரம் நடை பெறும் நாளுக்கு முந்தைய இரவு, முருகப்பெருமானே சூட்சும உருவில் இத்திருக்கோவில் வந்து தன் அன்னைக்கு பூஜை செய்து அருள் பெற்று வேல் வாங்கி செல்வதாக ஐதீகம். எனவே அன்று இரவு பூஜை செய்யும் பாத்திரங்கள் தயாராக வைக்கப்பட்டு கோவில் திருக்காப்பிடப்படுகிறது. அம்மன் இவ்வூரின் வடக்கே கோவில் கொண்டுள்ளதால், இவளே ஊர் காளியாகவும் வணங்கப்பட்டு வருகிறாள். திருச்செந்தூரின் முக்கியமான பிரசித்தி பெற்ற தீர்த்தமான வதனாரம்ப தீர்த்தம் இங்குள்ளது. இந்த தீர்த்தம் ஏற்பட ஒரு சுவையான கதையும் உண்டு.

    கி.பி.எட்டாம் நூற்றாண்டில் ஆண்டுகளுக்கு முன்பு, வரகுண பாண்டியன் என்னும் மன்னன் புத்திர பாக்கியம் இல்லாது கவலையுற்றான். திருச்செந்தூர் வந்து சஷ்டி விரதம் இருந்த பின் மன்னனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அக்குழந்தையின் முகம் குதிரையின் முகமாகவும் உடல் மனித உருவிலும் இருந்தது கண்டு மன்னன் மேலும் மனதொடிந்தான். கந்தனிடம் தன் குறையையெண்ணி நெஞ்சுருக வேண்டி நின்றான் மன்னன். அவனது கனவில் காட்சிகொடுத்த கந்தப்பெருமான், “அன்னை பார்வதி தேவியால் மட்டுமே போக்க முடியும். எனவே, நீ அன்னையிடம் போய் நில்; அபயம் அளிப்பாள்” என்று சொன்னார். அதன்படி மன்னனும் காடுமலை கடந்து வெயிலுகந்தம்மன் திருத்தலத்தை அடைந்தான். அங்கே அன்னையிடம் தனது மகளின் குறைதீர வேண்டுதல் வைத்தவன், அங்கேயே குடில் அமைத்துத் தங்கிக் கடும் விரதமும் மேற்கொண்டான்.

    அவனது வேண்டுதலுக்கு இறங்கி வந்த அன்னையவள், “ஆடிச் செவ்வாயில், என்னெதிரே இருக்கும் இந்தக் கடலில் இறங்கித் தீர்த்தமாடினால் உன் குழந்தை சுய உருவம் பெறுவாள்” என்று அசரீரியாய் அருள்வாக்கு தந்தாள். அதுபடியே அன்னையை நெஞ்சில் நிறுத்திக் கையில் குழந்தையுடன் கடலில் இறங்கினான் மன்னன். அதுவரை ராட்சத அலைகளால் ஆர்பரித்துக்கொண்டிருந்த கடல் சாந்தமானது. மன்னன் கடலில் மூன்று முறை மூழ்கி எழுந்தபோது குழந்தையின் முகம் மனித முகமாக மாறியிருந்தது. குழந்தையின் வதனம் மாறிய இடம் என்பதால் இந்த இடம் ‘வதனாரம்ப தீர்த்தம்’ என்று பெயரானது. மகளின் அழகு முகம் பார்த்து ஆனந்தம் கொண்ட பாண்டியன், குழந்தையின் உடம்பில் மஞ்சளும் குங்குமமும் கலந்த நலங்கு மாவு பூசி, அரளி மாலை அணிவித்து அலங்காரம் செய்து அன்னையை தரிசிக்கச் சென்றான். சன்னிதிக்குப் போனதும் அன்னையின் முகம், குதிரை முகமாக மாறி இருந்தது கண்டு திடுக்கிட்டான். அரசன் இதயம் நெகிழ்ந்து பதறி அம்மனிடம் கேட்டான்.

     “இங்குவந்து அம்மா என்றழைக்கும் எனது குழந்தைகளுக்கு அவர்கள் கேட்பதை என்னால் கொடுக்காமல் இருக்க முடியாது. நீ செய்த கர்ம பலன்படி அனுபவிக்க வேண்டிய துன்பங்களை நான் ஏற்றுக் கொண்டேன். உனது கர்ம பலன் தீர்ந்ததும் இதோ எனது இந்த குதிரை முகமும் மாறிவிடும்” என்று கூறினாள். அதன்படியே சிறிது காலம் கடந்த பின் அன்னையின் முகம் மாறியது. அதன்பிறகு வரகுண பாண்டியன் அம்மனுக்குக் கோயில் எழுப்பி நிலங்களை மானியமாக எழுதிவைத்தான். இன்றைக்கும் வதனாரம்ப தீர்த்தத்திற்கு அந்த மகத்துவம் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆடி செவ்வாய்களில் அதிகாலையில் பெண்கள் வதனாரம்பரத் தீர்த்தத்தில் நீராடி நலங்கு மஞ்சள் அணிந்து செவ்வரளி மாலை அணிந்து அன்னையை வணங்கினால் முகம் அழகு வடிவம் பெறுவதோடு தீர்க்க சுமங்கலிகளாகவும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.

    ஆவணி மற்றும் மாசி திருவிழாவின் பத்தாம் திருநாள் அன்று அம்மன் கடலில் தீர்த்தவாரி செய்து முருகப்பெருமான் எதிரில் சண்முகவிலாசம் மண்டபத்தில் எழுந்தருளி சண்முகருக்கு நேர் எதிர் சேவையாகி தன் மகனுக்கு ஆசிகளை வழங்கி, ‘இனி உனது உற்சவம்(திருவிழா) சிறப்பாக நடைபெற நான் உறுதுணையாக இருப்பேன்’ என்று உறுதி கூறுவதாக ஐதீகம். பின்பு அன்னை மற்றும் சண்முகருக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெறுகிறது. 

  • சாமுண்டி மலையில் 15 அடி உயர நந்திக்கு  மஹாமஸ்தகா அபிஷேகம்!

    சாமுண்டி மலையில் உள்ள 15 அடி உயர நந்திக்கு  மஞ்சளால் மகா அபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

    15 அடி உயர நந்தி சிலை மைசூர் சாமுண்டிமலையில் பிரசித்தி பெற்ற  கோவில் அமைந்துள்ளது. மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு செல்ல மலை அடிவாரத்தில் இருந்து ஆயிரம் படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும்.

    இதில் மலை மேல் இருந்து 200–வது படிக்கட்டுக்கும், மலை அடிவாரத்தில் இருந்து 800–வது படிக்கட்டும் மத்தியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்ட நந்தி சிலை உள்ளது. இந்த சிலை 15 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்டது. இந்த நந்தி சிலை 200 ஆண்டு பழமைவாய்ந்தது. இந்த நந்திக்கு சில ஆண்டுகளாக மகா அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.

     மகா அபிஷேகம் இதில் மகா நந்திக்கு குங்குமம், மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், வெண்ணெய், நெய், இளநீர், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களாலும், வில்வ இலை, பலவகையான மலர்கள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திவ்ய பொருட்களாலும் அபிஷேகம் நடத்தப்பட்டது.

     ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு நந்திக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

  • சங்கடஹர சதுர்த்தியின் சிறப்பு!

    சங்கடஹர சதுர்த்தி

    சங்கடங்கள் நீக்கிடும் மற்றும் துன்பங்கள் போகும் “சங்கடஹர சதுர்த்தி” விரதம்விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும்அதில் மிகச் சிறந்ததும்,பழமையானதும் துன்பங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த மகிழிச்சி அடையலாம். சகல நன்மைகள் அனைத்தையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் “சங்கடஹர சதுர்த்தி” நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி, தடைகள் இல்லாமல் எல்லா காரியங்களும் வெற்றியடையும். “ஹர” என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள் ஆகும்.

    சங்கடஹர விரதம்

    ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்கத் துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை “மகா சங்கடஹர சதுர்த்தி” என்று கூறுகின்றனர். விரதத்தின் பலன்கள் இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும் என்பதே இந்த விரதத்தின்  மகிமை என்கிறார்கள்.

    இந்த விரதம் இருப்பது எப்படி?

    சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை குளித்து, பால் பழம் பருகி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை  கோவிலுக்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை சூற்றி வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளுதல் இந்த விரதத்தின் சிறப்பு ஆகும்.

    விரதத்தின் மேன்மைகள்! 

    ஆவணி மற்றும் மாசி மாத சுக்லபட்ச சதுர்த்திக்கு முன் வருவது மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். விநாயகர் சதுர்த்திக்கு முன் வரும் இந்த மஹா சங்கடஹர சதுர்த்தியில் துவங்கி மறு வருடம் ஆடி மாதத்தில் பன்னிரண்டு சதுர்த்திகள் விரதம் இருப்பது மிகவும் சிறப்பாகும்.

    இந்த விரதம் எல்லா விரதங்களை விட சிறப்பு மிகுந்ததாக கூறப்படுகிறது. பதியான சிவனை பிரிந்த பார்வதி சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து மீண்டும் கணவரை அடைந்தாள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர்கள் கௌரவர்களை வென்றதும் இந்த விரதம் இருந்துதான். பன்னிரண்டு சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்த பலன் மஹா சங்கட ஹர சதுர்த்தி இருந்தால் கிடைக்கும்.

     நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது. ஆனை முகனின் அருளை எளிமையாக பெற்றிட சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது சிறப்பாகும்.

  • ஓய்வெடுக்கும் குமரன்!  

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலக்கொடுமலூர் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், இங்கு அன்னை பராசக்தியிடம் பல ஆயுதங்களைப் பெற்று அசுரனை வதம் செய்தார் குமார பெருமான்.  அசுரனை சக்தி வாய்ந்த ஆயுதத்தால் அழித்துவிட்டு திரும்பும்போது, அங்கிருந்த முனிவர்கள் முருகனைக் கண்டுவணங்கினர்.

    அந்த இடத்திலேயே (மேற்கு திசையில்) முருகன் நின்று அருளாசி வழங்கினார் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் இந்த ஊருக்கு மேலக்கொடுமழூர் என்ற பெயர் ஏற்பட்டது. மேலக்கொடுமழூர் என்றால் ‘வலிமைமிக்க முழு ஆயுதம் தாங்கி மேற்கு திசை நோக்கி நிற்கின்றவனின் ஊர்’ என்று பொருள். மேலக்கொடுமழுர் என்பது காலப் போக்கில் மருவி மேலக்கொடுமலூர் என மாறிவிட்டது எனக் கூறப்படுகிறது. இக்கோயிலை இராமநாதபுரம் சேதுபதி மன்னர் கட்டினார்.  இக்கோயில் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது, கோயில் இறைவனான முருகனும் மேற்கு பார்த்தபடி இருப்பது சிறப்பு. இங்கு குமரக்கடவுள் சுயம்பு மூர்த்தியாக சுமார் ஆறு அடி உயரத்தில் காட்சியளிக்கிறார்.

    திருக்கோயில் சூரபத்மனை வதம் செய்துவிட்டுத் திரும்பும் வழியில் முருகப்பெருமான் ஓய்வெடுப்பதற்காக தங்கிய வனப்பகுதி இது. இங்கே, கைக்குத்தல் அரிசியையும் பாசிப்பருப்பையும் ஊறவைத்து, அவற்றுடன் சர்க்கரையைக் கலந்து நைவேத்தியம் செய்கிறார்கள். இங்கு எதையும் வேகவைப்பது இல்லையாம். முருகப்பெருமான் ஓய்வெடுப்பதால் பகலில் பூஜைகள் நடைபெறாது. திங்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரவில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    இக்கோவிலிலின் மற்றொரு சிறப்பு   முஸ்லிம் புலவருக்கு சிலை வைத்து சமய மத நல்லிணத்தை மக்கள் இன்றும் பேணிக்காத்து வருகின்றனர். இது இந்து மற்றும் இஸ்லாமியர்களுக்கிடையே உள்ள சகோதரத்துவத்தையும், மத நல்லிணக்கத்திற்கு ஓர் சிறந்த சான்றாகவும் விளங்குகிறது.

    முஹம்மது மீர் ஜவாது புலவர் அவர்கள் பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் எனும் சிற்றூரில் 1745-ம் ஆண்டு பிறந்தவர். இவர், முகையதீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ், நாகைக் கலம்பகம், மதீனத் தந்தாதி, ராஜராஜேஸ்வரி பஞ்சரத்ன மாலை, வண்ணக் கவிகள், சீட்டுக் கவிகள், சித்திரக் கவிகள், மாலை மாற்றுகள், குமரையா பதி கங்களைப் பாடியுள்ளார்.

    இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கொடுமலூரில் உள்ள குமரக்கடவுள் என்ற சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு ஜவாது புலவர் பல பதிகங்களைப் பாடியுள்ளார். இதற்காக புலவரை கவுரவப்படுத்தும் விதமாக, கோயிலின் விமானத்தில் அவரது சிலையை அமைத்துள்ளது சமய நல்லிணக்கத்துக்குச் சான்றாக விளங்குகிறது.

    முதன்முறையாக இக்கோயில் கும்பாபிஷேகம்1926-ம் ஆண்டில்  நடைபெற்றது. கடந்த 2004-ம் ஆண்டு கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத் தின்போது, ஜவாது புலவரை கவுரவிக்கும்விதமாக அவர் பாடிய குமரையா பதிகத்தை மதில் சுவரில் கல்வெட்டாகப் பதித்து கோயிலின் விமானத்தின் தெற்குப் பகுதியில் ஜவாது புலவரின் உருவ சிலையை அமைத்துள்ளனர்.

    ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரத் திருவிழாவின்போது நேர்த்திக்கடன் செலுத்த முஸ்லிம் பக்தர்களும் இக்கோவியிலுக்கு வருவதுண்டு.