Author: சக்தி ஆன்லைன் டீம்

  • Libra – August Horoscope

    கிரகநிலை:

    பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் – தொழில் ஸ்தானத்தில் சூர்யன் – லாப ஸ்தானத்தில் கேது – விரைய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    03.08.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து புதன்  தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    17.08.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து சூரியன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    21.08.2025 அன்று சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

    25.08.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து புதன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் ரண ருண ரோக ஸ்தானாதிபதி குரு ராசியைப் பார்க்கிறார். நோய் நீங்கும். வீண் கவலை அகலும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனத்தாங்கல்கள் வரலாம். பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். கலைத்துறையினருக்கு நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தேக்கநிலை மாறும். அரசியல்துறையினருக்கு கவலை ஏற்படும். மாணவர்கள் டென்ஷனை குறைத்து பாடங்களில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது.
    சித்திரை:
இந்த மாதம் மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும்.  கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. 

    ஸ்வாதி:
    இந்த மாதம் வீண் அலைச்சல் ஏற்படலாம். அவசரப்படாமல்  நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். சுக்கிரன் தனது சப்தம பார்வையால் உங்கள் ராசியைப் பார்க்கிறார். எதிர்ப்புகள் விலகும். தனாதிபதி செவ்வாயின் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

    விசாகம்:
    இந்த மாதம் புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. 

    பரிகாரம்: சிவனை வணங்குவது 

    சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 17, 18

    அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 26, 27

  • Virgo – August Horoscope

    கிரகநிலை:

    ராசி ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ – தொழில் ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் – லாப ஸ்தானத்தில் சூர்யன் – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    03.08.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து புதன்  லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    17.08.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து சூரியன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    21.08.2025 அன்று சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

    25.08.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து புதன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். தருமசிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு மனை சார்ந்த கடன் பிரச்சனை அகலும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது நல்லது.  தொழில் வியாபாரம்  சுமாராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். பெண்களுக்கு வீண்கவலைகள், எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். அரசியல்துறையினருக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். 

    உத்திரம்:

    இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். தனாதிபதி சூர்யன் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். 

    ஹஸ்தம்:

    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம்.

    சித்திரை:
    இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். கணவன், மனைவிக்கிடையே  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

    பரிகாரம்: வாராகி தேவியை வணங்குவது 

    சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 15, 16

    அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 23, 24, 25

  • Leo – August Horoscope

    கிரகநிலை:

    ராசியில் கேது – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ – லாப ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் – அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரக நிலைகள் உள்ளன. 

    கிரகமாற்றம்:

    03.08.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து புதன்  அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    17.08.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து சூரியன் ராசிக்கு மாறுகிறார்.

    21.08.2025 அன்று சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

    25.08.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து புதன் ராசிக்கு மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் ராசிநாதன் சூரியன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார். கடன் அடையும் மாதம். மங்களநாயகன் செவ்வாய் தனஸ்தானத்தைப் பார்க்கிறார். சுபச்செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.  அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். எதிர்காலம் பற்றிய மனக்கவலை நீங்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக  தள்ளிப் போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம். பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். கலைத்துறையினருக்கு காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும். 

    மகம்:

    இந்த மாதம் நக்ஷத்ரநாதன் கேது மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

    பூரம்:

    இந்த மாதம் குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும்.

    உத்திரம்:

    இந்த மாதம் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். எடுத்து கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.  ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். 

    பரிகாரம்:  விநாயகரை வணங்குவது 

    சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 13, 14

    அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 21, 22

  • Cancer – August Horoscope

    கிரகநிலை:

    ராசியில் சூர்யன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – தைரிய வீர்ய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ – அயன சயன போக ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    03.08.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து புதன்  ராசிக்கு மாறுகிறார்.

    17.08.2025 அன்று ராசியில் இருந்து சூரியன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    21.08.2025 அன்று சுக்கிரன் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். 

    25.08.2025 அன்று ராசியில் இருந்து புதன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் வரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.  பயணங்கள் சாதகமான  பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.  தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். கலைத்துறையினர் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு  கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்..

    புனர்பூசம்:

    இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

    பூசம்:
    இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கபட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.

    ஆயில்யம்:

    இந்த மாதம் நீங்கள் எதிர்ப்பவர்களை வெற்றி கொள்வீர்கள்.  பணவரத்து அதிகரிக்கும். குரு சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். 

    பரிகாரம்: முருகனை வணங்கி வர நன்மை வரும்

    சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 10, 11, 12

    அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 19, 20

  • Gemini – August Horoscope

    கிரகநிலை:

    ராசியில் புதன், குரு, சுக்கிரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – சுக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    03.08.2025 அன்று ராசியில் இருந்து புதன்  தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    17.08.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து சூரியன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    21.08.2025 அன்று சுக்கிரன் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

    25.08.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து புதன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் தனாதிபதி சந்திரன் பலத்தால் பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து  எடுக்கும் முடிவுகள்  நல்ல பலன் தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள். மேல் அதிகாரிகளின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு தங்கள் பக்கமுள்ள நியாயம் நிலைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.. 

    ம்ருகசீரிஷம்:

    இந்த மாதம் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். 

    திருவாதிரை:
    இந்த மாதம் எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். தைரியாதிபதி சூரியன் சஞ்சாரம் மூலம் எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும்.

    புனர்பூசம்:

    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியபதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

    பரிகாரம்: துர்க்கை அம்மனை பிரார்த்தனை செய்வது 

    சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 08, 09

    அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 17, 18

  • Taurus – August Horoscope

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் – சுக ஸ்தானத்தில் கேது – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – தொழில் ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    03.08.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து புதன்  தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    17.08.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சூரியன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    21.08.2025 அன்று சுக்கிரன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    25.08.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து புதன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரனின் விரைய ஸ்தானத்தின் பலம் மூலம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். பெண்களுக்கு உங்களது செயல்களில் மற்றவர் குறை காண நேரலாம். கலைத்துறையினருக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

    க்ருத்திகை:

    இந்த மாதம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு  காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள்  கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

    ரோகினி:

    இந்த மாதம் தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

    ம்ருகசீரிஷம்:

    இந்த மாதம் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.

    பரிகாரம்:  ஸ்ரீரங்கநாதரை வணங்குவது நல்லது. 

    சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 06, 07

    அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 15, 16

  • Aries – August Horoscope

    கிரகநிலை:

    தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் – சுக ஸ்தானத்தில் சூர்யன் – பஞ்சம ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – லாப ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    03.08.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து புதன்  சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    17.08.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து சூரியன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    21.08.2025 அன்று சுக்கிரன் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    25.08.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து புதன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் ராசிநாதன் செவ்வாயின் பஞ்சம பூர்வ புண்ணிய பலத்தால் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். வீடு மனை சார்ந்த விஷயங்கள் அனுகூலம் தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல்திறன் அதிகரிக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். கலைத்துறையினருக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். அரசியல்துறையினருக்கு தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். 

    அஸ்வினி:

    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம்.

    பரணி:

    இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.  சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம்.

    க்ருத்திகை:

    இந்த மாதம் நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. எடுத்த காரியங்களில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.

    பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை வணங்கினால் நன்மை தரும்

    சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 03, 04, 05, 30, 31

    அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 13, 14

  • Cat Omen: The Backstory of the Superstition

    எவ்வளவுதான் அறிவியலும் நாகரிகமும் முன்னேறினாலும், சில மூடநம்பிக்கைகளை நம்மால் தவிர்க்க முடியவில்லை. அப்படியொரு பழக்கம் தான் பூனை சகுனம். வெளியே கிளம்பும்போது பூனை குறுக்கே வந்தா, அதை அபசகுனம்னு நினைச்சு, வேலையை நிறுத்திட்டு, வீட்டுக்கு வந்து தண்ணீர் குடிச்சு, கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து, பிறகு திரும்ப கிளம்புவோம். இந்த பழக்கத்தோட பின்னணி கதை ரொம்ப சுவாரசியமானது.

    பழங்காலத்துல தெருவிளக்கு இல்லை. ஊருக்கு ஊர் மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டில தான் பயணம். இரவு நேர பயணத்துல, இருட்டுல பூனையோட கண்கள் மட்டும் ரேடியம் மாதிரி மின்னும். பூனையோட உருவம் தெரியாது, ஆனா கண்கள் மட்டும் பளிச்சுனு தெரியும். இது புலி, சிறுத்தை மாதிரியான காட்டு விலங்குகளோட கண்களுக்கும் பொருந்தும். இப்படி மின்னுற கண்களைப் பார்த்து மாடு, குதிரை பயந்து மிரளாம இருக்க, வண்டியை ஓட்டுறவங்க சிறிது நேரம் வண்டியை நிறுத்தி, மாடு அல்லது குதிரைக்கு தண்ணீர் கொடுத்து, கொஞ்சம் ஓய்வு கொடுப்பாங்க.

    வண்டி ஓட்டுபவனும் தண்ணீர் குடிச்சு ஓய்வெடுத்து பயணத்தை தொடருவான்.காலப்போக்கில் இது மாறி, பூனை குறுக்கே வந்தா அபசகுனம்னு மாறிடுச்சு. இனி இந்த மூடநம்பிக்கையை மனசுல வச்சு குழப்பிக்க வேண்டாம். பூனை வந்தாலும், வரலேன்னாலும், மனசு திருப்தியோட செய்யுற எந்தக் காரியமும் வெற்றியில முடியும்னு நம்புவோம்.

  • Worship of Mahalakshmi-Perumal to overcome financial difficulties!

    செல்வ செழிப்புடன் வாழவும், பணக்கஷ்டம் தீரவும் மகாலட்சுமியை வழிபட வேண்டும் என ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர். ஆனால், மகாலட்சுமியை வழிபடுவதற்கு முன் பெருமாளை வணங்கினால் மட்டுமே அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இதற்கு ஏகாதசி திதி மிகவும் உகந்தது, குறிப்பாக ஆனி மாத வளர்பிறை ஏகாதசி. இந்த எளிய வழிபாடு முறை பணக்கஷ்டத்தை தீர்க்க உதவும்.

    ஜூலை 6, ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதியன்று, காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து, வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி, பெருமாளை நினைத்து விரதம் தொடங்கவும். மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு செய்து விரதத்தை முடிக்கலாம். விரதம் இருக்க முடியாதவர்கள், இரவு 10 மணிக்குள் வழிபாடு செய்யலாம். தலைக்கு குளித்து, அசைவ உணவை தவிர்ப்பது அவசியம்.

    பூஜையில், பெருமாள் மற்றும் மகாலட்சுமி படங்களுக்கு துளசி மாலை அல்லது வாசனை மலர்களால் அலங்கரிக்கவும். மூன்று விளக்குகளில் நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு, வடக்கு நோக்கி தீபம் ஏற்றவும். நெய்வேத்தியமாக பால் பாயாசம் அல்லது காய்ச்சிய பால் வைக்கவும். பெருமாளுக்கு துளசி இலைகளால் “ஓம் நமோ நாராயணாய” நாமத்தை 111 முறை உச்சரித்து அர்ச்சனை செய்யவும். இந்த வழிபாடு பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருளால் பணக்கஷ்டத்தை தீர்க்கும்.

  • Simple spiritual remedy to pay off debt: Mango leaf mantra

    கடன் சுமையால் தவிக்கிறவர்களுக்கு எளிய ஆன்மீக பரிகாரம் ஒரு வழிகாட்டியாக அமையும். கடனை அடைக்க சொத்து, நகை விற்பது ஒரு வழியாக இருந்தாலும், எந்த வழியுமின்றி தவிப்பவர்களுக்கு இந்த பரிகாரம் நம்பிக்கையை அளிக்கிறது. இந்த பரிகாரத்துக்கு ஒரு மா இலை, உப்பு தண்ணீர் மட்டுமே தேவை. வீட்டில் கிழக்கு பார்த்து அமர்ந்து, ஒரு தட்டு அல்லது கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி, ஒரு கைப்பிடி கல் உப்பு கலந்து உப்பு தண்ணீர் தயாரிக்கவும்.

    பிறகு, ஒரு மா இலையில் ஸ்கெட்ச் பேனாவால் உங்கள் கடன் தொகையை எழுதுங்கள், உதாரணமாக, “5 லட்ச ரூபாய் கடன் சீக்கிரம் அடைய வேண்டும்” என்று. கருப்பு நிற பேனாவைத் தவிர, நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு நிற பேனாக்களை பயன்படுத்தலாம்.இந்த இலையை கையில் பிடித்து, கடன் தீர வேண்டும் என முழு நம்பிக்கையுடன் பிரபஞ்சத்திடம் பிரார்த்தனை செய்யவும்.

    பின்னர், ஒரு மெழுகுவர்த்தி அல்லது அகல் விளக்கை ஏற்றி, மா இலையை நெருப்பில் பொசுக்கி, அதன் சாம்பலை உப்பு தண்ணீரில் கரைத்து, கால் படாத மண் பாங்கான இடத்தில் கொட்டவும். இந்த பரிகாரத்தை தினமும் அல்லது ஞாயிறு காலையில் செய்யலாம். 48 நாட்களில் கடன் தீர ஒரு வழி கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் உறுதியளிக்கின்றனர்.