மேல்மலையனூர் அங்காளம்மன் ராஜகாளியம்மன் அலங்காரத்தில் காட்சி!
மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் மார்கழி மாத அமாவாசை தினத்தில் அங்காளம்மன் ராஜகாளியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் மார்கழி மாத அமாவாசை தினத்தில் அங்காளம்மன் ராஜகாளியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அங்காள பரமேஸ்வரியம்மன், காளிசக்தி பீடம் ஆலயத்தில் மஹா சண்டி ஹோமம் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த புதுபூண்டிதாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள 41 அடி உயரம் கொண்ட ஸ்ரீ காளியம்மன் மற்றும் அங்காள பரமேஸ்வரியம்மன், காளிசக்தி பீடம் ஆலயத்தில் மஹா சண்டி ஹோமம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
அனுமன் ஜெயந்தியை ஒட்டி சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள ஶ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
உலக நன்மைக்காக மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற குபேர மகாலட்சுமி மகா யாகம்!
திருவண்ணாமலை நகரில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த திருக்கோவில் வடிவிலான யாக குண்ட வளாகத்தில் ஸ்ரீ குபேர லட்சுமி தாயார் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மார்கழி மாத பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து சென்ற பக்தர்கள் செலுத்திய உண்டியல் வருவாய் ரூ.3 கோடியே 15 லட்சம் ரொக்க பணமும், 210 கிராம் தங்கமும், 1695 கிராம் வெள்ளியும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தியுள்ளனர்.
மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் 94வது ஆராதனை பெருவிழா!
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் 94வது ஆராதனை பெருவிழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மெய் மறந்து சாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் உணவு படி அளக்கும் திருவிழா நடைபெற்றது.
1008 சங்கு மற்றும் படிகை லிங்கம் வைத்து விஸ்வாமித்ருக்கு சிறப்பு பூஜை!
கோவை சங்கனூரில் பிரம்மரிஷி விஸ்வாமித்ர தியான பீடம் 9 ஆம் ஆண்டு குருபூஜை விழா விமர்சையாக நடைபெற்றது. குருபூஜையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
ஸ்ரீ பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை!
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.