Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • கார்த்திகை தீபம் கொண்டாடும் விதம்

    கார்த்திகை தீப வழிபாடு மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணிதீபம் என்றும், கார்த்திகை நட்சத்திரம் அன்று கார்த்திகை தீபம் என்றும் மறுநாள் சுடலைக் கார்த்திகை என்றும் மூன்று நாட்கள் கார்த்திகை விளக்குகள் ஏற்படுகின்றன.

    மகிழ்ச்சியான திருமண வாழ்வு வேண்டியும், தங்கள் குழந்தைகளின் நலன் வேண்டியும் பெண்கள் கார்த்திகைத் திருநாளன்று விரதம் மேற்கொள்கின்றனர்.

    கார்த்திகை தீபத்தை கொண்டாடுபவர்கள் தங்கள் வசிப்பிடங்களை தூய்மைப்படுத்தி, மாலை நேரத்தில் வீட்டு வாசலில் வண்ணக் கோலம் இட வேண்டும். மண், பீங்கான் மற்றும் உலோகத்தினான சிறிய அகல் விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பஞ்சு திரி போட்டு விளக்கேற்றி விழிபட வேண்டும்.

    விளக்குகளை வாயிற்படிகள், ஜன்னல்கள், பால்கனிகள், முற்றம் ஆகியவற்றில் வைத்து அலங்கரிக்கலாம். சிறுவர்கள் கார்த்திகை தீபத்தை பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர். கார்த்திகை தீப வழிபாட்டில் பொரி உருண்டை முக்கிய இடம் பெறுகின்றது.

  • கார்த்திகை தீபம் கொண்டாடும் விதம்

    கார்த்திகை தீப வழிபாடு மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணிதீபம் என்றும், கார்த்திகை நட்சத்திரம் அன்று கார்த்திகை தீபம் என்றும் மறுநாள் சுடலைக் கார்த்திகை என்றும் மூன்று நாட்கள் கார்த்திகை விளக்குகள் ஏற்படுகின்றன. மகிழ்ச்சியான திருமண வாழ்வு வேண்டியும், தங்கள் குழந்தைகளின் நலன் வேண்டியும் பெண்கள் கார்த்திகைத் திருநாளன்று விரதம் மேற்கொள்கின்றனர். கார்த்திகை தீபத்தை கொண்டாடுபவர்கள் தங்கள் வசிப்பிடங்களை தூய்மைப்படுத்தி, மாலை நேரத்தில் வீட்டு வாசலில் வண்ணக் கோலம் இட வேண்டும். மண், பீங்கான் மற்றும் உலோகத்தினான சிறிய அகல் விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பஞ்சு திரி போட்டு விளக்கேற்றி விழிபட வேண்டும். விளக்குகளை வாயிற்படிகள், ஜன்னல்கள், பால்கனிகள், முற்றம் ஆகியவற்றில் வைத்து அலங்கரிக்கலாம். சிறுவர்கள் கார்த்திகை தீபத்தை பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர். கார்த்திகை தீப வழிபாட்டில் பொரி உருண்டை முக்கிய இடம் பெறுகின்றது.

  • தமிழர்களின் பாரம்பரியம் கார்த்திகை தீபம்…

    ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளை திருக்கார்த்திகை என்றும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் என்றும் அழைக்கின்றனர். சூரபத்மன் என்னும் அசுரனை வதைக்கும் பொருட்டு, சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணிலிருந்து பொறிகளை உருவாக்கினார். பொறிகள் கங்கை நதியின் சரவண பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக மாறின.

    ஆறு குழந்தைகளையும், கார்த்திகைப் பெண்கள் தாலாட்டி சீராட்டி, பாலூட்டி வளர்த்தனர். பார்வதி தேவி ஆறு சிறுவர்களையும் ஒன்றாக அனைத்து ஒரே குழந்தையாக மாற்றினாள். குழந்தையும் ஆறுதலைகள், பன்னிரெண்டு கைகள் ஒரே உடலுடன் காட்சியளித்தது. இக்குழந்தையை கந்தன், ஆறுமுகன், கடம்பன் மற்றும் முருகன் ஆகிய பெயர்களில் பார்வதி தேவி அழைத்தாள்.

    முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு சிவபெருமான் வான மண்டலத்தில் கார்த்திகை நட்சத்திரமாக ஜொலிக்கும் அந்தஸ்தும், அவர்களைப் போற்றும் விதமாக கார்த்திகை தீப வழிபாட்டையும் அருளினார் என்று இவ்விழா கொண்டாடப்படுகிறது.

    மகாவிஷ்ணு மற்றும் பிரம்மதேவர் ஆகியோருக்கிடையே யார் பெரியவர் என்ற போட்டியில், சிவபெருமான் அவர்களுக்குகிடையே ஜோதி பிழம்பாகத் தோன்றி யார் ஜோதியின் அடி, முடியைக் காண்கிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார்.

    பின் மாகவிஷ்ணு வராகமாகவும், பிரம்மா அன்னப்பறவையாகவும் மாறி அடி முடியை தேடிச் சென்றனர். ஜோதிப் பிழம்பின் அடியைக் காணாது மகாவிஷ்ணு திரும்பினார். முடியைத் தேடிச்சென்ற பிரம்மா வழியில் தாழம்பூவைச் சந்தித்தார். தாழம்பூ சிவனின் முடியிலிருந்து வருவதாகக் கூறியது. தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு சிவனின் முடியைக் கண்டதாக பிரம்மா கூறினார்.

    தாழம்பூ, பிரம்மா ஆகியோரின் பொய்யுரைக்காக தாழம்பூ சிவ பூஜையில் இடம் பெறாது எனவும், பிரம்மாவுக்கு பூலோகத்தில் தனிகோயில் கிடையாது என்கின்ற தண்டனையையும் சிவபெருமான்விதித்தார்.
    சிவபெருமான் ஜோதிப் பிழம்பாக காட்சியளித்த நாளே கார்த்திகை தீபமாகக் கொண்டாடப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.

  • தமிழர்களின் பாரம்பரியம் கார்த்திகை தீபம்…

    ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளை திருக்கார்த்திகை என்றும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் என்றும் அழைக்கின்றனர். சூரபத்மன் என்னும் அசுரனை வதைக்கும் பொருட்டு, சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணிலிருந்து பொறிகளை உருவாக்கினார். பொறிகள் கங்கை நதியின் சரவண பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக மாறின.
    ஆறு குழந்தைகளையும், கார்த்திகைப் பெண்கள் தாலாட்டி சீராட்டி, பாலூட்டி வளர்த்தனர். பார்வதி தேவி ஆறு சிறுவர்களையும் ஒன்றாக அனைத்து ஒரே குழந்தையாக மாற்றினாள். குழந்தையும் ஆறுதலைகள், பன்னிரெண்டு கைகள் ஒரே உடலுடன் காட்சியளித்தது. இக்குழந்தையை கந்தன், ஆறுமுகன், கடம்பன் மற்றும் முருகன் ஆகிய பெயர்களில் பார்வதி தேவி அழைத்தாள்.
    முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு சிவபெருமான் வான மண்டலத்தில் கார்த்திகை நட்சத்திரமாக ஜொலிக்கும் அந்தஸ்தும், அவர்களைப் போற்றும் விதமாக கார்த்திகை தீப வழிபாட்டையும் அருளினார் என்று இவ்விழா கொண்டாடப்படுகிறது.
    மகாவிஷ்ணு மற்றும் பிரம்மதேவர் ஆகியோருக்கிடையே யார் பெரியவர் என்ற போட்டியில், சிவபெருமான் அவர்களுக்குகிடையே ஜோதி பிழம்பாகத் தோன்றி யார் ஜோதியின் அடி, முடியைக் காண்கிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார்.
    பின் மாகவிஷ்ணு வராகமாகவும், பிரம்மா அன்னப்பறவையாகவும் மாறி அடி முடியை தேடிச் சென்றனர். ஜோதிப் பிழம்பின் அடியைக் காணாது மகாவிஷ்ணு திரும்பினார். முடியைத் தேடிச்சென்ற பிரம்மா வழியில் தாழம்பூவைச் சந்தித்தார். தாழம்பூ சிவனின் முடியிலிருந்து வருவதாகக் கூறியது. தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு சிவனின் முடியைக் கண்டதாக பிரம்மா கூறினார்.
    தாழம்பூ, பிரம்மா ஆகியோரின் பொய்யுரைக்காக தாழம்பூ சிவ பூஜையில் இடம் பெறாது எனவும், பிரம்மாவுக்கு பூலோகத்தில் தனிகோயில் கிடையாது என்கின்ற தண்டனையையும் சிவபெருமான்விதித்தார்.
    சிவபெருமான் ஜோதிப் பிழம்பாக காட்சியளித்த நாளே கார்த்திகை தீபமாகக் கொண்டாடப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.

  • திருப்பதியில் டிசம்பர் 3ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா

    திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 3ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. கார்த்திகை தீபம் திருவிழா அன்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க மூலவர் வெங்கடாஜலபதி சன்னதி, வகுளமாதா தேவி சன்னதி, வரதராஜசாமி சன்னதி, லட்சுமிநரசிம்மசுவாமி சன்னதி, தங்கக்கொடி மரம், பலி பீடம் ஆகிய பகுதிகளிலும், கோவிலுக்கு வெளியே உள்ள பேடிஆஞ்சநேயர் கோவில், வராகசாமி கோவில், புஷ்கரணியின் நடுவே, நான்கு மாடவீதிகள், லட்டு கவுண்ட்டர்கள், நாத நீராஞ்ஜன மண்டபம் உள்பட பல்வேறு இடங்களில் தீபம் ஏற்றப்படுகிறது. அந்த நேரத்தில் ஏழுமலையான் கோவிலில் சுமார் 3 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் அன்று நடக்கும் வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று நடக்கும் கருடசேவை உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • மீனாட்சி அம்மன் கோவிலில் தீபத் திருவிழா கொடியேற்றம்…

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளுகிறார்கள். 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் வருகிற 2-ந்தேதி திருக்கார்த்திகை தீப விழா நடைபெறுகிறது. அன்று மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளம், அம்மன், சுவாமி சன்னதிகளில் லட்சத்தீபம் ஏற்றப்படும். திருக்கார்த்திகை அன்று இரவு சுவாமி, அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பாடாகி கீழ மாசிவீதியில் எழுந்தருளுகின்றனர். அம்மன் மற்றும் சாமி சன்னதி தேரடி அருகே உள்ள பூக்கடைதெருவில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதேபோன்று மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவில்களான தெப்பக் குளம் மாரியம்மன், முக்தீஸ்வரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோவில், பேச்சியம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் கார்த்திகை திருநாள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் வருகிற 2-ந்தேதி அன்று திருக்கார்த்திகையை யொட்டி கோவில் முழுவதும் அகல்விளக்குகள் ஏற்றி சொக்கப்பனை தீபம் ஏற்றப்படும். மதுரை அருகே உள்ள அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் டிசம்பர் 3-ந்தேதி மாலை யில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

  • திருப்பதி லட்டு விலை உயருகிறது?

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்த பின்பு அவர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. முன்பெல்லாம் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு எண்ணிக்கை கணக்கு இருக்காது. அளவும் பெரிதாக இருக்கும். ஆனால் காலப்போக்கில் எண்ணிக்கையில் மாற்றத்தை கொண்டு வந்தது தேவஸ்தானம். இலவச தரிசனத்தில், மலைப்பாதையில் வரும் பக்தர்களுக்கு ரூ.10-க்கு 2 லட்டுகளும், ரூ.25-க்கு 1 லட்டு என கூடுதலாக வழங்கப்படுகின்றன. இது தவிர்த்து ரூ.50, ரூ.300 ஆகிய கட்டணங்களில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2 மற்றும் 3 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. தற்போது லட்டுகளை தேவஸ்தானம் சலுகை விலையில் வழங்கி வருகிறது. ஆனால் ஒரு லட்டை தயார் செய்ய ரூ.37 செலவாகிறது. இதனால் கூடுதல் செலவாக ஆண்டுக்கு ரூ.200 கோடி அளவுக்கு சுமை ஏற்பட்டுள்ளது என்று தேவஸ்தானம் கூறியுள்ளது. லட்டு வழங்குவதை தொடர வேண்டுமானால் விலையை சற்று உயர்த்தினால் தான் முடியும் என்று கூறியுள்ளது. எனவே லட்டு விலையை உயர்த்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • திருப்பதி புத்தாண்டு தரிசனத்திற்கான முன்பதிவு தொடங்கியது….

    வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான முன் பதிவு தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசி மற்றும் ஜனவரி 1ந் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. வைகுண்ட ஏகாதசி, துவாதசி தினங்களான டிசம்பர் 29, 30 ஆம் தேதிகள் மற்றும் ஜனவரி ஒன்றாம் தேதிகளுக்கான தரிசன டிக்கெட்டுகளை, திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், அதாவது www.ttdsevaonline.com என்ற இணையதள முகவரியில், பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். வைகுண்ட ஏகாதசி அன்று இலவச தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். துவாதசியன்று 300 ரூபாய்க்கான சிறப்பு நுழைவு தரிசனத்துக்கு ஐந்தாயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைன் முன்பதிவுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

  • ஏழுமலையானை தரிசிக்க ஆதார் கட்டாயமாகிறது…

    திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயமாக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. டிசம்பர் 10-ம் தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. திருப்பதியில் நாள் தோரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். விசேஷ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக காணப்படும். கூட்டம் அதிகம் இருக்கும் காலங்களில் ஏழுமலையானை தரிசிக்க 1 நாள் முழுவதும் காத்திருக்கும் நிலை ஏற்படும். எனவே பக்தர்களின் வசதிக்காக சாமி தரிசன நேரத்தை குறைக்க தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருக்கட்டமாக திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம் ஆக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. டிசம்பர் 10-ம் தேதி முதல் தரிசன டிக்கெட் பெற ஆதார் கட்டாயம் என்றும் இலவச தரிசனத்துக்கு வருவோர் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாகவும் தேவஸ்தானம் கூறியுள்ளது. சோதனை முறையிலான திட்டம் என்பதால் வைகுண்டம் வழியாக பக்கதர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பிப்ரவரி மாதத்தில் இருந்து ஆதார் மூலம் தரிசனம் முழு அளவில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கட்டவாக்கம் ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மி நரசிம்ஹர்!

    இங்குள்ள நரசிம்ஹ மூர்த்தியானவர் ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், ஆனந்த பீடம், யோக பீடம் ஆகிய 5 பீடங்களின் மேல் கம்பீரமாக வீற்று இருக்கும் நரசிம்மருக்கு மேல் இரண்டு கரங்களில் சக்ரமும், வில் அம்பும் தாங்கி மற்றும் அபய வரத முத்திரை காட்டி தன்னை நாடி வந்தவரை வாழ வைக்கும் பெருமாள் என்பதனை உணர்த்துகிறது.

    மஹாலக்ஷ்மி தேவியுடன் காட்சி தரும் இந்த நரசிம்ஹ மூர்த்தியானவர் ” த்ரி நேத்திரம்” அமைந்துள்ளது. ” அருள் விழியால் கருணை மழை பொழிய இரு கண்ணும் போதாமல் முக்கண்ணனாக சேவை சாதிக்கிறார்.”

     மடியில் அமர்ந்துள்ள தாயார் தாமரை மலர் தாங்கி அபய ஹஸ்தம் கொண்டு மிகவும் திவ்யமான ஹம்ஸம் கொண்டு காட்சி தருவதை பக்தர்கள் காண்கில் அருள் பொழியும் திவ்ய தம்பதிகள் இவர்கள் தான் என்பதனை உறுதி செய்யும் வண்ணம் காட்சி தருகின்றனர்.

    இங்கு அருள்புரியும் இந்த நரசிம்ஹ மூர்த்திக்கு வஜ்ரதம்ஷ்ட்ரங்கள் ( பற்கள்) 12 அமைந்து இருக்கின்றன. இது 27 நட்சத்திரங்கள் அடங்கிய 12 ராசிகளை குறிக்கிறது.

    திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய், நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் சனி பகவான் ஆகிய நவக்கிரஹ அம்சத்துடன் இந்த ஸ்தலம் விளங்குவது கூடுதல் சிறப்பு.

     நரசிம்ஹர் அமைப்பு பெருமாளின் 6 அவதாரங்கள், தான் தாங்கி இருக்கும் ஆயுதங்கள் 4 அவதாரங்களை நினைவுபடுத்தும் வண்ணம் இருக்கிறது.

     இந்த புகழ் பெற்ற ஆலயம் சென்னையில் இருந்து சுமார் 70 km தொலைவில் அமைந்துள்ளது.

    ஓம் நமோ நாராயண.