Author: சக்தி ஆன்லைன் டீம்

  • How is October going for you?

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு – சுக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் – தொழில் ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    08.10.2025 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    10.10.2025 அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    17.10.2025 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    27.10.2025 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். 

    தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள்  அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது.  இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கிடையே  இருக்கும் அன்பு நீடிக்கும்.  பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.

    பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.  
    கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். செலவுகள் குறையும். உடன் பனி புரிவோர் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். 

    அரசியல் துறையினருக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். சக தோழர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். 
    மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.  

    பாதங்கள்: கார்த்திகை 2, 3, 4

    இந்த மாதம் பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும். எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். ராஜாங்க ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள்  செய்வீர்கள். பணவரத்து திருப்திதரும். வீண்பழி ஏற்படலாம். 

    ரோகிணி:

    இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய்வது நன்மையைத் தரும். 

    மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்:

    இந்த மாதம் வீண் பிரச்சனையால் மனக்குழப்பம் ஏற்படலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.

    பரிகாரம்:  மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லாநன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.  

    சந்திராஷ்டம தினங்கள்:     அக்டோ 01, 27, 28

    அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 08, 09
     

  • How is October going for you?

    கிரகநிலை:

    தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு – பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன் – சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – லாப ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    08.10.2025 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    10.10.2025 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    17.10.2025 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    27.10.2025 அன்று  களத்திர  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் எதிர்பாராத செல்வ சேர்க்கை உண்டாகும். அதே நேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும்.
    தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க இருந்து வந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். 

    குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.  பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீர்கள். வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
    பெண்களுக்கு எதிர்பார்த்த செல்வசேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. 
    கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். செல்வம் பல வழிகளில் சேரும். வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். 

    அரசியல்துறையினருக்கு உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 11ல் இருப்பதால் பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.
    மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். 

    அஸ்வினி:

    இந்த மாதம் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தேவையற்ற மனகவலை உண்டாகும். வீண் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நலம் தரும். 

    பரணி:

    இந்த மாதம் அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். மனநிம்மதி உண்டாகும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

    கார்த்திகை 1ம் பாதம்:

    இந்த மாதம் எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை தரும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

    பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

    சந்திராஷ்டம தினங்கள்:     அக் 24, 25, 26

    அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 06, 07

  • The statue of Ezhumalaiyan formed spontaneously on Anjanadri Hill in Tirupati: A miracle that amazes devotees

    உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் பற்றி கேள்விப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அத்தகைய புகழ்மிக்க திருப்பதி மலையில், அஞ்சனாத்ரி மலையில் தானாக உருவான ஒரு அபூர்வ சிலை பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இரண்டாவது மலைப்பாதையின் கடைசி வளைவில் அமைந்த இந்த சிலை, 2012-ம் ஆண்டு பக்தர்களின் பார்வையில் முதன்முதலில் தென்பட்டது.

    இந்த சிலை, ஏழுமலையானைப் போலவே தோற்றமளிக்கிறது. தலையில் கிரீடம், கண்கள், மூக்கு, வாய், கழுத்து என அனைத்து அம்சங்களும் இயற்கையாகவே உருவாகியுள்ளன. ஒரு சிறிய மலை தன்னை ஏழுமலையானின் உருவமாக மாற்றிக்கொண்டதாக இது காட்சியளிக்கிறது. இந்த சிலை உள்ள இடத்திற்கு செல்ல எந்த பாதையும் இல்லை. இரண்டாவது மலைப்பாதையின் கடைசி வளைவில் நின்று பார்த்தால், இந்த அபூர்வ சிலை தெளிவாக தெரியும்.

    விசேஷ நாட்களில், சில இளைஞர்கள் கயிற்றில் தொங்கியபடி இந்த சிலைக்கு அருகில் சென்று பால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து பூஜை செய்கின்றனர். இந்த இயற்கை அதிசயம், பக்தர்களிடையே ஆன்மிகப் பரவசத்தை ஏற்படுத்துகிறது. திருப்பதியின் புனிதத்தை மேலும் உயர்த்தும் இந்த சிலை, பக்தர்களின் பார்வையில் தெய்வீக அனுபவத்தை வழங்குகிறது.

  • Ottananthal Rathnavel Murugan Temple: Blessing of a son at lemon auction

    விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூருக்கு அருகிலுள்ள ஒட்டனந்தல் கிராமத்தில், மயில் வடிவில் காட்சியளிக்கும் இரட்டைக் குன்றின் மீது அமைந்துள்ளது பழைமை வாய்ந்த ரத்தினவேல் முருகன் கோவில். இந்த ஆலயத்தின் கருவறையில் செப்பினாலான வேல் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இங்கு 10 நாள் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் கருவறையில் உள்ள வேலில் குத்தப்படும் எலுமிச்சைப் பழங்கள் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றன.

    பத்தாவது நாளில் காவடி பூஜை முடிந்த பிறகு, மறுநாள் இரவு இடும்பன் பூஜை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, ஊர் நாட்டாமை ஆணி செருப்பின் மீது நின்று முதல் எலுமிச்சைப் பழத்திற்கான ஏலத்தை 1 ரூபாயில் தொடங்குகிறார். இந்த ஒரு எலுமிச்சை பழம் சுமார் 20,000 ரூபாய் வரை ஏலத்தில் எடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2025) நடந்த ஏலத்தில், 10 எலுமிச்சைப் பழங்கள் மொத்தமாக 68,000 ரூபாய்க்கு ஏலம் போனது.ஏலம் எடுப்பவர்களுக்கு, இடும்பனுக்கு படைக்கப்பட்ட பிரசாதமும் எலுமிச்சைப் பழமும் வழங்கப்படுகிறது. பிரசாதத்தை அங்கேயே உண்டு, மறுநாள் காலை வீட்டில் பூஜை செய்து, எலுமிச்சைப் பழத்தை கொட்டையோடு சாப்பிட வேண்டும் என்பது நம்பிக்கை. இதனால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என உறுதியாக நம்பப்படுகிறது.

    கடந்த ஆண்டு இந்த எலுமிச்சைப் பழங்களை ஏலத்தில் எடுத்த பல தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் இந்த ஆண்டு இடும்பனின் படையலுக்கு பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் ஒட்டனந்தல் ஊர் மக்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதி உள்ளது. ஆனால், மற்ற ஊர்களைச் சேர்ந்தவர்கள் தேவைப்படும்போது, ஒட்டனந்தல் மக்கள் அவர்கள் சார்பாக ஏலத்தில் கலந்து கொண்டு, எந்த கைமாறும் இன்றி எலுமிச்சைப் பழங்களை பெற்றுத் தருகின்றனர். இந்த திருவிழாவும், எலுமிச்சை ஏலமும் பக்தர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி, கோவிலின் புகழை மேலும் உயர்த்துகிறது.

  • Worship of Varaki Amman: A spiritual method that gives success in 45 days

    வாராகி அம்மன் வழிபாடு இன்றைய காலத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது. வீடுகளிலும், ஆலயங்களிலும் பலர் வாராகி அம்மனை வணங்குகின்றனர். குறிப்பாக, வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி, அஷ்டமி திதிகளிலும், வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. சிலர் தினமும் வீட்டில் வாராகி அம்மனை வணங்குகின்றனர். இந்த ஆன்மிகப் பதிவில், 45 நாட்களில் காரிய சித்தி தரும் வாராகி அம்மன் வழிபாட்டு முறையைப் பார்ப்போம்.எந்த தெய்வத்தை வணங்கினாலும், ஒரு வேண்டுதலை முன்வைத்தே வழிபாடு செய்கிறோம்.

    வாராகி அம்மனை வணங்குவதன் மூலம், நினைத்த காரியம் விரைவில் நிறைவேற வழிபாடு செய்யப்படுகிறது. இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை, பஞ்சமி அல்லது அஷ்டமி திதியில் தொடங்க வேண்டும். வீட்டில் வாராகி அம்மனின் படம் இருந்தால், அதை சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் வைக்கவும். சிவப்பு நிற மலர்களால் அலங்கரிக்கவும். ஆறு தீபங்கள் ஏற்றி, நெய்வேத்தியமாக மாதுளம்பழ முத்துக்களை தேனில் கலந்து வைக்கவும்.வலது கையின் மோதிர விரலில் வாசனையுள்ள தாழம்பூ குங்குமத்தை எடுத்து, வாராகி அம்மனின் காரிய சித்தி மந்திரத்தை ஒருமுறை அல்லது ஆறு முறை உச்சரிக்கவும்: “ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் சுக்ல வாராகி மம ரக்ச ரக்ச வார்த்தாலி வார்த்தாலி வாராகி வாராகி சகல காரிய சித்திம் அனுக்கிரகம் குரு குரு”.

    இதை கூறி, குங்குமத்தை இலை அல்லது கிண்ணத்தில் வைக்கவும். பின்னர், நினைத்த காரியத்தை மனதில் வைத்து வேண்டுதல் செய்யவும். காரியம் தொடர்பாக வெளியே செல்லும்போது, இந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொள்ளவும். இவ்வாறு 45 நாட்கள் தொடர்ந்து செய்யும்போது, காரியம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் முன்கூட்டியே வரும். இந்த காலத்தில் உணவில் அசைவத்தை தவிர்த்து, சுத்தமாக இருக்கவும். தீட்டு காரியங்களில் ஈடுபடாமல், விரதம் போல இவ்வழிபாட்டை மேற்கொள்ளவும். இதனால், வாராகி அம்மனின் அருளால் காரிய சித்தி கிடைக்கும்.

  • Pisces – August Horoscope

    கிரகநிலை:

    தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் – சுக ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – சப்தம களத்திர ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    03.08.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து புதன்  பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    17.08.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    21.08.2025 அன்று சுக்கிரன் சுக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

    25.08.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து புதன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் பயணங்கள் குறிக்கோள் உள்ளவைகளாக மாறும். அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை அகலும். திட்டமிட்டு  எதையும்  செய்வது நல்லது.  மனதில் வீண்கவலைகள் நீங்கும். அடுத்தவரை  நம்பி எதையும்  ஒப்படைப்பதை  தவிர்ப்பது நல்லது. சுபச்செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு செயல் திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவதை  குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். 

    பூரட்டாதி:

    இந்த மாதம் எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும். மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். சூரியன் சஞ்சாரம் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராசியிலுள்ள சூரியன் சஞ்சாரத்தால் கெட்ட கனவுகள் தோன்றலாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். சுக்கிரனின் சஞ்சாரம் நல்ல பலன்களை தரும்.

    உத்திரட்டாதி:

    இந்த மாதம் தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது.

    ரேவதி:

    இந்த மாதம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். கவனம் தேவை. பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

    பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை வணங்குவது  

    சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 01, 02, 28, 29

    அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 10, 11, 12

  • Aquarius – August Horoscope

    கிரகநிலை:

    ராசியில் சனி (வ), ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் – களத்திர ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    03.08.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து புதன்  ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    17.08.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சூரியன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    21.08.2025 அன்று சுக்கிரன் பஞசம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

    25.08.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து புதன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் ராசியை சூரியன் பார்க்கிறார். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த இழுபறியான நிலை மாறும்.  சாதாரணமாக செயல்பட்டாலும் அது மிகப் பெரிய வெற்றி பெறும். வாகனப் பிராப்தி ஏற்படும். எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் இருந்த தடங்கல்கள் அகலும். பணவரத்து கூடும். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இணக்கமான போக்கு காண்பது சிரமம். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெருமைகள் உண்டாகும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் நீங்கும். அரசியல்துறையினருக்கு மற்றவர்களின்  ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும்.. மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். 

    அவிட்டம்:

    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.

    சதயம்:
    இந்த மாதம் குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும். எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியை தரும்.

    பூரட்டாதி:

    இந்த மாதம் யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து எடுத்து கொண்ட காரியங்களில் கவனம் செலுத்துவது நல்லது.

    பரிகாரம்:  நந்தீஸ்வரரை வணங்குவது  

    சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 26, 27

    அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 08, 09

  • Capricorn – August Horoscope

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் – களத்திர ஸ்தானத்தில் சூர்யன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    03.08.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து புதன்  களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    17.08.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து சூரியன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    21.08.2025 அன்று சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

    25.08.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து புதன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் எந்த விஷயத்திலும் அதிக முயற்சிகள் செய்ய வேண்டியதிருக்கும். நிதானமாக எந்த முடிவையும் எடுப்பீர்கள். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்குவன்மை நன்மையை தரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெண்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசியல்துறையினருக்கு பணமுடக்கம் நீங்கும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். 

    உத்திராடம்:

    இந்த மாதம் கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

    திருவோணம்:
    இந்த மாதம் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எடுத்துக் கொண்ட வேலைகளில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம்.  எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. 

    அவிட்டம்:

    இந்த மாதம் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் சஞ்சாரம் பணவரத்தைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

    பரிகாரம்:  பெருமாளை வணங்கினால் நல்லது 

    சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 23, 24, 25

    அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 06, 07

  • Sagittarius – August Horoscope

    கிரகநிலை:

    தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ – களத்திர ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் – பாக்கிய ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    03.08.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து புதன்  அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    17.08.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து சூரியன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    21.08.2025 அன்று சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

    25.08.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து புதன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் திரிகோணம் மிகவும் பலமாக அமைந்திருக்கிறது. பொருள் வரவு ஏற்படும். பணவரவு அதிகமாகும். வீண்செலவு குறையும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத  சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். நீண்ட நாட்களாக  இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். வீடு மனை சார்ந்த சொத்து பிரச்சனைகள் அகலும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி  நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும்.  போட்டிகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு, வீண் அலைச்சல் குறையும்.  பெண்களுக்கு விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். கலைத்துறையினருக்கு மனதில் இருக்கும் சங்கடங்கள் அகலும். அரசியல்துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்..

    மூலம்:

    இந்த மாதம் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். செவ்வாய் சஞ்சாரம் மூலம் சாதகமான பலன் தரும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும்.

    பூராடம்:

    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    உத்திராடம்:

    இந்த மாதம் குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும்.

    பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கினால் நல்லது  

    சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 21, 22

    அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 03, 04, 05, 30, 31

  • Scorpio – August Horoscope

    கிரகநிலை:

    சுக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் – தொழில் ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    03.08.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து புதன்  பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    17.08.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து சூரியன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    21.08.2025 அன்று சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

    25.08.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து புதன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் தைரியம் அதிகரிக்கும். மங்கள் செலவுகள் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த தாமதம் நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மற்றவர்கள் உங்களின்  பிரச்சனைகளுக்கு வலிய வந்து உதவிகள் செய்வார்கள். விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை அதனால் நன்மையும் இருக்கும். கணவன், மனைவிக் கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.  தொழில் வியாபாரம் சீராக நடக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மிகவும் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது. பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினர் தங்கள் பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அரசியல்துறையினருக்கு கஷ்டமாக தோன்றிய விஷயங்கள் எளிதாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். 

    விசாகம்:

    இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

    அனுஷம்:

    இந்த மாதம் குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

    கேட்டை:
    இந்த மாதம் பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம். மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. 

    பரிகாரம்:  மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். காரிய தடங்கல் நீங்கும். 

    சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 19, 20

    அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 01, 02, 28, 29