Author: சக்தி ஆன்லைன் டீம்

  • Thiruppavai Padal 21

    ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
    மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
    ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
    ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
    தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
    மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
    ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
    போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

    பொருள்:

    கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.

    விளக்கம்:

    “மன்னாதி மன்னர்களெல்லாம் உன் காலில் விழ காத்துக் கிடப்பது உன்னிடமுள்ள பயத்தால்! ஆனால், நாங்கள் அவர்களைப் போல பயந்த சுபாவம் உள்ளவர்கள் அல்ல! நாங்கள் வா என்று அழைத்தால் நீ வந்தாக வேண்டும். வர மறுத்தால், உன்னை எங்கள் அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம். அப்போது, நீ தப்பவே முடியாது என்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். ஆம்…ஆண்டாள் மாலைக்குள் புதைந்து கிடந்த ஒரு தலைமுடியால் அவனைக் கட்டிப் போட்டு விட்டாளே! அந்த ரங்கநாதன் அவளிடம் வசமாக சிக்கிக் கொண்டானே! இதுதான் பக்தியின் உச்சநிலை. பகவானிடம் நம்மை அர்ப்பணித்து விட்டால், அவன் நம்மிடமிருந்து தப்பி ஓடமுடியாது என்பது இப்பாடலின் உட்கருத்து.
     

  • January 5 – Rasi Palan

    ஜனவரி 5 அனுமன் ஜெயந்தி
    விளம்பி வருடம் – மார்கழி 21
     அமாவாசை 
    05-ஜன-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    முழுவதும்    0.00
    நட்சத்திரம்    :    மூலம்    மா    4.15
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரோகிணி,மிருகசீரிடம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   நன்மை 
    ரிஷபம் – லாபம் 
    மிதுனம் – கவனம்  
    கடனம் –  உதவி 
    சிம்மம் – ஆர்வம் 
    கன்னி – வரவு 
    துலாம் –  உயர்வு  
    விருச்சிகம் – செலவு  
    தனுசு – வெற்றி 
    மகரம் – பெருமை 
    கும்பம் – களிப்பு 
    மீனம் – இன்பம் 

  • Sivanukku Mattum Poojai Seiyalama?

    சிவலிங்கத்தை முறையாக பராமரிக்க முடியாவிடில், வீட்டில் வைப்பது நல்லதல்ல. வழக்கமான பூஜைகளை விட சிவலிங்க பூஜைகள் தனித்துவம் வாய்ந்தது. அதன் பூஜை முறைகளும் வித்தியாசமானது. தவறாக பூஜை செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    முதலில் குளித்தவுடன் கங்கை தீர்த்தத்தை கட்டாயம் தெளிக்க வேண்டும். குளிப்பதனால் உடல் சுத்தமானாலும், கங்கை நீர் தெளித்தால் தான் மனம் சுத்தமாகும் என்பது ஐதீகம்.

    ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சிவலிங்கத்தை எடுத்து வைப்பதற்கு முன்பாக சிவலிங்கத்தின் காலடியில் விழுந்து வணங்க வேண்டும். பின்னர் அதனை கங்கை நீர் கலந்த சுத்தமான நீரில் முக்கி எடுக்க வேண்டும். கல் வடிவில் இருந்தால் அதன் மீது கங்கை நீர் கலந்த நீரை தெளிக்க வேண்டும்.

    பதப்படுத்தப்பட்ட பாலை சிவலிங்கத்திற்கு ஊற்றி பூஜை செய்யக் கூடாது. ஐஸ் பாலில் தான் பூஜை செய்ய வேண்டும்.தினசரி சிவலிங்க வழிபாட்டிற்கு முன்பு 3 வரி சந்தன பட்டையை லிங்கத்தின் மீது பூசவும்.சிவலிங்கத்தை வீட்டில் வைக்க வேண்டும் என்றால், தங்கம், வெள்ளி அல்லது பித்தளையில் செய்த நாகயோனி நிழலில் வைக்க வேண்டும்.

    வீட்டில் சிவலிங்கத்தை தண்ணீர் ஊற்றிருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். லிங்கத்தின் மீது தண்ணீர் படவில்லை என்றால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.சிவலிங்கத்தை மட்டும் தனியாக வைத்து பூஜை செய்யக் கூடாது. அத்துடன் கௌரி அல்லது விநாயகரின் களிமண் சிலையை வைத்து பூஜை செய்ய வேண்டும்.சிவலிங்கத்திற்கு பூஜை செய்த எந்த ஒரு பொருளையும் பிரசாதமாக உண்ணக் கூடாது.

    எப்போதும் சிவனுக்கு மிகவும் பிடித்த வெள்ளை பூக்களால் அர்ச்சனை செய்ய்யுங்கள்.தினமும் சிவலிங்கத்தை துடைத்து சுத்தம் செய்து பூஜை செய்ய வேண்டும். பூஜையை தவறாமல் செய்தால் சிவனின் அருள் கிட்டும்
     

  • Jayanthiku Ellam Jayanthi Anjaneyar Jayanthi

    மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. கடவுளர்களுக்கும் தேவர்களுக்கும் பகல் வேளை தொடங்கும் முன்பாக வரும் பிரம்ம முகூர்த்த காலம் என்று  கருதப்படும் புண்ணிய மாதம்.  

    சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக  அவதரித்தவனே ஆஞ்சநேயன். அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. 

    ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.  ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும்.  நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி,  வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.
     

  • Anjaneyar viradham Irupadhu Eppadi

    ஆஞ்சநேயருக்கு தொடர்ந்து செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

    ஆஞ்சநேயரை வீட்டில் பூஜை செய்யும் பக்தர்கள் தனியாக ஒரு பூஜை அறையை அமைத்துக் கொள்ள வேண்டும். அங்கே ஆஞ்சநேயரின் படத்தையோ, சிலையையோ வைக்க வேண்டும். பூஜை காலத்தில் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

    பூஜை அறையினுள் துளசி இலைகள் போட்டு தீர்த்தம் வைத்திருக்க வேண்டும். சுவாமிக்கு பிடித்தமான நிவேதப் பொருட்களையும் வைத்திருக்க வேண்டும். பூஜை செய்பவர்கள் உடல் மட்டுமின்றி உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும். அதுபோல பூஜை அறையையும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை அறை தரையை துணியால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

     
    பூஜை அறையில் எப்போதும் ஆராதனை புகை மணம் வீச வேண்டும். இவையெல்லாம் நாம் ஆஞ்சநேயருடன் மனம் ஒன்ற உதவும். வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து அனுமன் சாலீசா துதியைப் பாராயணம் செய்யலாம்.

    செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் தொடர்ந்து பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். தொடர்ந்து ஒரு மண்டலம் பாராயணம் செய்தால் தடைப்பட்ட திருமணம் உள்பட சுபாகரியம் நிறைவேறும்.
     

  • Anjaneyar vazhipattal Kidaikkum Kodi Nanmaigal

    அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயரை வழிபடுவதால் கோடானுகோடி நன்மைகள் கிடைக்கும்.

    அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயரை வழிபடுவதால்  குபேர லட்சுமி அருள் கிடைக்கும். 

    செல்வம் பெருகும்.

    நவக்கிரக தோஷங்கள் நீங்கி பல நன்மைகள் கிடைக்கும்.

    மாணவ, மாணவிகள் தரிசனம் செய்தால் அவர்களது வித்யா பலம் (கல்வி) பல மடங்கு அதிகமாகும். ஞாபக சக்தி பெருகும். தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பார்கள்.

    சர்வ மனோபலம் (தைரியம்) அபிவிருத்தியாகும்.

    எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும்.

    பேரும், புகழும் பெருகும்.

  • Pithru Dosham Pokkum Gajendra Motcha Thalam

    கஜேந்திரன் என்ற யானையை முதலையிடமிருந்து திருமால் காப்பாற்றிய சரித்திரம் கஜேந்திர மோட்சம் என்று பலராலும் கொண்டாடப்படுகின்றது. பல தலங்களும் கஜேந்திர மோட்ச வைபவத்தைத் தல வரலாறாகக் கொண்டவை. அவற்றில் ஒன்றுதான் விளாங்காடு.

    கபித்தாரண்ய சேக்ஷத்திரம் என்ற பெயருடன் சென்னைக்கு தெற்கே, அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர் ஆகிய ஊர்களுக்கு 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இத்தலம் கஜேந்திர மோட்சத் தலமாகவும், நாரத முனி ஸ்ரீபிருகு மஹரிஷிக்கு நவகிரஹ மண்டல ரகசியங்களை போதித்த தலமாகவும் கொண்டாடப்படுகிறது. கருடன் மற்றும் ஆதிசேஷனின் அருள் தரும் தலமாகவும் கருதப்படுகிறது.

    சர்ப்பதோஷங்கள், பித்ரு தோஷங்களிலிருந்து விலக்கி அருள்புரியும் பிரார்த்தனைத் தலமாகவும் விளங்குகிறது விளாங்காடு. இங்கு அருள்புரியும் பெருமாளின் திருநாமம் ஸ்ரீஆதிமூல நாராயணப் பெருமாள். இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள சிலா உருவங்கள் பூமியிலிருந்து ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டவை. தல தீர்த்தம் தாமரைக் குளம்.
     

  • Ammai Noi Pokkum Samayapurathal

    அருள்மிகு சமயபுர மாரியம்மன் திருக்கோயில் கருவறையில் அன்னை வீற்றிருப்பது வழக்கமானதாக இருப்பினும் மற்றக் கோயில்களை விட இங்கு மாறுபட்ட வடிவம் கொண்டு அன்னை அருள்கடாட்சம் அளிக்கின்றாள்.

    அம்மை நோயினால் பாதிக்கப் பெற்றவர்கள் இத்தலத்து அன்னையை வேண்டிக் கொண்டால், உடனடியாக நோய் நீங்கப் பெறுவர். இத்தலத்திலேயே குறிப்பிட்ட நாள்கள் தங்கி கோவில் ஊழியம் செய்து நேர்த்திக் கடன் நிறைவேற்றலாம்.

    உடல் உறுப்புக் குறைபாடுள்ளவர்கள் கண்பார்வை குறைபாடு உடையவர்கள் இத்தலத்தில் வணங்கி வேண்டினால் விரைவில் நலம் பெறுவர். வியாபார வளர்ச்சி, வேளாண்மைச் செழிப்பு ஆகியவற்றிற்காகவும் இத்தலத்திற்குப் பெரும்பாலான பக்தர்கள் வருகின்றனர்.

    இத்தலத்தில் காணிக்கை, அர்ச்சனை, அபிஷேகம், காதுகுத்தல், தங்கரதம் இழுத்தம், அலகு குத்தல், தீச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம், கரும்புத் தொட்டில், மாவிளக்கு எடுத்தல், நெல் காணிக்கை, ஆடு, மாடு, கோழி, தானியங்கள் செலுத்துதல் அன்னதானம் ஆகினவாகும்.

    உற்வச அம்பாளுக்குத் தினமும் ஆறு கால பூஜை அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அபிஷேக தீர்த்தம் வடக்குத் திருச்சுற்றில் பக்தர்கள் மீது தெளிக்கப்படுகிறது. இதனால் அம்மை நோய், உடல்நலக் குறைவு உள்ளவர்கள், நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு விரைவில் நலம் பெறுகின்றனர்.
     

  • Thiruppavai Padal 20

    முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
    கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
    செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
    வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
    செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
    நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
    உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
    இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

    பொருள்:

    முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.

    விளக்கம்:

    கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து. கண்ணாடி உருவத்தைக் காட்டும். ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது. வாழ்க்கை என்றால் பட்டும் படாமலும், இந்த உடல் ஒரு வாடகை வீடு, இதை எந்த நேரமும் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. ஆண்டாளின் கவித்திறமையில் ஒளிந்துள்ள மறைபொருளுக்கு ஈடேது!
     

  • January 4 – Rasi Palangal

    ஜனவரி 4
    விளம்பி வருடம் – மார்கழி 20
    04-ஜன-2019 வெள்ளி 
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    அ.கா    5.58
    நட்சத்திரம்    :    கேட்டை    ம    2.33
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை,ரோகிணி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   பிரீதி
    ரிஷபம் – மகிழ்ச்சி 
    மிதுனம் – ஆர்வம் 
    கடனம் –  நன்மை 
    சிம்மம் – பாசம்  
    கன்னி – முயற்சி
    துலாம் –  சுகம் 
    விருச்சிகம் – வரவு 
    தனுசு – ஓய்வு 
    மகரம் – பரிசு 
    கும்பம் – நிம்மதி
    மீனம் – பாராட்டு