Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • அழுதா நதியின் கதை…

    காடு, மலை ஏறி, இறங்கி மேலும் சுமார் 6 மைல் நடந்து, அழகிய வனத்தில் காளைகட்டி என்ற இடத்தை சென்றடையலாம். மகிஷியை கொன்ற தன் மகன் மணிகண்டனை வாழ்த்துவதற்காக வந்த சிவன், தனது வாகனமான காளையைக் கட்டிய இடம் என்று கருதப்படுவதால், இப்பெயர் ஏற்பட்டது.
    இங்கே சிவாலயம் ஒன்று இருக்கிறது.

    காளைகட்டியிலிருந்து கிழக்கே சுமார் ஒன்றரை மைல் நடந்து அழுதாநதிக் கரையை சென்றடையலாம். மணிகண்டனால் தூக்கி எறியப் பட்ட மகிஷியின் உடல் இந்த நதிக்கரையில் விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
    இயற்கை அழகும், நெடிய மரங்களும் அவைகளை அணைத்து நிற்கும் பசுங்கொடிகளும், பள்ளத்தாக்கில் ஓடிவரும் அழுதாநதியும் பார்க்க பரவசமடையச் செய்யும்.
    அழுதாநதி:
    மணிகண்டன் அம்பு மகிஷிமேல் பட்டதும் அவளோட தீய குணம் மாறி நல்ல எண்ணம் வந்தது. அதனால் தன்னை மன்னிக்கும்படி வேண்டி மனம் விட்டு அழுதாள். அந்தக் கண்ணீர்தான் அழுதா நதியாகப் பெருகி ஓடுகிறதாம்.
    அழுதையாற்று நீரில் நீராடி, ஒவ்வொருவரும் ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். அங்கிருந்து சுமார் 2 மைல் நடந்து அழுதைமேடு என்ற குன்றில் ஏறினால் இஞ்சிப்பாறைக்கோட்டை என்னுமிடத்தை அடையலாம்.

    பின்னர், கல்லிடும் குன்று என்ற இடம் வருகிறது.
    மகிஷியை வதம் செய்த ஐயப்பன், அவளது உடலை இங்கு புதைத்துவிட்டு, கனமான கற்களை வை த்துச் சென்றாராம். இதன் அடிப்படையில் அழுதா நதியில் எடுத்து வந்த கற்களை பக்தர்கள் இவ்விடத்தில் போட்டுச் செல்கிறார்கள். இந்த இடத்தில் கல்லைப் போடும் பக்தர்கள், தங்கள் பாவம் நிவர்த்தியாக வேண்டும் என்று வேண்டிக்கொள்வர். மகிஷி பாவத்தின் சின்னம். புதைந்து கிடக்கும் பாவச்சின்னம் மீண்டும் எழுந்து விடக்கூடாது என்பதால், கல்லைப் போட்டு எழவிடாமல் செய்கின்றனர்.
    காவலர் ஐயப்பன் :
    அழுதாமலை உச்சியில், “இஞ்சிப்பாறைக்கோட்டை’ இருக்கிறது. இங்குள்ள கோயிலில் “தேவன் வியாக்ரபாதன்’ என்ற பெயரில் ஐயப்பசுவாமி அருளுகிறார். “வியாக்ரம்’ என்றால் “புலி’. ஐயப்பன் புலிகளை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன்னைக் காணச்செல்லும் பக்தர்களைப் பாதுகாக்கும் காவலராக விளங்குகிறார். ஆன்மிக ரீதியாக, இதை வேறு மாதிரியாக பொருள் காணலாம். மனிதன், இந்த உலக இன்பத்தை பெரிதென நினைக்கிறான். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய இன்பங்களை அடைய ஆசை கொண்டு, பாதகங்களைச் செய்யக் கூட தயாராகி விடுகிறான். இந்த பாதகங்களே மனதை ஆட்டிப்படைக்கும் புலிகளுக்கு ஒப்பிடப்படுகிறது.

    இந்த கொடிய புலிகளை கட்டிப்போட்டு விட்டால் மனதில் நல்ல சிந்தனைகள் மட்டுமே தங்கும். பக்தி மார்க்கத்திற்குள் மனிதன் வருவான். இந்த ஐயப்பனை வணங்கி விட்டு நடந்தால், முக்குழி என்ற இடம் வரும். இங்கு மாரியம்மன் அருள் செய்கிறாள். அம்பிகையை வணங்கி விட்டு தொடர்ந்து நடந்தால் கரியிலம்தோட்டை அடையலாம். இவ்விடத்தில் மலைப்பாதை சமதளமாக இருக்கும். இங்கு பக்தர்கள் தங்கிச் செல்ல வசதியுள்ளது. அங்கு உணவருந்தி சிறிது ஓய்வெடுத்துப் பின் புதுச்சேரி என்ற ஆற்றை கடக்க வேண்டும்.

  • மணப்பெண் காலில் மெட்டி அணிவது ஏன்?

    திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?

     உலகத்திலேயே இந்தியப் பெண்கள் மட்டும்தான் இந்த மெட்டி அணியும் கலாச்சாரத்தை காலங்காலமாக வழக்கத்தில் கொண்டுள்ளனர். மெட்டி அணிவது திருமணம் ஆனதற்கு அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு அறிவியலும் கூட.

    திருமணமான பெண்கள் நெற்றி உச்சியில் குங்குமம் இட்டும், கால் விரலில் மெட்டியும் அணிகின்றனர். ஆரம்ப காலத்தில் திருமணமான ஆண்கள்தான் மெட்டியை அணிந்தனர். காலப் போக்கில் இப்பழக்கம் பெண்களுக்கு உரியதாக மாறிவிட்டது.

    பெண்கள் தெருவில் செல்லும் போது தலை குனிந்து செல்வர். அப்போது எதிரே வரும் ஆண்களுக்கு, அவளது உச்சிநெற்றி நன்கு தெரியும். அதில், வகிடுப்பொட்டு இருந்தால் திருமணமானவள் என்பதை புரிந்துகொண்டு விலகிச்செல்வர். அதேசமயம் திருமணமான ஆண்கள் கால்விரலில் மெட்டி அணிந்து செல்லும் போது, பெண்கள் அவர்களது மெட்டியை கண்டு, அவனை எதிர் நோக்காமல் விலகிச் செல்வர். இவ்வாறு ஆணோ, பெண்ணோ திருமணம் ஆனவர்களா என்பதை உணர்த்துவதற்கான அடையாளமாகவே இவை அமைந்தன.

    பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது. வெள்ளியில் மெட்டி அணிவதால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உடையது. முக்கியமாக கருப்பை நோய்களை கட்டுபடுத்துகிறது.

    பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது.

    கர்ப்பத்தின் போது உருவாகும் மயக்கம், வாந்தி என்பவற்றை குறைக்கவும் கருப்பையின் நீர் சமநிலையை பேணுவதற்கும் மெட்டி பயன்படுகிறது. கால் விரலில் அணியும் மெட்டி நாம் நடக்கையில் பு மியுடன் அழுத்தப்படுவதால் நமது உடல் பிணிகளை, முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களது உடல் பிணிகளைக் குறைக்கும் என்கின்றனர். ஆகையால் பெண்கள் காலில் மெட்டி அணிவது நல்லது.

  • செவ்வாய் தோஷம் நீங்க உதவும் ஆலயங்கள்!

    செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கீழ்க்கண்ட ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்துக்கு சென்று வழிபட்டு பரிகாரம் செய்யலாம்.

     

    1. கைலாசநாதர் திருக்கோவில், கோடகநல்லூர், திருநெல்வேலி.
    2. வைத்த மாநிதி பெருமாள் (நவதிருப்பதி-3), திருக்கோவில், திருக்கோளூர், தூத்துக்குடி.
    3. தண்டாயுதபாணி திருக்கோவில், திண்டுக்கல்.
    4. சதுர்முக முருகன் திருக்கோவில், சின்னாளப்பட்டி, திண்டுக்கல்.
    5. நரசிங்கப்பெருமாள் திருக்கோவில், மன்னாடி மங்கலம், மதுரை.
    6. பிரளயநாதர் திருக்கோவில், சோழவந்தான், மதுரை.
    7. ஆறுமுக நயினார் திருக்கோவில், கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி, தேனி.
    8. நாகம்மாள் திருக்கோவில், பாலமேடு, கெங்கமுத்தூர், மதுரை.
    9. திருவாப்புடையார் திருக்கோவில், செல்லூர், மதுரை.
    10. விருத்தபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்புனவாசல், புதுக்கோட்டை.
    11. வீரபத்திரர் திருக்கோவில், அனுமந்தபுரம், காஞ்சீபுரம்.
    12. சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், காங்கேயநல்லூர், வேலூர்.
    13. சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில், குருசாமி பாளையம், நாமக்கல்.
    14. சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி, ஈரோடு.
    15. முத்துகுமார சுவாமி திருக்கோவில், பவளமலை, ஈரோடு.
    16. சுப்ரமணியசுவாமி திருக்கோவில், சென்னிமலை, ஈரோடு.
    17. பாலதண்டாயுதபாணி திருக்கோவில், கோட்டுப்புள்ளாம் பாளையம், கோயம்புத்தூர்.
    18. மலையாள தேவி துர்காபகவதி திருக்கோவில், நவகரை, கோயம்புத்தூர்.
    19. தேனுபுரீஸ்வரர் திருக்கோவில், பட்டீஸ்வரம், தஞ்சாவூர்.
    20. அருணஜடேசுவரர் திருக்கோவில், திருப்பணந்தாள், தஞ்சாவூர்.
    21. அகோர வீரபத்திரர் திருக்கோவில், வீராவாடி, திருவாரூர்.
    22. வைத்தியநாதர் திருக்கோவில், வைத்தீஸ்வரன் கோவில், நாகப்பட்டினம்.
    23. அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், மேலக்கடம்பூர், கடலூர்.
    24. நல்லிணக்கீஸ்வரர் திருக்கோவில், எழுச்சூர், சென்னை.
    25. கல்யாண கந்தசுவாமி திருக்கோவில், மடிப்பாக்கம், சென்னை.
    26.  அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம், சென்னை
  • செவ்வாய் தோஷம் நீங்க உதவும் ஆலயங்கள்!

    செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கீழ்க்கண்ட ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்துக்கு சென்று வழிபட்டு பரிகாரம் செய்யலாம்.

     

    1. கைலாசநாதர் திருக்கோவில், கோடகநல்லூர், திருநெல்வேலி.
    2. வைத்த மாநிதி பெருமாள் (நவதிருப்பதி-3), திருக்கோவில், திருக்கோளூர், தூத்துக்குடி.
    3. தண்டாயுதபாணி திருக்கோவில், திண்டுக்கல்.
    4. சதுர்முக முருகன் திருக்கோவில், சின்னாளப்பட்டி, திண்டுக்கல்.
    5. நரசிங்கப்பெருமாள் திருக்கோவில், மன்னாடி மங்கலம், மதுரை.
    6. பிரளயநாதர் திருக்கோவில், சோழவந்தான், மதுரை.
    7. ஆறுமுக நயினார் திருக்கோவில், கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி, தேனி.
    8. நாகம்மாள் திருக்கோவில், பாலமேடு, கெங்கமுத்தூர், மதுரை.
    9. திருவாப்புடையார் திருக்கோவில், செல்லூர், மதுரை.
    10. விருத்தபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்புனவாசல், புதுக்கோட்டை.
    11. வீரபத்திரர் திருக்கோவில், அனுமந்தபுரம், காஞ்சீபுரம்.
    12. சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், காங்கேயநல்லூர், வேலூர்.
    13. சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில், குருசாமி பாளையம், நாமக்கல்.
    14. சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி, ஈரோடு.
    15. முத்துகுமார சுவாமி திருக்கோவில், பவளமலை, ஈரோடு.
    16. சுப்ரமணியசுவாமி திருக்கோவில், சென்னிமலை, ஈரோடு.
    17. பாலதண்டாயுதபாணி திருக்கோவில், கோட்டுப்புள்ளாம் பாளையம், கோயம்புத்தூர்.
    18. மலையாள தேவி துர்காபகவதி திருக்கோவில், நவகரை, கோயம்புத்தூர்.
    19. தேனுபுரீஸ்வரர் திருக்கோவில், பட்டீஸ்வரம், தஞ்சாவூர்.
    20. அருணஜடேசுவரர் திருக்கோவில், திருப்பணந்தாள், தஞ்சாவூர்.
    21. அகோர வீரபத்திரர் திருக்கோவில், வீராவாடி, திருவாரூர்.
    22. வைத்தியநாதர் திருக்கோவில், வைத்தீஸ்வரன் கோவில், நாகப்பட்டினம்.
    23. அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், மேலக்கடம்பூர், கடலூர்.
    24. நல்லிணக்கீஸ்வரர் திருக்கோவில், எழுச்சூர், சென்னை.
    25. கல்யாண கந்தசுவாமி திருக்கோவில், மடிப்பாக்கம், சென்னை.
    26.  அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம், சென்னை
  •  தீர்க்க சுமங்கலி பவா என்று ஏன் சொல்கிறார்கள்!

     

    தீர்க்க சுமங்கலி பவா …! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.

    திருமணத்தில் ஒன்று,

    60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று, 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று!.

     

    இவைகள் பற்றி  ஒரு சிறு விளக்கம்!

    ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

    பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.

     இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.

     சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.

     உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.

     நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.

    பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

    இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு 
    சூரியனுக்கு ஓர் ஆண்டும், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும்,  சந்திரனுக்கு ஒரு மாதமும், புதனுக்கு ஒரு வருடமும், வியாழனுக்கு 12 வருடங்களும், வெள்ளிக்கு ஒரு வருடமும், சனி பகவானுக்கு 30 வருடங்களும்,  ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.

    இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.

    மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.

    ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.

    பூஜையின் போது தங்கள் வசதிக்குத்  தகுந்தவாறு கலசங்கள் முறையே 16, 32, 64  எண்ணிக்கையில் வைத்து பூஜிக்கப்படுகின்றன.     கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.

    அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.

    பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.

       

    அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த கலசங்கள் எதைக் குறிக்கின்றன?

     தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.

    இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய…
    அக்னி,சூரியன்,சந்திரன்,வாயு,வருணன்,அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,அமிர்த கடேஸ்வரர், நவநாயகர்கள்..சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.

     பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..அதிபதிகள் ஆவார்கள்.

    தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.

     

    தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.

    தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். 

     காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.

    70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.

    ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.

    அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.

    இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்

    இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.

     

  • சாளக்கிராமம் கல்லின் சிறப்பு!

    சாளக்கிராமம் கல் :
    யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ, அந்த வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் சிறு இடத்தையே, கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்கிறேன்.
    ஒரு மன்னனின் மகள் துளசி, மகாவிஷ்ணுவையே கணவனாக அடைய வேண்டும் என்று தவம் இருந்தாள். அவள் போன ஜன்மத்தில் கிருஷ்ணனுடன் கோபிகையாகக் கூடி இருந்தாள். மகாவிஷ்ணு மாறு வேடத்தில் சென்று துளசியை ஏமாற்றினார். “என்னை ஏமாற்றிய நீ யாராக இருந்தாலும் கல்லாகப் போவாயாக!” என்று சாபமிட்டாள்.

    அந்த கல்தான் சாளக்கிராம கல். உடனே மஹாவிஷ்ணு அவருக்கு காட்சி கொடுத்தார். பதறிப்போனாள் துளசி. புன்னகை புரிந்தார் மஹாவிஷ்ணு. “அஞ்சாதே துளசி! எல்லாம் என் சித்தப்படியே நடக்கிறது. கிருஷ்ண அவதாரத்தின் போது கோபிகையாக இருந்தவள் நீ. என்னை மணம் புரிய வேன்டும் என்று தவம் புரிந்தவளும் நீயே. பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவே இத்தகைய லீலைகளும் நடத்தபடுகின்றன.

      

    என்னை கல்லாக மாறுமாறு நீ சபித்ததும் என் விருப்பபடிதான். என்னை தரிசனம் செய்தால் உனது இந்த பிறவிக்கு முக்தி கிடைக்கிறது. இப்போது நீ கண்டகி நதியாகவும், துளசி செடியாகவும் மாறிவிடுவாய். என்னை கல்லாக மாறுமாறு சபித்து விட்டதால், நான் சாளக்கிராமக் கற்களாக மாறப் போகிறேன். நீ என்னை மணக்க விரும்பியவள் அல்லவா? அதனால் நீ கண்டகி நதியாக ஓட, நான் உன்னில் கிடப்பேன், ஆம் சாளக்கிராமக் கற்களாக கிடப்பேன்.

    அந்த கற்களில் சங்கு, சக்கர சின்னங்களும் உண்டாகும். சாளக்கிராமமாக நானே இருப்பதால், பக்தர்கள் அந்தக் கற்களை வணங்குவார்கள். நாடெங்கும் எடுத்து சென்று தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள். சாளக்கிராம கற்கள் கிடக்கும் நதியான நீயும், புனித நதியாக கங்கையை விட சிறந்த நதியாக போன்றபடுவாய். உன்னில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் நான் தருவேன்.

    இங்கே வர முடியாதவர்கள், துளசியை எனக்கு அர்ச்சித்தால் போதும். துளசி தீர்த்தை பருகினாலும் நான் மிகுந்த ஆனந்தம் அடைந்து அருள்பாலிப்பேன்” என்றார். “யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ, அந்த வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் சிறு இடத்தையே, கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்கிறேன். அந்த சாளகிராமத்தில் நான் எப்போதும் வசிக்கிறேன்.

      

    அது இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது. சாளகிரமம் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தோஷம்,சௌபாக்கியம் முக்தி ஆகிய எல்லாவற்றையும் நான் தருவேன்” என்றும் மஹாவிஷ்ணு கூறினார் சாளகிராமங்கள் எப்படி உருவாகின்றன..? மகாவிஷ்ணு தங்கமயமான ஒளியுடன் திகழும் “வஜ்ர கிரீடம்” என்னும் பூச்சியின் வடிவம் கொண்டு சாளகிராம கல்லை குடைந்து அதன் மையத்தை அடைந்து, அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும், தனது அவதார ரூபங்களையும் விளையாட்டாக வரைகிறார்.

    இவைதான் சாளகிராம மூர்த்திகள். எதுவும் வரையப் படாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும். அவற்றுக்கு “ஹிரண்ய கர்ப கற்கள்” என்று பெயர். இவையும் பூஜைக்கு உகந்தவை. இந்த சாளகிராமங்கள், சங்கு, நத்தைகூடு, பளிங்கு போன்று பலவித வடிவங்களிலும் இருக்கின்றன.

     

  • நாமத்தால் வந்த மதிப்பு!

     

    ராம நாமத்தின் மதிப்பு!

    தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில்‌ லக்ஷ்மி என்பவர் வசித்துவந்தார். மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து ஐந்து வயதிலேயே கணவரையும் இழந்துவிட்டார். விவரம் தெரிவதற்குள் வாழ்க்கையை இழந்துவிட்ட அந்தப் பெண்ணை எல்லோரும் துக்கிரி அத்ருஷ்டம்‌கெட்டவள் என்று அழைக்கத் துவங்கினர். வீட்டை விட்டு எதற்காகவும் வெளியே வர இயலாது. பெற்றோர் இருந்தவரை அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே காப்பாற்றி வந்தனர். நாளடைவில் பெற்றோரும் காலகதியை அடைந்துவிட்டனர்.

    நிராதரவாக இருக்கும் உறவினருக்கு உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர், லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள் வீட்டிற்கே அனுப்பிவிடுவர். யாரும் இல்லை, பேசவும் ஆளில்லை, வெளியிலும் போக முடியாது. போனாலும் யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் துக்கிரி என்று திட்டுவார்கள். அவர்கள் செல்லும் காரியம் இவளைப் பார்த்ததால் கெட்டுவிடும் என்று நினைக்கும் சமூகக் கட்டமைப்பு.  அவள் விடியும்‌முன்பே சென்று காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்து வீட்டிற்குள் புகுந்துகொள்வாள். பொழுது போகவில்லை. தாயும் தந்தையும் சிறு வயதில் சொன்ன கதைகளிலும், ஸ்லோகங்களிலும் அவளுக்கு ராம நாமம் மிகவும்‌பிடித்து விட்டது. 

    வீட்டில் ஒரு ஊஞ்சல் இருந்தது. அதில் அமர்ந்து ஆடிக்கொண்டே அனவரதமும் ராம நாமத்தைச் சொல்லத் துவங்கினாள். 
    சில நாட்கள் சொன்னதும், நாமம் அவளைப் பிடித்து க் கொண்டது. பொழுது போகாதபோதெல்லாம் நாமம் சொல்லிக்கொண்டிருந்தவள் எப்போதுமே நாமம் சொல்லத் தொடங்கினாள்.  ஆயிரம் நாமம் ஆனதும் சுவற்றில் கரிக்கட்டையால் ஒரு சிறிய கோடு கிழித்து வைப்பாள். இப்படியாக வீட்டுச் சுவரில் இடமே இல்லாத அளவுக்கு நாமத்தைச் சொல்லி சொல்லிக் கோடு கிழித்து வைத்திருந்தாள்.

    இப்படியே அவளுக்கும் வயதாகியது. அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் சில இவளைத் தேடி வரத் துவங்கின. அவர்களுக்கு தனக்குத் தெரிந்த கதைகளும், பாட்டும் சொல்லிக் கொடுத்தாள்.ஒருநாள் ஒரு குழந்தை அழுதுகொண்டே இருந்தது. 

    ஏம்மா அழற?அப்பாவுக்கு உடம்பு சரியில்ல பாட்டி.வைத்தியர் பிழைக்க மாட்டார்னு சொல்றாராம்.அம்மா அழுதுண்டே இருக்காங்க..
    சரி, அழாத.. இங்க வா..

      

     

    ராம நாமத்தை விடப் பெரிய மருந்தே இல்ல. உங்கப்பாவுக்காக நான் ஜபம்‌பண்ணி வெச்சிருக்கறதிலேர்ந்து 1000 நாமா கொடுத்தேன்னு போய்ச் சொல்லு. சரியாப் போயிடும்  என்று சொல்லி ஒரு கோட்டை அழித்தாள்.

    சரி பாட்டி என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு ஓடிய குழந்தை சற்று நேரத்தில் தாயுடன திரும்பி வந்தது. அந்தக் குழந்தையின் தாய் ஓடிவந்து பாட்டியின் காலில் விழுந்து உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நீங்க நாமா கொடுத்தேள் னு குழந்தை சொன்னதும் மாசக் கணக்கா படுத்த படுக்கையா இருந்தவர் சட்டுனு எழுந்து உக்காந்துட்டார்.
    வைத்தியரும் எல்லா நாடியும் சுத்தமா இருக்கு. இனி வ்யாதியே வராதுன்னு சொல்லிட்டு போயிட்டார். என்று ‌கூறி மீண்டும் மீண்டும்‌ நமஸ்காரம் செய்தாள்.விஷயம் காட்டுத் தீ போல் ஊர் முழுதும் பரவியது.

    யார் கஷ்டம் என்று வந்தாலும் தான் ஜபம் செய்து வைத்த நாமத்தின் சிறு பகுதியைக் கொடுத்து அவர்கள் கஷ்டத்தைப் போக்கி விடுவாள் பாட்டி. கொடுத்ததை அன்றே ஜபம் செய்து சமன் செய்து விடுவாள். யார் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைத்துக் கரித்துக் கொட்டினார்களோ, அந்த துக்கிரிப் பாட்டி வராமல் ஊரில் ஒரு நிகழ்ச்சியும் நடப்பதில்லை. துக்கிரிப் பாட்டி மாங்கல்யம் எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம், அவள் வந்தால்தான் க்ருஹப்ரவேசம் எல்லாம்.

    அத்ருஷ்டமில்லாதவள் என்று அனைவராலும் ஒதுக்கப்பட்டவரை அனைவைரும் வரவேற்கும்படி செய்தது எது?
    அவளைப் பிடித்துக்கொண்ட ராமநாமமன்றோ?

     

  • சினம் போக்கும் சின் முத்திரை !

     

    சிவபெருமானுக்கு, 64 வடிவங்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இவற்றுள் ஈசன் யோக நிலையில் இருக்கும் வடிவம், தட்சிணாமூர்த்தி. இவர் சின் முத்திரை காட்டியபடி யோகத்தில் அமர்ந்திருப்பார். சுண்டு விரல், மோதிர விரல், நடுவிரல் ஆகியவை மடங்கி இருக்கும். சுட்டு விரல், பெருவிரலுடன் சேர்ந்திருக்கும். இதில் சுண்டு விரல் மனிதனின் ஆணவத்தைக் குறிக்கிறது. மோதிர விரல் மனிதனது செயல்களால் ஏற்படும் பாவ-புண்ணியங்களால் உண்டாகும் ‘கன்மம்’ என்ற குணத்தை சொல்கிறது. நடுவிரல் ‘மாயை’ என்னும் உலக வாழ்வு நிலையற்றது என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. சுட்டு விரல் மனிதனையும், பெருவிரல் இறைவனையும் குறிக்கிறது.

    ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை விட்டு விட்டால், மனிதன் சுலபமாக இறைவனை அடையலாம் என்பதே ‘சின்’ முத்திரையின் தத்துவமாகும். ‘கன்மம் என்ற குணத்தில் உள்ள பாவத்தை விட்டுவிடலாம். ஆனால் புண்ணியத்தை ஏன் விட வேண்டும்’ என்ற எண்ணம் பலரது மனதிலும் சந்தேகத்தை விதைக்கலாம். பாவமோ, புண்ணியமோ எதுவாக இருந்தாலும் அதனை இறைவனுக்கு அர்ப்பணித்து மனதை பக்குவம் மிக்கதாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இறைவனடியைச் சேர முடியும். அதற்கு மகாபாரதக் கதையில் வரும் கர்ணனே உதாரணம். அவன், தன்னுடைய புண்ணியத்தைக் கொடுத்த பிறகே, அவனது உயிர் அவனை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்தது.

    இத்தகைய தத்துவம் மிக்க சின் முத்திரையை வைத்து தியானம் செய்பவர்களின் சினம் குறையும்.

  • மகாலட்சுமி கோவில்கள்!

     

    சென்னை திருவான்மியூர் : சென்னையில் காமக்கோடி பரமாச்சாரியார் பேரருளோடு, அலைகடல் அன்னைக்கு மிக அற்புதமான ஆலயம் திருவான்மியூர் ஓரம் கட்டப்பட்டுள்ளது. கடலை நோக்கி மகாலட்சுமியும், ஸ்ரீமந்நாராயணனும் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்கள். இவர்களைத் தரிசித்து விட்டு பிரதட்சணமாக வந்தால், தெற்கே ஆதிலட்சுமி மேற்கில் தானிய லட்சுமி வடக்கில் தைரிய லட்சுமி மூவரையும் தரிசிக்கலாம். இந்த ஆலயத்தில் சங்க நிதிக்கும், பதும நிதிக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    திருமழிசை : சென்னை பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் வீற்றிருந்த பெருமாள் கோவில் உள்ளது. இந்த பெருமானிடம் அஷ்டலட்சுமிகளும் ஐக்கியமாகி இருக்கிறார்கள். பெருமாளின் தலை கிரீடத்தில் 4 லட்சுமிகள், மார்பில் 2 லட்சுமிகள், பெருமாளின் இருபிறமும் பக்கத்துக்கு ஒருவர் என அஷ்டலட்சுமிகள் உள்ளனர். அஷ்டலட்சுமிகள் வீற்றிருக்கும் அந்த பெருமாளை சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தி வழிபட குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

    உத்திரமேரூர் : உத்திரமேரூர் திருத்தலத்தின் தாயார் ஆனந்தவல்லி ஆவார். தாயாருக்குத் தனிச் சந்நிதி உண்டு. இப்பிராட்டியாரின் திருவருளால் மாங்கல்ய பாக்கியம், பிள்ளைப்பேறு முதலியன கிடைப்பதால் இத்தலத்திற்குத் திருமாங்கல்யம் அதிக அளவில் காணிக்கையாகக் கிடைக்கிறது. அழகிய அஷ்டாங்க விமானம் கொண்ட அற்புதத் தலம் இது.

        

    காஞ்சீபுரம் : காஞ்சீபுரம் ஸ்ரீ அஷ்டபுஜம் திருக்கோவிலின் தாயார் புஷ்பவல்லி ஆவார். பகவானின் திருநாமம் அஷ்டபுஜத்தான் என்பது. இத்தலத்தில் ஸ்ரீ வராகப் பெருமாள் தாயாரைத் தன் மடியில் வைத்துக் கொண்டு சேவை சாதிக்கிறார்கள். இதுவன்றி ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீலஷ்மி தேவிக்கென தனிச் சந்நிதி உள்ளது.

    சோழிங்கபுரம் : வடஆற்காடு மாவட்டம் அரக்கோணத்திலிருந்து மேற்கே சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் சோழிங்கபுரம் ஆகும். இந்த மலைக்கோவிலில் தனிச்சந்நிதியில் அமிர்தவல்லித் தாயார் எழுந்தருளியுள்ளார். அண்டிவரும் அன்பர்களுக்கு அமிர்தமயமான பலன்களை வழங்கி வருகிறார்.

    திருத்தங்கல் : விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் என்னும் திருத்தலத்தில் முனிவர்களின் வேண்டுகோளுக் கிணங்க திருமகள் அருண கமல மகாதேவி (செங்கமல நாச்சியார்) என்னும் திருநாமத்துடன் திருநின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

      

    திருக்கண்ண மங்கை : திருவாரூருக்கு அடுத்துள்ள திருத்தலம் திருக்கண்ண மங்கையாகும். இங்கு தாயார் அமிர்தவல்லி திருச்சந்திதியில் ஒரு பெரிய தேன்கூடு உள்ளது. பல ஆண்டுகளாக இத்தேன்கூடு இருந்து வருவதாகக் கூறுகிறார்கள். முனிவர்கள் தேனீ வடிவத்தில் இருந்து தாயாரையும் பெருமாளையும் சேவித்து வருவதாக ஐதீகம்.

    உத்தமர்கோவில் : திருச்சிக்கு அருகில் உள்ள திருத்தலம் பிச்சாண்டார் கோவிலாகும். உத்தமர் கோவில் என்றும் இதனை அழைப்பர். சிவன், பிரும்மா, விஷ்ணு மூவருக்கும் தனிச் சந்நிதிகள் ஒரே ஆலயத்தினுள் அடங்கியுள்ளன. இந்த அற்புதத் திருத்தலத்தின் நாச்சியார் பூர்ணவல்லித் தாயார் ஆவர். பூர்வா தேவி என்றும் அழைக்கப்பெறுகிறார்.

    லால்குடி : திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடிக்கு திருத்தவத்துறை என்ற பெயரும் உண்டு. இங்குள்ள தலத்தில் தான் தாயார் தவம் இருந்து எம்பெருமானைத் தலைவராக அடைந்தார். இதேபோல் நாமக்கல் திருத்தலத்தின் தாயாரும் தவமிருந்து எம்பெருமானைத் தலைவராகப் பெற்றார் என்று கூறப்படுகிறது. இத்தாயாரின் திருநாமம் ‘ஹரி’ ஆகும்.

    தலைச்சங்காடு : மாயவரம் – தரங்கம்பாடி பாதையில் ‘தலைச்சங்காடு’ என்ற திருத்தலத்தில் உள்ள தாயார் செங்கமலவல்லி ஆவார். இந்த நாச்சியார் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

     

    திருக்கண்ணபுரம் : தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் எம்பெருமானுக்கு ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி என்னும் நான்கு தேவியர்கள் தம் இரு பக்கம் சூழ எம்பெருமான் சௌரிராஜன் அருட்காட்சி நல்கி வருகிறார். அற்புதத் திருத்தலம் இது.

    நாச்சியார்கோவில் : கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் நாச்சியார்கோவில் என்ற திருத்தலம் உள்ளது. அங்கு எம்பெருமான் இரண்டு திருக்கரங்களுடன் வஞ்சுளவல்லி தாயாருடன் அருட்காட்சி நல்கி வருவது மிகவும் விசேஷமானது. இங்கு தாயாருக்கெனத் தனிச் சந்நிதி கிடையாது.

      

    திருவாரூர் : திருவாரூரில் ஸ்ரீ லெட்சுமி தேவிக்கு ஒரு ஆலயம் உள்ளது. இத்திருக்கோவிலின் தலவிருக்ஷமான புன்னை மரத்தடியில் தாயார் அவதாரம் செய்துள்ளார் என்பது ஐதீகம். இதனால் இப்பிராட்டியாருக்குப் புன்னைப் பிராட்டி என்பது திருநாமம்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் : பிராட்டியாரின் அவதாரமான கோதை நாச்சியார் ஸ்ரீ வில்லிப்புத்தூர் திருத்தலத்தில் வடபத்திர சாயியான எம்பெருமானுடன் ஆண்டாளாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.

    துறையூர் : துறையூருக்குச் செல்லும் பாதையில் திருவெள்ளறை என்னும் திருத்தலம் அமைந்துள்ளது. தாயார் தவம் செய்து பெரும் பேறு பெற்ற திருத்தலம்.

    பெருமானின் திருநாமம் புண்டரீகாஷன். இத்திருக்கோவிலில் தாயாருக்குத்தான் முதலில் பூஜை நடைபெறும். இக்கோவிலைச் சேர்ந்த சுவாமி புஷ்கரணி ஸ்வஸ்திகா வடிவில் அமைந்திருப்பது மிக்க சாந்நித்யம் உடையதாகும்.

    பிச்சாண்டார் கோவில் : திருச்சிக்கு அருகே பிச்சாண்டார் கோவிலில் தாயாரைச் சேவிக்கலாம். இங்குள்ள தாயாருக்கு பூரணவல்லி என்று திருநாமம். இக்கோவிலுள்ள மும்மூர்த்திகளுக்கும் சந்நிதிகள் உண்டு. சிவபெருமான் கபாலம் ஏந்தி பிசைக்கு வந்த போது முதலில் தாயார் பிசை இட்டார் என்றும் அதனால் அவரது கபாலம் நிரம்பி வழிந்தது என்பதும் இத்திருக்கோவிலின் சிறப்பைச் சொல்லும் புராண வரலாறாகும்.

    நாமக்கல் : நாமக்கல் என்னும் தலத்தில் தவமிருந்து விஷ்ணுவை அடைந்தார் தாயார்! இத்தலத்தில் தாயாருக்கு ஹரி என்று திருநாமம். இங்கு தாயாருக்கு, நாயகரான நரசிம்ம சுவாமியை விட சிறப்பு அதிகம்.

    திருமலை : திருமலை திருப்பதியில் ஸ்ரீவிக்னேஸ்வரரின் ஆலயம் ஒன்றுள்ளது. அதில் அஷ்டலட்சுமிகளான ஸ்ரீஆதிலட்சுமி, ஸ்ரீவீரலட்சுமி, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீதான்யலட்சுமி, ஸ்ரீவிஜயலட்சுமி, ஸ்ரீதீபலட்சுமி, ஸ்ரீதனலட்சுமி, ஸ்ரீஐஸ்வர்யலட்சுமி எனும் திருநாமங்களோடு அர்ச்சாவதார மூர்த்திகளாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள். இம்மூர்த்தங்களை ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து வைத்தார் என்று கூறுகிறார்கள்.

    ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அம்மா மண்டப வீதி புது அக்ரகாரத்தில் அஷ்டலட்சுமி மண்டபம் என்றே ஒரு மண்டபம் உள்ளது. அதில் நுழைவுப்பகுதி முன் வாயிலுக்கு ஸ்ரீராஜராஜேஸ்வரி வாசல் என்பது பெயராகும். அம்மண்டபத்தினுள் எண் திசைகளுக்கும் ஒவ்வொன்றாக எட்டு லட்சுமி மூர்த்தங்கள் உள்ளன.

    மதுரையில் அஷ்டலட்சுமி : மதுரை மையப்பகுதியில் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் அஷ்டலட்சுமிகளுக்கு என்று தனி சன்னதி உள்ளது. 8 லட்சுமிகளும் வீற்றிருக்கும் காட்சி அற்புதமாக உள்ளது. மதுரை நகர மக்கள் லட்சுமி வழிபாட்டுக்கும், பரிகார பூஜைகளுக்கு இந்த அஷ்டலட்சுமிகளை ஆராதிக்கிறார்கள்.

     

  • கார்த்திகை மாதத்தில் செய்ய வேண்டியவை!

     

    கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. இம்மாதத்தில் வீடு முழுவதும் விளக்குகளால் அலங்கரிப்போம். திருவிளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்பே தமிழ்மக்கள் இறைவனைஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். சங்ககால இலக்கியங்கள் இவ்வழிபாட்டை ‘கார்த்திகை விளக்கீடு’ என்று குறிப்பிடுகின்றன.பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை போன்ற எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன.

    சங்க இலக்கிய ஆய்வாளர்கள் சிலர், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டுகொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர்.

    விளக்கு

    திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது.இதன் அடிப்பாகத்தில்பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம்செய்கின்றனர்.

    பொட்டு

    திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல்குங்குமமும் வைக்க வேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.

    எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர்,காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்துபூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.

     

     

    கார்த்திகை மாதம்

    கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும்யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது.

    தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.

    நேரம்

    தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும்.

    முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.

    திசைகள்

    தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும்.

    மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும். பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.

    தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.

    எண்ணெய்

    கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது.

    அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணை தீபம். நல்லெண்ணை தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது, நவக்கிரகங்களைத் திருப்தி செய்யவும் ஏற்றது.

     

    செல்வம் பெற

    மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய் எண்ணெய் கொண்டு தீபமேற்ற வேண்டும்.

    செல்வங்கள் பெற விரும்புவோர் வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

    இந்த எண்ணெய் கூடாது

    கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது.

    மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.

    திரி

    விளக்கிற்கு திரியும் மிகவும் முக்கியமானது. சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி.

    முற்பிறவியின் பாவங்களை அகற்றி செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

    மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப் பெருமானுக்கும் உகந்தது இது.

    வரலாறு

    தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உண்டானபோது அந்த போட்டிக்கு நடுவராக வந்து சிவன் ஒரு பெரும் ஒளியாக எழுந்து நின்று ஒளியின் அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காண வேண்டும், அப்படி யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்களை பெரியவர் என்று மாயக் குரல் ஒன்று கூற அதை ஏற்றுக் கொண்ட இருவரும் தமது பயணத்தத் தொடங்கினர்.

    தோல்வி

    அன்னப்பறவையாக உருமாறிய பிரம்மன் பறந்து உச்சியைத் தேடினார், பன்றியாக உருமாறிய விஷ்ணு நிலத்தைத் துளைத்துக் கொண்டு அடியைத் தேடினார். இருவரும் பல ஆண்டுகள் பயணித்தும் தங்கள் இலக்கை அடைய முடியவில்லை. கடைசியில் தமது தோல்வியை இருவரும் ஒப்புக் கொண்டனர்.

    அப்படி சோதிப் பிழம்பாக சிவன் தோன்றிதை அனைவருக்கும் காட்ட வேண்டும் என இருவரும் கோர அதை சிவன் ஏற்றுக் கொள்கிறார், அதன்படி ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை நாளில் சோதியாய் வெளிப்பட்ட நாள்தான் கார்த்திகை தீபம் நாள்.

    ஆறு பெண்கள்

    சப்த ரிஷிகளின் மனைவிகளின் அழகில் மயங்கிய அக்னிபகவானுக்கு அந்த பெண்கள் மீது அடக்க முடியாத மோகம் உண்டானது. அதைப் பற்றி தெரிந்துக் கொண்ட அவனது மனைவி சுவாகாதேவி தனது கணவன் முறைத் தவறி நடந்துக் கொண்டால் சப்த ரிஷிகள் சபித்துவிடுவார்கள் என்று எண்ணிப் பயந்துபோனாள்.

    அதனால் தானே ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவத்தை மாற்றிக் கொண்டு, தன் கணவன் ஆசையை நிறைவேற்றிளாள். ஆனால் வசிட்டரின் மனைவி அருந்ததியைப் போல அவளால் உருமாற முடியவில்லை. எனினும் சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை பெண்கள் என்று பெயர். இப்பெண்கள்தான் முருகனை வளர்த்தார்கள் என்பது ஒரு கதை.

       

    முதல் சோதனை

    கார்திகை மாதத்தில் ஏற்றப்படும் திருவண்ணாமலை ஜோதி மிகவும் பிரபலமானது. பவுத்த சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆமணக்கு விதையில் இருந்து நெய் எடுக்கலாம் என கண்டுபிடித்தனர்.

    இதை ஒரு துணியில் நனைத்து தீ வைத்த போது, பிரகாசமான வெளிச்சம் கொடுத்தது. அந்த காலத்தில் இப்போது இருப்பது போல் லைட் எல்லாம் கிடையாது. இரவில் எங்கு பார்த்தாலும் இருட்டு தான்.

    ஏனென்றால் இரவில் விளக்கு ஏற்றும் பழக்கம் அப்போது இல்லை. காய்ந்த மரத்தை வெட்டி தீமூட்டி அந்த வெளிச்சத்தைதான் பயன்படுத்தினர். எனவே இந்த கண்டுபிடிப்பு பற்றி மக்கள் மன்னிடம் கூறினர். முதலில் பயந்த மன்னனுக்கு பின்னர் அந்த நெய்யை சோதித்து பார்க்க ஆர்வம் வந்தது.

     

    திருவண்ணாமலை

    இதற்காக நகருக்கு பக்கத்தில் இருந்த அண்ணாந்து என்ற குன்றின் உச்சியில் ஒரு பெரிய பள்ளத்தை வெட்டினான். அதில் இந்த ஆமணக்கு நெய்யை அதிகளவில் ஊற்றி், பெரிய திரியை ஏற்றி கொளுத்தினான்.

    அந்த வெளிச்சத்தால் எந்த விலங்கிற்கும், மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படவில்லை என்ற நம்பிக்கை பிறந்தது. எனவே மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ஆமணக்கு நெய்யைப் பயன்படுத்தி தீபம் ஏற்றிக் கொள்ள அனுமதித்தான்.

    அப்படி ஆமணக்கு நெய் சோதிக்கப்பட்ட இடம் அண்ணாந்துமலை என்ற திருவண்ணாமலை .

    அர்த்த நாரீஸ்வரர்

    கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது இடப் பாகத்தைப் பெற்றாள். அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம் திருவண்ணாமலை.

    துளசிதேவி திருமணம்

    கார்த்திகை மாத (பிருந்தாவன) துவாதசி நாளில், துளசிதேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும், துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு .

    நவக்கிரக தோஷம்

    நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும்.